அத்தியாயம் 24
அலுவலக வேலைகளை முடித்துக் கொண்டு வீடு வந்து சேர்ந்த ஜெகதீஸ்வரனுக்காக காத்திருந்தது அவனது மொத்த குடும்பமும்.
மகாலட்சுமி முகம் மட்டும் சிறுத்து இருக்க அவள் கையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்த சர்வேஸ்வரனின் கண்கள் தமையனிடம் ஏதோ விஷயத்தைச் சொல்ல முனைந்தன.
அதை கவனித்தாலும் கவனிக்காதவன் போல நேராக சென்று மகாலட்சுமி அருகில் அமர்ந்தான் ஜெகதீஸ்வரன்.
இரு அண்ணன்களுக்கும் நடுவே அமர்ந்திருந்த மகாலட்சுமி, நிஜத்திற்குமே அந்த குடும்பத்தின் மகாலட்சுமி மட்டுமல்ல அழகிலும் குணத்திலும் கூட மகாலட்சுமியே தான்.
ஒவ்வொருவரையும் ஆழ்ந்து பார்த்த ஜெகதீஸ்வரனின் மூளைக்கு எதுவோ சரியில்லை என்பது விளங்க யாரேனும் பேசுவார்களா என்று சில நொடிகள் தாமதித்தான்.
ஒருவரும் பதில் சொல்லாமல் போக தாயைப் பார்த்தவன், “என்னாச்சும்மா?” என்று கேட்டான் அழுத்தமான குரலில்.
“அது…” என்று அவர் ஆரம்பிக்க வரலட்சுமி திரும்பி அவரை பார்த்து பார்வையில் அவரது வாய் தானாக மூடிக்கொண்டது.
“அப்பா எங்கம்மா?” மீண்டும் தாயிடம் அவன் கேட்க, “மினிஸ்டர் குருமூர்த்திய பார்க்க போயிருக்காங்க ஜெகா.” என்று பதில் சொல்ல,
பிரச்சனை என்ன என்பது லேசாக விளங்கியது ஜெகதீஸ்வரனுக்கு. நேராகப் பாட்டியை பார்த்தான் பேரன்.
“சொல்லுங்க பாட்டி என்ன நடக்குது?” என்று அவன் கேட்க,
“குருமூர்த்திக்கு நம்ம வீட்ல பொண்ணு எடுத்து பொண்ணு கொடுக்கணுமாம்.” என்று சொல்லிய வரலட்சுமியின் முகத்தில் கோபத்தின் ரேகைகள்.
“வாட்?” ஜெகதீஸ்வரன் அழுத்தமான குரலில் கேட்க,
“கல்யாணத்துக்கு உன்னோட ஜாதகம் வெளிய போனதுல நிறைய இடத்துல இருந்து பேசினாங்க. அதுல குருமூர்த்தியும் ஒருத்தர்.” என்றார் வரலட்சுமி.
“அதுக்கு?” பற்களை கடித்துக் கொண்டு ஜெகதீஸ்வரன் கேட்க,
“ஏற்கனவே மகாவ எங்கேயோ கல்யாணத்துல பார்த்துட்டு அவர் பையனுக்கு பிடிச்சு போச்சுன்னு சொல்லி கேட்டாங்கல்ல ஜெகா… இப்போ அவங்க ஆளுங்கட்சி அமைச்சர் வேற… அதனால…” புவனேஸ்வரி மெதுவான குரலில் சொல்ல,
“அமைச்சரா இருந்தா… ஈஸ்வர் குடும்பத்துல சம்பந்தம் வைக்கணும்னு கேக்க தைரியம் வருமா?” அடுத்த கேள்வி அக்கினியாக வந்தது வரலட்சுமியிடம் இருந்து.
“இல்லத்த…” புவனேஸ்வரி வார்த்தைகளை மென்று விழுங்க
“அமைச்சரா இருந்தா என்ன? ஈஸ்வர் குடும்பத்து மருமக நீ. அதுக்கு தகுந்தா போல பேசணும் புவனா… பணம் இருந்தா போதுமா? அமைச்சரா இருந்தா நமக்கென்ன? குடும்பம், பாரம்பரியம்னு என்ன இருக்கு அவங்க கிட்ட?
அந்த குருமூர்த்தி எப்படி அமைச்சரானான்னு ஊருக்கே தெரியும்… எத்தனை கேஸ் அவங்க குடும்பத்து மேல இருக்குன்னு எல்லாருக்கும் தெரியும்.
காத்தடிச்சதுல ஏதோ ஒன்னு பறந்து போய் கோபுரத்தில் உட்கார்ந்துட்டா கோபுரத்துக்கு இணையானது கிடையாது அது…
ஏதோ குருட்டு அதிர்ஷ்டத்தில அமைச்சரா இன்னைக்கு இருக்கான். அப்படிப்பட்டவனுக்கு நம்ம குடும்பத்துல சம்பந்தம் வைக்கணும்னு கேக்குறதுக்கு யார் கொடுத்தா தைரியம்?” படபடவென்று பொரிந்து தள்ளினார் வரலட்சுமி.
“மகா…” மகாலட்சுமியை ஜெகதீஸ்வரன் அழைக்க,
“நூல போல சேல தாயைப் போல புள்ளன்னு சும்மாவா சொன்னாங்க… அப்பனுக்கு தப்பாம பொறந்திருக்கான் அவன். ஷாப்பிங் போன பிள்ளைய வழி மறிச்சு பேசி இருக்கான்… தராதரம் தெரியாதவனுங்க… தனியா போயிருக்க பொம்பள புள்ளைய மறிச்சு பேசி இருக்கான். இதுதான் அந்தக் குடும்பத்தோட லட்சணம்.” கோபம் கொழுந்து விட்டு எறிய வரலட்சுமி சொல்ல அது ஜெகதீஸ்வரனிலும் பற்றி கொண்டது.
“ஷர்வா…” என்ற அழுத்தமான ஜெகதீஸ்வரனின் குரலில்,
“எல்லாம் முடிஞ்சது அண்ணா…” என்று சொன்ன சர்வேஸ்வரனின் குரலில் அப்படி ஒரு ரௌத்திரம்.
“எப்போ நடந்துச்சு? என்கிட்ட ஏன் சொல்லல?” பழுக்க காய்ச்சிய கம்பியின் தகிப்போடு வந்தது ஜெகதீஸ்வரன் கேள்விகள்.
“இதெல்லாம் ஒரு விஷயமா? நான் பாத்துக்க மாட்டேனா?” என்றான் சர்வேஸ்வரன், ராமனின் லக்ஷ்மணனாய்.
“உனக்கு என்ன?” மகாலட்சுமியிடம் ஜெகதீஸ்வரன் கேட்க,
“செருப்ப கழட்டி ரெண்டு தடவ தான் அடிக்க முடிஞ்சுச்சுன்னு கவலை அவளுக்கு…” ஜெகதீஸ்வரனுக்கு மட்டும் கேட்கும் குரலில் அவன் சொல்ல, தங்கையைப் பார்த்தான் ஜெகதீஸ்வரன். அவளும் அண்ணனின் முகத்தை அந்நேரத்தில் பார்க்க,
“என்னடா?” என்று கேட்டான் ஜெகதீஸ்வரன்.
“மகாலட்சுமின்னு பேரு வச்சதுக்கு மல்கோவான்னு வச்சிருக்கலாம். சும்மா தளதளன்னு…” என்று வழிமறித்து சொல்லியவன் காதருகே வந்து உளறிய கேவலமான வார்த்தைகள் எல்லாம் மீண்டும் செவியில் கேட்க, அத்தோடு கையைப் பிடித்து அவன் இழுத்ததில் அவனோடு மோதி நின்றதும் மீண்டும் கண் முன்னே வந்து செல்ல தலையை உதறியவள்,
“தப்பா பேசிட்டான் அண்ணா. அருவருப்பா இருக்கு.” என்றாள் கோபமும் அருவருப்பும் கலந்த குரலில்.
பற்களை கடித்துக் கொண்டு ஜெகதீஸ்வரன் தன் தம்பியை பார்க்க, “எல்லாம் முடிஞ்சது. ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணி இருக்கு. கண்ணுல ஏதோ பெரிய ப்ராப்ளம். மேக்ஸிமம் தெரியாதுன்னு டாக்டர் சொல்றாங்க. கை கால் உடம்பு முழுக்க பிராக்சர். எழுந்து உட்காரவே சிக்ஸ் டூ எயிட் மந்த்ஸ் ஆகலாம்.” என்றான் அவன் சத்தம் இல்லாத குரலில்.
“அப்பா?”
“இந்த விஷயம் பெரியவங்களுக்கு இன்னும் தெரியாது. தெரியவர எப்படியும் ரெண்டு நாள் ஆகும். அதுக்குள்ள குருமூர்த்தி அப்பாவ மீட் பண்ணனும்னு கேட்டு போயிருக்காங்க.” என்று முடித்தான் சர்வேஸ்வரன்.
“எப்படி தைரியம் வந்தது அவனுக்கு?” பல்லை கடித்துக்கொண்டு அவன் கேட்க,
“அப்பா மினிஸ்டர் அண்ணா. அந்த தைரியம்.” என்றான் சர்வேஸ்வரன்.
“அப்போ அந்த தைரியத்தை உடைக்கணும் ஷர்வா…” என்றவன், மகாலட்சுமியின் தலையை வருடி விட்டு கண்களால் சமாதானம் சொல்லி எழுந்து சென்றான். அவனை பின் தொடர்ந்தான் சர்வேஸ்வரன்.
தோட்டத்திற்கு வந்த ஜெகதீஸ்வரன், தன் கைபேசியை எடுத்து அழைத்தான் ஒரு எண்ணுக்கு.
“என்னவாம் கட்டிடத்துறைக்கு?” என்று ஒரு குரல் உற்சாகமாய் பேச ஆரம்பிக்க,
“ஒன் செக் மச்சான்…” என்று சொல்லிய ஜெகதீஸ்வரன் அடுத்து இன்னொரு எண்ணுக்கு அழைத்தான்.
“மச்சி...” ஆர்வமாக வந்த குரலை தடுத்தவன்,
“ஒரு நிமிஷம் மச்சான்…” என்று சொல்லி, இரு அழைப்புகளையும் ஒன்றாக இணைக்க,
“யாரை இழுத்து விட்டு இருக்க…” என்று இரண்டு புறம் இருந்தும் கேட்டது குரல்.
“நிர்வாக துறையும் வந்திருக்கு போல இருக்கு…” என்று கேட்டது விஜயேந்திரன் குரல். காவல்துறையில் உயர் பதவியில் இருப்பவன்.
“இந்த காக்கி சட்டையை எதுக்குடா உள்ள இழுத்த?” என்று கேட்டது அவனது மற்றொரு நண்பன் சத்யதேவ். சென்னை மாநகரத்தின் மாவட்ட ஆட்சியர்.
“முக்கியமான விஷயம்…” ஜெகதீஸ்வரன் அழுத்தமான குரலில் சொல்ல ஆர்ப்பரித்த இரண்டு குரல்களும் அமைதியாகி போயின.
“சொல்லு ஈஸ்வர்…” இருவரும் ஒரே நேரத்தில் அழுத்தமாய் சொல்ல,
“மகா கிட்ட ஒருத்தன் மிஸ் பிஹேவ் பண்ணி இருக்கான்.” சொல்லி முடிக்க கூட இல்லை,
“அவ்வளவு தைரியம் யாருக்கு டா வந்துச்சு?” இரு குரல்களும் ஒன்றாய் வந்தது.
“மினிஸ்டர் குருமூர்த்தி பையன் குரு பிரசாத்.” என்று பதில் சொன்னால் ஜெகதீஸ்வரன்.
“சர்வா என்ன பண்ணிட்டு இருக்கான்…” விஜயேந்திரன் கேட்க,
“அதையெல்லாம் அவன் பாத்துகிட்டான். நான் சொல்றது குருமூர்த்திய…” என்று ஜெகதீஸ்வரன் சொல்ல,
“என்ன பண்ணனும்?” என்று கேட்டான் சத்யதேவ்.
“ஏற்கனவே அந்தாள் மேல இருக்க கேஸ் எல்லாத்தையும் தூசி தட்டி எடுக்கணும். இப்போ இருக்கிற போஸ்டிங்க்ல அவன் பண்ண அத்தனை விஷயத்துக்கும் என்கிட்ட ப்ரூப் இருக்கு. அது எல்லாத்தையும் சென்ட் பண்றேன். மினிஸ்டர் பையனா இருக்கறதுனால தான் இந்த அளவுக்கு தைரியம் வந்துருக்கு. அப்போ அப்பா மினிஸ்டரா இருக்கக் கூடாது இல்ல…” என்று பற்களைக் கடித்துக் கொண்டு ஜெகதீஸ்வரன் சொல்ல, கேட்டுக்கொண்டிருந்த சர்வேஸ்வரன் அவர்களது அலுவலக அறை நோக்கி சென்றுவிட்டான், தன் தமையனின் எண்ணம் புரிந்தவனாக.
“பண்ணிடலாம் மச்சி. ஏற்கனவே அந்த ஆளு ஆட்டம் தாங்க முடியல… இப்போதான் லா அண்ட் ஆர்டருக்கு டிரான்ஸ்பர் வாங்கிட்டு வந்தேன். செம்மையா சிக்கி இருக்கான். வச்சு செஞ்சிடலாம். நீ எவிடன்ஸ் சென்ட் பண்ணு.” என்று விஜயேந்திரன் சொல்ல,
“ஆல்ரெடி ED அவங்க வேலையை ஸ்டார்ட் பண்ணிட்டாங்க. நீ அனுப்பி வை. நானும் சேர்த்து என்னால் முடிஞ்ச அளவுக்கு கொளுத்தி போடுறேன். எந்த பக்கம் இருந்தும் தப்பிக்க கூடாது அவன்.” என்றான் சத்யதேவ்.
“எல்லாத்தையும் சர்வா கிட்ட கொடுத்து விடுறேன். பார்த்துக்கோங்க.” என்று ஜெகதீஸ்வரன் சொல்ல, “ஓகே மச்சான். பாத்துக்கலாம்.” என்றனர் இருவரும்.
“மீடியாவுக்கு ஒரு காப்பி அனுப்பிட்டு தான?” விஜயேந்திரன் நண்பனை அறிந்தவனாக கேட்க,
“இந்நேரம் போயிருக்கும்.” என்று சொல்லிய ஜெகதீஸ்வரனை நோக்கி வந்த சர்வேஸ்வரன் தலையசைத்து விட்டு தன் வாகனத்தை நோக்கி சென்றான்.
“போயிடுச்சு…” ஜெகதீஸ்வரன் சொல்ல,
“அப்போ பாதி வேலை முடிஞ்சுச்சு. மீதி வேலையை நாங்க பார்த்துக்கிறோம் டா. டென்ஷன் ஆகாத.” சத்யதேவ் சொல்ல,
“ம்ம்…” என்றான் ஜெகதீஸ்வரன்.
“அப்புறம் சொல்லுங்கடா எப்போ கல்யாண சாப்பாடு போட போறீங்க?” சத்யதேவ் கேட்க,
“கல்யாண சாப்பாடு தானே போட்டுட்டா போச்சு… ஏன் டா நீ வேற கடுப்ப கிளப்பிக்கிட்டு இருக்க… இருந்து இருந்து ஒரு குடும்பம் என்னைய நம்பி பொண்ணு கொடுக்கிறேன்னு வந்தாங்க. நடுவுல ஒரு கேஸ் புடிச்சேன். பயப்படுறாங்கடா…” என்று விஜய் சொல்ல,
“சும்மா இருக்கணும் கைய வச்சுட்டு. புடிக்கிறது அம்புட்டும் இன்டர்நேஷனல் லெவல் கிரிமினல்ஸ்ஸ… பஞ்சாயத்து கூட்டுறது எல்லாம் பெரிய பெரிய தலைகளோட… இப்ப கூட பாரு ஃப்ரண்ட் ஒரு வார்த்தை சொன்னான்னு சொல்லி அமைச்சர தூக்கி உள்ள வைக்க என்ன வேலை பார்க்கலாம்னு நினைக்கிற… அப்புறம் எப்படி டா உனக்கு பொண்ணு கொடுப்பாங்க?” கிண்டலாக சத்யதேவ் கேட்க,
“ஐஏஎஸ் ஆகறதுக்கு முன்னாடியே கல்யாணம் ஆயிடுச்சுன்னு ஆணவத்தில ஆடாதடா. நான் புடிச்ச ட்ரக் கேஸுக்கு ஃபுல் சப்போர்ட் கொடுத்தது நீதான்னு வெளியே யாருக்கும் தெரியாத வரைக்கும் நீ தப்பிச்ச. தப்பி தவறி டிபார்ட்மென்ட் உள்ள யாருக்காவது தெரிஞ்சது… அப்ப இருக்கு உனக்கு கச்சேரி…” என்று அவன் வாயை அடைத்தான் விஜயேந்திரன்.
நண்பர்கள் இருவரின் சண்டையில் அத்தனை நேரம் இருந்த இறுக்கம் மறைய மென்புன்னகை வந்து அமர்ந்தது ஜெகதீஸ்வரன் இதழ்களில்.
“ஹலோ மிஸ்டர் ஈஸ்வர் அப்படியே எங்க ரெண்டு பேரு பஞ்சாயத்துல எஸ்கேப் ஆகிடலாம்னு நினைக்காதீங்க. எப்போ கல்யாண சாப்பாடு போட போறடா…” விஜயேந்திரன் மீண்டும் தன் கேள்வியில் வந்து நிற்க,
“கூடிய சீக்கிரம் மச்சி…” என்று அவன் வார்த்தையை முடிக்கும் முன்
“ஹூர்ரே…” என்று காதை கிழிக்கும் வண்ணம் கத்தி இருந்தனர் நண்பர்கள் இருவரும்.
“நீ சொல்றத பார்த்தா வீட்ல பார்த்தது போல இல்லையே…” காவலன் உடனே கண்டுபிடித்துவிட,
“அதுக்குத்தான்டா உன்னை மாதிரி ஒரு காக்கிச்சட்டை நம்ம கூட்டத்துல வேணும்ங்கிறது… விஷயத்தை சொல்லு மச்சி…” சத்யதேவ் கேட்க,
“தெரிஞ்சுகிட்டே என்னடா கேள்வி?” ஜெகதீஸ்வரன் பதில் கேள்வி கேட்க,
“லவ் பண்ண ஆரம்பிச்சும் இப்படி ஒரு வார்த்தையில் பதில் சொன்னேனா என்னடா பண்றது? அந்த பொண்ணு கிட்டயாவது பேசுறியா இல்ல அங்கேயும் மணிரத்தினம் பட ஹீரோ தானா?” கிண்டலாய் கேட்டான் சத்யதேவ்.
“கேள்வி கேட்ட பதில் சொல்லிட்டேன்…” அத்தனை களைபரங்களுக்கும் இடையே சக்தியின் முகம் கண்களுக்குள் வந்து போக, குரல் மென்மையானது ஜெகதீஸ்வரனுக்கு.
“மச்சான் அப்படியே ஒரு போட்டோ எடுத்து எனக்கு அனுப்பு. இது எல்லாம் மியூசிக்ல வைக்க வேண்டிய அரிய புகைப்படம். என்ன ஒரு சாஃப்டா வருது வாய்ஸ் பொண்ணு பத்தி பேசுனா…” விஜய் கலகலக்க,
“என்னை ஓட்டுனது போதும். போய் வேலையை பாருங்கடா.” என்று அவன் சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே,
சத்யதேவ் தன் அறையில் இருந்த தொலைக்காட்சியின் சத்தத்தை உயர்த்தினான்.
“பிரேக்கிங் நியூஸ்…
தமிழகத்தின் **** துறை அமைச்சரான குருமூர்த்தி மீது அமலாக்கத்துறை சார்பாக வழக்குப் பதிவு செய்துள்ள நிலையில் அவர் செய்த குற்றங்களுக்கான ஆதாரங்கள் நமது சேனலுக்கு கிடைத்துள்ளது…” என்று அதிரடியான இசைக்கு நடுவே செய்தியானது வாசிக்கப்பட்டு கொண்டிருந்தது.
“சோலி முடிஞ்சுது… வீட்ல நிம்மதியா இருக்க சொல்லு. பாத்துக்கலாம்.” என்ற விஜய்,
“மச்சான் சர்வேஷ் கால் பண்ணிட்டு இருக்கான். நான் போய் பார்க்கிறேன்.” என்று சொல்லி அழைப்பை துண்டித்தான்.
“விஜய்ய பாத்துட்டு உன் கிட்ட வருவான். நீ பாத்துக்கோ சத்யா.” என்று சொல்ல,
“ரைட் மச்சி. விடு பாத்துக்கலாம். இப்போ மிஸ் ஆனாலும் இன்னும் ஆறே மாசத்துல எலக்ஷன் வருது. நிச்சயமா இப்போ இருக்கிறவங்க வரப்போறது கிடையாது. அப்போ இன்னும் நல்லா செய்யலாம்… ஆனா இப்ப நீ பண்ணி இருக்கிற வேலைக்கு இன்னைக்கு நைட்டுக்குள்ள அந்த ஆளுக்கு நெஞ்சு வலி வந்து ஹாஸ்பிடல் அட்மிஷன் போட்டாலும் ஆச்சரியப்படுறதுக்கு இல்ல…” என்று சொல்ல நண்பர்கள் இருவரும் சிரித்தனர்.
“சார்…” என்று அழைத்தபடி சத்யதேவ்வின் அறைக்குள் யாரோ வருவது புரிய,
“நீ பாரு சத்யா… ஃப்ரீ ஆனதும் பேசலாம்.” என்று சொல்லிவிட்டு அழைப்பை துண்டித்தான் ஜெகதீஸ்வரன்.
வீட்டின் உள்ளே நுழைந்தவன் தொலைக்காட்சியை உயிர்ப்பித்து செய்தி சேனல் வைக்க, ஓடிக்கொண்டிருந்த செய்தியை கேட்ட வரலட்சுமி முகத்தில் அத்தனை நேரம் இருந்த இறுக்கம் மறைந்து கர்வமும் பெருமையும் உண்டானது.
சந்தோஷமாக பேரன் அருகில் வந்தவர் அவன் தோளைத் தட்டிக் கொடுத்து விட்டு செல்ல, தமையனின் தோளில் சாய்ந்து கொண்டாள் மகாலட்சுமி.
பிரமிப்பு மாறாமல் தன்னையே பார்த்துக் கொண்டிருந்த தாயைப் பார்த்து மெலிதாக புன்னகைத்த ஜெகதீஸ்வரன் தலையசைக்க அவரும் தலையசைத்தார்.
அப்பொழுது உள்ளே நுழைந்தது ஜெகதீஸ்வரனின் தந்தை லோகேஸ்வரனின் வாகனம்.
உள்ளே நுழைந்தவர் மகனின் முகத்தைப் பார்க்க, வார்த்தைகள் ஏதும் இன்றி பேசிக் கொண்டனர் தந்தையும் தனயனும்.
ஓடிக்கொண்டிருந்த செய்தியை பார்த்துவிட்டு ஜெகதீஸ்வரனை அவர் பார்க்க, தலையசைத்தான் அவனும்.
அப்படியே அவர் அமர்ந்துவிட, அவருக்கு அருகில் சென்றாள் மகாலட்சுமி. மகளைத் தோளோடு சேர்த்து அனைத்து கொண்டவர் தொலைக்காட்சியில் செய்தியை பார்த்துக் கொண்டிருக்க, புவனேஸ்வரி அவர் குடிக்க நீர் எடுத்து வந்தார்.
அவர் நீர் அருந்தி கொண்டிருக்கும் பொழுதே தன் அறைக்கு சென்று இருந்த வரலட்சுமி மீண்டும் வரவேற்புரைக்கு வர அதே நேரத்தில் உள்ளே நுழைந்தான் சர்வேஸ்வரன்.
லோகேஸ்வரன், ஜெகதீஸ்வரன், சர்வேஸ்வரன் என்று அந்த இல்லத்தின் மூன்று ஈஸ்வரன்களின் பார்வையும் ஒருவரை ஒருவர் தொட்டுச் செல்ல மூன்று பேரும் ஒரே நேரத்தில் தலையசைத்து கொண்டனர்.
தன் குடும்பத்தினரை காயப்படுத்த வேண்டும் என்று நினைத்தால் கூட அவர்களை இருந்த இடம் தெரியாமல் அழித்துவிடுவான் ஜெகதீஸ்வரன். லோகேஸ்வரன் கூட யோசித்து செயல்படுவார். பல நேரங்களில் கண்டு கொள்ளாமல் கூட சென்று விடுவார். ஆனால் ஜெகதீஸ்வரன் அவன் தாத்தாவைப் போல, முடித்துவிட்டு தான் அடுத்த வேலையை பார்க்கவே ஆரம்பிப்பான். ஜெகதீஸ்வரனின் நகல் தான் சர்வேஸ்வரன். அவனது யோசனைகளுக்கும் எண்ணங்களுக்கும் கூட வடிவம் கொடுப்பவன் சர்வேஸ்வரன்.
அதன் பிறகு அதைப்பற்றி அந்த வீட்டில் ஒரு வார்த்தை கூட எழவில்லை. அனைவரும் சேர்ந்து உணவருந்தி விட்டு அவரவர் அறைக்குள் சென்றனர்.
மலையைப் புரட்டி போட்டு விட்டு எதுவுமே நடக்காதது போல தன் அறையில் வந்து படுக்கையில் விழுந்தான் ஜெகதீஸ்வரன்.
அந்த நேரம் அவனை கலைத்தது அலைபேசியில் குறுஞ்செய்தி வந்ததற்கான சத்தம்.
எடுத்துப் பார்த்தான். சக்தியிடம் இருந்து வந்திருந்தன குறுஞ்செய்திகள்.
“வேலையெல்லாம் முடிஞ்சுதா?”
“சாப்டீங்களா?”
“மகா ஓகேவா?”
அடுத்தடுத்த செய்திகளை பார்த்தவனுக்கு விஷயம் புரிந்து விட்டது. சர்வேஸ்வரன் தன் கைங்கரியத்தை காட்டி விட்டான் என்பது விளங்க, அழைத்து விட்டான் சக்திக்கு.
அழைப்பை ஏற்றதும், “ஜெகன்…” என்று சக்தி அழைக்க, இளம் முறுவல் அவன் இதழ்களில்.
காதல் சொல்லிய இத்தனை நாட்களில் ஒரு முறை கூட அழைப்பை ஏற்றதும் ஹலோ என்று சொல்வதில்லை சக்தி.
அவன் பெயர் சொல்லியே ஆரம்பிக்கும் அவர்களது உரையாடல்கள். இந்த நொடியும் அதே போல சக்தி அழைக்க,
“சொல்லு சக்தி…” என்றான் ஜெகதீஸ்வரன்.
“மகா ஓகேவா?” என்று கேட்டாள் சக்தி மீண்டும்.
“ஷர்வா?” கேள்வியாக ஜெகதீஸ்வரன் நிறுத்த,
“ஆமா” என்றாள் சக்தி.
“டூ மச்…” என்றவன் குரலில் சிறு பொறாமை எட்டிப் பார்த்ததோ…
“நீங்க சொல்லணும். சொல்லல… ஆனா அவன் என்னோட பிரண்டு. என்கிட்ட சொல்லாம இருக்க மாட்டான்.” சிறு கர்வமும் வருத்தமும் தெரிந்தது அவள் குரலில்.
“இப்பதான் முடிஞ்சது. எல்லாரையும் சேர்த்து சாப்பிட வச்சுட்டு ரூமுக்கு வந்தேன். இனிமே தான சொல்ல முடியும்? அவன் வெளியே சுத்துனான். சோ உன்கிட்ட ஷேர் பண்ணி இருக்கான். நான் வீட்ல இருந்தேன். எப்படி சொல்ல முடியும்?” அவள் குரலில் தெரிந்த வருத்தத்திற்கு இவன் வார்த்தைகளால் மருந்திட,
“புரிஞ்சது… ஆனாலும்…” என்று இழுத்தவள்,
“நீங்க ஓகே தானே பா? மகா ஓகே தானே?” என்று மீண்டும் கேட்டாள் ஆதுரமாக.
“எல்லாம் ஓகே தான்…” என்றான் அவனும் அமைதியான குரலில்.
“இதனால நமக்கு எதுவும் பிரச்சனை இல்லையே? மினிஸ்டர் மேல கை வச்சிருக்கோம்…” சக்தி கேட்க அவளது கேள்வியை அவனுக்கு இதமாக இருந்தது.
“எல்லாமே லீகலா நடக்குதுடா. ஒன்னும் பிரச்சனை இல்ல. நாம எங்க மினிஸ்டர் மேல கை வைச்சோம்? ஆல்ரெடி ED உள்ள நுழைஞ்சிடுச்சு. நம்ம எவிடன்ஸ் மட்டும் தான் கொடுத்து இருக்கோம். உன்னோட ஜெகன் கேங்ஸ்டர் இல்ல. கவலைப்படாம இரு…” என்று சிறு கேலி புன்னகையோடு அவன் பதில் சொல்ல,
‘உன்னோட ஜெகன்..’ என்ற வார்த்தை தேனாய் இனித்தது பெண்ணுக்கு.
“எவ்வளவு கோபம் வருது உங்களுக்கு?” சிறு குரலில் சக்தி கேட்க,
“தொழில்ல பிரச்சனை வந்திருந்தா அது வேற மாதிரி பாத்துக்கலாம். ஆனா இது… ஃபேமிலி. குடும்பத்து மேல கை வைக்கணும்னு கூட நினைக்க கூடாதுல்ல…” என்றவனின் கோபத்தில் சில நிமிடங்கள் பேச்சே வரவில்லை பெண்ணுக்கு.
இடைவெளி விட்டு, “ஷர்வா மினிஸ்டர் பையன…” என்று அவள் இழுக்க,
“எத சொல்லனும்னு இல்லாம எல்லாத்தையும் சொல்லி வச்சிருக்கான். இடியட்” என்று மனதோடு தம்பிக்கு பாராட்டு விழா எடுத்தவன்,
“உயிருக்கு எந்த ஆபத்தும் கிடையாது. ஜஸ்ட் ப்ராக்சர்ஸ் மட்டும் தான். அதுவும் பாய்ஸ் ஃபைட்… இதுக்கெல்லாம் ஈவன் கேஸ் கூட போட முடியாது. அப்படி போட்டா முதல்ல அவனத்தான் தூக்கி உள்ள வைக்கணும். நீ ப்ரீயா விடு பாத்துக்கலாம். பிரச்சினை இல்லை.” என்று தேற்றினான் தன்னவளை.
“சர்வாவுக்கு எந்த பிரச்சினையும் வராதே?” மீண்டும் அவள் கேட்க,
“மேடத்தோட பிரண்டுக்கு எந்த பிரச்சினையும் வராம நாங்க பாத்துக்குறோம்.” என்றான் சற்று எரிச்சலைக் குரலில் காட்டி.
“இப்போ எதுக்கு கோபப்படுறீங்க?” சுணக்கத்தோடு அவள் குரல் கேள்வி எழுப்ப,
“கோபப்படாம தூக்கி வச்சு கொஞ்சுவாங்களா?” என்று வெடித்தான் ஜெகதீஸ்வரன்.
அவளிடம் அவன் எதிர்பார்த்தது கிடைக்கவில்லை போல… தன்னையும் மீறி வெளி வந்து விட்டிருந்தது வார்த்தைகள்
சிறு இடைவெளி.
அவள் எழுந்து நடந்து செல்வது விளங்கியது அவனுக்கு. அறையின் மேஜை மீது இருந்த விளக்கினை ஒளிர விட்டு கட்டிலில் சாய்ந்த அமர்ந்தான் ஜெகதீஸ்வரன். அவன் எண்ணியது போலவே தனியாக வந்தவள், காணொளி அழைப்பாக மாற்றினாள்.
“ஜெகன்…” அவன் முகத்தையே பார்த்தபடி அவள் அழைக்க,
கழுவி துடைத்த அவளது நிர்மலமான முகம் இவ்வளவு நேரம் இருந்த இறுக்கத்தையும் அலைக்கழிப்பையும் ஒன்றுமில்லாமல் ஆக்கியது ஜெகதீஸ்வரனுக்கு.
“ம்ம்…” அவள் முகத்தையே பார்த்தபடி அவன் சொல்ல,
“என்ன ஆச்சு?” என்றாள் மென்மையான குரலில்.
“நீ வேணும்…” என்று இருந்தான் நொடியும் தாமதிக்காமல்.
கண்கள் விரிய அவள் அவனைப் பார்க்க,
“இங்க வேணும்…” என்று தன் மார்புக்கு அருகே விரலைக் காட்டி சொல்ல அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள் சக்தி.
அவள் விழிகளையே பார்த்துக் கொண்டிருந்தவன் சில நிமிடங்களில் தன்னை சுதாரித்துக்கொண்டு, “சாப்டியா சக்தி?” என்று கேட்க, ஆம் என்பதாக அசைந்தது சக்தியின் தலை.
“பயந்துட்டியா?” சிறு சிரிப்போடு ஜெகதீஸ்வரன் கேட்க,
“இல்ல…” என்று அசைந்தது அவள் தலை.
“பின்ன?” குறும்பு சிரிப்போடு ஜெகதீஸ்வரன் அவள் முகத்தையே பார்த்தபடி கேட்க,
“என்னால இப்போ அங்க வர முடியாதே… இந்த தூரம் எனக்கு புடிக்கல.” என்றாள் அவன் விழிகளை ஊடுருவி பார்த்தபடி.
“சக்தி…” மென்மையாக அவன் குரல் வர,
“பேசிக்கலி நான் ரொம்ப ஸ்ட்ராங் ஜெகன். ஐ கேன் ஹேண்டில்… மேனேஜ் மை பிராப்ளம்ஸ்… ஆனா அதை எல்லாத்தையும் முடிச்சதுக்கு அப்புறம் சாஞ்சிக்க ஒரு தோள் இருந்தா நல்லா இருக்கும்னு ஃபீல் பண்ணி இருக்கேன்...
சால்வ் பண்ண வேண்டாம், சொல்யூஷன் கொடுக்க வேண்டாம், எனக்கு பதிலா அந்த இடத்துல நிக்க கூட வேண்டாம். ஆனா அது எல்லாத்தையும் செஞ்சு முடிச்சதுக்கு அப்புறம்… ‘நீ வா நான் இருக்கேன்’ அப்படின்னு சொல்லி சாஞ்சிக்க ஒரு தோள் வேணும்… ஒரு சின்ன ஹக்… கீழ விழுந்தாலும் எழுந்து நிக்கிற குழந்தையை அள்ளி மார்போடு சேர்த்துக்கிற அம்மா போல… யாராவது இருந்தா நல்லா இருக்கும்னு ஃபீல் பண்ணி இருக்கேன்.
இப்போ நீங்க பீல் பண்றது போல… ஐ கேன் ஃபீல் யூ ஜெகன்… ஆனா என்னால இப்போ உங்க கிட்ட வர முடியாதே… ஐ ஹேட் திஸ் டிஸ்டன்ஸ்…” அவன் முகத்தையே பரிதவிப்போடு பார்த்தபடி அவள் சொல்ல அசைந்தது அவன் உள்ளம்.
ஜெகதீஸ்வரனின் அசையாத உள்ளத்தையும் அசைத்துப் பார்த்த அவளை வரும் நாளின் விடியல் பல விதங்களில் அசைக்க காத்திருந்தது என்பதை உணராமல் நீண்டு கொண்டே சென்றது அவர்களது அன்றைய இரவு.