• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

எபிலாக்

STN - 72

Member
Staff member
எபிலாக்


நிலாவாக இருந்த நவ்யா அந்த வீட்டுக்கு வந்து கிட்டதட்ட ஐந்தரை வருடங்கள் ஓடி இருந்தன.. அவளின் வேதனை வாழ்க்கையில் எந்த ஒரு சிறு ஞாபகமும் இந்த ஐந்தரை வருட வாழ்க்கையில் இல்லாமல் மொத்தமாக அழிந்தே போனது என்றே சொல்லலாம்..

எப்போதும் போல தன்னவனின் அணைப்பில் கிடந்தவள் காலையில் எழுந்து அவன் நெற்றியில் அழகாய் ஒரு முத்தம் பதித்து விட்டு குளியல் அறைக்கு சென்றாள்..

அன்று அவளுக்கு சட்டக் கல்வியை முடித்த பட்டமளிப்பு விழா நடக்க இருந்தது..

வேக வேகமாக குளித்துவிட்டு வெளியே வந்தவன் புடவை கட்டி அலங்காரத்தில் இறங்கி விட அப்போது தான் கண் விழித்த தமிழ் அவளை பார்த்து சிரித்தபடி "அமர்க்களமா கிளம்பறீங்க போல.. என்னைக்கும் இல்லாம என்ன இன்னைக்கு இவ்வளவு அலங்காரத்தில் இறங்கிட்ட..என் நவி பேபி எதுவுமே போடலன்னாலும் அழகாத்தான் இருப்பா.."

புருவம் சுருக்கி அவன் பக்கம் திரும்பியவள் "என்ன சொன்னீங்க ..ஒன்ஸ்மோர் புருஷா.. ஏதோ கிளுகிளுப்பா பேசின மாதிரி இருந்துச்சு.." என்க

"அப்படி எதுவும் பேசலையே.." என்று உதடு மடித்து சிரித்தவன் "என்ன சொன்னேன்..என் நவி பேபி எதுவுமே போடலன்னாலும் அழகு தான்னு சொன்னேன்.. "என்றவன். " சீ டர்ட்டி கர்ள் நான் சொன்னது மேக்கப் எதுவுமே போடலன்னாலும் அழகா இருப்பன்னு.. ரொம்ப நல்ல பிள்ளைமா நானு.. "

"தெரியும் அது தானே எனக்கு ஒரே தொல்லையா இருக்கு.." என்று உதடு பிதிக்கி சொன்னவள் "சரி மிஸ்டர் நல்ல பிள்ளை.. போயி குளிச்சு கிளம்பி வாங்க.. ஃபங்க்ஷனுக்கு டைம் ஆச்சு.." என்று விட்டு எல்லோரையும் அழைக்க கீழே போனாள்..

சூர்யாவும் கல்லூரி படிப்பை முடித்து இருந்தாள். அவளுக்கும் அன்றுதான் பட்டமளிப்பு விழா.. எல்லோரும் கீழே பரபரப்பாக கிளம்பி கொண்டு இருந்தார்கள்.. இப்போது எல்லாம் ரியா நபியாவின் நல்ல தோழியாக இருந்தாள்.. ஆதி கேசவனிடம் மாட்டிக் கொண்ட போது நவ்யாவின் நிலை நன்றாகவே விளங்கி இருந்தது ரியாவுக்கு.. அதில் இருந்து அவளோடு சினேகமாய் தான் பழகிக் கொண்டிருந்தாள்..

சிந்து மட்டுமே யாரோடும் பழகாமல் தனித்து இருந்தாள்.. அழகன் விஷயத்தில் அவசரப்பட்டு விட்டதாய் எண்ணி தினம் தினம் அழுதுக் கொண்டிருந்தாள்.. அவளின் அழகன் தனக்கு கிடைக்கவே கிடைக்க மாட்டானோ என்று வேதனை வேறு..

சிந்துவை தவிர மற்ற எல்லோரும் சேர்ந்து விழாவிற்கு புறப்பட்டார்கள்..

அங்கே நவ்யாவின் பெயர் அழைக்கப்பட்டதும் மேடையின் முதல் படியில் காலை வைத்தவள் விழிகளோ பெருமையில் மிதந்தது.. எத்தனை வலிகள் எத்தனை வேதனைகள்.. கல்லூரிக்கு வந்த முதல் சில நாட்களில் ஒவ்வொரு நாளும் வித்தியாசமான பார்வைகள் ஏராளமான பேச்சுக்கள் பரிகாசங்கள் சில சமயம் சுவர்களில் கேலிச்சித்திரங்கள் கீழ்த்தரமான வார்த்தைகள் என்று எத்தனையோ கடந்து தான் வந்திருக்கிறாள்.. ஒவ்வொரு நாளும் அவள் ஒவ்வொரு கதையோடு வீட்டுக்கு செல்லும்போது அத்தனையும் உடைத்து போடுவான் தமிழ்..

ஒவ்வொரு பேச்சுக்கும் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் ஒவ்வொரு அவமானத்திற்கும் அவன் தரும் விளக்கம் அவள் மனதை ஆறுதல் படுத்தி அத்தனையையும் ஏணி படியாய் மாற்றி இன்று உச்சத்தில் வந்து நிற்கிறாள் அந்த தங்கமகள்..


மிடுக்காய் நிமிர்ந்த தோள்களுடனும் நேர்கொண்ட பார்வையோடும் மேடை ஏறி பெருமையோடு பட்டத்தை வாங்கியவளை சில வார்த்தைகள் பேச அழைக்க நுண் பேசி முன்னாளல்வந்து நின்றவள் தலை நிமிர்த்தி" நான் நவ்யா.. நவ்யான்ற என் பெயருக்கான அர்த்தம் தமிழ்ச்செல்வன்..

தமிழ்ச்செல்வன் என்ற பொருள் இல்லாமல் நவ்யா என்ற பெயருக்கு எந்த மதிப்பும் இல்லை.. என் பெயர்க்கு இப்படி ஒரு அழகான அர்த்தத்தை மரியாதையான அர்த்தத்தை கொடுத்தவர் என் கணவர் தமிழ்ச் செல்வன்..

அவள் அப்படி பேசிய உடன் "மிஸ்டர் தமிழ்செல்வன் ப்ளீஸ் கொஞ்சம் மேடைக்கு வர முடியுமா?" என்று அங்கு இருந்த அறிவிப்பாளர் அழைக்க தன்னவளை பெருமிதத்தோடு கண்களால் களவாடியபடி மேடை ஏறி வந்தான் அந்த காக்கிச்சட்டைக்காரன்..

"மிஸ்டர் தமிழ்செல்வன்.. சில வார்த்தைகள் ப்ளீஸ்.." என்று அந்த அறிவிப்பாளர் கேட்க

"வார்த்தை இருந்தா தான் அதற்கான பொருளுக்கும் இடமுண்டு.. என் வார்த்தை அவளுக்கான பொருளா என்னை மாற்றிக் கொண்டது என் அதிர்ஷ்டம் என்று தான் நான் சொல்லணும்.. நவ்யா என்கிற வார்த்தைக்கு அர்த்தமா மாறினதுக்கு ரொம்ப பெருமை படுறேன் நன்றி.. என்றவன் நவ்யாவை பெருமையாய் பார்த்தபடியே மேடையில் இருந்து இறங்கி இருந்தான்..

அதன் பிறகு சூர்யா மேடை ஏறினாள்..

பட்டத்தை வாங்கியவள் "எங்கேயோ காணாமல் போக இருந்த என்ன தன்னோடு சேர்த்து மீட்டு எடுத்து வந்தவ என் நவியா அவளோடு சேர்த்து இன்னைக்கு இந்த நிலைமைக்கு வந்திருக்கிறேனா இந்த இடத்தில் இருந்து என்ன மாதிரி காணாம போக இருக்கிற நிறைய பேர நிச்சயம் தூக்கி விடுவேன்.. இது இந்த மேடையில நான் செஞ்சு கொடுக்கிற சத்தியம்.." என்றவள் "ரொம்ப நன்றி மேடம்" என்று சொல்லிவிட்டு மேடையை விட்டு அதே திமிரோடு இறங்கி வந்தாள்.. இப்போதைய அவளை பார்க்க ஒரு ஐபிஎஸ் ஆஃபிசர் போல தான் இருந்தாள்..

"எங்க டிபார்ட்மெண்டுக்கு கூடிய சீக்கிரம் ஒரு நல்ல ஆபீசர் கிடைச்சிடுவாங்க போல.. இனிமே டில்லி பாபு மாயன் இவங்கள மாதிரி ஆள் எல்லாம் ஓடி ஒளிஞ்சிக்கணும்னு நினைக்கிறேன்.. " என்று தமிழ்ச்செல்வன் சொல்ல அதைக் கேட்ட நவ் யாசூர்யாவை பெருமையோடு பார்த்து சிரித்தாள்..

டில்லி பாபு மாயன் ஆயுள் கைதிகளாக சிறைப்பட்டிருந்தார்கள்.. இரண்டு முறை தப்பிப்பதற்கு முயற்சி செய்து அவர்களுடைய சிறைச்சாலை வாசத்தை அதிகப்படுத்திக் கொண்டது தான் மீதம் ..இன்றும் சிறைக்குள் அவர்களும் அவர்களுக்கு வேலை செய்து கொண்டிருந்த அடியாட்களும் கம்பி எண்ணிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.. பெவெளியுலகம் இப்போதைக்கு அவர்கள் கண்களுக்கு புலப்படப் போவதில்லை..

வீட்டுக்கு வந்த மருமகளையும் அவள் தோழியையும் ஆரத்தி எடுத்து வரவேற்ற தெய்வானை அதன் பிறகு உண்டு விட்டு களைப்போடு உறங்கச் சென்றார்கள் அனைவரும்..

தங்கள் அறையில் வந்து குளித்து இரவு உடைக்கு மாறி இருந்தார்கள் இருவரும்.. தமிழ் அருகே அமர்ந்த நபியா " அத்தான்" எங்க "சொல்லுடா நவி பேபி.. " என்றான்

"என்ன சும்மா கண்டுக்கவே மாட்டேங்கிறீங்க? "

"பொய் சொல்றதுக்கும் ஒரு அளவு இருக்கு . நீ இந்த ரூமுக்குள்ள வந்ததிலிருந்து ஒன்னை தவிர என் பார்வை வேறு எங்கேயுமே போகல பேபி? "

அவன் கேலி பேசி அவளை அணைத்துக் கொண்டு படுத்திருக்க "இல்ல நீங்க கண்டுக்கல.. கண்டுக்கிட்டு இருந்தா இத்தனை நேரம் நான் என்ன நினைக்கிறேன் என்று தெரிந்து செஞ்சும் முடிச்சிருப்பீங்க.."

"அப்படியா அப்படி என்ன நினைக்கிறாயாம்? என்ன தவிர வேறு ஏதாவது நினைக்கிறியா என்ன?" என்று அவன் கேட்கவும்

சட்டென தலையை குனிந்து உதட்டை சுழித்தவள் "அதுதான் தெரியுது இல்ல.. வேற யாரையும் நினைத்தேனா? இப்போ உங்களை பத்தி நான் என்ன நினைக்கிறேன் உங்களுக்கு தெரியும் தானே? தெரிஞ்சும் தெரியாத மாதிரியே ஆக்டு கொடுக்க வேண்டியது அத்தான்.." என்றாள்

"இப்ப என்ன செய்யணும் ?"என்று அவன் கேட்க

"உங்களோட எல்லாத்தையும் எனக்கு பரிசா இன்னைக்கு கொடுக்கிறேன்னு சொன்னீங்க.. இன்னிக்கு நான் ஜெயிச்சதுக்கு ட்ரீட்டா உங்கள முழுசா நான் எடுத்துக்கலாம்.. அப்படித்தானே ப்ராமிஸ் பண்ணீங்க" அவள் கேட்கவும்..

"ஆமா எடுத்துக்க வேண்டியதுதானே? நான் இப்ப கொடுக்க மாட்டேன்னு சொன்னேன்.." என்று அவன் கேட்க அப்படியே விழி வெரித்து "என்ன எடுத்துக்கவா அது எப்படி நான் எடுத்துக்க முடியும்? "

அவள் கேட்கவும் "எனக்கு எப்படி தெரியும் எப்படி வேணா எடுத்துக்கோ" என்று சொல்லி அவன் பக்கம் திரும்பி அவள் கண்களோடு கண்கள் கோர்க்க அந்தப் பார்வை அவளிடம் பல ரகசியங்களை சொல்லியது பல புரியாத விஷயங்களை சொல்லித் தந்தது..

புருவம் ஏற்றி இறக்கி அவன் என்ன என்பது போல் ஜாடையில் கேட்க அவளோ தலையிடவலமாயாட்டி எல்லாம் புரிந்தது என்பது போல் ஜாடை செய்தாள்..

சட்டென அவன் மேல் ஏறி அவன் மார்பில் தலை வைத்து படுத்தவள் எடுத்துக்கட்டுமா என்று கேட்க அவள் கன்னம் தாங்கி முகத்தை நிமிர்த்தியவன் எடுத்துக்கோடி என் சீனி மிட்டாய் என்று அவள் மூக்கோடு மூக்குரசி கொஞ்ச

அதற்கு மேல் பொறுமையை கடை பிடிக்க முடியவில்லை நவ்யாவால். அவன் நெற்றியில் தன் இதழ் முத்தங்களை தொடங்கி வைத்தவள் முகம் முழுவதும் எந்த ஒரு இடத்தையும் மிச்சம் வைக்காமல் முத்தமிட்டு எச்சில் ஆக்கினாள்..

அதன் பிறகு இதழால் ஊர்வலம் நடத்தியவரள்மெல்ல மெல்ல அவன் மேனி முழுவதும் தன் இதழ்களால் ஆளத் தொடங்கினாள்.. வித்தியாசமாக இருந்தது அந்த கூடல்.. ஆணின் ஆளுமை இன்றி பெண் மானின் ஆளுமையில் ஆணீ சிங்கம் அடங்கி போயிருந்தது

அவன் கைகள் அவளை மெலிதாய் அணைத்து இருந்தனவே தவிர அதில் எந்த அசைவும் இல்லை.. அவளுக்கும் அவனின் எதிர்வினை தேவைப்பட்டது அத்தான் ப்ளீஸ் என்று அவளை கெஞ்ச வைத்தான் ஆணவன்..

அதன் பிறகு அவள் இடையில் அழுந்திய கைகள் அவள் இதழ் ஊர்வலத்திற்கு ஏற்ப தானும் அவள் மேனியில் ஊர்வலம் நடத்தியது.. ஆனால் அந்த நிலையிலும் அவள் தான் அவனை வழிநடத்தினாலே தவிர அவள் அனுமதி இன்றி அவன் கை அத்து மீறவில்லை..

அதன் பிறகு அந்தப் பெண் மான் அவனை முழுவதுமாய் அங்குலம் அங்குலமாய் ஆண்டு இருந்தது.. அங்கே ஆண்மை அவளுக்குள் நுழைந்து ஆட்சி செய்யவில்லை.. பெண்மை தனக்குள் அந்த ஆணுக்கு இடம் கொடுத்து ஆள செய்தது..

பெண்ணின் ஆளுமையில் ஒரு அழகான கூடல் முடிந்து இருவரும் பக்கவாட்டாக படுத்திருக்க தன் அத்தானின் பக்கம் திரும்பியவள் அவன் தோளில் முகம் புதைத்து "அத்தான் இன்னைக்கு நீங்க எதுவுமே பண்ணல.. நீங்க என்னை முழுசா கொள்ளையடிக்கணும். எதுக்கும் பர்மிஷன் கேட்காம என் உயிர்க்குள்ள உங்க உயிரை நீங்க சேர்க்கணும். எப்ப அத்தான் இது நடக்கும் ?"

அவள் கேட்க "நடக்குமே நவ்யா ஐஏஎஸ்.. யாருக்கும் பயப்படாத அடங்காத கலெக்டரா நீ ஆகறப்போ உன் வேலை முடிச்சுட்டு வீட்டுக்கு டயர்டா வரப்ப என் காதலால் உன்னை எனக்குள்ள பதுக்கி வப்பேன்.. அன்னைக்கு என் நவி பேபியா முழுசா அசைய கூட விடாம எனக்குள்ள அரெஸ்ட் பண்ணி வச்சுப்பேன்.. யாரும் என்னை கேட்க முடியாது என்நவி பேபியும் என்ன கேட்க முடியாது.. அதனால சீக்கிரம் கலெக்டர் ஆகுற வழிய பாருங்க மேடம் .."என்றவனை இறுக்கமாய் அணைத்துக் கொண்டவள்..

ஹைய்யோ.. அத்தான் அத்தான் அத்தான்.. ஒவ்வொரு முறையும் இப்படி என்னை கவுத்துடறீங்களே உங்களை இன்னும் இன்னும் இன்னும் ரொம்ப பிடிக்குது.. என்றாள்..

கணவன் மனைவி இடையே நிகழும் தாம்பத்தியம் என்பது காதலாலும் காமத்தாலும் வலிகள் தந்து சுகம் காண்பது மட்டுமல்ல.. அவர்களுக்கு இருக்கும் வலிகளுக்கு எல்லாம் மருந்தாய் இருந்து அவர்களுக்கும் சுகம் தந்து தானும் சுகம் பெறுவதும் தான் அழகான காதலின் இலக்கணம்..


அந்த இலக்கணத்தை முழுதாய் அனுபவித்து வாழ்கிறார்கள் நவியு
ம் தமிழும்.. விரைவில் தமிழ் நவ்யாவை முழுதுமாய் ஆண்டு விட அவர்களை வாழ்த்தி விடை பெறுவோம்..
 

Nithya Dinesh

Active member
Story super ah irunthuchu.... aana ennamo innum Story full fill akathe feel.... wat abt Azhagan, pooma, that small boy karthi yaaru....seetha paiyana ille.... vere sarode kolanthaiya....
 

STN - 72

Member
Staff member
Story super ah irunthuchu.... aana ennamo innum Story full fill akathe feel.... wat abt Azhagan, pooma, that small boy karthi yaaru....seetha paiyana ille.... vere sarode kolanthaiya....
கதைக்கு அடுத்த ப்ரண்ட் இருக்கு மா.. அதுல இதெல்லாம் சொல்லாவேன்.. ரிசல்ட் வந்தப்புறம் நான் யாருன்னு ரிவீல் பண்ணிட்டு நிச்சயம் பார்ட் 2 எழுதும் போது லிங்க் தர்றேன்.. நன்றி தங்கமே🥰😍
 

STN - 72

Member
Staff member
Story super ah irunthuchu.... aana ennamo innum Story full fill akathe feel.... wat abt Azhagan, pooma, that small boy karthi yaaru....seetha paiyana ille.... vere sarode kolanthaiya....
இதுல வெறும் தமிழ் நவி கதை மட்டும் தான் சொல்லி இருக்கேன்.. அடுத்த பார்ட்ல தமிழ் நவியோட மத்தவங்க கதையும் வரும் மா..♥
 
Top Bottom