பார்வை 15
மது என்றவன் குரல் கிறங்கி கரகரத்தது .
“ம்ம்…என்றவள் குரல் நலிந்து ஒலித்தது.
“உன் கூட கொஞ்ச நேரம் இருக்கணும். உன் வாசத்தை நான் உணரனும் டி … . என்னால எதிலையும் கான்சன்ட்ரேட் பண்ண முடியல. ப்ளீஸ்… ஒரு அஞ்சு நிமிஷம்…” என்றவனின் இறுகிய அணைப்பில் இருந்தாள் பெண்ணவள். அவனின் வார்த்தைகளில் இருந்த ஏக்கம், அவனின் அணைப்பில் இருந்த இறுக்கத்தைவிட அவளை அதிகமாக தாக்கியது . அவன் மார்பில் சாய்ந்திருதவள், அவன் இதயத் துடிப்பை கேட்டாள்- அதில் அவளது பெயர் ஒலிப்பது போல் ஒரு பிரம்மையை தோற்றுவிக்க, அவள் என்னவென்று யோசிக்கும் முன், அவளது நெற்றியில் இதழ் பதித்து விலகினான்.
“தாங்க்ஸ் மது… லவ் யூ… லவ் யூ சோ மச்…” என்றவன் அந்த அறையை விட்டு வெளியேறினான். சட்டென்று திரும்பி, “இந்த சாரியில்… தேவதை மாதிரி இருக்க…” என்றவனின் ரசனை மிகுந்த பார்வையில் தன்னைத் தொலைத்தாள் அவள்.
இப்போது அவனின் பார்வை எல்லை மீறி அவளை ரசித்தது.
குரலைச் செருமியவன், “உன் கர்வ்ஸ் ஆர் ஸ்டன்னிங்… என்னால வேற எங்கையும் யாரையும் பார்க்க முடியல. எதுவும் செய்ய முடியல. என்னால என்னை கண்ட்ரோல் பண்ணவே முடியலடி…” என்றான் கரகரத்த குரலில்.
ஒரு நிமிடம் மதுவுக்கு ஒன்றும் புரியவில்லை. உறைந்து நின்றவள், சில நொடிகள் கழித்து தான் அவன் கூறியது மனம் உணர்ந்தது. அவள் கன்னங்களில் ரோஜா பூக்கள் மலர்ந்தன. மாறாக அவனை முறைத்துப் நின்றாள் .
“உன்னை கண்டு கொண்டேன்…” என்று அவன் கண்களால் சிரித்தபடி வெளியே சென்றான்.
காதலால் அவனிடம் பிடிபட்ட பாவனையில் ,
“அச்சோ…” என்று தன் கைகளால் கண்களை மூடிக்கொண்டாள்.
சில நிமிடங்கள் தான்… “அச்சோ! ஆச்சி என்ன சொன்னாங்க?” என்று நினைவிற்கு கொண்டு வந்தவள், தாம்பூல பைகளை எடுத்துக் கொண்டு கொடுத்தாள்.
அவளது முகத்தை பார்த்த கீதா, “என்னடி, தாம்பூல பை எடுக்குற சாக்குல போய் டச் அப் பண்ணிட்டு வந்தாயா?” என்றாள், அவள் கன்ன சிவப்பை பார்த்து.
முகத்தில் நாணப் பூக்கள் பூக்க, “இல்லை…” என்று தடுமாறியவள், சுதாரித்து, “வாஷ்ரூம் யூஸ் பண்ணிட்டு வந்தேன்…” என்றாள் சமாளிப்பாக.
“சரி சரி… நம்பிட்டேன், நம்பிட்டேன்…” என்றாள் கீதா, நம்பாத பாவனையில்.
திருமணம் அனைத்து சடங்குகளுடன் திருப்தியாக முடிந்தது.
“ஏட்டி பிரியா, உன் தோழி பிள்ளைகளை எல்லாம் சாப்பிட வச்சு கொஞ்சம் ஓய்வெடுக்க கூட்டிப் போ. பிறகு நலுங்கு இருக்கு. அதுக்கு தயாராகணும் இல்ல?” என்று அவளது ஆச்சி அனுப்பிவைத்தார்.
மாலை திருமண வரவேற்பு முடிந்து, 7 மணிக்கு நலுங்கு தொடங்கியது. மணப்பெண் உட்பட, மணமக்கள் ஒருவரோடு ஒருவர் நன்கு அறிமுகம் ஆகும் பொருட்டு மாலையில் நடைபெறும் மகிழ்ச்சியான ஒரு வைபவம் இது.
மணவறை அருகில் புதிய ஜமுக்காளத்தை விரித்து, மானோவை கிழக்கு நோக்கியும், பரீத்தியை மேற்கு நோக்கியும் அமர வைத்தனர். இருவரைச் சுற்றிலும் நண்பர் கூட்டமும் நெருங்கிய உறவினர்களும் அமர்ந்து சந்தோஷ கூச்சலிட்டனர்.
அங்கே மூத்த ஆச்சி ஒருத்தர், “ஏலே மனோ, இந்தாமலே இந்த புடி,” என்று வெண்கல தேங்காய் ஒன்றை கொடுத்து, மணமகள் நோக்கி உருட்டி விட சொன்னார். இருவரும் மாற்றி மாற்றி உருட்டினர். அது முடிந்ததும் பூப்பந்து எறிதல், பல்லாங்குழி ஆடுதல் போன்ற விளையாட்டுக்கள் நடைபெற்றன.
அடுத்து பெண் எழுந்து மாப்பிள்ளைக்கு பன்னீர் தெளித்து, வலது கால் பாதத்தின் மேல்புறம் சந்தனம் மற்றும் குங்குமம் இடுதல் செய்யினாள். பின்னர், மாப்பிள்ளை உட்கார்ந்தபடி, பெண்ணுக்கு பன்னீர் தெளித்து வலது கையில் சந்தனம் பூசி குங்குமம் இட வேண்டும்.
சுட்ட அப்பளங்களை மணமகனின் தலையை சுற்றி மணமகளும், மணமகளின் தலையை சுற்றி மணமகனும் இரண்டு முறையாக தட்டி விளையாடினர். இருவரும் மாற்றி மாற்றி வெற்றி பெற்றனர்.
இவை எல்லாம் வெளியூர் நண்பர் கூட்டத்திற்கு புதுமையாக இருந்தது. மாப்பிள்ளை வெற்றி பெறும் போது அவனது நண்பர்களும், மணபெண் வெற்றி பெறும் போது அவளது நண்பர்களும் சந்தோஷ கூச்சலிட்டனர்.
இது நடைபெறும் போது வசீகரனும் மதுமதியும் ஒருவரை ஒருவர் பார்வையால் பருகிக் கொண்டிருந்தனர்.
நிகழ்வு முடிந்து, நிறைவாக ஆரத்தி எடுத்து மணமக்களை அடுத்த சடங்குக்கு அழைத்தனர். மற்றவர்கள் உணவருந்த செல்லும் போது, வசீகரன் மதுமதியை அழைத்துக்கொண்டு அவனது காருக்கு அருகில் வந்தான். மயில் கழுத்து நிற லெகாங்காவில் மிளிர்ந்தவளை பார்த்தவன் வழிகளில் ரசனை மிகுந்திருந்தது.
“எதுக்கு கூடிட்டு வந்தீங்க? போச்சு… அவங்க எல்லாம் என்னை இன்னைக்கு ஒரு வழியாக ஆக்கப் போறாங்க, வசீ,” என்று சிணுங்கினாள்.
“ஏன்? என்ன சொல்வாங்க?” என்றவன், பார்வையில் அவளுக்கு படபடப்பு கொடுத்தான்.
“இப்படியெல்லாம் பார்க்காதீங்க, வசீ,” என்றாள் அவள்.
“ஏன்?” என்றான் அவன்.
அது என்றவள் சொல்லும் முன், அவள் இடையை வளைத்து அவனுடன் நெருக்கினாள்.
“ச்சு… வசீ, விடுங்க,” என்று திமிறியவளை, அவன் இன்னும் இறுக்கி பிடித்தான்.
“வசீ வலிக்குது… விடுங்க,” என்று அவள் விலகினாள்.
அவனுக்கு கோபமான கோபம் எழுந்தாலும், “விடாதீங்க…தொடாதீங்க வேற என்ன சொல்லுவ நீ” வேறு எதுவும் தெரியாதா ,” என்றவன் புன்னகையுடன் மீண்டும் அவளை தன் கை வளைவுக்குள் கொண்டுவந்தான்.அவனது புன்னகையில் அவளுக்கு முகம் சிவந்தது.
அவனுக்கு யாரின் மீதும் இதுபோல் ஈர்ப்பு, தேடல், வந்ததில்லை. இது அவனுக்கே புதிது. இப்படி உருகுவதும், அவளுக்காக தவிப்பதும், இந்த காதல் உணர்வுகள் அவனையே புதிதாக காட்டியது. இந்த உணர்வுகளை கட்டுப்படுத்தும் வழி தெரியாமல் அவன் தவித்தான்.
சந்தோஷம்… அதீத சந்தோஷம்… கட்டுப்படுத்த வழியறியாத அவனது தவிப்புகள், அவளை கண்டதும் கட்டவிழ்ந்து விடுகின்றன. அதனை தடுக்கும் வகை அறியாமல், அவ்வுணர்வுகளில் அவளையும் மூழ்க செய்து அவனும் மூழ்கினான்.
அவனின் கண்களில் காட்டிய காதலில் அவளும் மீளமுடியாமல் தவித்தாள் . அப்போது அங்கே ஒலித்த பாடலோடு அவனது முகம் விகசித்தது. அவனது முகத்தையே பார்த்துகொண்டிருந்தவளும், அவனின் பார்வை மாற்றத்தில் தடுமாறினாள்.
ஏனடி நீ என்னை இப்படி ஆக்குன…
காதல சட்டுன்னு கண்ணுல காட்டுன…
மொத்தமும் கையில வந்தது போல…
மேகத்து மேல நான் வைக்குறேன் கால…
வேறேதும் தோணல…
அடியே ஆனந்தம் தாங்கல…
வேறேதும் தோணல…
அடடா ஆனந்தம் தாங்கல…
“என்ன மது, நமக்குக் கூட யாரோ சிச்சுவேஷன் சாங் போட்டிருக்கான். அவனுக்குக் கூட என் நிலைமை புரியுது, உனக்கு?” என்றவன் சற்று நிறுத்தி,
“என்னடி உன் பிரச்சனை?” என்றான். அவன் குரலில் மீண்டும் அழுத்தம் கூடிட்டது.
அவளுக்கோ அவனது வேகம் பயத்தைத் தந்தது. இயல்பாகவே இருக்கும் பெண் நுண்ணுணர்வுகள், அவன் இவ்வாறு நெருங்கியபோது, அவளுக்குள் ஒரு அச்சத்தை எழுப்பின. அவன் நெருக்கத்தில் இருந்து சற்று விலகி நிற்க அவள் முயன்றாள்; அது அவனுள் தீ மூட்டியது. அவன் கோபம் அதிகரித்தது.
“இப்ப என்ன? ஏன் தள்ளித் தள்ளிப் போற? ஏன், பிடிக்கலையா?” என்றவன் அவளை கூர்ந்து பார்த்தான்.
“இல்ல… நேத்துதான் ‘ஓகே’ சொன்னேன். அதுக்குள்ள இவ்வளவு நெருக்கம்…” என்றவள் சற்று நிறுத்தி, “இவ்வளவு வேகம் வேண்டாமே…” என்றாள் தயக்கமாக.
அவன் எதுவும் சொல்லவில்லை. அவளையே அசையாமல் பார்த்தான்.
அவளுக்கோ அவன் பார்வையைச் சந்தித்து பேச நா எழவில்லை. இருந்தும் தயங்கி, “எல்லாமே ரொம்ப சீக்கிரமா நடக்கற மாதிரி தோணிச்சு…” என்றாள்.
அவளை கூர்மையாக பார்த்தவன், “ஏன்? நான் உன்னை ஏமாத்திடுவேன்னு நினைக்கிறாயா?” என்றான். அதில் மிதமிஞ்சிய கோபம் தெரிந்தது. “நீ என்ன நினைச்ச? சும்மா டைம் பாஸ்ஸுக்கு லவ் பண்ணறேன்னா?, நீ ‘சரி’ன்னு சொன்ன நிமிஷத்திலிருந்து என்னால உன்னை காதலியா கூட இல்ல, பொண்டாட்டியா தான் பார்க்குறேன். இதுவரைக்கும் யார்மேலையும் இப்படி தோணினதே இல்லை. இனி தோணவும் தோணாது. என் வாழ்க்கை முழுக்க நீ ஒருத்தி தான்…” என்றவனிடம் என்ன சொல்வது என்று அவளுக்கும் தெரியவில்லை.
அவளுக்கு தன் உணர்வுகளே புரியவில்லை. அவனது அன்பில் மனம் ஒரு கணம் நெகிழ்ந்து உருகியது. அதே சமயம் அவனது கோபத்தை கண்டு அவளது விழிகள் பயத்தை பிரதிபலித்தன. கண்ணீர் இமைமடல்களுக்குள் தங்கியிருந்தது; விட்டால் விழுந்துவிடும் நிலையில். மெதுவாக அதை கட்டுப்படுத்தி, நீரை உள்ளிழுத்தவள் அவனை ஒன்றும் சொல்லாமல் பார்த்தாள்.
அவளுக்கு தெரியவில்லை — அவனது அனைத்து உணர்வுகளும் அவளிடம் மட்டுமே சுனாமியாய் சுழற்றி அடிக்கும் என்று.
அவளது அமைதியில் , விழிகளில் கோர்த்துப் நின்ற நீரில் கோபம் மட்டுப்பட்டவன்,
“என்ன, பயந்திட்டாயா?” என்றான்.
“புரிஞ்சுக்கோ, மது… எனக்கு சொல்லத் தெரியல. என் மனசுல பொங்குற உணர்வுகள உன்கிட்ட காட்டாம யார்கிட்ட காட்டச் சொல்லற? கட்டுப்படுத்த முடியலடி. உன்கிட்ட மட்டும் தான் நான் இப்படி. . நீ என் மதி… என் வானத்தின் ஒரே நிலா.”
“மது…” என்றவன் குரல் அவளுக்குள் உயிர்வரை ஊடுருவியது.
அடுத்த நாள் காலையில் ....
புது பெண் பொங்கல் வைக்கும் சடங்கு மற்றும் இதர சடங்குகள் நடை பெற்றன. வசீகரனின் நண்பர்கள் மற்றும் மதுமதியின் நண்பர்கள் குழாம் அன்று குருக்குத்துறை முருகன் கோவில் மற்றும் நெல்லையப்பர் கோவில் சென்றனர். அன்று முழுவதும் வசீகரனும் மதுமதியும் ஒருவரை விட்டு ஒருவர் விலகாமல், கைகளை கோர்த்துக்கொண்டு இணைந்திருந்தனர்.
மித்ரன் தான் ஆனாலும், இம்புட்டு வேகம் கூடாது டா, ஜெட் வேகமால இருக்கு என்றான் .
வசீகரன் யாரின் கிண்டல் பேச்சையும் கண்டுகொள்ளவில்லை. மது மற்றவர்கள் பொருட்டு தள்ளி இருந்தாலும், அவன் அதற்க்கு விடவில்லை.
நெல்லையப்பர் கோவில் சந்நிதானம் சுற்றப்பாதையில் இருவரும் ஓரமாக அமர்ந்திருந்தனர். ரோஜா வண்ண சேலையில் மலர்ந்த ரோஜாவாக இருந்தவளை வசீகரன் கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான். அவளது கையை தனது கைக்குள் எடுத்து வைத்துக் கொண்டான்.
அவள், “வசீ, பிளீஸ், யாராவது பார்க்க போறாங்க” என்றாள்.
ம்கூம்... என்றவன் அவளை பார்வையால் வசியம் செய்து, பின் அவளது விரல்களோடு அவன் விரல்களை கோர்த்துக்கொண்டான்.
அவளுக்கு உள்ளங்கையில் குறுகுறுப்பு உண்டாக கையை உருவ முயன்றால், முயற்ச்சி மட்டுமே செய்ய முடிந்தது அவளால்; அவனின் வலிமையான கரத்தில் அவளது மென்கரங்கள் சிறைபட்டு கிடந்தன.
அவனின் வெம்மையை கைகளில் உணர்ந்தவள், அது அவளுக்கு பேரவஷ்தையாக இருந்தது. அது முகத்திலும் தெரிய, சற்று கூச்சத்துடன் நெளிந்தாள். அவளின் உணர்வுகளை புரிந்தவன் இதழ்களில் கீற்று புன்னகை தோன்றியது.
மது இந்த நொடி, இந்த நிமிஷம், “இப்படி உன் கூட கை பிடிச்சுக்கிட்டு, இப்படியே வாழ்க்கை முழுக்க வேணுன்னு தோணுது. அடுத்தவங்க பேச்சுக்காக இதை நான் இழக்க முடியாது,” என்றான்.
அன்று இரவு அனைவரும் ஊருக்கு திரும்பினர். இந்த பயணம் இருவரது வாழ்விலும் மறக்க முடியாததாக இருந்தது. இப்படி, அவர்களது நாட்கள் காதலுடன் நகர்ந்தது.