• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

ஒரு பார்வையிலே என்னை வீழத்திவிட்டாய் - 16

நிதனிபிரபு

Administrator
Staff member
பார்வை 16

திருநெல்வேலியில் இருந்து திரும்பி ஒரு வாரம் கடந்து இருக்கும். மதுவுக்கு அழைத்திருந்தான் வசீகரன். மறுமுனையில், “ஹலோ” என்ற மதுவின் குரலை ஆழ்ந்து உள்வாங்கினான்,அவனது மௌனத்தில் “ஹலோ.... ஹலோ.... வசீ” என்று மீண்டும், மீண்டும் உரக்க ஒலித்த மதுவின் குரலில் தெளிந்து, குரலை செருமியவன்.

“ஹம்ம்ம், மது ” என்றான் ஆழ்ந்த குரலில். அது அவளை அவனிடம் கட்டி இழுத்தது. அந்த குரலில் கொட்டி கிடந்த காதலில் அவள் மெய் சிலிர்க்க, “சொல்லுங்க, எதுக்கு கூப்பிட்டீங்க?” என்றாள்.

“ஏன், மது கூப்பிட கூடாதா?” என்றவன்.

“எனக்கு உன்னை பார்க்கணும் போல இருக்கு, உன்கிட்ட பேசிட்டே இருக்கணும் போல இருக்கு. என்ன செய்ய மது ?”,என்றான் .

மது.... என்றவனின் குரலின் குழைவில் அவள் மனமெங்கும் சாரல் மழை. அவளின் முகத்தில் வெக்கத்தின் சாயல். அவனின் அதீத காதலை சுமக்க முடியாமல் தள்ளாடியவளால், பதில் சொல்ல முடியாமல் தடுமாறி நின்றாள்.

“மது சொல்லு” எனறவனும், அவளது தள்ளாட்டத்தை உணர்தானோ…

“பதில் சொல்லு மை லிட்டில் லவ், நான் என்ன பண்ணட்டும்?” என்றவனிடம், “நீங்க என்னவும் பண்ணுங்க, நான் இப்ப கட் பண்ணுறேன்” என்றாள்.

“சரி, சரி வச்சிடாத” என்றவன்.

“உனக்கு என்னை போல பார்க்கணும், பேசணும்ன்னு தோணலையா, மது?”

“இல்ல… அது…”

“என்ன இல்லையா?” என்றவன்.குரலில் இருந்த கேலி அவளுக்கு புரியவில்லை .

அவன் கோவம் கொண்டுவிட்டனோ என்று அவள் தடுமாறினாள்.

அவளது தடுமாற்றத்தை உணர்ந்தவன்,“கூல் கூல், மது. சும்மா உன்ன டீஸ் செய்தேன்.”என்றான்

“எப்ப பார்க்கலாம், மது?” என்றவனிடம்.

“எனக்கு தெரியலை, நீங்களே சொல்லுங்க” என்றாள். அவனிடம் காதலை ஒப்புக்கொண்டாள் தான், ஆனாலும் பெற்றவர்களை ஏமாற்றுகிறோமோ என்ற சஞ்சலம். நம் முடிவு சரியா என்று அவளுக்குள்ளேயே போராடிக்கொண்டு இருந்தாள்.

அவன் பேசும் போதும் இந்த யோசனைகளில் தள்ளாட, அதற்குள் வசீகரன் அவளை இருமுறை கேட்டான், “மது லைன்ல இருக்கியா?”.. மது..

“ஹான், இருக்கேன், சொல்லுங்க” என்றவளிடம், “என்ன, மது தூக்கிட்டையா?”

“தூக்கத்துல எழுப்பிடேனா?” என்றான். குரலில் அவளை தூங்க விடாமல் தொல்லை செய்கிறோமோ என்று வருத்தம் தேங்கி நிற்க, அவனின் வருத்தம் பொறுக்காமல், “இல்ல இல்ல, சொல்லுங்க” என்றாள் சட்டென்று.

“சரி, நீ தூங்கு, மது. நாளைக்கு மீட் பண்ணலாம்” என்று இடத்தை சொன்னான்.

காலை கட் செய்தவன், ஒரு முறுவலுடன் மொபைலில் தலையை தட்டி கொண்டான்.

“என்னடா வசி, இப்படி மாறிட்டையே” என்று கட்டிலில் சரிந்தவன் மனது சந்தோசத்தில் துள்ளி கொண்டு இருந்தது. இப்படி எல்லாம் அவன் உணர்ந்ததில்லை, ஆனால் இது பிடித்தும் இருந்தது. அப்படியே கண்களை மூடி தூங்க முயற்சி செய்தான். கண்களுக்குள் வந்து அவனுடன் கண்ணாமூச்சி ஆடினாள் அவனின் தேவதைபெண். அவனின் தீரா போதை அவள். அவளிலிருந்து மீளமுடியாமல் மேலும் மேலும் அவளின் நினைவுக்களில் அவன் அடிமையாகி கொண்டுடிருக்கிறான். அது தெரிந்தாலும் அந்த மீளமுடியா மயக்கதில் இருக்கவே அவன் மனம் விரும்பியது.

அடுத்த நாள், ரெஸ்டாரன்ட்டில் அவளையே விழியெடுக்காமல் பார்த்தவன். பார்வையில் அவள் தடுமாற, “ஏன், மது, நெர்வர்ஷ இருக்க?” என்றவனிடம் இல்லை. “அப்படியெல்லாம் இல்லை” என்றாள் தன் தடுமாற்றத்தை மறைத்து.

“நேத்து கேட்டேன், நீ பதில் சொல்லல” என்றவனை கேள்வியாக பார்த்தாள்.

“இல்ல, எனக்கு உன்னை பார்க்கணும், உன்கிட்ட பேசணும் போல இருக்கு. உனக்கு அது போல எல்லாம் இல்லையா?” என்றவனிடம்,

“இல்ல, அப்படியெல்லாம் இல்லை” என்றாள்.

“அப்ப தோணுச்சா?”

“அது” என்று இழுத்தாள்.

“ஹ்ம்ம், தோணும்” என்றாள் மெல்லிய குரலில். அவளை புன்னகையுடன் பார்த்தவன், அப்ப “ஏன் என்கிட்ட சொல்லல?” என்றான்.

“நானா?” என்றாள் சங்கோஜத்துடன்.

“ஆமா, உனக்கு வேணும்னா, பார்க்கணுன்னு தோணினா நீதானே கேக்கணும்.எனக்கு பார்க்க தோணியதும் உன்னிடம் நான் கேட்டேன் தானே , அப்ப உனக்கு தோணினா நீ என்னிடம் கேக்க வேண்டும் மது . அதுக்கு உனக்கு முழு ரைட்ஸ்ம் இருக்கு.

அந்த உரிமை உனக்கு மட்டும் தான் இருக்கு என்றவன் இதழ் விரியா முறுவலுடன் , புரியுதா, மது?” என்றான் , அவனுக்கு இசைவாக , அவளது தலை தானாக “ஆம்” என்று ஆடியது.

“சரி, என்ன சாப்பிடற?” என்றவனிடம்.

“ஒரு மாதுளை ஜூஸ்” என்றாள் அவள். அவள் அவனுக்கு வேண்டியதையும் சொல்லிவிட்டு, இருவரும் காத்திருந்தனர்.

அவன் அவளை பார்வையிலேயே பருகிக்கொண்டிருக்க, அவனது பார்வையின் வீச்சு தாங்க முடியாமல், அவள் இமை தாழ்த்தினாள்.

“சொல்லு, மது, ஏதாவது பேசு.

“என்ன பேச?” என்றவளிடம்.

“என்னை பேசு, என்னவேணா பேசு. கேக்கதான் நான் எப்பவும் காலம் முழுதும் ரெடியா இருக்கிறேனே ” என்றான் புன்னகை முகமாய்.

அவள் முகம் சிவக்க, அதனையும் ரசனையுடன் பார்த்தவன், அதனை கண்களில் பிரதிபலித்தான்.

“சரி, சொல்லு, இந்த ஒரு வாரமா என்னை நினைக்கவே இல்லையா

நீ ?” என்றான்.

“ஆம்” என்றவளிடம் வெக்கத்தின் சாயல் .

அவனது மனமோ அவளது சிவந்த கன்னங்களில் அவனை முத்தமிட தூண்டி கொண்டிருந்தது.

குரலை செருமி உணர்வுகளை அடக்கியவன். உனக்கு என்னை பார்க்கணும், பேசணும் போல தோணினா, தயங்காம என்னை கூப்பிடனும் புரிஞ்சுதா? உனக்காக , எப்பவும் நான் இருக்கேன். அதை என்னைக்கும் மறக்காத” என்றவனின் கனிவான பேச்சை, விழி எடுக்காமல் பார்த்தவள் நினைத்தது: “ஒருமுறை கோவதால் தீயென எரிக்கிறான், மறுமுறை பனியென மனம் குளிர்விக்கிறான்”. இதில் எது இவன் .

அவனுக்கோ,நினைத்திருக்கிறாள் ஆனால் அவனை ஒருமுறையும் அழைக்க வில்லை. ஒவ்வொருமுறையும் நானே வரவேண்டுமா,என்று கோவம்தான் , ஆனால் எங்கே தான் மீண்டும் கோவம் கொண்டாள் அவள் பயந்துவிடுவாளோ என்று தன்னை கட்டுப்படுதியவன் அவளிடம் கனிவுடனே பேசினான் . என்னவோ தெரியவில்லை அவளிடம் மட்டும் அவன் இயல்பே மாறிவிடுகிறது.

---------------------

வசீகரனுக்கு இது இறுதியாண்டின் இறுதி செமஸ்டர் தேர்வுகள் தொடங்கிய தருணம். அதற்கான ஸ்டடி ஹாலிடேஸ் விட்டிருந்தார்கள். மதுமதிக்கும் இது இரண்டாவது செமஸ்டர்க்கான விடுமுறை நாட்கள் விட்டிருந்தார்கள். வசீகரன் மதுவிடம் ஒரு நாள் மாலில் சந்திக்கலாம் என்று கூறியிருந்தான்.

மதுமதி சித்தார்த்தை உடன் அழைத்துக் கொண்டு மாலுக்கு சென்றாள். மதுமதியின் வரவை எதிர்நோக்கி இருந்தவன் ,அங்கே சித்தார்த்தை எதிர்பார்க்கவில்லை.

“இவனை எதுக்கு கூட்டிட்டு வரா, இவளை மட்டும் தானே வரச் சொன்னேன்” என்று கோபமுற்றவன்,இவளை .. என்று பல்லை கடித்தவன், கடுவன் பூனையாக அவளை முறைத்துக் கொண்டு நின்றிருந்தான்.

அவர்கள் இவனை கண்டுகொண்டதாகவே தெரியவில்லை. சித்தார்த்திடம் ஏதோ சொல்லி, அவனின் தோளில் ஒரு அடியை வைத்தவள், ஏதோ பேசி சிரித்தவாறு அவனின் கையை பிடித்த படி வந்துகொண்டிருந்தாள்.

இங்கே ஒருவனது மனம் பொறாமையால் பொசுங்கிகொண்டிருந்தது.
“நான் அவ கையை பிடிச்சா மட்டும் அவங்க பார்த்திடுவாங்க, இவங்க பார்த்திடுவாங்கன்னு சொல்லி தள்ளி தள்ளி போவா, இப்ப யாரும் எதுவும் சொல்ல மாட்டாங்களா?” என்று உள்ளுக்குள் பொருமினான்.

ஏதோ தோன்ற வசீகரனின் முகத்தை பார்த்தவள், அவனின் பார்வையில் கலவரமானாள்.
அச்சோ, “ஏன் இப்படி பார்க்கிறாங்கன்னு தெரியலையே?”
வசீகரனின் பார்வை படியும் இடத்தை கண்டவள் சட்டென்று தன் கைகளை சித்தார்த்திடம் இருந்து விலக்கினாள்.
“என்ன பண்ணிவச்சிருக்க, மது?” என்று தன்னையே மனதுக்குள் அர்சித்தபடி திருதிருவென வந்தாள். சித்தார்த் இதை கவனிக்கவில்லை.

வசீகரனின் அருகில் அவர்கள் வர வர, இவன் முகத்தை இயல்பாக்கினான். வந்தவுடன், “ஹலோ சீனியர்” என்றான் சித்தார்த்.
வசீகரன் வரவேற்பாக கை குலுக்க கொடுக்க அவனது கையை பற்றிய சித்தார்த் , “ஒரு இளம் முறுவலுடன் சரி, சீனியர் நீங்க பேசிக்கிட்டு இருங்க, நான் அப்படியே கொஞ்சம் ரவுண்ட் அடிச்சிட்டு வரேன்” என்று அங்கிருந்து கிளம்பினான்.

அவன் நகர்ந்தவுடன், “என்ன மது, உனக்கு பார்டி கார்டா?” என்றான்.
சித்தார்த் போவதையே பார்த்துக்கொண்டிருந்தவள் மனம் அவனது கேள்வியில் திடுகிட்டது.

பின்பு , “வசி, என்ன தனியா எல்லாம் விட மாட்டாங்க, சித்துக்கு நம்ம மேட்டர் தெரியும், அதுதான் அவன கூட்டிட்டு வந்தேன். அவன் கூட வந்ததால தான் என்னை ஒன்னும் சொல்ல.”

“ஏன் உங்க முகம் ஒரு மாதிரி இருக்கு, சித்து வந்தது பிடிக்கலையா?” என்று கேட்டாள் அவனை நேரடியாகவே.


“இல்ல, அப்படி சொல்லல” என்றவன். அவள் தவறாக நினைப்பாளோ என்று, “சரி விடு, சும்மா தான் கேட்டேன்” என்றான்.

பின்னர், “ஏன் உங்க முகம் இப்படி gem மா இருக்கு?” என்றவளை புரியாமல் பார்த்தான்.

புரியலையா? என்று கேட்டவள் கண்கள் குறும்பில் மிளிர்ந்தது.

அவன் அவளையே புருவங்கள் இடுங்க பார்க்க,
“ஜிஞ்சர் ஈட்டிங் மங்கி” என்று குறும்புடன் புன்னகைத்தவளை இப்போது முறைத்தான் அவன்.
அவனின் கடுப்பில் சுதாரித்தவள், “சரி, சரி, கோவ படாதீங்க” என்று கண்களை சுருக்கி கேட்க, அதற்கு மேல் அவனின் கோவம் அவனின் பேச்சை கேட்கவில்லை.
அவளின் அந்த பாவத்தில் அவளை அள்ளி கொள்ள வேண்டும் போல் இருந்தது.

இதழ்கடையில் புன்னகை புரிந்தவன், சற்று குரலை செருமி, “ஏதாவது வாங்கறியா நீ?” என்றான்.
“இல்லப்பா, ஷாப்பிங் பண்ற மூடு இல்ல. இப்ப படிக்கிற மூடு தான். உங்களை பார்க்கணும், பரீட்சை நேரம் உங்களை பார்க்கறது சிரமம், அதான் இப்ப வந்தேன்” என்றவளை.
“என்ன சிரமம்? பார்க்க நேரம் வேண்டாம், மனசு தான் வேணும், உனக்கு மனசில்ல” என்றான் சற்று கோவமாக.

அவனது கோவத்தை ஒரு சலிப்புடன் பார்த்தவள் . இப்படி கோவத்தை மூக்கு மேலையே வச்சிட்டு சுத்தாதீங்க . சரியான மிளகா நீங்க என்றவளை அவன் மேலும் முறைக்க

அதுவும் குண்டூர் மிளகா .. என்றாள் கண்களை சிமிட்டி.

அவன் முகத்தை திருப்பினான் அவளது பாவனை அவனுக்கு சிரிப்பு மூடியது ஆனால் காட்டிக்கொள்ளவில்லை.

அவள் பேச்சை மாற்றி, “பர்சேஸ் பண்ண அமௌன்ட் எடுத்துட்டு வரல” என்றதும் அவன் மீண்டும் ருத்திரமூர்த்தியானான் ,

“ஏன், நான் வாங்கி தர மாட்டேனா?” என்றதும்.

முகத்தை சுருக்கி அவனைப் பாவமாக பார்த்தவள், “சாரி, நான் அப்படி சொல்ல வரல. சரி, எது வேணாலும் நீங்களே வாங்கித் தாங்க” என்றாள்,

இருவரும் அருகே இருந்த கிப்ட் ஷாப்புக்கு சென்றனர்.

அங்கே சதுர வடிவ’ கண்ணாடி பெட்டிக்குள் இரண்டு இதயங்கள் ஒன்றுடன் ஒன்று கோர்த்தவாறு, இரு பக்கம் சிறகு விரித்தவாறு, ஒரு நுணுக்கமான கலைநயத்துடன் கூடிய கீச் செயினை வாங்கி தந்தான்.

“வாவ்… வசீ, அமேசிங்” என்றவள். அதன் கலைநயத்தில் அழகில் வியந்து, விழிகளை விரித்தாள்.
அதைக் கண்ட வசீகரனுக்கு, அவளின் விழிகளுக்குள் மூழ்குவது போல் ஒரு பிரம்மை தோன்றியது.

மாலினை ஒரு சுற்று சுற்றி வந்தவர்கள், அங்குள்ள ஃபுட் கோர்ட்டுக்கு அருகே வந்தார்கள். மது உடனே சித்தார்த்துக்கு கால் செய்தாள்.
“சித்து, நாங்க இங்க ஃபுட் கோர்ட் கிட்ட தான் இருக்கோம்” என்றதும், அவன் ஒரு இடத்தை குறிப்பிட்டு கேக்க , “ஆமா, அங்க தான் வந்துரு” என்று வைத்தாள்.

சித்தார்த் வந்ததும் இருவரும் வசீகரனிடம் விடைபெற்று கொண்டு புறப்பட்டனர்.

போகும் அவர்களையே ஒரு பெரு மூச்சுடன் பார்த்திருந்தான்.
 
Top Bottom