என் மன்னவன் நீ தானோ
அத்தியாயம் 29
அறைக்குள் அவனை அழைத்து வந்த சௌமி “ட்ரெஸ் சேன்ஜ் பண்ண வேணுமெண்டால் பண்ணுங்க…” என்றவாறு துணிகளை அவனிடம் நீட்டினாள்.
அகிலன் அவற்றுடன் சேர்த்து, அவளின் கையையும் பற்றினான். அவனின் செயலில் திடுக்கிட்டவள் அவனை நிமிர்ந்து பார்க்க, அவன், அவளை தனது அணைப்புக்குள் கொண்டு வந்தான். “என்ன பண்றீங்க..” என திமிறினாள் சௌமி.
“தெரியேல்ல…?” என அவன் கேலியாக கேட்டான்.
”ப்ளீஸ் விடுங்க…, கதவு திறந்திருக்கு…” என்றாள் மெதுவாக.
இள முறுவலுடன் “கதவை பூட்டினால் சரியா…?” எனக் கேட்டவாறு, ஒற்றைக் கையால் அவளை அணைத்தவாறே சென்று கதவைப் பூட்டியவன் குனிந்து அவளின் இதழ்களில் அழுந்த முத்தமிட்டான்.
அவள், அவனிடமிருந்து விலக முற்பட்டவாறு “வெளியில எல்லாரும் இருக்கினம்…” என்றாள் மிகுந்த தவிப்புடன்.
“இருக்கட்டும்...” என அவளை அலட்சியம் செய்த அவன், ஒரு வித வேகத்துடனும் கோபத்துடனும் அவளிடம் ஒன்றினான். ஒரு கிழமை பிரிவை ஈடுகட்டுவது போல் இருந்தது அவனின் நடவடிக்கை. அவனின் அந்த வேகத்திலும் கோபத்திலும் திண்டாடினவள் “என்னை விடுங்க அகில்…” என்றாள் கண்டிப்பான குரலில்.
“சௌமி கொஞ்ச நேரம் பேசாமல் இருக்கிறியா…?” என கடிந்தவன், ஒரு விதமான வன்மையுடன் செய்த வேலைகள் அவள் உடலை கூசி சிலிர்க்க வைத்தது.
“இதுக்கா அங்க இருந்து இஞ்ச வந்தனீங்க…?” என்றவளின் குரலில் குத்தல் இருந்தது. அவளின் கேலிப் பேச்சு விளங்கினாலும் அவன் அதை அசட்டை செய்தவாறு தனது வேலையில் மும்முரமாக இருந்தான். அவளையும் தனது உலகத்துக்கு கொண்டு வந்து, தன்னிடம் மூழ்க வைத்தான் அவன்.
சிறிது நேரத்தில் திருப்தியுடன் அவளிடமிருந்து, அவன் விலக, சௌமியும் எழுந்து, தன்னை சரி செய்து விட்டு, வெளியே வந்தவள் தாயைப் பார்க்க சங்கடப்பட, தாய் அவளை கண்டும் காணாமல் சமையலில் ஈடுபட வைத்தார். மதியம் பன்னிரண்டு மணி அளவில் கோழி பிரட்டல், எலும்பு ரசம், கத்தரிக்காய் பால் கறி, பீன்ஸ் பால் கறி, கரட்டும் தக்காளிப்பழமும் சேர்ந்த சம்பல், அவித்த முட்டை, பாயாசம் என்பவற்றுடன் மதிய சமையல் தயாராகிவிட்டது. தாயாருடன் சேர்ந்து சமையலறையை ஒழுங்கு படுத்திய பின்னர், சௌமி அறைக்குள் வந்த போது, அகிலன் ஆழ்ந்து உறங்கி கொண்டிருந்தான். சௌமி முகம் கழுவி, உடை மாற்றி, பொட்டு வைத்து, தன்னை தயார்படுத்திக் கொண்டு அகிலனை எழுப்பினாள்.
“அகில் எழும்புங்க…, சாப்பிட வாங்க…” என அவனருகே நின்றாள். கண் விழித்து பார்த்தவனின் மனதை மயக்கும் கொள்ளை அழகுடன் இருந்தவளை இழுத்து அணைத்து தன்னருகில் கிடத்தினான். அவள் திமிறி விலக முயற்சித்துக்கொண்டு “சாப்பிட வரச் சொல்லி சொன்னனானில்லா…?” எனக்கேட்டாள். “ஓம்...சாப்பிடலாம்…” என்றான் தாபத்துடன்.
அவளை அணைத்தவாறு இருப்பது அவனுக்கு எல்லையில்லாத இன்பத்தை வழங்கியது, அவளுக்குமே அவன் கரங்களுக்குள் அடங்கி இருப்பது அளவில்லாத ஆனந்தத்தை அளித்தது. சற்று நேரம் இருவரும் அந்த சுகத்தை அனுபவித்தவாறு மௌனமாக இருந்தனர்.
அகிலனுக்கு பசிக்கவும் அவளிடம் இருந்து விலகி, கட்டிலிலிருந்து எழும்பி, முகம் கழுவினான். இருவரும் சாப்பிட சென்ற போது சௌமியின் பெற்றவர்களும் இவர்களுக்காக காத்துக்கொண்டிருந்தனர். இவர்களின் முகத்தில் தெரிந்த நிறைவைக்கண்ட சௌமியின் பெற்றோருக்கு மிகுந்த திருப்தி. எல்லோரும் சேர்ந்து கதைத்தவாறு சாப்பிட்டனர். சாப்பிட்டதும் அகிலன், சௌமியையும் அழைத்துக்கொண்டு, சகுந்தலா வீட்டுக்குச் சென்றான்.
அகிலன் அங்கே வந்திருக்கிறான் என அறிந்து, ஆனந்தமடைந்த சகுந்தலா, தங்கள் வீட்டுக்கு அவர்கள் இருவரும் வந்த போது அன்பாக வரவேற்று உபசரித்தார். மாலையானதும் இருவரும் அங்கிருந்து கிளம்பி, அகிலனின் வீட்டுக்குச் சென்றனர். அங்கே பத்மா அவர்களுக்காக காத்துக்கொண்டிருந்தார். அவர்கள் வந்ததும், பத்மாவும் சேர்ந்து ஹாலில் அமர்ந்திருந்து கதைத்துக் கொண்டிருந்தனர்.
அப்போது பத்மா பேச்சோடு பேச்சாக “அகில் …” என அழைத்தவர் “சௌமி சின்னப்பிள்ளை, அவள் ஏதும் தவறாக நடந்தால், நீ தான் சொல்லி புரிய வைக்க வேணும்…, அதை விட்டுவிட்டு கை நீட்ட வெளிக்கிடாதே…”என்றார்.
“இதையே எத்தனை தரம் திருப்பி திருப்பி சொல்லுவீங்கம்மா…” என எரிச்சலுடன் கேட்டவன், “நான் எல்லாத்துக்கும் சும்மா சும்மா அடிக்கிற மாதிரி…” என சிடுசிடுத்தான்.
“இந்த மாதிரி மீண்டும் ஒரு தடவை நீ செய்யக்கூடாது எண்டு தான் நான் திரும்ப திரும்ப சொல்லுறன் தம்பி… ” என்றார் அவர் பொறுமையாக.
“அடிக்கக் கூடாது எண்டு எனக்கு தெரியாதா…? நீங்களா சொல்ல வேணும்…?, எனக்கு கோபம் வாற மாதிரி நடந்தால் நான் என்ன செய்யுறது…?” எனக் கேட்டான் பொறுமையிழந்து.
“கோபத்தை கட்டுப்படுத்த வேணும் தம்பி…” என்றார் அவர் கண்டிப்புடன்.
“அது எனக்குத் தெரியாதா?” என்றவன், “எனக்கு மட்டும் தானா அட்வைஸ்…, அங்கேயும் கொஞ்சம் சொல்லுறது…” என சௌமியை கண்களால் காட்டினான்.
“என்னவெண்டாலும், எங்க போறது எண்டாலும் ஒரு தகவல் சொல்ல மறக்காதையம்மா…, மற்றது கோவித்துக்கொண்டு, வீட்டை விட்டு கிளம்ப கூடாதம்மா... ” என்றார் சௌமியிடம் அன்பாக.
“சரி ஆண்டி…” என்றாள் அவள் மெதுவாக.
அவளைப்பார்த்து முறைத்தவன் “வழமையா நாலரைக்கு வாறவள் ஆறு மணியாகியும் காணேல்ல…, போன் பண்ணினா அது வேலை செய்யேல்ல…, எத்தனை இடங்களில போய் தேடி இருப்பன் தெரியுமா..?ஆபிஸுக்கு போனனான்… போய் வாற பாதையை பார்த்துக்கொண்டு காரில போறன் பின்னுக்கு வாறவங்கள் கோர்ன் அடிக்கிறாங்கள்… அங்க இவள் போற வீடுகளுக்கு எல்லாம் போனனான்…, நான் என்னவெண்டு நினைக்கிறது எண்டு சொல்லுங்க பார்ப்பம்..? ஏழு மணிக்குப் பிறகு சாவகாசமாக வந்தவள்…” என்றவன் “இரண்டு மணித்தியாலங்களாக நான் பட்ட பாடு எனக்குத்தான் தெரியும்…” என மிகுந்த எரிச்சலுடன் கூறியவன், “நான் எங்க போறது எண்டாலும் சொல்லி போட்டுத்தான் போறனான்…” என அவளை கோபத்துடன் பார்த்தான்.
அவனின் அன்றைய நிலையை உணர்ந்தவளாக “நானும் அப்படித்தான் செய்றனான் ஆண்டி.., அண்டைக்கு என்ர போனில சார்ஜ் இல்லாமல் போயிட்டுது…” என்றவளின் குரலில் மெல்லிய கோபம் தெரிந்தது.
“சார்ஜ் இல்லை எண்டால் சார்ஜ் பண்றது… இல்லாட்டி ஆரிட்டையும் போனை வாங்கி சொல்லுறது…, அதுவும் இல்லை எண்டால் வீட்டுக்கு வாறது.. அப்பிடி என்ன அவசரம் கடைக்குப் போக..?” என அவளை பார்த்து கேட்டான் மிகுந்த கோபத்துடன்.
“.....”
“இன்னும் கொஞ்ச நேரம் போயிருந்தால் பொலிசாக இருக்கிற என்ர ப்ரண்டுக்கு போன் பண்ணி இருப்பன்…, இப்ப அடிச்சுப்போட்டன் எண்டு இவ்வளவு கேள்வி கேக்கிறனீங்க அவளை காணேல்ல எண்டு நான் போன் பண்ணி சொல்லி இருந்தால் என்னை சும்மா விடுவீங்களா..? என தாயைப் பார்த்தான்.
“........”
“அவள் வீட்ட வந்ததும் நான் ‘நான் ஏன் லேட்?’ எண்டு கேட்டதுக்கு ‘நீ ஆர் என்னை கேள்வி கேக்குறதுக்கு’ எண்ட தொனியில் வெகு அலட்சியமாக பதில் சொல்லுறாள்…” என்றவனுக்கு இப்போதும் தான் அன்று பட்ட தவிப்பில் நெஞ்சம் துடித்தது.
“.....”
“சின்ன பிள்ளை தான் அது எனக்கு நல்லாத் தெரியும் தானே…” என கிண்டலாக கூறியவன் “வெளியில போய் வரும்போது சொல்லிப் போட்டுத்தான் போகவேணும் எண்டது கூடத் தெரியாத அளவுக்கு பேபியா என்ன…?” எனக் கேட்டான் நக்கலுடன்.
தான் செய்த செயல் அவனை நன்றாக பாதித்திருக்கிறது என்பது அவளுக்கு விளங்கினாலும், அவன் தன் மீதுள்ள அக்கறையினால் தன்னை தேடினேன் என சொல்லாததும், மற்றவர்கள் அவனை கேள்வி கேட்டு விடுவினம் என்பதால் தான் அவன் தன்னை தேடி இருக்கிறான் என விளங்கிக் கொண்டவளுக்கு மனதில் மிகுந்த சுணக்கம்!
அவன் தன் மீது குறைகளை வைப்பதில் அவளுக்கு மனதில் பாரம் ஏறி, கண்கள் கலங்கின.
சௌமியின் முகம் வாடியதில் இருந்து அவளின் நிலையை விளங்கிய பத்மா “சரி விடு தம்பி.., அவள் சின்ன பிள்ளை எண்டாலும் சரியான கெட்டிக்காரி… கலியாணத்துக்கு முதல் அவளுக்கு சுடுதண்ணி கூட வைக்கத் தெரியாது இப்ப அவள் உனக்கு சமைச்சுத்தாறாள் தானே… வீட்டையும் பொறுப்பா பார்த்துக் கொள்ளுறாள் தானே… போகப்போக அவள் எல்லாத்தையும் கவனமாகச் செய்வாள்…” என இருவரையும் ஆறுதல் படுத்தினார்.
“ஓம்…, நீங்கள் திரும்ப திரும்ப கதைச்சதால தான் நான் இதை சொல்ல வேண்டி வந்தது…” என தாயிடம் கூறியவன், “நான் என்ன அவளைப்போல ஒரு சின்ன விஷயத்தையும் பெருசு படுத்தி, கோவிச்சுக்கொண்டு வீட்டை விட்டு வெளிக்கிட்டனானா…? அல்லது எங்கட பிரச்சனையை எல்லாருக்கும் சொல்லி கொண்டு திரிஞ்சனானா…?” என கேலியாக கூறியவாறு அவளைப் பார்த்தான்.
அதைக்கேட்டதும் சௌமியின் முகம் கோபத்தில் சிவந்தது. “நான் எல்லாருக்கும் சொல்லிக்கொண்டு திரிஞ்சதை நீங்கள் கண்டனீங்களா…?” என ஆத்திரத்துடன் கேட்டாள் அவனைப் பார்த்து.
இவ்வளவு குற்றச்சாட்டுகளையும் என் மீது வைத்துக் கொண்டு காலையில் அப்படி என்னுடன் குழைந்தான் என நினைக்கையில் அவமானத்தில் அவள் உடல் கூசியது. இப்பிடித்தான் அன்றைக்கும் என்னோடு கொஞ்சி குலாவினவன்…, நானும் அவனுடன் அப்பிடி உருகி குழைந்து நின்றேனே..! இவ்வாறு நான் நடந்து கொள்வதால் தான் என் மீது அவனுக்கு அவ்வளவு இளக்காரம்... இப்படி எண்ணிய உடனே அவளுக்கு தன் மீது சினம் ஏற்பட்டது. நான் ஏன் இவ்வாறு அவன் என்றால் அவ்வளவு பலவீனமானவளாக இருக்கிறன்.., அவன் பதிலுக்கு துளியளவு மரியாதை கூட தருவதில்லையே என நினைத்தாள்.. அவளின் கன்னங்களில் விழி நீர் வடிந்தது. மற்றவர்களின் கவனத்தை கவராது குனிந்து புறங்கையால் அதை துடைத்தாள்.
சுயமரியாதை, தன்மானம் எல்லாத்தையும் விட்டு, அவனது காலடியில் கிடக்கிறேனே…, இரவும் அவன் என்னிடம் வருவான்… அவனுக்காக ஏங்கி தவிக்கும் என் உடலும் உள்ளமும் கண்டிப்பாக அவனை மறுக்காது.. ஆனால் என் மனதை, அவன் மீது கொண்டிருக்கும் உயிரினும் மேலான என் அன்பை அவன் எப்போது புரிந்து கொள்ள போறானோ… என நினைக்கையில் அவள் கண்களில் நீர் பெருகியது.
அவளைப் பார்த்தவன் “சௌமி அழாதே…” என்று அதட்டினான்.
பத்மாவுக்கும் அவளைப்பார்த்து கவலை ஏற்பட “சௌமியம்மா அழாதே… ” என கனிவுடன் அவளிடம் கூறியவர், “தம்பி, அவள் ஒருத்தருக்கும் சொல்லேல்ல…” என்றார் மகனிடம்.
“உங்களுக்கு சொன்னவள் தானே…?” எனக் கேட்டான் தாயிடம்.
“அவளின்ர கன்னத்தை பார்த்து நான் கேட்டதால சொன்னவள்…”
“உங்களை மாதிரி எல்லாரும் பார்த்திருப்பினம் தானே...”
“ஓம்..”
“வாயால தான் சொல்லணும் எண்டில்லை…” என்றான் அகிலன்.
“இனி அவள் கவனமாக இருப்பாள்…” என்று கூறியவர், மகன் கூறியதில் இருந்து தானும் அவர்களின் பிரச்சனையில் தலையிடுவது சரியில்லை என உணர்ந்தவர் “நான் இரவுச் சாப்பாடு செய்யப்போறன்…” என்றுவிட்டு எழுந்து சமையலறைக்குச் சென்றார்.
சௌமிக்கு அருகில் வந்த அகிலன் ஒற்றைக் கையால் அவளின் முகத்தை நிமிர்த்தி, மற்ற கையால் அவளின் கண்ணீரை துடைத்து விட்டான். துடைக்கத் துடைக்க நீர் பெருகியது. “அழாதே செல்லம்…” என்றான் மிகுந்த நேசத்துடன். அவளின் தலையை தனது வயிற்றுடன் சேர்த்து அணைத்து தலையை வருடினான். அவனின் அந்த அனுசரணையில் நீர் மேலும் பெருகியது. “ப்ளீஸ் அழாதே குட்டி..” என்றவனுக்கு அவளின் அழுகையை தாங்க முடியவில்லை. தன் மீதுள்ள வருத்தத்தினால் அவள் அழுவது அவனுக்கு பிடிக்கவில்லை. அவளின் தலையை, முதுகை கனிவுடன் வருடிக் கொடுத்தவன் “எழும்பு சௌமியம்மா..” என்று அவளை எழுப்பி தன்னுடன் சேர்த்து இறுக்கி அணைத்து முத்தமிட்டு அவளை ஆறுதல் படுத்தினான். அவனின் அனுசரணையான செயல்களால் அவளின் அழுகை சற்று மட்டுப்பட்டது, மேலும் சிறிது அவளை ஆறுதல் படுத்தியவன் “அம்மாவோட இரு…, மாமா வரச் சொன்னவர் அவரின்ர வீட்டை போட்டு வாறன்…” எனக்கூறி அவளை தாயிடம் அழைத்துச் சென்றான்.
தாயிடம் வந்தவன் “அம்மா… நான் மாமா வீட்டை போட்டு வாறன்…” என்று விட்டு, அவன் கிளம்பினான்.
“சௌமியம்மா… இதுல வந்து இரு” என்றவர், “இடியப்பம் அவிக்கிறனம்மா…, மத்தியானம் வைச்ச மீன் குழம்பும் சொதியும் இருக்கு…, சாப்பிடும் போது முட்டை பொரிப்பம் கொஞ்ச சின்ன வெங்காயம் உரியம்மா…” என்று இருவரும் கதைத்தவாறு தங்களின் வேலைகளை கவனித்தனர்.

Last edited: