அத்தியாயம் 9
சக்தியின் வாழ்க்கை வழக்கம்போலவே நகர்ந்தது. விடுதி விட்டால் அலுவலகம்; அலுவலகம் விட்டால் விடுதி என்று அவளது வாழ்க்கை ஒரு வட்டத்திற்குள் மிகக் கச்சிதமாக சுழன்று கொண்டிருந்தது.
காலை அலாரம் அடித்ததும் எழுவது; சில நேரங்களில் அவசரமாகவும், பல நேரங்களில் நிதானமாகவும் கிளம்புவது; அலுவலகம் செல்வது; புதிதாய் கிடைத்த அலுவலக நட்புகளோடு பேசுவது; வரைபடங்களை வரைவது; அவள் காகிதத்தில் கோடுகளாக வரைந்தவை உயிர் பெறும் பொழுது உடன் நின்று பார்ப்பது; குழுக்களோடு விவாதம் நடத்ததுவது; வரும் வாடிக்கையாளர்களோடு பேசுவது; அவ்வப்போது சர்வேஸ்வரனோடு கலகலப்பது என்று அவளது நாட்கள் இயல்பாக கரைந்து கொண்டிருந்தது.
அதில் மாற்றமாய் இருந்தது இரண்டு விஷயங்கள். ஒன்று நெருங்கிக் கொண்டிருந்த தாரணியின் திருமணம். மற்றொன்று பரதன். தினம் தினம் ஒரு முறையேனும் அவனை நினைக்க வைத்து விடும் விஷயங்கள்.
குறுஞ்செய்திகள், அழைப்புகள், தவறவிட்ட அழைப்புகள், புலனச் செய்திகள் என்று ஏதேனும் ஒரு வகையில் அவள் கைபேசியிலும் நாட்களிலும் பரதனின் பங்கு சில நிமிடங்களுக்காவது இருந்தது.
அந்த நிமிடங்களில் எல்லாம் பரதனோடு இன்னும் ஒருவனின் ஆதிக்கமும் சேர்ந்து இருந்ததை தான் அவளால் என்ன செய்தும் ஒதுக்க முடியவில்லை.
நினைவுகள் மனதுக்குள் அலையாடிக் கொண்டிருக்கும் போதெல்லாம், “உங்க மனசுல வேற யாராவது இருக்காங்களா?” என்று கேள்வியாக கேட்ட பரதனும், “எனக்கே தெரியல…” என்ற பதிலைச் சொல்லிய சக்தியும், மனதின் உணர்வுகள் சுனாமி பேரலைகளாக தாக்கி அவளை வலு இழக்கச் செய்த நொடி தாங்கிக் கொள்பவன் போல வந்து நின்ற ஜெகதீஸ்வரனும் மாறி மாறி வந்து போயினர்.
எப்பொழுதும் உணர்வுகளை வெளிக்காட்டாத அவனது முகம் அன்றைய நொடி காட்டிய உணர்வுகளின் வர்ணஜாலத்தை இப்பொழுது வரை தரம் பிரிக்க முயன்று முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறது சக்தியின் மனம்.
அவனைப் போலவே அவளும் தானே இத்தனை நாட்களாய் அவனை பார்த்துக் கொண்டிருக்கிறாள். எத்தனை நெருக்கடிகள் வந்தாலும், எத்தனை பெரிய வெற்றிகள் வந்தாலும் அனைத்தும் ஒன்றுதான் அவனுக்கு.
உள்ளுக்குள் என்ன அவன் உணர்கிறான் என்பதை அவனே வாய் திறந்து சொன்னால் தவிர எவராலும் கண்டுகொள்ள முடியாது.
அடிக்கடி சர்வேஸ்வரன் வாய் விட்டு புலம்புவதை அவளும் தான் கேட்டிருக்கிறாளே…
“தலைவருக்கு என்னதான் வேணும்னு ஒரு தடவை வாயைத் திறந்து சொன்னாதான் என்ன? கூட பொறந்த பாவத்துக்கு இப்படி படுத்த கூடாது… இப்படியுமா பிளாங்கா ஒரு முகம் இருக்க முடியும்?” ஜெகதீஸ்வரன் அழுத்தமான பார்வையோடு சர்வேஸ்வரனை கட்டி வைக்கும் நேரங்களில் எல்லாம் தோழியாய் நினைத்து இவளிடம் தானே புலம்பி தீர்த்திருக்கிறான் சர்வேஸ்வரன்.
இந்த விஷயங்களை மட்டும் தவிர்த்து விட்டால் நாட்கள் அத்தனையும் ஒன்று போல் இருப்பதாகத்தான் தோன்றியது. மனதோடு சில விஷயங்கள் மல்லுக்கட்டிக் கொண்டிருந்தாலும் இவை எதுவும் அவளது தொழில் முன்னேற்றத்தை குறைக்கவில்லை.
இன்னும் ஒரு படி உயர்ந்து தான் இருந்தது அலுவலகத்தில் அவளது நிலை.
பரதனை சந்தித்து இரண்டு மாதங்கள் கடந்து இருந்தது.
அன்று காலை வழக்கம் போல அலுவலகம் வந்தவளை வேலைகள் இழுத்துக் கொள்ள,
“சக்தி…” என்று அழைத்து தன் புறமாக கவனத்தை திருப்பியபடி அவள் முன்னே வந்து நின்றான் சுரேஷ்.
மடிக்கணினியில் பதிந்திருந்த கண்களைத் திருப்பி அவன் மீது பார்வையைச் செலுத்தியவள், “வாங்க சுரேஷ்… என்ன விஷயம்?” என்று கேட்க,
“இந்த எலிவேஷன்ல ஸ்மால் கரெக்ஷன் சொன்னிங்களே…” கையில் வைத்திருந்த ஒரு கோப்பினை காட்டி அவன் சொல்ல,
“ம்… இது நம்ம கூடுவாஞ்சேரி ப்ராஜெக்ட் தானே… கரெக்ஷன் பண்ணிட்டேன். நேத்து ஈவினிங்கே மெயில் பண்ணி இருந்தேன் சுரேஷ். என்னென்னு செக் பண்ணுங்க…” என்றாள் அவள்.
“ஆல்ரெடி செக் பண்ணிட்டேன் சக்தி. எல்லாம் ஓகே. அடுத்து என்ன பண்ண?” என்று அவன் கேட்க,
“உங்களுக்கு எந்த டவுட்டும் இல்ல தானே?” என்று மீண்டும் அவள் கேட்க, ‘இல்லை’ என்று பதிலாக சுரேஷின் தலை அசைந்தது.
“அப்போ ஓகே. அப்டேட் பண்ணிடுங்க. ஆல்ரெடி சர்வா, ஜெகதீஷ் சார் கிட்ட இன்பார்ம் பண்ணிட்டேன். அவங்களும் ஓகே பண்ணிட்டாங்க. ஜஸ்ட் கோ அஹெட்…” என்று சொல்ல சரி என்பதாக தலையசைத்து அவன் நகர்ந்து போக, மீண்டும் மடிக்கணினி திரையின் மீது பார்வையை பதித்தாள் சக்தி.
திரையில் கோடுகளும் எண்களுமாக ஏதோ ஒரு குடும்பத்தின் கனவு இல்லம் உருவாகி கொண்டிருக்க, அருகில் இருந்த அலைபேசியில் ஒளிர்ந்தது புலனத்தில் செய்தி வந்ததற்கான அறிவிப்பு.
திறந்து பார்க்காமலேயே தெரிந்தது பரதனிடமிருந்து தான் வந்திருக்கிறது என்று. செய்தி வந்தது என்னவோ பரதனிடம் இருந்து. ஆனால் அவள் மனதிலோ ஜெகதீஷ் குறித்ததான எண்ணங்கள் படையெடுக்க ஆரம்பித்தது.
‘அவன் ஏன் அப்படி விரைந்து வர வேண்டும்? எதற்காக தன்னிடம் அப்படி கேட்க வேண்டும்? அந்த கேள்விகளுக்கு பின்னால் இருந்த உணர்வுகள் என்ன?’ என்று அதிலேயே தொங்கிக் கொண்டிருந்தது அவள் மனது.
‘ஆர் யூ சூர்?’
அழுத்தமான குரல் மீண்டும் நினைவுக்குள் வந்து போக, கண்களை இறுக மூடினாள் அவள்.
“ச்ச்…” என்று தன்னையே கடிந்து கொண்டவளுக்குள் ஒரு போராட்டம் துவங்கியது.
“ஒண்ணுமே இல்லாத விஷயம் சக்தி. இதுக்கு இவ்வளவு இம்பார்ட்டன்ஸ் கொடுக்காத…” அறிவு சொல்ல,
“என்னோட வாழ்க்கையில இதுவரைக்கும் நான் உணராத ஒரு உணர்வு அன்னைக்கு எனக்கு கிடைச்சது. அதை ஏன் உன்னால அக்செப்ட் பண்ண முடியல… நிலா அம்மா பக்கத்துல இருக்கிறப்ப கூட இந்த மாதிரி ஒரு பீல் எனக்கு கிடைச்சது இல்ல. அதனால தான் அது என்னவா இருக்கும்னு யோசிச்சுக்கிட்டே இருக்கேன். நானும் தான் ஆசைப்படுகிறேன் அதுல இருந்து வெளியே வரணும்னு. ஆனாலும் முடியலையே! என்ன பண்ண…” மனம் முரண்ட,
“உனக்கு என்னமோ ஆயிடுச்சு. தேவை இல்லாம கண்டதையும் போட்டு குழப்பிக்கிட்டு இருக்க… கண்ணுல படாதது கருத்துலையும் இருந்து மறஞ்சு போயிடும்னு சொல்லுவாங்க. ஒருவேளை ஜெகதீஸ்வரன தினம் தினம் நீ பாக்காம இருந்திருந்தா இந்த விஷயம் உன்னோட மனச இந்த அளவுக்கு பாதிக்காது. ஆனா… தினம் தினம் அவரை நீ பார்க்கறதுனால மறக்க முடியாம, அதை கடக்க முடியாம கண்டதையும் நெனச்சுக்கிட்டு இருக்க சக்தி. இட்ஸ் நாட் குட் ஃபார் யூ…
எனக்கு ஒரு சந்தேகம் அந்த உணர்வு என்னவா இருந்தா உனக்கு என்ன? நீ எதுக்கு தேவையில்லாம மனச போட்டு குழப்பிக்கிற?
இப்படி யோசிக்கிறது மூலமா நீ என்ன கன்க்குளூஷன்னுக்கு வர விரும்புற?
திரும்பவும் சொல்றேன்… இது நல்லதுக்கு இல்லை. இதை இப்படியே விட்டுட்டா எல்லாருக்கும் நல்லது. தாரணி சொல்லும்போது நான் யாருன்னு எனக்கு தெரியும்னு சொன்னா மட்டும் போதாது. தேவையில்லாத விஷயங்களை ஆராய்ச்சி பண்ணவும் கூடாது. எல்லாத்தையும் தூக்கி மூட்டை கட்டி தூர போட்டுட்டு போய் வேலையை பார்க்கிற வழிய பாரு.” என்று புத்தி அறிவுறுத்தியது.
தனக்குள்ளேயே இரண்டாகப் பிரிந்து நின்று சண்டையிட்டு ஒரு வழியாக நிதானத்திற்கு வந்தவள், மடிக்கணினியில் ஆழ்ந்து பார்த்து செய்ய வேண்டிய வேலைகளில் தன்னை நுழைத்துக் கொண்டவளாக வேகமாக விசைப்பலகையில் விரல்களை ஓட விட்டாள்.
வேலையில் மும்மரமாக இருந்தவளை, “சக்தி மேடம்…” என்ற குரல் கலைத்தது.
அந்த குரலில் நிமிர்ந்து பார்த்தவள், கேபின் கதவுக்கு வெளியே சாய்ந்து நின்ற சர்வேஷை பார்த்ததும் புருவம் உயர்த்தினாள்.
“என்ன?” என்று அவள் கேட்க,
“ஆர்கிடெக்ட் மேடம் பிஸிங்களா?” என்று பதிலாக சர்வேஷ் கேட்ட கேள்வியிலேயே மனதிற்குள் சிறு உற்சாகம் ஊற்றெடுத்தது.
நிபந்தனை இல்லாத, நிர்ப்பந்தம் இல்லாத, எதையும் எதிர்பார்க்காத ஒரு நட்பு தாரணிக்கு அடுத்தபடியாக சர்வேஸ்வரனுடன் சக்திக்கு ஏற்பட்டிருந்தது இந்த எட்டு மாத காலத்தில். ஏற்படுத்தி இருந்தான் சர்வேஸ்வரன் என்று சொல்ல வேண்டுமோ?
சர்வேஸ்வரனின் கிண்டலான கேள்விக்கு அவனை காட்டிலும் கிண்டலாக, “ரொம்ப.” என்றாள் நக்கலாக.
“சரி நான் போறேன்.” முறுக்கிக் கொண்டு சர்வேஸ்வரன் திரும்ப,
“உன்னோட இதே வேலையா போச்சு… உள்ள வா ஷர்வா… கைல பைல வச்சிக்கிட்டு என்ன விளையாட்டு? என்ன ஃபைல் அது?” என்று அழைத்தாள்.
உடனே சிரித்துக்கொண்டே உள்ளே வந்தவன், “இதுக்குத்தான் சொல்றது… மனுஷங்களை கொஞ்சமாவது மதிக்கணும்னு. இப்ப பாரு விட்டா கால்ல விழுந்து கெஞ்சுற நிலைமைக்கு வந்துட்ட…” என்று கித்தாய்ப்பாக அவன் சொல்ல முறைத்த சக்தி,
“என்ன வேணும்?” என்று கேட்டாள் கோபமாக.
அவள் கேள்வியில் சிரித்தவன் கையில் இருந்த கோப்பினை அவள் மேசையில் வைத்து விட்டு, “எனக்கு வேண்டியது ஆயிரம் இருக்கு. அதெல்லாம் உன்னால கொடுக்க முடியாதும்மா… ஏதோ உன்னால கொடுக்க முடிஞ்சது இதுதான்…” என்றவன் அவளது பார்வையில் தீட்சண்யத்தில்,
“காரப்பாக்கம் மால் ப்ராஜெக்ட் பைனல் ட்ராயிங்ஸ்...” என்று சொல்ல, அதைத் திறந்து பார்த்தாள் சக்தி.
அவள் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதே, “இதுக்கு அப்ரூவல் வாங்கணும்.” என்று சொல்ல,
“ம்… எல்லாம் பக்கவா இருக்கு ஷர்வா… ஒன்னும் பிரச்சனை இல்ல. ஃபுட் கோர்ட் பார்ட் மட்டும் இன்னும் கம்ப்ளீட் ஆகல… நான் தான கைடன்ஸ் கொடுத்தேன்…” என்றாள் அவளும் காகிதங்களிலேயே கண்களைப் பதித்த படி.
“அது எங்களுக்கு தெரியும். ஃபுட் கோர்ட் தவிர்த்து மத்தது எல்லாம் பக்காவா தான் இருக்கு. நானும் செக் பண்ணிட்டேன். அண்ணா கிட்ட சைன் வாங்கணும்.” என்று அவன் சொல்ல,
“போய் வாங்கு ஷர்வா. அத விட்டுட்டு எதுக்கு இங்க வந்து நிக்கிற?” விழிகளை உயர்த்தி அவனை பார்த்தபடி அவள் கேட்க,
“நீ தான் சைன் வாங்கி தரணும் சக்தி.” என்றான் அவன் தெளிவாக. அதில் அவன் முகத்தையே அசையாது பார்த்தாள் சக்தி.
ஒரு நிமிட இடைவெளிக்கு பின், “வாட்?! நானா? ஏன்?” சில அதிர்ச்சியோடு குழப்பத்தை தாங்கி வந்தது அவளது வார்த்தைகள்.
“ஏன்னா…” என்று நாற்காலியில் சாய்ந்து அமர்ந்தவன்,
“எனக்கு தெரிஞ்சு இந்த ஆஃபீஸ்ல அண்ணா சொல்லாததையும் புரிஞ்சிக்கிற ஒரே பர்சன் நீ தான் சக்தி. அவர் வார்த்தையே இல்லாம கேட்கிற விதவிதமான கேள்விகளுக்கு தைரியமா பதில் சொல்றதும் நீ மட்டும் தான். என்னதான் நீ கைடன்ஸ் மட்டும் தான் கொடுத்தேன்னு சொன்னாலும் டிராயிங் சொல்லும் அத நீ தான் டிசைன் பண்ணினனு. சோ நீயே போய் சைன் மட்டும் வாங்கிட்டு வந்து கொடுத்துடு சக்தி…” என்றான்.
“லூசா நீ?” அவள் கேட்க,
“இல்ல சீரியஸா தான் சொல்றேன். நேத்து விழுந்த மண்டகப்படிக்கு இன்னைக்கு போய் நான் நின்னா இன்னும் நாலு கேள்வி சேர்த்து கேட்டு வைப்பாரு. என்னால பதில் சொல்ல முடியாது. ஃபுட் கோர்ட் போர்ஷன் வேற நிக்குது. அது சிம்பிள் தான். பண்ணிடலாம் தான். அத சொன்னா என்ன நடக்கும்னு எனக்கு தெரியல. மத்தது தான் ரொம்ப முக்கியம். டெட்லைன் வந்திருச்சு. இனிமே அவர் கரெக்ஷன் சொல்லி அதை வேற நம்ப ரெடி பண்ணனும்… அவர் சொல்ற ஒரு ஒரு வார்த்தைக்கும், வரையிற லைனுக்கும், வைக்கிற ஒவ்வொரு டாட்டுக்கும் உன்னால தான் கரெக்டா மீனிங் கண்டுபிடிக்க முடியும். அதனால தான் சொல்றேன். நீ போய் சைன் வாங்கிட்டு வா.” என்று விளக்கமாக அவன் சொல்ல, தன் இருக்கையில் இருந்து எழுந்தாள் சக்தி.
அவளையே புன்னகையோடு பார்த்துக் கொண்டு இருந்தான் சர்வா. அதில் சற்றே கோபம் வந்தாலும், “கொடு.” என்று கையை அவனுக்கு முன்பாக நீட்ட,
சத்தமாக சிரித்தபடி, “வாவ்… இதுதான் டெடிக்கேஷனா?.” என்று சொல்லி கை தட்ட, அதைக் கண்டுகொள்ளாமல் கோப்பினை எடுத்துக் கொண்டு வெளியேறினாள் அவள்.
ஜெகதீஸ்வரனின் அறைக் கதவு சரியாக மூடப் படாமல் பாதி திறந்திருந்தது.
உள்ளே ஆண்ட்ரூ உட்கார்ந்து ஏதோ பேசிக்கொண்டிருந்தான்.
“அப்போ அந்த டென்டர்…” ஆண்ட்ரூ சொல்ல,
“ரிஜெக்ட் பண்ணுடா.” என்று ஒற்றை வரியில் பதில் வந்தது ஜெகதீஸ்வரனிடம் இருந்து.
“டேய் ரொம்ப பெரிய டெண்டர் மச்சி. எடுத்தா நல்லது…” என்று சொல்லியவன், பின் நண்பனை அறிந்தவனாக,
“அட்லீஸ்ட் ரீசனாவது சொல்லுடா…” கேள்வி கேட்டுக் கொண்டிருந்தான் ஆண்ட்ரூ.
“டூ மச் பொலிடிகல் பிரஷர்… அந்த கோதண்டம் கூட பிசினஸ் வாய்ப்பே இல்லை.” ஜெகதீஸ்வரன் இயல்பாகச் சொல்லிக் கொண்டிருக்க, அந்த நேரம் கதவை தட்டினாள் சக்தி.
இருவரின் பார்வையும் அவள் பக்கம் திரும்பியது.
“மே ஐ கம் இன் சார்?”
“ம்.”
உள்ளே வந்தவள் கொண்டு வந்திருந்த கோப்பினை நீட்டி,
“மால் ப்ராஜெக்ட் டிராயிங்ஸ்.” என்றாள்.
கோப்பினை வாங்கியவன் உடனே திறக்கவில்லை. அவளைப் பார்த்தான். அந்த பார்வை இரண்டு நொடிகள் நீண்டது.
“கம்ப்ளீடட்?”
“அல்மோஸ்ட் சார்”
“அல்மோஸ்ட் மீன்ஸ்?”
“ஃபுட் கோர்ட் செக்ஷன் மட்டும் பெண்டிங்…”
“டெட்லைன்?”
“ஃப்ரைடே.”
“ம்.”
அவ்வளவுதான். பேச்சு முடிந்து இருந்தது. பார்த்துக் கொண்டிருந்த ஆண்ட்ருவிற்கு தான் மணிரத்னம் படத்தின் காட்சிகளை நேரில் பார்ப்பது போல சுவாரசியமாக இருந்தது.
கோப்பினை திறந்து பார்த்தவன் கையொப்பமிட ஆரம்பித்தான். அவள் அமைதியாக நின்றிருந்தாள்.
சில நாட்களுக்கு முன் இருந்திருந்தால் இதே ப்ராஜெக்ட் பற்றி பத்து கேள்விகள் கேட்டிருப்பான். ஒவ்வொரு விஷயத்தையும் ஆராய்ந்து அவளோடு விவாதித்து இருப்பான்.
அவனோடு விவாதிப்பதில் புது புது கோணங்கள், தனித்தன்மையான உருவாக்கங்கள் எல்லாம் கிடைத்தன அவளுக்கு. அறிவு பசியோடும் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தோடும் இருப்பவளுக்கு அவனோட விவாதிப்பது என்பது அலாதியானதாக இருந்தது.
ஆனால் இப்பொழுதெல்லாம் ஒற்றை வார்த்தைகள் தான் பதிலாக கிடைத்தது அவளுக்கு. அது ஏனோ அவளுக்குள் சின்ன எரிச்சலையும் கொடுத்தது வினோதமாக.
கையொப்பமிட்டு கோப்பினை அவள் புறமாக நீட்டியவன், “ப்ரோஸிட்” என்றான்.
சில நொடிகள் அவன் முகத்தை பார்த்த சக்தி, “வேற ஏதாவது கரெக்ஷன் இருக்கா சார்?” தன்னையும் மீறி கேட்டு விட,
“இல்ல.” என்றான் அப்பொழுதும் ஒற்றை வார்த்தையாக.
அன்று அவளை என்ன பிடித்து ஆட்டியதோ, “சூர்?” மீண்டும் கேட்டு வைக்க, அந்த ஒரு கேள்வியில் மெதுவாக நிமிர்ந்தது அவனது பார்வை.
சில நொடிகள் நேராக அவள் விழிகளை பார்த்தவன், “குட் வொர்க்.” என்றான் மெதுவாக.
சட்டென்று மலர்ந்தது சக்தியின் முகம். அவள் முகத்தையே ஆழ்ந்து பார்த்தவன், என்ன என்பதாக புருவங்களை உயர்த்தி கேட்க, இல்லை என்பதாக அசைந்தது அவளது தலை இயல்பாக.
பார்த்துக் கொண்டிருந்த ஆண்ட்ரூவின் கண்கள் சாசர் போல விரிந்தது.
“தேங்க்ஸ் சார்…” என்று முக மலர்ச்சியோடு சொல்லியவள், விடை பெற்றுக்கொண்டு வெளியேறிச் செல்ல,
அவள் முற்றிலுமாக தன் பார்வையில் இருந்து மறையும் வரை அவளையே பின் தொடர்ந்தன ஜெகதீஸ்வரனின் கண்கள்.
அதைப் பார்த்து இருந்த ஆண்ட்ரூவினால் பொறுக்க முடியவில்லை.
“டேய்…” என்று கத்தி இருந்தான்.
“ம்.” எப்பொழுதும் போல ஒற்றை வார்த்தையோடு ஜெகதீஸ்வரன் நிற்க பல்லைக் கடிக்கத்தான் முடிந்தது அவனால்.
ஆனாலும் நண்பனின் வித்தியாசமான நடவடிக்கைகள் அவனை கேள்விகளால் குடைய, “நம்ம எதுக்கு தேவையில்லாம டென்ஷன் ஏத்திக்கிட்டு? அவங்கிட்டயே கேட்டிடலாம்” என்று தனக்குள்ளே முணுமுணுத்தவனாக,
“நான் ஒரு டவுட் கேட்கட்டா?”
“வேலை ரிலேட்டட்னா கேள்.”
“அதுவும் ரிலேட்டட் தான்.”
தனக்கு முன்னே விரிந்திருந்த மடிக்கணினியின் திரையிலிருந்து பார்வையை திருப்பாமல் அமர்ந்திருந்தான் ஜெகதீஸ்வரன்..
“உனக்கு என்னடா ஆச்சு?”
அந்த கேள்வியில் அவன் விரல்கள் ஒரு நொடி விசைப்பலகையின் மேல் நின்று மீண்டும் இயங்க ஆரம்பித்தது. அதைக் கவனித்த ஆண்ட்ரூ சிரிப்பை அடக்கிக் கொண்டான்.
அதற்கு மேல் கேள்வி கேட்டால் நண்பனிடம் இருந்து ஒரு வார்த்தையை பதிலாக பெற முடியாது என்பதை உணர்ந்தே இருந்தவனுக்கு வந்த சிரிப்பு முகம் முழுவதும் பரவியது.
அதே நேரம் வெளியே வந்த சக்தி தன் இருப்பிடம் நோக்கி வேகமாக நடந்து கொண்டிருந்தாள்.
“சைன் வாங்கிட்டியா சக்தி?” என்ற கேள்வியோடு அவள் முன்னே வந்து நின்றான் சர்வேஸ்வரன்.
மலர்ந்த முகத்தோடு,“ம்.” என்று சொன்னவள் கைகள் கோப்பினை அவன் புறம் நீட்டியது.
கோப்பினை வாங்கி பார்த்தபடியே,“அண்ணா என்ன சொன்னாங்க?” என்று சர்வேஸ்வரன் கேட்க,
“குட் வொர்க்” சொல்லும் பொழுதே குரல் துள்ளியது சக்திக்கு.
முதல் முறை மழலையர் பள்ளிக்குச் சென்ற குழந்தைக்கு வகுப்பு ஆசிரியர் பாராட்டி கைகளில் நட்சத்திரங்களை வரைந்து விடும் பொழுது குதூகளிக்கும் குழந்தையைப் போல ஆர்ப்பரிப்போடு சொல்லிய சக்தியை கண்டவன் கண்கள் சற்றே விரிந்தாலும்,
“அடப்பாவி…” என்று மார்பை பிடித்தவன்,
“இதெல்லாம் அநியாயம் தெரியுமா?” என்றும் அலற,
“வை?” என்றாள் அவளும் மாறாத புன்னகையோடு.
“அண்ணன் யூஸ்வலி இப்படி எல்லாம் பண்ண மாட்டாங்க…”
“எப்படி பண்ண மாட்டாங்க?”
“நிஜமா சொல்றேன். எவ்வளவுதான் நல்லபடியா செஞ்சு கொண்டு போய் கொடுத்தாலும் சின்ன மிஸ்டேக் இருந்தா கூட சைன் பண்ண மாட்டாங்க. நான் மட்டும் போயிருந்தா பார்க்கிற பார்வையிலேயே என்னை கிழிச்சு நார் நாரா தொங்கவிட்டு இருப்பாங்க. ஆனா் இங்க ஒரு போர்ஷனே இன்னும் கம்ப்ளீட் ஆகல… குட் வொர்க்ன்னு சொல்லி அனுப்பி இருக்காரு. என்னால ஒத்துக்க முடியாது.” என்று சொல்லியபடி அவள் முகத்தை பார்த்தவன்,
“நானும் கவனிச்சுக்கிட்டு தான் இருக்கேன்… உன்கிட்ட மட்டும்தான் இப்படி டிஃபரண்டா நடந்துக்குறாரு” என்றும் சொல்லி வைக்க, சில நொடிகள் அமைதியாக இருந்தாள் சக்தி.
பிறகு சாதாரணமாக கேட்பது போல, “எப்படி?” என்றாள்.
அவளைப் பார்த்து மெதுவாக சிரித்த சர்வேஷ், “அதை தான் நானும் கண்டுபிடிக்க ட்ரை பண்ணிட்டு இருக்கேன் மேடம்… கூடிய சீக்கிரத்துல கண்டுபிடிக்கிறேன். நீங்க போய் ஃபுட் கோர்ட்ட கம்ப்ளீட் பண்ணுங்க மேடம்.” என்று சொல்லி அவளை விட்டு விலகி நடந்து சென்றான்.