அத்தியாயம் 8
என்றும் இல்லாத வகையில் குழப்பத்தோடு அமர்ந்திருந்த சக்தியையே ஆழ்ந்து பார்த்துக் கொண்டு அவள் எதிரே வந்த அமர்ந்தாள் தாரணி.
“கல்யாணம் பண்ணிக்க பையன பாக்க போறேன்னு போயிட்டு வந்துட்டு மூஞ்சில இவ்வளவு குழப்பத்தோடு உட்கார்ந்திருக்க என்ன ஆச்சு?” மிகத் தெளிவாக தாரணி கேட்க, சில நிமிடங்கள் அமைதியையே பதிலாக தந்தாள் சக்தி.
“என்னடி ஆச்சு? பையன பிடிக்கலையா இல்ல அவனுக்கு உன்ன பிடிக்கலையா?” என்று கேட்டவள், “அதுக்கெல்லாம் வாய்ப்பே இல்லையே, உன்னை பிடிக்கலைன்னு சொல்லனும்னா கண்டிப்பா அவன் கண்ணை கடன் கொடுத்துட்டு தான் வரணும்…” என்ற தனக்குள் சொல்லிக் கொண்டவள், “இப்ப சொல்லப் போறியா இல்லையா?” என்று கேட்டாள் அழுத்தமாக.
“ஒரு சின்ன கன்ஃபியூஷன் தரு…” என்று அதே குழப்பத்தை குரலின் தேக்கி சக்தி சொல்ல,
“அதுதான் என்ன?” என்று கேட்டாள் தாரணி.
“நான் சொன்ன எல்லா கண்டிஷனுக்கும் ஓகே சொல்லிட்டான். அவனுக்கு பெருசா எந்த எஸ்பெக்டேசன்ஸ்சும் இல்லை. ஐ திங்க் அவனுக்கு ஓகே… நானுமே ரொம்ப கம்ஃபர்டபிலா ஃபீல் பண்ணுனேன்… ஆனா…” என்று சக்தி சொல்லிக் கொண்டு இருக்கும்போதே, ஆர்ப்பரித்தாள் தாரணி.
“அடி தூள்… அப்புறம் என்ன கல்யாணம் தான்… கெட்டி மேளம் தான்…” என்று தாரணி சொல்ல, அதில் சக்தி “ஆனால்…” என்று இழுத்தது மறைந்து போனது.
“தரு…” என்று அழைத்தாள் சக்தி.
“ம்” போட்டாள் தாரணி கதை கேட்கும் விதமாக.
“நான் இன்னும் பேசி முடிக்கல.” இன்று சக்தி சொல்ல,
அவளுக்கு முன்பாக வந்து சம்மணம் கூட்டி அமர்ந்தவள், அவரின் முகத்தை ஆழ்ந்து பார்த்தாள்.
அவள் குரலில் இருந்த தீவிரத்தில் தாரணியின் முகமும் கண்ணாடியாக மாறியது.
“சரி… சொல்லு.” அவள் கையைப் பிடித்தபடி தாரணி சொல்ல,
சில நொடிகள் அமைதியாக இருந்த சக்தி, தன் விரல்களையே பார்த்துக் கொண்டிருந்தவள், தன்னையே சீர்தூக்கிப் பார்க்க எண்ணியவளாக பேச ஆரம்பித்தாள்.
“பரத் நல்லவன் தரு…” என்றவள், வார்த்தைகளை தேடி தோற்று பின் மனதை கொட்ட ஆரம்பித்தாள்.
“ரொம்ப டீசெண்ட். வெரி மெச்சூர்ட். என்ன பேசுறேன்னு கவனமா கேட்டான். முக்கியமா என்னை ஜட்ஜ் பண்ணல. நான் சொன்ன விஷயங்களை புரிஞ்சுக்க ரொம்பவே ட்ரை பண்ணு பண்ணான்.” எங்கோ பார்த்து கொண்டு அவள் சொல்ல,
“அப்போ என்ன தான் டி ப்ராப்ளம் உனக்கு?” சிறு குழப்பத்தோடு அவள் கேட்க,
“தெரியல…” என்ற சக்தி என்பதில் இன்னும் குழப்பியது தாரணியை..
அவள் அறிந்த சக்திக்கு குழப்பங்கள் வந்தது இல்லை. எப்பொழுதும் தெளிவான சிந்தனையோடு இருக்கும் சக்தியின் மீது மாறாத பிரம்மிப்பு உண்டு அவளுக்கு.
எத்தனையோ முறை குடும்பத்திலும் அலுவலகத்திலும் உண்டாகும் பிரச்சனைகளுக்கு நொடியில் தீர்வு சொல்லும் சக்தியிடம் இருந்து இப்படி ஒரு பதிலை அவள் எதிர்பார்த்து இருக்கவில்லை.
“சக்தி…” ஆச்சரியத்தோடும் குழப்பத்தோடும் தாரணி அழைக்க,
“இல்ல தரு. நிஜமாவே தெரியல.” என்று நெற்றியை அழுத்திக் கொண்டாள் அவள்.
தனக்குத்தானே பேசிக் கொள்வது போல, “அவன்கிட்ட பேசும்போது கம்ஃபர்டபுளா தான் இருந்தேன். ஃபேக் ஃபீல் எதுவும் இல்ல. பட்…” என்று சொல்லி நிறுத்தியவள்,
“ஏதோ மிஸ்ஸிங்” என்றாள் தாரணியைப் பார்த்து.
தாரணி சில நொடிகள் அவளையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
“அது லவ் அட் ஃபர்ஸ்ட் சைட்… மாதிரி ஏதாவது ஃபீல் வரலன்னு சொல்றியோ?” நிச்சயமாக இருக்காது என்று தெரிந்த போதிலும் வாய் இருக்க மாட்டாமல் தாரணி சொல்லி வைக்க, இம்மி பிசகாமல் அவள் நினைத்தது போலவே நடந்தது
சட்டென்று நிமிர்ந்து பார்த்த சக்தியின் கண்கள், ‘லூசாப்பபா நீ?!’ என்று சொல்லாமல் சொல்வது போல இருக்க, அதையே கொஞ்சம் வார்த்தைகளை மாற்றி போட்டு பல்லை கடித்துக் கொண்டு,
“அந்த மாதிரி நான்சென்ஸ்ல எனக்கு நம்பிக்கை இல்லன்னு உனக்கு நல்லா தெரியும் தாரணி… தெரிஞ்சும் இப்படி இன்னொரு தடவை உளராத…” சக்தி சொல்ல,
‘அதான பார்த்தேன் இவளுக்காவது லவ் அட் ஃபர்ஸ்ட் பஸ்ட் சைட் வர்றதாவது… எங்க அத்தைக்கு மீசை முளைச்சு சித்தப்பாவா ஆனா கூட இவ லவ் பண்ண மாட்டா.. அவள பத்தி நல்லா தெரிஞ்சும் இப்படி எல்லாம் யோசனை வந்துச்சுன்னா நல்ல டாக்டரை பார்க்கிறது உனக்கு நல்லது தரு குட்டி. உன்னையே நம்பி ஒரு அப்பாவி ஜீவன் வேற இருக்கு. அதுக்கு வேற வாழ்க்கை கொடுக்கணும். நீ பார்த்து பதமா பண்ணுடி…’ என்று மனதோடு சொல்லிக் கொண்ட தாரணி,
“சரிங்க மேடம்…” என்று அமைதியா சொன்னவள்,
“அப்போ உன்னோட மனசு ஹெவிய மிஸ் பண்ணது எது சக்தி?” என்று குறுகுறுவென அவளை பார்த்துக்கொண்டே கேட்க, முறைத்தாள் சக்தி.
“சரி நீ சொல்லு. இனி வாய தொறந்தா நீ என்னன்னு கேளு… ஜிப் லாக்…” என்று தன் இதழ்களுக்கு பூட்டு போட்டு கொள்வது போல தாரணி செய்கை செய்ய, ஒரு ஆழ்ந்த மூச்சை இழுத்துக் கொண்டாள் சக்தி.
“அவன் என்னை அண்டர்ஸ்டாண்ட் பண்ணுவானு தோணுச்சு…” சக்தி சொல்ல,
வாயிலிருந்து கையை எடுத்தவள், “குட்...” என்று சொல்லிவிட்டு, என் பார்வையில் நாக்கை கடித்துக் கொண்டு,
“இனி பேசமாட்டேன்…” என்று சொல்ல,
“படுத்தாத தரு… விளையாட்டு விஷயம் இல்லை. யோசனையா இருக்கு. ஐ வாண்ட் டு கிளாரிஃபை மைசெல்ஃப்.” என்று தீர்க்கமான குரலில் அவள் சொல்ல அமைதியாகி போனாள் தாரணி.
“என்னோட பீலிங்ஸ் அண்டர்ஸ்டாண்ட் பண்ணி ரெஸ்பெக்ட் பண்ணுவான்னு தோணுச்சு. அவன் கூட இருந்தப்போ நான் அமைதியா இருந்தேன்…”
“ம்…”
“ஆனா…” மெதுவாக அவள் பார்வை எங்கோ தள்ளி போனது. தாரணியின் முகத்தை அவளால் பார்க்க முடியவில்லை.
“அவர் வந்த பிறகு என்னால நார்மலா இருக்க முடியல.” என்றாள் சிறிய குரலில்.
ஒரு நொடி புரியாமல் பார்த்த தாரணியின் முகம்,
அடுத்த நொடியே மாறியது.
“அவர்?” என்று சத்தமாக கேட்டவள், “யார் அந்த சுவரு?” என்று முணுமுணுக்கவும் மறக்கவில்லை.
சக்தி எதுவும் பேசவில்லை.
“சக்தி…” என்று அழுத்தமாக அழைத்தாள் தாரணி.
மெல்ல அவளை பார்த்தாள் சக்தி.
“ஜெகதீஷ் சார் அங்க வந்திருந்தார்…” என்றாள் மெதுவாக.
“என்ன?!” என்று ஆச்சரியமான பாவனையோடு கேட்ட தாரணி, “சரி…” என்று தலையை இருபுறமும் ஆட்டி ஏதோ புரிந்தது போல அவள் சொல்ல,
அதை கவனிக்காமல், “அவரோட ஃப்ரெண்ட்ட பார்க்க வந்திருந்தாராம்.” என்றாள் சக்தி நிலைத்த பார்வையோடு.
“அப்புறம்?” குறும்பு சிரிப்பு கொப்பளிக்க அதை மறைத்தபடி தாரணி கேட்க,
அவள் குரலில் இருந்த மாறுபாட்டை அப்பொழுதுதான் கவனித்த சக்தி, “ஒன்னும் இல்ல…” என்று வேகமாக சொன்னவள், “வந்து பேசிட்டு போனார்.” என்றாள் சாதாரணமாக சொல்ல முயன்று.
வந்த சிரிப்பை கட்டுப்படுத்திக் கொண்டு, “ஆமா சக்தி எனக்கு ஒரு டவுட். அவர் வந்ததுக்கும் உன்னோட கன்பியூஷனுக்கும் என்ன கனெக்ஷன் இருக்கு? எப்படி யோசித்தாலும் ஒரே இடத்தில் வந்து நிக்குதே… ஒருவேளை அப்படி இருக்குமோ?” அந்த கேள்வியில் அமைதியானாள் சக்தி.
“சொல்லுங்க சக்தி… சொல்லுங்க” அவள் கிண்டல் செய்ய,
“எனக்கே தெரியல…” என்று சக்தியின் குரலில் இதுவரை அவள் காணாத அலைப்புறுதல் இருந்தது.
அதற்கு மேல் அவளோடு விளையாட விரும்பாத தாரணி அவளை கூர்ந்து பார்த்தாள்.
“நீ என்ன ஃபீல் பண்ற?” நிறுத்தி நிதானமான குரலில் அவள் கேட்க,
“அதுதான் புரியல.” என்றாள் சக்தியும்.
“சக்தி…” அழுத்தமாக தாரணி அழைக்க,
“இல்ல தரு…” என்று வேகமாக மறுத்தவள், “இது லவ் எல்லாம் கிடையாது.” என்றாள் உறுதியாக.
அவள் சொல்லியது தனக்கா இல்லை அவளுக்கே அவள் சொல்லியதா என்று புரியாமல் பார்த்தாள் தாரணி.
“அப்போ?” தாரணி குழப்பமாக கேட்க,
சில நொடிகள் அமைதியாக இருந்தவள், மெல்ல சிரித்த சக்தி,
“அவர் வந்ததும்…”
“ம்?”
“எல்லாமே கொஞ்சம் டிஃபரென்ட்டா ஃபீல் ஆயிடுச்சு.” என்று சொன்னவள் அகமோ, “டிஃபரண்டா ஃபீல் ஆகல… செக்யூர்டா ஃபீல் ஆச்சு…” என்று சத்தமிட்டது.
சக்தியின் அகம் சொல்லியதை அறியாத தாரணியோ, அவள் இதழ்கள் மொழிந்த வார்த்தையிலேயே ஆச்சரியத்தை அப்பட்டமாக காட்டியது.
“ஓஹோ…” என்றவளின் உள்ளத்துக்குள் ஆயிரம் எண்ணங்கள் நொடியில் வந்து போக முகமும் இறுக்கமானது.
“சரியா வரும்னு தோணல சக்தி. ரொம்ப பெரிய இடம். பிக் சாட். பிசினஸ் வோர்டுல அவங்க குடும்பத்துக்கான தனி பெயர் இருக்கு… நமக்கு அதெல்லாம் செட் ஆகாது.” எச்சரிக்கையான குரலில் அவள் சொல்ல, அமைதியாக அவள் முகத்தையே பார்த்தால் சக்தி.
“நான் யாருன்னு எனக்கு தெரியும் தரு.” ஒற்றை பதிலில் அவள் வாயை மூட வைத்திருந்தாள் சக்தி.
“சக்தி நான் அப்படி மீன்…” என்று தாரணி விளக்கம் சொல்ல வர, கையைக் கட்டி அமைதியாக அவள் முகத்தையே பார்த்தாள் சக்தி.
“சரி சரி… அப்படி பார்க்காத. தப்புதான். தெரியாம சொல்லிட்டேன். விடு. நீ விஷயத்தை சொல்லு. கடைசில என்னதான் முடிவு பண்ணி இருக்க?” தாரணி பேச்சை மாற்றி விஷயத்தைக் கேட்க,
“முடிவு எதுவும் பண்ணல. இப்போதைக்கு பண்ண போறதும் இல்லை.” சக்தி தெளிவாக சொல்ல,
“உன்னோட பதிலுக்காக ஒருத்தன் காத்திருக்கான் டி.”
“அது எப்படி பார்த்த ஒரே பார்வையில அக்சப்ட் பண்றது? கொஞ்சம் டைம் வேணும் இல்ல… எனக்கு மட்டும் இல்ல. அவனுக்குமே… பாக்கலாம்…” அதுவரை இருந்த குழப்பங்கள் எல்லாம் கரைந்து காணாமல் போக திடமான குரலில் சக்தி சொல்ல, அமைதியாக கேட்டுக் கொண்டாள் தாரணி.
சக்தி எனக்கு ஒரு டவுட்டு… அவர்கள் இடையே நிலவிய அந்த இறுக்கத்தை உடைக்கும் விதமாக தாரணி சந்தேகம் கேட்க,
என்ன என்றால் சக்தியும் இலகுவாக.
இப்போ நீ சொல்லிட்டு வந்திருக்கிறதுக்கு எங்க ஊர்ல என்ன பெயர் தெரியுமா? அப்பாவியாக முகத்தை வைத்துக்கொண்டு தாரணி கேட்க,
அவள் செல்ல வருவதை புரிந்து கொண்டவளாக முறைத்துக் கொண்டே சக்தி நிற்க,
இப்ப நீங்க என்னனு கேக்கணும் அரக்கி சாரி சாரி ஆர்க்கிடெக்சர் மேடம்… தாரணி வம்புக்கு இழுக்க, செய்யவில்லை சக்தி.
“அட கேளு டி…” என்று சொன்னவள், “நீ கேக்காம போனாலும் நான் சொல்லுவேன்… வெயிட்… அத நான் சொல்றத விட இன்னொருத்தர் சொன்னால்தான் எபக்ட்டிவ்வா இருக்கும்...” என்றவள் அலைபேசியில் எதையோ தேடிக் கொண்டிருக்க,
அவள் தேடியது கிடைத்துவிட அவளை நெருக்கி அடித்துக்கொண்டு உட்கார்ந்தவள் தன் அலைபேசியை இயக்க, வாங்க பழகலாம் என்ற சிவாஜி படத்தில் வரும் சாலமன் பாப்பையா அவர்களின் காட்சி திரையில் உயிர் பெற, அதை முழுமையாக பார்க்கக்கூட விடாமல் தடுத்தது சக்தியின் கையில் இருந்து இசைத்த அலைபேசி.
கைபேசியை பார்த்த சக்தியின் முகம் கனிந்தது.
“எப்படித்தான் என் கூட பேசும் போது மட்டும் மூக்கு வேர்க்குமோ…” என்று தாரணி முணுமுணுத்துக் கொண்டிருக்க,
அழைப்பை ஏற்று “அம்மா…” என்று அவள் சொல்ல,
“உன்னோட முடிவு என்ன சக்தி?” அழுத்தம் திருத்தமாக வந்தது வெண்ணிலாவின் வார்த்தைகள்.
சக்தியின் அழைப்பையும் அதற்கு பதிலாக கிடைக்க வெண்ணிலாவின் வார்த்தைகளையும் கேட்டுக் கொண்டிருந்த தாரணிக்கு சிறு கோபம்.
“எப்பயுமே அவர் இப்படித்தானா? அவ எவ்வளவு பாசமா அம்மானு கூப்பிடுறா? என்ன பண்றேன்னு கூட கேட்காம எடுத்ததும் காரியத்துல தான் வந்து நிக்கணுமா? ஒரு வார்த்தை என்னம்மா பண்ற? சாப்டியான்னு கேட்டா குறஞ்சா போயிடுவாங்க?” மனதுக்குள் அவர்களை அர்ச்சித்துக் கொண்டவள் எழுந்து சென்று விட்டாள் அதற்கு மேலும் அவர்களின் உரையாடலை கேட்க மனம் இல்லாமல்.
“எனக்கு கொஞ்சம் டைம் வேணும் மா.” சக்தி சொல்ல,
சில நொடி அமைதிக்குப் பிறகு, “அளவுக்கு அதிகமா யோசிக்கிறது காலம் கடத்துறதும் கூட தப்பான முடிவுகளை கொடுக்கக்கூடும் சக்தி.” வெண்ணிலா சொல்ல,
“ஒரு முடிவு எடுக்கறதுக்கு முன்ன கோடி முறை யோசிக்கலாம். முடிவு எடுத்ததுக்கப்புறம் ஒரு தடவை யோசிச்சாலும் நீ தோத்துட்டன்னு சொல்லிக் கொடுத்தது நீங்கதாம்மா. யோசிக்க கண்டிப்பா காலம் வேணும். எனக்கு மட்டும் இல்ல, பரத்துக்கும் அந்த காலத்தை நான் கொடுக்கணும்.” அழுத்தம் திருத்தமாக சக்தி சொல்ல, பதில் சொல்ல முடியவில்லை, வெண்ணிலாவால். தன் வார்த்தைகளைக் கொண்டு தலையே மடக்கும் மகளை நினைத்து பெருமையாக இருந்தது அவருக்கு.
ஆனாலும் முடிந்தவரை தான் வளர்த்த பிள்ளைகளுக்கு தன் காலம் இருக்கும் போதே நல்லவைகளை செய்துவிட வேண்டும் என்று இப்பொழுது எல்லாம் அதிகமாக தோன்றி கொண்டு இருந்தது அவருக்கு.
எழுபது வயதைக் கடந்திருந்த அவரின் உடல் நிலை அவருக்குத்தானே தெரியும்?! பரதனை பற்றி அவர் கேட்டு அறிந்த விஷயங்கள் அனைத்தும் சக்திக்கு அவன் மிகப் பொருத்தமானவன் என்று எண்ணத்தையே கொடுத்திருக்க தன் இயல்பையும் மீறி சக்தியை முடிவை எடுக்க அவர் சொல்ல, அவரின் வார்ப்பாக இருந்தவளோ அவருக்கும் மேல் அழுத்தமாக தன் முடிவை சொல்லியிருந்தாள்.
அவளது தீர்க்கமும் தீர்மானமும் சிறு மன அமைதியை கொடுக்க, “சரி.” என்று ஒப்புக்கொண்டவர், அழைப்பைத் துண்டித்து இருந்தார்.
யோசிக்க விரும்பாமல் அவள் தள்ளி வைத்த விஷயங்கள், தாரணி அடுக்கிய காரணங்கள் அனைத்தையும் ஒன்றுமே இல்லாமல் ஆக்கியபடி பூதாகரமாக அவள் கண்முன்னே வந்து நிற்கும் பொழுது என்ன செய்வாள் இந்த பாவை?