அத்தியாயம் 25
அப்பொழுதுதான் உறங்கியது போல இருந்தது சக்திக்கு. ஆனால் ஆட்கள் நடமாட ஆரம்பித்த அரவம் கேட்க எழுந்து அமர்ந்தாள் சக்தி.
நேரம் அதிகாலை ஐந்து என்று காட்ட, அறைக்குள் நுழைந்து கொண்டிருந்தனர் மணப்பெண் அலங்காரம் செய்வதற்காக வந்திருந்த பெண்கள்.
நெருங்கிய உறவினர்கள் எல்லாம் மண்டபத்திலேயே தங்கி இருக்க ஒவ்வொருவராக குளித்து கிளம்பி ஆயத்தமாகி கொண்டிருந்தனர்.
நன்றாக உறங்கிக் கொண்டிருந்த தாரணியை எழுப்பி விட அவளது தாய் வர, “நான் பார்த்துக்கிறேன் ஆன்ட்டி. நீங்க மத்த வேலைகளை பாருங்க. தாரணி என் பொறுப்பு.” என்று சொல்ல பெரிய கடமை தீர்ந்தது போல ஆசுவாச பெருமூச்சு விட்டவர்,
“பாத்துக்கோ கண்ணு அவ தூங்கிக்கிட்டே இருப்பா. எழுப்பி விடு. இவர் சொல்லி வச்சிருக்க மேக்கப் பண்றதுக்கு மூணு மணி நேரம் ஆகும்னு அந்த பொண்ணு சொல்லுச்சு. ஏழரை மணிக்கு முகூர்த்தம். இன்னும் தூங்கிட்டு இருக்கா பாரு… பாத்துக்கடா சக்தி” என்று சொல்லிவிட்டு கிளம்பியவர், மீண்டும் திரும்பி “எழுந்ததும் அவளுக்கு காபி வேணும். நான் அனுப்பி வைக்கிறேன் உனக்கும் அவளுக்கும் சேர்த்து. குடிச்சிட்டு கிளம்புங்கடா.” என்று விட்டு சென்றார்.
“தாரணி…” மெதுவான குரலில் சக்தி எழுப்ப,
“இன்னும் அஞ்சு நிமிஷம் சக்தி… நைட் ஃபுல்லா தூங்கல டி” என்று தூக்க குரலில் சொல்லியபடி புரண்டு படுத்தவளை,
“நானா பேச சொன்னேன்? நீதானே என் காது வலிக்க வலிக்க ரத்தம் வர வர மனசாட்சியே இல்லாம பேசி தள்ளுன… எழுந்திரிடி மணி ஆச்சு… பார்லர்ல இருந்து ஆள் வந்துட்டாங்க எந்திரி…” தாரணியின் காதுக்கு அருகே குனிந்து அவள் சொல்ல, திரும்பி படுத்தாளே தவிர்த்து எழும்பவில்லை தாரணி.
“எருமை! எந்திரி டி…” என்று சக்தி பற்களை கடித்துக் கொண்டு சொல்ல, அறையில் தாங்கள் கொண்டு வந்த பொருட்களை எடுத்து வைத்துக் கொண்டு இருந்த பெண்கள் தங்களுக்குள் சிரித்துக் கொண்டனர்.
“மானம் போகுது. எரும மாடு எந்திரிக்க மாட்டேங்குறா பாரு…” என்று தனக்குள் முணுமுணுத்தவள், தன் கைபேசியை எடுத்து என்னவோ செய்ய தாரணியின் கைபேசி அவள் காதுக்குள்ளே அதிர்ந்தது.
சட்டென்று விழித்தவள் கைபேசியை எடுத்து காதில் வைக்க, “இன்னும் அஞ்சு நிமிஷத்துல நீ எந்திரிச்சு குளிக்க போகலேன்னா ஆகாஷ் ப்ரோ இங்க வந்துடுவாராம்… உன்னோட அழகு முகத்தை இப்போ ப்ரோ பார்த்தாருன்னா பின்னங்கால் பிடரியில் இடிக்க ஓடிருவாரு டி. மரியாதையா எந்திரிச்சு கிளம்பு.” பக்கத்தில் அமர்ந்தும் கைபேசியின் வாயிலாகவும் சக்தி சத்தமாக சொல்ல, அடித்து பிடித்துக் கொண்டு எழுந்து உட்கார்ந்தாள் தாரணி.
“மணி என்னடி?” தலையை சொரிந்தபடி தாரணி கேட்க,
“அஞ்சரை…” வாய்க்கு வந்ததை சக்தி சொல்ல,
“ஐயோ இது மட்டும் எங்க அம்மாவுக்கு தெரிஞ்சா சோத்துல விஷத்தை வச்சுருமே…” என்றவள் கண்களை முழுதாக திறந்து பார்க்க எதிரே நின்று கொண்டிருந்தனர் பெண்கள் இருவர்.
அவர்கள் இருவரும் இவளை பார்த்து சிரிக்கவும் அசடு வழிந்த தாரணி, “முன்னாடியே இதை சொல்லக்கூடாதா எருமை… என்னை பத்தி என்ன நினைப்பாங்க? மானம் போச்சு…” என்று பற்களை கடித்து வார்த்தைகளை சக்தியின் மீது துப்பியவள் எதிரே நின்று கொண்டிருந்த பெண்களை பார்த்து சிரித்து வைத்தாள்.
“டைம் ஆயிடுச்சு சிஸ்டர்
கிளம்பலாமா?” வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு ஒரு பெண் கேட்க, “இதோ…” என்றவள் வேகமாக எழுந்து குளியலறை நோக்கி சென்றாள்.
“எல்லாத்தையும் இங்க வச்சுட்டு அங்க போய் என்ன பண்ண போற எருமை?” என்று பாசமாக பற்களை கடித்துக் கொண்டு வார்த்தைகளை அவளுக்கு மட்டும் கேட்கும்படி சொல்லிய சக்தி, கையோடு அவளுக்கு தேவையான பொருட்கள் அனைத்தையும் எடுத்துக் கொடுக்க, “இதுக்கு தான் சக்தி குட்டி வேணும்கிறது. கடைசி நிமிஷத்துல சொந்தக்காரங்க அத்தனை பேத்தையும் துரத்தி விட்டுட்டு உன் கூட படுத்து தூங்கினதுக்கு வொர்த் மச்சி.” என்று சொல்லியவள் சக்தி பார்த்த பாச பார்வையில் கதவை அடைத்துக் கொண்டாள் வேகமாக.
அதன் பிறகு அனைத்தும் ஜெட் வேகத்தில் தான் நடந்தது. மணப்பெண்ணுக்கான அலங்காரங்கள் ஆரம்பிக்க சொந்தங்கள் ஒவ்வொருவராக வந்து வந்து பார்த்து சென்றனர். சிலர் அங்கே இருக்க முனைய தாரணி கண்காட்டினாள்.
சக்தி கையை பிசைய, அவளுக்கு அலங்காரம் செய்து கொண்டிருந்த பெண் தான் அவர்களை சமாளித்து வெளியே அனுப்பி வைத்தாள்.
ஓரளவுக்கு வேலைகள் முடிந்திருக்க கடைசி கட்ட அலங்காரத்தில் இருந்த பொழுது ஆகாஷின் உறவில் சிலரை அழைத்துக் கொண்டு ஆகாஷின் தாய் வர, அவர்களுக்கு பின்னாலேயே தாரணியின் குடும்பமும் வர அந்த அறையே மூச்சு முட்டியது சக்திக்கு.
வந்திருந்தவர்கள் அனைவரும் தாரணியோடு பேச ஆரம்பிக்க தனித்து விடப்பட்டாள் சக்தி.
தாரணியின் விழிகள் சக்தியை தேடினாலும் அந்த கூட்டத்திற்கு நடுவே தோழியை கண்டுபிடிக்க முடியவில்லை. ஒரு அளவிற்கு மேல் அவளாலும் தேட முடியாத படி அவளது மொத்த கவனத்தையும் தங்கள் புறம் திருப்பி இருந்தனர் உறவினர்கள்.
அவர்கள் சென்ற சில நிமிடங்களுக்குப் பிறகுதான் உள்ளே நுழைந்தாள் சக்தி.
“எங்கடி போன இவ்வளவு நேரம்?” கேள்வி கேட்க, பதில் சொல்லும் முன் அத்தையோடு தாய்மாமன் வந்துவிட்டார், தாரணிக்கு முதல் மாலை போட.
சடங்குகள் ஆரம்பமாக தாரணியை விட்டு தள்ளி நிறுத்தப்பட்டாள் சக்தி, தாரணியின் உறவுகளால்.
அத்தனை நேரம் தன் தோழியாய் இருந்தவள் இப்பொழுது தொலைதூரமாய் செல்வது போல தோன்றியது சக்திக்கு.
அத்தை, மாமா, சித்தப்பா, பெரியப்பா, பாட்டி, தாத்தா என்று உறவுகள் மாறி மாறி வந்து அவளை சூழ்ந்து கொள்ள நெருங்க முடியவில்லை சக்தியால்.
மணமேடையில் அமர்ந்த தாரணியை பார்த்த ஆகாஷின் முகம் ஒளிர்ந்தது. சொந்தங்கள் சூழ திருமண சடங்குகள் அமர்க்களமாக ஆரம்பித்தது.
மேடையின் ஓரமாக நின்று கொண்டு தோழியையே பார்த்துக் கொண்டிருந்தாள் சக்தி.
திருமாங்கல்யத்தை கூடியிருந்த பெரியோர்களிடம் ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டு வந்து தாரணியின் அத்தை மகள் கொடுக்க, ஆகாஷின் கைகளுக்கு வந்தது திருமாங்கல்யம்.
திருமாங்கல்யத்தை கையில் வாங்கிய ஆகாஷ் தாரணியின் முகத்தை பார்க்க, கண்கள் கலங்கி சம்மதமாய் அவள் தலையசைத்த பிறகே ஆகாஷ் மூன்று முடிச்சுட்டு அவளை தன் சரிபாதியாக ஏற்றுக் கொண்டான்.
கண்களில் சூழ்ந்த கண்ணீரோடு முகம் மலர்ந்து விகசிக்க ஆகாஷின் தோள்களில் சாய்ந்து அவன் சூட்டிய குங்குமத்தை நெற்றியில் வாங்கிய தாரணியை தன் கைபேசியில் சேமித்துக் கொண்ட சக்தியின் கண்களும் மனதும் நிறைந்து போனது.
அப்பொழுதும் கூட்டத்தில் சுற்றி அடித்த தாரணியின் கண்கள் சக்தியை கண்டுகொள்ள, கண்ணீரோடு புன்னகைத்த சக்தி “கங்க்ராஜுலேஷன்ஸ் மச்சி…” என்று இதழ் அசைத்து வாழ்த்துச் சொல்ல, மலர்ந்தது தாரணியின் முகமும்.
என்ன முயன்றாலும் இந்த நிமிடம் தாரணி அருகில் தன்னால் செல்ல முடியாதங என்பதை உணர்ந்த சக்தி மண்டபத்தில் போடப்பட்டிருந்த இருக்கையில் சென்று அமர்ந்தாள்.
கோலாகலமாக இருந்த திருமண மண்டபத்தை சுற்றி சுழன்றது சக்தியின் கண்கள். என்னதான் நட்பு என்று சொல்லிக் கொண்டாலும் உறவுகளுக்கு முன்பாக நட்பு என்பது இரண்டாம் நிலைக்குச் சென்று விடுகிறது என்ற உண்மையை அப்பொழுது தான் புரிந்து கொண்டாள் சக்தி.
திருமணம் என்பது இருமனம் இணையும் நிகழ்வு அல்ல. இது குடும்பங்களின் இணைவு என்பதை அங்கே நடந்த ஒவ்வொரு விஷயமும் அவளுக்கு நெற்றிப்பொட்டில் அடித்தது போல விளக்கியது.
அவள் அறிந்தது தான். தெரிந்து வைத்திருந்தது தான். ஆனாலும் நிதர்சனமாய் கண்முன்னே நடக்கும் பொழுது உள் வாங்கிக் கொள்ள சிரமப்பட்டாள் சக்தி.
இரு பக்கம் சொந்தங்களும் வேலைகள் செய்தாலும் மணப்பெண்ணின் சார்பாக சூழ்ந்திருந்த உறவுகள் செய்த வேலைகள் கண்களைக் கட்டி வைத்தது.
யாரும் யாருக்கும் சொல்லவில்லை ஆனாலும் வேலைகள் அனைத்தும் எடுத்துக்கட்டி நடத்தப்பட்டன.
சமையல் கட்டில் பிரச்சனை வந்த பொழுது யாரும் சொல்லாமல் ஓடினார், அவளது பெரியப்பா.
காலை வரை வந்து சேர்ந்திடாத மணமாலையை வாங்கி வர அதிகாலை அவள் குளித்து முடித்து வெளியே வந்த பொழுது ஓடினான் தாரணியின் அண்ணன்.
மங்கள வாத்தியங்கள் வாசிப்பவர்கள் வருவதற்கு நேரம் ஆகி இருக்க, ஓடிப் போய் அவர்களை அழைத்து வந்தார் மாலை போட்டு அழைத்துச் சென்ற அவளது தாய்மாமன்.
இதோ இப்பொழுது மேடையில் ஏறுவதற்கு முன்பாக கூட தாரணியின் புடவை கால்களில் சிக்குகியதோ என்னவோ அவள் குனியும் முன்பாக குனிந்து அதை சரி செய்து விட்டு கொண்டு இருந்தார் அவளது அண்ணி.
மாப்பிள்ளை வீட்டில் மரியாதை குறைவு என்று பிரச்சனை வர கிட்டத்தட்ட காலில் விழாத குறையாக அவர்களை பேசி சமாளித்து இருந்த தாரணியின் தந்தை பார்த்துக் கொண்டுதானே இருந்தாள்.
வாய் துடுக்காகவே பேசிக் கொண்டு திரிந்த தாரணியின் அத்தை கூட, மாப்பிள்ளை வீட்டாரிடம் தணிந்து நடந்ததையும் ஊர் மெச்ச அவளுக்கு சீர் அடுக்குவதையும் அவள் இங்கு வந்த நாள் முதலாக பார்த்துக் கொண்டுதான் இருக்கிறாள்.
தாரணிக்கு அலங்காரம் செய்து கொண்டிருந்த வேளையிலும் அவள் பசி அறிந்து ருசி அறிந்து உணவினை கொண்டு வந்து ஊட்டி விட்டுக் கொண்டிருந்த அவளது சித்தியையும் பார்த்து இருந்தாளே…
வயது முதிர்ந்த அவளது பாட்டி கூட தனது நகை என்று சொல்லி கொண்டு வந்து பேத்திக்கு போட்டுவிட்டு அவளுக்கு திருஷ்டி எடுத்து கொஞ்சி இருந்தாரே…
தாத்தாவின் தோளோடு தாரணி சாய்ந்து கொள்ள, அவர் கண்களில் இருந்து வழிந்த கண்ணீர் தாரணியின் உச்சியில் விழுந்ததையும் பார்த்துக் கொண்டுதான் இருந்தாள்.
வந்த நாள் முதல், பார்க்கும் நேரங்களில் எல்லாம் தாரணிக்கு அறிவுரை சொல்வதும் அவள் பிரிவை எண்ணிக் கலங்குவதுமாக கண்களை துடைத்துக் கொண்டு சென்ற அவளது தாயையும் மறக்கத்தான் முடியுமா?
ஆக சொந்தங்கள் என்பது எவ்வளவு முக்கியமானது என்பதை தாரணியின் கல்யாணத்தின் ஒவ்வொரு நிகழ்வுகளும் அவளுக்கு எடுத்துக்காட்டிக் கொண்டே இருந்தது.
அப்படி எடுத்துச் சொல்லிய விஷயங்கள் அவளுக்குள் பயப்பந்தினை கொஞ்சம் கொஞ்சமாக ஊதி பெரிதாக்கி கொண்டிருந்தது என்பதும் உண்மை.
தாரணியின் வீட்டை போலவே ஆகாஷ் வீடும் நடுத்தர வர்க்கத்தைச் சார்ந்தது தான். இங்கேயே உறவுகளின் தேவை இத்தனை இருக்கும் எனில் ஜெகதீஸ்வரனின் குடும்பத்தை எண்ணி பார்க்கும் பொழுது மலைப்பாக இருந்தது அவளுக்கு.
முதல் முறையாக பெற்றோர் யார் என்று அறிந்து கொள்ள ஆசைப்பட்டது அவள் மனது, தாரணியின் கழுத்தில் ஆகாஷ் மங்கள நாணை கட்டும் வேளையில் கண்கள் இரண்டும் கலங்கி சிவக்க கண்ணீர் வடிந்துவிடாமல் முயன்று தடுத்தபடி பிள்ளைகளை ஆசீர்வதித்த பெற்றவர்களையும் உடன் பிறந்தவர்களையும் சூழ்ந்திருந்த சொந்தங்களையும் பார்த்த பொழுது.
தனக்கும் பெற்றோர் இருந்திருக்கலாமே… அப்படி இருந்திருந்தால் என் திருமணமும் இதுபோல் நடந்திருக்குமோ என்றெல்லாம் எண்ணிய மனது, ஜெகதீஸ்வரனின் குடும்பத்தில் தன்னை ஏற்பார்களா? என்று எண்ணிய நொடி மொத்தமாய் நொறுங்கிவிட்டது.
பயம் கொண்ட மனது என்னென்னவோ எண்ணங்களை அவளுக்குள் தோற்றுவிக்க கண்கள் கூட கலங்கிவிட்டது சக்திக்கு. ஓரமாய் சென்று அமர்ந்து விட்டாள் சக்தி, அந்த சடங்குகளில் இருந்து தப்பித்துக் கொள்வது போல.
திருமண சடங்குகள் கோலாகலமாக நடந்து கொண்டிருக்க அமைதியாக அமர்ந்திருந்த சக்தியை அதிர்ந்து அதிர வைத்தது அவள் கையில் வைத்திருந்த கைபேசி.
“ஸ்டார்ட்டட்… கெட் ரெடி சக்தி.” என்று வந்து விழுந்த குறுஞ்செய்தியில் அத்தனை நேரம் இருந்த கலக்கங்கள் எல்லாம் காற்றோடு கரைந்து போக விகசித்தது சக்தியின் முகம்.
ஜெகதீஸ்வரனின் குடும்பம் என்று எண்ணிய பொழுது உண்டான கலக்கங்கள் எல்லாம் ஜெகன் என்ற வார்த்தையில் ஓடிப்போனது தான் காதல் செய்த மாயமோ?
ஆனாலும் விழக்கூடாத பய விதை ஒன்று அவள் மனதில் விழுந்திருந்தது. விதை விருட்சமாகுமா? அல்லது இருந்த இடம் தெரியாமல் தோண்டி எடுத்து வீசப்படுமா?
பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.