அத்தியாயம் 7
ஜெகதீஸ்வரன் விலகிச் சென்ற திசையையே ஒரு நொடி பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தாள் சக்தி.
அவன் போன பிறகும் அந்த இடத்தில் அவனது இருப்பு மட்டும் மிச்சமாய் நின்றது போல ஒரு உணர்வு.
“உங்க சிஇஓ ரொம்ப டிஃபரண்டா இருக்காரு.” பரதன் மெலிதாய் சொல்ல,
“ம்…” என்ற ஒற்றை ஒலியோடு நின்று கொண்டாள் அவள்.
“அவ்வளோ பெரிய கம்பெனி. பட் ஈகோவே இல்லாம கேஷுவலா வந்து பேசிட்டு போறாரு.” அவன் குரலில் இருந்த வியப்பு அப்பொழுதுதான் சக்திக்கு புரிந்தது.
அதில் தன்னையும் அறியாமல் அவள் இதழ்கள் விரிய மென்சிரிப்போடு, “அவர் அப்படித்தான்.” என்றாள் மலர்ந்த முகத்தோடு.
அவளது மலர்ந்த முகத்தையே கனிவோடு பார்த்தவன், “நீங்க அவர ரொம்ப அட்மயர் பண்றீங்க போல…” பரதன் சிரிப்போடு கேட்க,
அவன் முகத்தை நிதானமாய் பார்த்தாள் சக்தி.
“அட்மயர்?” கேள்வியாய் அவள் நிறுத்த,
“ம்…” என்று பதில் தந்தான் பரதன்.
அதில் அவன் விழிகளை நேருக்கு நேர் சந்தித்த சக்தி, “நல்ல விஷயத்தை அடமயர் பண்ணுறதுல தப்பே இல்ல.” என்றாள் தெளிவாக.
“டபுள் ரைட் ஜி…” என்று தலையாட்டியவன் சற்றே முன்னே சாய்ந்து,
“ஆனா பாருங்க ஜி…. அவர் வந்ததுல இருந்து நீங்க கொஞ்சம் டிஃபரென்ட்டா பிஹேவ் பண்றீங்க.” என்றான் அவளைப் போலவே தெளிவான குரலில்.
அந்த வார்த்தையில் ஒரு நொடி அமைதியானாள் சக்தி. அந்த மாற்றத்தை உணர்ந்தே இருந்த சக்தியால், என்ன மாற்றம் என்பதை தான் உறுதியாக கணிக்க முடியவில்லை.
தனக்குள் என்ன மாறியது என்று அவளுக்கே தெளிவில்லாமல் இருக்க, அவன் அதை இவ்வளவு எளிதாக கண்டு பிடித்தது சிறிது சங்கடத்தையும் கொடுத்தது.
சில நொடி அமைதிக்குப் பிறகு, “நான் நார்மலாத்தான் இருக்கேன்.” என்றாள் சக்தி தன்னைத்தானே மீட்டுக் கொண்டவளாக.
“இல்ல.” உடனே மறுத்த பரதன், அவளது கேள்வியான பார்வையில்,
“இதுவரைக்கும் நீங்க என்ன பேசுறீங்கன்னு கவனமா இருந்தீங்க சக்தி. ஆனா இப்போ…” என்று சொல்லி அவள் விழிகளை பார்த்தவன்,
“சம்திங் டிஃப்ரண்ட் ஐ கேன் ஃபீல்… நீங்க நீங்களா இல்ல…” என்றான் நேராக.
மெதுவாக பின்னே சாய்ந்து அமர்ந்தாள் சக்தி.
அவளது விரல்கள் மேஜையின் மீது வைக்கப்பட்டிருந்த கண்ணாடி டம்ளரின் விளிம்பை மெதுவாக வருடிக் கொண்டிருந்தது.
விரல்களில் இருந்து தனது பார்வையை பரதன் மீது திருப்பிய சக்தி, “நீங்க மனுஷங்கள ரொம்ப மைனூட்டா அப்சர்வ் பண்றீங்க பரத்.” சிறு புன்னகையோடு சொல்ல
“அது தானங்க என்னோட வேலை.” என்றவன் சிரித்தபடி,
“நீங்க ஆர்க்கிடெக்சர்ல பில்டிங்ச அப்செர்வ் பண்றீங்க. என்னோட ஹெச் ஆர் வேலைக்கு நான் மனுஷங்களை தான கவனிச்சாகணும். அது அப்படியே வருது போல…” என்றான்.
சிறு புன்னகை பதிலாக வந்தது பெண்ணவளிடம் இருந்து.
“சரி…” என்று மேஜையின் மீது இருந்த டிஷ்யூ காகிதத்தை எடுத்து மடித்துக் கைகளில் வைத்துக் கொண்டு அமர்ந்தவன்,
“ஓகே… ஒகே… பேக் டு பெவிலியன். நாம பேசிட்டு இருந்த விஷயத்துக்கு வருவோம். செக்யூரிட்டி பத்தி சொல்லிக்கிட்டு இருந்தீங்க… யூ கன்டினியூ சக்தி…” என்று நினைவூட்ட,
ஒரு ஆழ்ந்த மூச்சை இழுத்த சக்தி, பேச ஆரம்பித்தான்.
“சின்ன வயசுல இருந்து ஒரு விஷயம் மட்டும் எனக்குள்ள ரொம்ப ஸ்ட்ராங்கா இருந்துச்சு பரத்…”
“ம்?”
“எனக்குன்னு யாராவது இருக்கணும்.”
அவள் சொல்லிய விதத்தில் அவன் முகம் சற்றே மாறியது.
“ஹோம்ல நிறைய பேர் இருந்தாங்க. பிரண்ட்ஸ் இருந்தாங்க. கேரட் டேக்கர்ஸ் இருந்தாங்க. ஆனா…” என்று சொல்லி நிறுத்தியவள்,
“அது எல்லாமே டெம்ப்ரவரி யாருமே நிரந்தரம் கிடையாது. என்னோட க்ளோஸ் ஃப்ரெண்ட் தாரணி இருக்கா. இப்ப அவளுக்கு கல்யாணம் ஆகப் போகுது. எனக்கான அவளோட நேரங்கள் கொஞ்சம் கொஞ்சமா குறைச்சிகிட்டு வருது. நிஜத்த என்னால புரிஞ்சுக்க முடியுது.
சோ… எனக்கே எனக்கானவங்கன்னு இது நாள் வரைக்கும் என்னோட வாழ்க்கையில யாரும் கிடையாது… அதனால யாருமே முழுசா என்னோடவங்க இல்லன்னு ஒரு உணர்வு எப்போதும் இருக்கும்.” என்றாள் மெதுவாக.
அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தான் பரதன்.
“இது எல்லாம் உங்களுக்கும் தெரியும்… ஆனாலும் சொல்றேன்… கூடவே மை ஜெண்டர்… பொண்ணாவும் இருக்கேனே… அதனால தான் நான் செக்யூரிட்டி பத்தி பேசுறேன். செக்யூர்டா உணர்கிற ஒரு பெர்சன் கிட்ட தான் என்னை… என்னோட செயல்களை, உணர்வுகளை, வார்த்தைகளை எக்ஸ்பிளைன் பண்ணிக்கிட்டே இருக்க வேண்டாம்னு தோணுது. நான் என்ன ஃபீல் பண்றேன்னு ஒவ்வொரு தடவையும் ப்ரூஃப் பண்ணிக்கிட்டே இருக்கவும் வேண்டாம்ல. நான் விழுந்தா பிடிக்க யாரோ இருக்காங்கன்னு ஒரு ஃபீல்…”
என்று சொல்லிக் கொண்டே வந்த அவளின் குரல் மெல்ல மாற,
“அது ரொம்ப பெரிய விஷயம் பரத்.” என்றாள் சட்டென்று நிறுத்தியவளாக.
அவளை ஆழமாக பார்த்துக் கொண்டிருந்த பரதன்,
“நான் அந்த மாதிரி இருக்க மாட்டேன்னு நீங்க நினைக்கிறீங்களா சக்தி?” என்று கேட்டான் திடீரென்று.
அவன் முகத்தையே அசையாது பார்த்தாள் சக்தி.
“நான் அப்படி சொல்லலையே.” அவன் விழிகளையே பார்த்தபடி அவள் சொல்ல,
“பட் நீங்க என்னை எவால்யூவேட் பண்ற மாதிரி தோணுது.” என்றான் அவனும் அவளை கூர்மையாக பார்த்தபடி.
சில நொடிகள் அவனை ஆழ்ந்து பார்த்துவிட்டு, “பண்ணிக்கிட்டு தான் இருக்கேன்.” என்றாள் அவள் வெளிப்படையாக.
அவளது வெளிப்படையான பதிலில் அவன் சிரித்துவிட்டான்.
அந்த சிரிப்பினூடே, “ரொம்ப ஹானஸ்ட்டா பேசுறீங்க சக்தி.” என்றும் சொல்ல,
“பொய் சொல்லி ஆரம்பிக்குற எந்த ஒரு உறவும் நல்லா போகாது பரத்” அமைதியான குரலில் அவள் சொல்ல, அங்கே சிறு அமைதி.
அமைதியை நீடிக்க விரும்பாதவனாக, “அப்போ நானும் ஹானஸ்டாவே கேட்கிறேன்…” என்று சற்றே இடைவெளி விட்டவன்,
“உங்க மனசுல ஆல்ரெடி யாராவது இருக்காங்களா?” என்று கேட்டான்.
இப்படி ஒரு கேள்வி நிச்சயமாக அவள் அந்த நிமிடம் எதிர்பார்த்து இருக்கவில்லை என்பதை விளக்கியது அவளது அதிர்ந்த முகம்.
ஆனாலும் அடுத்த நொடியே அவளது நினைவுக்குள் அழுத்தமான கருமை நிற விழிகளும், ‘ஆர் யூ சூர்?’ என்று கேட்ட ஆழ்ந்த குரலும் வந்து போனது.
சில நொடிகள் எதுவும் பேசாமல் அமர்ந்திருந்தவள்,
மெல்ல அவனை பார்த்து,
“எனக்கே தெரியல…” என்றாள் சிறு குழப்பத்தோடு.
அவள் சொல்லி முடித்த பிறகும் அந்த வார்த்தை அங்கேயே நின்று கொண்டது போல ஒரு உணர்வு.
அதை அப்படியே பார்த்துக் கொண்டிருந்தான் பரதன்.
“தெரியல… இப்படி ஒரு பதிலா…” என்று அவன் சிரிக்க முயன்ற கணம்,
“ஹலோ மேடம்!” சக்திக்கு மிகவும் பரிச்சயமான குரல் அந்த குடிலுக்குள் நுழைந்தது.
திரும்பிப் பார்த்த சக்தியின் முகம் இயல்பாக மெலிதாய் மலர,
“சர்வேஷ்…” என்றாள்.
“தாங்க் காட்!” என்று மார்பை பிடித்தவன், “இங்கயும் ‘மிஸ்டர் சர்வேஸ்வரன்’ன்னு ஆரம்பிச்சிருவீங்களோன்னு பயந்துட்டேன்.” என்றான்.
“ஆபீஸ் இல்லையே…” என்றாள் அவளும்.
“அடப்பாவி… வெளி உலகத்துல நமக்கு மரியாதை கிடைக்குதுன்னு நினைச்சேன்.” என்று போலியாக நொந்தவன் அப்போதுதான் பரதனை பார்த்தான்.
“ஹாய்…” என்று கை நீட்ட,
“பரதன்.” என்று அவனும் கையை பற்றினான்.
“நைஸ் மீட்டிங் யூ ப்ரோ…” என்று சொல்லிய சர்வேஷ்,
“ஆக்சுவலி அண்ணனோட ஃப்ரெண்ட் ஒருத்தர் வந்திருக்கார். அவரை மீட் பண்ண வந்தேன். ஆனா இது சர்ப்ரைஸ் மீட்டிங். நான் சக்தியை இங்க எதிர்பார்க்கல... எப்பவும் சீரியஸா டிராயிங், பில்டிங்ஸ், சிஸ்டம் லேப்டாப்னு இருக்கிற சக்தியை இங்கே பார்த்ததும் நம்ப முடியாம தான் இங்க வந்தேன். பட் இங்க…” என்று இருவரையும் மாறி மாறி பார்த்தவன்,
“லுக்ஸ் லைக் சீரியஸ் டிஸ்கஷன்…” என்று புருவம் உயர்த்தினான்.
“அப்படியெல்லாம் இல்லை…” என்று சொல்ல வந்த சக்தியை முந்திக்கொண்டு,
“ஆக்சுவலி…” என்று ஆரம்பித்தான் பரதன். அவனை திரும்பிப் பார்த்தாள் சக்தி.
“நான் சக்தியை அலையன்ஸ் பார்க்க வந்திருக்கேன்.” என்றான் அவன் இயல்பாக.
அந்த நொடி சர்வேஷின் முகத்தில் மிகச் சிறிய அதிர்வு வந்து போனது. கண்ணிமைக்கும் நேரத்திற்குள் வந்து போன அவன் உணர்வுகளை சக்தி உட்கிரகிக்கும் முன் இயல்புக்கு வந்திருந்த சர்வேஷ் புன்னகை முகமாகவே நின்றிருந்தான்.
பதிலுக்கு, “ஓ…” என்ற ஒற்றை ஒலி மட்டும் வந்த போதும், அடுத்த நொடியே அவன் பார்வை தன்னையும் அறியாமல் அந்த இடத்தை சல்லடையாக சலிக்க ஆரம்பித்தது.
ஒரு சுற்று சுழன்ற போதிலும் அவன் தேடியது கிடைக்காமல் போக சக்தியை நோக்கினான். அதை கவனித்த சக்தி, எதுவும் பேசாமல் மெதுவாக கண்களால் ஒரு திசையைக் காட்டினாள்.
அந்த பக்கம் பார்த்தவன், சற்று தூரத்தில் தன் நண்பன் ஆண்ட்ரூவுடன் அமர்ந்திருந்த ஜெகதீஸ்வரனை கண்டு கொண்டான்.
“பார்த்தாச்சு போல…” என்று சக்திக்கு மட்டும் கேட்கும் குரலில் முணுமுணுத்தவன்,
உடனே முகத்தை திருப்பி பரதனை பார்த்து, “ஓகே கைஸ்… நீங்க பேசுங்க… அண்ணா வெயிட் பண்ணுவாங்க. இன்னொரு நாள் பார்க்கலாம்…” என்றான் மிகவும் நட்பான குரலில்.
அதில் முகம் மலர்ந்த பரதன், “சூர்...” என்று சொல்ல,
“சக்தி மேடம்…” என்று அவளை பார்த்தவன்,
“இன்டர்வியூ முடிஞ்சதும் ரிசல்ட் என்னன்னு கண்டிப்பா சொல்லணும்…” என்று விட்டு கண் சிமிட்டி நகர்ந்து சென்றான்.
“லூசு…” என்று அவள் பற்களுக்குள் முணுமுணுக்க, அதைக் கேட்டு சிரித்தான் பரதன்.
ஜெகதீஸ்வரன் ஆண்ட்ரூவும் அமர்ந்திருந்த இடத்தை சர்வேஸ்வரன் நெருங்கிய நேரம், ஆண்ட்ரூ ஏதோ சொல்லிக் கொண்டு இருந்தான்.
ஆனால் எதிரே அமர்ந்திருந்த ஜெகதீஸ்வரனிடம் இருந்து வந்தது “ம்…” “சரி…” மாதிரியான ஒற்றை பதில்கள் மட்டுமே.
அருகே வந்த சர்வேஷால் அதை கவனிக்காமல் இருக்க முடியவில்லை.
‘என்னடா… குடி முழுகிப் போன மாதிரி மூஞ்ச வைச்சுட்டு உட்கார்ந்திருக்காரு?’ என்று மனதுக்குள் நினைத்தவன்,
அவர்களிடம் வந்து நின்றான்.
“ஹாய் ஷர்வா… வா வா…” என்ற ஆண்ட்ரூ முதலில் அவனை பார்த்து சிரிக்க,
“ஹாய் அண்ணா… எப்படி இருக்கீங்க? பாத்து ரொம்ப நாளாச்சு இல்ல… எப்படி இருந்தது யூ எஸ் விசிட்?” என்று அவன் கேட்க
“சூப்பரா இருந்துச்சு டா…” என்ற ஆண்ட்ரு அது பற்றி பேசிக் கொண்டிருக்க, அவர்களின் பேச்சுக்குள் வராமல் அமர்ந்திருந்த தன் அண்ணன் பக்கம் பார்வையைத் திருப்பினான் சர்வேஷ்.
“அண்ணா…” என்று அவன் அழைக்க
“ம்…” அதே ஒற்றை எழுத்து. ஆனால் என்ன அதுவும் உறுமலாக வந்தது.
பார்வை கூட அவன் மீது படரவில்லை.
‘வாட்ஸ் ஹாப்பனிங்? இப்போ என்ன பெரிய ப்ராப்ளம் வந்துச்சு? இவ்வளவு சீரியஸா எதுக்கு உட்கார்ந்திருக்காங்க?’ என்று நினைத்துக் கொண்டிருந்த சர்வேஷின் கவனம்,
அடுத்த நொடி தானாகவே ஜெகதீஸ்வரனின் விழிகளை பின்தொடர்ந்தது.
அந்த ஒரு நொடிக்கும் குறைவான ஷனத்தில் ஜெகதீஷ்வரனின பார்வை, சக்தி அமர்ந்திருந்த குடிலைத் தொட்டு மீண்டது.
சர்வேஷின் புருவம் மெதுவாக உயர்ந்தது.
‘அப்டி போடு…’ என்று உள்ளுக்குள் குத்தாட்டம் போட்டவன், அமைதியாக ஜெகதீஷ் அருகே அமர்ந்துகொண்டான்.
ஆண்ட்ரூ இன்னும் ஏதோ வேலை சம்பந்தமாக பேசிக்கொண்டே இருக்க, ஜெகதீஷின் முகமோ அதில் அவன் கவனம் இல்லை என்பதை அப்பட்டமாக சொல்லியது.
சர்வேஷின் விழிகள் அந்த சூழலை உணர முற்பட உள்ளமோ என்னென்னவோ சொல்லிக் கொண்டிருந்தது.
‘எனக்கு தெரிஞ்ச அண்ணாவோட ஒரே குளோஸ் ஃப்ரெண்ட் ஆண்ட்ரு அண்ணா மட்டும் தான். அவன் கூட பேசும் போது தான் ரிலாக்ஸா இருப்பாங்க… அது மிஸ்ஸிங். ஒருவேளை நான் நினைக்கிறது போல…’ என்று ஆரம்பித்த மனதை தன்னாலே கட்டுப்படுத்தியவன், அமைதியாக ஜெகதீஸ்வரனை பார்த்தான்.
அவன் முகத்தில் அழுத்தம் கூடியிருந்தது. உணர்வுகள் துடைத்த அவனது முகம் இன்னும் இன்னும் சர்வேஷுக்குள் ஊகங்களை கொடுத்துக் கொண்டே இருக்க, ஆண்ட்ருவுடன் பேசிக்கொண்டு இருந்தாலும் அவ்வப்போது ஜெகதீஷை தொட்டு மீண்ட அவனது விழிகளுக்கு தப்பவில்லை ஜெகதீஷ் பார்வை சென்ற இடம்.
‘சிங்கம் சிக்கிடிச்சு போல…’ என்ற எண்ணம் தோன்றிய நொடி, உதட்டோரம் சின்ன சிரிப்பு வந்து போனது சர்வேஷ்க்கு.
அதே நேரத்தில், “என்ன?” என்று கேட்டான் ஜெகதீஸ்வரன் திடீரென்று.
ஒரு நொடி திடுக்கிட்டாலும் உள்ளுக்குள் பொங்கி பரவிய சிரிப்பை அடக்கிக் கொண்டவனாக அப்பாவியாக முகத்தை வைத்துக்கொண்டு, “ஹாங்?!” என்று விழித்தான் சர்வேஷ்.
தம்பியின் சேட்டை புரிந்த ஜெகதீஸ்வரன் இன்னும் அழுத்தமாக, “எதுக்கு சிரிக்கிற?” என்று கேட்க, சில நொடிகள் அவனை பார்த்த சர்வேஷ்,
“நான் சிரிக்கலையே…” என்று அவனிடம் சொன்னவன் ஆண்ட்ரூவிடம் திரும்பி, “அண்ணா நீங்க சொல்லுங்க… உங்க கூட தானே நான் பேசிகிட்டு இருந்தேன். நான் சிரிச்சேனா?” என்று அதே அப்பாவி முகத்தோடு கேட்க, வாய்விட்டு சிரித்தான் ஆண்ட்ரூ அவன் பாவனையில்.
சிரிப்பினூடே, “அப்படியே என்னை சிரிச்சாலும் உனக்கு என்னடா பிரச்சனை? ஒரு மனுஷன் சிரிக்க கூட கூடாதா? சர்வாதிகாரமாவில்ல இருக்கு…” என்று சொல்லிய ஆண்ட்ரூ,
வாடா செல்வா நம்ம சிரிப்போம் அவன் என்னதான் பண்றான்னு நானும் பாக்குறேன்… ஆனா சிரிக்கிறதுக்கு முன்னாடி எதுக்கு நீ சிரிச்சேன்னு ரீசன் சொல்லிடனும்… என்றும் சொல்ல,
“அடப் போங்கய்யா எனக்கு சிரிப்பே வரல… எவ்வளவு பெரிய காமெடி பார்த்தாலும் தனியா கூட சிரிக்க மாட்டேன். போதுமா?” என்று தலைக்கு மேல் கையை தூக்கி கும்பிடு போட்டவன்,
“நான் கோபமா கிளம்புறேன்…” என்று சொல்லி எழுந்து கொள்ள முயல,
தம்பியின் பாவனையில் ஜெகதீஷ் முகத்தில் புன்னகை அரும்பியது.