ஒரு காதல் கனா காண்போம் - 20

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

STN - 91

Member
Jun 12, 2026
48
27
18
அந்த மாளிகையை சுற்றிலும் டேவிட் பாதுகாப்பிற்காக ஒரு சில அதிகாரிகளே நின்றிருந்தனர்.

அவர்கள் யாவரும் ஒன்று திரண்டு வந்த மக்களை தடுக்க முற்பட, குழந்தைகள் பெண்கள் தங்கள் பொருட்கள் என்று அனைத்தையும் களவாடிய ஆங்கிலேயர்கள் மீது ஆவேசத்தில் இருந்த மக்கள் இத்தனை காலம் அடக்கி வைத்திருந்த ஆற்றாமையை அனைத்தையும் ஒன்று திரட்டி அந்த ஆங்கிலேயர்களை அடித்து சாத்தினர்.

“ஏண்டா. இத்தனை காலமும் எங்க உழைப்ப அட்டை போல உறிஞ்சி குடிச்சும் உங்களுக்கு போகலையா டா?” என்று கைக்கு கிடைத்த ஆயுதங்களை எடுத்து வந்திருந்த மக்கள் தங்களை தாக்க வந்த ஆங்கிலேயர்களை எதிர்த்து சண்டையிட்டனர்.

இளங்கோவனோ தனக்கு எதிரே வரும் வீரர்களை அடித்துப் போட்டுவிட்டு வேகமாக அந்த மாளிகையின் உள்ளே நுழைந்தான்.

“யாஸ்மின்!” என்ற அவனின் அழைப்பு அந்த நிசப்தமான மாளிகையில் அனைத்து திசைகளிலும் பட்டு எதிரொலித்தது.

அவ்வளவு பெரிய மாளிகையின் ஒவ்வொரு அறையிலும் சென்று யாஸ்மினை தேடிய இளங்கோவன் அழைக்கும் அழைப்புக்கு பதில் கொடுக்க முடியாது டேவிட்டின் பிடியில் சிக்கியபடி நின்றிருந்தாள் யாஸ்மின்.

இளங்கோவனை கண்டதும் யாஸ்மினை அழைத்துக் கொண்டு அவள் வாயை பொத்தி அந்த மாளிகையில் ஒரு தூணிற்குப் பின்பு மறைந்திருந்தான்‌ டேவிட்.

அதன் பிடியிலிருந்து விடுபட போராடிய யாஸ்மின் அவன் பலத்தின் முன்பு தோற்று தான் போனாள்.
ஆனால், “தன்னவன் வந்து விட்டான்.

எங்கோ கடல் கடந்து ஒலித்துக் கொண்டிருந்த அவன் குரல் வெகுநாட்கள் கழித்து என் செவிகளில் கேட்கிறது.

இனி எப்படியும் தன்னை அவன் மீட்டு விடுவான்” என்று இளங்கோவனின் குரல் கொடுத்த ஒற்றை தைரியத்தில் தன்னை சுற்றி வளைத்து பிடித்து வாய் பொத்தியிருக்கும் டேவிட்டின் கையை தன் மொத்த பலத்தையும் உபயோகித்து தட்டிவிட்டவள், “இளங்கோ!” என்று கத்தினாள்.

எரியும் தீக்கு இணையாக இருந்து கொண்டிருந்த இளங்கோவனின் இதயம் ஒரு நொடி தன்னவரின் அழைப்பை கேட்டு தன் ஓட்டத்தை நிறுத்தியது.

மறு நொடியே, அவள் குரல் வந்த திசையை நோக்கி வேகமாக ஓடினான் இளங்கோவன்.

தன் கையை தட்டி வித்த யாஸ்மினின் கன்னத்தில் ஓங்கி ஒரு அரை விட்டான் டேவிட். அவன் பலத்தில் யாஸ்மின் கன்னத்தில் அவன் கரங்கள் பதிந்து அவள் செவிகளில் இருந்து ரத்தம் கசிந்தது.

தூரத்தில் இருந்து இதை பார்த்தபடியே ஓடிவந்த இளங்கோவனின் கண்கள் ரத்தமன சிவக்க, நரம்புகள் துடிக்க வேகமாய் ஓடி வந்த இளங்கோவன் ஓங்கி டேவிட் நெஞ்சிலேயே உதைத்தான்.

இளங்கோவனின் திடீர் தாக்குதலில் சற்று தள்ளி பின்னால் போய் விழுந்த டேவிட்டும் அவ்வளவு எளிதில் விட்டுக் கொடுப்பவன் கிடையாதே.

இளங்கோவனின் கண்கள் யாஸ்மினின் கைவிரல் பதிந்த கன்னத்திலும் அவள் காதின் உரம் கசியும் ரத்தத்தையும் கண்டு மீண்டும் தன் பார்வையை டேவிட்டின் புறம் திருப்பியது.

இதற்கு முன்னால் அவன் மக்களை மிருகங்களைப் போல் நடத்திய விதம், கண்ணில் எப்போதும் இன்னும் அதிகார தோரணை, பிறர் துன்பத்தில் இன்பம் காணும் அற்ப புத்தி என்று அனைத்திலும் அவன் மேல் கொலை வெறியோடு இருந்த இளங்கோவனுக்கு இறுதியில் இன்று அதை அனைத்தையும் தீர்த்துக் கொள்ள ஒரு வாய்ப்பு கிடைத்தது.

“இன்னும் எங்க கிட்ட இருந்து என்னதான் டா வேணும் உங்களுக்கு? சின்ன குழந்தைங்கள கடத்திட்டு போய் அடிமையா வச்சிருக்க அளவுக்கு உங்க மூளை அதிகாரம் பண்ணி பழகிடுச்சு இல்ல?

இன்னைக்கு உங்களுக்கு கொடுக்கிற இந்த தண்டனைல திரும்ப எந்த நாட்டையும் அடிமைப்படுத்தனும் என்கிற எண்ணம் கூட உங்களுக்கு வரக்கூடாது.” என்று கூறிய இளங்கோவன், வேகமாக டேவிட்டை அடிக்க பாய்ந்து சென்றான்.

தடுமாறி விழுந்திருந்த டேவிட்டும் எழுந்து இளங்கோவனை தாக்க சென்றான்.

இருவரும் அந்த பெரிய மாளிகையில் ரத்தம் வரும் வரை அடித்து சண்டையிட்டு கொண்டனர்.

ஒரு பக்கம் அதிகாரம் செய்து ஊறிப்போன அகந்தையின் உருவமான டேவிட். மற்றொரு புறம் அதிகார வர்க்கத்தையே வேரோடு இருக்கும் இளங்கோவன்.

இருவருக்கும் தீர்த்துக் கொள்ள பல கணக்குகள் மீதமிருந்தது. ஆயுதங்கள் கிடையாது, துப்பாக்கிகள் கிடையாது, வெறும் கையாலேயே இருவரும் அடித்துக்கொண்டனர்.

உண்மையில் டேவிட்டும் ஒரு பலமான வீரம் தான். ஆனால் அடிமைப்பட்டு கிடந்து, போராட்டங்கள் செய்து, தன்னவனின் வலியை கண்டு உயிர் வலியை கண்ட காதலனாக நின்ற இளங்கோவனுக்கு முன்பு டேவீட்டின் பலம் பத்தாமல் தான் போனது.

இளங்கோவனின் உழைத்து காப்பேரிய கரங்கள் டேவிட்டின் கையைப் பிடித்து முறுக்கி, இந்த கை தானே என் யாஸ்மின தொட நினைச்சது?

இனி இந்த கை எந்த பொண்ணையும் தொடக்கூடாது என்று கூறி டேவிட்டின் கையை முறித்தான்.

“உங்க அரசாங்கம் எல்லாரையும் கிளம்பி போங்கன்னு சொன்னப்பவே நீ கிளம்பி போயிருந்தா உன் உயிராவது மிஞ்சி இருக்கும்.

கடல் ஏரி போற கடைசி நிமிஷத்துல கூட உங்களுக்கு எங்களோட இந்த பொக்கிஷங்கள் வேணும்ல?

இந்த நாடு எங்க பூட்டனும் ஏட்டனும் எங்களுக்கு சம்பாதித்து வச்சிட்டு போன சொத்து. அத அபகரிக்கத்துக்கு வந்த நாய் நீ, உனக்கே இவ்வளவு திமிர் இருந்தா எங்களுக்கு எவ்வளவு இருக்கணும்?” என்று கேட்டு டேவிட் மூக்கிலேயே குத்தினான்.

ஒரு அளவிற்கு சமாளித்த டேவிட்டும் இளங்கோவனின் ஆக்ரோஷமான தாக்குதலை முட்டு கொடுக்க முடியாமல் வீழ்ந்து போனான்.

அந்நேரம் வெளியில் இருந்த வெள்ளையர்களை எல்லாம் அடித்து சாய்த்த ஊர்மக்கள், அந்த மாளிகைக்கு உள்ளே ஓடி வந்தனர்.

அங்கு ஏற்கனவே இளங்கோவனின் கைவண்ணத்தில் அரை உயிராய் கிடந்த டேவிட் கண்டு, “இந்த நாய விடாதீங்க. அடிச்சே கொல்லுங்க.” என்று ஊர் மக்கள் அனைவரும் ஒன்று கூடி அவன் ஒருவனை தாக்கினர்.

அத்தனை பேரின் தாக்குதலையும் தாங்க முடியாமல் டேவிட்டின் உயிர் அவன் ஆசைப்பட்ட இந்த மண்ணிலேயே பிரிந்தது.

இறுதியாக அவன் உயிர் பிரியும் நொடியிலும் இளங்கோவனின் மீது தான் அழுத்தமான அவன் பார்வை பதிந்தது.

மூச்சு வாங்க அவனையே பார்த்து நின்றிருந்த இளங்கோவன், மெதுவாக யாஸ்மினின் புறம் திரும்பி, தன் கைகளை விரித்து காட்டினான்.

இதற்காகத்தான் இத்தனை நாட்களாக தவம் கிடந்த பெண்ணவள் வேகமாக அவன் நெஞ்சாங்குட்டிற்குள் சென்று அடைந்து கொண்டாள்.

ஒரு பெண்ணின் வாழ்வில் ஆண் என்பவன் அவள் பல்வேறு பரிமாணங்களை வெளிக்கொணரும் காரணியாக விளங்குகிறான்.

முதலில் காதலியாக பின்னர் மனைவியாக, தன் குழந்தைக்கு தாயாக, இறுதி கட்டத்தில் உற்ற துணையாக என்று பெண்மையின் பல்வேறு பரிமாணங்கள் ஆணிலிருந்து தான் தொடங்கி முற்றுப்பெறுகிறது.

அதேபோலத்தான் இளங்கோவனும் யாஸ்மினுக்குள் பல்வேறு பரிமாணங்களை தோற்றுவித்தான்.

அவள் பயத்தை உடைத்து, அவளை காதலிக்க வைத்தான், எதிர்த்து நின்று போராட துணிவு இல்லாமல் கிடந்தவளை ஒரு நாட்டின் விடுதலைக்காக போராட தூண்டினான், அவளைப் பிரிந்து சென்ற நேரத்தில் தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்ளும் அளவு அவளுக்குள் நம்பிக்கையை விதைத்தான்.

இறுக்கமாக தன்னை அனைத்து தன் மார்பில் சூடான கண்ணீரை இறக்கும் யாஸ்மின் தாடையைப் பிடித்து தன்னை பார்க்க செய்த இளங்கோவன், இந்த கண்ணுல எப்பவும் யாருக்காகவும் கண்ணீர் வரவே கூடாது.

“நான் உன்கிட்ட சொன்னேன்ல? நம்ம காதலோட ஆளும் நம்ம கண்ட கனவு இதெல்லாம் நம்மளை சேர்த்து வைக்கணும்னு?

இப்ப பாத்தியா பிரபஞ்சமே நமக்கான வழியை அமைச்சு கொடுத்திருச்சு. இதுக்கு மேல யார் நினைச்சாலும் உன்னையும் என்னையும் பிரிக்க முடியாது யாஸ்மின்.” என்று கூறி அவளை மேலும் இறுக்கமாக அணைத்துக் கொண்டான் இளங்கோவன்.

“இத்தனை நாளும் செத்துப் புடிச்சு உங்களுக்காக காத்துக்கிட்டு இருந்தேன். நீங்க வரவே மாட்டீங்கனு நினைச்சேன் தெரியுமா?”என்று கேட்டு அவள் கேவி அழுதாள்.

“அது எப்படி மா? எனக்காக என் லட்சியத்துக்காக நீ எதெல்லாம் இழந்திருக்க? எத்தனை நாள் வெளியிலகத்தை பாக்காம அடஞ்சி கிடந்திருப்ப?

உனக்காக நம்ம காதலுக்காக நான் என்னோட லட்சியத்தை விட்டு கொடுத்தேன்.

நான் இருந்தாலும் இல்லனாலும் எல்லாத்தையும் நிச்சயம் நடந்தே தீரும்னு தெரிஞ்சவுடனே, நம்ம காதலுக்காக வந்துட்டேன்.

இப்ப சொல்லு, நீ ஆசைப்பட்ட மாதிரி எல்லாம் வாழலாம்.” என்று அவளை அனைத்தபடியே கேட்டான் இளங்கோவன்.

“நம்ம காதல் தொடங்கி, அழகா வளர்ந்த இதே கிராமத்தில சுத்தி இங்கேயும் பச்சை பசேல் கண்ணுக்கு எட்டுன தூரம் வரைக்கும் வயல்வெளி மட்டும் இருக்கணும். எந்நேரமும் வர தூய்மையான காத்த மட்டும் தான் சுவாசிக்கணும்.

ஆடு மாடு கோழினு நிறைய உயிரினங்கள வளக்கணும். அதுக்கும் குட்டியா ஒரு இடம்.

நம்ம காதலுக்கும் பிரிவுக்கும் காத்திருப்போம் சாட்சியாய் இருந்த இதே கடற்கரை ஓரத்தில, பெருசா எல்லாம் வேண்டாம், ஒரு குட்டி ஓட்டு வீடு போதும்.

அங்கு நீங்களும் நானும் மட்டும். திகட்ட திகட்ட காதலிச்சு, ‘நீங்க என் மேல வச்சிருக்க நேசம் பெரிசா?’

‘ இல்ல நான் உங்க மேல வச்சிருக்கேன் நீயும் பெருசா?’ அப்படின்னு அடிக்கடி சண்டை போட்டுக்கிட்டு, ஓயாம எப்பவும் இப்படியே இருக்கமா கட்டிக்கனும்.

எழுபது எண்பது வயசு ஆனாலும், நீங்க என்ன பிரிய முடியாமலும், நான் உங்கள பிரிய முடியாமலும் ஒருத்தர் தோளில ஒருத்தர் சாஞ்சுகிட்டு நிறைவா வாழனும்.

உயிர் போற அந்த கடைசி நிமிஷத்திலும், நம்ம பிரியக்கூடாது. நம்ம கைய இப்படி ஒண்ணா சேர்ந்து கொடுத்துகிட்டு உங்க கண்ணு நான் பார்த்து என் கண்ணன் நீங்க பார்த்துக்கிட்டே, ஒரே நேரத்துல நம்ம உயிர் பிரியணும்.” அவள் இத்தனை நாட்கள் கணவாய் கண்ட வாழ்வை வார்த்தைகள் வழியே இளங்கோவனுக்கு உணர்த்தினாள்.

அந்த நேரம் விடுதலை காற்றை சுவாசிக்க தொடங்கிய நாடெங்கிலும், கொண்டாட்டங்கள் தொடங்கியது.

பல உயிர்களை இழந்திருந்தாலும், அவர்களுக்காய் கிடைத்த இந்த சுதந்திர காற்று பல தலைமுறைகள் கடந்து வந்ததல்லவா.

இனி இந்த மண்ணில் பிறக்கும் ஒவ்வொரு உயிர் சுதந்திரமாக வாழப் போகும் வாழ்வை நினைத்து, பட்டாசுகள் வெடித்து, இனிப்புகள் வழங்கி என்று நாடே திருவிழா கோலம் பூண்டது.

அவளை தன் மார்பிலிருந்து விலக்கிய இளங்கோவன், அவள் கன்னங்களை ஏந்தி அவள் நெற்றியில் ஆழமான முத்தம் பதித்தான்.

கேட்பதற்கு சாத்தியமே இல்லாத, ஏதோ ஒரு நம்பிக்கையை பற்றிய படி தத்தமது வழிகளில் பயணித்த இதயங்கள் இறுதியில் அதன் இணைகளை சேர்ந்து விட்டது.

இளங்கோவனும் யாஸ்மினும் கண்ட காதல் கனா அழகாய் ஒரு வழியாக பல்வேறு போராட்டங்களைக் கடந்து இணைந்து விட்டது.

தன் மகளுக்காக அத்தனை போராட்டங்களைக் கடந்து வந்து அவளிடம் சேர்ந்திருக்கும் இளங்கோவனையும், அவனுடன் நிற்கும் யாஸ்மினையும் தான் அந்த கூட்டத்தில் இருந்து காதரும் பாத்திமாவும் கண்டறிந்தனர்.

யாஸ்மினின் மௌன போராட்டமும் இறுதியில் அவள் காதலிடமே அவளைக் கொண்டு சேர்த்துவிட்டது.

தன் நண்பனின் காதல் வெற்றி பெற்றதை கண்டு அழகுவேல் கண்ணீருடன் புன்னகைத்தான்.

டேவிட்டால் கைது செய்யப்பட்டு அழைத்துவரப்பட்ட கண்ணப்பனையும் விடுவித்து அழைத்து வந்திருந்தான் அழகுவேல்.

கனாக்களுக்கு சக்தி இல்லை என்று யார் கூறினார்கள். இருவருக்கிடையிலும் வேறுபாடுகள் அதிகம், கோட்பாடுகள் வேறு, இருவரையும் பிரிக்க அத்தனை தடைகள் இருந்தும், இருந்தும் அவர்கள் விரும்பி தேர்ந்தெடுத்த காதல் இருவரையும் ஒன்றிணைத்து விட்டது.

போராட்டங்களுக்கும் கலவரங்களுக்கும் இடையே பூத்து வளர்ந்த இவர்கள் காதல் அந்த சுதந்திர சுவாசத்தை அடைந்து விட்டது.

-கனா 🤎

 

Author: STN - 91
Article Title: ஒரு காதல் கனா காண்போம் - 20
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.