பார்வை 38
மனோபாலமுருகன் சமையலறையில் நின்றுகொண்டிருந்தார். அப்போது, "மாமா..." என்றொரு குரல் கேட்டது.
அவரது உள்ளத்தை உலுக்கிய குரல்... உயிரில் கலந்த குரல்! 'அதுதானா?'என்று அவர் தன் மனதிற்குள் கேட்டு முடிப்பதற்குள்ளாகவே, மீண்டும் "மாமா..." என்ற குரல் ஒலிக்க, திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தவர் அப்படியே திகைத்து நின்றார்.
"மாமா, எப்படி இருக்கீங்க?"
இங்கே மரகதவள்ளியின் வருகையை அவர் சற்றும் எதிர்பார்க்கவில்லை. திருமணத்திற்க்கு அவரும் வருவார் என்று தெரியும் தான், ஆனால் அவரிடம் வந்து பேசுவார் என்று அவர் நினைக்கவில்லை. அவரை எப்படி எதிர்கொள்வது என்றே அவருக்குத் தெரியவில்லை. இத்தனை வருடங்களாகத் தேக்கி வைத்த கோபம், வருத்தம், இயலாமை எல்லாம் சேர்ந்து அவரைப் பந்தாடிக்கொண்டிருந்தன. ஆனால், மரகதவள்ளியோ அப்படி அதிரவோ, திகைக்கவோ இல்லை. அவரிடம் பேசிவிட வேண்டும் என்ற தீர்க்கமான முடிவுடன் தான் வந்திருப்பது அவரது முகத்திலேயே தெரிந்தது.
"மாமா, நாம கொஞ்சம் தனியா பேசலாமா?"என்று அவர் அழைக்க, பாலமுருகனும் அவருடன் அமைதியாகச் சென்றார்.
எத்தனை வருடங்கள் ஆகிவிட்டன இருவரும் ஒருவரை ஒருவர் சந்தித்து! 25 வருடங்களுக்கும் மேலாகிவிட்டது. "சொல்லு வள்ளி..." என்று அவர் கேட்க நினைத்தபோது, தொண்டையை அடைத்துக்கொண்டு குரலே எழும்பவில்லை.அவரது வள்ளி என்ற அழைப்பு மரகதவள்ளிக்கும் மூச்சடைக்க செய்தது. இருப்பினும் தன்னை சமாளித்து
மரகதவள்ளி பேசத் தொடங்கினார் , "மாமா, உங்களுக்கு எல்லாம் தெரியும்ன்னு , எனக்கும் தெரியும்... மது நம்ம பொண்ணுதான்! என்றவருக்கு என்ன முயன்றும் குரல் கமருவதை கட்டுபடுத்த முடியவில்லை. நீங்க என்னையே நினைச்சுக்கிட்டு வாழ்க்கையை வீணடிச்சிடக் கூடாது, லலிதாவைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோஷமா வாழணும்னு தான் நான் உங்களை விட்டுப் போனேன். போன ஒரு மாசத்திலேயே என் வயித்துல நம்ம குழந்தை வளர்றது எனக்குத் தெரிஞ்சு போச்சு. இருந்தாலும், 'வேண்டாம்'னு முடிவு பண்ணிப் போனதுக்கப்புறம் திரும்ப வரக்கூடாதுங்கிற வைராக்கியத்துல அப்படியே இருந்துட்டேன். ஆனா, ஒவ்வொரு நொடியும் என் மனசு உங்களைத் தான் தேடுச்சு மாமா . எப்படியோ மனசைக் கட்டுப்படுத்திக்கிட்டு வாழ்ந்தேன்.
என்னைப்பத்தி யாருக்கும் எந்தத் தகவலும் தெரியக்கூடாதுங்கிறதுக்காகப் பரிமளாவைக்கூட நான் தொடர்பு கொள்ளாமல்தான் இருந்தேன். அதுவரைக்கும் கட்டுப்பாடா இருந்த என்னால, குழந்தை பிறக்கிற அந்தத் தவிப்பான நேரத்துல 'நீங்க என் கூட இருக்கணும்'னு என் மனசு துடிச்சுக்கிட்டே இருந்துச்சு. ஒருவேளை பிரசவத்துல எனக்கு ஏதாவது ஆயிடுச்சுன்னா, நம்ம குழந்தையை உங்ககிட்ட கொண்டு வந்து சேர்க்கணும்ங்கிறதுக்காகத்தான் மோகனைக் கூப்பிட்டு உங்களுக்கு தகவல் தரச் சொன்னேன்.
ஆனா அந்த நேரத்துலதான், உங்களுக்கும் லலிதாவுக்கும் திருமணம் முடிஞ்ச விஷயம் எனக்குத் தெரிஞ்சது. அதுக்குமேல உங்ககிட்ட வர்றது தப்புன்னு தோணிருச்சு. நாம செஞ்சது தப்போன்னு அழுது துடிச்சேன். அப்போ மோகன் என்னை பார்க்க இங்க வந்துட்டான். அவன் தான் நம்ம குழந்தையை முதன் முதல்ல கையில தூக்கினான் மாமா என்றவர் குரல் தழுதழுக்க சமாளித்தவர். 'ஏன் இப்படிப் பண்ணி உன் வாழ்க்கையை நாசம் பண்ணிக்கிட்ட?'ன்னு என்னை ரொம்பச் சத்தம் போட்டான். கொஞ்சம் முன்னால சொல்லி இருக்க கூடாதா . அண்ணனுக்கு போன வாரம் தான் கல்யாணம் ஆச்சு . அவர சம்மதிக்க வைக்கறது குள்ள பெரியம்மாவுக்கு போதும் போதும்ன்னு ஆச்சு. நீ ஏன் அண்ணி இப்படி பண்ண , நீ என்ன பெரிய தியாகியா என்று மோகன் சத்தமிட்டவன் சரி மூர்த்திக்கு தெரியுமா என்று கேக்க ,மரகதம் இல்லை என்று தலை அசைத்தார்.சரி நான் மூர்த்திக்கு தகவல் சொல்லி வர சொல்லறேன் என்றவனுக்கும் மனது கணத்தது. அப்படியே எங்க பெரியம்மா தான் அண்ணி பாப்பா என்று குழந்தையை கைகளில் தூக்கி வைத்துக்கொண்டு கொஞ்சி தீர்த்தார் மோகன். பரிமளா கண்களில் கண்ணீர் சிந்த தன் அக்கவைத்தான் பார்த்துக்கொண்டிருந்தார். ஏன் கா. உனக்கு நான் அவ்வளவு தள்ளி போயிட்டேனா என்றவர் கண்களில் கண்ணீர் வழிந்து கொண்டே இருந்தது. அதற்குபிறகு பரிமளா என்னை தனியே விட மறுத்து அவளுடன் என்னை வைத்து பார்த்து கொண்டாள்.
அப்புறம் ஒரு ஆறு மாசம் வரைக்கும் அவங்க வீட்டில தான் இருந்தேன். கல்யாணம் ஆகிப் பரிமளாவுக்கு ஒரு வருஷமாகியும் குழந்தை இல்லாம அவ ரொம்ப மனசு வருத்தத்துல இருந்தா. அதான்... 'அப்பா இல்லாம ஏன் என் குழந்தை வளரணும்? சித்தி பரிமளாகிட்ட போனா அவளுக்கு அம்மாவும் அப்பாவும் ரெண்டு பேருமே கிடைப்பாங்களே'ன்னு நினைச்சு, அவகிட்ட தூக்கிக் கொடுத்தேன். அவளுக்கு அவ்வளவு சந்தோஷம்!
பரிமளா அவளைத் தன் சொந்தப் பொண்ணாவே நினைச்சு வளர்த்தா. அவமேல தாய்ன்னு உரிமை கொண்டாட எனக்கு ஆசையா இருந்தாலும், அவளோட எதிர்கால வாழ்க்கைக்கு அது நல்லது இல்லைன்னு சொல்லி, நான் அவளுக்குப் பெரியம்மாவாவே இருந்துட்டேன். இப்ப வரைக்கும் மதுவுக்கு இதப்பத்தி எதுவும் தெரியாது. இனியும் தெரியக் கூடாதுன்னுதான் நான் கடவுள்கிட்ட வேண்டிக்கிட்டு இருக்கேன்.
வள்ளி என்றவர் குரலில் .. நீ இப்படி செய்திருக்க கூடாது. என் மக .. என் மக.. என்றவர் குரல் தழுதழுத்தது.
என்னை மன்னிச்சிடுங்க மாமா... உங்ககிட்ட நான் முதலிலேயே சொல்லி இருக்கணும், தப்புதான். ஆனா, இனி நாம இந்த உண்மையைச் சொல்றதால எல்லாருடைய வாழ்க்கையிலும் குழப்பம் பிரச்னைதான் வரும். அதனால, இந்த உண்மை எப்பவுமே யாருக்கும் தெரிய வேண்டாம் மாமா,"என்று மரகதவள்ளி சொல்லி முடித்தார் .
"சரி..." என்று தலையசைத்த மனோபாலமுருகனுக்கு, அன்று மகள் மதுமதி பிரதிக்ஷா வந்து தன்னிடம் பேசிய நினைவுகள் நெஞ்சில் அலைமோதின.
அன்றும் இதே போல்தான் வசீகரன் அவளைத் தன்னிடம் பேசுவதற்காக அழைத்துக்கொண்டு வந்திருந்தான்.
அன்று மகளை நேரில் பார்த்தபோது அவரது கைகள் நடுங்கின; கண்களிலிருந்து கண்ணீர் தாரை தாரையாக வழிந்து ஓடியது. உள்ளம் தடுமாறி நின்ற தந்தையைப் பார்த்த மதுமதிக்கும் மனது பிசைந்தது.
"அப்பா..." என்று அவள் முதன்முதலாக அழைத்த அந்த ஒரே ஒரு வார்த்தையில் அவர் அப்படியே நொறுங்கிப் போனார்.
"கண்ணம்மா... என் செல்லம்..." என்று அவர் தழுதழுத்து நிற்க, "அப்பா..." என்று ஓடி வந்தவள் அப்படியே அவரை இறுக்கக் கட்டிக்கொண்டாள்.
"உங்களை நான் 'அப்பா'ன்னு கூப்பிடலாமா?"என்று ஏக்கமாக அவள் கேட்டபோது, அவர் மொத்தமாக உடைந்து அழுதுவிட்டார்.
"என்னை மன்னிச்சிடுடா அம்மா..." என்று அவர் கதற, "இல்லைப்பா..." என்று கண்ணீருடன் தலை அசைத்தவள், அவரது கைகளைத் தன் கைகளில் ஏந்தியபடி, "இங்க யார் மேலயும் தப்பு சொல்ல முடியாதுப்பா. இதுதான் நம்ம விதி. விதி இப்படித்தான் இருக்கும்னு இருக்கும்போது, யார் என்ன சொல்லிட முடியும்?"என்றாள்.
அன்று மகளுடன் பேசிய பிறகுதான், பல வருடங்களாகத் தன் மனதை அழுத்திக் கொண்டிருந்த பாறை போன்ற பாரம் இறங்கியதை அவர் உணர்ந்தார்.
இறுதியாக மகள் அவரிடம், "அப்பா, எனக்கு உண்மை தெரியும்ங்கிறது வீட்ல யாருக்குமே தெரியாது. இனியும் தெரியவும் வேண்டாம்ப்பா. நீங்களும் யார்கிட்டயும் 'எனக்கு உண்மை தெரியும்'னு சொல்லிடாதீங்க,"என்று ஒரு அன்புக் கட்டளையிட்டுச் சென்றிருந்தாள். மகளின் கட்டளைக்கு அந்தத் தந்தை மறுப்பா சொல்லப் போகிறார்?
"சரிடா அம்மா... இந்த அப்பா உனக்காக இதுவரை எதையும் செயல இதையாவது செய்றேன்,"என்று அன்று அவரது குரல் தழுதழுத்தது.
இன்று யோசித்துப் பார்க்கும்போது, அவரது மகள் மதுமதி குணத்தில் அப்படியே அவளது தாய் மரகதவள்ளியைப் போலவே இருப்பது அவருக்குப் புரிந்தது.
வசீகரனின் கையைப் பிடித்தவரின் கைகளின் நடுக்கத்தை அவனும் உணர்ந்தான். "குட்டி கண்ணா..." என்றவர் அவனை நோக்கிக் கைகளைக் கூப்ப, "மாமா!" என்று பதறிவிட்டான் அவன்.
"மாமா, அவ உங்க பொண்ணுனு தெரியுறதுக்கு முன்பே, அவள் என் உயிர் மாமா! இது உங்களுக்காக அல்ல எங்களுக்காக நான் செஞ்சது ..." என்றவனின் வார்த்தைகளில் அவரது உள்ளம் நெகிழ, அவனைப் பார்த்திருந்தார்.
இருவருமாக அவரது காலில் விழ, "நீங்க ரெண்டு பேரும் பல்லாண்டு காலம் நிறைவா வாழணும். அதுதான் எனக்கு வேணும். வேறென்ன பெருசா அந்த ஆண்டவன்கிட்ட கேட்கப் போறேன்?" என்றவரது நினைவுகள், "மாமா..." என்ற குரலில் மீண்டன.
"மாமா... நான் கேட்டுக்கிட்டே இருக்கேன், நீங்க என்ன யோசிச்சுட்டு இருக்கீங்க? நான் சொன்னது உங்களுக்குப் புரிஞ்சுதா?"என்று மரகதவள்ளி கேட்க, தன் மகளின் நினைவுகளிலிருந்து மீண்ட மனோபாலமுருகன், "சரி ..." என்பது போல் அவரைப் பார்த்துத் தலையசைத்தார்.
“அவரது பார்வையில் என் மேல கோபமா மாமா?” என்றாள் வள்ளி.
அவரிடமிருந்து ஒரு நெடிய மூச்சு வெளிப்பட்டது; பின் மெதுவாக, “ரொம்ப கோபமாதான் இருந்தேன்... ஆனா, இப்ப இல்லை,” என்றார் அவர்.
"அவருக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. 'எல்லோராலும் ஆட்டி வைக்கப்படும் பொம்மையா நான்?'என்றுதான் தோன்றியது. வள்ளி மீது அவருக்கு இப்போதும் கோபம் இருக்கிறது; அதைவிட அவர் மீதான காதல் இப்போதும் ஜெயித்துவிட்டது. இப்போது அவரது வேண்டுதல் எல்லாம், தன் மகளுடனும் குட்டி கண்ணனும் நன்றாக வாழ வேண்டும் என்பது மட்டும்தான்.
ஜெய வசீகரன் தன் அறையில் கம்பீரமாக தயாராகிக் கொண்டிருந்தான். கருநீல வண்ணக் கோட் சூட், அதற்குப் பொருத்தமாக வெளிர் ஆகாய வண்ணச் சட்டை, கச்சிதமான கிளீன் ஷேவ், அதற்கு மேல் முறுக்கிவிடப்பட்ட மீசை என ‘ஹேண்ட்ஸம் ஹங்க்’ ஆக நின்றவனைப் பார்த்த மித்ரன், "டேய் மச்சான்! என்னடா இது... அப்படியே ‘ஆளப்போறான் தமிழன்’ கார்த்தி மாதிரி அள்ளுறடா!" என்று கத்திக் கொண்டே ஓடிவந்து அவனைக் கட்டியணைத்தான்.
"மித்ரா, என் மொபைலைக் கொடு" என்று அவன் கேட்க,
"இப்ப எதுக்குடா போனு? ரீல்ஸ் எதுவும் செய்யணுமா?"என்றான் மித்ரன் நக்கலாக.
அவனை முறைத்தவன் "மதுகிட்ட பேசணும், அப்போல இருந்து போன் பண்ணினாலும் எடுக்க மாட்டேங்குறா..." என்றான் சலிப்புடன்.
"அடப்பாவி! இப்பதானே திருட்டுத்தனமாப் பார்த்துட்டு வந்த, அதுக்குள்ள என்னடா?"என்றான் முறைப்புடன். தொடர்ந்து, "கல்யாணப் பொண்ணு மேக்கப் போடுறப்போ போன் பண்ணா எப்படிடா எடுப்பா? நீ கிளம்பு, மாப்பிள்ளை அழைப்புக்கு நேரமாச்சு!" என்று வருணும் மித்ரனும் அவனை அழைத்துக் கொண்டு வெளியே வந்தனர்.
அங்கே அலங்கரிக்கப்பட்ட சாரட் வண்டியில் வசீகரன் ஊர்வலமாக அழைத்து வரப்பட, அவனது நண்பர்கள் மேள தாளத்திற்கு ஏற்பக் குத்தாட்டம் போட்டனர். ஊர்வலம் முடிந்து மண்டபத்திற்குள் வந்தவனை, பூப்பந்தலில் மணமகளின் சகோதரர்கள் வரவேற்று அழைத்து வந்து மேடையில் அமர வைத்தனர். அவனது விழிகள் அவனவளின் வரவை எதிர்நோக்கி எதிர்பார்ப்புடன் காத்திருந்தன. .
அப்போதுதான்,
"சாரட்டு வண்டில சீரட்டொளியில ஓரந்தெரிஞ்சது உம்முகம்உள்ளம் கிள்ளும் அந்த கள்ளச் சிரிப்புல மெல்லச் சிவந்தது எம்முகம்அடி வெத்தல போட்ட ஒதட்ட எனக்கு பத்திரம் பண்ணிக்கொடுநான் கொடுத்த கடனத் திருப்பிக்கொடுக்க சத்தியம் பண்ணிக்கொடுஎன் ரத்தம் சூடுகொள்ள பத்து நிமிசம்தான் ராசாத்தி..."
என்ற பாடல் பின்னணியில் ஒலிக்க, பிரியா, கீதா, வித்யா மற்றும் நித்யா உள்ளிட்ட தோழிகள் முன்னே நடனமாடி வர, அன்னப்பறவை பல்லக்கில் மாமன்மார் தூக்கி வர, கண்கவர் பட்டுப்புடவையில் தேவதை போல் வந்தாள் மதுமதி பிரதிக்ஷா. அவளையே இமைக்க மறந்து பார்த்துக் கொண்டிருந்தான் வசீகரன்.
அவள் மேடையில் ஏறி அவன் அருகே வந்து நின்றதும், மெதுவாக நிமிர்ந்து அவனைக் கண்ணோடு கண் பார்த்தாள். அந்த ஒரே பார்வையில், அவனது அத்தனை நேரத் தவிப்பும் அவளது வெட்கமும் ஒன்றாகக் கலக்க, இருவர் முகமும் விகசித்தது.
"ரொம்ப அழகா இருக்க மது..." என்று வசீகரன் அவளுக்கு மட்டும் கேட்கும்படி மெதுவாக முணுமுணுக்க,
மதுமதியின் கன்னங்கள் சட்டெனச் சிவந்தன. "நீங்களும்தான்..." என்று புன்னகையுடன் பார்வையைத் தாழ்த்திக் கொண்டாள்.
உண்மையாவா என்றவனை அவள் விழி உயர்த்தி என்னவென்று பார்க்க
கண்களை சிமிட்டினான் அவன்.
"ஹலோ எக்ஸ்கியூஸ் மீ! ரொமான்ஸ் பண்ணது போதும்,"என்று வசீகரனின் காதில் கிசுகிசுத்த மித்ரன், "நீயாடா இப்படி?"என்பது போல அவனை ஆச்சரியமாகப் பார்த்தான்.
சரியாக அந்த நேரத்தில், "தாம்பூலத் தட்டை மாத்துங்கப்பா!"என்று பெரியவர் ஒருவர் மைக்கில் குரல் கொடுக்க, பெரியவர்கள் முன்னிலையில் நிச்சயதார்த்தத் தாம்பூலம் மாற்றப்பட்டது. உற்றார் உறவினர்களின் ஆரவாரத்திற்கு நடுவே, வசீகரனும் மதுமதியும் ஒருவருக்கொருவர் மோதிரம் அணிவித்துக் கொண்டனர்.
மேடையில் சடங்குகள் முடிந்து, உறவினர்கள் அனைவரும் உணவருந்தச் சென்றனர். அந்த இடைவேளையில் வசீகரனும் மதுமதியும் மட்டும் மேடையில் தனியாக அமர்ந்திருந்தனர்.
வசீகரன் மெதுவாக மதுமதியின் பக்கம் சாய்ந்து, "என்ன மேடம்... ரொம்ப அமைதியா இருக்கீங்க?"என்று கிண்டலாகக் கேட்டான்.
மதுமதி அவனை முறைத்துப் பார்த்துவிட்டு, "நீங்க கொஞ்சம் பேசாம இருங்க! ஏற்கனவே மித்ரன் அண்ணா ஏதாவது கலாட்டா பண்ணுவாரோன்னு பயமா இருக்கு. நாளைக்குத் தாலி கட்டும்போது என்னவெல்லாம் பண்ணப் போறாங்களோ?"என்றாள் கவலையும் சிரிப்பும் கலந்த குரலில்.
அவள் சொல்லி முடிப்பதற்கும், மித்ரன் மைக்கை கையில் எடுப்பதற்கும் சரியாக இருந்தது.
"அன்பார்ந்த மக்களே! மாப்பிள்ளையும் பொண்ணும் என்னவோ ரகசியம் பேசிட்டு இருக்காங்க. ஆனா நாம அவங்களை அப்படியே விடப்போறது இல்ல. இப்போ மதுமதி ஒரு பாட்டு பாடணும், வசீகரன் அதுக்கு ஆடணும்!"என்று அவன் அறிவிக்க, அரங்கம் அதிரத் தொடங்கியது.
வசீகரன் பதறிப்போய், "டேய் மித்ரா... இதெல்லாம் ரொம்ப அநியாயம்டா!"என்று கத்தினான்.
ஆனால், அங்கிருந்த கூட்டம் அவர்களை விடுவதாக இல்லை; அனைவரும் வற்புறுத்திக் கைதட்டினர். வேறு வழியின்றி, மதுமதி மெலிதாகச் சிரித்துக் கொண்டே, "சேராமல் போனால் வாழாமல் போவேன்..."என்று தன் மெல்லிய குரலில் பாடத் தொடங்கினாள்.
வசீகரன் அப்படியே மெய்மறந்து அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். அவள் பாடும் ஒவ்வொரு வரியும், அவர்கள் இருவரின் வாழ்வுக்காகவே எழுதப்பட்டது போல் அவனுக்குத் தோன்றியது.
நண்பர்கள் விடாமல் வற்புறுத்தியதால், வசீகரன் லேசாக அசைந்து ஆடத் தொடங்கினான். அவனோடு சேர்ந்து அவனது நண்பர்களும், மதுமதியின் தோழிகளும் மேடையில் ஏறி ஆடத் தொடங்க... ஒட்டுமொத்த அரங்கமும் கைதட்டலால் நிறைந்தது..
நிச்சயதார்த்தம் முடிந்து, அன்று இரவு அந்தப் பெரிய திருமண மண்டபத்தின் தனித்தனி அறைகளில் இருவரும் தங்கியிருந்தனர். நாளை காலை கல்யாணம்... இன்னும் சில மணிநேரங்களில் ஒருவராக மாறப்போகும் அந்தத் தவிப்பில், தூக்கம் வராமல் வசீகரன் மதுமதிக்கு போன் செய்தான்.
"என்ன மேடம்... போன் அடிச்ச ஒரு செகண்ட்ல எடுத்துட்டீங்க? தூக்கம் வரலையா, இல்ல எனக்காகவே வெயிட் பண்ணிட்டு இருந்தியா?" என்றான் வசீகரன்
மதுமதி மெல்லிய குரலில்"ரெண்டுமே தான்! நாளைக்கு அதிகாலையிலேயே எழுந்து முகூர்த்தப் புடவை கட்டணும்னு அத்தை சொல்லிட்டுப் போனாங்க. ஆனா கண்ணுல தூக்கமே இல்ல... உங்களுக்கு?"
வசீகரன் சிறு புன்னகையோடு "எனக்கும் அதே நிலைமைதான் . ஆனா எனக்கு தூக்கம் வராததுக்குக் காரணம் நாளைக்குக் காலையில நடக்கப் போற முகூர்த்ததுக்காக இல்ல... நாளைக்கு நைட் நடக்க போற !" என்று அந்த வார்த்தையை சொல்லாமல் நிறுதியவனின் விஷம புன்னகையில்
மதுமதி புரியாதவள் போல "நாளைக்கு நைட்டா? என்ன சொல்றீங்க?"
வசீகரன் குரலை இன்னும் கொஞ்சம் தாழ்த்தி, குறும்போடு "நாளைக்கு நைட் உனக்கு என்னன்னு தெரியாது இத நான் நம்பனுமா? என்றவன் கேட்ட கேள்வியே அவளை நம்பவில்லை என்றது.என்னமா நடிக்குற நீ? ஏன் நேத்து சொன்னது நியாபகம் இல்லையா உனக்கு? என்றவன் நாளைக்கு இந்நேரம் நாம ரெண்டு பேரும் இப்படி போன்ல பேசிட்டு இருக்க மாட்டோம்ல... ஒரே ரூம்ல, ஒரே கட்டில்ல, ரொம்ப பக்கத்துல உட்கார்ந்து பேசிட்டு இருப்போம்.
வசீ என்றவளின் குரல் நலிந்து ஒலித்தது.
மதுமதி முகம் சிவந்து, வெட்கத்துடன் போனை காதோடு இன்னும் இறுக்கிக் கொள்ள "சீ... போங்க வசீ! உங்களுக்கு எப்போவும் இதே நினைப்புதான். இப்போ எதுக்கு அதெல்லாம் பேசிட்டு இருக்கீங்க? எனக்கு இப்போவே பயமா இருக்கு!"உங்களை எப்படி தான் சமாளிக்க போறேனோ என்றவளின் பேச்சில்
சத்தமாக சிரித்தவன் "பயமா? என்கிட்டயா? ஹலோ மேடம்... இன்னைக்கு வேணா நீங்க உங்க ரூமில் தனியா தூங்கலாம். ஆனா நாளைக்கு நைட்ல இருந்து உங்க லைஃப் டைம் வாரண்டியே என்கிட்டதான். நான் தூங்கவிடாம பண்ணினாலும் நீங்க அமைதியா தாங்கிட்டுதான் இருக்கணும், புரியுதா?"
மதுமதிக்கு வெட்கம் பிடுங்கியது. "ரொம்பத்தான் ... நாளைக்கு நான் அத்தைக்கிட்ட சொல்லி உங்களை ரூமுக்குள்ளேயே விடாம பண்ணிடுவேன், பாருங்க!" என்று மிரட்ட
வசீகரன்: "அப்படியா? அப்போ கதவை உடைச்சிட்டாவது உள்ள வருவேன். ஏன்னா... 'சேராமல் போனால் வாழாமல் போவேன்'னு இன்னைக்கு மேடையில பாடிட்டு, நாளைக்கு நைட் என்னைச் சேர்க்காம விடப் போறியா என்ன?" என்றான் கள்ள சிரிப்புடன்
வசீகரன் சொன்னதைக் கேட்டு மதுமதியின் முகம் முற்றிலும் வெட்கத்தில் மூழ்கியது. போனின் மறுமுனையில் அவளது மௌனமும், வேகமான மூச்சுக்காற்று மட்டுமே அவனுக்குப் பதிலாகக் கிடைத்தது.
அவளது தள்ளாட்டத்தில் அவனும் தள்ளாடினான். இதற்குமேல் பேசினால் அவளும் தாங்க மாட்டாள், தன்னுடைய நிலையும் அவ்வளவுதான் என்று எண்ணியவன்
மது என்றவன் .. சீக்கிரம் தூங்கு. காலையில மேடையில உன்னைத் தேவதையா பார்க்கக் காத்திருக்கேன். குட் நைட்." என்றிட
அவளும் "குட் நைட் வசீ... லவ் யூ!" என்று விட்டு போனை அருகில் போட்டவள் கட்டிலில் சரிந்தாள்.
அடுத்த நாள் காலையிலிருந்து அவர்களின் இருவருக்குள்ளும் உருவாக இருக்கும் புதிய பந்தம் நினைக்க நினைக்க இருவரின் நெஞ்சங்களும் ஆயிரம் கனவுகளை சுமந்து அந்த விடியலுக்காக உள்ளம் பூரிக்க காத்திருந்தனர். .

Last edited: