அத்தியாயம் 13
ஜெகதீஸ்வரன் வீட்டில் கல்யாண பேச்சு அமர்க்களமாக ஆரம்பிக்க, இரண்டு மாத காலமாக நடந்து கொண்டிருந்த விஷயத்திற்கு முற்றுப்புள்ளி வைத்திருந்த சக்தியை அன்று காலை தான் பிடித்து நிறுத்தி இருந்தாள் தாரணி.
முதல் நாள் இரவு உடை மாற்றுகிறேன் என்று சென்ற சக்தி திரும்பி வரும் பொழுது கைபேசியில் ஆழ்ந்து போயிருந்தாள் தாரணி.
தோழியின் முகத்தைப் பார்த்த சக்திக்கு தெரிந்து போனது இந்த உலகத்திலேயே அவள் இல்லை என்பது.
“அப்பாடியோ! தப்பிச்சேன்டா சாமி. ப்ரோ எங்கிருந்தாலும் வாழ்க… அப்படியே பேசிக்கிட்டே இருங்க. உங்களுக்கு கோடி புண்ணியமா போகும்.” என்று மனதோடு ஆகாஷுக்கு வாழ்த்தை சொன்னவள் தன் உணவை உண்டு கொண்டே பேசிக் கொண்டிருந்த தாரணிக்கும் உணவை ஊட்டி முடித்து சத்தம் இல்லாமல் படுத்து கொண்டாள்.
இரவு முழுவதும் பேசியவள் சற்று தாமதமாக எழுந்து கொள்ள எப்படியாவது தப்பித்துச் சென்று விட வேண்டும் என்று அவசர அவசரமாக கிளம்பி கொண்டிருந்த சக்தியை கண்களை கசக்கியபடி எழுந்த தாரணி பிடித்துக் கொண்டாள்.
“கேடி! நேத்து ஆகாஷ் பேசுனதுனால எஸ்கேப் ஆகிட்ட. இப்பவும் உன் டகால்டி வேலைய என்கிட்ட காட்டலாம்னு நினைக்காத. சொல்லுடி என்ன ஆச்சு?” என்று அவள் கையைப் பிடித்து இழுத்து தன் கட்டிலில் உட்கார வைத்து தாரணி கேட்க,
“சொல்றதுக்கு ஒன்னும் பெரிய விஷயம் இல்ல தரு மா. ஃபிரண்ட்ஷிப் மட்டும் தான் பீல் ஆச்சாம். அடுத்த ஸ்டெப்புக்கு எடுத்துட்டு போக முடியலையாம். அதனால ப்ரோபோசல் பிரேக் பண்ணிட்டு லெட்ஸ் பி ஃப்ரெண்ட்ஸ் பார் எவர் அப்படின்னு சொல்லிட்டாங்க.” முகத்தில் எந்த விதமான உணர்வுகளும் இன்றி சக்தி சொல்ல,
“இப்படி நினைச்சது நீயா அவனா? பொய் சொல்லாம சொல்லுடி பிராடு…” தாரணி கண்களை உருட்டி கேட்க
“க க போ…” என்றாள் சக்தி துள்ளலாக.
“பிச்சிடுவேன் டி…” என்ற தாரணிக்கு கோபம் தணியவில்லை.
“நேத்து தாரணி மாதிரி தான் பரத்தும் எனக்கு ஒரு ஃப்ரெண்ட்ன்னு சொன்னேன். இன்னைக்கு பாரு ப்ரூப் பண்ணிட்ட…” என்று சம்பந்தமே இல்லாமல் சக்தி சொல்ல,
“என்னடி சொல்ற?” எண்ணெயில் போட்ட கடுகாக பொரிந்தாள் தாரணி.
“உண்மையைச் சொல்றேன்.” என்று காலரை தூக்கி விட்டுக் கொண்டு சக்தி சொல்ல,
எட்டி மேசை மீதி இருந்த பூச்சாடியை எடுத்து அடிப்பதுபோல செய்கை செய்தவள், “கொலைகாரி ஆக்காத மச்சி…” என்றும் சொல்ல,
“நிஜமா தரு…” அப்பாவியாகச் சொன்னாள் சக்தி.
“வர வர ரொம்ப பேச ஆரம்பிச்சிட்ட நீ…” கோபத்தில் தாரணி வார்த்தையை விட,
சட்டென்று வாய் மூடி மௌனியானாள் சக்தி. பரத் உடனான உறவின் தன்மையை அறிய முடியாமல் தன்னோடு போராடிக் கொண்டிருந்தவளுக்கு, பரத் கொடுத்த விடுதலையும், நேற்று இரவு ஜெகதீஸ்வரனோடு கிடைத்த சிறு தனிமையும் அவளுக்கு மனதில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருந்ததோ என்னவோ…
தன்னையும் அறியாமல் பேசி இருக்க, தாரணி அதை குறிப்பிட்டு சொல்லவும் மீண்டும் தன் பழைய நிலைக்கு சென்று விட்டாள் சக்தி.
தோழி முகத்தைப் பார்த்த தாரணிக்கு என்னவோ போல ஆனது. அதை வெளிக்காட்டிக் கொண்டால் இன்னும் நத்தை தன் கூட்டுக்குள் சுருங்கிக் கொள்வது போல தோழி சுருங்கி கொள்வாள் என்பதை உணர்ந்தவளாக,
“இது என்ன புது டிரிக்கா? மூஞ்ச உடனே சோகமா வச்சுக்கிட்டா நாங்க எதுவும் கேட்காமல் போயிடுவோமா? இந்த வேலையெல்லாம் என்கிட்ட ஆகாது. நீ பீல் பண்றது எல்லாம் அப்புறமா ஃபீல் பண்ணிக்கோ. விஷயத்தை சொல்லு… என்ன நடந்துச்சு? நீ என்ன பண்ணி வச்ச?” என்று கேட்க, பதில் இல்லை சக்தியிடம்.
“இப்போ நீ சொல்றியா, இல்ல பரத்துக்கு கால் பண்ணி நான் கேட்கவா?” தாரணி அவள் கைபேசியை கைப்பற்றி அதில் பார்வையை பதித்த படி கேட்க,
“தரு விளையாடாத… மார்னிங் டைம்… ஆஃபீஸ் கிளம்பிட்டு இருக்கலாம் இல்ல தூங்கிட்டு கூட இருக்கலாம். நாம டிஸ்டர்ப் பண்ணக்கூடாது.” என்று கைபேசியை அவளிடம் இருந்து பறித்தபடி சொன்னவள்,
“இப்போ உனக்கு என்னதான் வேணும்?” என்றால் சற்றே ஓய்ந்த குரலில்.
“விஷயத்தை சொல்லணும். அதுதான் வேணும். என்ன ஆச்சு? ரெண்டு மாசமா வெயிட் பண்ணிக்கிட்டு இருந்தவன் நேத்து ஏன் அப்படி பேச போச்சு?” தாரணி கேட்க,
“ரெண்டு மாசமா அவனோட குட் மார்னிங் குட் நைட் மெசேஜஸ்க்கு ரிப்ளை பண்ணி இருக்கேன். வேற ஏதாவது ஃபார்வேர்டு மெசேஜ் பண்ணா ஸ்மைலிஸ் அனுப்பி இருக்கேன். ஃப்ரெண்ட்லி டாக் தாண்டி வேற டாபிக் பேச அவன் ட்ரை பண்ணா நான் அவாய்ட் பண்ணேன். என்னால அவன் கிட்ட அதுபோல பேச முடியல. அவன் பேசுறதையும் என்னால கேட்க முடியல.
பொருத்து பார்த்திருப்பான்… அவனும் எத்தன மாசம் வெயிட் பண்ணுவான்? சோ…” என்று சக்தி அமைதியான குரலில் சொல்ல,
“சோ…” அவள் வார்த்தையை திருப்பிப் படித்தாள் தாரணி கண்களில் கூர்மையை ஏந்தியபடி.
“இது பிரண்டுக்கு தான் செட் ஆகும் லவ்வுக்கு எல்லாம் ஒத்து வராதுன்னு முடிவு பண்ணி நேத்து ப்ரொபோசலுக்கு குளோசர் கொடுத்தாச்சு. எனக்கும் நேத்துதான் ஏதோ கூண்டுக்குள்ள இருந்து வெளியே வந்தது போல மனசு நிம்மதியா இருந்தது. அநியாயமா ஒருத்தவங்கள வெயிட் பண்ண வச்சுக்கிட்டு இருக்குமேன்னு குற்ற உணர்வா இருந்துச்சு. நேத்து பரத் பேசினதுல அது எல்லாம் கிளியர் ஆயிடுச்சு…” என்று மனதில் உள்ளதை எல்லாம் தெளிவாக சக்தி விளக்க, கையில் வேப்பிலை மட்டும் இருந்திருந்தால் சாமியாடி இருப்பாள் தாரணி.
“எருமை எருமை எருமை… எனக்கு வாயில… ஏன் ஃப்ரெண்ட்ஷிப்ல இருந்து லவ்வுக்கு உன்னால கொண்டு போக முடியல? என்ன பிரச்சினை? பேசின வரைக்கும் நல்ல பையன் தான? எந்த கெட்ட பழக்கமும் கிடையாது தானே அவனுக்கு?” பத்ரகாளியாக தாரணி கேட்க,
“இல்ல சரக்கடிப்பானா.” என்றாள் சக்தி பட்டென்று.
“உனக்கு எப்படி தெரியும்?” யோசனையாக தாரணி கேட்க,
“அவன் தான் சொன்னான்.” என்று பதில் தந்தாள் சக்தி.
“இதுக்கு மேல அவன் நல்லவன்றதுக்கு என்ன ப்ரூப் வேணும் உனக்கு?” என்ற அதிமேதாவியாக தாரணி அடுத்த கேள்வியை கேட்க,
“லூசு! அது நான் பிரெண்டுனு சொன்னதுக்கு அப்புறம் அது சொன்னது. அதுக்கு முன்னாடி அந்த நாய் சொல்லவே இல்ல.” என்று சொன்ன சக்தியின் வார்த்தைகளில் துளி மரியாதை இல்லை.
“சரி பேச்ச மாத்தாத… இந்த காலத்துல எல்லாருமே தான் சோசியல் ட்ரிங்கர்னு டேக் ஒட்டிக்கிட்டு ட்ரிங்க்ஸ் பண்ணிக்கிட்டு தான் இருக்காங்க. ஈவன் ஆகாஷ் கூட அப்படி தான் சொல்லுவாரு. இதுக்காக எல்லாம் வேண்டாம்னு சொல்லுவியா…” விடாமல் தாரணி கேள்விகளால் துளைக்க,
“அப்படி இல்ல…” என்ற அவளின் குரலில் சிறு தயக்கம் எட்டிப் பார்த்தது.
“என்ன நொப்பிடி இல்ல? பாத்துட்டு வந்த ஃபர்ஸ்ட் டேயே பிரண்ட்லியா இருக்கு… கம்ஃபர்டபிலா இருக்குன்னு சொன்னல்லடி… இதுக்கு மேல என்ன வேணும் உனக்கு? ஃப்ரெண்ட்ஷிப் லவ்வா மாறக்கூடாதா?
எத்தனையோ படங்கள்ல காமிச்சி இருக்காங்க. எத்தனையோ கதைகளை நான் படிச்சிருக்கேன். எல்லாத்தையும் விட என் கூட ஆபீஸ்ல வொர்க் பண்றவங்க, நம்ம பக்கத்து ரூம்ல இருக்கிற பொண்ணு கூட அவங்களோட பெஸ்ட்டிய தாண்டி கல்யாணம் பண்ணி இருக்காங்க…
உனக்கு மட்டும் என்ன தான் டி பிரச்சனை?” தாரணி நீட்டி முழக்கி கொண்டே செல்ல,
“எனக்கு தெரிஞ்சதெல்லாம் பிரியமான தோழி மேடி ஸ்ரீதேவி தான். ஃப்ரெண்ட் ஃப்ரெண்ட் தான். லவ் லவ் தான்…” இரண்டே வாக்கியத்தில் மூச்சு பிடித்து பேசியவளை வாயடைக்க வைத்திருந்தாள் சக்தி.
“திருத்த முடியாது டி. திருத்தவே முடியாது உன்னையெல்லாம்… இப்ப என்ன பண்ண போற நீ?” தலையில் அடித்துக் கொண்டு தாரணி கேட்க,
“கல்யாணம் பண்ணிக்கிறேன் டி. இனி கல்யாணமே பண்ணிக்க மாட்டேன்னு சொன்ன மாதிரியே கத்துற…” என்று சமாதானம் செய்ய முயன்றாள் சக்தி.
அதையெல்லாம் சட்டை செய்யாத தாரணி, “அம்மா என்ன சொன்னாங்க?” என்று அடுத்த கேள்விக்கு செல்ல,
“உடனே அடுத்த அலைன்ஸ் பார்க்கிறேன்னு சொன்னாங்க.” என்று சக்தியும் பதில் சொன்னால்.
“அதுக்கு தான் நீ வேணான்னு சொல்லிட்டியே…” என்று தாரணி கோபத்தில் காய,
“ஆமா தரு… ஒன்னும் இல்லன்னா அடுத்தது ஒன்னு அது இல்லன்னா அதுக்கு அடுத்தது உடனே எப்படி போக முடியும் ஐ நீட் சம் பிரேக்…” என்று பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு சொன்னாள் சக்தி.
“இந்த வியாக்கியானத்துக்கு ஒன்னும் குறச்சல் இல்ல. என்னமோ லவ் பண்ணி பிரேக்கப் ஆன மாதிரி பீல் பண்ற. அவன் லவ் பண்ணிட கூடாதுன்றதுக்காகவே கட்டைய போட்டுட்டு இப்ப பேச்சு வேற பேசுறியா?” விடவில்லை தாரணி.
தனக்காக, தன் எதிர்காலத்திற்காக, தனித்து நின்று விடக் கூடாதே என்ற ஆற்றாமையோடு தன்னிடமே போராடிக் கொண்டிருக்கும் தோழியை கண்கள் வியந்து பார்த்தாள் சக்தி.
“நீ இல்லாம நான் எப்படி இருக்க போறேன்னு தெரியல தரு…” தன்னையும் மீறி சக்தி சொல்லிவிட, கண்கள் கலங்கிவிட்டது தாரணிக்கு.
“அதுக்கு தானடி இவ்ளோ சண்டை போடுறேன்… உனக்கே உனக்காக ஒருத்தவங்க வேணும் சக்தி மா. புரிஞ்சுக்கோடா…”
“புரியுது தரு.”
“இப்பவும் ஒன்னு குடி முழுகி போயிடல. பிரண்ட்ஷிப்ன்ற ஸ்ட்ராங்கான பேஸ்மெண்ட் போட்டு லவ்வா பில்ட் பண்ணலாம் டா.”
“ஒவ்வொருத்தவங்க வாழ்க்கைக்கு ஒவ்வொரு பேஸ்மென்ட். என்னோட வாழ்க்கைக்கு நட்பையும் விட செக்யூர் பீல் முக்கியம். அந்த கைகள்ல நான் இருந்தா பாதுகாப்பா உணரனும்… எந்த கை பிடிச்சா என்னை சுத்தி எந்த கஷ்டமும் நெருங்காதோ… எந்த கை என்னை நோக்கி நீளும் போது எல்லா கஷ்டத்தில இருந்தும் என்னால வெளிவர முடியும் அப்படிங்கிற நம்பிக்கை வருமோ… அதுதான் என்னோட உறவுக்கு பேஸ்மென்ட் தரு. அப்படி ஒரு உணர்வு பரத் கிட்ட எனக்கு வரலையே… நான் என்ன பண்ணட்டும்?” தாழ்ந்த குரலில் சக்தி சொல்ல, அதற்கு மேல் பேச தாரணியிடமும் வார்த்தைகள் இல்லை.
“அப்படி ஒரு கை எப்போ உனக்கு கிடைக்கும்?” ஓய்ந்து போன குரலில் தாரணி கேட்க,
எப்பொழுதும் போல செவிகளை நிறைத்தது, “ஆர் யூ ஓகே?” என்றவனின் அழுத்தமான குரல். மனதிற்குள்ளேயே தலையை அசைத்து அந்தக் குரலை மனதின் ஆழத்திற்குள் அனுப்பி வைத்தவள் வெளியே தன்னைத் தானே சமாதானம் செய்து தோழியையும் சமாதானம் செய்யும் எண்ணத்தோடு,
“கிடைச்சிடும். கிடைக்காம எங்க போகும்? எனக்கானவன் இனிமே பிறந்து வரப்போறதில்ல. எனக்கு முன்ன பொறந்து வளர்ந்து எனக்காக இந்த உலகத்துல எங்கேயோ ஒரு மூலையில என்னை போலவே அவனும் காத்துட்டு தான் இருப்பான். என்ன கொஞ்சம் காலம் எடுக்கும். ஆனா கண்டிப்பா அந்த காலம் வந்துரும்.
எங்கேயோ எப்படியோ யாருக்கோ பிறந்தும் அவங்க எங்கேயோ தூக்கிப்போட்டும் கொஞ்சமும் தயங்காம தூக்கி தன்னோட புள்ளையா நினைச்சு வளர்த்து இப்போ எனக்கு கல்யாணம் பண்ணி வைக்க ஆசைப்படுற நிலா அம்மாவும், கைக்கு எட்டுற தூரத்துல கல்யாணத்தை வச்சுக்கிட்டு அந்த சந்தோஷத்த முழுமையா அனுபவிக்காம எனக்காக தவிச்சு என் கூட சண்டை போடுற உன்ன போல ஒரு பிரண்டும் கிடைக்க வச்ச என்னோட ஈசன், நான் எதிர்பார்க்கிற வாழ்க்கை துணையையும் சரியான நேரத்தில் கொண்டு வந்து சேர்ப்பார். அவர் இல்லாம அணுவும் அசையாது. எல்லாத்தையும் என் அப்பா ஈசன்… அவர் பார்த்து பாரு. எனக்கு அந்த நம்பிக்கை இருக்க தரு.
நீ என்னை பத்தி கவலைப்படறத விட்டுட்டு ஆகாஷ் ப்ரோ கூட என்ஜாய் பண்ற வழிய பாரு. இது உங்களுக்கே உங்களுக்கான நாட்கள். என்ன பண்ணினாலும் திரும்ப கொண்டு வர முடியாத நிமிஷங்கள். என்ஜாய் யுவர் செல்ப் தரு.” என்று சக்தி சொல்ல தோழியை எழுந்து கட்டிக் கொண்டாள் தாரணி.
வடிய காத்திருந்த கண்ணீரை உள்ளுக்குள் இழுத்துக்கொண்ட தாரணி, “காந்த கண்ணழகி… சும்மா நீ பார்த்தாலே நீ சொல்றதுக்கு எல்லாத்துக்கும் ஆப்போசிட்ல இருக்கவங்க மண்டைய ஆட்டிடுவாங்க. இப்போ இவ்ளோ எமோஷன்ஸ்ஸயும் அந்த கண்ணுல தாங்கி அடுத்து ஒரு வார்த்தை கூட பேச முடியாத அளவுக்கு பேசினா நான் என்னடி பண்ண முடியும்? உன் எண்ணம் போலவே எல்லாமே நடக்கட்டும்…” என்றாள் ஆத்மார்த்தமாக.
அவள் வணங்கிய ஈசன் அவளுக்காக அவன் அம்சத்தையே அனுப்பி வைத்திருக்கிறான் போல… சக்தியானவள் ஈசனை அடைய வேண்டும் என்பதே விதி… அதை அந்த ஈசனே நினைத்தாலும் மாற்ற முடியாது தானே?!
சண்டையிட்ட தாரணியை சமாதானம் செய்து அலுவலகம் சென்ற சக்திக்கு நேற்று முடிக்காமல் விட்டிருந்த பணி முன்னால் வந்து நின்றது. அந்த ப்ராஜெக்டை செய்திருந்த குழு அவளுக்கு முன்பாக வந்து காத்திருக்க, அந்த வேலையை தான் செய்ததும் அதை தொடர்ந்து நேற்று நடந்தவைகள் எல்லாம் ஒரு நிமிடம் மணக்கண்ணில் படங்களாக ஓடி மறைய, பெரும்பாடு பட்டு அவற்றை ஒதுக்கி வேலையில் கவனத்தை செலுத்தினாள்.
அவள் எண்ணத்தில் உருவாகி இருந்த அந்தப் பகுதி வரைவுத்தாள்களிலும் மடிக்கணினிலும் கோடுகளாகவும் வளைவுகளாகவும் வரையப்பட்டு முழு வடிவம் பெற்றது.
அதை அந்தக் குழுவினருக்கு விளக்கி, சர்வேஷ் மற்றும் ஜெகதீஸ்வனிடம் காட்டி அதில் அவர்கள் சொன்ன சில திருத்தங்களையும் செய்து வாடிக்கையாளரிடம் சமர்ப்பிக்கும் கடைசி கட்ட முழு வரைவையும் செய்து முடிக்க அந்த நாளும் முடிவுற்றிருந்தது.
இந்த நாள் இப்படியே இனிதாய் நிறைவுற்று இருக்க வரும் காலம் அவர்களுக்காக வைத்திருப்பது என்னவோ?