ஒரு காதல் கனா காண்போம் - 17

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

STN - 91

Member
Jun 12, 2026
48
27
18
படபடத்தை இதயத்துடன் வீடு வந்து சேர்ந்த யாஸ்மினுக்கு இன்னமும் இளங்கோவனின் “நான் உன்னை காதலிக்கிறேன் என்னை நீ கல்யாணம் பண்ணிக்கிறியா?” என்ற வார்த்தைகள் மீண்டும் செவிகளுக்குள் ஒளிபது போன்றே கேட்டுக் கொண்டிருந்தது..

அவள் மனம் சொல்ல முடியாத ஒரு உணர்வில் சிக்கித்தவித்தது.

ஒரு பக்கம் அவன் அவ்வாறு கூறியதும் அவள் மனதில் எழுந்த ஆர்வத்திற்க்கும், சிதறி வெடித்த உணர்வுகளுக்கும் எல்லையே இல்லை.

மறுபக்கம் ‘இது மட்டும் நடந்து விடக்கூடாது.’

‘ இவன் இப்படி எல்லாம் தன்னிடம் கூறி விடக்கூடாது.’ என்று நித்தமும் வேதம் போல் ஓதிக்கொண்டிருந்த அவள் மூளை தெளிவாக யாஸ்மினை சிந்திக்க விடவில்லை.

யாஸ்மினின் மனதிற்கும் முளைக்கும் இடையே நடந்த ஊரில் இறுதியாக அவள் மூளை, “இந்த விஷயம் மட்டும் வெளியே தெரிஞ்சா அப்பாவும் அம்மாவும் உயிரோடு இருக்க மாட்டாங்க.

நான் ஆசைப்பட்டேன்றதுக்காக என்ன இவ்வளவு தூரம் படிக்க வச்சு ஆளாகி இருக்காங்க.

அவங்களுக்கு நான் துரோகம் பண்ண கூடாது. எனக்குள்ள இருக்க இந்த ஆசை எனக்குள்ளேயே செத்துப் போகட்டும்.

எந்த காரணத்தை கொண்டும் இது அவருக்கும் தெரிய வேண்டாம் விலகி யாருக்கும் தெரிய வேண்டாம்.

சேர முடியாம போறதுக்கு உருவாக்க போற உறவு இல்லாமலே போகலாம்.” இன்று எடுத்துரைக்க அவள் தெரிந்து இளங்கோவனின் காதலையும் அவளின் காதலையும் வளர விடக்கூடாது என்று முடிவு செய்தாள்.

அன்றிலிருந்து தெருவில் காலையில் செல்லும் போதும் மாலையில் திரும்பும் போதும் இளங்கோவன் தன்னை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறான் என்று தெரிந்தாலும் அவள் தன் பார்வையை நிமிர்ந்தும் பார்க்க மாட்டாள்.

ஊசியாய் குத்தும் அவன் பார்வையில் அவளை துளைத்து குறுகுறுக்க செய்தாலும், கையில் இருக்கும் புத்தகத்தை இறுக்கிப்பிடித்துக் கொண்டு கடந்து விடுவாள்.

அவளின் ஒதுக்கத்தை கண்ட இளங்கோவனுக்கு, கோவமாக வந்தது.
அவள் தெரிந்தே அவனை நிராகரிப்பதை காதல் கொண்ட அவன் மனம் ஏற்க மறுத்தது.

ஆனாலும் அவளை விட்டு அவன் விலகி விடவிவ்லை.

பொறுத்து பொறுத்து பார்த்தவன் ஒரு கட்டத்திற்கு மேல், “எதுக்காக என்ன நிராகரிக்கிற காரணத்த தெளிவா சொல்லிட்டு விலகி போ.

எனக்கு உங்கள பிடிக்கல இதுல விருப்பம் இல்லன்னு நீ உன் மனச பொய் சொல்லி நம்ப வைக்கிறது போல என்ன நம்ப வைக்க முயற்சி பண்ணாத.

ஒரு பொண்ணு என்ன பாக்குற பார்வைல தெரியாதா? அவ எந்த மாதிரி கண்ணோட்டத்தில் என்ன பாக்குறானு.

எனக்கு நல்லா தெரியும் உனக்கும் என்ன பிடிக்கும். இருந்தும் ஏதோ ஒன்னு உன்னோட மனசு என்கிட்ட முழுசா திறந்து பேசவிடாம தடுக்குது.

அப்படி என்னதான் உன் மனசுல இருக்கு?” என்று அவளை வழிமறித்து கோவமாக கேட்டுவிட்டான் இளங்கோவன்.

தூரத்தில் இருக்கும்போது அவனை எளிதாக கடந்தும் நிராகரித்தும் ஒதுங்கியும் சென்ற யாஸ்மினால் அவன் நேர் எதிரே நின்று கேள்வி கேட்கும்போது அப்படியே விலக முடியவில்லை.

அவன் தன்னிடம் நான்கடி இடைவெளி விட்டு தான் தற்போதும் நிற்கிறான் கண்ணியமாக அவன் மனதில் இருப்பதை உரைத்திருக்கிறான் இதில் அவன் மேல் என்ன தவறு இருக்கிறது என்று அவள் மனமே அவளுக்கு எதிராக வாதம் செய்தது.

இருந்தும் அவன் புறம் சாயவிடாமல் தடுத்த அவள் மூளையின் சொல்லை கேட்டு, “நமக்கு இடையில் நிறைய வித்தியாசங்கள் இருக்கு.

இது சேரவே சேராது என்று தெரிந்தும் எதுக்காக இரண்டு மனசையும் ஏமாத்தணும்?

சுத்தி இருக்க சொந்தம் பந்தம் பெத்த அப்பா மாதிரி அத்தனை பேரும் இந்த விஷயம் தெரிஞ்சா நம்ம ரெண்டு பேரையும் நிம்மதியா வாழ விடுவாங்கன்னு நினைக்கிறீங்களா?

சேர முடியாம ஆசை வச்சு அது கண்ண அழிஞ்சு போய் ஆளுக்கு ஒரு பிரிஞ்சு போறதுக்கு முளையிலேயே இதை கிள்ளி எரிவது தான் ரெண்டு பேருக்கும் நல்லது.

எனக்கு என் அப்பா அம்மா ரொம்ப முக்கியம். எனக்காக என் கனவுக்காக துணை நின்ற அவங்களோட நம்பிக்கையை என்னால கெடுக்க முடியாது.

தயவு செஞ்சு இதுக்கு மேல என் வழியில குறுக்க வராதீங்க. உங்களோட காதலுக்கு நான் தகுதியானது கிடையாது.” என்று அவனை விட்டு கடந்து செல்ல போனவரின் கரத்தை பிடித்து இழுத்து தன் முன்னே நிறுத்தினான் இளங்கோவன்.

“இப்பவும் நீ இந்த காதல் ஏன் வேண்டாம் என்கிறதுக்கான காரணத்தை மட்டும் தான் சொல்றியே தவிர, உன் மனசுல என் மேல இருக்க என்னத்த வெளிப்படையா சொல்ல மாட்டேங்குற.

நான் கேட்கிற ஒரே ஒரு கேள்விக்கு பதில் சொல்லு அதுக்கப்புறம் உன் பக்கம் கூட நான் வரமாட்டேன். உனக்கு என்ன பிடிச்சிருக்கா இல்லையா?” இன்று அவள் கருத்தை அழுத்தி பிடித்து அவன் கேட்டான்.

எத்தனை நாட்கள் தான் அவளும் தன் மனதில் இருக்கும் உணர்வுகளை அடக்கி வைத்துக் கொண்டே ஜடத்தை போல் சுற்றுவள்.

யாஸ்மினும் அவன் பிடித்திருந்த தன் கருத்தை இழுத்துக் கொண்டு ஆவேசமாக “ஆமாம் எனக்கு உங்களை பிடிச்சிருக்கு. என் கண்ணை மட்டும் பார்த்து கண்ணியமா பேசுற உங்கள எனக்கு பிடிக்கும்.

நீங்க வேண்டாங்கிறதுக்கு என்கிட்ட ஆயிரம் காரணம் இருக்கு. ஆனா நீங்க வேணும் உறுதியா நிக்க எனக்கு தைரியம் இல்லை.

நான் ஒரு கோழை. விருப்பம் இருக்குன்னு தெரிஞ்சும் என்னால இந்த காதலுக்காக நின்னு போராட முடியாது.

உங்களுக்கு வேண்டிய பதில் கிடைச்சிடுச்சு இல்ல இதுக்கு மேல தயவு செஞ்சு என்னை தொந்தரவு பண்ணாதீங்க.

உங்களோட நல்ல மனசுக்கு உங்களை விரும்புகிற பொண்ணு கிடைப்பா.” விதி வார்த்தையை கூறும்போது அவள் குரல் தழுதழுத்து அழுகைக்கு மாறி இருந்தது.

அவள் அழுகையைக் கண்டு உதட்டில் ஒரு புன்னகையை வைத்த இளங்கோவன், “நம்ம ரெண்டு பேரும் சேர நிறைய எதிர்ப்புகள் வரும்னு எனக்கு நல்லாவே தெரியும்.

இருந்தும் வேற எந்த பொண்ணு கிட்டயும் வராத உணர்வு எனக்கு உன்கிட்ட தான் முதல் முதலில் வந்துச்சு.

உன் கண்ண தவிர நான் வேற எதையும் பார்த்தது கிடையாது. நமக்கு இடையில் இருக்க இந்த வேறுபாடுகளை மட்டுமே பாக்குற உன் மனசு காதல்கிற ஒரு ஒத்துமையை ஏன் பார்க்க மாட்டேங்குது?

காதல்ல முதன்மையா நிக்க வேண்டியது நம்ம மனசு மட்டும் தான். நம்ம உறுதியா நின்னு காதலிச்சா எப்பேர்ப்பட்ட தடைகள் வந்தாலும் அதை எதிர்த்து நிற்கிற தைரியத்தையும் துணிவையும் காதலே கொடுத்திடும்.

வாழ்க்கை ஒருமுறைதான். பின்னால இதை நினைச்சு வருத்தப்படுறது இல்ல அர்த்தம் இல்ல.

உனக்கும் என் மேல விருப்பம் இருக்குன்னு தெரிஞ்சதுக்கப்புறம் என்னால் உன்னை விட்டு போக முடியாது.

நல்லதோ கேட்டதோ சேர்ந்து சமாளிப்போம். இந்த வாழ்க்கை நம்மளை எந்த திசையில் திருப்பி போட்டாலும், நம்ம காதல் நம்மள சேர்த்து வைக்கும்.

என் கை பிடிச்சு வாழ்க்கையோட கடைசிவரை வரவனுக்கு சம்மதமா?” என்று கேட்டு அவள் முன்தன் வலது கரத்தை நீட்டினான் இளங்கோவன்.

‘நம்ம காதலே நம்மளை எதிர்க்கும் தடைகளை கடந்து போற அளவு தைரியத்தையும் துணிவையும் கொடுக்கும்’ என்ற இளங்கோவனின் கூற்று யாஸ்மினுக்குள் ஏதோ செய்தது.

வாழும் ஒற்றை வாழ்வை, இப்படி கட்டுப்படுத்தி தன்னைத்தானே துன்புறுத்தி வாழ்ந்து என்ன பயன்.

இதற்கு மேல் தன்னால் மனதால் கூட வேறொருவனை இவனின் இடத்தில் வைத்து பார்க்க முடியுமா? என்ற கேள்விக்கு அவள் முலையிடமும் பதில் இல்லை.

அந்த இடத்தில் யாஸ்மினின் காதல் மனம் வெற்றி பெற்றது.

தன் முன்னால் நீட்டப்பட்டிருக்கும் இளங்கோவனின் கரத்தையே பார்த்தவள் மெதுவாக அவளது நடுங்கும் கருத்தை அவன் கரத்துடன் இணைத்தாள்.

திரையிடப்பட்ட அவள் கண்களில் இருந்து கசியும் கண்ணீரை கண்டவன், “இந்த வாழ்க்கை நமக்காக எவ்வளவு தடைகளை வெச்சிருக்கோ, அதை தாண்டி போனா ஒரு அழகான வாழ்க்கையும் வச்சு காத்திருக்கும்.

சேர்ந்து நடப்போம். என்ன ஆனாலும் இன்னைக்கு நான் புடிச்சிருக்கேன் உன்னோட கைய என் உயிர் போல கடைசி நிமிஷம் வரைக்கும் விட மாட்டேன்.” என்று இறுக்கமாக அவள் கைகளை பிடித்துக் கொண்டான்.

தற்போது இவை அனைத்தையும் நிகழ்காலத்தில் நினைத்து பார்த்துக் கொண்டிருந்த இளங்கோவனின் கைகள் இறுக்கமாக அந்த கப்பலின் குச்சியை பிடித்துக் கொண்டது.

அவனின் கடந்த கால செயல்கள் தற்போது அவனுக்கு முன் நின்று அச்சுறுத்தியது.

காதலா? லட்சியமா? என்ற கேள்வியில் அவன் தேர்ந்தெடுத்திருக்க வேண்டியது ஏதேனும் ஒரு பாதையை தான்.

இரண்டு பாதையையும் ஒன்றாக சமன் செய்து போராட வேண்டும் என்று அவன் எடுத்த தற்போது ஆட்டம் காண துவங்கியது.

அவன் வாக்கு. அதை நம்பி தானே அவள் அவளை இவனிடம் ஒப்படைத்தாள். தனக்காக தன் லட்சியத்திற்காக தானே துணை நிற்கிறாள்.

‘ஆனால் திருப்பி நான் அவளுக்காக என்ன செய்தேன்?

எங்கள் காதலில் அனைத்து தியாகங்களும் ஏன் அவள் மட்டும் செய்ய வேண்டும்?

இது ஒன்றும் அவளாய் விரும்பி தேர்ந்தெடுத்த பாதை அல்லவே.

இதையெல்லாம் முன்னரே யோசித்து தானே அவள் வேண்டாம் என்று விலகி சென்றாள். அப்போது என் தேவைக்காக அவளை வார்த்தை ஜாலம் செய்து ஏமாற்றினேனா?’ என்ற கேள்விக்கு காதல் கொண்டவனால் பதில் உரைக்க முடியவில்லை.

தியாகங்கள் எப்போதும் பெண்கள் மட்டும்தான் செய்ய வேண்டுமா என்ன.

“யாஸ்மின இப்படி ஏமாத்திட்டு போற உனக்கு மரணத்தில கூட நிம்மதியாக இருக்காது” என்று அவன் இதயம் அவனையே சபித்தது.

இறுக்கமாக உணர்ச்சிப் பிழம்பில் நின்றிருந்த இளங்கோவன், மனம் இருதலை கொல்லியாய் கிடந்து தவித்தது.

அப்போது, இளங்கோவனின் திடகாத்திரமான தோளில் ஒரு வலிமையான கரம் பதிந்தது.

திரும்பிப் பார்த்தவன் அங்கு நின்றிருக்கும் தீரேந்திரனை கண்டு தலை தாழ்ந்தான்.

அவனால் தீரேந்திரனின் கண்களை நீருக்கு நேர் சந்திக்க முடியவில்லை.

“என்ன ஆச்சு?” என்று ஒற்றை கேள்விதான் கேட்டான் தீரேந்திரன்.

“என்ன மன்னிச்சிடுங்க.” என்று கூறிய இளங்கோவனை புரியாமல் கண்டு ஒன்றும் புரியாமல் நின்றிருந்தான் தீரேந்திரன்.

“ஆரம்பத்துல என்ன இந்த இயக்கத்தில சேர்த்துக்கும் போது, எனக்குன்னு எந்த சொந்த பந்தமோ, ஆசை பாசமோ இருக்கக் கூடாதுன்னு சொல்லி தான் சேர்த்துக்கிட்டீங்க.

ஆனா நான் அப்ப உங்க கிட்ட பொய் சொல்லிட்டேன். எனக்காக எனக்கே எனக்காக நான் வருவேனு ஒருந்தி காத்திராக்கா.

என் மனசுல சுதந்திரத்துக்காக போராடனுங்குற பெரிய மட்டும் இல்ல, என்னையே கொடுத்த காதலும் இருக்கு.

லட்சியமா காதலாங்கிற கேள்வில, நான் லட்சியத்தை தேர்ந்தெடுத்தேன். என் கனவுக்கு அவளும் துணையா நின்னா.

என் உயிர் போறத பத்தியோ, எதிரி கையால் சாகுறது பத்தியும் எனக்கு பயம் இல்லை. ஆனா என் யாஸ்மின தனியா தவிக்க விட்டுட்டு போயிடுவேனோனு தான் பயமா இருக்கு.

உங்க கொள்கையை எதிர்த்து நான் கேள்வி கேட்டேன். ஆனா அந்த கொள்கைக்காக போராட எனக்கே தகுதியில்லை. என்ன மன்னிச்சிடுங்க.” என்று தீரேந்திரனை நேருக்கு நேர் காண முடியாது பார்வையை தாழ்த்தி
கூறினான் இளங்கோவன்.

மார்புக்கு கொடுக்காக கைகளை கட்டிக்கொண்டு, அவன் கூறுவதை எல்லாம் பொறுமையாக கேட்டுக் கொண்டு நின்றிருந்த தீரேந்திரன், எதுவும் பேசாமல் இருப்பதில் அவனை நிமிர்ந்து பார்த்தான் இளங்கோவன்.

அவன் கண்களில் கோபமில்லை மாறாக ஒரு நிதானம் இருந்ததை கண்ட இளங்கோவனுக்கு ஒன்றும் புரியவில்லை.

“இதெல்லாம் எனக்கு முன்னாடியே தெரியும்.” என்று அவன் கூறியதில் அதிர்ச்சியின் உச்சத்தில் அவனை ஏறிட்டான் இளங்கோவன்.

-கனா 🤎
 

Author: STN - 91
Article Title: ஒரு காதல் கனா காண்போம் - 17
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
  • Like
Reactions: ஷமீம்