அத்தியாயம் 10
நேரம் இரவு ஒன்பதை நெருங்கிக் கொண்டு இருந்தது.
சக்தியின் முன்னே இருந்த மேஜை முழுவதும் காகிதங்களால் நிறைந்திருந்தது. காலை ஜெகதீஸ்வரன் கையொப்பம் இட்டிருந்த கோப்பினில் முடிவு செய்யப்படாதிருந்த பகுதிக்கான வித விதமான வடிவங்கள் காகிதங்களில் வரையப்பட்டு அவள் முன்னே பரப்பப்பட்டு கிடந்தது.
ஒவ்வொன்றையும் எடுத்து பார்த்தவளின் மனதுக்கு நிறைவை தான் எதுவும் கொடுக்கவில்லை.
கிட்டத்தட்ட ஆறு வரைவுகள் கிடந்தன. பெரிய வித்தியாசங்கள் எதுவும் இல்லை அவைகளுக்கு இடையே. அவர்களைச் சொல்லியும் குற்றமில்லை. குறைகள் வந்து விடக்கூடாது என்று கவனமாக இது நாள் வரை நடப்பில் இருந்த அமைப்பையே சிற்சில திருத்தங்கள் கொடுத்து அவர்களும் வரைந்து இருக்க எதிலும் தனித்துவமாக இருக்க வேண்டும் என்று எண்ணும் சக்தியை அவை திருப்தி செய்யவில்லை.
அனைத்தையும் எடுத்து கவனமாக பத்திரப்படுத்தியவள் தன் முன்னே இருந்த மடிக்கணினியின் திரையை பார்த்தாள்.
“குட் வொர்க்” செவியை நிறைத்த அந்த வார்த்தைகள் மனதிற்குள் உற்சாகத்தை கொடுத்து ஒரு வடிவத்தை காற்றினில் வரைந்து காட்ட, மடிக்கணினியின் திரையில் கோடுகளை இழுக்க அவள் ஆரம்பித்த நொடியில், அவள் மேசையின் ஓரத்தில் கேட்பாரற்று கிடந்த அலைபேசி ஒளிர்ந்தது.
“Bharath calling… (பரத் காலிங்…)” அலைபேசியின் திறையில் ஒளிர்ந்த எழுத்துக்களில் கண்கள் சுருங்கியது சக்திக்கு.
அந்த எழுத்துக்களுக்கு மேலே தெரிந்த நேரத்தை ஒரு நொடி ஆழ்ந்து பார்த்தவள் தோள்களை குலுக்கிக் கொண்டு அழைப்பை ஏற்றாள்.
“ஹலோ…”
“ஹாய் சக்தி… பிஸியா?”
“கொஞ்சம்.”
“அப்போ நான் டிஸ்டர்ப் பண்ணலையே?”
“இல்ல பரத். சொல்லுங்க…”
“சொல்ல விஷயம் இருக்கு. ஆனா அதுக்கு முன்னாடி ஒரு விஷயம் கேட்கணும்.”
“கேளுங்க…”
“நாம மீட் பண்ணி ரெண்டு மாசத்துக்கு மேல ஆச்சு. ஆனா எதுக்காக மீட் பண்ணோமோ அது இன்னும் முடிவாகாம இருக்குது. அன்னைக்கு நான் கேட்ட குவெஸ்டினுக்கு இன்னும் ஆன்ஸர் கிடைக்கலையா?”
அந்த கேள்வியில் அவளது விரல்கள் ஒரு நொடி அசையாமல் நின்றது.
“எந்த கொஸ்டின் பரத்?”
“உன் மனசுல யாராவது இருக்காங்களான்னு கேட்டேன்…”
பதில் சொல்லவில்லை சக்தி. நிமிடங்களைக் கடந்தது அந்த அமைதி. அதை உடைக்காமல் காத்திருந்தான் பரத்.
“பரத்...” தயக்கமாக அவள் இழுக்க பதில் தெரிந்து போனது பரதனுக்கு.
இரண்டு மாதங்கள் பேசிக் கொண்டுதானே இருக்கிறான். அவர்கள் இருவருக்கும் இடையே அழகான நட்பு இருந்ததே தவிர அதற்கு அடுத்த கட்டத்தை நோக்கி அந்த உறவை எடுத்துச் செல்ல சக்தி எந்தவித முனைப்பையும் காட்டவில்லை என்பதையும் அவன் அந்த முயற்சியை எடுத்தாலும் அதை அவள் ஊக்குவிப்பதில்லை என்பதையும் உணர்ந்து தானே இருந்தான்.
அதனாலயே தான் இன்றோடு இந்த விஷயத்தை முடித்து, அவளது தவிப்பிற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க எண்ணியிருந்தான் சக்தியின் புது நண்பன்.
“ஹோல்ட் ஆன் சக்தி… அத பத்தி தான் உன்கிட்ட பேசணும்னு கால் பண்னேன். உன்னோட பேசின இந்த ரெண்டு மாசத்துல ஃப்ரெண்ட்ஷிப் மட்டும் தான் பில்ட் பண்ண முடிஞ்சது. அதுக்கு அடுத்த ஸ்டெப் போக முடியல. உன்ன முதல் முதல் பார்க்க வந்தப்ப என்னோட லைஃப் பார்ட்னரா வரப்போற பொண்ணுன்னு நினைச்சு தான் வந்தேன். ஆனா இப்போ இந்த நிமிஷம் யோசிக்கும்போது அந்த ஃபீல் வரல. ரொம்ப ரொம்ப அழகான ஒரு ஃப்ரெண்ட்ஷிப் எனக்கு கிடைச்சிருக்கு. மோஸ்ட் பிரில்லியன்ட் அண்ட் பியூட்டிஃபுல் ஃப்ரெண்ட் எனக்கு கிடைச்சிருக்கா அப்படின்னு தான் மனசு ஸ்டாம்ப் பண்ணுது.
உன்கிட்ட உண்மைய சொல்றதுக்கு என்ன? உன்ன மாதிரி பயங்கர அறிவான பொண்ணு கூட என்னால வாழ முடியும்னு தோணல. ஃப்ரெண்ட்லியா பேசுறப்பவே ஆம்பள ஈகோ அப்பப்ப வருது. கல்யாணம், மனைவி, குடும்பம் அப்படின்னு எல்லாம் நினைக்க கொஞ்சம் கஷ்டமா தான் இருக்கு.
சோ கடைசி வரைக்கும் ஒரு பிரில்லியண்டான பொண்ணு கூட ஃப்ரெண்டாவே இருந்துக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன். அதுதான் எனக்கு சேஃப் அப்படின்னு எட்டாவது அறிவு சொல்லுது. அத சொல்றதுக்கு தான் கூப்பிட்டேன்.
நீயும் ஒத்தையா ரெட்டையான்னு மனச போட்டு கஷ்டப்படுத்திட்டு இருக்க வேண்டாம்ல… சோ…” என்று அவன் நிறுத்த,
தன்னைச் சுற்றிப் பிணைக்கப்பட்டிருந்த கண்ணுக்கு தெரியாத கட்டுகள் அனைத்தும் பிடுங்கி வீசப்பட்டது போல ஆசுவாச மூச்சு எழுந்தது பெண்ணுக்குள்.
மலர்ந்த முகத்தோடு, “சோ…” என்று அவளும் ராகம் பாட,
“லெட்ஸ் பி ஃப்ரெண்ட்ஸ் பார் எவர்…” என்றான் சற்றே அழுத்தமான குரலில்.
நொடியும் தாமதிக்காமல், “சந்தோஷம்” என்றாள் சக்தி மனதின் மகிழ்ச்சியை குரலிலும் காட்டி.
“அடிப்பாவி! கொஞ்சம் கூட ஃபீல் பண்ணாம... விட்டது தொல்லைன்னு சந்தோஷம்னு சொல்ற…” பரதன் கேட்க,
அதில் சற்றே தயங்கி, “பரத் நீ ரொம்ப நல்லவன்…” என்று சக்தி ஆரம்பிக்க,
“மச்சி உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லவா…” பட்டென்று பரத் குறுக்கே வந்தான்.
“என்னது மச்சியா?!” சக்தி ஆச்சரியமாக கேட்க,
“ஃப்ரெண்ட்னா அப்படித்தான் மச்சி. மாமா, மச்சி, பாவா இன்னும் என்னென்னவோ வரும். அதுவும் சரக்கு உள்ள போச்சு கெட்ட வார்த்தை கூட வரும். அதுக்கு எல்லாம் எக்சைட் ஆக கூடாது.” சாதாரணமாக அவன் சொல்ல,
“என்னது சரக்கா?” அதிர்ந்து போய் கேட்டாள் சக்தி.
“ஹலோ இப்ப நீ என்னோட ஃப்ரெண்ட். சரக்கான்னு அதிர்ச்சியால்லாம் கேட்கக்கூடாது.”
“அப்போ நீ சரக்கு அடிப்பியா?”
“பாரு பாரு… இவ்வளவு நேரம் வாங்க போங்கன்னு பேசிட்டு ஃப்ரண்ட்ன்னு சொன்னவுடனே கொஞ்சமும் மரியாத இல்லாம நீ வா போ ன்னு சொல்ற…”
“அதான் பிரண்டுன்னு சொல்லிட்டியே அப்புறம் என்ன மரியாதை? நீ வா போ என்ன டா கூட வரும்… இப்போ நீ பேச்சை மாத்தாத. சரக்கு அடிப்பியா?” சிறு கோபத்தோடு சக்தி கேட்க
“என்னவோ மொடா குடிகாரன கொஸ்டின் பண்ற மாதிரி கேக்குற… ஐ அம் அ சோசியல் டிரிங்கர்.” என்றான் அவன் வீராப்பாக.
“இன்னொரு தடவை நீ சரக்கு அடிச்சேன்னு கேள்விப்பட்டேன் அன்னைக்கு தான் நம்ம பிரண்ட்ஷிப்க்கு லாஸ்ட் டே. ஃப்ரெண்ட்ஷிப் பார் எவர் எல்லாம் கிடையாது.” அழுத்தமாக சக்தி சொல்ல,
“சக்தி இதெல்லாம் அநியாயம்…” என்ற அலறினான் பரதன்.
“ஐ மீன் இட் பரத்…” கொஞ்சமும் தன் பிடியில் இருந்து இறங்காமல் அதே அழுத்தத்தோடு சக்தி சொல்ல,
“நான் சொல்லாம உனக்கு எப்படி தெரியும்?” அடுத்த கேள்வியை வீசினான் பரதன்.
“சொல்லாம கூட இருக்க முடியுமா உன்னால?” பதில் கேள்வி அவள் கேட்க,
“சரண்டர் சக்தி…” என்று ஒப்புக் கொடுத்தவன்,
“பொண்ணுங்க கூட பிரண்ட்ஷிப் வைக்க கூடாதுன்னு இதுக்கு தான் என் ஃப்ரெண்ட்ஸ்ங்க சொல்லிட்டே இருப்பாங்க. கேட்டேனா… வகையா வந்து யார்கிட்ட சிக்கி இருக்கேன்னு பாரு… சோலி முடிஞ்சது.” என்று புலம்பியவன்,
“சரி அதை விடு பேசிட்டு இருந்ததுக்கு வா…”
“என்ன பேசிட்டு இருந்தோம்?”
“ஃப்ரெண்ட்ஷிப் பார் எவர்ன்னு நான் சொல்ல நீ ரொம்ப நல்லவன்னு நீ ஆரம்பிக்க…” என்று பரதன் எடுத்துக் கொடுக்க,
“நெஜமா தான் சொல்றேன் நான் என்ன பீல் பண்ணினேனோ அதைத்தான் சொன்னேன். நீ ரொம்ப நல்லவன் பர...த்.” என்று அவள் சொல்லும் முன்பாகவே,
“உனக்கு ஒரு விஷயம் தெரியுமா மச்சி… நீ ரொம்ப நல்லவன்னு ஒரு பொண்ணு பேச்சை ஆரம்பிச்சா கண்டிப்பா அவ அந்தப் பையனோட ரெக்வெஸ்ட்ட அக்சப்ட் பண்ணலன்னு அர்த்தம்.” என்றவன்,
“புரிஞ்சது சக்தி. லீவ் இட். எங்க இருக்க?” என்று சாதாரணமான குரலில் பேச்சை மாற்றினான் பரத்.
“ஆபீஸ்” என்றாள் ஒற்றை வார்த்தையில்.
“டைம் ஆயிடுச்சு பாரு. இன்னும் கிளம்பலையா?”
“முக்கியமான வேலை. முடிச்சிட்டு தான் கிளம்பனும்.” என்று அவள் சொல்ல,
“ஓகே ஓகே கேரி ஆன்… ஒரு மெசேஜ் மட்டும் தட்டி விடு ஹாஸ்டல் ரீச் ஆனதும்.” என்றவன்,
“குட் நைட் சக்தி…” என்று வாழ்த்த,
“குட் நைட் பரத்…” என்று பதில் வாழ்த்து சொன்னவளின் குரலில் அத்தனை நிம்மதியும் சந்தோஷமும் இருந்தது.
தங்கமே ஆனாலும் தன்னைப் பூட்டி வைத்திருந்த தங்கக் கூண்டில் இருந்து வெளிவந்த பறவை போல் மனமெங்கும் மகிழ்ச்சி ஆர்ப்பரிக்க உற்சாகமானது சக்தியின் உள்ளம் அந்த இரவில்.
பரத்திற்கு தான் நியாயம் செய்யவில்லையோ என்று உள்ளே கிடந்து பிராண்டிக் கொண்டிருந்த உணர்வுகள் எல்லாம் அவன் வார்த்தைகளில் காணாமல் போய் இருக்க அத்தனை ஆசுவாசமாக உணர்ந்தாள் சக்தி.
அந்த உற்சாகம் அவளை விகசிக்க செய்ய மடிக்கணினியை பார்த்தவளின் கண்களுக்குள் அட்டகாசமான எண்ணம் தோன்றியது.
சட சடவென்று கோடுகளும் புள்ளிகளுமாக திரை நிறைய ஆரம்பித்த நேரம் அவனது உற்சாகத்தை குறைப்பது போல ஒளிர்ந்து கொண்டிருந்த அலுவலகம் இருளில் மூழ்கியது.
அப்பொழுதுதான் தன்னை சுற்றி இருக்கும் சுற்றுப்புறத்தை கவனிக்க ஆரம்பித்தாள் பெண்.
பெரும் நிசப்தம் அங்கே மையம் கொண்டிருக்க உடன் வேலை பார்த்தவர்கள் அனைவரும் சென்று இருந்தது அப்பொழுதுதான் விளங்கியது அவளுக்கு.
மடிக்கணினியின் திரை ஒளிர்ந்ததால் சுற்றி இருந்த இருள் சற்றே மட்டுப்பட்டு இருக்க, எழுந்தாள் தன் இருக்கையை விட்டு.
அந்த நொடியில் மடிக்கணினியின் திரையும் இருளை பூசிக்கொள்ள, திடுக்கிட்டது சக்தியின் உள்ளம்.
பன்னிரண்டு வயதில் இருளில் தெரியாமல் கால் தடுக்கி கிணற்றின் உள்ளே விழுந்து தவித்த நிமிடங்களும், விடாது பெய்து கொண்டிருந்த மழையில் அடாது விழுந்த மின்னலில் பறிபோன தோழியின் உயிரும் சக்திக்குள் இருள் மற்றும் இடி மின்னலின் மீது அளவிட முடியாத பயத்தை கொடுத்திருந்தது.
சிறு வெளிச்சம் இருந்தாலும் பயம் குறைந்திருக்கும். மொத்தமாய் இணுக்கு வெளிச்சம் கூட இல்லாமல் இருள் சூழ்ந்திருந்த அந்த நிமிடம் சக்தியின் உயிருக்குள் பயத்தை விளைவித்தது அந்த அலுவலகம்.
மேஜையில் தன் கைக்கு அருகில் இருக்கும் கைபேசியை எடுத்து ஒளிர வைக்க வேண்டும் என்ற எண்ணம் கூட தோன்றாமல் பயத்தில் உறைந்து நொடியில் தெப்பமாக நனைந்து போயிருந்தாள் சக்தி.
இருளில் மூச்சுக்கு தவிக்கும் நேரத்தில்,
“சக்தி…” என்ற அழைப்பும் அதனை ஒட்டி அழுத்தமான காலடி சத்தமும் மூடி இருந்த அறைக் கதவையும் தாண்டி அவளுக்கு கேட்டது.
கதவின் பாதி பதிக்கப்பட்டு இருந்த கண்ணாடியின் வழியாக அவள் பார்வை பதிந்ததில், கையில் பிடித்திருந்த கைப்பேசியின் வெளிச்சத்தை பரப்பியபடி வந்து கொண்டு இருந்தான் ஜெகதீஸ்வரன்.
அப்படியே சரிந்து நாற்காலியில் அமர்ந்தாள் சக்தி. அதில் உண்டான அதீதமான சத்தத்தில் இரண்டே எட்டுகளில் அவள் அறையினை நெருங்கி திறந்து உள்ளே சென்றான் ஜெகதீஸ்வரன்.
“சக்தி ஆர் யூ ஓகே?” என்று கேட்டபடி அவள் அருகே வந்தவன், அவள் முகத்தைக் கண்டு ஒரு நொடி அதிர்ந்து போனான். முகம் வெளிரி போய் உடல் மொத்தமும் வியர்வையால் குளித்து நனைந்திருந்தது சக்திக்கு.
“சக்தி…” அழுத்தமாக அவள் பெயரை அவன் உச்சரிக்க, நடுங்கியது சக்தியின் உடல்.
கைநீட்டி அவள் கைபேசியை கைப்பற்றியவன் அதையும் ஒளிரச் செய்ய போதுமான அளவு வெளிச்சம் பரவியது அவர்கள் இருவருக்கும் இடையே.
அந்த வெளிச்சத்தின் பிரவாகத்தில் சக்தியின் கலங்கியிருந்த கண்கள் நொடியில் கண்ணீரை உள்ளுக்குள் இழுத்துக் கொண்டு முகம் நிர்மலமாக மாற ஆரம்பிக்க, அவளது மாற்றத்தை அணு அணுவாக கவனித்துக் கொண்டிருந்தான் ஜெகதீஸ்வரன்.
மேஜை மீது இருந்த தண்ணீர் பாட்டிலை அவள் புறமாக நகர்த்தி வைக்க நடுங்கிய கைகளோடு அதை எடுத்து குடித்தாள் சக்தி.
“ஆர் யூ ஓகே சக்தி?” அழுத்தமான குரலில் மீண்டும் அவன் கேட்க, பற்றி எரியும் கானகத்தின் நடுவே திக்கு தெரியாமல் தவித்துக் கொண்டிருந்த சிறு பறவை ஒன்று தன் தாயை கண்ட நேரம் கொள்ளும் பெரும் ஆசுவாசத்தை பெற்றிருந்தாள் சக்தி.
பற்றிக்கொள்ள ஏதேனும் கிடைக்குமா என்று தவிக்கும் நேரங்களில் எல்லாம் வந்து நிற்கும் அவனது பிரசன்னம் அவளுக்குள் ஜாலங்களை நிகழ்த்திக் கொண்டிருந்தது.
தேடித் தவித்த பாதுகாப்பு உணர்ச்சியை ஒற்றை பார்வையிலும் சிற்சில வார்த்தைகளிலும் கொடுத்துக் கொண்டிருந்தான் ஜெகதீஸ்வரன்.
அவன் தந்த ஆசுவாசத்தில் சில நொடி தாமதங்களுக்குப் பிறகு குனிந்திருந்த தலை நிமிராமலேயே, “ஆம் ஓகே…” என்றாள் மெல்லிய குரலில்.
அவளையே பார்த்தபடி, “நைன் தெர்ட்டி சக்தி.” கடினமான குரலில் அவன் சொல்ல,
அந்தக் குரலின் இறுக்கத்தில் தவறு செய்த குழந்தையாக, “பேலன்ஸ் ஃபுட் கோர்ட் டிசைன் கம்ப்ளீட் பண்ணனும்.” என்று காரணம் சொன்னாள் சக்தி.
நெற்றியில் விரலால் கோடிழுத்த படி, “டுமாரோ கன்டினியூ பண்ணலாம்.” என்று அவன் சொல்ல,
“சாட்டர்டே டெட் லைன். கஸ்டமர் வந்துருவாங்க.”
“இன்னைக்கு மண்டே தான் சக்தி.” அவனும் நிறுத்தாமல் வார்த்தையாடிக் கொண்டிருக்க, நிமிர்ந்து அவன் முகம் பார்த்தாள் சக்தி.
“உங்களுக்கு பிடிக்காது. வேலையில்ல பெண்டிங் வைக்க எனக்கும் பிடிக்காது. வெட்னஸ்டே கம்ப்ளீட் பண்ணி உங்களோட டேபிளுக்கு இந்த பைல் வந்தா தான் ப்ராசஸ் பண்ண முடியும் சார்”
முழு நிதானத்திற்கு வந்திருந்த அவளது வார்த்தையில் அழுத்தமாக பதிந்தது அவன் பார்வை.
“வயின்ட் அப் சக்தி…” என்று கட்டளையிட்டவன், அத்தோடு அந்த விஷயம் முடிந்தது என்பது போல,
“கேப் புக் பண்ணியாச்சா?” என்று அடுத்த கேள்விக்கு சென்று இருந்தான்.
அவள் தலை இல்லை எனும் விதமாக அசைய, அவன் தனது கைபேசியை எடுத்தான்.
“நான்…” என்று ஆரம்பித்தவளை கையசைவால் நிறுத்தியவன், கைபேசியில் கவனத்தை செலுத்த வேறு வழியில்லாமல் அமைதியாக நின்றாள் சக்தி.
ஒரு நிமிடம் கடக்கும் முன்பாக கைபேசியில் இருந்து தனது கண்ணை விளக்கியவன் அவளை பார்த்தபடி, “10 மினிட்ஸ்…” என்று சொல்லிவிட்டு கைபேசியை பாக்கெட்டுக்குள் வைத்தான்.
“சார்…” சக்தி அழைக்க,
“ம்?” கேள்வியாக வளைந்தது ஜெகதீஷின் புருவங்கள்.
“ஐ கேன் மேனேஜ் சார்…” என்ற வார்த்தைகளை அவள் இதழ்கள் உச்சரிக்க, இரண்டாம் முறை அவள் சொல்லி அவன் கேட்டிருந்த அந்த வார்த்தைகளில் வளைந்திருந்த அவனது புருவங்கள் உயர ஆரம்பித்தது. இந்த வார்த்தைகளுக்கு பின்னால் இருக்கும் உணர்வுகளை படிக்க முயன்றான் அவன்.
“நான் அப்படி சொல்லலையே.” ஜெகதீஸ்வரன் அமைதியாக சொல்ல,
‘எப்படி சொல்லல?’ என்ற கேள்வியை தாங்கிய கண்களோடு அவன் முகத்தை ஏறிட்டுப் பார்த்தாள் சக்தி.
அவள் பார்வையை உணர்ந்தவனாக, “உன்னால மேனேஜ் பண்ண முடியாதுன்னு நான் சொல்லல சக்தி…” என்று சொன்னவன், பின்னந்தலையை கோதியபடி, “ஆனா ஏன் யாராவது ஹெல்ப் பண்றேன்னு வந்தா அக்சப்ட் பண்ண மாட்டேங்குற… எல்லாத்தையும் நீயாவே செய்யணும்னு ஏன் ட்ரை பண்ற?” தன்னையும் அறியாமல் மனதில் உள்ள கேள்விகளை அவன் கேட்டு வைக்க, அசாதாரணமான அந்த சூழ்நிலை அவளின் கட்டுக்களையும் உடைத்து எரிந்தது போல.
“பழகிடுச்சு.” என்றாள் சோபையான புன்னகையோடு.
“எதுக்கு?” கூர்ந்து அவளை பார்த்தபடி அவன் கேட்க,
“எல்லாத்தையும் தனியா ஹேண்டில் பண்ண…”
அவன் எதுவும் பேசவில்லை. அவள் பேசட்டும் என்று காத்திருந்தாள் கைகளை மார்புக்கு குறுக்கே கட்டிக் கொண்டு.
“சின்ன வயசுல நிறைய எதிர்பார்த்தேன் போல. கீழ விழுந்தா தூக்கி விட யாரும் வர மாட்டாங்க. உடம்பு சரியில்லாமல் படுத்து கிடந்தா பக்கத்துல உக்காந்து கவனிக்க யாரும் கிடையாது. சாப்பிடாம இருந்தா அத நோட்டிஸ் பண்றதுக்கு கூட யாரும் இல்லை. முதல் பரிசு வாங்கின பாராட்ட ஆள் இல்ல. அழுது கரைஞ்சாலும் கண்ணீரைத் தொடச்சி விட வர மாட்டாங்க… இப்படி நிறைய சொல்லிட்டு போகலாம். அப்படி படிச்ச பாடம் சார்… எனக்கு நான் மட்டும் தான் நிரந்தரம். யாராவது ஹெல்ப் பண்ணுவாங்கன்னு வெயிட் பண்றத விட நாமலே மேனேஜ் பண்ணிக்கிறது தான் நல்லது. ஈஸியும் கூட சார்.” கைபேசியின் ஒளியை பார்த்தபடி அவள் சொல்ல, அந்த நொடி ஜெகதீஸ்வரனின் பார்வை முழுதாக அவள் மீது தான் படிந்து நின்றது.
அவள் அவனது அழுத்தமான பார்வையை உணர்ந்தாலும் நிமிர்ந்து அவன் முகம் பார்க்கவில்லை.
சில நிமிட இடைவெளிக்குப் பிறகு, “ஈஸியா சக்தி?” என்றான் அவன் மெதுவாக.
அந்த ஒற்றை வார்த்தை அவளுக்குள் இருந்த இறுகிய இடங்களை தொட்டது. மெதுவாக நிமிர்ந்து பார்த்தாள் அவள். அவன் விழிகள் அமைதியாக இருந்தது. ஆனால், அந்த அமைதிக்குள் சொல்ல முடியாத அழுத்தத்தை சுமந்து இருந்தது.
“ஈஸின்னு சொல்ல முடியாது…” என்றவள் சிரிக்க முயன்று தோற்று, “பட் பழகிடுச்சு.” என்று உண்மையைச் சொல்லி இருந்தாள்.
“பழகுறது எல்லாம் சரியான விஷயமா இருக்கணும்னு அவசியம் இல்ல சக்தி.”
அந்த வார்த்தையில் அவள் இமைகள் மெதுவாக அசைந்தது.
அவன் பார்வையை விலக்கிக் கொண்டு கண்ணாடி தடுப்புச் சுவருக்கு வெளியே பார்த்தான். சென்னையின் இரவு வெளிச்சங்கள் தொலைவில் மின்னிக் கொண்டிருந்தது.
“சில விஷயங்களுக்கு பழகிடக்கூடாது.” என்றான் மீண்டும்.
அந்த குரல்… அழுத்தமாக இல்லை. ஆனால் ஏனோ நேராக அவளுக்குள் இறங்கி அவளது உள்ளத்தை அசைத்துப் பார்த்தது.
சக்தி அவனை பார்த்துக் கொண்டே நின்றாள்.
அவன் இன்னும் வெளியேதான் பார்த்துக் கொண்டிருந்தான். ஆனால் அவன் சொல்லாத நிறைய விஷயங்கள் அந்த அமைதிக்குள் இருந்தது போல தோன்றியது அவளுக்கு.
அந்த நேரம் திடீரென்று அவசரத்திற்கென்று வைக்கப்பட்டிருந்த விளக்குகள் எரிய ஆரம்பித்தன.
மெலிதான மஞ்சள் வெளிச்சம் தளம் முழுக்க பரவ, இருவரின் விழிகளும் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டன..
அந்த வெளிச்சத்தில் ஜெகதீஸ்வரனின் முகம் இன்னும் தெளிவாக தெரிந்தது. போட்டிருந்த முழு கை வெண்ணிற சட்டையின் கைப்பகுதியை முழங்கைக்கு சற்று கீழ் வரை மடித்து விட்டுக் கொண்டு கைகளை மார்புக்கு குறுக்கே கட்டிய படி அவளையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தான் ஜெகதீஸ்வரன்.
எப்பொழுதும் அழுத்தத்தையும் கம்பீரத்தையும் காட்டும் அவன் முகத்தில் காலை முதல் இடைவிடாது வேலை செய்த சோர்வு இருந்தது; உடன் நிலைத்த அமைதியும் இருந்தது. ஆனால் அதையும் தாண்டி அவள் இதுவரை கவனிக்காத மென்மை ஒன்று இருந்தது.
அந்த உணர்வு பெண்ணுக்குள் பூகம்பத்தைக் கிளப்ப ஆயத்தமாக, அந்த உணர்விலிருந்து தப்பிக்கவே வேகமாக மடிக்கணினி திரையின் பக்கம் திரும்பினாள் சக்தி.
அப்பொழுதுதான் அலையாடிக் கொண்டிருந்த உணர்வின் தவிப்பில் மனதில் மறைத்து வைத்திருந்த சில பக்கங்களை திறந்து அவன் முன்னே காட்டி இருக்க அசௌகாரியமாக உணர்ந்தவள், “நான் கம்ப்ளீட் பண்ணிடுறேன் சார்” என்றாள் அவசரமாக.
“அப்படி சொன்னதா எனக்கு ஞாபகம் இல்லையே…” அவன் சொல்ல,
“இன்னும் கொஞ்சம் தான் சார்.” என்றாள் அவளும் திடமாக.
இத்தனை நேரம் அவள் இருந்த நிலை என்ன? இப்பொழுது அவள் பேசுவது என்ன? என்று யோசித்த அவன் மூளை, “ஸ்டபர்ன்…(Stubborn)” என்று மனம் சொன்ன வார்த்தைகளை நாவுக்கு கட்டளையிட்டிருக்க, அதுவும் தன் பணியை சிறப்பாக செய்திருந்தது, அவன் சுதாரிக்கும் முன்பாக.
அதில் சட்டென்று அவன் முகத்தை பார்த்தாள் சக்தி.
அவன் உதட்டோரம் மிக மெலிதான சிரிப்பு ஒன்று வந்து மறைந்தது. அதில் உறைந்து போனது சக்தியின் நிமிடம்.
கடமைக்காக, பொதுவெளியில் கடைபிடிக்க வேண்டிய நாகரீகத்திற்காக, ஏன் சர்வேஷ்வரனுடன் பேசும் பொழுது என்று அவன் சிரித்த பொழுதுகள் எல்லாம் கண்முன்னே வந்து போனது. இன்று அவள் கண்ட அந்த மெல்லிய புன்னகை இவை எதிலும் சேராது இருந்தது. மிகவும் பிரத்தியேகமான புன்னகை அது.
அவள் அதிசயத்து பார்த்துக் கொண்டிருப்பதை பார்த்தவனின் இதழ்கள் இன்னும் அதிகமாய் விரியத் துடிக்க அதை அடக்கியதில் கன்னத்தில் உண்டானது அழகிய குழி.
“ஜஸ்ட் 5 மினிட்ஸ். சட்டவுன் பண்ணிட்டு கீழ வா.” கட்டளை இட்டவன் திரும்பிச் செல்ல, அவன் சென்ற திசையையே பார்த்துக் கொண்டிருந்தாள் சக்தி.
அவனது நடையோசை மெதுவாக தேய்ந்து மறைந்தது. ஆனால் அவன் கடத்திய உணர்வுகள் மட்டும் அங்கேயே நின்று பெண்ணவளை புரட்டிப் போட்டது.
‘ஸ்டபர்ன்… (Stubborn…)’ அந்த ஒரு வார்த்தை. அதையும் விட…
அதை சொல்லும்போது அவன் முகத்தில் வந்த அந்த மென்புன்னகை…
அவளுக்குள் காரணமே இல்லாமல் மெதுவாக ஏதோ மலர ஆரம்பித்தது.
கீழே பார்க்கிங்கில் தனது கார் மீது சாய்ந்து நின்றிருந்தான் ஜெகதீஸ்வரன்.
கைகளைக் கட்டிக்கொண்டு அமைதியாக நின்றிருந்தவன் பார்வை மூன்றாவது தளத்தில் நின்று கொண்டிருந்த லிஃப்டின் மேல் இருந்தது.
அந்த நேரம் பின்னால் இருந்து வந்த குரல், “டேய்…” என்று அழைக்க திரும்பிப் பார்த்தான்.
ஆண்ட்ரூ அவனையே பார்த்துக் கொண்டு அமைதியாக அவனது கார் மீது சாய்ந்து நின்று இருந்தான்.
“நீ இங்க என்ன பண்ற?” ஜெகதீஷ் கேட்க,
“சும்மா…” என்றான் ஆண்ட்ரூவும் அவனைப் போலவே ஒற்றை வார்த்தையாக.
“ம்…” என்று தலையசைத்து கேட்டுக் கொண்டவனை அமைதியாக இருக்க, அதை அப்படியே விட விருப்பம் இல்லை அவன் நண்பனுக்கு.
“24 ஹவர்ஸ் பக்காவா ஒர்க் பண்ற பில்டிங்ல கரண்ட் போனது முதல் இப்போ நீ பேசுறது எல்லாமே ஃபேக்னு உனக்கு தெரியுதா?” நண்பனின் முகத்தைக் கூர்ந்து பார்த்தபடி ஆண்ட்ரூ கேட்க, ஜெகதீஸ்வரனின் முகத்தில் மாற்றமே இல்லை.
“ஜகஜாலஜித்தன் டா நீ… அவ்வளோ ஈஸியா உன்னோட வாயிலிருந்து வார்த்தையை வாங்கிட முடியுமா? ஆனாலும் ஒரு விஷயத்தை மறந்துட்ட… கேட்டுட்டு இருக்கிறது உன்னோட நண்பன்டா…” என்று மனதோடு பேசிக்கொண்ட ஆண்ட்ரூ மெதுவாக சிரித்தான்.
அதே சிரிப்போடு, “சரி… நான் ஒரு கேள்வி கேட்கட்டா, இல்ல ஒரு விஷயத்தை சொல்லவா?” ஜெகதீஷிடம் அவன் கேட்க பூரண அமைதி.
“மொத்த ஆபீசும் காலி. ரெண்டு ஓனரும் கிளம்பியாச்சு ஆனாலும் தர்ட் ப்ளோர்… ஐ திங்க் சக்தி கேபின்ல மட்டும் வொர்க் போயிட்டு இருக்கு போல..” என்று ஆண்ட்ரூ சொல்ல,
அந்த நொடி லிப்ட் மீது சென்று வந்தது ஜெகதீஸ்வரனின் பார்வை. அதைக் குறித்துக் கொண்டது ஆண்ட்ரூவின்.
“அடப்பாவி…” என்று சிரித்தவன், “அப்போ சர்வா சொன்னது உண்மை தான் போலையே…” என்றான் மெதுவாக.