பார்வை 39
திருமண நாளும் அழகாய் விடிந்தது. மங்கல நாதஸ்வர ஓசையும், உறவினர்களின் பரபரப்புடன் கூடிய கேலிப் பேச்சுகளும் அந்த கல்யாண மண்டபத்தையே திருவிழாக் கோலமாக்கியிருந்தது.
பட்டு வேட்டி, சட்டையில் கம்பீரமாக மணமகனாய் வசீகரன் மணமேடையில் வீற்றிருந்தான். புரோகிதர் சொல்லும் மந்திரங்களை சொன்னவாறு அவனது விழிகள் மேடைக்கு வரும் வழியையே தவம் கிடப்பது போல் பார்த்துக் கொண்டிருந்தன.
அப்போது, நாதஸ்வரத்தின் வேகம் கூட, அனைவரின் பார்வையும் நுழைவாயிலை நோக்கித் திரும்பியது. அங்கே... மணமகளாய், செந்நிற பட்டுபுடவையில் தேவதையாய் அவள் தோன்றி மணமேடையை நோக்கித் வந்தவள் எங்கே தன் இதய துடிப்பு வெளியில் கேட்டுவிடுமோ என்ற பதற்றத்துடன் தன் பாத அடிகளை எடுத்து வைத்து அன்னமென மெல்ல நடந்து வரும் அவளைப் பார்த்த கணமே, வசீகரன் உலகையே மறந்தான். விழி அகலாமல் அவளையே பார்த்திருந்தவனின் பார்வையில் ரசனை மிகுந்திருந்தது. இமைக்கக் மறந்தவன் மூச்சு விடவும் மறந்தான் அவன் தேவதையின் பேரழகில் .
அவள் மீது வைத்த கண் எடுக்காமல் அப்படியே உறைந்து நின்ற வசீகரனின் தோளை, அருகில் இருந்த அவனது உயிர் நண்பன் மித்ரன் பலமாக உசுப்பினான்.
"டேய் மாப்ள... போதும் பார்த்தது! என் தங்கைக்கு கண் பட்டுடப் போகுது,"என்று மித்ரன் ரகசியமாகக் கிண்டல் செய்ய, வசீகரனின் முகம் முறைப்பை காட்ட.
அதற்கெல்லாம் பயந்தவனா அவன்.மீண்டும் வசீகரனின் காதருகே குனிந்து, "டேய், என் தங்கச்சி காலைப் பிடிச்சு கெஞ்சுறதா இருந்தாலும், கொஞ்சுறதா இருந்தாலும் எதுவா இருந்தாலும் உங்க ரூமுக்குள்ள வச்சுக்கோ! இங்க எல்லார் முன்னாடியும் 'சைட்'அடிச்சு எங்களை மானத்தை வாங்காத ..." என்று அவனை மேலும் சீண்டினான்.
நண்பர்களின் ஒட்டுமொத்த கலாட்டாவிலும், கேலிச் சிரிப்பிலும் வசீகரனின் முகம் சட்டென்று வெட்கத்தில் சிவந்தது. அதை மறைத்துக் கொண்டு, மித்ரனைப் பார்த்துப் போலியாகக் கண்களை உருட்டி, "டேய்! சும்மா இருங்கடா..." என்று பற்களைக் கடித்துக் கொண்டே முறைத்தான்.
ஆனால், அதனையும் தாண்டி அவனது முகத்தில் அவளது வருகையால் உண்டான பேரானந்தமும், மிதமிஞ்சிய காதல் மட்டுமே வெளிப்பட்டது. மேடையேறி வரும் தன் காதலியை, தன் வாழ்வின் சரி பாதியை வரவேற்க உள்ளம் நெகிழ பார்த்திருந்தான். .
மேடையில் ஏறி வந்தவள் அனைவருக்கும் வணக்கத்தை தெரிவித்து வசீகரனின் அருகில் அமர்ந்தாள் மதுமதி பிரதிக்ஷா . . அவளோ, நிமிர்ந்து அவனது முகத்தைப் பார்க்கக் கூடத் துணிவில்லாமல், தன் கை விரல்களைப் பிசைந்து கொண்டு குனிந்தே அமர்ந்திருந்தாள்.
ஆனால், வசீகரனின் கண்கள் அவளை விட்டு அகலவே இல்லை. அவனது தொடர் பார்வையை உள்ளம் உணர்ந்த மெல்ல அவளது நீண்ட இமைகள் அசைய, மதுமதி தன் விழிகளை உயர்த்தி அவனைக் கண்டாள்.
அவனது கண்களில் தெரிந்த மிதமிஞ்சிய காதலும், 'நீ , நான் இன்று நாமாகிறோம் ?'என்ற கம்பீரமான ஆதிக்கமும் அவளை அப்படியே கட்டி வைக்க . அவனது தீர்க்கமான பார்வையின் சூடு தாங்காமல், மதுமதியின் கன்னங்கள் சட்டென்று செந்நிறம் பூத்தது. . உதடுகளின் ஓரம் ஒரு மெல்லிய புன்னகை அரும்ப, வெட்கம் அவளது உடலெங்கும் பரவியது. உடனே தன் பார்வையைத் தாழ்த்திக் கொண்டு, தன் முகத்தை அவனுக்கு மறைக்க முயன்றாள். அவளது இந்தவெக்கத்தில் வசீகரனின் உள்ளம் ஆட்டம் கண்டது. . மை ஸ்வீட் டெம்ப்டேஷன்!'என்று அவளை அள்ளி அணைத்துக் கொள்ளத் துடித்த தன் மனதைக் கட்டுப்படுத்திக் கொண்டு, இதழ்கடையில் புன்னகைத்தான்.
"கெட்டிமேளம்... கெட்டிமேளம்...!"
ஐயரின் குரல் ஒலிக்க, . மங்கல நாதஸ்வரம் தன் உச்சக்கட்ட வேகத்தில் ஒலிக்கத் தொடங்கியது.. உறவினர்களின் அட்சதை தூவும் கரங்கள் அசைந்தன.
நண்பர்கள் கூட்டம் "டேய் மாப்ள... நேரமாச்சு, கையை நடுங்காம கட்டுடா!" என்று பின்னணியில் கூச்சலிட்டு தங்களின் ஆர்ப்பாட்டத்தைத் தொடங்கினர்.
வசீகரன் அந்தப் புனிதமான மஞ்சள் கயிற்றைக் கைகளில் ஏந்தினான். அவனது கைகள் லேசாக நடுங்கியது பதற்றத்தால் அல்ல, தன் உயிரை விட மேலானவளைத் தன் வாழ்வோடு இணைக்கப் போகும் பரவசத்தால்! மது என்று அவன் அழைக்க அவனை அவள் நிமிர்ந்து பார்த்தாள். அவளது விழிகளை பார்த்து கொண்டே
மதுமதியின் கழுத்தில் அவன் அந்த மங்கல நாணைப் பூட்டிய போது, இருவரின் விழிகளும் காதலால் நிறைந்தது. அந்த நொடி, சுற்றியிருந்த எவ்வித ஓசைகளும் அவர்கள் இருவரது செவிகளையும் சேரவில்லை.
மதுமதியின் கண்களில் ஆனந்த கண்ணீர் துளிர்க்க, மதுமதியை தன் நெஞ்சில் அவன் தாங்க அவனில் தஞ்சம் புகுவது போல் நாணத்துடன் தலைசாய்த்தாள். மண்டபமே அட்சதை மழையாலும், நண்பர்களின் கலாட்டவிலும் அதிரத் தொடங்கியது.
அங்கே திருமண மண்டபத்தில், அங்குமிங்கும் ஓடி ஓடி வேலை பார்த்துக் கொண்டிருந்தான் சித்தார்த் . அவனையே வெகுநேரமாக நித்யாவின் கண்கள் தொடர்ந்து கொண்டிருந்தன.
சித்தார்த்தும் அவளது பார்வையை கவனித்துக் கொண்டுதான் இருந்தான். ஒரு கட்டத்தில் அவளது பார்வையின் குறுகுறுப்பை தாங்க முடியாமல், நேராக அவளிடம் வந்து நின்றான்.
அவள் "என்ன?"என்பது போல் புருவத்தை உயர்த்திப் பார்க்க...
"என்னடி... எதுக்கு என்னை இப்படிப் பார்த்துட்டே இருக்க? போனா பார்க்குற, வந்தா பார்க்குற... உனக்கு இப்ப என்னதான் பிரச்சனை?"என்று கைகளைக் கட்டிக்கொண்டு, சற்று எரிச்சலுடன் கேட்டான்.
"எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லையே..." என்றாள் நித்யா, தன் முகத்தில் எந்தச் சலனமும் காட்டாமல் அத்தனை நிதானமாக.
"அப்ப எதுக்கு என்னை இப்படி குறுகுறுன்னு பார்க்குற?"
"நான் எல்லாரையும் தான் பார்த்துட்டு இருக்கேன். உங்களை மட்டும்தான் பார்க்கிறேனா என்ன?"என்று தன் இதழ்களில் ஒரு நக்கல் புன்னகையைத் தேக்கி அவனையே மடக்கினாள்.
"என்னடி... ஆபீஸ்ல பார்த்தா புள்ளப்பூச்சி ஆட்டம் இருப்ப? இங்க வாய் ரொம்ப நீளுது!" என்றான் சித்தார்த், அவளது நக்கல் பேச்சில் கடுப்பாகி.
"இப்ப உங்களுக்கு என்ன பிரச்சனை? நான் உங்களைப் பார்க்கிறது பிரச்சினையா... இல்ல, நான் எல்லாரையும் பார்க்கிறது பிரச்சினையா?"என்று அவள் அடுத்து கேட்ட கேள்வியில் கடுப்பானவன்,
"நீ யாரையாவது பார்த்துத் தொல... ஆனா என்னை மட்டும் பார்க்காத, சரியா?"என்றான் அவன் சலிப்புடன்.
"அதைச் சொல்றதுக்கு நீங்க யாரு மிஸ்டர்?"என்று நித்யா சட்டென்று கேக்க .
"என்னைப் பார்த்தா நான் தான் சொல்லுவேன்!"
"நான் அப்படித்தான் பார்ப்பேன்..." என்று அவள் பிடிவாதமாகக் கூற, சித்தார்த்துக்குக் கோபம் உச்சிக்கு ஏறியது.
"பார்த்தா... உன் கண்ணு ரெண்டையும் நோண்டிடுவேன், ஜாக்கிரதை!" என்று விரலை நீட்டி மிரட்டினான்.
"எங்க... நோண்டிப் பாருங்க பார்ப்போம்!" என்று தன் அழகான கண்களை இன்னும் அகல விரித்து, அவனுக்கு சவால்விடுவது போல் கேக்க .
"உன்னை ஒன்னும் பண்ண மாட்டேன்ற தைரியத்துலதானே இப்படிப் பேசிட்டு இருக்க? ... அடுத்த வாரம் ஆபீஸ்க்கு வா, அங்க உன்னை வச்சுக்கிறேன்!" என்று அவன் தன் மேலதிகாரி (Boss) தோரணையில் மிரட்டல் விடுத்தான்.
அவன் பேசி முடிக்கும் முன்பே, நித்யா அவனை நேருக்கு நேர் பார்த்து, "வச்சுக்கெல்லாம் வேண்டாம்... கட்டிக்க வேணா செய்றீங்களா?"என்று சட்டென்று கேட்டுவிட,
அவள் அப்படி ஒரு கேள்வியைக் கேட்பாள் என்று சித்தார்த் துளியும் எதிர்பார்க்கவில்லை. அவனது ஒட்டுமொத்த மிரட்டலும், கோபமும் ஒரு கணம் அப்படியே உறைந்து போக, திகைப்புடன் அவளையே அழுத்தமாக பார்த்தான்.
"என்ன...?"என்பது போல் அவள் மீண்டும் தன் வில் புருவங்களை உயர்த்தி அவனது திகைப்பை ரசித்தாள்.
அவளது தைரியமான பேச்சில் அவனுக்குக் கடுப்பும் வெட்கமும் ஒன்றாய் எட்டிப்பார்த்தது. "உன்கிட்ட பேச வந்தேன் பாரு... என்னைச் சொல்லணும்!" என்று முணுமுணுத்தபடியே, மேற்கொண்டு அங்கிருந்தால் அவளை ஏதாவது சொல்லிவிடுவோம் என்று அவசரமாய் அங்கிருந்து நகர்ந்து சென்றான்.
அவன் போவதையே பார்த்த நித்யா, தன் உதட்டோரம் விரிந்த முறுவலுடன் , மீண்டும் அவனது அசைவுகளைத் தன் கண்களால் ஆசையோடு அவதானிக்க ஆரம்பித்தாள்.
ஒருவழியாக எல்லா சடங்குகளும் ஓய்ந்து மணமக்கள் இருவரும் அவனின் வீடு வந்தனர் , இரவு 10 மணியைத் தாண்டியிருந்தது.
மதிமதியை தயார் செய்து அவனது அறைக்கு அனுப்பிவைத்தனர்.
பூக்களின் நறுமணமும், பன்னீர் வாசமும் அந்த அறை முழுவதையும் ஆக்கிரமித்திருக்க... பால் செம்புடன், மெல்லிய நடுக்கத்தோடும் வெட்கத்தோடும் அறைக்குள் நுழைந்தாள் மதுமதி. கதவை மெல்லச் சாத்திவிட்டுத் திரும்பியவளுக்கு, அங்கே கட்டிலில் அமர்ந்திருந்த அவள் கணவன் ஜெய வசீகரனை நேருக்கு நேர் பார்க்க மீண்டும் ஒரு தயக்கம் தொற்றிக் கொண்டது.
தன் காலணிகளின் மெல்லிய சத்தத்துடன் கட்டிலை நோக்கி வந்தவள், பாலை மேஜை மீது வைத்துவிட்டுத் தலைகுனிந்து நின்றாள். அவளது நெற்றிச் சுட்டியும், கழுத்தில் மின்னிய அந்தப் புதிய திருநாணும் அவளுக்குப் பேரழகைத் தந்திருந்தன.
வசீகரன் மெல்லக் கட்டிலை விட்டு எழுந்து அவளருகே வந்தான். அவனது ஒவ்வொரு அடியிலும் மதுமதியின் இதயத் துடிப்பு எகிறியது. அவளது கைகளைப் பற்றிக் கொண்டவன், அவளைத் தன்புறம் மெதுவாகத் திருப்பினான்.
"இன்னும் எவ்வளவு நேரம் தரையைப் பார்ப்ப மது? இன்னைக்கு முழுவதும் என்னைவிட அந்த மேடைத் தரையைத்தான் நீ அதிகமா பார்த்திருக்க..." என்று அவன் காதலோடு சீண்ட, மதுமதி லேசாகச் சிரித்துக் கொண்டே தரையிலிருந்து தன் நயனங்களை உயர்த்தி அவனைக் கண்டாள்.
அவனது கண்களில் அவளை தன் உலகமாக ஏற்கும் ஆழமான, மிதமிஞ்சிய காதல் மட்டுமே தளும்பிக் கொண்டிருந்தது.
"நம்பவே முடியல மது... நீ இப்போ என் அருகில், என் அறைக்குள்ள, என் மனைவியா..." என்றவனின் குரலில் அத்தனை தவிப்பு, ஒரு கட்டத்துல எங்க உன்னை இழந்திடுவேனோன்னு பயம் இருந்தது.இனி எப்பவும் உன்னை எதற்காகவும் கலங்க விடமாட்டேன் என்றவனின் அவளின் மீதான அவனின் தேடலை அவளால் உணர முடிந்தது. .
அவளது முகத்தைத் தன் இரு கைகளாலும் தாங்கியவன், "இனி இந்த வசீகரனோட ஒவ்வொரு நாளும் உன்னோடதான் விடியப் போகுது. உன்னை என் உயிரை விடப் பத்திரமாப் பார்த்துப்பேன்டி என் பொண்டாட்டி ..." என்று உணர்ச்சிப் பெருக்கோடு கூறி, அவளது நெற்றியில் தன் காதலின் முத்திரையாய் ஆழமாக முத்தமிட்டான்.
அந்த முத்தத்தில் அவனின் இதழ்களின் சூட்டில் மதுமதியின் கண்கள் தானாக மூடிக்கொண்டன. அவளது கைகள் அவனது சட்டையைத் தஞ்சமாகப் பற்றிக்கொள்ள, இருவரின் மூச்சுக் காற்றும் ஒன்றோடொன்று கலந்து வெளியேற அவன் மெதுவாக முன்னேறினான் அவளது கண்கள், கன்னம் என்று முன்னேறியவன் அவளது இதழ்களில் இளைப்பாறினான், இருவருக்குமான முதல் இதழ் முத்தம் அவன் அவளின் இடைவளைக்க உணர்வுகளின் மேலீட்டில் அவளது கைகள் அவனது சட்டையை மேலும் கசக்கியது. அவர்களின் புதியதோர் வாழ்வின் தொடக்கத்தை மௌனமாக எழுதிக் கொண்டிருந்தனர்.
இருவருக்குமான அந்தத் தனிமையில், வார்த்தைகளை விட மௌனமும், ஸ்பரிசமுமே அதிகமாகப் பேசிக் கொண்டன. வெளியுலகின் சத்தங்கள் மறைந்து, அந்த அறையில் இரு இதயங்களின் சங்கமம் மட்டும் பேரமைதியுடன் அரங்கேறியது.
ஜன்னல் திரைச்சீலைகளின் வழியே சூரியனின் இளங்கதிர் வீச்சுகள் அறைக்குள் நுழைந்து, மதுமதியின் முகத்தில் பட்டு அவளை மெல்ல எழுப்பியது.
கண்களைக் கசக்கிக் கொண்டே விழித்தவள், பக்கத்தில் பார்த்தபோது படுக்கை காலியாக இருந்தது. எழ முயர்ச்சிக்க அவளின் நிலை அவளை எழ விடவில்லை.இரவின் இசையில் அரங்கேறிய அவர்களின் ஆலிக்கனம் அவளின் முகத்தை மேலும் சிவக்க வைத்தது.
"வசீ..." என்று மெல்ல அழைத்தபடி அவள் எழ முயல, குளியலறை கதவு திறந்து, தலையைத் துண்டால் துடைத்தபடியே கம்பீரமாக வெளிப்பட்டான் வசீகரன்.
அவளது கலைந்த கூந்தலும், தூக்கக் கலக்கமான முகமும் அவனுக்கு இன்னும் அழகாகத் தெரிந்தது. நேராக அவளருகே வந்தவன், கட்டிலின் ஓரத்தில் அமர்ந்து அவளது கைகளைப் பற்றிக் கொண்டான்.
"குட் மார்னிங், மிஸஸ் வசீகரன்!" என்று அவன் காதோடு சொல்ல, மதுமதியின் முகம் மீண்டும் ஒருமுறை வெட்கத்தால் சிவந்தது.
"டைம் என்ன ஆகுது வசீ? நான் சீக்கிரம் எழுந்து கீழே போகணும்... அத்தை என்ன நினைப்பாங்க?"என்று பதற்றமாகப் படுக்கையை விட்டு இறங்க முயன்றவளை, அவளது இடுப்போடு சேர்த்துத் தன் வசமிழுத்தான் வசீகரன்.
அச்சோ... விடுங்க வசீ!" என்று அவனிடமிருந்து விடுபட முயன்றாள் மதுமதி.
அவன் விட்டால்தானே? அவளது சிணுங்கலை ரசித்தபடி அவளது இடுப்பில் தன் பிடியை இன்னும் இறுக்கினான்.
"வசீ... ப்ளீஸ் விடுங்க! நீங்க குளிச்சிட்டீங்க, நான் இன்னும்..." என்று அவசர அவசரமாக அவள் பேசி முடிக்க முயல, அதற்குள் அவளது வார்த்தைகள் அனைத்தும் அவனது இதழ்களுக்குள் மௌனமாகிப் போயின. அவளது தவிப்பையும் பதற்றத்தையும் தன் இதழ் முத்தத்தால் அப்படியே அடக்கினான் வசீகரன்.
மெல்ல அவளைத் தன் பிடியிலிருந்து விடுவித்தவன், அவளது கண்களை ஆழமாகப் பார்த்தான். அவனது பார்வையில் இப்போது குறும்பு மறைந்து, அவளின் மீதான அதீத அக்கறையும் காதலும் குடியேறியிருந்தது.
"நேத்து... உன்னை நான் ரொம்ப கஷ்டப்படுத்திட்டேனா மது?"என்று அவளது கன்னங்களை வருடியபடி, குற்ற உணர்ச்சியும் காதலும் கலந்த குரலில் கேட்டான்.
கேட்டுவிட்டு, அவளது பதிலை எதிர்பாராமல் அவளது நெற்றியைத் தன் நெற்றியோடு சாய்த்து, அவளது சூடான மூச்சுக்காற்றைத் தன்னுள் ஆழமாகச் சுவாசித்தான். அவளது அருகாமை அவனுக்குள் அத்தனை நிம்மதியைத் தந்தது.
அவனது கேள்வியில் இருந்த அக்கறையில் உருகிப்போன மதுமதி, "இல்லை..." என்பது போல் மென்மையாகத் தலையசைத்தாள். அவளது முகம் இப்போதும் வெட்கத்தால் சிவந்திருந்தது.
"சரி... நீங்க முதல்ல போங்க, நான் சீக்கிரம் ரெடியாகிட்டு வர்றேன்,"என்று அவனை எப்படியாவது அந்த அறையை விட்டு அனுப்பப் பார்த்தாள் மதுமதி. அதற்கு மேல் அவனது ஊடுருவும் பார்வையை எதிர்கொள்ள அவளது வெக்கம் விடவில்லை.
அவளது வெக்கத்தை ரசித்தவன் , ஒரு குறும்பு புன்னகையுடன்” சரி நான் வெளியே போகணும்னா ஒரு கண்டிஷன்!”.
அவள் புரியாமல் புருவம் உயர்த்தி, “என்ன கண்டிஷன் ?” என்பது போல் பார்த்தாள்.
என்னை இப்ப ஒரு முறை “மாமா”ன்னு கூப்பிடனும் . இது தான் டீல் . “நீ மாமா ன்னு கூப்பிட்ட நான் வெளிய போறேன் ஓகேவா?” என்று புருவங்களை உயர்த்த
ஐயையோ .. இப்ப முடியாது என்றவளது கன்னங்களில் வெக்கத்தின் சிவப்பு படர
அச்சோ இப்படி வெக்கப்பட்டு என்னை கொல்லற என்றவன் விழிகளிலும் ரசனை கூட, அப்படியா? அப்போ நான் வெளிய போக மாட்டேன் . நீ ரெடியாகுற வரைக்கும் இங்க தான் என்றவனின் கள்ள சிரிப்பில்
அச்சோ என்றவள் சரி கூப்பிடறேன் என்றாள் விழிகளை தாழ்த்தி கொண்டு
என்னன்னு என்றான் அவன் வேண்டும் என்றே
அதான் நீங்க சொன்னீங்களே அப்படி என்றாள்
மெல்ல அவளின் அருகில் வந்தவன் அவளின் முகத்தை நிமிர்த்த
அவளது நீண்ட அழகிய நயனங்களில் மூழ்க துடித்த மனதை அடக்கி இப்ப கூப்பிடு என்றான்.
அவளும் அவனின் விழிகளை பார்த்துகொண்டே கண்களில் கரைக்கான காதலுடன் ஆசையும் காதலும் ததும்பும் குரலில், மிக மென்மையாக அழைத்தாள் .
மாமா ..
அவளது குரல் அவனது உள்ளத்தை துளைக்க அவளை இறுக்க அணைத்து .விடுவித்தவன் ,அவளது தவிப்பைப் புரிந்துகொண்டு மெல்லச் சிரித்த படி.. நான் பக்கத்து ரூமுக்குக் கிளம்புறேன் சரியா?"என்று அவளது மூக்கு நுனியைச் செல்லமாகத் தொட்டுவிட்டு, அங்கிருந்து நகர்ந்து சென்றான்.
அவன் சென்ற பிறகும், அவனது முத்தத்தின் சூடும், அணைப்பின் இறுக்கமும் , அவனது விழிகளின் ஆராதிப்பும் மதுமதியின் நெஞ்சுக்குள் இனிய பாடலாய் ரிங்காரமிட அவளும் மாற்றுடையை எடுத்துக்கொண்டு குளியலறை நோக்கி ஓடினாள்.
பிரிக்க முடியாத காதலும் எதிர்பார்ப்பும் கலந்த அவர்களின் புதிய வாழ்க்கை, அந்தப் பொன்னிற விடியலில் பேரழகோடு தொடங்கியது.

Last edited: