பார்வை 41
வசுந்தரா சென்றதும், மதுமதி அமைதியாகத் தன் அறைக்குள் சென்றாள். அவளது முக மாற்றத்தைக் கண்ட வசீகரனின் புருவங்கள் உயர்ந்தன. குழந்தையை மீனாட்சியிடம் ஒப்படைத்துவிட்டு, அவனும் நேராக அறைக்குள் சென்றான்.
உள்ளே நுழைந்தவன் கண்ணில் பட்டது, ஜன்னலின் அருகே முதுகு காட்டி நின்றிருந்த மதுமதிதான்.
"மது..." என்று அவன் அழைக்க, திரும்பியவளின் விழிகளில் கண்ணீர் திரண்டிருப்பதைக் கண்டு பதறினான். "ஏய்... என்ன ஆச்சு மது?"என்று அவளருகே ஓடிவந்தான்.
சட்டென்று அவனைக் கட்டித் தழுவிக் கொண்ட மதுமதி, "எனக்கு ரொம்பக் கஷ்டமா இருக்கு வசீ! அவங்க எவ்வளவு தவிச்சாங்கன்னு பார்த்தீங்கதானே? ஒரு நிமிஷம்... எங்க நாம உண்மையைச் சொல்லிடுவோமோன்னு எனக்கே பயமாயிடுச்சு என்றவளை அணைத்து தலையை வருடிவிட்டான்.
எனக்கும் வலிக்கத்தான் செய்யுது, ஆனா அவளோட எதிர்கால வாழ்க்கைக்கு இதுதான் நல்லது,"என்றான் அவன் .
"இனிமே அவளைப் பத்தி அவ கொஞ்சம் கொஞ்சமாவது யோசிப்பா,அவ சிங்கப்பூர் போறதும் நல்லதுதான். இங்கிருந்தா அவளால விக்ரமை மறக்க முடியாது. ஏன்... என்னாலேயே இன்னும் விக்ரமை மறக்க முடியல. ஏதோ ஒரு சம்பவம், ஏதோ ஒரு இடம், பொருள்ன்னு அவனை எனக்கு நினைவூட்டிட்டே இருக்கு. ஒரு பிரண்டா எனக்கே இப்படி இருக்கும்போது, அவனோட உயிருக்குயிரா வாழ்ந்த வசுந்தராவுக்கு எவ்வளவு கஷ்டமா இருக்கும்? என்றவனின் இறுகிய அணைப்பில் இருந்தவளும் அவனை தலையை தூக்கி பார்த்து ,எனக்கு அவங்களைப் பார்க்கவே கஷ்டமா இருந்தது வசீ... அவங்ககிட்ட உண்மையைச் சொல்லிடுவோமோன்னு பயமா இருந்தது. எங்க அவங்களுக்கு உண்மை தெரிஞ்சுடுமோன்னும் ஏன்னா... இனிமே நம்ம ஆர்த்தி குட்டியை என்னால அவங்ககிட்ட கொடுக்கவே முடியும் போல எனக்கு தோணல. எனக்கு நம்ம பாப்பா வேணும் வசீ...!" என்று அவன் மார்பில் முகம் புதைத்துக் கதறினாள்.
அவளைத் தன் நெஞ்சோடு இன்னும் அரவணைத்துக் கொண்ட வசீகரன், "கொடுக்க மாட்டோம் மது... அவ நம்ம பொண்ணு, நம்மகிட்டதான் இருப்பா, கவலைப்படாத,"என்று அவளைத் தேற்றினான்.
அவனது வார்த்தைகளில் நிம்மதியடைந்து மெல்ல புன்னகைத்த மதுமதியின் அணைப்பிலேயே உறைந்திருந்தவன் இப்போது அவளை கணவன் பார்வை பார்த்தான்; அவனது விழிகளில் குறும்பு மின்ன,
"உனக்கு எவ்வளவு பாப்பா வேணும்னு சொல்லு மை லிட்டில் லவ்.. நான் தர ரெடியாதான் இருக்கேன்!" என்று அவன் குறும்போடு காதலில் குழைந்து பேச...
"அவன் என்ன சொல்ல வருகிறான் என்று உணர்ந்தவள் உங்களை...!" என்று வெட்கத்தில் முகம் சிவந்த மதுமதி, அவனது தோள்களில் இரண்டு அடியைப் போட்டாள்.
"அடியே போதும்... வலிக்குதுடி லிட்டில் டெவில் (Little Devil)!"என்று அவன் சிரிக்க,
"நான் உங்களுக்கு டெவிலா?"என்று செல்லமாகக் கேட்டுவிட்டு மீண்டும் இரண்டு அடிகள் வைத்தாள்.
"சரி, சரி... அடிக்கணும்னு முடிவு பண்ணிட்டா, கையால அடிக்காம... வாயால அடிக்கலாம்ல?"என்று அவன் கள்ளச் சிரிப்புடன் நெருங்க அவனது நெஞ்சின் மீது கை வைத்து தள்ளியவள் அவனை அடிக்கவர, அவளிடமிருந்து தப்பிக்க வசீகரன் அறையெங்கும் ஓடினான். அவள் துரத்திக்கொண்டு ஓட வசீகரன் கட்டிலில் பொத்தென்று விழ, அவனைத் தொடர்ந்து வந்த மதுமதியும் நிலைதடுமாறி அவன் மீதே விழுந்தாள்.
இருவரும் மூச்சு வாங்க ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டு, சட்டென்று சிரித்துவிட்டனர். அவளது இடையில் தன் கைகளைக் கோர்த்து அணைத்துக் கொண்டவன், நொடிப் பொழுதில் அவளைச் சுழற்றித் தனக்குக் கீழே கிடத்தி, அவளுக்கு மேலே வந்தான்.
"வசீ... கதவு திறந்திருக்கு!" என்று தடுத்தவளின் பாதி வார்த்தைகள், அவனது இதழ் முத்தத்திற்குள் அடங்கிப்போயின.
"ம்ம்... ம்ம்..." என்ற அவளது முனகல்கள், அவனது விரல்கள் அவளது மேனியில் நிகழ்த்திய தீண்டல் விளையாட்டில் அவளது தேகம் உருகத் தொடங்கவும் அடங்கியது . நீண்டுகொண்டிருந்த அந்த முத்தப் போர், சட்டென்று அவனது கைபேசியின் ஒலியால் ஒரு முடிவுக்கு வந்தது.
அவளை விட்டு விலகியவனுக்கு, அவளது அருகாமையை விட்டு விலகவே மனமில்லை. அவளது நெருக்கம் தன்னுள் தாறுமாறாக தூண்டிவிடப்பட்ட உணர்வுகளை கட்டுப்படுத்தும் வகை தெரியாது தனது விரல் கொண்டு தலைமுடியை கோதியவாறு தன்னை நிலைப்படுத்தினான்.,.
படுக்கையிலிருந்து எழுந்து தன் ஆடைகளைச் சரிசெய்து கொண்டிருந்த மதுமதியை பார்த்தவன் கள்ளுண்ட வண்டாய் எச்சிலை கூட்டி விழுங்கியபடி , "உன்னை நைட் வந்து பார்த்துக்கிறேன்..." என்று அவளைப் பார்த்துக் கண் சிமிட்டினான், அவனது ஊடுருவும் பார்வையை அவளால் எதிர்கொள்ள முடியவில்லை. அவளையே பார்த்தபடி அவன் கைபேசி அழைப்பை ஏற்க, அவள் வெட்கத்துடன் அங்கிருந்து நழுவி ஓடினாள். அவளது ஓட்டத்தைக் கண்டு அவனது இதழ்களிலும் ஒரு மெல்லிய புன்னகை விரிந்தது.
கைபேசியில் மித்ரன் தான் அழைத்திருந்தான். "வசீ... இன்னைக்கு ஆபீஸ் வருவியா மாப்ள?"என்று கேட்க,
"சரியான கரடிடா..." என்று தன் வாய்க்குள்ளேயே முணுமுணுத்தான் வசீகரன்.
மறுமுனையில் மித்ரனுக்குப் புரியாமல், "என்ன... என்ன சொன்ன?"என்று குழப்பத்துடன் கேட்டான்.
"ம்ம்... வெண்ணெய்னு சொன்னேன்!" என்றான் வசீ சலிப்புடன்.
"நீ இப்ப ரொம்பக் கோபத்துல இருக்கிற போலையேடா?"என்றான் மித்ரன் .
"சத்தியமா கோபத்துலதான்டா இருக்கேன்!"
"டேய்... நான் ஒன்னும் பண்ணலையேடா, எதுக்குடா என்மேல கோபம்?"
"அதான் இப்ப போன் பண்ணிட்டியே... அப்புறம் என்ன?"
"போன் பண்ணதுக்காடா இவ்வளவு கோபம்?"என்றான் மித்ரன் அப்பாவியாக.
"நேர்ல மட்டும் வாடா... வச்சுக்கிறேன் உன்னை!"
"சரி மாப்ள... நீ ரொம்பக் கடுப்புல இருக்க போல இருக்கு, நான் அப்புறம் கூப்பிடவா?"என்று நைஸாகக் நழுவப் பார்த்தான் மித்ரன்.
"இருடா இருடா... நான் மதியம் போல ஆபீஸ்க்கு வருவேன். உன்னை அங்க வந்து நல்லா கவனிச்சுக்கிறேன் மச்சான்!" என்றான் வசீகரன்.
"டேய்... உன் டோனே சரியில்லையேடா?"என்று மித்ரன் அஞ்ச, அதற்குள் வசீகரனின் குரலில் இருந்த விளையாட்டுத்தனம் மறைந்து ஒரு கம்பீரம் குடியேறியது. "மதியம் வர்றேன். அந்த மேனகாவை ரெடியா இருக்கச் சொல்லு. இன்னைக்கு நாம அந்த 'ஆதிரையன் காலேஜ் 'ப்ராஜெக்ட்க்கு போகணும், ஞாபகம் இருக்குல்ல?"என்றான்.
"நல்லா இருக்கு மச்சான்! ஹனிமூன் கொண்டாடிட்டு ஹேப்பியா இருப்பேன்னு பார்த்தா, இப்படி ஆபீஸ் வேலைன்னு ரொம்பக் கடுப்பா இருக்கியேடா?"
"அதெல்லாம் ஒன்னும் இல்லை... நான் நல்லாத்தான் இருக்கேன். ஆப்டர்நூன் மீட் பண்ணலாம், பாய்!" என்று சொல்லி அழைப்பைத் துண்டித்தான் வசீகரன்.
அறையை விட்டு வெளியே வந்த வசீகரனின் விழிகள் தன் மனைவியைத் தான் தேடின. அப்போது அங்கே வந்த மீனாட்சி அம்மாள், "வசீ... இன்னைக்கு மதியம் போல ஆபீஸ் வரேன்னு அப்பாக்கிட்ட சொல்லியிருந்தியாமே?"என்றார்.
"ஆமாம்மா... போகணும்,"என்றான் தன் தேடலைத் தொடர்ந்தபடி.
"சரி, மதியம் லஞ்ச் முடிச்சிட்டுப் போ,"என்று அவர் கூற, "சரிம்மா,"என்றான்.
அவனது தேடலைப் புரிந்து கொண்ட மீனாட்சி அம்மாள் சிரித்துக் கொண்டே, "மது கிச்சன்ல தான் இருக்கா வசீ... உனக்குத்தான் ஏதோ ஸ்பெஷலா செஞ்சிட்டு இருக்கா,"என்றார்.
வசீகரன் தன் பார்வையைத் திருப்பினான். அங்கே டைனிங் டேபிளில் உணவுகளை எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள் மதுமதி.
"போ... போய் சாப்பிடு, அப்புறம் புறப்படலாம்,"என்று அவனிடம் சொல்லியவர், "மது... வசீ வர்றான் பாரு, ரெண்டு பேரும் சாப்பிடுங்க. நான் பாப்பாவுக்குச் சாப்பாடு கொடுத்துட்டு அப்புறமா சாப்பிட்டுக்கிறேன்,"என்று கூறி அவர்களுக்குத் தனிமை கொடுத்துவிட்டுத் குழந்தையுடன் தன் அறைக்குச் சென்றார்.
மதுமதி அவனுக்கு உணவு பரிமாற முற்பட, அவளது கையைப் பிடித்துத் தன் அருகில் அமர வைத்தான் வசீகரன். "நீயும் இரு மது... அம்மா நம்ம ரெண்டு பேரையும் தான் சாப்பிடச் சொன்னாங்க, என்னை மட்டும் இல்லை, புரியுதா?"என்றவன், அவளுக்கு உணவைப் பரிமாறினான்.
"வசீ... நானே வச்சுக்குவேன்,"என்று அவள் தடுக்க முயல,
"நான் வச்சா சாப்பிட மாட்டியா?"என்று அவன் கேட்க, அவனது அந்தப் அன்பில் காதலின் அனுசரணையில் மதுமதியின் மனம் உருகியது. அவனையே தன் காதல் ததும்பும் கண்களால் பார்த்தாள்.
"அடியே போதும்டி... என்னை இப்படி கண்ணாலேயே சாப்பிட்டது! முதல்ல இந்தச் சாப்பாட்டைச் சாப்பிடு,"என்றான் அவன் அவளது ஆழமான பார்வையின் நெடி தாளாமல் குறும்போடு.
"சீ, சீ... உங்களுக்கு எப்பவும் இதே பேச்சுதானா?"என்றாள் சினுங்கலாக.
"ஏய்... எனக்கு எப்பவும் ஒரே பேச்சுதாண்டி! இப்போ ஒரு பேச்சு, அப்போ ஒரு பேச்செல்லாம் என்கிட்ட கிடையாது,"என்றான் அவன் கள்ள புன்னகையுடன்.
"வசீ... சாப்பிடுங்க முதல்ல! என்ன பேசிட்டு இருக்கீங்க?"என்று அவளது கன்னங்கள் வெட்கத்தில் சிவப்பேற, "இப்படியெல்லாம் நீங்க பேசுவீங்கன்னு எனக்குத் தெரியவே தெரியாது... என்னென்னவெல்லாம் பேசுறீங்க பாருங்க!"
மீண்டும் அவன் அவளை வம்பிழுக்க தொடங்க
"வசீ... போதும் பேசியது , நீங்க முதல்ல சாப்பிடுங்க. அப்புறம் ஆபீஸ்க்கு நேரமாயிடும்,"என்று அவனது தட்டிற்குள் உணவை நகர்த்தினாள் மதுமதி.
அவனோ, அவளது சிவந்த முகத்தையே பருகியபடி, "உன் கையால ஊட்டி விட்டா இன்னும் சீக்கிரம் சாப்பிடுவேன் மது..." என்றான் குறும்புடன் .
"வசீ...! அத்தை பக்கத்து ரூம்ல தான் இருக்காங்க,"என்று சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு, வேறு வழியின்றி ஒரு சிறு உருண்டையை அவனுக்கு ஊட்டினாள். அவளது விரல்கள் தன் இதழ்களில் பட்ட அந்த நொடி, வசீகரனின் கண்கள் மூடித் திறந்தன. அந்த ஒற்றைத் தீண்டலில், அவளது மொத்தக் காதலும் அவனுள் ஒரு பூகம்பத்தை நிகழ்த்தியது. . இப்படியே அவனது கலாட்டாக்களுடன் இருவருமாக உண்டு முடித்தனர்.
உணவு முடிந்து, வசீகரன் அலுவலகம் கிளம்ப ஆயத்தமானான். மாடிக்குச் சென்று தன் லேப்டாப் பேகையும், கார் சாவியையும் எடுத்துக் கொண்டு கீழே இறங்கி வந்தான். வாசற்படி வரை அவனோடு நடந்து வந்தாள் மதுமதி.
காரின் அருகே சென்ற வசீகரன், சட்டென்று நின்று அவள்புறம் திரும்பினான்.
"நான் வரவா மது?"என்றான், செல்ல மனமே இல்லாமல்.
ஒரு சிறு புன்னகையுடன் அவனது அருகில் சென்று அவனது சட்டைக் காலரை மெல்லச் சரிசெய்தபடி."ம்ம்... என்று மெல்ல தலையசைத்தாள்.
அவளது கைகளைப் பற்றிக் கொண்டவன், அவளைத் தன் நெஞ்சோடு இன்னும் ஒருமுறை ஆழமாக இழுத்து அணைத்துக் கொண்டான். "ஆபீஸ்ல இருந்தாலும் என் ஞாபகம் முழுக்க இங்கதான் இருக்கும். சீக்கிரம் வேலையை முடிச்சுட்டு ஓடி வந்துடுறேன் மை லிட்டில் லவ்..." என்று அவளது காதோரம் ரகசியமாய் மொழிந்தான்.
மதுமதி அவனது மார்பில் முகம் புதைத்து, "நானும் காத்துட்டே இருப்பேன் ..." என்றாள்.
அவளிடமிருந்து விடுபட்டு அவன் காரில் ஏறி அமர, கார் மெல்ல சாந்தி வனத்தின் வாயிலைக் கடந்து நகர்ந்தது. கார் மறையும் வரை வாசலிலேயே நின்று பார்த்துக் கொண்டிருந்தாள் மதுமதி.
அவர்களின் காதல் அப்போது புரிதலில்லாமல் பிரிந்திருந்தாலும் இருவரது காதலும் ஒருவரை ஒருவர் விலக விடவில்லை. அவை அனைத்தையும் கடந்து தங்களை வாழ வைக்கப் போவது இந்த மிதமிஞ்சிய காதல் மட்டும்தான் என்பதை இருவருமே உணர்ந்திருந்தனர்.
வசீகரனின் கம்பீரமான ஆதிக்கமும், மதுமதியின் மௌனமான நாணமும், ஆர்த்தி குட்டியின் மழலைச் சிரிப்பும் இணைந்து, அவர்களின் காதலை வெறும் வார்த்தைகளாக இல்லாமல், ஒரு காவியமாக மாற்றியிருந்தது.
காலங்கள் மாறலாம், மனிதர்கள் மறையலாம்... ஆனால், வசீகரன்-மதுமதியின் இந்தக் காதல், அவர்களை எவராலும் பிரிக்க முடியாத பேரன்பின் ஆதிக்கமாய் என்றும் நிலைத்திருக்கும்!