பார்வை 32
தடுமாறும் என்
மனசு கேக்குது எப்போ
உன்ன சேர்வது மானே
பித்தானாதன் ஆகுறேன்
நானே...
அடுத்த நாள் வசீகரன் மதுமதிக்கு அழைத்திருந்தான்.
“மது, இன்று வெளியில எங்காவது போகலாமா?” என்றான்.
“இல்லை, இன்று சித்தார்த்துடன் வெளியே போகணும்,” என்றாள் அவள்.
இப்போது அவளிடம் முன்னர் இருந்த தயக்கம் எதுவும் இல்லை. “நீ என்ன நினைத்துக்கொண்டாலும் நினைத்துக்கொள்; எங்களது நட்பு இப்படித்தான்” என்ற தோரணையில் இருந்தாள். அவள் அவனை சீண்டுவது அவனுக்கும் புரிந்தது. அவள் வேண்டுமென்றே சொல்கிறாள். “கோபப்படக்கூடாது” என்று மனதுக்குள் சொல்லிக்கொண்டவன், நிதானமாகவே அவளை கையாண்டான்.
வசீகரன் எதுவும் சொல்லாமல், “சரி, அப்போ நாளைக்கு ஓகேவா? உன்னுடன் கொஞ்சம் முக்கியமாக பேசணும்,” என்றான்.
“நாளைக்கு நான் கருணை இல்லம் போகணும்… போயி ரொம்ப நாளாச்சு.அதனால் நாளைக்கு கண்டிப்பாக அங்கே போகணும்,” என்றாள் மொட்டையாக.
அவள் அவனை வேண்டுமென்றே சீண்ட பேசுகிறாள், என்று உணர்ந்தவனுக்கு உள்ளுக்குள் சற்று சினம் வந்தாலும், “சரி, நாளைக்கு அங்கேயே சந்திப்போம்,” என்றவன், அவள் மேலும் பேசுவதற்குள் அழைப்பை நிறுத்திவிட்டான்.
அவனை கடுப்பாக்கிவிட்டோம் என்பது அவளுக்கு புரிந்தது; அதில் உள்ளுக்குள் கொஞ்சம் திருப்தியாகவும் இருந்தது. “ரொம்ப ஓவரா செய்கிறோமோ?” என்றும் அவளுக்கு உள்ளுக்குள் குறுகுறுப்பு தோன்றியது.
அவனுடனான மோதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கச் சொன்னது அவளது காதல் கொண்ட மனம். ஆனால் மற்றொரு மனம் அவனை சீண்டிப் பார்க்கச் சொன்னது. அவள் வேண்டுமென்று செய்வதில்லை. அவனின் மீதான அவளது காதல் கடலளவு என்றாலும், அவன் கூறிய வார்த்தைகளால் ஏற்பட்ட கோபம் சில நேரங்களில் தன்னிச்சையாக வெளிப்பட்டுவிடும்; அதைத் தவிர்க்க நினைத்தாலும் முடியவில்லை.
அன்று ஞாயிற்றுக்கிழமை. வசீகரன் கருணை இல்ல வளாகத்தில் தனது காரை நிறுத்திவிட்டு, நிர்வாக அலுவலர் அறையை நோக்கிச் சென்றான். அவருடன் சிறிது நேரம் பேசிவிட்டு, தனது திருமணத்தைப் பற்றியும் கூறினான். பின்னர் ஆர்த்தியைப் பார்க்கப் போவதாகச் சொல்லி குழந்தையிடம் சென்றான்.
மதுமதி அங்கு வந்தபோது, ஆர்த்தி வசீகரனின் மடியில் பாந்தமாக அமர்ந்திருந்தாள். தூரத்திலிருந்து அவர்களைப் பார்த்தவளுக்கு, அவர்களின் உலகத்தில் தானும் அடைக்கலமாக வேண்டும் என்ற உணர்வு எழுவதை அவளால் தவிர்க்க முடியவில்லை. .
அவர்களை நோக்கி மெல்ல எட்டுகளை வைத்தவள் , அருகில் சென்றதும் குரலைச் செருமினாள். ஆர்த்தியுடன் கனிவாக பேசிக்கொண்டிருந்தவன், அவளைப் பார்த்து, “வா மது,” என்றான்.
அவன் சற்று இடம் விட்டு அமர, அவளும் அவன் அருகில் அமர்ந்தாள். அவளைப் பார்த்ததும், “ஆன்தி… ஆன்தி…” என்று ஆர்த்தி துள்ளி அவளிடம் வந்தாள்.
“பார்த்து பார்த்து…” என்று அவளைத் தூக்கி, ஒரு சுற்று சுற்றி மடியில் அமர்த்திக்கொண்டாள்.
“ஆன்தி… சாக்கி…” என்று அவள் கழுத்தை கட்டிக்கொண்டு கேட்டவுடன், உடனே வசீகரன், “ஆன்தி இல்லை டா… அம்மா சொல்லணும்,” என்றான், மதுமதியைப் பார்த்துக்கொண்டே.
மதுமதிக்கு இந்த விஷயம் முன்னமே தெரிந்திருந்தாலும், சற்று தடுமாறினாள்.
“என்ன பார்க்கிற மது? இதைப் பற்றி பேசதான் உன்னை அழைத்தேன். இது நான் எப்போதோ முடிவு செய்தது தான். ஆனா உனக்கு விருப்பமா என்று கேட்கணும் இல்ல?” என்றான்.
அவள் அவனை முறைத்தாள்.
“என்னிடம் கேட்கணும்னு நினைக்கிறவர் தான் குழந்தைக்கிட்ட ‘அம்மா’ன்னு அறிமுகப்படுத்துவாங்களா?” என்றாள்.
“உன்னைப் பற்றி எனக்கு தெரியும்,” என்று ஒரு பார்வை பார்த்தவன்,
“நீ மறுக்க மாட்டேன்னு எனக்கு நம்பிக்கை. அதான் இப்படிச் சட்டென சொல்லிட்டேன் ,” என்றான்.
இவர்கள் இருவரையும் மாறிமாறிப் பார்த்த குழந்தை, “அப்பு…” என்று வசீகரனை அழைத்து, மற்ற குழந்தைகள் விளையாடும் இடத்தைக் காட்டியது.
“பாப்பாவுக்கு அங்க போகணுமா?” என்று அவன் கேட்டதும், அவளின் பார்பி டால் தலையை அசைத்தாள். அவளைத் தூக்கிக்கொண்டு போய் அங்கே விட்டான்.
விட்டதும் துள்ளி கொண்டு ஓடியவளை “செல்லம், பார்த்து விளையாடணும்,” என்று குழந்தையிடம் சொல்லியவன்,அங்கிருந்த ஆயாவிடம் பார்த்துக்கொள்ள சொல்லிவிட்டு வந்தான்.
மீண்டும் மதுமதியின் அருகில் வந்து அமர்ந்தவன், அவளைப் பார்த்தான். அவள் அவனை விழியகலாமல் பார்த்துக்கொண்டிருந்தாள்.
“என்ன?” என்று அவன் புருவம் உயர்த்தினான்.
“இதுவரை இவ்வளவு பொறுமையாக உங்களை நான் பார்த்ததே இல்லை,” என்றாள்.
வசீகரன் சிரித்தான். “ஒரு பிள்ளைக்கு அப்பா ஆனா, எல்லாமே தானாக வந்திடும்,” என்றான்.
அவனின் சிரிப்பில் ஒரு கணம் தன்னை தொலைத்தாள் ,அவனின் வார்த்தைகள் அவளுக்கு அவனை இன்னும் பிடிக்க செய்தது. அவளது கண்களும் அதையே வெளிப்படுத்தின.
“என்ன பார்வை?” என்றவன், “இப்படியெல்லாம் பார்த்தா கல்யாணம் வரைக்கும் எனக்கு தாங்காது மா…” என்றான் கள்ளச் சிரிப்புடன்.
உடனே அவள் அவனை முறைக்க,
“இம்… இப்படியே இரு. இதுதான் உனக்கும் நல்லது, எனக்கும் நல்லது,” என்றான்.
அவனை எதை கொண்டு அடிக்கலாம் என்று அவளுக்குள் தோன்றியது.
“சரி… சரி…” என்றான், கண்களில் புன்னகை மின்ன.
“இந்த குழந்தை யாருன்னு தெரியும்ல?” என்று அவன் கேட்க, அவள் ஆமோதிப்பாகத் தலையசைத்தாள்.
“அத்தை சொன்னாங்க,” என்றாள்.
அவளுக்கு மிகவும் ஆதங்கமாக இருந்தது—எப்படி தாயிடமிருந்து பிள்ளையைப் பிரித்தார்கள் என்று.
“வசு அக்கா இப்ப எப்படி இருக்காங்க?” என்றாள்.
“இன்னும் டிப்ரஷன் டேப்லட்ஸ் எடுத்துக்கிட்டே தான் இருக்கா. அவளுக்குப் பொறுத்தவரைக்கும் அவனும் இல்லை, அவள் குழந்தையும் இல்லைன்னு ஒரு நிலையில் இருக்கா. முதலில் அங்கிள் மேல எனக்கு ரொம்ப கோபம் இருந்துச்சு. ஆனா இந்த குழந்தை அவள்கிட்ட இருந்தா, அவள் வாழ்க்கையில் வேற எதையும் யோசிக்க மாட்டாள்.
ஆனா அதுக்காக என்கிட்ட கூட சொல்லாம இப்படி ஆசிரமத்தில் விட்டுருப்பார்னு நான் நினைக்கல. விக்ரம் எனக்கு எவ்வளவு முக்கியம்—அது தெரிஞ்சும் இப்படி பண்ணிட்டார்னு தான் எனக்கு கோபம்.
வசு மேல அவருக்கு இருக்கிற அக்கறை சரிதான்… அவளும் வேற யோசிக்க மாட்டா. ஏன்னா விக்ரம்னா அவளுக்கு அவ்வளவு உயிர் … அவனுக்கும் அவள் அப்படிதான். எப்படி அவள் இதிலிருந்து மீண்டு வரப் போறாள்னு எனக்கு தெரியல…
வசு என் சைல்ட்ஹூட் ஃப்ரெண்ட்… எனக்கு அவளோட வாழ்க்கையும் முக்கியம், மது…” என்றான்.
“உனக்கு தெரியுமா மது… அவங்க ரெண்டு பேரும் அவ்வளவு க்ளோஸ். அவர்களைப் பார்க்கும் போதெல்லாம் எனக்கு ரொம்ப கில்டியா ஃபீல் ஆகும். உன்னோட நான் இழந்த நாட்கள் என்னன்னு எனக்கு புரியவச்ச காலங்கள் அவை…” என்றவன் ஒரு நெடிய மூச்சை விட்டான் .
“நான் உன்கிட்ட அப்படி பேசிருக்க கூடாதுன்னு எனக்கு தோணிக்கிட்டே இருக்கும்.…”
அவள் அவனையேப் பார்த்தாள்.
“என்ன?” என்றான் அவன்.
“ஒன்னும் இல்லை…” என்று தலையசைத்தாள்.
ஆனால் அவள் கண்களில் பிரதிபலித்த வலி—அவனுடைய மனத்தையும் பாரமாக்கியது.
சிறிது நேரம் அமைதியாக இருந்தவன்,
“உனக்கு விக்ரம்னு ஞாபகம் இருக்கா, மது?” என்று கேட்டான்.
“ம்ம்… தெரியும். உங்க கூட MBA படிச்சவர் தானே?” என்றாள்.
“ம்ம்…” என்றவன்,
“ஆனா எனக்கு அவன அவனோட 13 வயசிலிருந்து தெரியும் மது.
பிறந்ததும் அனாதையாவது ஒரு வகைனா…
நல்ல அம்மா அப்பாவோட வாழ்ந்து, திடீர்னு அவர்களை இழந்து, கூட இருந்த உறவுகளாலேயே அனாதையாக்கப்படுவது அதைவிட கொடுமை.
அதுவும் அவன் சித்தப்பா குடும்பம்—அவன் எவ்வளவு கெஞ்சினாலும் கேட்காம இங்கே விட்டுட்டு போயிருக்காங்க.
வந்த புதுசுல ரொம்ப கஷ்டப்பட்டிருக்கான். யாருடனும் பேச மாட்டான்… ஆனா நல்லா படிப்பான்.
அவனுக்கு அப்பாதான் scholarship கொடுத்தார். எங்க குடும்பமும், வசு குடும்பமும் ஆசிரமத்துக்கு அடிக்கடி வருவோம். எப்பவும் வருத்தத்தை கண்களில் சுமந்தவனைப் பார்த்தாலே எனக்கு அவன் கூட பேசணும்ன்னு இருக்கும்.
அவனுடன் பேச நான் நிறைய முயற்சி செய்திருக்கேன்… ஆனா கொஞ்சமும் மசிய மாட்டான்…” என்றவன், அந்த நினைவில் மெதுவாக சிரித்தான்.
“ஆனா செம்ம டாலெண்ட் … எல்லாமே மெரிட்-ல தான் படிச்சான். அப்பா BE படிக்க வைக்கிறேன் சொன்னதுக்கும் வேண்டாம் சொல்லிட்டு, ஒரு நார்மல் டிகிரி தான் படிச்சான்.
பிறகு அப்பாவோட கட்டாயத்தில் தான் என்னோட MBA-க்கு சேர்ந்தான். அப்போ வரைக்கும் கூட என்னுடன் அதிகமாக பேச மாட்டான்.
அப்பாவுக்கு அவனோட திறமை பார்த்து ரொம்ப ஆச்சரியம். அவனை என்னோட கூடவே வைக்கணும் என்பதுதான் அவருடைய ஆசை.
MBA ஆரம்பத்தில்கூட அவன் குறைவா தான் பேசுவான்… முன்னரே தெரியும் என்று கூட காட்ட மாட்டான். எனக்கே ஆச்சரியமாக இருக்கும்—இப்படி எப்படி இருக்க முடியும் என்று.
பிறகு அந்த காலேஜ் கலவரம் ஞாபகம் இருக்கா?” என்றான்.
அதை அவள் எப்படி மறக்க முடியும் … அன்று அவள் துடித்து துடிப்பை அவளால் மறக்க முடியுமா என்ன?..
அமைதியாக “ஆம்…” என்றாள்.
“அதுக்குப் பிறகுதான் அவனை நான் விடவே இல்லை. அவன் ஒதுங்கிப் போகும்போது, நான் அவனை விடலை… கொஞ்சம் கொஞ்சமாக அவன் உலகத்திலிருந்து வெளியே வரவச்சேன்.
அதுக்குப் பிறகு அவனுக்கு நான் உயிர் மாதிரி… எனக்காக எதுவும் செய்யும் அளவுக்கு. எப்படி இப்படி மாறினான்னு இப்பவும் எனக்கு ஆச்சரியம் தான்…” என்றான், கண்களில் அவ்வளவு மலர்ச்சி.
“அப்புறம் வசுந்தராவும் எங்களோட தான் MBA படிச்சா . நாங்க எல்லாரும் ஒரே வகுப்பு . எப்படி இவர்களுக்கு காதல் வந்துச்சுன்னு தெரியல… ஆனா விக்ரமுக்கு அவளை சின்ன வயசிலிருந்தே பிடித்திருக்கும் போல.
நாங்க ஆசிரமத்துக்கு போகும் போதெல்லாம் வசுவும் வருவாள். நாங்க மூணு பேரும் விளையாடுவோம். அவன் மட்டும் சேர மாட்டான்… ஆனா ஒரு வயசுக்குப் பிறகு வசுவோட மட்டும் பேச முயற்சி பண்ணுவான்.
அப்பவே அவன் மனசுல அவள் இருந்திருப்பா போல…”
“ஒரு நாள் வந்து திடீர்னு காதலிக்கறதா சொன்னாங்க… எனக்கு ரொம்ப சர்ப்ரைஸ்சா இருந்தது. அங்கிள் ஒத்துக்கல. ஆனா அவரை\யும் சமாளித்து சமாளிச்சு கல்யாணம் பண்ணி வைத்தோம்.
அப்போ விக்ரமும் எங்க ஆபீஸ்ல தான் வேலை பார்த்தான். அப்பா எப்பவும் காசு பணத்துக்கு ரொம்ப முக்கியதுவம் தரமாட்டார். ஆன அங்கிள் கொஞ்சம் ஸ்டேட்ஸ் பார்ப்பார். அப்பா அவனுக்கு ரொம்ப சப்போர்ட் பண்ணதால அங்கிளால எதுவும் செய்ய முடியல.”.
சிறிது நேரம் அமைதியாக இருந்தவன் தொடர்ந்தான்—
“அவங்களுடையது சின்ன அழகான குருவிக்கூடு மாதிரி வாழ்க்கை மது… அது இப்படி உடைந்து போயிடும்னு யாரும் நினைக்கல.
வசு ப்ரக்னண்டா இருந்தப்போ அவன் எவ்வளவு சந்தோஷமா இருந்தான் தெரியுமா…
‘என் குழந்தையை நான் நல்லா வளர்ப்பேன்… அவளுக்கு நான் நல்ல அப்பாவா இருப்பேன்…’ன்னு சொல்லுவான்.
பெண் குழந்தைன்னா அவனுக்கு ரொம்ப ஆசை…”அவங்களுக்கு கூடவே இருந்து பார்த்து பார்த்து செய்யணும் எவ்வளவு ஆசை . ஆனா என்றவனால் அதற்க்குமேல் முடியவில்லை
அவன் குரல் தழுதழுக்க கண்களில் நிறைந்து விட்ட நீரை சுண்டிவிட்டவன்”.. .
“அவனைப்போலவே அவன் குழந்தையும்… அதான் என்னால தாங்க முடியல.
இன்னும் அவன் இல்லன்னு என்னால நம்பவே முடியல… இப்போ கூட அவன் இருக்கிற மாதிரி தான் எனக்கு தோணும்.
அவனோட உடலை அப்படி பார்த்தப்போ…”
அவன் குரல் முற்றிலும் உடைந்தது.
“அவன் நினைத்ததைக் காட்டிலும் ஒரு நல்ல அப்பாவா அவன் குழந்தையை நான் வளர்க்கணும்… அது தான் என் கனவு, மது.
அதுக்கு நீ எப்பவும் எனக்கு துணையா இருப்பியா?” என்றான்.
அவள்—
கண்ணீருடன் ஆமோதிப்பாக தலையசைத்தாள்.