அத்தியாயம் 12
சென்னையின் மையப்பகுதியில் இருந்தது ஈஸ்வர் இல்லம்.
கோவில்களை வடிவமைத்தவர்கள் நாங்கள் என்ற பாரம்பரியத்தை பறைசாற்றும் படி சென்னையின் எந்தவித அவசரங்களுக்கும் அலங்காரங்களுக்கும் ஒட்டாமல் தனித்து நின்றது அந்த இல்லம்.
அந்த வீட்டை முதல் முறையாக பார்க்கும் யாராக இருந்தாலும்,
“இது வீடா… இல்ல கலை பொக்கிஷமா? இப்படியும் கூட வீடுகள் இன்னமும் நம்ம நாட்டுல இருக்கா?!” என்று தான் வாயில் விரல் வைப்பார்கள்.
பெரிய பெரிய கருங்கற்களால் சூழப்பட்ட அரண்மனை போல இருந்தது அந்த இல்லம். கருங்கற்களால் ஆன மதில் சுவர்களுக்கு இடையே அகன்று விரிந்திருந்த பழமையான தேக்கு மரக் கதவும் அந்தக் கதவு முழுவதையும் மறைத்திருந்த கைவினை வேலைப்பாடுகளும் பிரமிப்பை கொடுக்கும்.
சாண்டில்யன் அவர்கள் எழுதிய கடல் புறாவில் சொல்லப்பட்டிருக்கும் கடல் கடந்து தமிழ் மன்னன் ஒருவன் கட்டிய அரண்மனையின் கதவுகளை ஒத்திருந்தது அந்த மரக்கதவு. அது ஒன்று போதுமே அவர்களின் ரசனையைச் சொல்ல.
வெளியே இருந்து பார்த்தால் உள்ளே என்ன இருக்கிறது என எதுவும் தெரியாது. ஆனால், அந்த வீட்டுக்குள் நுழைந்த நொடி தெரிந்து விடும் அது வீடல்ல. நான்கு தலைமுறைகளாக கட்டி காப்பாற்றப்பட்ட பாரம்பரியம் என்று.
பல தலைமுறையாக கட்டிடங்கள் கட்டுவதை தொழிலாக மட்டும் இல்லாமல், வாழ்வாகவே வைத்திருந்த குடும்பம் அது.
‘ஈஸ்வர் பில்டர்ஸ்’ என்ற பெயர் உருவாகும் முன்பாக,
அந்த குடும்பத்தின் முதலானவர்கள் கோவில்களையும் அரண்மனைகளையும் வடிவமைத்திருந்தனர்.
அவர்களது தாத்தா காலத்தில் செட்டிநாடு பங்களாக்கள்,
அதற்கு அடுத்த தலைமுறையில் பெரிய மாளிகைகள் என்று அவர்களது கட்டிட வடிவமைப்பு காலத்திற்கு ஏற்ப மாறுபட்டு இப்பொழுது பெரிய பெரிய வணிக வளாகங்களும் நட்சத்திர விடுதிகளுமாக விரிந்து கொண்டே சென்றாலும், எல்லா காலத்திலும் தங்களை நம்பி வந்த எல்லா மனிதர்களுக்குமான இல்லங்களை கட்டித் தருவதில் எந்த வித பேதத்தையும் காட்டியதில்லை அவர்கள்.
காலம் மாறியிருந்தது. ஆனால்
ஈஸ்வர் குடும்ப வீடு மட்டும் மாறவில்லை. மரத்தையும் கல்லையும் உயிருள்ளது போல் பேச வைத்திருந்தார்கள் அந்த வீட்டில்.
முன் வாசலை கடந்தவுடன் பெரிய திறந்த முற்றம். அதன் நடுவே பழமையான துளசி மாடம்.
அதை சுற்றி நான்கு பக்கமும் உயர்ந்த மரத்தூண்கள்.
ஒவ்வொரு தூணிலும் கை வேலைப்பாடுகள். யாழி, அன்னம்,
மலர் என்று எண்ணற்ற வடிவங்கள்.
அந்த இல்லத்தின் மேற்கூரை முழுவதும் பழைய தேக்கு மரம் பதிக்கப்பட்டிருந்தது. ஆனால் சிறு தூசி கூட படிந்திருக்கவில்லை.
வீட்டுக்குள் எங்கிருந்து பார்த்தாலும் வெளிச்சம் குறையாது போன்ற அமைப்பு.
காற்று உள்ளே வந்து சுற்றி வெளியேற தனி வழி. மழை பெய்தால் முற்றத்தின் நடுவே மட்டும் தண்ணீர் விழும்.
மீதியுள்ள இடம் ஒரு துளி கூட நனையாது.
பழமைக்கு இணையாக பழமை சிதைக்கப்படாமல் புதுமைகளும் புகுத்தப்பட்டு பார்க்கும் ஒவ்வொருவரையும்
“இதுதான் டா ஆர்க்கிடெக்சர்…” என்று சொல்ல வைக்கும் அழகின் உறைவிடம் அந்த இல்லம்.
அவர்களின் அலுவலகத்தின் தலைமையகமே பசுமையாக இருந்தது என்றால் அவர்கள் வாழும் இல்லம் எத்தனை பசுமையாக இருக்கும் அதை எடுத்துச் சொன்னால் நேரம் போதாது. இயற்கையோடு இணைந்த வாழ்க்கை என்பதுபோல அந்த வீட்டுக்கு தேவையான காய்கறிகள் முதல் பூஜைக்கு தேவையான பல வகையான பூக்கள் வரை அத்தனையும் அந்த தோட்டத்திலிருந்து பெற்றுக் கொள்ளலாம்.
“விசாலா…”அழுத்தமான அந்த குரல் வீட்டின் நடுப்பகுதியில் ஒலிக்க, சமையலறையில் இருந்த பெண் வேகமாக வெளியே வந்தாள்.
“அம்மா…”
உணவு உண்ணும் அறையில் நின்றிருந்தார் வரலட்சுமி அம்மாள். தற்சமயம் அந்த இல்லத்தில் வசிக்கும் குடும்பத்தின் மூத்த உறுப்பினர். அந்த வீட்டின் அஸ்திவாரம் என்று கூட சொல்லலாம்.
அறுபத்தைந்து வயதை தாண்டியிருந்தாலும், சுருக்கங்கள் இல்லாத அந்த முகத்தின் கம்பீரம் அந்த வீட்டினை ஒத்திருந்தது.
இறுக்கமாக கட்டிய வெள்ளை முடி.
மடிப்புக் கலையாத காஞ்சிபுரம் சேலை. நெற்றியில் வட்ட குங்குமம். கண்களில் எப்போதும் ஒரு கூர்மை.
“இந்த விளக்க யாரு சுத்தம் செஞ்சது?” என்று கேட்டார் அவர்.
விசாலா என்று அழைக்கப்படும் விசாலாட்சி, முற்றத்தின் மூலையில் இருந்த ஆள் உயர பித்தளை விளக்குகளை மாறி மாறி பார்த்தாள்.
“நான் தான் அம்மா…” தயக்கத்தோடு வார்த்தைகள் தந்தி அடிக்க அவள் சொல்ல,
“எத்தனை தடவ சொல்லிருக்கேன்?” என்ற கேள்வி அழுத்தமாக வந்தது வரலட்சுமி அம்மாவிடம் இருந்து.
“நீங்க எத்தனையோ விஷயத்துல எத்தனையோ தடவை சொல்லி இருக்கீங்க? இப்ப என்ன விஷயத்தை சொல்றீங்கன்னு நான் என்ன கனவுலயா பார்க்க முடியும்? கடவுளே! தலையும் புரியல வாலும் புரியல. அடியே மரகதம்… உன்னைய போய் துடைக்க சொன்னேன் பாரு என்னைய செருப்பால அடிக்கணும். இப்ப என்ன சொல்றாங்கன்னு தெரியலையே முழிச்சு வச்சா அதுக்கு வேற திட்டுவாங்களே…” என்று மனதுக்குள் புலம்பியவள் ஓரமாக நின்றிருந்த மரகதத்தையும் பார்த்து முறைக்க தவறவில்லை.
அவர் மெதுவாக நடந்து வந்து அந்த விளக்கை பார்த்தார்.
பஞ்சமுக விளக்கின் ஒரு திரி மாற்றப்படாமல், தீபம் எறிந்ததற்கான தடமான கருமை பூசி இருக்க மற்ற நான்கு முகங்களும் சரியாக இருந்தது. புரிந்து போனது அவளுக்கு.
“அவசரத்துல…” திக்கு திணறி அவள் காரணம் சொல்ல வர,
“தெய்வ கைங்கரியத்துல… ஆச்சாரத்துல அவசரம் கூடாது விசாலா.” என்றவரின் குரல் சத்தமாக ஓங்கி ஒலிக்கவில்லை. ஆனால், அதில் இருந்த அழுத்தம் மீண்டும் ஒருமுறை இந்த தவறை செய்ய அங்கே இருந்த எவரையும் அனுமதிக்கவும் இல்லை.
அவரின் வார்த்தைகள், “மன்னிச்சுக்கோங்க அம்மா இனிமே இப்படி நடக்காது.” என்று தானாக முன்வந்து சொல்ல வைத்திருந்தது விசாலாட்சியை.
அதை பார்த்துக் கொண்டிருந்த அந்த குடும்பத்தின் கடைக்குட்டியும், ஈஸ்வர் சாம்ராஜ்யத்தின் இளவரசியுமான மகாலட்சுமி தன் தாய் புவனேஸ்வரியின் காதை கடித்தாள்.
“அம்மா… இந்த காலத்துல யாருமா இவ்வளவு ஸ்ட்ரிக்ட்டா பார்க்குறாங்க?” என்று கேட்டு வைக்க, உடனே திரும்பிப் பார்த்தார் வரலட்சுமி.
“இந்த காலத்துல யாரும் பார்க்கலன்னு நாமலும் விடணுமா மகா?” அழுத்தம் மாறாத கண்களோடு வரலட்சுமி கேட்க, மூச்சு எடுக்கவில்லை மகாலட்சுமி.
“ஒரு வீட்டோட அடையாளம் அது எவ்வளவு பெரிசுங்கிறதுல இல்ல மகா…” என்று சொல்லி நிறுத்தியவர்,
“அந்த வீட்டுக்குள்ள என்ன ஒழுக்கம் இருக்குங்குறதுல தான்.” என்று பேத்தியையும் பேத்தி சொல்வதைக் கேட்டு அவளை கண்டிக்காமல் இருந்த மருமகளையும் அழுத்தமாக பார்த்து கூறினார் வரலட்சுமி.
அந்த நேரம் தன் அறையில் இருந்து இறங்கி வந்தான் சர்வேஷ்.
“குட் மார்னிங் ப்யூட்டீஸ்…” என்று சொல்லிக்கொண்டே வந்தவன் வரவேற்புறையின் அலங்கார மர சோபாவில் அமர்ந்து, அம்மா காபி என்று சொல்ல,
ஒரு நொடி அவனை மேலிருந்து கீழே பார்த்தார் வரலட்சுமி.
“சாமி கும்பிட்டயா?”
“இல்ல.”
“அப்போ காபி கிடையாது.”
“பாட்டி… சாமி கும்பிடாம ஒரு காபி குடிக்கறதுல என்ன இருக்கு?”
“ஒழுக்கம்.”
பேச்சு முடிந்தது என்பது போல வரலட்சுமி தீபங்களை ஏற்றிவிட்டு பூஜை அறையினுள் செல்ல,
சர்வேஷ் உடனே தன் தாயைப் பார்க்க,
“பிறந்ததிலிருந்து தினம் தினம் அவங்க கூட ஏன் கண்ணா ஏட்டிக்கு போட்டியா நிக்கிற?” என்று அவன் தாய் சொல்லி அவன் பதிலை எதிர்பார்க்காமல் மாமியாரின் பின்னே சென்றுவிட,
“நீ என்னதான் கேட்டாலும் அவங்க சொல்றதுதான் நடக்கும். தெரிஞ்சும் எனர்ஜியை ஏன் அண்ணா வேஸ்ட் பண்ற… வா போகலாம் இல்லன்னா சாப்பாடு எதையும் கண்ல கூட காட்ட மாட்டாங்க…” என்று சொல்லிய மகாலட்சுமி அவன் கையைப் பிடித்துக் கொண்டு இழுத்துச் செல்ல,
“இந்த வீட்டுல எந்த கேள்வி கேட்டாலும் எப்படி கேட்டாலும் ஒரே ஆன்சர் தான்.” என்று முணுமுணுத்தாலும் பாட்டி சொல்லை தட்டாமல் செய்தான் அந்தப் பேரன்.
பூஜை அறையில் பாட்டி காட்டிய தீபாராதனையை கண்களில் ஒற்றிக்கொண்டு கை நிறைய விபூதியை எடுத்து நெற்றி நிறைய இட்டுக் கொண்டவன், “இப்போ ஓகேவா?” என்று அப்பாவி போல முகத்தை வைத்துக்கொண்டு கேட்ட போதிலும் சிரிக்கவில்லை வரலட்சுமி.
அவனைத் தாண்டிக் கொண்டு நீண்ட கைகளை கண்ட சர்வேஸ்வரன் வாயை இறுக்க மூடிக்கொண்டான். அங்கே நின்று இருந்தது அவனது தந்தை லோகேஸ்வரன்.
பூஜை முடிந்து அனைவரும் வெளியே வந்திருக்க, வரலட்சுமி மெதுவாக நடந்து வந்து சர்வேஸ்வரன் முன்னே நின்றார்.
“இந்த வீட்டுக்கு நாலு தலைமுறை பேர் இருக்க காரணம் என்ன தெரியுமா?”
சர்வேஷ் அமைதியாக பார்த்தான். கேட்டு கேட்டு மனப்பாடம் ஆன வசனங்கள் தான். ஆனாலும் கேட்க அவனும் தவறியதில்லை. சொல்ல அவரும் சலித்தது இல்லை.
“கட்டிடம் கட்டினதால இல்ல.”
அவர் பார்வை வீட்டை முழுக்க சுற்றி வந்தது. அதில் கம்பீரத்தோடு சிறு கர்வமும் இருந்ததுவோ…
“அதை கட்டிய மதிப்பை காப்பாத்தினதால.”
அந்த நொடி… அவர் வெறும் வீட்டைப் பற்றி பேசவில்லை என்பது எல்லாருக்கும் புரிந்தது.
அந்த குடும்பம்… அதன் பெயர்… அது தாங்கி வந்த பாரம்பரியம்…
அதையெல்லாம் உயிரோடு பிடித்து வைத்திருந்தார் வரலட்சுமி அம்மாள். கோடி இருந்த குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் தீண்டி சென்ற அவரது விழிகள் ஜெகதீஸ்வரனின் நிலைத்தது.
எந்தவித தயக்கமும் இன்றி அதனை எதிர்கொண்டவன், தன் ஆறடி உயரத்திற்குமாக நிமிர்ந்து நின்றான்.
சந்தன நிறத்தில் பேன்ட் அணிந்து வெள்ளை நிற சட்டையை அணிந்திருந்தவனின் முகத்தில் வழக்கமான அமைதி.
பாட்டியின் பார்வையை பின்தொடர்ந்த சர்வேஸ்வரன்,
“பாட்டி…” என்று அழைக்க,
“என்ன ஷர்வா?” என்று கேட்டு வைத்தார்
“உங்க ஃபேவரட் பேரன் இருக்காரு. அவர் கிட்ட பேசுறது….”
“தெரியும்…” என்றபடி ஜெகதீஸ்வரனின் முகத்தில் நிலைத்தது அவரது பார்வை. அந்த பார்வை மற்ற இரு பேரன் பேத்திகளுக்கும் கிடைக்காது. ஏன் அவர் பெற்ற மகனான லோகேஸ்வரனுக்கு கூட கிடைத்தது இல்லை. அது தெரியாமல் இல்லை அவர்களுக்கும்.
ஜெகதீஸ்வரன் அருகே வந்து மெதுவாக,“பாட்டி….” என்று அழைக்க,
“ம்…” என்ற ஒற்றை ஒலி. அவ்வளவுதான்.
ஆனால் அந்த கண்கள் காட்டிய கனிவு அசாத்தியமானது.
“ஒழுங்கா தூங்குறியா?” அவன் முகத்தை பார்த்தபடி வரலட்சுமி அம்மாள் கேட்க, அவர் பேரன் தான் என்பதை நிரூபித்தான் ஜெகதீஸ்வரன்.
“ம்ம்...”
“சரியா சாப்பிடுறியா இல்லையா?”
“ம்ம்.”
“சுவர் இருந்தாதான் சித்திரம் வரைய முடியும்.”
அதற்கு பதில் கூட சொல்லாமல் அவன் தலையசைத்த விதமும் வரலட்சுமி அம்மாவை பார்த்த விதமும் அங்கே அமர்ந்து நடந்து கொண்டிருந்தவைகளை பார்த்துக் கொண்டிருந்த லோகேஸ்வரனுக்கு தனது தந்தையை நினைவூட்டியது.
“அப்படியே அப்பாவை உரிச்சு வச்ச மாதிரி…”
வரலட்சுமியின் கணவரும் இப்படித்தான்.
அளவான பேச்சு, கம்பீரம், ஒரு பார்வையிலே முடிவு சொல்லும் மனிதர்.
அந்த சாயல் முழுக்க ஜெகதீஸ்வரனிடம் இருந்தது. கணவரின் இறப்பில் மயங்கிக் கொண்டிருந்தவரை தேர்ச்சி எடுத்ததும் அப்பொழுது பிறந்திருந்த ஜெகதீஸ்வரன் தான். அதனாலயே வரலட்சுமிக்கு அவன் மீது தனி பாசம்.
பேச்சுப் பேச்சாக இருக்க நடைமுறைகள் சத்தமின்றி நிறைவேறிக் கொண்டிருந்தது அந்த இல்லத்தில்.
காலை நேர இளஞ்சூரிய ஒளி முற்றத்தின் நடுவே விழுந்து சிவப்பு நிறத்தை பரப்பி, ஒட்டியிருந்த குளிரை கொஞ்சம் கொஞ்சமாக குறைக்கும் பணியை ஆரம்பித்து இருந்தது.
ஈஸ்வர் இல்லத்தின் பெரிய முற்றம் அந்த காலை வேளையிலேயே உயிரோடு இருந்தது. வேலையாட்கள் தத்தம் பணிகளை செய்து கொண்டிருக்க குடும்பத்தினர் அனைவரும் ஒன்றுகூடி பேசிக்கொண்டு இருந்தனர்.
மதியம் இரவு என்று உணவு வேலைகள் அவரவர் பார்க்கும் வேலைக்கு ஏற்ப மாறுபட்டு போக, காலை வேலை ஒன்றாக கூடி உண்ண வேண்டும் என்பதும் அந்த வீட்டில் எழுதப்படாத சட்டமாகும்.
இரவு எத்தனை நேரம் கடந்து உறங்கச் சென்று இருந்தாலும் அதிகாலை 6:00 மணிக்கு குளித்து அனைவரும் பூஜை அறையில் ஒன்று கூடி இருக்க வேண்டும் என்பது அந்த வீட்டில் காலம் காலமாக கடைபிடிக்கப்படும் ஒழுக்கம்.
சிறு குழந்தை முதலே பழக்கப்படுத்தப்பட்ட ஒழுக்கம் அது. என்னதான் தினம் தினம் பாட்டியோடு சண்டை பிடித்தாலும் சர்வேஸ்வரன் கூட அதில் இருந்து விலகியது இல்லை.
ஆனாலும் விபரம் தெரிந்த பிறகு அவரோடு சண்டை பிடிக்காமல் அவன் இருந்ததும் இல்லை. இன்றும் அதேபோல் ஒரு சண்டையை ஆரம்பித்து இருந்தான்.
“பாட்டி… சீரியஸ்லி சொல்றேன்… இந்த டெமாக்ரசி நாட்டுல இருக்கிற இந்த வீட்டுல மட்டும் டெமாக்ரசிங்கறதே இல்ல.”
முற்றத்தின் நடுவே இருந்த ஊஞ்சலில் அமர்ந்து விசாலாட்சி கொண்டு வந்து கொடுத்த பில்டர் காபியை மிடறு மிடறாக ரசித்து ருசித்து பருகியபடி சொல்லிக் கொண்டிருந்தான் சர்வேஸ்வரன்.
அவனுக்கு சற்று தள்ளி கூடத்தில் போடப்பட்டிருந்த அந்த பிரம்மாண்ட சோபாவில் தந்தை லோகேஸ்வரனுக்கு அருகில் அமர்ந்திருந்த மகாலட்சுமி அவர் தோளில் சாய்ந்த படி, “வாய்ப்பில்ல ராஜா… நீ கேக்குறது அந்த கடையிலேயே இல்லையாம்…” என்று வம்புக்கு இழுக்க,
“பாருங்க பாட்டி…” என்று சிறுபிள்ளை போல புகார் வாசித்தவன், “இந்த வீட்டுல என்னோட பேசிக் ஹியூமன் ரைட்ஸ் எல்லாம் வயலட் ஆகுது.” என்று அழுவது போல சொல்ல, அதை கேட்டும் முகத்தில் சிரிக்கவில்லை வரலட்சுமி அம்மாள். ஆனால் கண்களில் மட்டும் மென்மை படர்ந்தது.
“நீ ரைட்ஸ் பத்தி பேசுறதுக்கு முதல்ல ரெஸ்பான்சிபிலிட்டி பத்தி தெரிஞ்சுக்கணும் ஷர்வா.” என்றார் அமைதியாக.
“பாட்டி…” என்று மார்பை பிடித்த சர்வேஸ்வரன்,
“உங்க டயலாக் புக் எங்க பிரிண்ட் ஆகுது? எங்கிருந்து இப்படியெல்லாம் கண்டுபிடிக்கிறீங்க?” என்று ஆர்ப்பாட்டமாக சொல்ல மகாலட்சுமி வாய்விட்டு சிரிக்க ஆரம்பித்தாள்.
அவளது மலர்ந்த முகத்தில் அவள் அருகே வந்து அமர்ந்தான் ஜெகதீஸ்வரன். தந்தையின் தோள் மீது தலை சாய்த்து இருந்த மகாலட்சுமி தமையனின் கையை பற்றிக்கொள்ள மென் புன்னகை அவன் முகத்தில்.
சர்வேஸ்வரனை அத்தோடு விடாமல், “அதான் சொல்றேன்… இந்த வீட்டுல ரெண்டு பேருக்கு மட்டும் ஸ்பெஷல் ட்ரைனிங் கொடுத்துருக்காங்க.” என்று கண்களை சிமிட்டி மகாலட்சுமி சொல்ல
“யாரு?” என்று கேட்டான் சர்வேஸ்வரன்.
“நீயும் பாட்டியும் தான்” என்று அமர்த்தலான குரலில் அவள் சொல்ல,
“ஏன்?”
“நீ அன்நெசசரியா மட்டும்தான் பேசுவ”
“பாட்டி?”
“தேவையானதை மட்டும் பின் பாயிண்ட் ஷார்ப்பா பேசுவாங்க.”
“இது காம்ப்ளிமெண்ட்டா, இன்சல்டா?”
“சிட்டுவேஷனுக்கு ஏத்த மாதிரி எடுத்துக்கோ தம்பி.”
மகாலட்சுமி சொல்லியதும் சர்வேஸ்வரன் கையில் அகப்பட்ட குட்டி மெத்தணையைத் தூக்கி எறிய, “ஏய்!” என்று கத்திக்கொண்டு ஓடினாள்.
“இரண்டு பேரும்…” அழுத்தமாக வந்த வரலட்சுமியின் குரலில், ஒரே நொடி அமைதியானார்கள் இருவரும்.
“இந்த வீட்டுல மட்டும் தான் எல்லாமே வித்தியாசமா இருக்கும். நியூ பட்டன் கூட ஹியூமன் வாய்ஸ்ல வேலை செய்து.” என்று முணுமுணுத்த படி தாயை இடித்துக் கொண்டு சர்வேஷ் அமர, பேச்சினை ஆரம்பித்தார் வரலட்சுமி.
அவர் முகத்தின் தீவிரத்திலேயே ஆங்காங்கே வேலை பார்த்துக் கொண்டிருந்த பணியாளர்கள் எல்லாம் விலகிச் சென்று விட குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே அந்த இடத்தை நிறைத்திருந்தனர்.
“ஜெகா…” பாட்டி அழைக்க,
“ம்.. சொல்லுங்க பாட்டி” என்றான் ஜெகதீஸ்வரன்.
“நாளைக்கு ஈவினிங் கொஞ்சம் சீக்கிரமா வீட்டுக்கு வர முடியுமா?”
“ஏன்?”
“ஜோசியர வர சொல்லியிருக்கேன்.”
அந்த நொடி மகாலட்சுமியும் சர்வேஸ்வரனும் ஒரே நேரத்தில் நிமிர்ந்து அமர்ந்தார்கள். மகாலட்சுமியின் முகமோ அப்பொழுதே அந்த வீட்டில் திருமணம் நடக்கப்போகிறது என்பதைப் போல ஜொலிக்க ஆரம்பித்தது.
ஆனால் குடித்துக் கொண்டிருந்த காபி புரையேறியது சர்வேஸ்வரனுக்கு. நேற்றைய இரவின் அகால வேளையிலும் அழைத்து விஷயத்தை சொல்லி இருந்தானே ஆண்ட்ரூ!
“சூப்பர்! சூப்பர்! பாட்டி அண்ணாவுக்கு கல்யாணம் பண்ண போறமா?” உச்சகட்ட மகிழ்ச்சியோடு மகாலட்சுமி ஆர்ப்பரிக்க, வரலட்சுமி அமைதியாக ஜெகதீஸ்வரனை பார்த்தார்.
“ஆமா ஜெகா…” என்றார் நேராக.
வீசி செல்லும் இளங்காற்றின் சத்தம் மட்டுமே அந்த இடத்தை ஆக்கிரமித்து இருக்க ஒருவரும் பேசவில்லை.
“பைனலி…” என்று ஏதோ சொல்ல ஆரம்பித்த சர்வேஸ்வரனை,
“சர்வா அண்ணா… பெரியண்ணா முகத்தை பார்த்துட்டு பேசு.” என்று சொல்லி அடக்கி வைத்தாள். அவள் சொன்ன பிறகுதான் தமையனின் முகத்தை பார்த்தான் சர்வேஸ்வரன்.
“அப்போ டபுள் கன்பார்ம்… சிங்கம் சிக்கிடுச்சு…” உள்ளுக்குள் குதூகளித்தான் சர்வேஸ்வரன்.
ஜெகதீஸ்வரன் முகத்தில் வரலட்சுமி எதிர்பார்ப்பது போல பெரிய மாற்றங்களோ இல்லை சர்வேஸ்வரன் எதிர்பார்த்த தடுமாற்றங்களோ எதுவும் இல்லை. அவன் அமைதியாகவே இருந்தான்.
அதை பார்த்த வரலட்சுமி மெதுவாக தொடர்ந்தார்.
“வயசு ஆகிட்டு இருக்கு.”
“பாட்டி…” என்று ஆரம்பித்த சர்வேஷ், ஜெகதீஸ்வரனுக்கு ஆதரவாக பேச எண்ணி, “அண்ணாக்கு இன்னும் தெர்ட்டி கூட ஆகல.” என்று சொல்ல,
“உன்கிட்ட நான் கேட்கல ஷர்வா.” என்றார் அழுத்தமான குரலில்.
அந்தக் குரலை மீறி இனி இது விஷயமாக அந்த வீட்டில் எவரும் பேச முடியாது என்பதை உணர்ந்தவனாக வாயை மூடிக் கொண்டான் அவன்.
“நம்ம குடும்பத்துக்கு ஏத்த மாதிரி நல்ல பெண் பார்த்து பேசணும்.” என்றார் வரலட்சுமி.
“ம்ம்ம்…” என்று மட்டும் சொன்னான் ஜெகதீஸ்வரன்.
அவனது அந்த அமைதியை அவனைப் பெற்றெடுத்த தாயும் தந்தையும் கூட சாதாரணமாகத்தான் நினைத்திருந்தார்கள்.
ஆனால் நடப்பது எதுவுமே தெரியாத போதிலும் தமையனின் முகத்தை பார்த்தே ஏதோ விளங்கியது மகாலட்சுமிக்கு.
‘அவன் ஏதோ யோசிக்கிறான்’ என்பதை உணர்ந்தவளாக,
“அண்ணா…” என்று மெதுவாக அழைத்தாள் அவள்.
அவன் திரும்பிப் பார்த்தான்.
“உனக்கு எப்படிப்பட்ட பொண்ணு வேணும்?” என்று கேட்டாள் சிரிப்போடு.
அந்த கேள்வியில் ஒரு நொடி அமைதி வந்தது.
சர்வேஷ் உடனே முன் வந்து,
“அது என்ன அங்க கேட்டுக்கிட்டு என்கிட்ட கேளு லிஸ்ட் கொடுக்கிறேன்...” என்றான்.
வரலட்சுமியும் அவனை பார்க்க,
“பாயிண்ட் நம்பர் ஒன் தேவையில்லாம பேசக்கூடாது. அமைதியா இருக்கணும்.”
“நம்பர் டூ அறிவா இருக்கணும். அன்பா இருக்கணும் அடக்கமா இருக்கணும் அதே சமயத்துல ஆளுமையோடையும் இருக்கணும். எல்லாத்தையும் விட அண்ணனை புரிஞ்சுக்குறவங்களா இருக்கணும்…” சர்வேஸ்வரன் அடுக்கிக்கொண்டே போக,
“இந்த அழகு… அது உங்க லிஸ்ட்லேயே இல்லை தம்பி…” மகாலட்சுமி இடை இட்டு கேட்க,
“அழகா…” என்று சர்வேஸ்வரன் மீண்டும் ஆரம்பிக்க போக,
“எந்த மாதிரி சூழ்நிலையா இருந்தாலும் விட்டுக் கொடுக்காம போராடி தன்னைத்தானே உருவாக்குற பொண்ணா இருக்கணும்.” என்ற ஜெகதீஸ்வரன் வார்த்தைகளின் சிறு ஆச்சரியம் வந்தது வரலட்சுமியின் முகத்தில் கூட.
அந்த ஆச்சரியம் கோபமாக மாறுமா, யாரை நினைத்து அவன் இந்த வார்த்தைகளை சொல்லி இருக்கிறான் என்று அந்த குடும்பத்தினர் அறியும்போது…
பொறுத்திருந்து பார்க்கலாம்.