அந்திவானில் தன் அத்தம வெப்பத்தை தனித்து, சூரியன் கடல் காதலியின் குளிர்ச்சியில் அணைந்து கொள்ள செல்லும் கோடை மாலை வேளை அது.
அந்த புகை வண்டி நிலையத்தில் அடுத்ததாக புறப்பட தயார் நிலையில் நின்றிருந்தது அந்த புகை வண்டி.
அதன் ஒரு பெட்டியினுள், ஜன்னலின் ஓரம் அமர்ந்திருந்த நண்பனின் தோற்றத்தையும், எங்கோ வெறித்திருக்கும் அவன் பார்வையையும் கண்டு வருந்திய வினித் வாய் திறந்தான்.
“டேய் மச்சான். இன்னும் எத்தனை நாள் தான் ஏமாத்திட்டு போனவள நினைச்சு இப்படி சுத்திட்டு இருக்க போற?
உங்க அப்பா அம்மாவ பத்தி கொஞ்சமாவது நினைச்சு பாருடா. அவங்களுக்கு நீ ஒரே மகன்.
உன் மேல அத்தனை நம்பிக்கை வச்சிருக்காங்க. நீ ஆசைப்பட்டேங்கிற ஒரே காரணத்துக்காக, அந்த பொண்ணு வீட்ல போய் உனக்காக பொண்ணு கேட்டு அவமானப்பட்டு வந்தாங்க.
உனக்காக இவ்வளவு தூரம் இறங்கி வந்த அவங்களையும் ஏன்டா உன்னோட சேர்த்து கஷ்டப்படுத்துற?” இளமை துள்ளலோடு சுற்றித்திரிந்தவன், இன்று காதல் தோல்வியில் ஆளே மாறி போயிருக்கும் உயிர் நண்பனிடம் கேட்டுக் கொண்டிருந்தான் வினித்.
அவன் கூற்றுக்கு சொந்தக்காரன் ஆதிரன், உண்மையில் இப்போது ரயில் வண்டியின் சாலரத்தின் வழி, தனக்காக காத்திருக்கும் பெற்றோரை தான் நோக்கினான்.
ஆனால் தீர்கமான ஆதிரனின் விழிகள் எதைத்தான் வாழ்வில் எதிர்நோக்குகிறது என்பதை மட்டும் யாராலும் கணிக்க முடிவதில்லை.
பெற்றோருக்கு செல்ல பிள்ளையாக, படிப்பில் கெட்டிக்காரனாக, குணத்தில் சுட்டியாக திரிந்து வந்த வாலிபனுக்கும், தற்போது இருக்கும், இந்தவனுக்கும் அத்தனை வித்தியாசங்களை பட்டியலிட்டு கூறிவிடலாம்.
அனைத்தும் காதல் தோல்வியால் ஏற்பட்ட விளைவுகள் தான்.
கல்லூரி காலத்தில் கனாக்கள் கண்டு, கொஞ்சல் மொழிகள் பேசி, காதல் கொண்ட மங்கை அவள், பெற்றோருக்காகவும் இவனை விட வசதியில் சற்று மேம்பட்ட ஒருவன் கிடைத்ததும் புது வாழ்வை நோக்கி சென்றுவிட்டாள்.
‘அப்படியெனில் அவள் இவன் மேல் வைத்திருந்த காதல்?’ என்றால் அந்த வினா தான் அதிரனையும் பதில் இல்லாது தவிக்க வைக்கிறது.
அவளை மறந்தாலும் அவள் மேல் கொண்ட காதலை கடக்க முடியாது தான் தன்னையும் வருத்திக்கொண்டு, தன்னை சுற்றி இருப்போரையும் கவலையுற வைத்துக் கொண்டிருக்கிறான் ஆதிரன்.
மூன்று மாதங்களாக இதே நிலையில் இருக்கும் மகன், ‘எங்கு வாழ்வில் திசை மாறி போய் விடுவானோ?’ என்ற அச்சத்தில் ஆதிரனின் தந்தை, அவரின் தந்தையிடம் மகனை அனுப்பி வைத்தாலாவது ‘ஏதேனும் தெளிவானா?’ என்று தான் தற்போது இங்கு வந்து நிற்கிறார்.
நண்பனை வழி அனுப்ப வந்த வினித் தான், மனம் தாளாமல் அவனிடம் பேசிப் பார்த்து, பதில் ஏதும் வராததில், சலிப்பாக அந்தப் பெட்டியில் இருந்து கீழ் இறங்கி விட்டான்.
இரண்டு நொடிகளில் பச்சைக்கொடி காட்டப்பட்டு, புகையை வெளியேற்றிய படி புகைவண்டி மெல்ல மெல்ல நகர்ந்திட, ஆதிரனும் அவன் வழியில் மெல்ல மெல்ல நகர்ந்து சென்றான்.
அவனையே கண்டு நின்றிருந்த அவன் பெற்றோரும், வினித்தும் வண்டி புறப்பட்டும் அது சென்ற திசையை கண்டு நின்றிருந்தனர்.
“ஏங்க இந்த நேரத்துல இவனை கண்டிப்பா அனுப்பியே ஆகணுமா?” மகனை நினைத்து நித்தமும் வருந்தும் ஆதிரனின் அன்னை கேட்டிட, “அவனுக்கு இந்த மாற்றம் அவசியம் மா.
காதல் ஒன்னு விட்டு போயிட்டா எல்லாமே முடிஞ்சதுன்னு முடங்கிட்ட நம்ம பையனுக்கு, காதல பத்தியும் வாழ்க்கைய பத்தியும் நிறைய புரிதல் தேவை.
அந்த புரிதல் வருவதற்கு அவனுக்கு இந்த பயணம் அவசியம். இந்த பயணத்தோட முடிவு அவன மீட்டு கொண்டு வரும்.” என்று கூறியவர் மகனை நினைத்து பெருமூச்சை விட்டுக் கொண்டார்.
புரிதலற்று புலர்ந்த காதலை சுமந்து கொண்டு பயணிக்கும் ஆதிரனின் மனதிற்கு, இந்த பயணம் எவ்வகை மாற்றத்தை புகுத்தி விடப்போகிறது?
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
தலைவனின் பிரிவையும், தலைவியின் காத்திருப்பையும், பல காவியங்கள் மூலம் உணர்த்திய நெய்தல் நில மண்ணில் வந்து நின்றது ஆதிரனை சுமந்து வந்த புகைவண்டி.
யாவரும் இறங்கிய பின்பு, வேறு வழியில்லாமல் தன் தோள் பையுடன் இறங்கிய ஆதிரன் கண்டது, அந்த நெடுவயல் கிராமத்தின் விடியலை தான்.
ஒரு ஆழ்ந்த பெருமூச்சை இழுத்து விட்டுக்கொண்டு, அங்கிருந்து நடந்தான் ஆதிரன்.
வானில் அழகாய் புலரும் சூரியனின் பிரகாசத்தில், அந்த அழகிய கிராமம் ஆதிரனின் கண்களுக்கு விருந்தாகியது.
தன் தந்தையின் பூர்வீகமான இந்த கிராமத்திற்கு, ஒவ்வொரு விடுமுறை மற்றும் திருவிழா காலங்களிலும் வந்து தங்கி செல்லும் இனிமையான நினைவலைகள் ஒரு இதமான உணர்வை அதிரனுக்கு அளித்தது.
வயல்வெளிகள் யாவிலும் புதிதாக விதைக்கப்படும் பயிர்கள், சுறுசுறுப்பாக நடமாடும் கிராம மக்கள், குறும்புடன் சுற்றி தெரியும் சிறுவர்கள் என்று நகரத்தின் இரைச்சலில் இருந்து தப்பி வந்தது போல் இருந்தது அவனுக்கு.
இருபது நிமிடங்கள் வியர்த்து விறுவிறுக்க நடந்து வந்த ஆதிரன் வந்து நின்ற இடம், மலை ஓரத்தில் சுற்றிலும் ஏக்கர் கணக்கில் இருக்கும் வயல்வெளிக்கு சற்று தள்ளி இருந்த அந்த அளவான அழகான ஓட்டு வீட்டிற்கு தான்.
மூங்கில் கம்பிகளை வைத்து வீட்டை சுற்றிலும் தடுப்புகள் அமைத்து, வண்ண வண்ண மலர் செடிகள் பூத்துக் குலுங்கிய அந்த வீடும், சூழலுமே ஆதிரன் வெகு நாட்கள் மறந்திருந்த புன்னகையை வரவழைத்திருந்தது.
சுற்றிலும் கண்களை சுழல விட்டவன் பார்வைக்கு அந்த உருவம் அகப்பட்டது.
வெள்ளை வேட்டி சட்டையில், வயல் மேட்டின் மேல் நின்று கொண்டு பார்வையிடும் அந்த வயதான தோற்றத்தை பார்த்த ஆதரனின் கால்கள் தானாக அருகில் சென்றது.
நரை விழுந்தும், தோல் சுருங்கியும், பார்வையில் ஒரு தீட்சண்யத்தையும், கட்டுக்கோப்பான உடலுடனும் நின்றிருந்தார் ஆதிரனின் தாத்தா இளங்கோவன்.
அவர் முன் சென்று நின்ற ஆதிரன் புறம் தானாக திரும்பிய இளங்கோவனும், “எப்படி இருக்க ஆதி கண்ணா?” என அவன் தோள் தட்டி கேட்டார்.
பதிலுரைக்காது புன்னகைத்து சமாளித்த பேரனை கண்டு அர்த்தமாக புன்னகைத்து கொண்டார் இளங்கோவனும்.
“அடடே! ஆதி தம்பி எப்ப வந்தீங்க? சின்னையா வரலையா? சின்னமா நல்லா இருக்காங்களா? வரேனு ஒரு வார்த்தை சொல்லலையே.” என்று பல வருடங்களாக இளங்கோவனிடம் வேலை பார்க்கும் சின்னசாமி கேட்டார்.
“நான் மட்டும் தான் வந்தேன் சாமி அண்ணா.” என்று பதில் அளித்தான் ஆதிரன்.
“போய் குளிச்சிட்டு சாப்பிடு ஆதி. அசதியா வந்திருப்ப.” என்று இளங்கோவன் கூற, தலையசைத்து அந்த சின்ன ஓட்டு வீட்டிற்குள் நுழைந்து கொண்டான்.
நாட்களும் பொழுதுகளும் ஆதிரனுக்கு நெடுவயல் கிராமத்தில் நெடுநெடுவென்று கழிந்தோட, உண்மையில் அவன் வாழ்வில் நடந்தவைகளில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளி வந்து கொண்டிருந்தான்.
அப்படி ஒரு மாலைப் பொழுதில் இளங்கோவன் வழமை போல் தன் வயல்வெளியில் தஞ்சமடைந்திருந்தார்.
வீட்டிற்கு வெளியே கயிற்றுக் கட்டிலில் அமர்ந்திருந்த ஆதிரனுக்கு தன் சிறு வயது பொழுதுகள் நினைவிற்கு வந்தது.
பார்ப்பதற்கு சற்று விரைப்பாக தெரிந்தாலும், ஆதிரனின் தாத்தா இளங்கோவன் உண்மையில் அவ்வளவு பாசமானவர்.
ஒற்றை மகனின் ஒரே மகனை சீராட்டி வளர்த்தவர். ஆதிரனுக்கும் அவன் தாத்தா என்றால் கொள்ளை பிரியம்.
சிறு வயது ஆதிரனை தோளில் அமர வைத்துக்கொண்டு, வயல் பரப்பில் வேடிக்கை காண்பிப்பது, ஆடு மாடு கோழிகளுக்கு தீவனம் போடுவது, கடலுக்கு அழைத்துச் செல்வது, தின்பண்டங்கள் வாங்கி குவிப்பது என்று ஆதிரன் வாயை திறந்து கேட்கும் முன்பே அனைத்தும் கிடைத்துவிடும்.
இதை யாவையும் நினைத்து பார்த்துக் கொண்டிருந்த ஆதிரனின் மூளைக்கு சட்டென்று ஒரு மணி அடித்தது.
எவ்வளவு விலை உயர்ந்த பொருளை உடைத்தாலும் தன்னை ஒரு கேள்வி கேட்டிராத அவனின் தாத்தா, வீட்டின் உயர்ந்த பரண் மேல் இருக்கும் பெட்டியை மட்டும் என்றுமே தன்னை தொட்டுப் பார்க்க கூட விட்டதில்லை.
எப்போதுமே கண்ணெதிரே இருக்கும் பொருளை விட, மறைத்து வைக்கும் பொருளின் மீதுதானே ஆர்வம் அதிகமாக வரும்.
அப்படி பலமுறை ஆதிரன் அந்த பெட்டியை இளங்கோவன் அறியாமல் திறந்து பார்க்க முயற்சித்திருக்கிறான்.
ஆனால் ஒருமுறை கூட அவன் முயற்சி வெற்றி அடைந்ததில்லை.
ஒவ்வொரு விடுமுறையிலும் அவன் அந்த பெட்டியை திறக்க முயற்சி செய்து இளங்கோவனிடம் தண்டனை பெறுவது என்பது ஒருமுறை ஏனும் நடந்துவிடும் வழமையான கதை.
ஒரு கட்டத்திற்கு மேல், வளர்ந்த ஆடவனுக்கு அந்த பெட்டியின் மீது இருந்த ஆர்வம் குறைந்து விட, அதற்கு மேல் ஆதிரன் அதனை பெரிதாக கண்டு கொள்ளவில்லை.
தற்போது அந்தப் பெட்டியின் நினைவு வரவும், ‘அதனுள் என்ன இருக்கும்?’ என்ற அவன் சிறு வயது ஆர்வமும் மீண்டு வந்திருந்தது.
என்ன தான் வளர்ந்திருந்தாலும் தற்போதும் அந்த பெட்டியை தன் தாத்தாவிற்கு தெரியாமல் திறக்க முற்படும் சிறுவனை போல், திரும்பி இளங்கோவனை பார்த்தான்.
தூரத்தில் அவர் வளர்க்கும் பசு மாடுகளுடன் இருப்பதை பார்த்து உறுதி செய்து கொண்டவன் வீட்டிற்குள் சென்றான்.
பழமை மாறாது பராமரிக்கப்பட்டு வந்த அந்த வீட்டின் உயர்ந்த பரன், தற்போது ஆதிரன் சற்று எக்கி எடுத்தாலே எட்டும் உயரத்தில் தான் இருந்தது.
அந்த பழைய திடமான இரும்பு பெட்டியை கீழே இறக்கிய ஆதிரன், எப்போதும் அதில் தொங்கிக் கொண்டிருக்கும் பூட்டு, தற்போது இல்லாமல் இருப்பதைக் கண்டு சற்று ஆச்சரியப்பட்டான்.
‘தாத்தா இத பூட்டு போடாம வைக்க வாய்ப்பே இல்லையே!’ என்று நினைத்தபடியே அந்தப் பெட்டியை திறந்தான்.
சிறு தூசு கூட இல்லாத அந்த பெட்டியினுள், பல நாட்குறிப்பேடுகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது.
அதில் ஒரு குறிப்பேட்டை எடுத்த ஆதிரனின் உதடுகள் ‘1940’ என்று முணுமுணுத்தது.
அதன் முதல் பக்கத்தை திருப்பிப் பார்க்க ‘அ. இளங்கோவன்’ என்று எழுதப்பட்டிருந்தது.
அந்தப் பெயரிலேயே, பெட்டிக்குள் உறங்கிக் கொண்டிருந்தவை யாவும் தன் தாத்தா கைப்பட எழுதிய குறிப்பேடுகள் என்று புரிந்து கொண்டான் ஆதிரன்.
இரண்டாயிரம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அப்போதைய காலம் ஓடிக்கொண்டிருக்க, அந்த குறிப்பீடுகள் யாவும் இந்திய நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன்பிருந்து எழுதப்பட்டவை என்பதை, ஒவ்வொரு குறிப்பிட்டின் அட்டையிலும் அச்சிடப்பட்டிருந்த வருடங்கள் ஆதிரனுக்கு எடுத்துரைத்தது.
எழுபது வயதை கடந்த தன் தாத்தா நாடு சுதந்திரம் அடையும் காலத்தில் தன் இளமையை கழித்தவர் என்பது ஆதிரனுக்கு தெரியும்.
கதை புத்தகம் படிக்கும் சிறுவனின் ஆர்வம் அதிரனுக்குள்ளும் புகுந்து விட, சம்மனமிட்டு அதிலிருந்து ஒரு குறிப்பிட்ட எடுத்து வாசிக்க தொடங்கினான்.
அதில் எழுதப்பட்டிருந்த எழுத்துக்கள் யாவும் ஆதிரனை அந்த காலகட்டத்திற்கே கூட்டிச் சென்றது.
‘1940கள்………
அறிவும், வீரமும், நாகரிகமும் வளர்த்து, மண்ணை ஆண்ட நம் மக்கள், அதே மண்ணில் அடிமைகளாகவும் அகதிகளாகவும் கூலியாளர்களாக மாறி வரும் காலம் இது.
எங்கு காணினும், ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் வெள்ளை மனிதர்கள், இந்தியர்களை சக மனிதர்களாக அல்ல, ஒரு உயிரினமாக கூட மதியாமல் பல அக்கிரமங்களை செய்து வருகின்றனர்.
நிலம், ஆட்சி, அதிகாரம் என அனைத்தையும் வெள்ளையவனிடம் இழந்து, ஒரு பிடி அரிசிக்கு கூட உயிரை உருக்கி வேலை பார்க்கும் நிலையில் தான் நாடெங்கிலும் மக்கள்…
-கனா 🤎

Last edited: