• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

ஒரு பார்வையிலே என்னை வீழத்திவிட்டாய் - 4

நிதனிபிரபு

Administrator
Staff member
பார்வை 4

ஒரு பார்வையிலே

என்னை வீழ்த்திவிட்டாய் அடியே

சிறு புன்னகையால்

விலை பேசிவிட்டாய் என்னையே..

சற்றுநேரத்தில் விசில் ஒலிக்க, போட்டி தொடங்கியது. மைதானம் முழுவதும் பல்வேறு கோஷங்கள் எதிரொலித்தன. அவரவர் கல்லூரிக்கு ஆதரவாக எழுந்த குரல்கள், வானத்தைப் பிளந்தபடி ஒலித்தன. வசீகரன் அந்தக் கல்லூரியின் மாணவர் தலைவர் என்பதால், அவனை ஆதரிக்கும் குரல்கள் மற்ற எல்லாவற்றையும் மிஞ்சிப் பெருக்கெடுத்தன.

சித்துவின் நண்பி ஒருத்தி, “I Love Vasi, Will You Marry Me” என்ற பதாகையை உயர்த்திப் பிடித்தபடி அமர்ந்திருந்தாள்..

மது மதி தனது கல்லூரி அணிக்கு ஆதரவாக முழுக் குரலில் கத்திக் கொண்டிருந்தாள். அச்சமயம் அவளருகில் அமர்ந்திருந்த பதாகையை தாங்கியிருந்த சித்துவின் நண்பிக்கு இயற்கை அழைப்பு வந்தது.
“மது, இதைப் பிடி… இப்போ வந்து விடுகிறேன்,” என்று சொல்லி, தன் கையில் இருந்த பதாகையை மதுவிடம் தந்துவிட்டு அவள் விரைவாக அங்கிருந்து சென்றாள். மது அது என்னவென்று கூட பார்க்காமல், இயல்பாகவே அதைத் தன் கைகளில் தாங்கிக் கொண்டாள்.

அவனின் அசாத்தியமான ஆட்டத்தை அவளும் வியப்புடன் பார்த்துக்கொண்டிருந்தாள் .

அதே நேரத்தில், மித்ரன் வீசிய பந்தை பாய்ந்து பிடித்த வசீகரன், மைதானத்தின் நடுவே மின்னல் போல சுழன்றான். பந்தை தரையில் அடித்தபடி எதிரணி வீரர்களை ஏமாற்றி, கண் இமைக்கும் நேரத்தில் பந்தை கூடைப்பந்துக் கூடையில் சர்வ சாதாரணமாகச் போட்டான் . அதுவே அந்த ஆட்டத்தின் கடைசி கோல்.

வெற்றிகான விசில் ஒலிக்க, வசீகரன் அணி வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டது. மைதானம் முழுவதும் மாணவ, மாணவியர்களின் ஆரவாரம் அலைபோல் எழுந்தது. கைத்தட்டல்களும், குரல்களும் ஒன்றாக கலந்த அந்தக் கணம்,

அதே நேரத்தில் அவள் கண்கள் அவனை சந்தித்தன.

வசீகரனின் அணியினர் அவனை தோளில் தூக்கி, கொண்டாடினர். அனைவரையும் பார்த்து பறக்கும் முத்தங்களை பறக்க விட்டபடி மைதானத்தை வலம்வந்தான் அருகில் இருந்த மித்ரன் வசீகரனிடம்:
“டேய், மச்சி! அங்க பாரு, உன் ஸ்வீட் இடியட் வில் யு மேரி மீனு போர்டு வச்சிருக்கா!”

அப்போது அங்கே பார்த்தவன், கண்களில் குறும்புடன், அவளை பார்த்து ஒரு பறக்கும் முத்தத்தை பறக்கவிட்டான். அந்த நேரத்தில் யதேச்சையாக வசீகரனை பார்த்த மதுமதி தூக்கி வாரிப்போட்டது. அவளை நோக்கி பதாகையில் உள்ளதற்க்கு சரி என்று சைகை செய்ய, அவள் அதிர்ந்து விழித்தபடி பதாகையை நோக்கினாள்; அவளது விழிகள் பெரிதாக விரிந்தது.

அதை பார்த்து வசீகரன் அச்சோ, “கண்ணாலையே கவுதுடுவா போல! என்னடி என்ன பண்ணற”, “ என்று நினைத்து, மனதை அடக்கியபடி புன்னகைத்தான். அவள் அவனை பார்க்கும் நொடிகளெல்லாம் அவன் மனதை மயிலிறகு கொண்டு வருடவதை போல் உணர்ந்தான். ஏன் இப்படி ஆணோம் பார்த்து ஒரு மணி நேரம் கூட இல்லை . ஆனால் அவனின் மனம் அவன் சொல் பேச்சை கேக்காமல் அடம்பிடித்து அவனிடமே முரண்டியது.

மதுமதி பதாகையை கீழே போட்டவள் அங்கிருந்து அவன் கண்களில் படாமல் ஒளிந்து நகர்ந்து சென்றாள். அவளது செய்கையால், இருபுறமும் தலை ஆட்டியபடி புன்னகைத்தவன், இதழ்கள் முணுமுணுத்து: “மை லிட்டில் லவ்” என்று கூறினான்.

வசீகரனின் காதருகில் கிசு கிசுத்த, மித்ரன்:
“அப்பிடியாடா!” என்றான்.
வசீகரன் கண்களை சிமிட்டியவாறு, “சும்மா டா,” என்றான்.

மதுமதிக்கு இன்னும் பதட்டம் குறையவில்லை. என்ன வென்று பாராமல், அதை கையில் ஏந்தியதற்க்கு தன்னையே கடிந்து கொண்டாள். சற்று ஆறுவாசம் அடைந்தவள் சித்துவிடம் சென்றாள்; அவன்:
“நீ எங்க டீ திடீர்னு மயமாகிட்ட?” என்றான்.
“இங்க தான்,” என்றவளை அங்கே மித்ரனுடன் வந்த வசீகரன் கடைக்கண்களால் பார்த்தபடி செல்ல, அவளுக்கு மூச்சடைத்தது.

மித்ரன், வசீகரனின் காதில்:
“அல்ரெடி ஆள் இருக்கும் போல!” என்றான்.

அவனை திரும்பி பார்த்த வசீகரனின் விழிகளில் என்ன உணர்வு என்று கண்டறிய முடியாத வெற்றிப் பார்வை வீசினான். அந்நேரம், மதுமதி சித்துவிடம் சொல்லிவிட்டு நண்பர்களுடன் கிளம்பினாள்.

. அடுத்த நாள் கல்சுரல்ஸ் நிகழ்ச்சி நடனம் மற்றும் பாடல்கள் கொண்ட விழா களைகட்டியது. மதுமதியின் கல்லூரியின் சார்பாக ஒரு இசை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் முதன்மை பாடகியாக மதுமதி இருந்தாள். அன்றும் அவள் சிவப்பு நிற மென்பட்டில் தேவதையாகத் தெரிந்தாள்.

கீதா, மதுமதியிடம்:
“நீ இப்படி வந்தா, ஒருதனும் எங்களை பார்க்கமாட்டான்,” என்றாள்.
அருகில் இருந்த சந்தியாவிடம் கண்ணடித்தபடி:
“ஏன்? உனக்கு என்னடி குறைச்சல்? நீயும் சநதுவும் நல்லாதான் இருக்கீங்க!” என்றாள்.

கீதா சற்று பொறாமை கலந்த குரலில்:
“நாங்க நல்லாதான் இருக்கோம். ஆனா நீ ரொம்ப நல்ல இருக்கியே, அப்புறம் என்ன செய்ய?” என்றாள்.

சந்தியா, புன்னகைத்தபடி:
“உன் பொறாமை வெளிப்படையவே வழியுது, துடச்சுக்கோ!” என்று கைக்குட்டையை நீட்டினாள்.

கீதா மெலிதாக முறைக்க
“மது விடுடி,” என்றாள்.
“பின்ன என்னடி , நேற்று வெளிப்படையவே, இவ அத்தை மகனை சைட் அடிச்சேன். அவன் என்னை கண்டுக்கவே மாட்டேகிறான். இவக்கூடவே சுத்துறான். அப்புறம் இங்க ஒரு வளந்தவன், அதான் பேஸ்கட் பால் சாம்பியன். அவனும் இரண்டு நாளா இவளையே உத்து உத்து பார்க்கிறான். கடுப்பாகுது.”“இல்ல,” என்றாள்.

சட்டென்று சிரித்த மதுமதி:
“இது தான் உன் பிரச்சனையா, சித்து? கிட்ட சொல்லி. உன்ன ஒரு நாள் டேட்டிங் கூட்டீட்டு போக சொல்லக்கிறேன்,” என்றாள், ஒற்றை கண்ணை சிமிட்டி.

கீதா:“உண்மையா?” என்றாள்.
மதுமதி இதழ் விரிய புன்னகைத்தவள் கைகூட்டையை நீட்ட
கீதா புரியாமல் பார்க்க

“ வழியுது, தொடச்சுக்க!” என்றாள்.

மது அவளை முறைத்தாள் .

சந்தியா மதுமதியிடம்:
“அது யாருடி அந்த வளந்தவன்?” என்றாள்.
மதுமதி சற்று தடுமாறியவள்:
“தெரியல டீ,” என்றாள்.

சற்று நேரத்தில் பாடல் கச்சேரி துவங்கியது. ஒரு மணிநேரம் நடந்த பாடல் கச்சேரியில், மதுமதி தனியாக மற்றும் டூயட் என்று இரண்டு பாடல்கள் பாடினாள்.

கீழே வசீகரன் அருகில் நின்று கொண்டிருந்த மித்ரன்:
“உன் ஆள் நல்லா தான் பாட்டு பாடுது, மச்சி,” என்றான்.
அவனை பார்த்து முறைத்த வசீகரன்:
“சும்மா இருக்க மாட்டியாட!” என்றான் கோவமாக.

“எதுக்கு இப்ப கோவப்படுற?” என்ற மித்ரன்.
அவன் அனல் பார்வையில் வாயை மூடிக்கொண்டான்.

கடைசியாக மதுமதி பாடல் முடிக்க, “இது நேயர் விருப்பம்” என்று குழுவினரால் அனவுன்ஸ் செய்யப்பட்டது. உடனே கீழே இருந்தவர்கள் பல பாடல்களை முன்மொழிய, இறுதியாக ஒரு பாடலை சொல்ல மதுமதியும் பாட ஆரம்பித்தாள்.

முதன் முதலில்
பார்த்தேன் காதல் வந்ததே
எனை மறந்து எந்தன்
நிழல் போகுதே
என்னில் இன்று
நானே இல்லை காதல்
போல ஏதும் இல்லை
என்னில் இன்று நானே
இல்லை காதல் போல
ஏதும் இல்லை எங்கே
எந்தன் இதயம் அன்பே
வந்து சேர்ந்ததா
முதன் முதலில்
பார்த்தேன் காதல் வந்ததே…………..
……………….நேரத்தில் நான் இல்லை
என்னில் அந்த நொடி அன்பே
என் ஜீவன் வேறெங்கு போனது
பாரடி உன்னில்
உன்னைக் கண்ட
நிமிசத்தில் உறைந்து
நின்றேன் மறுபடி ஒரு
முறை பிறந்து வந்தேன்
உன்னைக் கண்ட நிமிசத்தில்
உறைந்து நின்றேன் மறுபடி
ஒருமுறை பிறந்து வந்தேன்
என் சுவாசக்
காற்றில் எல்லாம்
உன் ஞாபகம் உன்
ஞாபகம்
முதன் முதலில்
பார்த்தேன் காதல் வந்ததே

அவள் பாடல் பாடி முடிய கரகோசம் விண்ணை பிளந்தன. அவள் பாடியதை கண்கள் மூடிஅதன் வரிகளின் வழி ரசித்த வசீகரன் கைகள் தட்டும் ஒலியில் கண்களை திறந்து பார்த்தான். அவள் அவனுக்காகவே அவன் மனம் வழியே பாடியதை போல் ஒரு பரவசம் அவனுள்ளே. அவன் மனம் அவள் பால் சாய்வதை அவனால் உணர முடிந்தது.

அவள் அனைவருக்கும் நன்றி தெரிவித்தவாறு விடை பெற, அவன் விழிகள் அவள் மேல் ரசனையாக படிந்தது. அவள் அவளது தோழிகளுடன் அளவளாவி கொண்டும் புன்னகைத்துக் கொண்டும் இருக்க, கீழே நின்று கொண்டிருந்த சித்து கட்டை விரலை மேல் உயர்த்தி காட்டினான். அவனுக்கு புன்னகையை மறுமொழியாக தந்தவள் யாதேர்ச்சையாக அவனுக்கு சற்று தள்ளி நின்று கொண்டிருந்த வசீரனை பார்க்க அவளையே பார்த்துக்கொண்டிருந்த அவன் புருவங்கள் ஏறி இறங்கின. இப்போது அவளுக்கு இதயம் நின்று துடித்தது, இவன் ஏன் எப்பவும் என்னையே குறுகுறுன்னு பார்க்கிறான்? , என்று ஒரு பட படப்புடன் நினைத்தவள் உடன் தலையை திருப்பிக் கொண்டாள்.

அதை பார்த்த வசீகரன் இதழில் மெல்லிய கீற்று போன்ற புன்னகை ஒன்று தோன்றி மறைந்தது, இதை அருகில் இருந்து பார்த்த மித்ரன் “என்ன மச்சி பச்சி என்ன சொல்லுது ?” என்றான், அவனை திரும்பியும் பார்க்காமல். வசீகரன் அவனை மெதுவாக பார்த்து புன்னகைக்க .
மித்ரன் உடனே “பார்வையே சரியில்ல, என்னடா அவகிட்ட விழுந்துட்டையா ?” என்றான்.
“லைட்டா”, என்றான் வசீகரன்.
பாத்துடா கூடவே ஒருத்தன் இருக்கான் “அவன் ஆளாக இருப்பானோனு எனக்கு சந்தேகம்” என்று உரைக்க .
அவனை வசீகரன் திரும்பி முறைக்க .” என்ன, மச்சி முறைக்குற விசாரிசுக்க உன் நல்லதுக்குதான்”. என்றான்.
உடனே வசீகரன் “நான் என்ன. அவள லவ்வா பண்ணறேன்? ஜஸ்ட் சைட் அடிச்சேன், மச்சி என்றான். “
இல்ல மச்சி ,” சைட்டே அடிக்காத பையன் இரெண்டு நாளா தொடர்ச்சியா சைட் அடிக்குற ‘அதான்.
அதுக்கு ,என்றான் வசீகரன்
அதுக்கு ஒண்ணும் இல்லை , நம்ம காலேஜிலேயே எவ்வளவு பொண்ணுக உன்கிட்ட ப்ரபோஸ் பண்ணாங்க அதையெல்லாம் சட்டை செயாதவன் இப்ப இப்படி என்று இழுக்க .
சான்ஸ்சே இல்ல மச்சி,” எப்பவும் லவ் எல்லாம் நமக்கு செட்டே ஆகாது புரியுதா?” என்றான் கண்களை சிமிட்டியவாறு
. உனக்கு செட் ஆகாதுனு சொல்லு, என்னையேன் உன் கூட்டதில சேத்தர என்றான் மித்ரன்
மச்சி, என்றான் வசீகரன் இழுவையாக .
இப்ப எதுக்கு இழுக்குற, “என்னை உன் கூட்டதுல சேர்த்தது தெரிஞ்சா பிரியா என்னை கொன்றுவா மச்சி அதான் என்றான்.”
வசீகரன் புன்னகைத்தவாறு சரி சரி சேர்க்கல டா என்றதும். சரி வா கேண்டீன் போகலாம் பசிக்குது என்றவாறு வசீகரனின் கையை பிடித்து இழுத்துக்கொண்டு அவன் செல்ல இவனும் அவனின் இழுப்புக்கு தக்க சென்றான்.
 
Top Bottom