அத்தியாயம் 5
“நாளைக்கு வரது கஷ்டம் மா… கஷ்டம்னு சொல்றத விட முடியாது. சைட் விசிட் இருக்கு. எப்ப முடியும்னு சொல்ல முடியாது. வார்த்தை தவறக் கூடாதுன்னு நீங்கதான் சொல்லி இருக்கீங்க. முடியாதுன்னு தெரிஞ்சும் சரின்னு சொல்ல என்னால முடியாதுமா.” தெளிவான குரலில் பேசிக் கொண்டிருந்த சக்தியை பார்த்தபடியே கிளம்பினாள் தாரணி.
எதிர்ப்புறம் இருந்த பொன்னிலா என்ன சொன்னார் என்று தெரியவில்லை. முகம் சற்றே வாடினாலும்,
“முடியாதுமா… சாரி மா. சரி… சரி மா…” என்று சொல்லி அழைப்பை துண்டித்தவளின் முகத்தில் சிறு சலனம்.
கடந்த இரண்டு மாதங்களாக நடந்து கொண்டிருக்கும் நிகழ்வுதான் அது.
என்று சக்தி திருமணத்திற்கு சம்மதம் சொன்னாளோ அன்று ஆரம்பித்தது கச்சேரி. இன்று மூன்றாவது மாப்பிள்ளையை போய் பார்க்கச் சொல்கிறார் அவர்.
முதல் மாப்பிள்ளை அவளைப் போலவே ஒரு இல்லத்தில் வளர்ந்தவன் தான். சக்திக்கு சகல விதத்திலும் பொருத்தமாக இருக்கிறான் என்று எண்ணி அவளை பார்க்கச் சொல்ல, சக்தியை பார்த்ததுமே அவனுக்கு பிடித்த போனது. அதனாலேயே அவனும் திருமணம் முடிந்த பிறகு வேலைக்குச் செல்லாமல் தன்னையும் தங்களுக்குப் பிறக்கப் போகும் குழந்தைகளையும் கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொண்டு வீட்டில் இருக்க வேண்டும் என்று தன் நிபந்தனையை சொல்ல, தன்மையாகவே மறுத்து இருந்தாள் சக்தி.
இரண்டாவதாக வந்தவன் ஒரு தரகர் மூலமாக கிடைத்த வரன். சொந்தங்களோடு வாழும் தாய் தகப்பன் அற்றவன். சொந்தத் தொழில் செய்யும் அவனது எண்ணங்கள் முழுவதும் அவளது சம்பளத்தைப் பற்றியும், தான் அவளுக்கு ஏதோ பாவம் பார்த்து வாழ்க்கை தரப் போவதும் போலவும் இருக்க, கையெடுத்து கும்பிட்டு அனுப்பி வைத்து விட்டாள்.
இன்று மூன்றாவதாக ஒருவன் வருவதாக சொல்ல, ஏனோ பார்க்க விருப்பமில்லை சக்திக்கு.
அவள் எண்ணங்களை எல்லாம் ஆக்கிரமித்து இருந்தது அவளது வேலையும் வேலை செய்யும் இடமுமே.
இந்த இரண்டு மாதங்களில் தினம் தினம் பார்த்து பழகும் சர்வேஸ்வரனுடன் நட்பு கிளை விட்டிருக்க, அவ்வப்போது பார்க்கும் ஜெகதீஸ்வரன் மீது பிரமிப்பு வந்திருந்தது.
ஈஸ்வர் பில்டர்ஸ்ஸை நாடி வரும் மக்களை சரி சமமாக அவன் நடத்திய விதம் திரும்பி பார்க்க வைத்திருந்தது அவளை.
பிரம்மாண்ட குடியிருப்புகளாக இருந்தாலும் சரி, அரசாங்க கட்டுமானங்களாக இருந்தாலும் சரி, பெரும் பணம் படைத்தவர்களின் தனி சொகுசு வில்லாக்களாக இருந்தாலும் சரி, நடுத்தர மக்களின் கனவு இல்லங்களாக இருந்தாலும் சரி அத்தனை பேரும் அவனுக்கு சமமே.
வந்தவர்களை வரவேற்பதில் இருந்து அவர்களுக்கு குடிக்க கொடுக்கும் பானம் வரையிலும் அனைத்தும் சமமே…
அவர்களை நாடி வரும் வாடிக்கையாளர்களில் யாரையும் அலட்சியமாக நடத்த முடியாது அந்த அலுவலகத்தில். அதில் அதிக கண்டிப்பும் கவனமும் செலுத்தப்பட்டது.
மற்ற கிளை அலுவலகத்திலும் அப்படித்தான் என்றாலும் இங்கே இன்னும் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டது வாடிக்கையாளர்களிடம்.
அவள் அந்த அலுவலகத்திற்கு வந்து சேர்ந்த இரண்டாவது வாரத்தில் நடந்த நிகழ்வு இப்பொழுதும் அவளது பழுப்பு நிற கண்களை அகலமாய் விரிக்க வைத்தது.
வாரத்தின் முதல் நாள் திங்கள்கிழமை அலுவலகமே பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த முன் காலை பொழுது. கிட்டத்தட்ட அலுவலகமே காலியாக இருந்தது. கொஞ்சம் இறுக்கமான சூழல் என்றுதான் சொல்ல வேண்டும்.
அவரவர்களுக்கான பணிகள் தலைக்கு மேலே குவிக்கப்பட்டிருக்க கவனம் சிதறாமல் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர் இருந்த சொற்பமானவர்களும்.
கதவினை திறந்து கொண்டு உள்ளே நுழைந்தனர் ஆணும் பெண்ணுமாக இருவர்.
வரவேற்பில் இருந்த பெண்ணிடம் ஏதோ பேசியவர்கள் அந்தப் பெண் சொல்லியபடி வரவேற்பில் போடப்பட்டிருந்த மர நாற்காலியில் அமர்ந்தனர்.
சுற்றிப் பார்த்த அந்த ஜோடியின் கண்களில் பெரும் பிரமிப்பும் சிறு சஞ்சலமும் தெரிந்தது போல இருந்தது அவர்களை நிமிர்ந்து பார்த்த சக்திக்கு.
சில நொடிகள் அவர்கள் மீது பார்வையை பதித்தவள் வரவேற்பில் இருக்கும் யாதவி அவர்களைப் பார்த்துக் கொள்வாள் என்ற நம்பிக்கையில் தன் வேலையை பார்க்க ஆரம்பித்து விட்டாள்.
மீண்டும் அவள் அரை மணி நேரம் கழித்து நிமிர்ந்து பார்த்த நொடி அகலமாய் விரிந்தது அவளது ஆழி விழிகள்.
ஏனென்றால் அவர்களோடு அமர்ந்து இயல்பாக பேசிக் கொண்டிருந்தது சர்வேஸ்வரன் அல்லவா?!
கண்கள் தெறித்து வெளியே வந்து விடாமல் இருந்தது ஆச்சரியம்தான் அவளுக்கு. ஆனால், அவளைத் தவிர அலுவலகத்தில் இருந்த மற்ற எவரும் அதை பெரிதாக பார்க்கவில்லை. எப்பொழுதும் போல அவரவர் அவரவர் தம் வேலைகளைப் பார்த்துக் கொண்டுதான் இருந்தனர்.
தன் வேலைகளை முடித்திருந்தவள் ஆர்வம் தாங்காமல் எழுந்து நிற்க அமைதியான அந்த அலுவலகத்தில் அவர்களின் பேச்சு சத்தம் தெளிவாக கேட்டது அவளுக்கு.
“சார் எனக்கு வீடு கட்டி தரணும். 1000 - 1200 ஸ்கொயர் ஃபீட்ல ஒரு வீடு கட்டி தரணும்.” என்று அந்த ஆண் சொல்ல,
“நல்லபடியாவே பண்ணிடலாம் சொல்லுங்க உங்களுக்கு எந்த மாதிரி வேணும்? உங்க ரெகொயர்மென்ட் சொல்லுங்க…” என்று கேட்டவன் கையில் இருந்த காகிதத்தில் அவர் சொல்லச் சொல்ல குறித்துக் கொள்ள ஆரம்பித்தான்.
ஆச்சரியமாக பார்த்தபடி தன் இடத்தில் இருந்து எழுந்தவள் அவர்களை நோக்கி ஒரு அடியை வைக்க நினைக்க, அவளுக்கு முன்பாக அவர்களை நெருங்கி இருந்தது இரு பாதங்கள்.
காற்றைப் போல அவளை கடந்து சென்றவனின் பாதத்திலிருந்து முகத்தை நோக்கி அவள் பார்வை செல்ல, அங்கே நின்றிருந்தவனோ ஜெகதீஸ்வரன்.
அண்ணனின் வருகையில் சர்வேஸ்வரன் எழுந்து நிற்க, அவனைப் பார்த்த அந்த வாடிக்கையாளரின் முகத்திலும் அத்தனை ஆச்சர்யம்.
“அண்ணா…” என்று ஏதோ சொல்ல ஆரம்பித்தவனை கையை நீட்டி தடுத்தவன்,
“எக்ஸ்கியூஸ் மீ…” என்று முன்னே இருந்த தம்பதியினரிடம் சொல்லியவன், சர்வேஸை நோக்கி,
“சைட்டுக்கு போகணும்னு சொன்ன?” என்று கேட்க,
“முடிச்சிட்டு கிளம்பிடுவேன்… அல்மோஸ்ட் முடிஞ்சிடுச்சு…” என்றான் அமைதியான குரலில்.
“ஓகே.. நான் பாத்துக்குறேன் நீ போ…” என்று சொல்ல, முன்னே நின்றவர்களை பார்த்தான் சர்வேஸ்.
அவர்கள் ஜெகதீஸை பார்த்த ஆச்சரியத்தில் நின்று கொண்டிருக்க தமையனிடம் தலையசைத்து விடை பெற்றவன் சென்று விட, அவர்கள் முன்னே அமர்ந்தான் ஜெகதீஸ்வரன்.
ஜெகதீஸ்வரன் பற்றி அறிந்திருந்த அந்த ஆண் பிரமிப்போடு, “சார்…” என்று அழைக்க,
“உட்காருங்க பேசலாம்…”என்று கைநீட்டி அவர்களை அமர வைத்தவன்,
“சார் இது ஒரு ஸ்மால் பிளாட்… மேக்ஸிமம் 1200 ஸ்கொயர் பீட் தான்…” என்று அவர் சொல்ல,
“நல்லாவே பண்ணிடலாம்…” என்றான் கையில் சர்வேஸ் கொடுத்துச் சென்றிருந்த காகிதத்தை பார்த்தபடியே.
கணவனின் பிரமித்த பார்வையில் எதையோ உணர்ந்து கொண்டவளாக உடன் வந்திருந்த பெண், “பட்ஜெட் கம்மி தான் சார். ஆனா இது எங்களோட லைஃப் டைம் சேவிங்ஸ். உங்கள பத்தி விசாரிச்சுதுல எல்லாரும் நல்லதா சொன்னாங்க. அதுதான் நம்பி வந்தோம்.” என்றிட,
“பட்ஜெட் குறைவா இருந்தாலும் ஈஸ்வர் பில்டர்ஸ்ஸோட குவாலிட்டி குறையாது மேம்…” என்று சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே அவர்களை நோக்கி வந்தாள் சக்தி.
“சார் நாங்க சின்ன கிளைன்ட்…” என்று அந்த ஆண் சொல்ல,
“சின்ன கிளைன்ட் பெரிய கிளைன்ட் அப்படின்னு யாரும் எங்களுக்கு இல்ல. ஈஸ்வர் பில்டர்ஸ்ஸோட கஸ்டமர்ஸ் எல்லாருமே எங்களுக்கு ஒன்னு தான்.” என்று சொல்ல முகம் மலர்ந்தது வந்திருந்த ஜோடிக்கு.
கண்களைத் திருப்பி அலுவலகத்தின் உட்புறத்தை நோக்க அவன் பார்வை வட்டத்திற்குள் வந்தாள், இத்தனை நேரம் அவர்கள் பேசியதைக் கேட்டு கண்கள் சற்றே விரிய அவர்களையே பார்த்துக் கொண்டு நின்றிருந்த சக்தி.
சக்தியை கண்டதும் க்ஷனத்தில் கண்களில் தோன்றி மறைந்த மின்னலை மறைத்துக் கொண்டு தலையசைத்து அவளை தன் அருகே அழைத்தான்.
மந்திரத்திற்கு கட்டுப்பட்டது போல அவன் அருகே வந்தவள் கைகளில் அந்த காகிதத்தை கொடுத்தவன், “டூ இட்” என்று அவள் விழிகளை பார்த்துச் சொல்ல தன்னையும் அறியாமல் அசைந்தது அவள் தலை.
அவர்கள் சென்ற பிறகு யாதவியிடம் ஜெகதீஷ் மற்றும் சர்வேஸ் இருவரின் செயல்களை குறித்து சக்தி கேட்க, “கிளையன்ட் அட்டென்ட் பண்ணதுக்கே இவ்வளவு ஆச்சரியப்பட்டா எப்படி? வேலைன்னு வந்துடுச்சுன்னா தலைவர் ஷர்ட் ஸ்லீவ்வ மடிச்சு விட்டுட்டு சைட்ல கலவை கலக்குறதுல இருந்து பூசுறது வரைக்கும் செஞ்சிருக்காரு… சர்வேஸ்வரன் சாரும் சரி ஜெகதீஸ்வரன் சாரும் சரி… அந்த விஷயத்துல ஒரே மாதிரி தான். அவங்களுக்கு வேலையில பெருசு சின்னதுன்னு கிடையாது… எல்லா வேலையும் செய்வாங்க…” என்று சொல்ல அவளது பழுப்பு நிறவிழிகள் பிரகாசித்தது.
ஈஸ்வர் குடும்பத்தில் பிறந்ததால் மட்டுமே கிடைத்த அங்கீகாரத்தில் அந்த பதவியில் அமர்ந்திருக்கிறான் என்று எங்கோ மனதின் ஓரத்தில் படிந்திருந்த எண்ணம், முற்றிலுமாய் மாறி அவன் மீதான பிரமிப்பு உருவான நிமிடங்கள் அவை.
அதன் பிறகே சர்வேஸ்வரன் நீட்டிய நட்பு கரத்தை சிறு தயக்கம் இல்லாமல் இயல்பாக பற்றிக் கொள்ள முடிந்தது அவளால்.
ஜெகதீஸ்வரனிடம் பேச வேண்டிய தேவைகள் இல்லாமல் போக, பார்க்கும் நிமிடங்களில் அவளது வாழ்த்துக்களுக்கு தலையசைத்துச் செல்லும் அவனது கம்பீரமும் ஆளுமையும் அவளை பிரம்மிக்கத்தான் வைத்தது.
அந்த நினைவுகளோடு தூங்கியவள் மறுநாள் காலை நான்கு மணிக்கு கிளம்பி சென்றாள்.
அவள் சீனியர் ஆர்க்கிடெக்ட் ஆக பதவி உயர்வினை பெற காரணமாக இருந்த அந்த அடுக்குமாடி குடியிருப்பின் அடித்தளத்திற்கான கான்கிரீட் போடும் நாள்.
நிலா பெண் இன்னும் அரசியாக ஆட்சி செய்து கொண்டிருக்க அவளது தண் ஒளி போதாமல் சுற்றி இருந்த ராட்சத விளக்குகளால் ஒளி பெற்றுக் கொண்டிருந்தது அந்த இடம்.
40 அடுக்குகள் கொண்ட மிகப் பிரம்மாண்டமான கட்டிடம் உருவாகப் போவதற்கான ஆயத்த வேலைகளில் அந்த இடமே உயிர்ப்போடு இருந்தது.
40 மாடி கட்டிடம்! புவி ஈர்ப்பு விசைக்கு எதிராக செங்குத்தாக நிற்க வேண்டும் என்றால் அதன் மொத்த எடையையும் தாங்கும் அளவுக்கு ஆழமான அசைக்க முடியாத அஸ்திவாரம் போடப்பட வேண்டும். நூற்றுக்கும் மேற்பட்ட பிட்ஸ்(pits) என்று சொல்லப்படும் குழிகள் போடப்பட்டு உறுதியான கம்பிகளால் ஆன சட்டங்களினாலும் பிசிசி(pcc - plain cement concrete flying) எனப்படும் சிமெண்ட் கான்கிரீட்டால் முதற்கட்ட அஸ்திவாரப் பணிகள் முடிவு பெற்று, 30 அடி ஆழக்குழிகளை மண்ணால் நிரப்பி இருக்க, நீட்டிக்கொண்டிருந்த கம்பிகள் அந்த கட்டிடம் என்னும் உடலின் எலும்புக்கூடாக காட்சியளித்தது.
அதன் மீது போட வேண்டிய கான்கிரீட் தளத்திற்கான வேலைகள் மும்பரமாய் நடந்து கொண்டிருந்த இடத்தைச் சுற்றி அத்தனை பரபரப்பு…
எப்பொழுதும் அமைதியை மட்டுமே விரும்பும் சக்திக்கு அந்த பரபரப்பும் வாகனங்களின் ஓசையும் கற்களின் சத்தங்களும் மனிதர்களின் கூச்சலும் அத்தனை சந்தோஷத்தைக் கொடுத்தது.
ஜல்லி கற்கள் குவியல் குவியலாக கோபுரம் போல் குவிக்கப்பட்டிருக்க, சிமெண்ட் மூட்டைகள் அம்பாரியாய் உயர்ந்து நிற்க, கலவை கலக்கும் இயந்திரங்களின் சத்தங்களும், கலவை கொட்டப்பட்ட பிறகு அதை சரி செய்வதற்கு என்று வைக்கப்பட்டிருந்த வைப்ரேட்டர் மெஷின்களும் தயாராக இருக்கிறதா என்பதை சரி பார்க்கும் மனிதர்களும் என்று பரபரப்பிற்கு பஞ்சம் இல்லாமல் இருந்தது அந்த இடம்.
அவள் பணிக்கு சேர்ந்த இந்த ஐந்து வருடங்களில் பல கட்டிடங்களை கட்டும்பொழுது அவள் பார்த்திருந்ததை விட சிறு சுணக்கம் கூட இல்லாமல் எண்ணெய் இட்ட இயந்திரம் போல் வேலைகள் அனைத்தும் கனக்கச்சிதமாக நடந்து கொண்டிருப்பதை பார்த்தவளின் கண்களில் அத்தனை ஆனந்தம்.
சித்தாள் - கொத்தனார் முதல் சைட் இன்ஜினியர்கள், ஜூனியர் ஆர்கிடெக்ட் என்று அனைவரும் சுற்றி சுழன்று கொண்டிருக்க, சோம்பல் என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியாதது போல அத்தனை சுறுசுறுப்பாக அந்த இடத்தை மாற்றி இருந்தது ஒருவனின்
பிரசன்னம். ஜெகதீஸ்வரனின் பிரசன்னம்.
அவனது பிரசன்னம் அந்த இடத்தை மட்டுமா ஆகர்சித்தது?!