ஒரு பார்வையிலே என்னை வீழத்திவிட்டாய் - 24

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நிதனிபிரபு

Administrator
Staff member
Nov 11, 2018
2,208
16,465
113
Germany
பார்வை 24

சொல்லாமல் தொட்டு செல்லும் தென்றல்…
என் காதல் தேவதையின் கண்கள்…
நெஞ்சத்தில் கொட்டி செல்லும் மின்னல்…
கண்ணோரம் மின்னும் அவள் காதல்…
ஒரு நாளைக்குள்ளே மெல்ல மெல்ல…
உன் மௌனம் என்னை கொல்ல கொல்ல…
இந்த காதலினால் காற்றில் பறக்கும் காகிதம் ஆனேன்…
எஸ் கமின், என்று உள்ளே அழைத்தவன் அவளையே பார்த்திருக்க , அவளோ மிதரனை புன்னகையுடன் பார்த்து கொண்டிருந்தாள்.

என்னை பார்த்தா மட்டும் ஓடி ஒளிஞ்சுக்கிறது. அவனை பார்த்ததும் சிரிப்பை பாரு , என்று உள்ளுக்குள் அவனால் புலம்ப மட்டுமே முடிந்தது.

“பிளீஸ் டேக் யுவர் சீட்”, என்றவனை திரும்பி பார்த்தவள் முகம் வெறுமையாக இருக்க , தாங்க்யு சார் என்றவாறு அமர்ந்தாள்.

“ பாருங்க மதுமதி இவர்தான் உங்க ப்ராஜக்ட் ஹெட் . நீங்க இவருக்கு தான் அசிஸ்ட் பண்ண போறீங்க”, என்று கூறியதும் சரி என்று தலையை அசைத்தாள் . ஏதாவது சந்தேகம்னா மிஸ்டர் மித்ரன்கிட்ட அல்லது என்கிட்ட கேக்கலாம் என்றவன் அத்துடன் தனது பேச்சு முடிந்தது என்றதாக பார்த்தான்.

இப்போது மித்ரன் “ஹாய் மது,எப்படி இருக்க , உன்னை பார்த்து எவ்வளவு நாள் ஆச்சு “, என்று புன்னகைக்க.

அவளும் புன்னகையுடன் “ஐ ஆம் குட் அண்ணா” . எல்லோரும் எப்படி இருக்காங்க என்று உற்ச்சாகமாக பேச துவங்கினாள்.

“பிரியா எப்படி இருக்கா ?அண்ணா”. நீங்க இங்கேயா வேலை செய்யறீங்க?” . அடுத்த மாதம் உங்களுக்கும் பிரியாவுக்கும் மேரேஜ் டேட் பிக்ஸ் பண்ணியிருக்காங்கன்னு பிரியா சொன்ன . ஆனா நீங்க இங்க வேலைல இருக்கீங்கன்னு அவ சொல்லவே இல்ல என்றவள் மிதரனை யோசனையாக பார்க்க.

மெதுவா மது இப்படி எல்லா கேள்விகளையும் ஒன்னா கேட்ட நான் எப்படி பதில் சொல்றது. ஒன்னொன்னா கேளு என்றவன் .

அவள் கேட்ட எல்லா கேள்விகளுக்கும் பதில் தந்தான் . இறுதியாக கேட்ட கேள்விக்கு பிரியா உனக்கு சர்ப்ரைஸ் பண்ண நினைச்சிருப்பா என்று ஏதோ சொல்லி சமமாளித்தான்.

உண்மையில் வசீகரனை கொண்டே மதுமதியிடம் பிரியா சொல்லவில்லை. அவன் சொல்ல வேண்டாம் என்று கேட்டிருக்க அவளும் சொல்லவில்லை. தெரிந்தால் பிரியாவிடம் மல்லுக்கு நிப்பாள் என்றே மித்ரன் அவளை ஒருவாறு சமாளித்தான்.

அவர்களையே பார்த்திருந்த வசீகரன் மது , இன் தி ஆபீஸ்,கால் ஹிம் ஒன்லி “சார்”. டோன்ட் கால் ஹிம் அண்ணா ஆர் எனி அதர் டெர்ம்ஸ் . திஸ் இஸ் தி ரூல் டூ ஃபாலோ அட் வொர்க் பிளேஸ். அண்டர்ஸ்டாண்ட் மது என்றதும்.

அவள் முகம் வாட சரியென்று தலையசைத்தாள்.

மித்ரன் சிரித்து கொண்டே, மது எனக்கும் முதல்ல கஷ்டமா தான் இருந்தது. பிறகு பழக்கிடுச்சு .

அவளும் வரவழைக்கப்பட்ட புன்னகையுடன் அவனை பார்த்தாள்.

அப்போது வசீகரன் தனது மேசையில் இருந்த பெல்லை அழுத்த, அவனது பி.ஏ. மேனகா வந்தாள்.

“சார்…” என்று வந்து நின்றவளை ஏறிட்டு பார்த்தவன், “எல்லாம் ரெடினா? நாம கிளம்பலாம்,” என்று கூறி புறப்படத் தயாரானான்.

“மித்ரன், நான் அந்த நியூ காலேஜ் ப்ராஜக்ட் சம்பந்தமாக மிஸ்டர் ஆதிரையனை பார்த்துவிட்டு அப்படியே சைட்டுக்கு போகிறேன். நீ மதுவுடன் டிஸ்கஸ் பண்ணிட்டு, மதியம் இரண்டு மணி அளவில் அங்கே வந்திடு. பார்க்கலாம்,” என்று சொல்லிவிட்டு, இருவரையும் பார்த்து பொதுவாகத் தலையசைத்துவிட்டு மேனகாவுடன் சென்றான்.

மேனகா பார்க்க மேனகைதான். அவள் ஒரு அல்ட்ரா மாடர்ன் அழகி. அவளது ஆடைகளும் அவளது அழகை எடுத்துக்காட்டுவதாகவே இருந்தது. அதுவும் அவள் வசீகரனுடன் இணைந்து நடக்க, மதுவுக்கு உள்ளுக்குள் எரிந்தது.

மதுவுக்கு ஏனோ அவளை பார்த்ததும் சுத்தமாகப் பிடிக்கவில்லை. அது வெளிப்படையாகவே அவளது முகத்தில் தெரிந்தது. அதை கவனித்த மித்ரன், “ஏன் மது, ஒரு மாதிரி இருக்கே?” என்றான்.

“ஒன்றுமில்லை,” என்று தலையசைத்தாள்.

ஒரு கணம் அவளை பார்த்த மித்ரன், “மேனகாவை உனக்கு பிடிக்கலையா?” என்றான்.

அவனை நிமிர்ந்து பார்த்தவள், “ஆமாம்… ண்ணா. அவளும் அவள் உடுப்பும் ஒன்றும் சரியில்லை. எனக்கு பார்த்த நாள் முதல் அவளைப் பிடிக்கல. அவள் பேச்சு சுத்தமா பிடிக்கல , கொஞ்சி கொஞ்சி பேசுவது இர்ரிடேட் ஆகுது. ஆனாலும் எனக்கு ஒரு சந்தேகம் — உங்க கோபக்கார ஃப்ரெண்ட்க்கு இவ எப்படி செட் ஆகுறா? அதுதான் மெடிக்கல் மிராக்கிள்!” என்றாள் ஒரு புன்னகையுடன்.

அவனும் புன்னகைத்தான். “மேனகாவைப் பார்த்தால்தான் அப்படித் தோன்றும்; ஆனாலும் நல்ல பொண்ணு. வேலையில் ரொம்ப கெட்டி. என்ன, கொஞ்சம் பேசுறதுதான் ஒருமாதிரி பேசுவா. அதுக்குத்தான் வந்த புதுசுல ரொம்ப அவன்கிட்ட திட்டு வாங்குவா.” அவனும் சொல்லிச் சொல்லிப் பார்த்தான். அப்புறம் அவள் இயல்பே அப்படித்தான் என்று இப்போது விட்டுட்டான்.வேலை செய்லைனா “ இவனை சமாளிக்க முடியுமா?” என்றான். அவளும் ஆம் என்பது போல் அவன் பேசியதற்க்கு ஆமோதித்தாள்.

அடுத்த நாள் மித்ரனும் மதுமதியும் புதிய ப்ராஜக்ட் விஷயமாகப் பேசிக்கொண்டிருந்தார்கள்.
“மது, இங்க பாரு. இந்த டிசைன்ல கொஞ்சம் சேஞ்சஸ் இருக்கு. வசீகிட்ட இதை மாற்றலாமா, இல்ல இப்படியே இருக்கணும்னு கேட்டுவா. நான் இந்த கொட்டேஷன்ல கொஞ்சம் கரெக்ஷன் இருக்கு; அதை சரி செய்யறேன்,” என்றான்.

மதுமதி வசீகரனைத் தேடி சென்றாள்.
“இவர் போய் அவர்கிட்ட கேக்க வேண்டியதுதானே? என்னையே அனுப்புறது!” என்று புலம்பியபடி சென்றாள்.

அவனது அறை வாசலில் நின்றவள் கதவைத் தட்டப் போகும் போது, கண்ணாடி கதவுக்குப் பின்னால் இருந்தவர்களைப் பார்த்து அப்படியே நின்றாள்.

“சார், இங்க பாருங்க,” என்று செய்தித்தாளில் வந்த ஒரு விளம்பரத்தை மேனகா வசீகரனிடம் காட்டிக் கொண்டிருந்தாள். அதை கொண்டு தங்கள் நிறுவனத்தின் விளம்பரத்தை எவ்வாறு வடிவமைப்பது என்று இருவரும் அருகருகே, தோள்கள் உரசும்விதமாக நின்றபடி பேசிக்கொண்டிருந்தனர். அந்த விளம்பரத்தைப் பார்த்து மேனகா ஏதோ சொல்ல, அவளின் கேலியில் வசீகரன் புன்னகைத்தபடி பதில் சொல்ல, அவர்களின் உரையாடல் நீண்டு கொண்டே சென்றது.

இதனை கண்ணாடி கதவுக்கு பின்னால் நின்றபடி பார்த்துக் கொண்டிருந்த மதுமதிக்கு வயிறு காந்தியது. சிறிது நேரம் கழித்து அவளைத் தேடி வந்த மித்ரனும் அந்தக் காட்சியைப் பார்த்தான்.

“ஏன் மது, இங்க நிக்கிற? உள்ளே போ,” என்றவன், “ சீக்கிரம் நீ போய் சார் கிட்ட கேட்டு வா. அப்போதான் நமக்கு வேலை முடியும்,நான் இப்ப வந்தறேன் ” என்று சொல்லிவிட்டு வாஷ் ரூம் நோக்கி சென்றான்.

அவள் கதவைத் தட்டும் முன்பே அவர்களை கவனித்த வசீகரன் வெளியே வந்தான்.
“சொல்லுங்க மது, எதுக்கு இங்க நிற்கிறீங்க? உள்ளே வந்திருக்கலாமே,” என்றவன், அவள் தயங்கியபடி நிற்க, கேள்வியாய் பார்த்தான்.

அவளது பார்வை மேனகா மேல் படிந்து மீண்டது. புரிந்தவனாய், “நீங்க வாங்க,” என்று மதுமதியை அழைத்தான். மேனகா வெளியேறினாள். வெளியேறும் அவளை மதுவின் பார்வை கோபமாகத் தொடர்வதை கவனித்தவன், புருவம் சுருக்கி, “சொல்லுங்க மது,” என்றான்.

“அது… நீங்க ரொம்ப முக்கியமா உங்க பி.ஏ. கூட பிஸியா கடலை …” என்று வந்த வார்த்தையை விழுங்கியவள், “பேசிட்டு இருந்தீங்க,” என்றாள். அவள் குரலில் எதையும் காட்டாமல் இருக்க முயன்றாலும், அவன் கவனித்துவிட்டான்.

அவளது பொறாமையில் அவன் உதட்டில் புன்னகை அரும்பியது. அதை அடக்கிக் கொண்டு,நான் அதை கேக்கல மது ஏதோ சந்தேகம்ன்னு வந்திருக்கீங்க, அது என்னனு கேட்டேன் என்றான் அவன். அவளும் சேஞ்ச் பண்ண வேண்டிய இடத்தை காட்ட , அவன் அவளுக்கு அதனை எவ்வாறு மாற்றுவது என்று விளக்கினான்.

சரி இப்ப சொல்லுங்க ஏன் உள்ள வராம வெளியவே நின்றீர்கள் என்றான்.

நீங்க பிஸியா பேசிட்டு இருந்தீங்க அதான் வெயிட் பண்ணேன் என்றாள்.

“அதனால் என்ன? இது முக்கியமான ப்ராஜக்ட். இப்படி அங்கும் இங்கும் வேடிக்கை பார்க்கவா உங்களை அப்பாயிண்ட்மென்ட் பண்ணிருக்கேன்?” என்றான். குரலில் கோபம் இருந்தாலும், விழிகள் சிரித்தன.

“ஓஹோ…” என்றாள் நக்கலாக. அதிகம் பேசுகிறோம் என்று தெரிந்தாலும், அவனை சும்மா விட மனமில்லை. “இவ்வளவு வேலை இருக்கும் போது உங்களுக்கு மட்டும் உங்க பி.ஏ. கூட நேரம் செலவிட நேரம் இருக்கு பாருங்க,” என்றாள்.

புரியாமல் பார்த்தவன், “வாட்?” என்றான்.

வந்துட்டான், வாத்து , கோழின்னு சொல்லிட்டு என்று நினைத்தவள்,
“அதுதான் சார்… இங்க இவ்வளவு வேலை எங்களுக்கு சொல்லிட்டு, அதுக்கு சந்தேகம் கேக்க வந்தா கூட நீங்க ப்ரீயா இல்ல. ஆள் ரொம்ப பிஸி — உங்க பி.ஏ. கூட!” என்றாள் குரலில் காட்டமாக.

“உனக்கு ஏன் இவ்வளவு கோபம் வருது, மது? இந்த கோபம் வேலையினாலா? இல்ல இந்த கோபத்துக்கு பின்னாடி வேற ஏதும் காரணம் இருக்கா?” என்று கேட்டவன் விழிகளில் கேலி மிளிர்ந்தது.

“ஒரு காரணமும் இல்லை,” என்றாள் வெடுக்கென.

“அப்படியா?” என்றவன் அவளை நெருங்க, அவள் ஒவ்வொரு அடியாக பின்னோக்கி நகர்ந்தாள். அவன் முன்னோக்கி வர வர அப்படியே நடந்தவள் சுவரில் முட்டி நின்றாள். இனி செல்ல இடமில்லாமல் தடுமாறியவளை, அவன் இருபுறமும் கைகளை வைத்து அணைக்கட்டினான்.

“சொல்லு மது, எதுக்கு உனக்கு மேனகா மேல இவ்வளவு கோபம்?” என்று அவளை சரியாக கணித்து கேட்டான்.

“எனக்கு ஒன்னும் அவங்க மேல கோபம் இல்லை,” என்றாள்.

“அப்போ என்மீதா?”

அவனது கேள்வியில் அவள் திணறினாள்.
“எனக்கு… எனக்கு யார்மேலும் கோபம் இல்லை,” என்றவளிடம் ,

ஆஹான் .. என்றவன்

இங்கே யாருக்கோ வயிறு எரிந்து கருகிய வாசனை வருது. உனக்கு அப்படி ஏதும் தெரியுதா? என்றவனை திரும்பி முறைத்தவள்,
“இல்லையே! நீங்க கடலை வறுத்து வந்த கருகிய வாசனைதான் எனக்கு வருது,” என்றாள் கோபமாக.

“அப்படியா?” என்று புருவம் சுருக்கிப் பார்த்தான்.

“எவ்வளவு கோபம் உனக்கு! இன்னும் என்மேல் இருக்கிற காதல் உனக்கு அப்படியேதானே இருக்கு? அதான் இந்த கோபம் எல்லாம், இல்லையா மது?” என்றவனிடம்,

“ரொம்ப கனவு காணாதீங்க. அப்படியெல்லாம் எதுவும் நமக்குள் இல்லை. இதை திரும்பத் திரும்ப என்னைச் சொல்ல வைக்காதீங்க,” என்றாள்.

“உனக்கு ஒன்றும் இல்லையென்றால் உள்ளே வர வேண்டியதுதானே?” என்றவனை பார்த்தவள்,
“நீங்க பிஸியாக பேசிட்டு இருந்தீங்க, அதான் தொந்தரவு செய்யலை,” என்றாள் பார்வையை அவனிடமிருந்து வேறுபுறம் திருப்பி.

அவளது நாடியைப் பிடித்து அவன்புறம் திருப்பியவன்,
“இங்கே பாரு, என்னை பாரு, என்னை பொருத்தவரைக்கும் நமக்குள்ள எதுவும் மாறல.மாறவும் மாறாது. புரியுதா? என்னை மன்னிக்கவே மாட்டையா, மது?”என்றவன் குரல் அவளிடம் மண்டியிட்டது .

அவளது கையை எடுத்து தனது இடப்பக்க மார்பில் வைத்தவன்,
“என் மூச்சு இருக்கும் வரைக்கும் ,இங்கே உன் பெயரைச் சொல்லி மட்டும் தான் துடிக்கும். இங்கே வேற யாருக்கும் இப்பவும் எப்பவும் இடமில்லை,” என்றவன், அவளது கையை எடுத்து இதழ்களில் பொருத்திக்கொண்டான்.

அவளது விரல்களில் முத்தமிட்டவனை தன் பலம் கொண்ட மட்டும் தள்ளிவிட்டவள் அங்கிருந்து வேகமாக வெளியேறினாள்.
 
Last edited by a moderator:

Author: நிதனிபிரபு
Article Title: ஒரு பார்வையிலே என்னை வீழத்திவிட்டாய் - 24
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
  • Love
Reactions: Magizh kutty