• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

எபிலாக்

STN - 95

Member
ரெண்டு மாதம் கடந்திருக்க, சமையல் அறையில் கொஞ்சி கொண்டிருந்த காதலர்களை கண்டு புன்னகைத்த சம்யுக்தா, ஒரு யோசனை வந்தவளாக கணவனை தேடி சென்று அணைத்திருந்தாள்.

அவனோ, அதனை ஏற்றுக் கொண்டு வழக்கம் போல் மனைவியை தொடாமல் “என்ன காலைலயே மூட் ஆயிட்ட போல”

“இல்லடா.. கல்யாணம் பண்ணிக்கலாமா”

“சீரியஸா தான் பேசுறியா”

“ம்ம்.. நம்ம மட்டும் இல்ல பங்கு விக்கி ஶ்ரீ பிரசன்னா ஆறு பேரும் ஒரே மேடையில” என்ற பதிலிலே அர்த்தம் புரிந்தவன்

“இங்க பாரு.. அவங்களுக்கு கல்யாணம் பண்ணி வைக்கலாம்.. அவங்களுக்காக நீ கல்யாணம் சம்மதம் சொல்ல வேண்டாம்.. ஆல்ரெடி நான் தாலி கட்டிட்டன்..

உன் குடும்பத்து ஆசைக்காக ஊரறிய நம்ம கல்யாணம் நடக்க ஆசை இருக்கு தான்.. ஆனா நீ கடந்த கால் நிகழ்வு மறந்து சந்தோசமா அந்த தருணத்த ரெண்டு பேரும் ஏத்துக்கணும்.. மத்தவங்க சந்தோசத்துக்காக

நீ ஓகே சொல்ல கூடாது” என்றவனின் இதழில் இதழ் பதித்து ஆடவனை அமைதியாக்கிய சம்யுக்தா

“நான் என்ன சொல்ல வரேன் காது கொடுத்து கேளுடா.. அவங்களுக்காக இல்ல சத்தியமா எல்லாத்தையும் மறந்து முழு மனசோட சம்மதிக்குறேன்.. என் கண்ண பாரு.. நான் பொய் சொல்லுறேனா இல்ல தான.. எனக்கு கல்யாணத்துக்கு சம்மதம்டா வேந்து.. சீக்கிரம் கல்யாணம் முடிச்சி எல்லாரும் ஒரே வீட்டுல இருக்கணும்டா வேந்து எனக்காக இத நிறைவெத்துவியா”

“அடுத்த மாசம் கல்யாணம்” என்றுவிட அவனை கட்டிக் கொண்டு கன்னத்தில் முத்தமழை கொட்டி தீர்த்து விட்டாள்.

பின் சமையல் அறையில் காதல் செய்து கொண்டிருந்த ஜோடியை சீண்டி கேலி செய்து விட்டே சந்தோசமான விஷயத்தை பகிர்ந்து இருந்தாள்.

அதன் விளைவால் ஒரு வாரத்தில் வேலை மாற்றல் கோரிவிட்டு, இரு பெண்களும் தங்கள் துணையுடன் சொந்த ஊரை நோக்கி புறப்பட்டிருந்தனர்.
***
ஆனால், அங்கிருந்த ஒரு ஜோடியின் நிலையோ ஒருவரை ஒருவர் பார்த்து கூட கொள்ளாமல் கண்ணாமூச்சி ஆடி கொண்டனர்.

அன்று தேவா கூறிய திருமணம் செய்தில் குஷியாகி, இவர்களுக்கும் ஒரு முடிவை கட்டி விட நினைத்த பெரியவர்கள் அதற்கான வேலையை பார்த்தனர்.

ஶ்ரீநிதி கல்லூரி முடித்து அருகேயிருந்த வங்கியில் பணியில் புரிந்தாள்.

அன்று வேலை முடித்து வந்த ஶ்ரீநிதியை பிடித்தனர் பெண்கள்

விஜிதா தான் “இங்க பாரு.. அடுத்த மாசம் உனக்கு கல்யாணம் இன்னும் எத்தன நாளைக்கு நீங்க கண்ணாமூச்சி ஆடுவீங்க.. அவன் எதையோ பறி கொடுத்தவன் போல சுத்துறான்.. தப்பு அவன் பண்ணலயே அவன் அப்பன் பண்ணின தப்புக்கு தண்டனை அவனுக்கா.. அவன் வந்ததும் உன் ரூமுக்கு அனுப்பி வைப்பேன் பேசி சமாதானமாகுறீங்க” என்றதை கேட்டு யோசனையாகவே அறைக்குள் அடைந்திருக்க,

பிரசன்னா வரவும் கீதா தான் “டேய் ஶ்ரீமாவுக்கு ஃபீவரா இருக்காம் ரூம்ல இருக்கா கூட்டிட்டு ஹாஸ்பிட்டல் போயிட்டு வா”

“முதல்லயே சொல்லுறது இல்லையா” என்று அவர்களை கடிந்து விட்டே தன்னவளை அவளின் அறைக்குள் வந்திருந்தான்.

கதவு திறக்க படவும் திரும்பிய ஶ்ரீநிதி அவனின் தோற்றம் கண்டு தவறு செய்துவிட்ட குழந்தை போல் மார்பில் புதைந்தவள் “சாரி ரனா மாமா.. நீங்க என்னவிட்டு அக்கா கட்டிக்க சம்மதம் சொன்னத நினைச்சி கோபத்துல உங்கள ரொம்ப கஷ்டப்படுத்திட்டன்.. அதோட உங்க அப்பா மேல வந்த பயத்துல காதல மறைக்க நினைச்சேன்

ஆனா இனி முடியாது “லவ் யூ ரணா மாமா” என்றவளை கலங்கி கண்களுடன் பார்த்தவன் “எனக்கு உன்ன தான் புடிக்கும்.. அதுவும் உன் கண்ணுல காதல் பாக்கும் போது எனக்கே தெரியாம உன்ன லவ் பண்ண ஸ்டார்ட் பண்ணிட்டன்..

என்ன பெத்தவரு தான் அம்மா கோமால இருக்கும் போது பேசி பேசி தேவா ஃபேமிலிய எதிரி போல காட்டி என்ன அவர் பக்கம் இழுத்துட்டார்.. அப்போ உண்மை தெரியாதே அதுனால அவனுக்கு தோல்வி கொடுக்க.. உன் அக்கா மேல எந்த வித ஈர்ப்பு இல்லாமலும் ஓகே சொன்னேன்.. பட் ரொம்ப தப்பு தான் நிதி.. இப்போ உன் ரனா மாமாவா.. உன் முன்னாடி நிக்கிறேன் என்ன கட்டிக்குறீயா”

“முடியாது.. என் அழகு அத்தானா பழையப்படி மாறுங்க. அப்போ தான் கட்டிப்பேன்” என்றவளை இழுத்து அணைத்திருந்தான்.

அதன் பின் மூன்று வாரங்கள் கழித்து மூன்று ஆடவர்களும் காதலுடன் தங்களின் துணைவியர் வருகைக்காக மேடையில் காத்திருக்க, தாமதிக்கமால் வந்த மூன்று அழகு தேவதைகளும் அவரவர் இடத்தில் அமர்ந்து கொண்டனர்.

முகூர்த்த நேரம் நெருங்க கெட்டிமேளம் சத்தம் முழங்க, மூன்று ஆடவர்களும் மங்கைகர்கள் கழுத்தில் மாங்கல்யம் சூட, தேவிபிரியா தன்னவனை பார்த்து கண்ணடித்தும் ஶ்ரீநிதி வெட்கத்தில் தலை கவிழ்த்தும், சம்யுக்தா தன் துயர் நீக்கிய துணையானவனை கண் கலங்க பார்த்திருக்க, மூன்றும் பெண்களும் ஒவ்வொரு நிலையில் தன்னவர்கள் கட்டிய தாலியை வாங்கி கொள்ள,

பெரியவர்கள் அனைவரும் இனியாவது மூன்று ஜோடிகளும் இணிமையாக வாழட்டும் ஆசி செய்தனர்.
***
இரவு மூன்று பெண்களையும் தயார் செய்து அவரவரின் கணவனின் அறைக்கு அனுப்பிருக்க,

வெட்கத்துடன் உள்ளே நுழைந்த மனையாளின் முன்னே நின்ற பிரசன்னா “இப்போ உன் அழகு அத்தானா புடிச்சிருக்கா” என்று தன் தோற்றத்தை காட்டி கேட்க, ஆமென்று தலையாட்டியதும் அவளை இழுத்து கொண்டு மஞ்சத்தில் சரிந்தான்.

பக்கத்து அறையில் பாலுடன் வந்த தேவிபிரியாவை சீண்டும் விதமாக விக்கி படுக்கையில் படுத்து தூங்கியிருக்க, இல்லை இல்லை தூங்குவது நடித்திருக்க

அதனை அறிந்து மூக்கு விடைக்க உள்ளே வந்தவள், கோவத்தில் கையிலிருந்த பாலை அவன்மேல் ஊற்றி அபிஷேசகம் செய்து விட, அதில் ஈரமான சட்டையை கழட்டியவன் தன் உடலில் வந்த பால் வாடையை அவளுக்கும் கிடத்தினான்.

அதற்கு பக்கத்து அறையில் பாலை ஓரம் வைத்துவிட்டு துப்பாட்டாவை கட்டி வழக்கம் போல் அவனை கொள்ளையடித்து கொண்டவள், இடையிலே அவன் அறியாமல் கணவனின் கை அவிழ்த்து விட்டிருந்தாள்.

அதை உணர்ந்து விலகி அமர்ந்த கணவனின் அருகில் நெருங்கி அமர்ந்து “நான் வேணாமா உனக்கு.. என்ன முழுசா எடுத்துக்க நான் உன்னோட யுதா மட்டுமா தான் இருக்கேன்”

“உண்மையாவா” என்றதும் அவனின் கையை எடுத்து தன்னை அணைக்க வைத்து தான் சரியானதை ஆடவனுக்கு உணர வைக்க, அவ்வளவு தான் அவளை கட்டியில் தள்ளியவன் மானை வேட்டையாட தொடங்கினான்.

மறுநாள் காலையில் முதலில் விழித்த தேவா பல கேள்விகளுடன் மனைவி விழிப்பிற்கு காத்திருக்க,

தமாதிக்காமல் புன்னகை முகமாக விழித்தவள் “லவ் யூ வேந்து அத்தான்” என்று முதலிலே காதலை சொல்லி சிங்கத்தை சீண்டி விட்டிருக்க, அதில் கேள்விகள் மறந்து மார்னிங் ஷோ முடித்து விட்டு “எப்படிடி” என்று ஆர்வமாக பதிலை எதிர்பார்த்திருக்க,

“கவுன்சலிங் போனேன்டா.. அடுத்த கேள்வி புரியுது நீ நைட் தூங்கும் போது சில நாள் தூக்க மாத்திரை கொடுப்பேன் அந்த டைம் நீ நல்லா அசந்து தூங்கிடுவியா.. நான் நீ எழும்புறது முன்ன கவுன்சலிங் முடிச்சிட்டு வந்திருவேன்.. ஒன் மந்த் போனேன் அப்புறம் வீட்டுலயே பிராட்டிஸ் பண்ணி மொத்தமா ரிலிப்பாகி தான் கல்யாணத்துக்கு ஓகே சொன்னேன்.. எப்படி என்னோட கிஃப்ட்” என்றவளை ஆடவன் அடுத்த சுற்றுக்கு அழைக்க,

தள்ளிவிட்ட சம்யுக்தா “ஆமாடா உன் சவால்லாம் மறந்துட்டு.. என் கழுத்தில தாலி கட்டிட்ட அவ்வளவு தான் உனக்கு வீரமா” என்றதில் மீசை முறுக்கி விட்டு சிரித்தவன் “உன் அத்தான் சாவல்ல ஜெயிச்சட்டன்”

“புரியல”

“நீ சென்னைக்கு ஓடி வந்தியே அன்னைக்கு தான் ‘என் மாமன் வீட்டுக்கு வந்து மன்னிப்பு கேட்டு.. என் பொண்ண கட்டிக்கங்க மாப்பிளைன்னு கைய பிடிச்சு.. அவ சென்னை போயிட்டா நீ அவள சரி பண்ணி கூட்டிட்டு வா எவ்வளவு நாள் ஆனாலும் வெயிட் பண்ணுவேன் சொல்லிட்டு அம்மட மன்னிப்பு கேட்டு உன் மகன என் மகளுக்கு தருவியாடான்னு மனுஷன் உடைந்து அழுத்துட்டார்..” என்றவனை காதல் பொங்க பார்த்த சம்யுக்தா “என் கெத்து அத்தான்டா நீ” என்க,

அதில் கண்ணடித்தவன் “சரி நான் சாவல்விட்டது.. உனக்கு எப்படி தெரியும்”

“ஒன்ஸ் பேசும் போது ஶ்ரீமா சொன்னா”

“அப்போ எனக்காக தான்.. அன்னைக்கு அவ்வளவு வேதனையிலுன் பேசினாடி”

“பழசு வேண்டாமே.. புதுசு தான் வாழனும்” என்று இம்முறை அவளை ஆளும் செயலை தனதாக்கி கொண்டாள்.

தந்தை மன்னிப்பு கேட்டார் என்று தெரிந்ததில் தந்தையிடம் சாதரணமாக பேச தொடங்கியிருக்க, அதன் பின் மூன்று மகள் மூன்று மருமகன் அம்மா மனைவி தங்கைகள் இளைய தங்கை புருஷன் என்று அணைத்து உறவுகளுடன் இணைந்து சந்தோசமாக வாழ்ந்தார் விஷ்வநாதன்.

இவர்களின் கூட்டு குடும்பமும் பிள்ளை செல்வங்கள் பெருகி பலமடங்கு ஆனந்தத்துடன் வாழட்டும் என்று து
யரை நிறைவு செய்கிறேன்.. நன்றி

மறக்காம படிச்சிட்டு கமென்ட் பண்ணிடுங்க ஃப்ரெண்ட்ஸ்

இப்படிக்கு
STN - 95 😍😍
 
Last edited:

ஷமீம்

Active member
முயற்சிக்கு வாழ்த்துகள்.. கதை இன்னும் கொஞ்சம் அழுத்தமாக இருந்திருக்கலாம்.. ரொம்ப மேலோட்டமா இருந்தது.. ஒருவேளை உங்க முதல் முயற்சியா?? நிறைய எழுத்துப்பிழைகள், வாக்கிய அமைப்பில் குறைகள், உரையாடல்களில் தெளிவின்மை இருந்தது..அவசரமாக போடாமல் நிதானமாக proof reading பார்த்து போட்டிருக்கலாம்..

Anyway, அடுத்தடுத்த கதைகளில் குறைகள் இல்லாமல் எழுத வாழ்த்துகள் 💐 💐 💐 💐 💐..
கருத்துக்கு குறை நினைக்க வேண்டாம்.. நன்றி..
 

STN - 95

Member
முயற்சிக்கு வாழ்த்துகள்.. கதை இன்னும் கொஞ்சம் அழுத்தமாக இருந்திருக்கலாம்.. ரொம்ப மேலோட்டமா இருந்தது.. ஒருவேளை உங்க முதல் முயற்சியா?? நிறைய எழுத்துப்பிழைகள், வாக்கிய அமைப்பில் குறைகள், உரையாடல்களில் தெளிவின்மை இருந்தது..அவசரமாக போடாமல் நிதானமாக proof reading பார்த்து போட்டிருக்கலாம்..

Anyway, அடுத்தடுத்த கதைகளில் குறைகள் இல்லாமல் எழுத வாழ்த்துகள் 💐 💐 💐 💐 💐..
கருத்துக்கு குறை நினைக்க வேண்டாம்.. நன்றி..
நான் ஸ்டோரி முடிக்கிறதே பெரிய விஷயமா இருந்துச்சு சிஷ்.. லாஸ்ட் த்ரீ டேஸ்ல போட்டு இருக்கேன்.. சோ எனக்கே என்னோட குறை தெரியும்.. அதுலயும் படிச்சி கமென்ட் பண்ணினதுக்கு ரொம்ப ரொம்ப நன்றி அக்கா 😍😍
 

Gowri Karthikeyan

Active member
கதை நல்லா இருந்தது ரைட்டர் 👏👏👏👏👏
தொல் பொருள் ஆராய்ச்சி பத்தி இன்னும் சொல்லி இருக்கலாம்.....மே பீ நீங்க நேரம் இன்மை காரணமா இப்படி எழுதி இருக்கலாம்......
Any way கதை நல்ல இருக்கு.....பட் நா கொஞ்சம் எக்செப்ட் பண்ணினேன்....அது disappointment தான்.....
 

STN - 95

Member
கதை நல்லா இருந்தது ரைட்டர் 👏👏👏👏👏
தொல் பொருள் ஆராய்ச்சி பத்தி இன்னும் சொல்லி இருக்கலாம்.....மே பீ நீங்க நேரம் இன்மை காரணமா இப்படி எழுதி இருக்கலாம்......
Any way கதை நல்ல இருக்கு.....பட் நா கொஞ்சம் எக்செப்ட் பண்ணினேன்....அது disappointment தான்.....
Enna mathiri except panneenga akka
 

STN - 95

Member
தொல் பொருள் ஆராய்ச்சி பத்தி interesting ஆன தேடல், குகை பத்தி சொன்னதும் ஏதோ mystery....இப்படி
Aama akka.. appadi thaan niraiya ninaichi vachi irunthen.. but naan last timela eluthinathula niraiya scene cut panniten.. unga ethirpaarppu பொய்யானதுக்கு really sorry akka.. maththappadi naan avasarathula potta thappalaam poruthu padichi comment panninathukku romba romba nandri akka 🥰🥰🥰.. story mudinchi pp la cut pannina scenelaam sethu poduven appo solluren mudincha padinga thank you so much akka 😍😍
 

Gowri Karthikeyan

Active member
Aama akka.. appadi thaan niraiya ninaichi vachi irunthen.. but naan last timela eluthinathula niraiya scene cut panniten.. unga ethirpaarppu பொய்யானதுக்கு really sorry akka.. maththappadi naan avasarathula potta thappalaam poruthu padichi comment panninathukku romba romba nandri akka 🥰🥰🥰.. story mudinchi pp la cut pannina scenelaam sethu poduven appo solluren mudincha padinga thank you so much akka 😍😍
Ok Writer sure❤
 
Top Bottom