கதை 12
"வெள்ளவத்தை ஸ்டேஷன்ல ஒரு குட்டிப் பொண்ணு கிழிஞ்ச உடுப்புப் போட்டு கையில தட்டோட அவ அம்மா கூட இருந்தா. பாக்கும் போதே கண்ணு கலங்கிடுச்சு. உங்கள மாதிரி ஒரு அப்பா இருந்திருந்தா அவளும் இளவரசியா வாழ்ந்திருப்பாளே. உங்கள எனக்குத் தந்த கடவுளுக்கு நான் ஆயுள் வரை கடன்பட்டிருக்கேன்ப்பா"
-ஆதிராவின் டயரி
ஆதிரா வரும் வரை கடலின் மடியில் கால் நீட்டி அமர்ந்து, கரையைத் தழுவும் அலைகளைப் பார்த்திருந்தான் விஷ்ணு.
காதலனின் கரம் கோர்த்துக் கடலில் விளையாடும் காதலியும், அவள் மீது நீரைத் தெளித்துச் சிரித்திடும் ஆடவனும் அவன் விழிகளுக்கு விருந்தாக, நொடிப்பொழுதில் தன் காதல் நினைவுகள் முட்டிக் கொண்டு வந்தன.
தன் காதலை மறுத்து அவள் வேறொருவனுடன் இணையப் போவதாகக் கூறி விட்டாள். அவனும் யதார்த்தமாக ஏற்றுக் கொள்ள நினைத்தான். பெரிதாக எந்த உணர்வுகளையும் காட்டிக் கொள்ளவில்லை. ஆனால் அவனுள்ளும் உண்ணவுகள் உண்டல்லவா?
ஆதிரா சம்மதம் சொல்லியிருந்தால் தன்னாலும் இப்படி இருந்திருக்கலாமே என்று அவன் மனம் ஏங்கியது. அவளது கையைத் தன் கைக்குள் பட்டாம்பூச்சி போல் பொத்திப் பாதுகாப்பது அவனது காதலின் அதிகபட்ச ஆசைகளுள் ஒன்றாக இருந்தது.
சட்டெனத் தெளிந்து விட்டான். இது தவறு. அவள் தனக்குச் சொந்தமில்லை. இப்படி நினைக்கக் கூடாது. நட்பை மட்டுமே அவளிடம் எதிர்பார்க்க வேண்டும் என்று மனதைத் திசை திருப்பிக் கொண்டான். வலியையும் ஏக்கத்தையும் உள்ளுக்குள் புதைத்து புன்னகையை உதட்டில் படர விட்டான்.
"விஷ்" எனும் அழைப்போடு வந்து அவனருகில் அமர்ந்தாள் ஆதிரா.
"பெஞ்சுக்குப் போவோமா?" அவன் எழுந்து கொள்ள எத்தனிக்க, "இல்ல இப்படியே இருப்போம்" என்றபடி கால்களை நீட்டிக் கொண்டாள்.
"என்னாச்சுடா ஆதி?" அவளது முகத்தில் அப்பட்டமான களைப்பு குடிகொண்டிருந்தது.
"கால் வலிக்குது விஷ். இன்னிக்கு யுனில ப்ரசன்டேஷன், அசைமண்ட் சப்மிஷன், ஜூனியர் பிள்ளைங்களுக்கு ஹெல்ப் பண்ண காலேஜ் ஹவுஸ் போயிட்டு அப்படி இப்படியெண்டு வழமைக்கு மீறி அதிகமா நடந்துட்டேன். அப்படி நடந்தா எனக்கு எப்பவும் கால் வலி வரும். பிறகு கடைலயும் நின்னுட்டே வேலை பாத்ததுல வலி அதிகமாயிடுச்சு" முகத்தைச் சுருக்கிக் கொண்டு சொன்னாள் அவள்.
"தைலம் இருக்கா உன் கிட்ட? இல்லன்னா கால் வலிக்குப் பூசுற பாம் இருக்குமே. நைட் தூங்க முன்னால அதைப் பூசிக்க" என்று கூற, "என் கிட்ட இருந்தத ஹாஸ்டல்ல அக்கா ஒருத்தர் எடுத்துட்டுப் போய் திரும்பத் தரல. வாங்கினாச் சரி" என்றாள்.
"உனக்கு எப்ப எக்ஸாம்? படிக்கிற தானே?" ஆதிரா வினவ, "படிச்சிட்டுத் தான் இருக்கேன். நைட்ல படிக்கிறேன். முன்ன மாதிரி படிக்க முடியல. படிச்சு ரொம்ப நாளானதால இப்ப சோம்பேறித்தனமா இருக்கு" வலது புருவத்தை ஒற்றை விரலால் நீவி விட்டுக் கொண்டான்.
"அப்படிச் சொல்லக் கூடாது விஷ். போட்டிப் பரீட்சை தானே? நல்ல போட்டியா இருக்கும். கொஞ்சம் ட்ரை பண்ணிப் படி. நீ இந்த சமூகத்துக்கு தேவை டா" என்று கூற, "நான் எப்படித் தேவையாம்?" எனக் கேட்டான்.
"கண்டிப்பாத் தேவை. உன் படிப்பை சமூகத்துக்குக் கொடுக்க வேண்டாமா? இப்போ வள வீணாக்கம் நடக்குது" அவள் ஏதோ யோசனையோடு சொல்ல, "வளவீணாக்கம்னா? புரியல" புருவம் சுருக்கினான்.
"நீ டிகிரி வாங்கின ஆள். இப்போ சாதாரணமா ஒரு கடையில் வேலை செஞ்சிட்டு இருக்க. உன்னோட திறமைக்கு ஏற்ற வேலை இது இல்லயே. இதனால உன் திறமை வீணடிக்கப்படுது"
"அது சரி. என்னை எப்படி வளமெண்டு சொல்லுற? நிலம், காடு இதைத் தானே பொதுவா வளம் எண்டு சொல்வாங்க"
"அதெல்லாம் பௌதீக வளம். நீ மனித வளம். பொதுவா எல்லா மனுஷங்களையும் வளம் எண்டு சொல்ல மாட்டோம். அறிவு, திறமை, அனுபவம் இதெல்லாம் இருக்கிற ஆட்களைப் பொருளியல்ல மனித வளம் என்போம். இவங்க பூரணமா பயன்படுத்தப்பட வேணும்"
அவள் பேசும் போது கன்னத்தில் கை வைத்துப் பார்த்திருந்தான். அவனது இதழ்களில் அழகிய புன்னகை.
"எக்கானாமிக்ஸ் ஸ்பெஷல் செய்றண்டு ப்ரூஃப் பண்ணுற பாத்தியா?" மெல்லமாய் இதழ் பிரித்துச் சிரித்தான்.
"ஹேய்!" அவளது உதட்டிலும் புன்னகை மலர்ந்தது.
"சாப்பிட்டியா ஆதி?" அவன் மெதுவாகக் கேட்க, "போர்டிங் போய் தான் சாப்பிடோனும்" அவளது முகம் கொஞ்சம் சுருங்கிப் போனது.
"அதுக்கு ஏன் உன் முகம் யாழ்ப்பாணம் வரை வளையுது?"
"இன்னிக்கு மீன் தர்ற நாள். அவங்க தர்ற மீன் எனக்கு அவ்வளவாப் பிடிக்காது. எப்பவும் ஒரே வகை மீன்"
"காலில இருக்கிற ஆட்களுக்கு அப்படித் தான் சொல்வாங்க. உங்களுக்கு வெரைட்டி வெரைட்டியா மீன் கிடைக்குமே"
"இல்லாமலா? எங்க வீட்ல அதிகமா மீன் தான். அதுலயும் எங்கம்மா வெங்காயம் போட்டு திருக்கை மீன் அவிப்பாங்க. நல்ல ருசி"
"கருவாடு கூடக் கிடைக்குமே. நாங்க ஒரு தடவை காலி கோட்டைக்கு வந்தப்ப பாத்தோம். டின் மீன் செய்ய ஃபேக்டரிக்கும் போனோம். சீ ரோட் நெடுக பலகை அடிச்சி மீன் விக்கிறாங்க. வலை போட்டு மீன் பிடிக்கிறது, தோணிய நெறய பேர் சேர்ந்து இழுக்குறது இதெல்லாம் பாத்தோம்" விஷ்ணு பழைய நினைவுகளில் உலா வந்தான்.
"நானும் அப்பா கூட சில நேரம் கடலுக்குப் போவேன். அந்தி நேரம் கடல்ல வலை இழுக்குறதைப் பாத்துட்டு இருப்பேன். ஏலேலோ பாடிட்டு அவங்க வலை இழுக்குறதப் பாக்க நல்லாருக்கும். ஒரு நாள் நெத்திலி மீன் நெறயப் பிடிபட்டது. பாத்துட்டு இருந்த எங்களுக்கும் தந்தாங்க" ஆதிராவுக்கும் சிறு வயது ஞாபகங்கள் அலைமோதின.
"சரி ஆதி. மீன் பிடிக்காதெண்டு பசியோட தூங்காத. ஏதாச்சும் சாப்பிடு" என்று அவன் அக்கறையோடு கூற, "சாப்பிட்டுத் தான் தூங்குவேன். சாப்பாடு பிடிக்கலைன்னு சொல்லவே கூடாதுல்ல விஷ்? இது கூட இல்லாம எவ்ளோ பேர் இருக்காங்க?" அவள் சொன்ன போது அவனும் தலையசைத்தான்.
"அதான் டா. இங்க நீயே பாக்குறல்ல. சாப்பிட ஒண்டும் இல்லாம ரோட்ல கை நீட்டிட்டு எத்தனை பேர் இருக்காங்க. யாரோ சாப்பிட்டுப் போட்ட பார்சல்ல மிச்சம் இருக்கிற கொஞ்சத்தையும் எடுத்து வாயில போட்டுக்குற மனுஷங்களைக் காணுறப்ப மனசு ஒரு மாதிரியாப் போயிடும்" அவனது குரலில் மெல்லிய கவலை படர்ந்தது.
"உண்மை தான் விஷ். கொழும்புக்கு வந்த பிறகு தினமும் இந்த மாதிரி காட்சிகளக் காணுறேன். கால் இல்லாம, கை இல்லாம, சாப்பாடு இல்லாம இருக்கிறவங்களக் காணும் போது நாங்க அந்தக் கடவுளுக்கு எவ்ளோ நன்றிக் கடன் பட்டிருக்கோம் எண்டு நெனப்பேன்" அவளது குரலும் கொஞ்சம் கலங்கி ஒலித்தது.
நொடி நேர மௌனம் அவர்களை ஆட்கொண்டது. மௌனத்தை ஆதிராவே முதலில் கலைத்தாள்.
"உனக்கொன்னு தெரியுமா விஷ்? இன்னிக்குப் ப்ரசன்டேஷன் அதுவும் இங்கிலீஷ்ல. திருப்தியாப் பண்ணி முடிச்சேன். அதை உனக்குச் சொல்ல வேணுமெண்டு நெனச்சேன்"
அவனது முகம் மலர்ந்தது. மகிழ்வோடு அவளை ஏறிட்டான்.
"வாவ் சூப்பர் ஆதி. வாழ்த்துகள்"
"அம்மா கால் பண்ணுனாங்க. அந்தப் பொடியன் வீட்ல எனக்குச் சம்மதம் எண்டு சொல்லிட்டாங்களாம். சீக்கிரமே பொண்ணு பாக்க வர்றாங்களாம்" என்று சொல்ல, "நல்ல விஷயம் தானே? அவங்க வந்தாச் சொல்லு" எனப் பதில் கூற அவளது விழிகளோ அவனையே நோக்கின.
"என்ன?"
"ஒன்னுமில்ல" மறுப்பாகத் தலையை அசைத்தாள்.
"உனக்குக் கவலையா இல்லையா விஷ்?" அவளே கேள்வியெழுப்பினாள்.
"கவலைப்பட்டா நீ எனக்குக் கெடப்பியா ஆதி?" எதிர்க் கேள்வி கேட்டான் காளை.
உதடுகள் ஒன்றுடன் ஒன்று பிணைந்து கொண்டன. பதிலில்லை அவளிடம்.
"உன் வாழ்க்கைக்குத் தேவையான முடிவை நீ எடுத்துட்ட. அதை என் கிட்டயும் சொல்லிட்ட. நானும் ஏத்துக்கிட்டேன். எனக்குக் கவலையா இருந்தாலும், என் கவலைய நெனச்சி நீ கவலப்பட்டாலும் ஒன்னும் மாறப் போறதில்ல. அதனால திரும்ப இப்படிக் கேக்காத ஆதி" நுண்ணியதொரு அழுத்தம் அவனிடம் வெளிப்பட்டது.
"சாரி விஷ்" தலையைக் குனித்துக் கொண்டாள் ஆதிரா.
"சாரி கேக்க இதுல பெருசா ஒண்டும் இல்ல. டைம் ஆச்சு. போகலாமா?" கைக்கடிகாரத்தைப் பார்த்தபடி வினவினான்.
"சரி" தலையை அசைத்து விட்டு எழுந்து கொண்டாள்.
அவனும் எழுந்து கால்களில் ஒட்டியிருந்த மணலைத் தட்டிக் கொண்டான்.
இருவருள்ளும் சொல்லத் தெரியாததொரு மௌனம். இரு மனங்களும் அலைபாய்ந்தன. வார்த்தைகள் நெஞ்சுக்குள் முட்டினாலும், தொண்டைக்குழி தாண்டி வெளியேற மறுத்தன.
பாதையைக் கடந்து சற்று முன்னே சென்ற விஷ்ணு கடையினுள் நுழைந்து சித்தாலேப்ப களிம்பு டப்பா ஒன்றை வாங்கி வந்து நீட்டினான்.
"தாங்க் யூ" என வாங்கிக் கொண்டாள் ஆதிரா.
மௌனக் காவலனிடம் கைது செய்யப்பட்டவாறே இருவரும் ஒன்றாக நடந்தார்கள். அவளது விடுதியும் வந்து விட்டது.
உள்ளே செல்ல எத்தனித்தவள் திரும்பிப் பார்த்து, "எதையும் யோசிக்காம ஒழுங்காப் படி" என்றுரைத்த அதே சமயம், "தேவை இல்லாத யோசனையை வெச்சுட்டுப் படிக்கிற வேலையப் பாக்கோனும்" என்றிருந்தான் அவனும்.
இருவரது முகத்திலும் புன்னகை முகிழ்த்தது. அவளிடம் வந்த விஷ்ணு "சாப்பிட்டு இதைப் பூசிட்டுத் தூங்கு" என்றான்.
"ம்ம்" தலையை ஆட்டியவளுக்கு உள்ளே செல்ல முடியாமல் மனம் முரண்டியது.
"போ ஆதி" அவளது தலையில் கை வைத்துச் செல்லமாக அழுத்த, கையசைத்து விட்டுச் சென்றாள் ஆதிரா.
தொடரும்...