• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

ஒரு காதல் கனா காண்போம் - 13

STN - 91

New member
பூ வைத்து யாஸ்மினை நிச்சயம் செய்துவிட்டு சென்ற மாப்பிள்ளை வீட்டினர், “எவ்ளோ சீக்கிரம் முடியுதோ அவ்ளோ சீக்கிரம் கல்யாணத்த வச்சுருவோம்.

அங்கங்க போராட்டம் கலவரம் அடிதடி கைதுன்னு நடந்துகிட்டு இருக்கு. இந்த நேரத்துல சொந்த பந்தங்களை கூட்டி கல்யாணம் பண்றதுக்கு எல்லாம் நமக்கு நேரமும் இல்ல. அதுக்கு வாய்ப்பும் இல்லை.

எங்க பக்கம் எங்க குடும்பம் மட்டும்தான். உங்களுக்கு சரினா சொல்லுங்க வர வர வெள்ளிக்கிழமையே நாள் நல்லா இருக்கு.

பொண்ணுக்கு நீங்க என்ன போடுறிங்களோ போடுங்க நாங்க எதுவும் கட்டாயப்படுத்தல. ஆனா எங்க பக்கம் இருந்து தங்கத்துல போட்டு தான் உங்க பொண்ண மரியாதையா தான் கூட்டிட்டு போவோம்.” என்று யாஸ்மினை காண வந்திருந்த மாப்பிள்ளையின் தந்தை உரைத்துவிட்டார்.

‘எப்போதடா யாஸ்மின் தொலைத்து தலைமுழுகலாம்?’ என்று காத்துக் கொண்டிருக்கும் காதலுக்கும் பாத்திமாவுக்கும் சொல்லவும் வேண்டுமா என்ன.

உடனே காதர், “சரிங்க. நீங்க சொல்ற மாதிரியே பண்ணிக்கலாம் எனக்கும் பெருசா சொந்தத்தை கூப்பிடறதுல உடன்பாடு இல்லை.

கல்யாணத்து உங்க ஊர்ல வச்சாலும் சரி இல்ல இங்க வச்சாலும் சரி. முடிஞ்ச அளவு சீக்கிரம் முடிச்சிட்டா பரவால்ல.” என்று கூறினார்.

மரியமோ தன் அக்காவின் கையை கெட்டியாக பிடித்துக் கொண்டு நின்றிருக்க, யாஸ்மின் செவிகளில் இங்கு பேசுவது எல்லாம் விழுகிறதா என்றே சந்தேகம் தான்.

“அப்ம சரிங்க. இனி யோசிக்க எதுவும் இல்ல வேற வெள்ளிக்கிழமை கல்யாணத்த வச்சுக்கலாம். பெரியவங்க கிட்ட எல்லாம் பேசிட்டு உங்களுக்கு செய்தி அனுப்புறோம்” என்று கூறியபடி மாப்பிள்ளை வீட்டார் அனைவரும் அங்கிருந்து விடைபெற்று சென்றனர்.

அனைவரையும் நல்ல முறையில் உபசரித்து அனுப்பிய பின் தான் காதிருக்கும் பாத்திமாவிற்கும் மூச்சே வந்தபோல் இருந்தது.

“எப்படியாவது இந்த கல்யாணத்தை நல்லபடியா முடிச்சிடனும் பாத்திமா. கை சிலதுக்கு தேவையான காசை யார்கிட்டயாவது கைமாத்தா வாங்கி கடனை ஆனாலும் அவங்க சொன்ன தேதியில கல்யாணத்தை முடிக்கணும்.” என்று கூறினார்.

அதுவரை சிலை போல் நின்றிருந்த யாஸ்மினுக்கு உயிர் வந்ததை போல் தன் தந்தையை ஒரு அழுத்தமான பார்வையுடன் ஏறிட்டாள்.

“உங்க ரெண்டு பேருக்கும் அப்படி நான் என்ன பாவம் பண்ணிட்டேன்? உண்மையை மறைச்சுனாலும் எனக்கு இப்படி கல்யாணம் பண்ணி வைக்கணும்னு துடிக்கிற அளவு அப்படி என்ன நான் தப்பு பண்ணேன்?

மனசுக்கு பிடிச்சவன காதலிச்சது தப்பா? என் வாழ்க்கையை தேர்ந்தெடுக்குற உரிமை எனக்கே கிடையாதா?” என்று ஒவ்வொரு வார்த்தையும் அழுத்தமாக வந்து விழுந்தது யாஸ்மினிடமிருந்து.

அவள் பேச்சை அவள் தாய் பாத்திமா, “ஏய் யார்கிட்ட பேசுறேன்னு தெரிஞ்சுகிட்டு பேசு. உனக்காக ஊரு உலகமே அத்தனை பேரையும் இழுத்துகிட்டு உன்ன படிக்க வச்சவருடி அந்த மனுஷன்.

ஆனா நீ அதுக்கு என்ன கைமாறு பண்ண? ஒரு முன்னாடி அவர் மானத்தை குழி தோண்டி புதைச்ச பாவி டி நீ.

உன்னால தூக்கம் இல்லாம நிம்மதி இல்லாம நாங்க படுற பாடு உனக்கு இங்க தெரியப்போகுது?

நான் அப்பவே சொன்னேன் இவ்வளவு கஷ்டப்பட்டு படிக்க வைக்காதீங்க படிச்சு அப்படி எந்த கோட்டையை பிடிக்க போறான்னு கேட்டேனே நீங்க நான் சொன்னது காது கொடுத்து கேட்டீங்களா?

இப்ப பாருங்க அவ வாழ்க்கை தேர்ந்தெடுக்க உரிமை இல்லையான்னு நம்ம கிட்டயே எதுக்கு வாய் பேசிகிட்டு இருக்கிறா?” என்று பாத்திமா கூறினார்.

ஆனால் யாஸ்மினின் பார்வை மொத்தமும் அவள் தந்தையிடம் மட்டும் தான் நிலைத்திருந்தது.

அவள் பார்வையே எனக்கு தற்போது நீங்கள் பதில் சொல்லியே ஆக வேண்டும் என்று உணர்த்துவது போல் காதருக்கு தோன்றியது.

“உனக்கு இப்ப என்ன தெரியணும்? பித்து வெளுத்து இத்தனை தூரம் உங்களைக் கொண்டு வந்து நிறுத்தனும் எங்களுக்கு தெரியாதா? உங்களுக்கு எது நல்ல வாழ்க்கை அதை எப்படி அமைச்சு கொடுக்கணும்னு?

நான் ஒன்னும் மத்தவங்கள மாதிரி சின்ன வயசுலயே உன்ன பிடிச்சு கல்யாணம் பண்ணி வெச்சு கஷ்டப்படவோ இல்ல வெளியுலகம் தெரியாமலே வளர்க்கல.

இந்த ஊரிலேயே படிச்ச ஒத்த பொம்பள புள்ளனா அது நீ மட்டும் தான். உன்ன மத்தவங்க வசந்த பாக்குறேன் அளவுக்கு தான் என் கையில ஒன்னும் இல்லன்னாலும் முயற்சி பண்ணி உன்னை இவ்வளவு தூரம் கொண்டு வந்தேன்.

உனக்கு வேணா அந்த போராட்டக்காரனுக்கும் உனக்கும் இருக்க வேறுபாடுகள் கண்ணுக்கு தெரியாம போயிருக்கலாம்.

ஆனா எனக்கு நம்ம உறவுகள் முன்னாடியும் சமுதாயத்துக்கு முன்னாடியும் தலை நிமிர்ந்து தான் நிக்கணும்.

அதுக்காக உன்னையும் உன் தங்கச்சியும் எந்த விதத்திலும் நான் கட்டாயப்படுத்தல.

உங்களுக்கு தேவைக்கு அதிகமான அளவு சுதந்திரத்தையும் படிப்பையும் கையில கொடுத்து இருக்கேன். பதிலுக்கு நீங்க என் பேச்சை கேட்டு நடந்தாலே போதும்.

இதையும் மீறி உன்னோட ஆசை தான் முக்கியம்னு ஓடிப்போகிறோம் இல்ல வேற ஏதாவது தப்பான முடிவையோ எடுக்கலான்னு நினைச்சனா உன்ன மட்டும் மனசுல நல்லா வச்சுக்கோ நீ இந்த வீட்டு வாசப்படி உயிரோடவோ பிணமாகவோ தோன்றினா அது உன் கல்யாணம் முடிஞ்சதுக்கு அப்புறமா மட்டும் தான் இருக்கணும்.

இல்லனா எங்க மூணு பேரையும் பிணமா தான் நீ பார்ப்ப.” என்று வெளிப்படையாகவே யாஸ்மினையும் மிரட்டினார் காதர்.

அவள் தந்தை கூறியதை கேட்டு யாஸ்மின் உதட்டில் ஒரு விரக்தியான புன்னகை தான் வந்தது. அவள் கண்களில் இருந்து இதற்கு மேல் இறங்குவதற்கு கண்ணீரே இல்லை என்னும் அளவு வற்றி தான் போய்விட்டது.

இதுவரை நாளும் கடமையை முடித்திட காத்திருந்தவர்கள் இன்று வாய்ப்பு தேடி வந்ததும் மகளை மிரட்டையேனும் தங்கள் காரியத்தை சாதிக்க வேண்டும் என்று நினைக்கின்றனர் என்று யாஸ்மினுக்கு புரிந்தது.

“செஞ்ச கூலிக்கு திரும்ப கைமாறு கேக்குறீங்க. எடுத்துக்கோங்க. உங்களால என்ன எல்லாம் முடியுமோ எல்லாம் பண்ணி பாருங்க.

ஆனா ஒரே ஒரு விஷயத்தை மட்டும் நீங்களும் மனசுல வச்சுக்கோங்க. இந்த ஜென்மத்துல என் புருஷனா என் உடம்பையும் மனசையும் தொடுறதுக்கு என் இளங்கோவ தவிர வேறு யாருக்கும் அனுமதியில்லை.

அதையும் மீறி நீங்க எனக்கு யாருக்கு வேணாலும் கல்யாணம் பண்ணி வைக்கலாம் ஆனா அவன் கூட இருக்கிற ஒவ்வொரு நிமிஷமும் நான் என்னுடைய இளங்கோவன் நினைச்சுகிட்டு தான் இருப்பேன்.”என்று அவள் கூறியதும் அவள் தாய் “என்ன வார்த்த இப்படி பேசுற?

அந்த போராட்டக்காரன் எந்த விதத்தில் உனக்கு முக்கியமா போய்ட்டான்?

சொல்லுடி சொல்லு? உன் இப்படி எல்லாம் கேவலமா போகுது?” என்று அவள் முதுகிலேயே வந்து ‘பொளிர் பொளிர்’ என்று அடி விலாசினார்.

அவள் வார்த்தையில் உண்மையில் காதரும் பாத்திமாவும் அதிர்ந்து துடித்து தான் போயினர்.

அதிலும் காதருக்கு யாஸ்மின் மனதில் இளங்கோவன் எந்த இடத்தில் இருந்தால் அவள் இப்படி ஒரு வார்த்தையை உதிர்த்திருப்பாள்.

இதுவரை பெரிதாக தெரியாத யாஸ்மின் மௌனம் தற்போது காதருக்கும் பாத்திமாவிற்கும் அது எவ்வளவு வீரியமானது என்று புரிவது போல் இருந்தது.

அத்தனை அடியை வாங்கியும் அவள் பார்வையும் சரி, தோரணையுடன் சரி சற்றும் குறையாத அதே அழுத்தத்துடன் தான் நின்றிருந்தாள்.

தன்னையே அதிர்ச்சியாக நோக்கி இருக்கும் பெற்றோரை கண்டுகொள்ளாமல் வேகமாக அந்த அறைக்குள் சென்று மீண்டும் அடைந்து கொண்டாள்.

அழுது கதறி தன் நிலை மாறிவிடாதா என்று எண்ணி மறுகும் வாழ்வு கூட இந்த கட்டத்தில் யாஸ்மினுக்கு வெறுத்து விட்டது.

ஒரு தீர்க்கமான முடிவை எடுத்த யாஸ்மின் மனம் அடுத்த செய்ய வேண்டிய திட்டங்களை தெளிவாக சிந்தித்து வகைப்படுத்தியது.

ஒரு ஆழ்ந்த மூச்சை இழுத்து விட்டவள் இறுதியாக அவளின் காகிதத்தையும் பேனாவையும் எடுத்தாள்.

திருமண ஏற்பாடு தொடங்கிவிட்டது, தன்னை நிச்சயம் செய்துவிட்டு சென்றிருக்கின்றனர் என்று அவள் மூலையில் எதுவும் படியவில்லை.

அவளைப் பொறுத்த மட்டும் அவள் மனம், உடல், பொருள், ஆவி என்று அனைத்தும் என்றோ இளங்கோவனுக்கு சொந்தமாகிவிட்டது.

அப்படியும் ஒருவன் தன்னையும் மீறி தன்னை எடுத்துக் கொள்ள வேண்டும் என்றால் அது மண்ணில் மக்கிப்போக போகும் இந்த உடலை தானே.

மனதால் நான் இளங்கோவனின் மனைவி மட்டுமே என்று தனக்குள் உருப்போட்டுக் கொண்டவள், அந்த காகிதத்தில் வார்த்தைகளால் வடிக்க முடியாது அவள் போராட்டங்களை எழுத்துக்களாக உருமாற்றினாள்.

அவள் எழுதிய அந்த இறுதி கட்டுரை வெறுமனே மக்களை உரிமை குரல் கொடுக்க மட்டும் அல்லாது ஆழ்மனதிலிருந்து தங்களுக்கு வேண்டிய சுதந்திரத்தை கேட்க எழுதியது இல்லை.

அது முற்றிலும் அவளும் அவள் காதலும் மேற்கொள்ளும் போராட்டங்கள். அது எப்பொழுதும் போல் தெளிவாக வார்த்தைகளில் மறைத்து அவளின் இளங்கோவனுக்காக இறுதி முறையாக அவன் இலட்சியத்திற்காக எழுதினாள்.

அந்த கட்டுரைகள் இடம்பெற்றிருந்த ஒவ்வொரு வார்த்தையும், அவள் விரத்தியின் உச்சத்தில் வாழ்வை வெறுத்த மனநிலையில் எழுதியவையே.

வெளியே மகள் கூறிவிட்டு சென்ற வார்த்தையில் இடிந்து போய் அமர்ந்திருந்த காதரின் அருகில் வந்து நின்று பாத்திமா, “ஏங்க அவ எப்படி கல்யாணத்தை நிறுத்துவது என்று தெரியாமல் இந்த மாதிரியெல்லாம் பேசிட்டு போறா.

நீங்க போய் ஆக வேண்டிய வேலைய பாருங்க. அந்த கழுதையை இழுத்துக் கொண்டு வந்து கல்யாணத்துக்கு நிக்க வைக்க வேண்டியது என் பொறுப்பு.” என்று கணவரை விரட்டினார்.

அரைமனதாக காதரும் எழுந்து சென்றுவிட்டார். அதுவரை அமைதியாக நின்று இருந்த மரியம் தாயும் தந்தையும் வீட்டில் இருந்து புறப்பட்டதும் வேகமாக தன் தமக்கையின் அருகில் நுழைந்தாள்.

“அக்கா இப்ப என்ன அக்கா பண்றது? பேசாம நீங்க இருந்து எப்படியாவது தப்பிச்சு போயிடு.” என்று கூறினாள்.

அவள் கண்ணும் பற்றி ஒரு கசந்த புன்னகையை சிந்திய யாஸ்மின் அவள் எழுதிய அந்த காகிதத்தை மரியமின் கையில் கொடுத்தாள்.

“இத கொண்டு போய் எப்பவும் போல அழகுவேல் அண்ணா கிட்ட நான் கொடுத்தேன்னு சொல்லி கொடுத்துடு.” என்று கூறினாள் யாஸ்மின்.

“அக்கா அழகுவேலை அண்ணா கிட்டயாவது உனக்கு கல்யாணம் ஆக போற விஷயத்தை சொல்லலாம்.” என்று கூறிய தங்கையை கண்டு, “அவரால மட்டும் என்ன பண்ணிட முடியும்?

என் விதியில இதுதான் என் வாழ்க்கைன்னு முடிவு பண்ணி இருந்தா அதை யாராலும் மாற்ற முடியாது மரியம்.

என்ன காப்பாத்த வர தூரத்துல இளங்கோ இல்ல. கைக்கு ஏற்ற தூரத்தில் எங்க காதலும் இல்ல. இதுக்கு மேல நடக்கிறது நடக்கட்டும் நீ இதை கொண்டு போய் யாரும் பாக்குறதுக்கு முன்னாடி குடுத்துட்டு சீக்கிரம் வா.” என்று மட்டும் உரைத்தவள் சுவற்றில் அப்படியே சாய்ந்து அமர்ந்து விட்டாள்.

-கனா 🤎
 

Google Typing

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.

Top Bottom