• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

ஒரு பார்வையிலே என்னை வீழத்திவிட்டாய் - 21

நிதனிபிரபு

Administrator
Staff member
பார்வை 21

பாதி காதல் தந்த பெண்ணே
மீதியும் வேண்டும்
நீ போன பின்பு எந்தன் மனமோ
இருண்டுதான் போகும்
காத்திரு என்று நீ சொல்லி போனால்
அதுவே போதும்
மறந்திரு என்று நீ சொல்ல நேர்ந்தால்
உயிரே போகும்

“ஞாயிறு அன்று காலை “.

ஆசிரமத்தில் வண்டியை நிறுத்தியவள், அங்கு இருந்த கருப்பு நிற காரைக் கண்டதும் துணுக்குற்றாள்.

சுற்றுமுற்றும் பார்த்தவளின் அருகில், “என்னையா தேடுற?” என்று கேட்ட குரலில் ஒரு கணம் தடுமாறி, நெஞ்சில் கை வைத்து ஆசுவாசமானாள். அவனை எந்த வித தயக்கமும் இன்றி எதிர்கொண்டவள், “உங்களை நான் எதற்கு தேடணும்?” என்றாள் சட்டென்று.

அவளது தடுமாற்றமும் அதற்கு பிறகான ஆசுவாசமும் அனைத்தையும் பார்த்தவன் அவளுக்கு சளைத்தவன் அல்லவே. என்னை தேடவே இல்லையா? என்றவன் கேள்வியில் அவனது குரலில் என்ன இருந்தது.

“மதுமதி அவனை ஒரு திடுகிடலுடன்” பார்த்தாள். என்ன கேட்கிறான் அவளது மனம் தடுமாறியது ,அவளது மானங்கெட்ட மனம் தான் அவனை எண்ணி எண்ணி வேதனையிலும் வலியிலும் அவனுக்காக ஏங்கிக்கொண்டிருக்கிறதே, ஒரு நிமிடத்தில் உலகையே வலம் வந்துவிட்டது. இருபினும் அவளது தன்மானம் அவளை தடுத்தது..

அவனின் விழிகள் அவளை ஊடுருவ,

அவள் நிதானமாக பார்த்தாள்.

இல்லையே என்றாள்.

அவளது பதில் இதுதான் என்று தெரிந்தபோதிலும் அவளது பார்வை உணர்த்தியது வேறல்லவா. அவளது மனமறியத் தானே அவன் அவளை அவ்வாறு கேட்டதும். அவளை எண்ணி மனதுக்குள் புன்னகைத்து கொண்டான்.

பேச்சை இலக்குவாக்க

அப்புறம், மேடம் “என்ன இந்த பக்கம் எல்லாம் வந்திருக்கீங்க? என்று ஒற்றை புருவமுயர்த்தி இதழில் ஒரு முறுவலுடன் கேட்டவனை , புருவம் சுருக்கி பார்த்தாள்.

இதை நான் கேக்கணும் மிஸ்டர்.. விலாசமான எண்ணங்கள் உள்ளவங்க வரக்கூடிய இடத்தில் நீங்க எப்படி என்று ஆச்சர்ய பாவம் காட்டினாள்

அவளது பதிலில் அவனுக்கு முகம் கருத்தது.

அவளும் அவனை குத்தி பேசவேண்டும் என்று சொல்லவில்லை . அவன் கேட்டதும் மனதிலிருந்த கோவத்தில் தானாக அவள் வாயில் வந்திவிட்டது. அவள் பதிலில் அவன் முகம் போன போக்கில் அவள் உள்ளுக்குள் ஒரு மலர்ச்சி உண்டானலும் அதற்க்கு ஆயுள் குறைவுதான் போலும் அவளது மனம் மீண்டும் அவனுக்காக அவனை பேசியதற்க்காக வருந்தியது.

ச்ச.. என்ன இது அவன் அன்று எவ்வளவு தரம் தாழ்த்தி பேசினான், ஆனால் அவனை ஒரு வார்த்தை சொல்லியதும் அவனுக்கு முதல் அவளுக்கு வலிக்கிறதே . அவனுக்கு இது போல் எல்லாம் இருந்திருக்காதா என்று உள்ளுக்குள் எண்ணியவள் அவனையே பார்த்து கொண்டிருக்க , அவனும் அவளையே பார்த்துக்கொண்டிருந்தான் , அவனுக்கு விலாசமான எண்ணம் இல்லை என்று குத்திகாட்டியவள் மீது கோவம் வருவதற்க்கு பதிலாக முன்பு தான் அவளிடம் நடந்து கொண்ட விதத்தில் அவன் மனதை குத்தியது,

,மது என்றவனின் உயிரை உருக்கும் குரலில் நினைவு வந்தவள் அவனை ஏறிட்டு பார்த்தாள்.

மன்னிப்பை கண்களாலும் யாசித்தவன், சாரி என்றான் குரலில் வலியை தேக்கி,

அவனது பார்வையில் அவளின் மனதின் கனம் கூட அவள் அவனை வெறுமையாகப் பார்த்தாள்; ஒன்றும் சொல்லவில்லை.

அவனும் அவளையே பார்த்திருந்தான் .

அவனின் பார்வையில் மனதின் அழுத்தம் தாங்காமல், அவள் பார்வையை மாற்றி அவனை விலக்கி நடக்கத் தொடங்கினாள். அவனுக்கு தற்போது மனதில் சொல்லொணா வருத்தம் பரவியது .

தன்னை அலட்சியம் செய்து சென்றவளைப் பார்த்தவன், “எவ்வளவு திண்ணக்கம் இவளுக்கு! எப்போதும் இவள் இப்படிதானே, இப்போதும் இவளுக்கு நான் முக்கியம் இல்லை?” என்று நினைத்தான்.

உடனே அவளைத் தாண்டி வேக நடையுடன் சென்றவளை பார்த்தவள் மனதிலும் வலியின் சாயல்.

அவள் ஏற்கனவே இது போன்ற ஆசிரமங்களுக்கு போவது பற்றி சிறிது சொல்லியிருந்தாள் தான். இத்தனை வருடங்கள் அவள் அவனை பார்க்கவில்லை என்பது வேறு; ஆனால் அவன்தான் அவளை எப்போதும் தொடர்ந்து அவதானித்துக் கொண்டிருந்தானே.

ஆசிரம நிர்வாகியைச் சந்தித்தவன், தனது செல்லக் குட்டியைப் பார்க்கப் போனான். அவள், அவனவளின் மடியில் அமர்ந்திருந்தாள்; அவள் அவளுக்கு விளையாட்டு காட்டிக்கொண்டு இருந்தாள்.

மதுமதியின் பெரியன்னை இதுபோன்ற ஒரு ஆசிரமத்தில்தான் வேலை செய்கிறார். அதனால் சிறுவயது முதலே விடுமுறை தினங்களில் அவளும் ஆசிரமத்திற்கு வந்து, தனது பெரியன்னையுடன் சேர்ந்து சிறுசிறு உதவிகள் செய்வாள். அந்தப் பழக்கத்தில் இப்போதும் முடிந்த நாட்களில் இவ்வாறு வந்து செல்வாள். முதலில் வாராவாரம் வந்தாள்; ஆனால் இந்த சில வருடங்களாக மதுமதி இங்கு வருவது வருடத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறையாகக் குறைந்தது.அதுவும் கடந்த ஒரு வருடமாக அவள் இங்கு வரமுடியாமல் போக கல்லூரி முடிந்து இந்த இரண்டு மாதங்களாக வாராவாரம் வந்து கொண்டிருக்கிறாள்.

அப்படி ஒருமுறை வந்தபோதுதான் இந்தச் சின்ன ரோஜாமொட்டால் கவரப்பட்டாள். தாயையும் தந்தையையும் இழந்த அந்தக் குழந்தையைப் பார்க்கும் போது மனம் பாகாய் உருகிவிடும். அன்றிலிருந்து வந்ததும் முதலில் ஆரத்தியைத்தான் கைகளில் தாங்குவாள்.

இங்கு வசீகரனுக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது … அவர்கள் இருவரும் இவனுக்கு மிகவும் நெருக்கமானவர்கள்; மிக மிக முக்கியமானவர்கள். மனது தன்னையறியாமல் மகிழ்ச்சியில் பூரித்தது. தான் சென்றால் அவள் சென்றுவிடுவாள் என்று உணர்ந்தவன், அவனின் தேவதைகளை தள்ளி நின்றே ரசித்தான்.

மதுமதிக்கு ஆர்த்தியை பார்க்கப் பார்க்க எப்போதும் அவளுக்கு பரீட்சியமானவர்களை யாரையோ நினைவுபடுத்தும்.இன்றும் அப்படியே அவளது நினைவடுக்கில் தேடி திரிய , யாரென்று அவளுக்கு புலப்படவில்லை. சிறிது நேரம் அவளுடன் செலவிட்டவள், மற்ற குழந்தைகளுக்கும் தான் வாங்கி வந்த பொருள்களை வழங்கிவிட்டு வண்டி நிறுத்தத்திற்கு வந்தாள்.

வந்தவள் அப்போது தான் கவனித்தாள் — அவளது வண்டியின் பின்பக்க டயர் பஞ்சராகி இருந்தது. தலையில் கை வைத்தவள், “என்னடா இது? இப்போ என்ன பண்ணுவது?” என்று யோசித்தபடி நின்றாள்.

அவளையே பார்வையால் தொடர்ந்து கொண்டிருந்தவன் அருகில் வந்து, “என்னாச்சு மது?” என்றான். நெருக்கத்தில் கேட்ட குரலில் பதறி விலகியவள் நெஞ்சில் கை வைத்தாள்.

“எப்போதும் இப்படி தான் பயமுறுத்துவீங்களா?” என்றாள் சற்று கோபமாக.

“பாருடா… வண்டியை என்னவோ மியூசியத்தில் இருந்து எடுத்து வந்த மாதிரி சுத்திசுத்தி வந்தயே . என்ன என்று பார்த்து உதவலாம்னு வந்தா உனக்கு கோபம் வருதோ?” என்றான் நக்கலாக.

“தள்ளு,” என்று அவளை விலக்கி நிறுத்தியவனை அவள் முறைத்தாள்.


“உங்க உதவியை நான் கேட்கவும் இல்லை; வேண்டவும் வேண்டாம். நீங்க உங்க வேலையை பாருங்க, மிஸ்டர்,” என்றாள் கடுப்புடன்.

‘இவனுக்கு தோன்றினால் உதவி பண்ணுறேன் , மண்ணாங்கட்டி பண்ணுறேன்னு வருவான். யாருக்கு வேணும் இவன் உதவி!’ என்று உள்ளுக்குள் எண்ணினாள்.

அவளது உதாசீனத்தில் அவனுக்கு மனதில் சிணுக்கம் ஏற்ப்பட்டது .

“என்னடா பண்ணி வச்சிருக்க இன்னும் கூட அவளுக்கு கோவம் குறையல, எல்லாம் உன்னால உன் கோவத்தால” என்று அவனுக்கே அவன் சொல்லிக் கொண்டான். ‘பாரு, உதவிக்குக் கூட உன்னை வேண்டாம் என்கிறாள்… ரொம்ப கஷ்டம் டா, வசீ,’ என்று நினைத்தவன், கண்களில் காட்டிய காதலில். அந்த பாவனையில் அவளுக்குள் ஏதோ உருகியது.

அவன் எப்போதும் அப்படிதான், அவளுக்கு மட்டுமே தெரியும் அவனது இந்த பரிமாணம் , அவளிடம் மட்டுமே காட்டும் அவனது மென்மையின் சாயல் அது அவளை தடுமாற செய்தது. .

‘மது, ஸ்டெடி… இவன் எல்லாம் செய்வான்; அப்புறம் அவன் புத்தியை காட்டிடுவான். போதும், ஒரு முறை பட்டதே வாழ்க்கை முழுக்கக் காணும்,’ என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டாள்.

அவளுக்கு ஒன்று உறுத்தியது. இவ்வளவு நாட்களாக, வருடங்களாக அவள் காண வேண்டும் என்று நினைத்த போதெல்லாம் கண்களில் படாதவன், இந்த பதினைந்து நாட்களில் இது இரண்டாவது முறை இவனை இப்படி எதேச்சையாக சந்திப்பது. இது தற்செயலா? இல்லை இவன் செயலா? அப்போதும் அவன் அப்படித்தான் செய்தான். அவளை பார்க்கும் சூழலை அவனே உருவாக்கி, அவளிடம் காதல் மொழிந்தான்; பின்னர் அவனே அவளை மனம்நோக பேசி அவர்கள் பிரிவுக்கும் காரணமானான்.

யோசனையில் தலை வலிப்பது போல் இருக்க, ஒருமுறை தலையை உலுக்கியவள், தனது அலைபேசியை எடுத்து “சித்,” என்று அவனை அழைத்தாள்.
“எங்கே இருக்க?”
“ஏன் டி?”
“நான் இங்கே ஆசிரமம் வந்தேன்… டயர் பஞ்சர் டா. சீக்கிரம் வா.”

எப்படி ஆச்சு?

தெரியலை டா? சீக்கிரம் வா, என்றாள் அவள்.
“ஹம்… சரி, பஞ்சர் போட ஆளை கூட்டிட்டு வரேன். ஒரு அரை மணி நேரம் ஆகும் ஓகே வா .”
“ஹம் சரி, வெயிட் பண்றேன்,” என்றாள்.

வசீகரனுக்கு உள்ளுக்குள் வருத்தம் மேலிட அதனை அவளிடம் கேக்கவும் செய்தான்.

“இப்பவும் உனக்கு என்னைவிட அவன்தான் முக்கியம் இல்லையா?” என்று அவன் மீண்டும் கேட்டான். அவனது கேள்வியில் வருத்தத்தை மீறிய கோபம் அவளுக்குள் எழுந்தது.

அவனை முறைத்தவள், “இன்னும் நீங்க இப்படித்தான் இல்லையா?” என்றாள். அவளின் பார்வை அவனை துளைத்தது.

“டேய் வசீ, உன் வாய்க்கு முதலில் பூட்டு போடு; இல்லையெனில் உன் காதலுக்கு ஒரேடியா பெரிய பூட்டை போட்டுக்குவ,” என்று அவன் மனதில் தன்னைத் திட்டிக்கொண்டான்.

மீண்டும் வசீகரனை தவிர்த்து, வாயிலை நோக்கி பார்க்க ஆரம்பித்தாள்.

அவன் என்ன செய்கிறான் என்று அவள் அவ்வப்போது கடைகண்ணால் பார்த்துக்கொண்டாள். அவனை இன்னும் காதலிக்கிறாள் தான். காதல் தான் மான ரோஷம் பார்க்காதே. ஆனால் அவனை மீண்டும் நெருங்க அவனது வார்த்தைகள் அவளை தடுத்தன; அவனை வேண்டாம் என்றும் சொல்ல வைத்தன.

அவளையே பார்த்தவன் எதுவும் சொல்லவில்லை. அவளது நிராகரிப்பில் மனம் சுணங்கினாலும், அவளது பதட்டம் அவன் அருகில் இருக்கும்போது அவள் எப்போதும் காட்டும் விதமான பாவனை அவனுக்குள் குதூகளிக்க செய்தது.

“ஓஹோ, மேடம்க்கு அப்ப என் உதவி வேண்டாம்,” என்று நினைத்தவன் கண்கள் சிரித்து, அதை முகமும் பிரதிபலித்து, மீசைக்கடியில் புன்னகையை ஒளித்தான்.
“இது உனக்கு தேவைதான்டா,” என்று நினைத்தான்.

இப்போது அவனுக்குள் எந்த கோவமும் இல்லை. அவ்வப்போது பொறாமை கொஞ்சம் தலை தூக்கும் போதெல்லாம் கொஞ்சம் தட்டி வைப்பான்.

மதுமதி அன்று சொல்லியதை எண்ணியவனுக்கு இப்போது கோவம் வரவில்லை; மாறாக இருவரும் அன்று அப்படி பேசியிருக்க வேண்டாம் ” என்று தோன்றியது. அன்று அவள் பேசியது கூட இவனால்தான் அந்த நிலைக்கு தள்ளப்பட்டாள் என்று நினைத்தான்.அவள் பேசியதை விட அவன் பேசியவைகள் அவனை அவனாலேயே மன்னிக்க முடியவில்லை. நான் உயிராக நேசித்த பெண் , எப்படி என்னால் அவ்வாறு பேச முடிந்தது தன்னை நினைத்தே நொந்து கொள்வான் . அவனை அவனாலேயே மன்னிக்க முடியாதவை , அவள் எப்படி அவனை மன்னிப்பாள்.

ஆனால் அவனாள் அவளை விடமுடியாது. அவள் அவனது உயிர் , அவனது மூச்சு ,அவள் இல்லாமல் அவனுக்கு ஒரு வாழ்க்கையில்லை அதை நினைக்க கூட அவனாள் முடியாது ,அதில் அவன் அவள் வேண்டும் என்று முடிவெடுத்த நேரத்தில் அவளுக்கு அவன் மீதான வருத்தம் போய் , அவனின் மீதான கோபம் அதிகரித்துக் கொண்டே இருந்தது. அவன் அவளை வேண்டுமென்று நினைக்க, அவள் அவனை வேண்டாம் என்று நினைக்கும் படி, அவனை அறியாமல் அவளை அந்த முடிவுக்கு நகர்த்தியிருந்தான்.

காத்திருக்கும் அவர்களது காதல் உடைந்த மனங்களை இணைத்து கை சேருமா ?.
 
Top Bottom