ஒரு பார்வையிலே என்னை வீழத்திவிட்டாய் - 20

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நிதனிபிரபு

Administrator
Staff member
Nov 11, 2018
2,208
16,465
113
Germany
பார்வை 20

என்னை கொல்லாதே…
தள்ளி போகாதே…
நெஞ்சை கிள்ளாதே…
கண்மணி…
சொன்ன என் சொல்லில்…
இல்லை உண்மைகள்…
ஏனோ கோபங்கள் சொல்லடி…
உன்னை தீண்டாமல்…
உன்னை பார்க்காமல்…
கொஞ்சி பேசாமல்…
கண்ணில் தூக்கமில்லை…
அவன் இறுதியாக சொன்ன வார்த்தைகளில் அவள் மனம் அல்லாடியது. “நான் வேண்டாமா உனக்கு?” என்று அவனை சட்டையைப் பிடித்து உலுக்க வேண்டும் போல ஒரு ஆவேசம் வந்தது.

அன்று எப்படி வண்டிக்கு அருகில் சென்றாள், எப்படி வண்டியை ஓட்டினாள் — எதுவும் அவளுக்குத் தெரியவில்லை. மனம் ஓவென்று கதறியது. தாயின் மடியில் தலை சாய்த்தாள். “என்னவென்று?” கேட்ட தாயிடம் எதுவும் சொல்லவில்லை. ஆனால் அவளைப் பற்றி அவருக்கு தெரியாத ஏதோ பெரிதாக ஒன்று இருப்பதை அவர் உணர்ந்தார். சொல்ல வேண்டுமென்றால் அவளே சொல்வாள்;ஆனால் நான் அறியக்கூடாததா?- தாய் மனம் தவித்தது. ஆனாலும் அவளிடம் எதையும் கேட்கவில்லை. தலையை மட்டும் வருடியபடி இருந்தார்.

அவள் எப்போது தூங்கினாள் என்று அவளுக்கே தெரியவில்லை. அவளது தலையை மெதுவாக தலையணைக்கு மாற்றியவர், அவளையே கவலையோடு பார்த்துவிட்டு அங்கிருந்து சென்றார்.

இங்கே வசீகரனின் நிலையும் அவ்வாறே. அவளை வேண்டாம் என்று சொல்லிவிட்டான் தான்; ஆனால் அவனது வார்த்தைகள் அவனையே பெரிதாக தாக்கின. அவனால் தாங்க முடியவில்லை. அதற்காக அவளை ஏற்றுக்கொள்ளவும் மனம் சண்டித்தனம் செய்தது. “அவள் வேண்டும்” என்று பிடிவாதம் செய்தவன், இப்போது தனது காதலிடமே “அவள் வேண்டாம்” என்று பிடிவாதம் பிடித்தான்.
“அவள் வேண்டாம்... ஆனால் அவளைத் தவிர என் வாழ்வில் யாரும் வேண்டாம்...”
அவன் மனம் என்ன நினைக்கிறது என்று அவனுக்கே புரியவில்லை.

அவனும் தனது தாயைத் தேடித்தான் சென்றான். எப்போதும் புன்னகை முகமாக வரும் மகனின் முகத்தில் மருந்துக்கும் புன்னகை இல்லை அவனை இவ்வளவு வருத்தமாக இதுவரை அவர் பார்த்ததேயில்லை, என்னவோ என்று நினைத்தவர். அவனிடம் எதுவும் கேட்கவில்லை. ஆறுதலாக அவனை மடியில் தாங்கினார்.

அவனுக்கு அவளைப் புரியவில்லை என்று அவளும், அவளுக்கு தான் முக்கியம் இல்லை என்று அவனும் எண்ணினர்.

திரும்பவும் அவனைப் புரியவைக்க மதுமதி முயற்சிகள் செய்தாள். ஆனால் அவன் அதற்கு இடமளிக்கவில்லை.


ஒரு மாதம் கடந்திருந்தது.

அதற்கும் அவள் மீதே கோபம் கொண்டான். “ஓ… நான் விலகினால் நீயும் விட்டுவிடுவாயா? சரி, நான் தான் உனக்கு முக்கியம் இல்லையே; பிறகு நீ ஏன் என்னைத் தேடப் போகிறாய்?” என்று அவனது மனம் ஒரு நிலையில் இல்லை.நான் அவளுக்கு முக்கியமில்லை என்ற எண்ணமே அவனை நிலையிழக்க செய்ய போதுமானதாக இருந்தது .

மீண்டும் மது, வசீகரனைத் தேடி வந்தாள்.
ஏதோ சமாதானமாக சொல்ல போக.

“இப்ப என்ன?” என்றான் கடுப்பாக.

“அது… வசீ… வந்து…” அவனது கோபத்தில் இவளுக்கு பேச வந்தது மறந்துபோக, தடுமாறினாள்.

“சொல்லு.”
அவனின் குரலில் இருந்த கோபத்தின் அளவை உணர்ந்தவள் தன்னை நிதானபடுத்திகொண்டாள்.

“நான் அன்னைக்கு அப்படி சொன்னது தவறுதான்…” என்றவளை முறைத்தவன்,
“ஆமாம், தப்புதான்!” என்றான். அவனது குரல் உருமியது

நான் .. நான்.. அன்னைக்கு நான் சித்துவை முக்கியம்..நீங்க முக்கியமில்லைன்னு சொல்லல , என்றவளை இடையிட்டவன்

ஆமா.. ஆமா .. நீ என்னை முக்கியம் இல்லைன்னு சொல்லல , “என்னை விட அவன் தான் முக்கியமின்னு சொன்ன“.சொன்னவனின் குரலில் கோவம் மிதமிஞ்சி இருந்தது.

வசி என்றவளை நிதானமாக பார்த்தவன், “இல்லை, நான் அன்றைக்கு ஏதோ தவறி…” என்று தொடங்கியவளிடம்,. ,‘பேச வேண்டாம்’ என்பது போல் சைகை செய்தான்.

அதற்குப் பிறகு அவன் பேசிய — இல்லை, வீசிய — வார்த்தைகளுக்கு அவனே முழுப் பொறுப்பு.அன்று அவனின் நாவில் சரஸ்வதிக்கு பதில் சனி பகவான் இருந்தார் போலும்.

“என்னடி நினைச்சிட்டு இருக்க?”நீ, எப்படி?.. எப்படி?..

“நான் உன் பின்னாடி நாய் மாதிரி சுத்துவேன். ஆனா நீ எனக்கு முக்கியத்துவம் தர மாட்ட. அவன்தான் உனக்கு முக்கியம்ன்னு என்கிட்டையே சொல்லுவ . என்னை பார்த்தா எப்படி தெரியுது?. . அப்போ அவனையே காதலிக்க வேண்டியது தானே? என்னை எதுக்கு…?” என்று வார்த்தைகளை கடித்து துப்பினான்.

“என்ன நினைச்சிட்டு இருக்க? ஒவ்வொருத்தனையும் உன் பின்னால சுத்த விடணும்னா? நீ என்ன மாதிரி பொண்ணு?”

அவன் கொஞ்சமும் நிதானத்தில் இல்லை. என்ன பேசுகிறான் என்பதையே உணரவில்லை.

“வசி… என்ன வார்த்தை பேசறீங்க?” என்றவள் கண்களில் கண்ணீர் குளம் கட்டியது. தளர்ந்த குரலில், “பார்த்து பேசுங்க…” என்றவள், கண்களில் கண்ணீர் வழிந்தது.

ஆனால் அவன் அவளை கவனிக்கவில்லை. அவன் கண்களை தான் கோபம் மறைத்திருந்ததே. மேலும் மேலும் வார்த்தைகளால் அவளை குத்திக் கிழித்தான்.

அவன் பேசியதைத் தாங்க முடியாமல், “நிறுத்துங்க!” என்று கத்தியவள், “போதும்…” என்று சைகை செய்தாள். அதிக உணர்ச்சி காரணமாக அவளால் பேச முடியவில்லை. சற்று நிதானித்து,

“போதும். இதுக்கு மேல முடியாது. இனி நீங்க நினைச்சாலும், நான் உங்களை எப்பவும் பார்க்க விரும்பல. அன்னைக்கு நீங்க சொன்னது தான் எனக்கும் — எனக்கு திருமண வாழ்க்கைன்னு ஒன்னு இருந்தா அது உங்களோட தான். ஆனா எனக்கு நீங்களும் வேண்டாம். யாரும் வேண்டாம். நான் இனி எப்பவும் தனி தான்.

சாரி… இதுவரை நான் உங்கள தவிர யாரையும் காதலிச்சதும் இல்லை , இனி யாரையும் காதலிக்க போறதும் இல்லை. நீங்க தான் என் முதல் காதல், நீங்கதான் என்னோட வாழ்க்கை முழுமைக்கும். உங்களை என்னால புரிஞ்சுக்கவும் முடியல, உங்களுக்கு என்னை புரியவைக்கவும் முடியலை. சிறந்த துணைன்னா உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்கணும். அது உங்ககிட்ட எனக்கு கிடைக்கும்னு நம்பிக்கை இல்லை…”

என்றவள் அவனைப் பார்த்த பார்வையில் பல கேள்விகள் இருந்தன.

“என் வலி புரியலன்னாலும் பரவாயில்லை… எனக்கும் வலிக்கும் தெரிஞ்சிருந்தா இப்படி பேசுவீங்களா?” என்று அவளது பார்வையே அவனை குற்றம் சாட்டியது. நான் உங்களுக்கு கொடுத்த வலியை விட நீங்க எனக்கு பல மடங்கா திருப்பி தந்துட்டீங்க . போதும், இதுக்கு மேல நமக்குள்ள எதுவும் இல்லை , அவளால் பேச முடியாமல் நெஞ்சடைத்தது.

அவளது மனம் கத்தியால் பலமுறை கீறியதுபோல் வலித்தது. நெஞ்சைத் தடவி விட்டுகொண்டாள்.

அவன் அவள் பார்வையின் அர்த்தம் உணரும் முன்னரே, “குட் பை” என்றவள் விறுவிறுப்பாக அங்கிருந்து சென்றாள்.

அவள் திரும்பிய நொடி அவன் உணர்ந்தான் அவனது காதல் மீள முடியாத திசையில் பயணிப்பதை .
பெரும் முயற்சி எடுத்து சந்தித்த அந்த நாளிலும் மீண்டும் அவள் மனதை உடைத்திருந்தான்.

அவனுடைய ஈகோ வென்றது. அன்றே அவளது நியாயம் புரிந்திருந்தும், அவனது கோபம் அவனை இறங்க மறுத்தது. அவளிடம் இருந்து பார்வையை விலக்கி வேறு பக்கம் பார்த்தான்.

அவள் அங்கிருந்து செல்லச் செல்ல “போகாதே” என்று கத்த வேண்டும் போல அவனுக்கு தோன்றியது. ஆனால் அவனது ஈகோ அவனை விடவில்லை.

சற்று நேரத்தில் ஆசுவாசம் அடைந்தவன்,
“ச்ச்… என்னவெல்லாம் பேசிவிட்டோம்! என்னடா வசி, என்ன பண்ணி வைத்திருக்க? எதுக்கு இவ்வளவு கோபம் உனக்கு ?” என்று தன்னையே நிந்தித்துக் கொண்டான்.

அவளை காயப்படுத்தியவன் மனமும், அவளை காயப்படுத்திவிட்டோமோ என்ற எண்ணத்தில் காயப்பட்டுப் போனது.

அவளுக்கு பிறகு யோசிக்க யோசிக்க, “தன் மேல் என்ன தவறு? அவனது செய்கையால்தானே அவ்வாறு பேசினோம்? அதற்கும் மன்னிப்பு கேட்டாயிற்று. ஆனால் அவன் சொன்னதும், அவன் செயல்களும் சரியா? அதை அவன் உணர்ந்ததாகவே தெரியவில்லையே,” என்றே அவளுக்கு தோன்றியது.

“போதும். புரிதல் இல்லாமல் இது தொடர்ந்தால் இருவருக்கும் இன்னும் வெறுப்பே வரும்,” என்று உணர்ந்து அவனை மீண்டும் சந்திக்க விரும்பவில்லை.

அவன் மீண்டும் அவளை சந்திக்க பலமுறை முயன்றான். அவள் அதற்க்கு அனுமதிக்கவில்லை.

மித்ரன் வந்து பேசிய போதும், வேண்டாம் அண்ணா. முடிந்தது முடிந்ததாகவே இருக்கட்டும், இவ்வளவு நடந்த பிறகு இதை தொடர்ந்தா இரண்டு பேருக்குமே வருத்தம் தான் விட்டுடுங்க பிளீஸ் என்றவளை கட்டாய படுத்த அவன் விரும்பவில்லை.

பேசிய பேச்சுக்கு நண்பன் கொஞ்சமாவது அனுபவிக்கட்டும். என்று எண்ணியவன் அதற்க்கு பிறகு வசீகரனிடம் சொல்லிவிட்டான்,அவளை தொந்தரவு செய்யாதே என்று.

நண்பன் சொன்னதும் கேட்டபவனா அவன் .

முடியாது. அவ இல்லாம எனக்கு பைத்தியம் பிடிக்குது.

குற்றாலம் கூடிட்டு வேணா போறேன் ரெண்டு எலுமிச்சம் பழம் தலையில தேச்சு அருவில நின்னா தெளிஞ்சிடும். ஆன மதுவ தொல்லை பண்ணாத அவ்வளவுதான் சொல்ல முடியும் என்று சொன்ன மிதரனை,

முறைத்துக்கொண்டு நின்றிருந்தான் வசீகரன்

சும்மா கோவபாடாத டா . உன்னோட கோவம் தான் இங்க கொண்டுவந்து நிறுத்தியிருக்கு நீ பேசின பேச்சுக்கு அவளுக்குதான் பைத்தியம் பிடிச்சிருக்கணும். கொஞ்சமாடா பேசின. வாயிருக்குன்னு அந்த பிள்ளைய என்னவெல்லாம் சொன்ன இப்ப பைத்தியம் பிடிக்குதுன்னா என்ன பண்ண முடியும் அவளுக்கு கொஞ்சம் டைம் குடு
என்றவனை ஒரு இயாலாமையுடன் பார்த்தான் வசீகரன்.

டேய் என்னால முடியல டா. தப்புதான், நான் சொன்னதா நினைச்சா எனக்கே என்மேல கோவம் வருது . அந்த நிமிஷம் என்னோட கோவம் ,என் பேச்சு அது என்னையும் மீறி .. அவளை அவ்வளவு பேசி காயபடுத்திட்டேன்.
ஏன்டா ,” அவ என்னை வெறுத்திருப்பாளா” என்றவனை பார்க்க மிதரனுக்கும் வருத்தமாகதான் இருந்தது . அன்று கோவமாக பேசியவன் இன்று ஒரு குழந்தை போல் கேட்கும் போது அவனுக்கும் பாவமாக இருந்தது ஆனால் என்ன செய்து விட முடியும் .

“அவ மன்னிகிற வரை காத்திரு வசீ”. வேற என்ன பண்ண முடியும் என்றான் .

அதன் பிறகு வசீகரன் காத்திருக்க தொடங்கினான். தள்ளியிருந்து அவளை அவதானித்தான். அவளது கண்களில் அவன் அகப்படுவது அரிதானது. ஆனால் அவன் கண் பார்வையில் அவளை வைத்திருந்தான்.

இருவரும் அன்றைய நினைவுகளை இன்று நடந்தது போல எண்ணி, மனதின் வலியை உணர்ந்து தாங்க முடியாமல் தவித்தனர்.

விட்டு விலகவும் முடியாமல், சேர்த்துக் கொள்ளவும் முடியாமல், இருதலைக்கொள்ளி எறும்பைப் போல இருவரது மனம் தவித்தது.

அவளை எண்ணி கண்களை மூடியவன், விழிகளுக்குள் வந்து நின்று புன்னகைத்தாள். அவனது இதழ்களோ, “மை ஸ்வீட் டெம்ப்டேஷன்” என்று முணுமுணுத்தது.
“உன்னை எப்படி சமாதானம் செய்யப் போறேன்டி?” என்று நினைத்தவன், எப்படியும் செய்ய வேண்டும் என்று உறுதி பூண்டான்.

அவளுக்கோ, ஆறியிருந்த காயத்தை மீண்டும் கீறிவிட்டது போல வலி திரும்ப எழுந்தது. மனம் மரத்துவிட்டதாக நினைத்திருந்தாலும், அப்படி இல்லை என்பதை இன்று உணர்ந்தாள். திரும்ப அவனை கண்டதும், மறக்க நினைத்த அனைத்தும் முற்றும் முழுதாக நினைவுக்கு வந்துவிட்டது. மரத்துவிட்டதாக எண்ணிய இதயத்தில், அன்று போலவே இன்றும் வலி எழ, கண்ணை இறுக மூடிக்கொண்டாள். அங்கேயும் அவனே. பட்டென்று கண் திறந்தவள், “வேண்டாம்… அவன் வேண்டாம்…” என்று மீண்டும் மீண்டும் மனதுக்குள் சொல்லிக்கொண்டாள்.
 
Last edited by a moderator:

Author: நிதனிபிரபு
Article Title: ஒரு பார்வையிலே என்னை வீழத்திவிட்டாய் - 20
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
  • Love
Reactions: Magizh kutty

Gowri Karthikeyan

Well-known member
May 5, 2026
1,289
379
83
Chennai
ரெண்டு பேரும் பொறுமையா பேசினாலே போதும்.....
ஆன பொறுமையை ரெண்டு பேரும் எருமை ஏத்தி அனுப்பிட்டு பேசிட்டு இருக்கீங்க🤷🤷🤷🤷🤷
 
  • Like
Reactions: STN- 75