• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

ஒரு பார்வையிலே என்னை வீழத்திவிட்டாய் - 18

நிதனிபிரபு

Administrator
Staff member
பார்வை 18

கோவத்தில் அவளுக்கு அவன் பேசவேயில்லை. ஒரு வாரம் சென்றிருந்தது. அவனுக்கு அவளை பார்க்காமல் பேசாமல் இருக்க முடியவில்லை.அவள் மீதான பிடித்தம் அவனை பித்து நிலைக்கு தள்ள முடியாமல் அன்று,வசீகரன் மதுவுக்கு அழைத்திருந்தான்.
மறுமுனையில் அவள் “ஹலோ” என்றதும்,

“வசீ சொல்ல மாட்டையா, மது?” என்றான் உல்லாசமாக.

“நான் வீட்டில் இருக்கேன்,” என்றாள் அவள் கிசுகிசுப்பாக.

அவளிடம் விளையாடிப் பார்க்கும் ஆசை வந்தது அவனுக்கு.
“நானும் தான் வீட்டில்தான் இருக்கேன்,” என்றான் அவன்.

அதுக்கு ?


“ஏன்? அங்க என் பேர் சொன்னா எனக்கு கேட்காதா?” என்றவனின் பேச்சில் அவள் கடுப்பாகிவிட்டாள்.

அவள் சொன்னது — “நான் வீட்டில் இருக்கிறேன்; உன் பெயர் சொல்லிப் பேச முடியாது” — என்ற அர்த்தத்தில். இதை புரியாமல் இவன் பேசுவதால் அவனை என்ன செய்தால் தகும் என்று தோன்றியது அவளுக்கு.

அதே கடுப்புடன் அறை கதவை சாற்றியவள், “எதுக்கு கூப்பிட்டீங்க?” என்றாள் மெல்லிய குரலில் .

“உன்கிட்ட பேசணும் போல இருந்தது …அதான் கூப்பிட்டேன்” என்றான் அவன்.

“என்ன பேசணும்?” என்றாள் அவள்.

“என்னவோ எல்லாம் பேசணும்தான் தோணுது… பேசவா மது என்றான் கிசுகிசுப்பாக ,” அவனின் பேச்சில்,

“நான் கட் பண்ணுறேன்,” என்றாள் அவள் .

“சரி, சரி… வச்சிடாத. ஓய், என்ன கோபமா?” என்றான்.

“இல்லையே,” என்றாள் அவள்.

“அப்புறம் ஏன் ஒட்டாம பேசுற?” என்றான் இவன்.

“நான் எப்ப உங்கிட்ட ஒட்டிக்கிட்டு பேசினேன்?”

“ஏன் அப்படித்தான் பேசேன், மது…” என்றவனின் முகத்தில் அவளது பேச்சை எண்ணி ஒரு புன்னகை விரிந்தது .

எதற்கெடுத்தாலும் கோபம் கொள்வான் அவன். ஆனால் அவனின் இந்த பரிமாணம் அவளை மெய்சிலிர்க்க வைத்தது.

“,சரி, டைவர்ட் பண்ணாம எதுக்கு கூப்பிட்டீங்க சொல்லுங்க,” என்றாள்.

அவனும் விளையாட்டை விட்டுவிட்டு, “இந்த வாரம் மூவி போலாமா?” என்றான்.

“ப்ராஜெக்ட் இருக்கு வசீ , … இன்னொரு நாள் போலாமே,” என்றவளின் கெஞ்சல் குரலில் ,

“மேடம் போன வாரம் என்ன சொன்னீங்க ?”.

அது ? பிளீஸ் புரிஞ்சுக்குங்க பா, இந்த வாரம் வேண்டாம் அடுத்தவாரம் பிளீஸ் என்ற அவளது கிசு கிசுப்பான கெஞ்சல் குரல் அவனை மயக்க ,அவனால் எங்கே மறுக்க முடியும்? இப்படி கொஞ்சிக் பேசியே இவள் என்னை மயக்கிறாளோ என்றே தோன்றியது அவனுக்கு.

சரி, வசீ – “ஐ லவ் யு”ன்னு சொல்லு விடுறேன் என்றான் அவன்.

சரி என்றவள் “வசீ, ஐ லவ் யு” என்று அஸ்கி வாய்சில் சொல்ல அவன் அவளது அழைப்பிலும் சொன்ன விஷயத்திலும் மனம் மயங்கியது.

மது என்றவன் குரலும் கிறங்கி ஒலித்தது . அவன் அந்த கிறக்கத்தில் இருக்க யாரோ வரும் அரவம் உணர்ந்து,வசீ வைக்கிறேன் பை என்று காலை கட் செய்தாள் .

அவன் எங்கே அதை உணர்ந்தான். அவள் கூறிய “ஐ லவ் யு” இன்னும் அவனை வேறு உலகுக்கு அழைத்து சென்றுகொண்டிருந்தது. .


அது சித்துவின் இறுதியாண்டு. சித்துவும் மதுமதியும் அந்த வாரம் வெளியான ஒரு பிரபல ஹீரோவின் படத்திற்கு சென்றனர். அன்று வெளியே செல்வதற்கு வசீகரன் அழைத்தபோது, மது ப்ராஜெக்ட் இருப்பதாகச் சொல்லி வர மறுத்துவிட்டாள். உண்மையில் ப்ராஜெக்ட் வேலையும் இருந்தது.

அன்று மாலை, “மது எங்கே? அந்த வானரம் என்றவாறு வந்தான் சித்து.” அவனை முறைத்தவள், “இதைக் அவன் கேட்டிருக்கணும்… அப்புறம் இருக்கு உனக்கு,” என்றாள்.

“சரி, எங்கேன்னு சொல்லுடி. அல்ரெடி டைம் ஆச்சு,” என்றான்.

“அவன் அவனோட ஃப்ரெண்ட் சஞ்சய் கூட எங்கோ…” என்று சொல்லிவிட்டு நிறுத்தியவள், “அம்மா, அவன் எங்கே போறன்னு சொல்லிட்டு போனான்?” என்று அவளது அன்னையிடம் கேட்டாள்.

அவர், “சஞ்சய்யுடைய அப்பாவுக்கு ஏதோ டாக்டர்கிட்ட போகணும்னு, இவனும் கூட போயிருக்கான். ஏன்டா கேக்குற?” என்று சொல்லிவிட்டு சித்துவைப் பார்த்து, “வா சித்து, அண்ணி நல்லா இருக்காங்களா? அண்ணா ஏதோ வெளியூர் போறேன்னு சொன்னாங்க; போய்ட்டு வந்துட்டாங்களா பா?” என்றார்.

“அம்மா நல்லா இருக்காங்க, அத்தை. அப்பா நேற்றுதான் வந்தார்.”என்றவன்

“இந்த முகுந்தன் என்னை சினிமாக்கு டிக்கெட் புக் பண்ண சொன்னான். மறந்துட்டான் போல,” என்றவன் திரும்பி மதுவைப் பார்த்தான்.

“என்ன, என்னை பார்க்குற? என்னாலெல்லாம் வர முடியாது,” என்றவளை அவன் விடவில்லை. அவள் மறுக்க மறுக்க, “முகுந்தனும் இல்லேனா நான்மட்டும் எப்படி போக? உனக்கும் பிடித்த ஹீரோ தானே… ஏற்கனவே டிக்கெட் புக் செய்துவிட்டேன்,” என்று கெஞ்சி, கொஞ்சி, அவளது பெற்றோரையும் துணைக்கழைத்து வற்புறுத்தியதால், அவனுடன் வந்திருந்தாள்.

அங்கு வசீகரனும் நண்பர்களுடன் வந்திருந்தான்.
“வசீ, அங்க பாரு… அது மது தானே? சித்துவுடன் வந்திருக்க போல. போய் பேசுடா,” என்றான் மித்ரன்.

அவளை பார்த்ததும் முதலில் மகிழ்ந்தவன், மித்ரன் சொன்ன அடுத்த வார்த்தைகளில் மனம் கொதித்துப் போனான்.
“ஓ… அவன் கூட வந்திருக்காளா?” என்று எண்ணியவனின் பார்வையில் கோபம் கனன்றது.

“போய் பேசு,” என்றவனிடம் முதலில் “வேண்டாம்” என்று மறுத்தான்.
மித்ரன் கட்டாயப்படுத்த, “சரி, இரு டா,” என்றவன் மதுமதியை பார்த்துக்கொண்டே போன் செய்தான்.

அவனது கால் பார்த்ததும் ஒரு கணம் திடுக்கிட்டாள் அவள்.
“அச்சோ…” என்று கைகளை உதறியவள், நகத்தை கடித்தவாறு போனையே வெறித்தாள். முழு ரிங்கும் போய் நின்றது.

வசீகரன் அவளை பார்த்துக்கொண்டே மீண்டும் முயன்றான்.

“சித்து கூட வெளியே வந்திருக்கோம் என்று தெரிஞ்சுட்டா… நான் அவ்வளவுதான்,” என்று எண்ணியவள் பதட்டத்தை மறைத்து கால் அட்டெண்ட் செய்தாள்.

“சொல்லுங்க, வசீ…” என்றாள் இயல்பாக.

என்ன பண்ணற மது என்றான் குரலில் வரவழைக்கப்பட்ட நிதானத்துடன்.


உடனே சுதாரித்தவள், "ஹாங்… வீட்டுல இருக்கேன்," என்றாள்.

அவளது முகபாவனைகளை பார்த்தவனுக்கு கோவம் மட்டுப்பட்டு, உதடுகள் சிரிப்பில் துடிக்க எப்பவும் போல அவளுடன் விளையாடி பார்க்கும் எண்ணம் வந்தது.

"ஒ… வீட்டுல… என்ன ஒரே சத்தமா இருக்கு?" என்றவனிடம்
"அதுவா, மூவி பார்த்திட்டு இருக்கிறேன் அதான்," என்றாள்.

இவளது பொய் எந்த எல்லைக்கு போகிறது என்று பார்க்கலாம் என்று விளையாட்டாக எண்ணி அவன் மீண்டும், "என்ன மூவி?" என்றான்.
அவளும் வாய்க்கு வந்ததை சொன்னாள்.

அதற்குள் சித்து, "வா, மது, உள்ளே போகலாம்," என்று அழைத்தான்.
"யார் மது?" என்றான் வசீகரன் சித்துவின் குரலில்.
"அது என் தம்பி," என்றான்.

"ஓ, இரண்டு பேரும் மட்டுமா?" என்றவனிடம்
சித்துவுடன் வந்ததாக சொன்னால் கோவித்து கொள்வான் என்று அதனை சொல்லாமல், "ஆமா, எங்கே உலறிவிடுவோமோ," என்றெண்ணி, "என்ன இவ்வளவு கேள்வி கேக்கறீங்க?" என்றாள் பதட்டமாக.

சித்துவுக்கு வேற அவனோடு பேசுவது வசீக்கு பிடிக்காது என்பது தெரியாது; "சரி, சமாளிப்போம்," என்று எண்ணியவள்.
"சரி, போனை வைக்கிறேன்," என்றாள்.

அவ்வளவு அவசரமா? என்றவன் குரல் போனில் கேக்காமல், அருகில் கேக்கவும் பயந்து திரும்பினாள்.

திரு திருவென முழித்தவளை சன்ன முறையுடன் பார்த்தவன்,

சித்து, "எப்பிருந்து உனக்கு தம்பியானான், மது?" என்றான் நக்கலாக..
அவளுக்கு பதட்டத்தில் எதுவும் சொல்ல வார்த்தைகள் வரவில்லை.

சித்து அவள் காதோரம் குனிந்து மாட்டிக்கிட்ட பங்கு என்றான், உதட்டை பிதுக்கி.
"இவன் வேற நேரம் காலம் தெரியாம," என்று மனதுக்குள் நினைத்தவள், "போடா, எருமை எல்லாம் உன்னால தான்," என்று முனுமுனுத்துவிட்டு, வசீகரனை பார்த்தவள் சன்னமாக சிரித்தாள்.

விட்டாள் அழுதுவிடுபவள் போல் இருந்தவளை பார்த்தவன், "சரி போ, போய் படம் பார்," என்றான் குரலில் கோவத்தை தேக்கி.
சித்துவுக்கு அது புரியவில்லை, ஆனால் மது அந்த இடத்தை விட்டு அசைய மறுத்தாள்.

சித்துவிடம், "நீ போ, சித், நான் வறேன்," என்றவள். வசீகரனை விழி அசையாமல் பார்த்தாள்.
"சாரி, நீங்க கூப்பிட்டு வரல," நான் சொல்லறத கொஞ்சம் பொறுமையா கேளுங்க , நான் முடியாதுன்னு தான் சொன்னேன் , அவன் என் அப்பாகிட்ட சொல்ல சொல்லி ரொம்ப பிடிவாதம் பிடித்து கூட்டி வந்தான். அதான் வந்தேன் தப்பா எடுக்காதீங்க பிளீஸ் என்றவளை,
எதுவும் சொல்லாமல் பார்த்தான்.
.
"உங்களுக்கு அவன் கூட வந்தது தெரிஞ்சா பிடிக்காதுன்னு தான் மாத்தி சொன்னேன்," என்றவளை மேலும் முறைத்தான்.
சுற்றி பார்த்தவன் அவளையே அழுத்தமாக பார்த்து, "எவ்வளவு பொய்… சரி போ, இப்ப எதுவும் பேச வேண்டாம், நாளைக்கு மீட் பண்ணலாம்," என்றவன்.
சற்று நிறுத்தி, "மீட் பண்றோம், காட் இட்," என்றான் மரத்த குரலில்.

அவளுக்கு நாளைக்கு என்ன வரப்போகிறதோ என்று நினைத்ததும், படம் பார்க்கும் ஆர்வமே போயிருந்தது. இடைவேளை வந்ததும், சித்துவிடம், “வீட்டுக்கு போலாமா? ரொம்ப தலையிடியா இருக்கு” என்று சொல்லி “கிளம்பிவிட்டாள் அவனுடன் . அதை வசீகரனும் பார்த்தான்; எதுவும் சொல்லவில்லை. இப்போதும், மித்ரன் தான், “என்னடா, கிளம்பிட்டாங்க?” என்றவன், வசீகரனின் முகத்தை பார்த்து, “என்னடா?” என்றான்.

என்ன.. என்ன..

மதுகிட்ட என்ன சொன்ன நீ ,

“அப்ப நீ பேசும் போதே கவனிச்சேன். மது முகம் பயந்த மாதிரி இருந்தது. நீ ஏதோ கோவமா பேசின; உன்னால தான் அவங்க போறாங்கலா?” என்றான்.

மித்ரனை திரும்பி முறைத்தவன், “ஜப்பான்ல பூகம்பம் வந்தாலும் நான் தான் காரணம்; அமெரிக்கால குண்டு வெடிச்சாலும் நான் தான் காரணம்” என்று சொல்லுவ போல என்றவனை , மித்ரன் புரியாமல் பார்த்தான். பின்பு புரிந்தவன், “உனக்கு ரொம்ப கொழுப்புடா பாவம். மது உன்கிட்ட சிக்கியிருக்கா பாரு?” என்று அவன் தோளில் ஒரு அடி போட்டான்.

அப்படியே, அவன் தோளில் கை போட்டவாறு அவனோடு நடந்தபடி, “டேய், அவளை ரொம்ப படுத்தாத டா, பாவம்” என்றான் மித்ரன் .

தங்கச்சி மேல ரொம்ப பாசம் போல என்று நக்கலாகச் சொன்னான்.

மித்ரன் அவனை கோவமாகப் பார்க்க ,

“சரி சரி, உன் தங்கச்சி கண்ணுல கண்ணீர் வராம பார்த்திருக்கேன்” என்றான். இதழ்களில் மென் புன்னகையை மலர்விட்டு,

சரி “மதுகிட்ட என்னடா சொன்ன ?” என்றவனிடம்,

“டேய், நான் ஒன்னுமே சொல்லல; உன் தங்கச்சி தான் பொய் சொல்லி மாட்டிக்கிட்டா. அவ்வளவுதான்” என்றான்.

மித்ரன், “அவ்வளவுதானா?” என்று ஒருமாதிரியாகப் கேட்டான். மித்ரனை திரும்பி பார்த்தவன் ஒன்றும் சொல்லாமல் நடந்தான்.

“நான் கெஸ் பண்ணது சரின்னா, சித் கூட அவ வந்தது. உனக்கு பிடிக்கல கரெக்டா ?” என்றவனை விடுடா என்றவன் . மேலும், அதை பற்றி பேசாமல் வேறு விசயத்தை பேசினான்.

பேச்சை மாற்றாத வசீகரன் , அப்ப நான் சொன்னதுதான் இல்லையா? வசீ , இங்க பாரு ,சித் ரொம்ப நல்லவன்; மதுவும் நல்ல பொண்ணு என்று கூறினான். மேலும் பேச விடாமல், “எனக்கும் தெரியும், ஆனாலும் அவ என்னை தவிர வேற யாருக்கும் இம்பார்டன்ஸ் தராது; எனக்கு பிடிக்கல” என்றான்.

“ரொம்ப பொசசிவ்வா இருக்காத; அது நல்ல ரிலேஷன்ஷிப்புக்கு எதிரி. அது ரிலேஷன்ஷிப்ப ரொம்ப நாளைக்கு தொடர விடாது” என்று நல்ல நண்பனாய் அறிவுரை வழங்கினான்.

அவனுக்கு எல்லாம் புரிந்து தான் இருந்தது. ஆனால் அவர்கள் இருவரையும் சேர்த்து பார்க்கும் போது அவள் மீது உருவாகும் உரிமை உணர்வு அதனை அவனால் கட்டுப்படுத்த முடியவில்லை. அவள் அவனுக்கு தான் எதிலும் முன்னுரிமை தரவேண்டும் என்று நினைத்தான். அவளும் அவன் தான் தனக்கு முக்கியமானவன் என்பதை அவள் உள்ளம் உணர்ந்தாலும் அவனுக்கு உணர்த்த தவறிவிட்டாளே.

அவனுடைய குணம், அவன் காதலை அவனிடமிருந்து பிரித்து செயலிழக்கச் செய்யப்போவதை, அவன் அப்போது அறியவில்லை.

இருவருக்குமே தகுந்தமன முதிர்ச்சி அப்போது இல்லாமல் போனதுதான் காலத்தின் கட்டாயமோ.
 
Top Bottom