இளங்கோவன் விடுதலை இயக்கத்தில் சேர்ந்து முழுதாக பத்து மாதங்கள் கடந்து இருந்தது.
பயிற்சிகள் போராட்டங்கள் பொதுவெளியில் மக்களை ஒன்று திரட்டி செய்யும் கலவரங்கள் என்று அவன் இலட்சியத்தில் முன்னேறி சென்று கொண்டிருந்தான் இளங்கோவன்.
உண்மையில் தீரேந்திரன் தலைமையில் செயல்பட்டு வரும் அந்த இயக்கத்தின் மீது இந்தியர்களுக்கு பெரும் நம்பிக்கையும் ஆங்கிலேயர்களுக்கு பெரும் வகையும் வளர்ந்து கொண்டிருந்தது.
இளங்கோவனைப் போன்று நிறைய இளைஞர்கள் அந்த இயக்கத்தில் சேரவே மாபெரும் சக்தியாய் தமிழகத்தில் உருவெடுத்து இருந்தது அவர்கள் இயக்கம்.
உண்மையில் அந்த இயக்கத்தின் சிறந்த வீரனாகவே இளங்கோவன் தன்னைத்தானே வளர்த்துக் கொண்டான்.
அவனின் அடங்காத வெறியும் அசாத்திய துணிச்சலும் தீரேந்திரனை எப்போதும் ஆச்சரியப்படுத்தும்.
ஒருபுறம் இளங்கோவன் அவன் பாதையில் முன்னேறி சென்று கொண்டே இருந்தான்.
இங்கு யாஸ்மினின் அந்த சிறை வாழ்வு மட்டும் எந்தவித மாற்றமும் இல்லாமல் தொடர்ந்து கொண்டு தான் இருந்தது.
அவளும் அதை சிறையென்று எண்ணாமல், தனக்கு எழுத கிடைத்திருக்கும் சுதந்திரம் என்று நினைத்துக் கொண்டு அந்த அறையிலேயே அடைபட்டு கிடக்கிறாள்.
முழுதாக மாதங்கள் ஆகின்றது அவள் வெளியுலகை கண்டு.
அவ்வப்போது தெருவில் கேட்கும் பேச்சு சத்தமும் அந்த ஒற்றை சாளரத்தின் வழி வரும் வெளிச்சம் தான் அது இரவா? பகலா? என்று அவளுக்கு உணர்த்தும்.
தங்கையின் உதவியோடும் அழகுவேலின் உதவியோடும் அவள் எழுத்துக்கள் மட்டும் வெளியுலகை வந்து புரட்சியை ஏற்படுத்துகிறது.
உண்மையில் அவள் சொற்களுக்கும் எழுத்துக்களில் பொதிந்து இருக்கும் அழுத்தமான உந்துதலுக்கும் இந்திய மக்கள் இடையே மிகுந்த வரவேற்பு கிடைத்தது.
எத்தனையோ இதழ்கள் தானாக முன்வந்து, “இந்த கட்டுரை, கவிதை எல்லாம் எழுதுற அந்த எழுத்தாளர் யாருன்னு கண்டுபிடிங்க.
இவங்க சொல் இன்னும் சுதந்திரமா வெளிய வந்தா மக்களை போராட்டத்திற்கு அழைத்து வர பெரிய சக்தியா மாறும்.” என்று இவளின் அடையாளத்தை தெரிந்து கொள்ள முயற்சிக்கின்றனர்.
ஆயினும் தன் அடையாளம் எந்த வகையிலும் வெளிப்பட்டு விடக்கூடாது என்று உறுதியாக இருந்த யாஸ்மின் அதை அலகுவேலின் மூலம் மறைத்தும் வைத்திருக்கிறாள்.
வெகு நாட்கள் கழித்து அன்றைய தினம் மிகுந்த ஆனந்தத்துடன் வீட்டிற்கு வந்தார் காதர்.
தற்போதெல்லாம் மகளை தேள் போல் கொட்டியும், அவள் அதற்கு எந்த எதிர்வினையும் ஆற்றாமல் இருப்பதில் பாத்திமாவும் சோர்ந்து தான் போனார்.
தன் கணவரின் முகத்தில் இருக்கும் மகிழ்ச்சியை கண்டு “என்னங்க இன்னைக்கு ரொம்ப சந்தோஷமா வந்திருக்கீங்க?” என்று கேட்டார்.
“பாத்திமா நம்ம இத்தனை நாள் தேடிக்கிட்டு இருந்தோம் இல்ல? அதே மாதிரி ஒரு மாப்பிள்ளை யாஸ்மினுக்கு கிடைச்சிருக்கு.
அவங்களுக்கு பணம் காசு நகை நட்டு எதுவும் வேண்டாமாம். பொண்ணுக்கு அவங்களே செஞ்சு கட்டிட்டு போறேன்னு வரன் தேடி வந்திருக்கு.” என்று முகம் முழுவதும் புன்னகையுடன் கூறினார் காதர்.
அதைக் கேட்டதும் “நிஜமா தான் சொல்றீங்களாங்க? ஏய் இறைவா. எங்களுக்கு ஒரு நல்ல வழியை விட்டுட்ட.
ஆமா பையன் எந்த ஊருங்க? அவங்களுக்கு நம்ம பொண்ணு இன்னொருத்தன காதலிச்ச விஷயம் எல்லாம் தெரியுமா?” என்று கேட்டார்.
அந்த கேள்வியில் முகம் மாறிய காதர், ‘மாப்பிள்ளை வீட்டிற்கு எந்த உண்மையும் தெரியாது’ என்பதைப் போல் தலையாட்டினார்.
அதைக் கண்டு துணுக்குற்ற பாத்திமா, “என்னங்க சொல்றீங்க? இது விஷயம் எதுவும் தெரியாம எப்படி…?” கேள்வியுடன் கணவரை ஏறிட்டார் பாத்திமா.
“ பின்ன என்ன தான் பண்ண சொல்ற பாத்திமா? உள்ளூர்ல இவ ஒழுக்கத்தை பத்தி தெரிஞ்ச ஒருத்தனும் இவள கட்டிக்க மாட்டான். அதான் வெளியூரில மாப்பிள்ளை பார்த்தேன். இருபது மயிலுக்கு தூரம் தான் அமைஞ்சிருக்கு.
இவளை பத்தி எந்த உண்மையும் அவங்களுக்கு இதுவரைக்கும் தெரியாது. ஒருவேளை இதுக்கு மேல தெரிஞ்சாலும் கண்டிப்பா இந்த பொண்ணு வேண்டாம்னு நம்ம முகத்திலேயே காரி துப்பிட்டு போயிருவாங்க.
நமக்கு கிடைச்சிருக்க கடைசி வழி இது மட்டும் தான். பேசாம எதுவும் சொல்லாம கட்டி வச்சிருவோம்.” என்றார் காதர்.
உள்ளுக்குள் இருந்து இதைக் கேட்டுக் கொண்டிருந்த யாஸ்மினின் கைகள் ஒரு நொடி காற்றில் நின்றது.
“நீங்க சொல்றது சரியா வருமாங்க? ஒருவேளை கல்யாணத்துக்கு முன்னாடி யாராவது சொல்லி நம்ம பொண்ணு இன்னொருத்தன காதலிச்ச விஷயம் தெரிஞ்சா பிரச்சனையாகிடுமே!” என்று பயந்தார் பாத்திமா.
“அதுக்கு தான் சொல்றேன் சட்டுபுட்டுன்னு எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் கல்யாணம் பண்ணி வச்சி அனுப்பி விடுவோம். அதுக்கப்புறம் கட்டி கிட்டவன் பாடு.” என்று முடித்தார் காதர்.
இந்த நொடி யாஸ்மினின் மனதில் உயர்ந்திருந்த அவள் தந்தை காதரும் கீழ இறங்கி விட்டார்.
இதுவரை ஏதோ ஒரு உந்துதல், ‘நிச்சயம் தன்னை பற்றி தெரிந்த யாரும் தன்னை திருமணம் செய்து கொள்ள முன் வர மாட்டார்கள்.’ என்ற தைரியத்தில் இத்தனை காலம் கடந்து வந்துவிட்டாள்.
இன்னும் சிறிது நாட்கள் தான் இந்த போராட்டங்கள் ஓய்ந்து, சுதந்திரம் கிடைத்த பின் இளங்கோவன் வந்துவிடுவான்.
அதன் பிறகு தன்னை பற்றி நினைக்காத தன் பெற்றோரை பற்றி தானும் இனி ஏன் நினைக்க வேண்டும் என்று அவனுடன் செல்ல முடிவெடுத்து காத்திருக்கிறாள்.
‘தன் காதலையும் விட்டுத்தர முடியாது, பெற்றோரையும் விட்டு தர முடியாது.’ என்று உறுதியாய் நின்ற பெண்ணை, வீட்டிற்குள் சிறை வைத்து, கடுமையான வார்த்தைகளை அவள் மீது தீயாய் கொட்டி, பாசம் காட்டி வளர்த்தவர்களே குப்பையில் தூக்கி வீசியதை போல் அவளை நடத்தியதில் அவள் மனமும் இறுகி போயிருந்தது.
அதிலும் தன் தாய் ‘குருடனுக்கே செவிடனுக்கோ. எப்படியாவது தன்னை தட்டிக் கழித்து விட வேண்டும்.’ என்று கூறிய வார்த்தையை அவள் மனதை வெகுவாக பாதித்திருந்தது.
தற்போது உண்மை எதையும் உரைக்காமல் தன்னை திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று நினைக்கும் பெற்றோரை நினைத்து அவள் மனம் மேலும் வெறுமையை தத்து எடுத்து கொண்டது.
‘அப்ப சரிங்க எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவங்கள பொண்ணு பாக்க வர சொல்லுங்க.” என்று பாத்திமா வெளியில் இருந்து கூறினார்.
அதுபோலவே அடுத்த நாளே மாப்பிள்ளை வீட்டினர் யாஸ்மினை பெண் பார்க்க வந்தும் விட்டனர்.
“ஒழுங்கு மரியாதையா இந்த புடவையை மாத்திட்டு வந்து நில்லு டி.” என்று தாய் கடிந்து கொண்டும், அசராது தான் அமர்ந்திருந்தாள் யாஸ்மின்.
“எவ்வளவு அழுத்தம் டி உனக்கெல்லாம். இதுக்கு மேல போராட போனவனே நினைச்சுகிட்டு எங்க தலையிலேயே உட்கார்ந்துக்கலாம்னு பார்க்கிறாயா?
முதல்ல எந்திரி டி.” என்று அவளை எழுப்பி தானே அவளுக்கு புடவை கட்டி அலங்காரம் செய்து வெளியில் அழைத்து வந்தார்.
அந்த மாப்பிள்ளையும் யாஸ்மினின் அழகில் மயங்கி போனவன், எந்த வரதட்சணையும் வேண்டாம் உடனடியாக திருமணத்தை வைத்துக் கொள்ளலாம் என்று கூறிவிட்டான்.
அவ்வளவுதான் காதருக்கும் பாத்திமாவிற்கும் தலையில் இருந்த பாரமே இறங்கியதைப் போன்று இருந்தது.
ஜடமாய் அவர்கள் முன் நின்றிருந்த யாஸ்மினுக்கோ, மனம் எங்கிலும் இளங்கோவனை நிறைந்திருந்தான்.
மாப்பிள்ளையி தாயார் அவர்கள் வழக்கப்படி யாஸ்மின் காலில் கொலுசு போட்டுவிட்டு, அவள் தலையில் பூவை வைத்து மகனுக்கு நிச்சயம் செய்தார்.
“ரொம்ப அழகா இருக்க மா.” என்று அவர் நெட்டி முறித்து யாஸ்மினுக்கு திருஷ்டி கழிக்க, முதல் முறை ‘என்னை ஏன் இப்படி படைத்த இறைவா?’ என்று அவள் உள்ளம் கூக்குரலிட்டு கதறியது. அதை செவிகளில் வாங்கியும் வாங்காமலும் இருந்து கொண்டார் இறைவனும்.
ஆனால் “என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள். என்னவனை மீறி வேறொருவன் என்னை சொந்தமாக முடியாது.” என்ற முடிவில் உறுதியாய் அவள் இருந்தது அவள் விழிகளில் இருந்த தீர்க்கத்திலேயே தெரிந்தது.
என்ன அதை கவனிக்க தான் அங்கு ஆள் இல்லை.
அவர்கள் இழுத்த இழப்பிற்கு எல்லாம் பொம்மையைப் போல் இசைந்து கொடுத்த யாஸ்மின் மனதில் அப்படி என்ன தான் இருக்கிறது?
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
ராணுவத்தில் சேர தமிழகத்திலிருந்து வட இந்தியா நோக்கி தீரேந்திரனின் தலைமையிலான இயக்கம் புறப்பட ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தது.
‘நம்ம கிளம்பறதுக்கு முன்னாடி எப்படியாவது யாஸ்மின் கிட்ட சொல்லணும்’ என்று மனதில் நினைத்த இளங்கோவனும், தற்போதைய அவர்களின் தொடர்பு மொழியான நாளிதழில் இந்த செய்தியை கடத்தி விட நினைத்தான்.
ஆனால் தற்போது செய்தத்தாள்களுக்கும், நாளிதழ்களுக்கும், கடுமையான நியதிகளும் சட்டதிட்டங்களும் ஆங்கிலேயர்களால் விதிக்கப்பட்டிருப்பதால் நிச்சயம் அதற்கு வாய்ப்பில்லை என்று புரிந்து கொண்டான்.
இறுதியாக, இந்த விடயத்தை அழகுவேலின் மூலம் யாஸ்மினுக்கு தெரியப்படுத்த முடிவெடுத்தான்.
“அன்புள்ள அழுகுவேலுக்கு,
எப்படி மாப்ள இருக்க?
என் இலட்சியத்தை அடைய இன்னும் கொஞ்சம் தூரமா நான் போறேன். திரும்பி வருவேனான்னு எனக்கு தெரியல.
எனக்காக நான் வருவேன்னு காத்துகிட்டு இருக்க என்னோட யாஸ்மின் கிட்ட, நான் ராணுவத்துல சேர போறேனு சொல்லிரு.
அப்பா அம்மாவ பாத்துக்க டா. இத்தனை நாளும் மறைஞ்சு நின்னு போராடுனேன். இப்ப நேரடியா களத்துல நிக்க போறேன்.
ஒருவேளை நான் திரும்பி வரலைன்னா, யாஸ்மின் கிட்ட சொல்லு, என் உயிர் போற கடைசி நிமிஷத்துலயும் என் கண்ணு அவளோட அந்த ஒத்த பார்வைக்காக காத்திருக்கும்.
என் இதையம் லட்சியத்திற்காக கடைசிவரை நின்னு போராடினேன் திருப்தியோட அதோட துடிப்ப நிறுத்தும்.
இதுல என் லட்சியத்துக்காக நான் அவள கைவிட்டுட்டேன். நிச்சயம் வேண்டும் மன்னிக்க மாட்டேன்.
ஒருவேளை இன்னொரு ஜென்மம்னு ஒன்னு இருந்தா அதுல நிச்சயம் எங்க காதல் ஒன்னு சேரட்டும்.
எனக்கு ஏதாவது ஆயிடுச்சுன்னு தெரிஞ்சு அவ எந்த தப்பான முடிவையும் எடுக்காம பாத்துக்கோ டா.
அடிக்கடி சொல்லுவ இல்ல மாப்ள? இந்த வெள்ளைக்காரனுங்க எல்லாம் வெளியே போயிட்டா, நம்ம வேலைக்கெல்லாம் போகக்கூடாது சொந்தமா தொழில் தொடங்கணும்னு.
நிச்சயம் நம்ம ஆசைப்பட்ட மாதிரி நம்ம நாட்டுக்கு சுதந்திரம் கிடைக்கும். அதுல என்னோட பங்கும் நிச்சயம் இருக்கும்.
இப்படிக்கு,
உன் அன்பு தோழன் இளங்கோவன்” என்று எழுதி அந்த கடிதத்தை அலகு வேளுக்கு அனுப்பி வைத்தான்.
ஒரு பக்கம் அவள் எழுத்துக்களால் அவளை அடையாளம் கண்டு அவளை வதைக்க காத்திருக்கும் டேவிட் விக்டர். மறுபக்கம் விருப்பம் இல்லாமல் நடக்க இருக்கும் திருமணம். இதற்கும் மேலாக மீண்டும் இளங்கோவன் அவளை விடுத்து அவன் லட்சியத்தை நோக்கி செல்கிறான்.
‘தன்னவன் வருவான். தன்னை மீட்டு செல்வான்.’ என்று நம்பி காத்திருக்கும் பாவை அவள் இந்த செய்தியை அறிந்தால் என்ன செய்வாளோ.
மீண்டும் அவள் எதிர்த்து போராட போவது அவள் காதலுடன் என்பதில் மட்டும் ஐயமில்லை.
-கனா 🤎

Author: STN - 91
Article Title: ஒரு காதல் கனா காண்போம் - 12
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.