பார்வை 36
மதுவின் வீட்டிலும் திருமணத்திற்கான ஆடைகள் எடுக்கக் கிளம்பினார்கள். அங்கேயும், "நான் வரமாட்டேன்" என்று மரகதவள்ளி மறுத்துவிட்டார். இறுதியில் சித்தார்த்தின் குடும்பம் அவனது காரிலும், மதுமதியின் குடும்பம் அவர்களது காரிலும் புறப்பட்டனர்.
கோவையில் பிரசித்தி பெற்ற அந்தத் திருமண ஜவுளிக் கடையின் முகப்பில் வசீகரன் குடும்பத்தினர் காத்திருக்க, பெண் வீட்டினரும் வந்து சேர்ந்தனர். இரு குடும்பத்தினரும் ஒருவரை ஒருவர் வரவேற்று உள்ளே சென்றனர். லலிதா மட்டும் இன்னும் முகத்தைத் திருப்பிக் கொண்டே நடந்தார்.
உள்ளே வந்ததும் மீனாட்சி, “வசி, நீ மதுவைக் கூப்பிட்டு அந்த முகூர்த்த புடவை செக்ஷனுக்குப் போ. நீங்க ரெண்டு பேரும் ஒருத்தருக்கொருத்தர் பிடிச்ச மாதிரி செலக்ட் பண்ணிக்கோங்க. நாங்க மத்தவங்களுக்கு இங்க பார்க்கிறோம்,” என்றார்.
“என்ன மீனு சொல்ற?” என்று குறுக்கே வந்தார் பரிமளா.
“இந்தக் காலத்துப் பிள்ளைகள் அவர்களுக்குப் பிடித்த மாதிரி செலக்ட் பண்ணிக்கட்டுமே பரிமளா . நம்ம ஏன் அதில் தலையிடணும்? வாங்க, மத்தவங்களுக்கு டிரஸ் எடுக்கலாம்,” என்றார் மீனாட்சி.
லலிதாவோ, "இங்க தான் எல்லாம் அதிசயமா நடக்குது" என்று வாய்க்குள் முனங்கிக் கொண்டார். சத்தமாகப் பேசினால் ஏதாவது பாலமுருகன் காதுக்குத் போய்விடுமோ என்ற பயத்தில் அடக்கி வாசித்தார்.
அப்போது வித்யா வருணனை அழைத்தாள். “மாமா, நம்ம ரெண்டு பேரும் போய் நமக்கு செலக்ட் பண்ணலாமா?” என்றாள் ஆசையாக.
“நான் வரலை,” என்றவனை முறைத்துவிட்டு, நித்யாவைத் தன் பக்கம் இழுத்தாள் வித்யா. ‘இவ ஒருத்தி!’ என்று நினைத்த நித்யா, அவளுடன் வேறு வழியின்றி இழுபட்டுச் சென்றாள்.
லலிதா, பரிமளா, மீனாட்சியுடன் புடவைகளைப் பார்க்கச் சென்றனர். வருண், சித்தார்த்துடன் அமர்ந்து கொண்டான். சிவனேசன், மூர்த்தி, லிங்கம் ஆகியோர் அங்கு இருந்த இருக்கைகளில் அமர்ந்து பேசத் தொடங்கினர்.
புடவை பார்த்துக் கொண்டிருந்த நித்யா, அவளது அம்மாவிடம் பிடித்தவற்றைக் காட்ட, லலிதா அவற்றை எடுத்துக் கொண்டார். வித்யா மட்டும் இன்னும் தனக்கானதைத் தேர்வு செய்யாமல் தேடிக் கொண்டிருந்தாள்.
நித்யா தன் புடவை மற்றும் லெஹங்காவைத் தேர்வு செய்துவிட்டு, மொபைலைப் பார்த்தபடி அருகில் இருந்த இருக்கையில் அமர்ந்தாள். அப்படியே சும்மா சுற்றிப் பார்த்தவளின் பார்வையில், வருணுடன் பேசிக்கொண்டிருந்த சித்தார்த் விழுந்தான். அவனும் அப்போது தற்செயலாக அவளைப் பார்த்தான். அந்த ஒரு கணத்தில் நித்யாவின் இதயம் நின்று துடித்தது போன்ற உணர்வு!
‘என்ன இந்தப் பெண் இப்படிப் பார்க்கிறாள்?’ என்று எண்ணியவன், சட்டென்று பார்வையைத் திருப்பிக் கொண்டான். ஆனால், அவள் அவனையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவளுக்கு அவனைப் பிடித்திருந்தது. இருவரும் ஒரே அலுவலகம்; அவனது அமைதியான குணம் அவளை அவன் பக்கம் ஈர்த்திருந்தது. வசீகரனைத் திருமணம் செய்யச் சம்மதித்ததே அவளது அம்மாவின் கட்டாயத்திற்காகத்தான். வசீகரனின் கோபம் அவளுக்கு எப்போதும் பயத்தைத் தரும், ஆனால் சித்தார்த்தின் அமைதியான குணம் அவளை அவனை ரசிக்க வைத்தது.
மறுபுறம், வசீகரன் மதுமதியைப் புடவை நெய்யும் பிரத்யேகப் பிரிவிற்கு அழைத்துச் சென்றான். அங்கு வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்பப் புடவைகளை வடிவமைத்துத் தருவார்கள். அங்கிருந்த கண்ணாடி அலமாரியில் சில மாதிரிகள் வைக்கப்பட்டிருந்தன.
அதில் கிளிப் பச்சை நிறத்தில், மரூன் கரையுடன், வைர ஊசி (Vaira Oosi) பேட்டர்னில், ஆங்காங்கே அன்னப்பறவைகள் வடிவில் சிறிய புட்டாக்கள் வைக்கப்பட்ட அழகான ஒரு புடவை இருந்தது. அதை எடுத்துத் தரச் சொல்லி, “இது உனக்கு பிடிச்சிருக்கா மது?” என்றான் வசீகரன்.
அவள் கண்கள் ஆச்சரியத்தில் விரிந்தன. “கலர் காம்பினேஷன் சூப்பர் வசி!” என்றாள்.
“இது நிச்சயத்துக்கு ஓகேவா?”
“என்ன, பார்த்ததும் எடுத்துட்டீங்க?” என்றாள் அவள் ஆச்சரியமாக.
“உனக்காகவே நெய்யச் சொல்லியிருந்தேன் மது. இந்த டிசைன் எல்லாம் நானே செலக்ட் பண்ணினேன். உன்கிட்ட இந்த கலர் இல்லைல,” என்றான் உரிமையோடு.
“என்கிட்ட இருக்கிற கலர் எல்லாம் உங்களுக்கு நல்லா தெரியுமா என்ன?” என்றாள் கண்ணைச் சுருக்கி.
அவன் தன் கண்களைச் சிமிட்டிப் புன்னகைத்தான்.
“உங்களுக்குப் பிடிச்சிருந்தா நான் இதையே எடுத்துக்கிறேன்,” என்றாள் அவள்.
“உனக்கு பிடிச்சிருந்தா எடு; இல்லைன்னா வேற பார்க்கலாம். உனக்கு கிப்ட்டா இன்னும் புடவைகள் எடுக்கணும், அதுக்கு இதை வச்சுக்கலாம்,” என்றான் அவன்.
“இல்ல, இதே இருக்கட்டும்,” என்றாள் மதுமதி.
“இப்ப முகூர்த்த புடவை பார்க்கலாமா?” என்று கேட்டவன், மற்றொரு பாக்ஸைத் திறந்தான்.
செர்ரி சிவப்பு வண்ணப் பட்டுப் புடவை, பச்சை நிறக் கரையுடன் ஜொலித்தது. அதன் முந்தானையில் ‘வ’ என்று தொடங்கி ‘ம’ இல் முடியும் எழுத்துக்கள் ஹைலைட் செய்யப்பட்டு, அது ஒரு அழகான மயில் வடிவில் நெய்யப்பட்டிருந்தது. பார்டரின் முழு நீளத்திற்கும் ‘M’ என்ற எழுத்தை பலமுறை வடிவமைத்து, அதில் ‘V’ ஐ வேறு ஒரு வண்ணத்தில் ஹைலைட் செய்து தங்க ஜரிகையில் நெய்திருந்தனர். பார்க்கவே மிக அழகாக, பிரம்மாண்டமாக இருந்தது.
“என்னைத் தொடர்ந்து எப்பவும் நீ, உனக்குள்ள நான் எப்பவும்... டிசைன் எப்படி இருக்கு மது?” என்று அந்த எழுத்துக்களைக் காட்டி வசி கேட்க, அவனது அதிரடி காதலில் மதுமதிக்கு மூச்சு முட்டுவது போல் இருந்தது.
“சூப்பர் வசீ... எனக்குச் சொல்ல வார்த்தைகளே இல்லை,” என்றாள் கண்களில் காதலைத் தேக்கி. பின், “நீங்களே எல்லாத்தையும் எடுத்து வச்சிட்டு, என்னைச் சும்மா வேடிக்கை பார்க்கக் கூட்டிட்டு வந்தீங்களா?” என்று செல்லமாகக் கோபித்துக் கொண்டாள்.
“உனக்காக நான் ஸ்பெஷலா செய்யச் சொன்னது. உனக்கு பிடிக்கலைன்னா வேற எடுக்கலாம், தப்பில்லை,” என்றான்.
“இதைவிட எனக்குப் பிடிச்சது வேற எதுவும் இருக்க முடியாது. இதே வச்சுக்கலாம்,” என்றாள் அவள் மனநிறைவோடு.
“அடுத்தது லெஹங்கா பார்க்கலாமா?” என்றான் வசி.
“அதையும் நீங்களே செலக்ட் பண்ணிட்டீங்களா? அதுல என்ன சர்ப்ரைஸ் வச்சிருக்கீங்க?” என்றாள் அவள் சிரித்தபடி.
“வந்து பாரு,” என்றான்.
ராணி பிங்க் நிற லெஹங்கா, காபி பிரவுன் நிறத் தாவணியுடன், ஆரி வேலைப்பாடு மற்றும் எம்பிராய்டரி வேலைகளுடன் அத்தனை அழகாக இருந்தது. அதன் பார்டரில், இவர்கள் இருவரும் ஒண்ணாச் செலவிட்ட சில இனிமையான தருணங்களை கைவேலைப்பாடாகக் காட்சிப்படுத்தியிருந்தனர்.
அதன் அழகில் மயங்கியவள், “வாவ், வசி!” என்றபடி மகிழ்ச்சியில் அவனது தோளைப் பிடித்து, யாரும் பார்க்காத இடைவெளியில் அவனது கன்னத்தில் சட்டென்று ஒரு முத்தம் கொடுத்தாள்!
“ஏய்! என்ன பண்ணுற?” என்று பதறியவன், தன் விரலால் அவள் முத்தமிட்ட இடத்தை வருடியபடி அதிர்ச்சியுடன் சுற்றிலும் பார்த்தான்.
“யாரும் பார்க்கலை வசி,” என்றாள் குறும்புடன்.
அவளது தலையில் செல்லமாகக் கொட்டியவன், அங்கிருந்த சிசிடிவி (CCTV) கேமராவைக் காட்ட, அவளுக்கு தூக்கிவாரிப்போட்டது. “அச்சோ... சாரி!” என்றாள் முகத்தைப் பொத்தி.
“என்கிட்ட கேட்டு என்ன பயன்? எனக்கு இன்னும் கொடுத்தாலும் ஓகே தான்,” என்றான் குறும்புப் புன்னகையுடன். “ஆனா, அங்க செக்யூரிட்டி ரூம்ல இருக்குறவங்களுக்கு ஃப்ரீ ஷோ!” என்று சிரித்தான்.
அவன் சொன்னதில் அவள் வெட்கத்தில் சிவந்து போனாள். பேச்சை மாற்ற எண்ணி, “எப்பல இருந்து இப்படி லேடீஸ் டிரஸ் செலக்ட் பண்ணக் கத்துக்கிட்டீங்க?” என்று கேட்டாள்.
“உன்கிட்ட இருந்து தான் கத்துக்கிட்டேன். உன்னால தான்! உனக்கு மட்டும்தான் எனக்கு செலக்ட் பண்ணத் தெரியும். இப்படிப் பொதுவா ‘லேடீஸ்’னு சொல்லக்கூடாது. என்னோட லேடிக்கு மட்டுமேயான தனி உரிமை இது. வேற யாருக்கும் இந்த உரிமை இல்லை,” என்றான் வசீகரன் அழுத்தமாக.அவனது காதலில் அவளுக்கு உள்ளம் சிலிர்க்க அவனை ஒரு வசீகரிக்கும் புன்னகையுடன் பார்த்தாள். அவளது புன்னகையில் மயங்கும் மனதை இழுத்து பிடித்தவன் பேருக்குதான் தான் வசீகரன் ஆன என்னை வசீகரிக்கும் பேரழகி நீதான் என்றான் ஒரு மயக்கும் புன்னகையுடன். அவனது கிசுகிசுப்பான குரலிலும் அவனது புன்னகையிலும் அவள் தடுமாறி பார்க்க.
என்ன? என்றான் புருவங்களை உயர்த்தி
கண்களில் அவனுக்கான காதலுடன் .அவனது விழிகளை பார்த்தவள் விழிகள் பேசிய மொழிகளில் அவன் இப்போது தடுமாறினான்.
அவளை நோக்கி குனிந்தவன் பின் கிசுகிசுப்பாக ஏய் என்னடி இப்படி பார்க்குற, சாத்தியமா முடியல ஐ ஆம் அவுட் ஆஃப் கண்ட்ரோல். மேரேஜ் வரைக்கும் என்னை கண்ட்ரோல இருக்க விடுமா . நீ இப்படி பார்த்த நான் பிளாட் ஆய்டுவேன் என்றான்.
வசீ போதும் .. என்றவளுக்கும் முகம் சூடாவதை உணரமுடிந்தது.
அவளுக்காக மேலும் சில புடவைகளையும் எடுக்கச் செய்தான். பின்னர் அவனுக்காகத் தங்க நிற வேஷ்டி, சட்டை மற்றும் ரிசப்ஷனுக்காக ஷெர்வானி ஆகியவற்றையும் எடுத்தனர்.
மற்றவர்களும் அவர்களது ஆடைகளைத் தேர்வுசெய்து வந்திருந்தனர் . அனைவருக்கும் இவர்களின் தேர்வு மிகவும் பிடித்திருந்தது. அனைத்திற்கும் பில் பே செய்துவிட்டு வெளியே வந்தனர்.
“மாமா, சூப்பரா செலக்ட் பண்ணி இருக்கீங்க அக்காவுக்கு!” என்றாள் வித்யா ஓடிவந்து. மதுமதியை விழிகளால் களவாடியவன் பின் அனைவரையும் பார்த்து பொதுவாகப் புன்னகைத்தான்.
திருமண நாளும் நெருங்கியது. அன்று இரு வீட்டினரும் முகூர்த்தக்கால் நட்டனர். சாஸ்திரப்படி, இனி திருமணம் முடியும் வரை பொண்ணும், மாப்பிள்ளையும் வெளியே எங்கும் செல்லக் கூடாது.
மதுமதி அவளது தைத்து வந்த பிளவுஸ்களைச் சரிபார்த்துக் கொண்டிருந்தாள். உள்ளே வந்த பரிமளா அவளது நகைகளைச் சரிபார்த்து எடுத்து வைத்துக் கொண்டிருந்தார். “மது, இப்ப இது இருக்கட்டும். இன்னும் ரெண்டு செட் அப்பாகிட்ட ஆர்டர் கொடுக்கச் சொல்லியிருக்கேன்,” என்றார்.
அதைக் கேட்டதும் மது, “அம்மா! உங்ககிட்ட எவ்வளவு முறைதான் சொல்றது? இதுவே போதும்மா. ஏற்கனவே அறுபது பவுன் எனக்குன்னு எடுத்து வச்சிருக்கீங்க, இதுக்கு மேல எனக்கு எதுக்கு? கல்யாணத்துக்கே எவ்வளவு செலவு... நமக்கு இதுவே சமாளிக்க முடியாத செலவுமா
"இன்னும் இன்னும் சுமைய உங்க தலையில் ஏற்ற என்னால் முடியாது, புரிஞ்சுக்கோங்க. உங்களுக்கு நான் மட்டும் பிள்ளை இல்லை; முகுந்தும் இருக்கான். இருக்கிறது எல்லாத்தையும் எனக்கே தந்துட்டா அப்புறம் அவனுக்கு? இல்லடா...என்று அவர் ஏதோ சொல்ல வர ..
அவங்க ஸ்டேட்டஸ் எல்லாம் தெரிஞ்சுதானே அவங்க என்னைப் பெண் கேட்டாங்க, அப்புறம் என்ன?"என்று மதுமதி அக்கறையுடன் கேட்டதில் பரிமளாவின் நெஞ்சம் நெகிழ்ந்தது.
அப்போது உள்ளே வந்த மரகதம், "மதும்மா..." என்று அழைக்க, இருவரும் அவர் பக்கம் திரும்பினர்.
"இந்தா, இது உங்க பாட்டியோட நகை. இது உன் பாட்டியோட ஆசீர்வாதம் உனக்காகத் தந்தது. அப்புறம் இது பெரியம்மாவோட பரிசு" என்று ஒரு முழு மணப்பெண் நகை செட்டையும், ஒரு வீட்டுப் பத்திரத்தையும் தந்தார்.
அவள் மறுக்கும் முன், "ம்ஹும்... வேண்டாம்னு சொல்லக்கூடாது. இது உன் பெரியம்மாவோட ஆசீர்வாதம், சரியா?"என்றார் கண்களில் கனிவுடன்.
அவரை 'அம்மா'என்று அழைக்க முடியாமல் தவித்தவள், அவரை இறுக அணைத்துக் கொண்டாள். கண்களில் கண்ணீருடன் இருந்த மகளைப் பார்த்த அந்த இரண்டு தாய்களுக்குமே உள்ளுக்குள் பதறியது.
"என்னடா... ஏன்?"என்று அவளது கண்களைத் துடைத்துவிட்டார் மரகதம்.
"இல்லை பெரியம்மா... அங்கே போனதும் நீங்க என்னை அடிக்கடி பார்க்க வரணும்" என்று கட்டளையிட்டாள் அவர் மகள்.
"வராம எப்படி இருப்பேன்? இதுக்கா இவ்வளவு அழுகை?"என்று அவர் கேட்க, "இல்லை" என்று தலையசைத்தவள் அவளது மனதை மறைத்து , "உங்களையெல்லாம் விட்டு இருக்கணும்னு நினைச்சதும் கண்ணீர் வந்துடுச்சு" என்றாள் புன்னகையுடன்.
"சரி, எங்க போகப் போற? ஒரு 30 நிமிஷம் நினைச்சா பார்த்துக்கலாம். புதுப் பொண்ணு அழக்கூடாது. கண்ணைத் துடைச்சு முகத்தைக் கழுவிட்டு வா. பார்க்கிறவங்க என்ன நினைப்பாங்க? போடா மா,"என்று அவளை அனுப்பி வைத்தனர்.