• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

ஒரு பார்வையிலே என்னை வீழத்திவிட்டாய் - 10

நிதனிபிரபு

Administrator
Staff member
பார்வை 10


அவனை முதன் முதலாக சலனப்படுத்திய அவள் விழிகளில், முதல் நாளிலேயே அவன் விழுந்துவிட்டான். அவனுடனான அவளது தயக்கம், அவனை மேலும் அவளை ரசிக்கத் தூண்டியது.

காலம் கடத்தாமல் உடனே அவள் மீதான தனது காதலை சொல்லிவிட்டான்.
அவள் உடனே மறுத்துவிடுவாளோ என்ற பயம் அவனுக்குள் இருந்தது. ஆனால் அவள் உடனே மறுக்காமல் இருந்ததில் , அவன் மனம் சற்று நிம்மதியடைந்தது.

இருவரிடையே பெருத்த மௌனம் நிலவியது. நண்பனாக எண்ணி பேசிய அவள், அவன் காதலை சொன்னதும் வாயடைத்து போனாள்.

அவர்களின் மௌனத்தை கலைக்க கீதாவும் சந்தியாவும் அவ்விடம் வந்தனர்.

“ஹாய் அண்ணா,” என்றனர் இருவரும்.
“ஹாய்,” என்றான் அவனும் பதிலுக்கு.

“ஷாப்பிங் எல்லாம் முடிஞ்சுதா?” என்றான்.

“ஷாப்பிங் எல்லாம் பண்ணல அண்ணா. ஜஸ்ட் கேம் தான் விளையாடினோம். அதுக்கே ரெண்டாயிரம் போச்சு,” என்றாள் கீதா.
“அப்புறம் அண்ணா, எப்ப வந்தீங்க?” என்று கேட்டவள், மதுவிடம் திரும்பி,
“பிரியா எங்கடி?” என்றாள்.

“அவளும் மித்ரன் அண்ணாவும் ஷாப்பிங் போயிருக்காங்க,” என்றாள் மது.

நானும் மிதிரனும் தான் வந்தோம். மித்ரன் பிரியாவோட ஷாப்பிங் போனான். அவங்களுக்கு ப்ரைவசி வேணும்னு, நான் மதுவோட பேசிட்டு இங்கயே இருந்தோம்,” என்றான் மதுவை பார்த்தவாறே.

அவன் காதலைச் சொல்லியதற்குப் பிறகு, மது அவனை நிமிர்ந்தும் பார்க்கவில்லை. அவன் சொல்லிக்கொண்டிருந்த வார்த்தைகள் அவளின் காதில் விழுந்தாலும், அதன் அர்த்தம் அவள் மனதுக்குள் சரியாகப் போகவில்லை.
அவன் காதலைச் சொன்ன அந்த நிமிடம் தொடங்கி, அவனை நேராகப் பார்க்கும் துணிச்சல் அவளுக்குள் எங்கோ தொலைந்துபோயிருந்தது.

நாம போகலாமா?”
தன் குரல் தான் அவளுக்கே அந்நியமாகக் கேட்டது. இருக்கையிலிருந்து எழுந்தபோது, இதயம் மட்டும் கனமாக கீழே இருப்பதை போலவே உணர்ந்தாள். .

கீதா, பிரியாவுக்கு கால் பண்ணு… இன்னும் லேட் ஆகுமான்னு கேளு,” என்றாள் மது,

அவன் எழுந்ததை அவள் பார்க்கவில்லை.
ஆனால் அவன் பார்வை தன்னைத் துளைத்துக் கொண்டிருப்பதை அவள் உணர்ந்தாள்.

கீதா பிரியாவை அழைத்தாள். அழைப்பை ஏற்ற பிரியா, “இன்னும் அரை மணிநேரம் ஆகும்,” என்றாள்.
உடனே கீதா, “நாங்க கிளம்பவா?” என்று கேட்க,
“சரி,” என்றபடி பிரியா அழைப்பை துண்டித்தாள்.

மூவரும் வசீகரனிடம் சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினார்கள்.
விடைபெறும் போது, இருவரின் பார்வையும் ஒரு கணம் சந்தித்து பிரிந்தது.

சிறிது தூரம் சென்றதும், அவள் திரும்பிப் பார்த்தாள்.
அவன் இன்னும் அங்கேயே இருந்தான்.
அவளைத் தான் பார்த்துக்கொண்டிருந்தான்.

அவள் பார்வையை விரைந்து திருப்பிக்கொண்டு, விறுவிறுவென நடக்கத் தொடங்கினாள்.
ஏன் திரும்பிப் பார்த்தேன்?
அவள் மனம் அவளையே கண்டித்தது.

அதன்பிறகு வந்த நாட்கள் விசித்திரமானவை.

.அவன் அவளை இருமுறை அவளது காலூரியில் வைத்து பார்த்தான். ஆனால் அவள் அவனை நிமிர்ந்தும் பார்க்கவில்லை.
ஏன் என்று கேட்கவும் இல்லை.

முனுக்கென்று அவனுக்குள் வரும் கோபம்கூட, அவள் முன்னால் வந்தவுடன் தள்ளிப் போய்விடும்.
அவளுக்கான இடைவெளியை அவன் தானாகவே உருவாக்கிக் கொண்டு, விலகியே காத்திருந்தான்.

அதன் பிறகான நான்கு மாதங்கள்.
அந்த நான்கு மாதங்களில், அவன் அவளின் கண்களில் படவே இல்லை..

ஒரு நாள் அதை கீதா மித்ரனிடம் கேட்டுவிட்டாள்.

““ஏன் அண்ணா… வசீ அண்ணா வரதே இல்ல? என்ன… ரெண்டு பேருக்கும் சண்டையா?”
என்றவாறு கண்ணடித்து சிரித்தாள்.

கீதாவின் கேள்வி சாதாரணமானதுதான்.
ஆனால் அது மதுவின் மனதை உலுக்கியது.

மித்ரனோ, மதுவை கடைக்கண்ணால பார்த்தபடியே,
“இல்ல மா… ஏதோ வொர்க் பிசியில இருக்கான். அதான்,” என்றான்.

மித்ரனின் பதிலை ஆவலுடன் கவனித்த மதுவின் மனம், ஏனோ ஒரு மாதிரியாக இருந்தது.
ஏதோ செய்ய நினைத்தும் ,ஒன்றும் செய்ய முடியாத நிலை.

அப்படியா… அவ்வளவுதானா நான்?
என்னைப் பார்க்க வரமாட்டானா?அவளின் மனம் சின்னதாய் சுருங்கியது.

அவன் முன்னர் வந்த பொழுதுகளில், அவள் அவனைப் பார்க்கவே இல்லை.
அவளுக்கான கால அவகாசத்தைத் தந்துதான், அவன் அவளின் முன் வராமல் இருந்தான்.
அவள் இன்னும் அவனுக்கு முடிவு சொல்லவில்லை என்பதையெல்லாம், அவள் வசதியாக மறந்துபோனாள்.

இப்போதெல்லாம் அவனை, ஒரு நாளில் ஒருமுறையாவது நினைக்காமல் அவளால் இருக்க முடியவில்லை.
இப்போதும் அவனை அவளுக்கு பிடித்துதான் இருந்தது.

ஆனால் அதை காதல் என்று அவளால் ஒத்துக்கொள்ள முடியவில்லை.

அவனை பார்க்க இயலாத இந்த நான்கு மாதங்களும், அவளுக்கு வெறுமையாகவே இருந்தது.
அவளால்தான் அவன் மித்ரனுடன் இங்கே வருவதில்லை என்பதை அவள் புரிந்துகொண்டாள்.

இவ்வாறு அவள் யோசித்துக் கொண்டிருக்க,
“வொர்கா?” என்ற கீதாவின் குரல் அவளை நினைவுலகத்திலிருந்து இழுத்தது.
“வசீ அண்ணா ஏதாவது பார்ட்-டைம் ஜாப் பார்க்கிறாரா?” என்றாள்.

சட்டென சிரித்த மித்ரன்,
“அவனே நூறு பேருக்கு வேலை கொடுப்பான். அவனா பார்ட்-டைம் ஜாப் பார்க்கிறவன்?” என்றான்.
“அவங்க அப்பாக்கே சொந்தமா மில், கார்மெண்ட்ஸ் எல்லாம் இருக்கு. அதனால அவன் எப்பவுமே ரொம்ப பிசி,” என்றான்.

இதை கேட்ட மற்றவர்கள் சாதாரணமாக இருந்தார்கள்.
ஆனால் மதுமதியால் மட்டும் நிலை கொள்ள முடியவில்லை.

அவளுக்கும் அவன் மீது ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது என்பதை, அவளும் உணர்ந்தாள்..

அவன் உலகம்…
அவளுடைய உலகத்தை விட பெரிது.

அந்த பெரிதான உலகத்துக்குள்,
தன்னை பொருத்திக்கொள்ள முடியுமா என்ற பயம் தான்,
அவளை அவனை நினைப்பதிலிருந்தே விலக்கிக் கொண்டிருந்தது.

அவள் அதை காதல் என்று ஒத்துக்கொள்ளவில்லை தான் .
ஆனால் அது காதலாக மாறிக்கொண்டிருக்கிறது என்பதை,
அவளின் மனம் மட்டும் நன்றாகவே அறிந்திருந்தது.

ஆறு மாதங்கள் காத்திருந்தவன். அதற்கு மேல் முடியாமல், தன் பொறுமையை இழந்தவனாக ஒரு நாள் மதுமதியின் கல்லூரிக்கே வந்துவிட்டான். அவனும் தான் என்ன செய்வான்? அவளது நினைவுகளை தவிர்க்க நினைத்தவன். அவனது அப்பா நெடுநாளாக அலுவலகத்திற்கு அழைத்தபடி இருக்க, அங்கே போக சம்மதித்தான்.

இறுதி வருடம் ஆகையால், ப்ராஜக்ட் காரணமாக தனது தந்தையின் அலுவலகத்திலேயே அதை செய்ய அனுமதி பெற்றிருந்தான். அதன் மூலம் அவனது தந்தையையும் சமாதானம் செய்திருந்தான்.

மதுவின் நினைவுகளை தவிர்க்க அங்கே சென்றவன், உண்மையாகவே தந்தை அங்கே வரச் சொன்னதன் காரணத்தை புரிந்து கொண்டான். அவனுக்காக புதிதாக ஒரு கான்ஸ்ட்ரக்ஷன் நிறுவனத்தை வாங்கியிருந்தார் அவனது தந்தை. அங்கே நிறைய சரி செய்ய வேண்டியிருந்தது. ஆறு மாதங்களாக அதே நினைவுகளுடன் அங்கே செய்ய வேண்டியவற்றை செய்து முடித்தவன், மீண்டும் அவள் நினைவுகளில் தவித்தான்.

“என்ன ஆனாலும் சரி… இன்று பார்த்து விடுவது” என்று முடிவு செய்து தான் அவளது கல்லூரிக்கு வந்தான்.




“ஹாய் வசீ… என்ன இந்தப் பக்கம்?” என்றவாறு வந்தாள் வசுந்தரா — வசீகரனின் சிறுவயது தோழி.

“ஹாய் வசு. மித்ரனோட வந்தேன். தெரியும் இல்ல, உன் ஜூனியர் பிரியா தான் அவன் கசின். அவளைப் பார்க்க அவன் வந்தான்; நான் அவன் கூட வந்தேன். சரி சொல்லு, அங்கிள் எப்படி இருக்கார்?”

“லாஸ்ட் மன்த் ரெசிடென்ஸில பார்த்தேன். அதுக்கப்புறம் ‘மீட் பண்ணலாம்னு’ சொன்னார். அப்புறம் ஏதோ ஃபாரின் ட்ரிப் போயிட்டார்னு அப்பா சொன்னார். திரும்ப வந்திட்டாரா? அப்புறம் உன் வாலு தங்கை எப்படி இருக்கா?” என்றான்.

“கொஞ்சம் மூச்சு விடுடா!” என்றவள், “எல்லோரும் நல்லா இருக்காங்க. அங்க ஆண்டி, அங்கிள் எல்லாம் எப்படி இருக்காங்க? நம்ம வருணுக்கு காலேஜ் செட் ஆயிடுச்சா?” என்றாள்.

“All good,” என்றவன், “சரி டி, நான் போறேன். மித்ரன் வெயிட்டிங் ஃபார் மீ,” என்றவாறு விலகி நடந்தான்.

அவன் போவதையே பெருமூச்சுடன் பார்த்தாள் வசு. அவளுக்கு அவன் மீது சிறுவயதிலிருந்தே காதல். ஆனால் அவனிடம் சொல்ல அவளுக்கு துணிவு இல்லை. எங்கே அவன் மறுத்துவிடுவானோ என்ற பயத்தில், அவள் காதலை அவள் நெஞ்சிலேயே மறைத்து வைத்திருக்கிறாள்.




“என்னடி, உன் ஆளு இந்தப்பக்கம்?” என்றாள் அவளது தோழி மஞ்சு.

“மித்ரன் கூட வந்தானாம்,” என்றவள், அவளுடன் இருசக்கர வாகன நிறுத்துமிடம் நோக்கி சென்றாள்.




வசீகரனிடம் வசுந்தரா பேசுவதை தூரத்தில் இருந்து பார்த்த மதுமதிக்கு காதில் புகை வராத குறைதான்.

“ரொம்ப நேரமா அந்த அக்கா கூட என்ன பேசுவார்? நமக்கு ஏன் காண்டாகுது?” என்று யோசித்தவள், தன் மனம் சொல்லும் செய்தியை உணர்ந்து திடுக்கிட்டுப் போனாள்.

“எனக்கு அவர் மேல லவ் வந்திடுச்சோ? அய்யோ பகவானே… அப்படி மட்டும் இருக்கக் கூடாது. எதுக்கும் நாம அவர் பக்கம் பார்க்காம இப்படியே திரும்பி நிப்போம்.”

மது இதையெல்லாம் யோசித்துக் கொண்டிருக்க, கீதா, சந்தியா, பிரியா, மித்ரன் — நால்வரும் அவள் அருகில் நின்று பேசிக்கொண்டிருந்தனர்.

“மது… மது…”
கீதா நீண்ட நேரமாக அழைத்தும் பதில் வராததால், அவளை உலுக்கியாள்.

“அஹ்… சொல்லுடி,” என்று நிகழ்வுக்கு வந்தவளை நால்வரும் ஒருமாதிரி பார்த்தனர். அவள் அசட்டுச் சிரிப்பு சிரித்து, “என்ன… என்ன கேட்டீங்க?” என்றாள்.

“ம்ம்ம்… உன்னைப் பார்க்க மாப்பிள்ளை வந்திருக்காராம். வெளிய காத்திருக்காராம். போய் பார்த்துட்டு வான்னு சொன்னேன்,” என்றாள் கீதா.

“என்னது?” என்று அதிர்ந்து விழிவிரித்து பார்த்த மதுவை பார்த்து,
“என்ன முழிக்கிற? திடீர்னு கனவுக்கு போய்ட்ட போல. கனவில யாரு? நம்ம டவினோவா இல்ல ஆதர்வாவா?” என்றாள்.

“யாரும் இல்ல,” என்றாள் அசடு வழிய.

“சரி, பொழச்சு போ. இப்ப சொல்லு… பிரியா அக்கா மேரேஜ்க்கு இந்த ஃப்ரைடே ஈவினிங் கிளம்பணும். நீ வரதானே?” என்றாள் கீதா.

“வரேன், வரேன். ஏன் சந்தேகம்?” என்றாள் மது.

“சன்டே தானே கல்யாணம். அப்புறம் எதுக்கு ஃப்ரைடேவே? அப்பா என்ன சொல்லுவார்னு தெரியல,” என்றாள்.

“ஃப்ரைடே போயிட்டு எப்ப ரிட்டர்ன்?” என்றவளிடம்,
“அங்கிள்கிட்ட நான் பேசறேன். அவ்வளவு தூரம் போறோம், சுத்தி பார்க்க வேண்டாமா? நல்லவேளை நமக்கு மண்டேவும் காலேஜ் லீவு. அதனால எந்த பிரச்சனையும் இல்ல. நீ என்ன சொல்லற?” என்றாள் கீதா.

“சரி,” என்றாள் மது.




அப்போது வசீகரனும் அங்கு வந்து சேர்ந்தான்.

“என்னடா, பேசிட்டையா?” என்று மித்ரனிடம் கேட்டான்.

“பேசியாச்சு. டூரிஸ்ட் வேன் தான் பிடிக்கிறோம். அதுல எல்லோரும் பசங்க. இவங்க நாலு பேர என்னடா செய்ய?” என்றான்.

“சரி, நான் கார் எடுக்குறேன். பசங்க வேன்ல வரட்டும். நாம ரெண்டு பேரும் இவங்கள கார்ல கூட்டி போகலாம். என்ன சொல்லற?” என்றான்.

மித்ரனும் சம்மதித்தான்.
 
Top Bottom