கண்ணாமூச்சி 13:
அன்று பூர்வாவிற்கு ஐந்தாம் மாதம் தொடங்கியிருந்தது. ஆக, நாத்திகள் இருவரும் வீட்டிலே வளையல்போட்டு பலகாரம் கொடுக்க தீர்மானித்திருந்தனர்.
பவுனம்மாளும், குடும்பத்தோடு வருவதாக இருக்க, சிறு விழா போல் நடத்த திட்டமிட்டு, காலையில் இருந்தே அதற்கான பரபரப்பு வீட்டை ஆக்ரமித்திருந்தது.
நல்ல நேரத்தில், நாத்திகள் வளையல் போட்டிருந்தனர். மாணிக்கத்திற்கு அன்று எதிர்பாராத விதமாக முக்கிய வேலை ஒன்று வந்துவிட, தவிர்க்க முடியாது கிளம்பியவர்,
“பிரணிக்குட்டி, மணிப்பா போய்ட்டு சீக்கிரம் வந்திடுவேன்.” என்றவருக்கு வெறும் தலையசைப்பை மட்டும் கொடுத்தவளை, கண்டு யோசனையுடன் தான் கிளம்பினார் மாணிக்கம்.
கன்னங்களில் சந்தனம் பூசி, கைகளில் வளையல் அடுக்கி தாய்மைக்கேற்ற பூரிப்புடன் அமர்ந்திருந்த பூர்வாவின் முகத்தில் இருந்த சிரிப்பு, பிரணியின் சிறு மனதில் ஒருவித கோபத்தை உண்டாக்கியது உண்மை.
அவளது தோழிகள் ஓதிய அனைத்து உண்மைகளும் அவள் மனதில் வந்துப் போக, ஒருவித எரிச்சலைடைந்தது அவள் மனம்.
இதில், ராகவன் வந்தவனும்,
“யுகா, ஏன் இங்க இருக்க? அங்கே அத்தை கிட்ட வா போகலாம்.” என அழைக்க,
“நான் வரலை!”
“ஏன்?”
“வரலைன்னு சொன்னா புரியாதா உனக்கு?” என பதிலுக்கு அவள் கத்தியதில்,
“ராகவ், அவகிட்ட என்ன சண்டை போடுற, அவளை தொந்தரவு பண்ணாம விடுடா, அவ பாட்டுக்கு இருக்கட்டும்.” பிரணியிடம் வம்பு இழுக்கிறானே, என விமலா அதட்டி அவனை அழைத்துக் கொள்ள,
‘ஓஹ், அப்போ என்கூட ராகவ் பேச கூடாதாமா? நான் தனியா கோபமா இருக்கிறது, யாருக்குமே முக்கியமா படலையா?’ உள்ளுக்குள் குமுற ஆரம்பித்தவளின் கோபம், ராகவன் அவளை விட்டு, பூர்வாவின் வயிற்றை தொட்டு, சிரிக்க பேசியதில் மேலும் அதிகமாகி வெடிக்கும் நிலைக்கு சென்றது.
அடுத்து, பவுனும், திலகாவும் வந்தவர்கள் நேராய் பூர்வாவிடமே சென்று அவள் உடல்நிலையை விசாரித்து விட்டு, அவளிற்கு வளையல் இட்டதில், மேலும் மன அழுத்தத்திற்கு ஆளாகினாள் பிரணிதா. துரை மட்டும் சிறிது நேரம் கழித்து வருவதாக இருந்தது.
‘அப்போ இங்க இருக்கிற யாருக்கும் நான் தேவையில்லை. வரப்போற குட்டி பசங்களுக்காக என்னை எல்லாரும் வேணாம்னு ஒதுக்கி வச்சுட்டாங்க.’ என்ற விபரீத எண்ணம் அவளுள் தோன்ற ஆரம்பித்திருந்த நிலையில்,
“இப்புடித்தான் எங்க சித்தியையும் இரண்டாவது கல்யாணம் பண்ணாங்களாம். அவுங்களுக்கு ஒரு பொண்ணு இருந்துச்சாம். ஆரம்பத்துல உன்னை மாதிரிதான் அந்த பிள்ளைய நல்லா பாத்துக்கிட்டாங்களாம், ஆனா அந்த சித்தப்பாக்குன்னு ஒரு பாப்பா வந்ததும், இவளை கண்டுக்காம, பேசாமா, சாப்பாடு கொடுக்காமா ஒதுக்கி வச்சிட்டாங்களாம்.
அதுலயும் அந்த புது சித்தப்பா அவுங்க பிள்ளைக்காக இவளை திரும்ப, பாட்டி வீட்டுலயே கொண்டு வந்து விட்டுட்டாங்களாம்.அதே மாதிரி உன்னையும் பாட்டி வீட்டுக்கு அனுப்பிடுவாங்களாம்.” என்ற தோழியின் வேண்டாத உபதேசம் வேறு மனதில் வர,
‘என்னை பாட்டியோட அனுப்பிடுவாங்களோ.’ என அவள் நினைக்கும் போதே, அங்கே வந்த திலகா,
“பிரணி தங்கம் எப்படியிருக்கீங்க? லீவு தானே இப்போ, அங்கே அத்தை வீட்டுக்கு வர்றீங்களா?” எதோர்ச்சையாய், இயல்பாய் திலகா கேட்ட அடுத்த நொடி,
“ஏன்த்தை, என்னை அம்மா உங்க கூட அனுப்ப போறாங்களா? நான் வேண்டாமா அவுங்களுக்கு.” என அவள் பயத்தில் உளறியவாரு, வேகமாய் பூர்வாவை அவள் நெருங்கிய சமயம்.
“பிரணிய கொஞ்சநாள் நான் கூப்பிட்டு போறேன் பூர்வா. இங்கயிருந்தா அவளை பாத்துக்கிறேன்னு, உன்னை நீ கவனிக்க மாட்டே, பிள்ளையும் உன்கிட்ட வர முடியாமா ஏங்கிடுவா, அதனால் நான் ஊருக்கு கூட்டிட்டு போட்டுறேன்.” என பவுனம்மாள் கூற கேட்டாள் அதிர்ந்து விட்டாள்.
‘அவளை அழைத்துச் செல்ல போகிறார்கள்!’ என்ற வார்த்தை மட்டும் மீண்டும் மீண்டும் அவளுள் எதிரொலிக்க, மேலும் நண்பிகள் சொன்ன அனைத்தும் அவளது வாழ்விலும் நடப்பதில், ஒருவித அழுத்தத்தில் இருந்தவளின் கோபம், அன்று உடைந்து ஆக்ரோஷமாய் வெளிவந்திருந்தது.
“என்னை அனுப்புவீங்களா? அப்போ உங்களுக்கு நான் வேண்டாம் அம்மா.” என அவள் கத்தியதில், திகைத்துப் போன பூர்வா,
“என்ன பிரணி சொல்ற, யாரு உன்னை வேண்டாம் சொன்னது.” என்றபடி அவளை நெருங்க,
“நீங்கதான், நீங்க மட்டுமில்ல இங்க யாருக்கும் நான் வேண்டாம் தானே, புதுசா வரப்போற பேபிஸ்க்காக என்னை ஒதுக்கி வச்சிட்டிங்கள எல்லாரும்.யாருக்கும் என்னை பிடிக்கலைதானே,
என் ஃப்ரெண்ட்ஸ் சொன்னாப்ப எல்லாம் நான் நம்பலை, ஆனா இப்போ நம்புறேன். அவுங்க சொன்ன மாதிரியே என்னை இந்த வீட்டை விட்டு அனுப்பு போறீங்க தானே, ஏன்னா நான் இந்த வீட்டு வாரிசு இல்லை அப்புடிதானே.” வெறி கொண்டு அவள் கத்திட,
“என்ன பிரணி உளறிட்டு இருக்க? உன் ப்ரெண்ட்ஸ் சொன்னா அது உண்மையாகிடுமா?”
“ஆமா, உண்மைதான். எனக்கப்பறம் உனக்கு ஒரு பாப்பா வரும்னு சொன்னாங்க, நான் இல்லை சொன்னேன், மணிப்பாக்கும் உனக்கும் நான் மட்டும் தான் ஒரே பொண்ணுன்னு சொன்னேன். ஆனா…ஆனா அப்பிடியில்லதானே, அவுங்க சொன்னது உண்மையாகிடுச்சு.
அதேபோல, இன்னொரு குழந்தை வந்தா என்னை ஒதுக்கிடுவீங்க, அந்த பேபி மேலதான் பாசமா இருப்பாங்கன்னு சொன்னாங்க, அதுவும் உண்மையாச்சு. இந்த பேபி வந்ததுல இருந்து, எல்லாரும் அதுக்குதானே இம்பார்டன்ஸ் கொடுத்தீங்க, ஏன்னா அது தான் இந்த வீட்டு ரத்தம், வாரிசு அப்புடித்தானே.” என அவள் பேச பேச குடும்பத்தினர் அனைவரும் அதிர்ந்து தான் போயினர்.
‘படிக்கிற பிள்ளைகள் இப்படியெல்லாம பேசுகின்றனர்?’ என அதிர்ந்து தான் போயினர்.
“அப்புடி எல்லாம் இல்லைடா பிரணி, அம்மா உன்னை அப்புடி எல்லாம் விட மாட்டேன். இங்க யாருமே உன்னை வேண்டாம்னு சொல்லி ஒதுக்க மாட்டோம்டா. நீ தான் மணிப்பாவோட செல்லப் பொண்ணு எப்பவும்.”
“பொய் சொல்லாதீங்க, நீங்க சொல்றது எல்லாமே பொய்.நான் டெய்லியும் உங்களை கண்டுப்பிடிச்சுதானே தூங்குவேன். ஆனா இந்த பேபி வந்தப்பறம், என்னை அப்புடி பிடிக்க கூடாதுன்னு சொன்னீங்கதானே, அப்போ உங்களுக்கே நான் வேண்டாம் தானே,
அடுத்து ராகவன் கூட என்கூட விளையாட வரலை, அப்போ அவனுக்கும் நான் வேண்டாம் தானே.
அன்னைக்கு அத்தை நான் பாத்ததால தான் உனக்கு வயிறுவலி வந்துச்சுன்னு சொன்னாங்களே, அப்போ அமைதியாதானம்மா இருந்த நீ. அப்போ அவுங்களுக்கு என்னை பிடிக்கலை, ஏன்னா நான் மணிப்பா ரத்தம் இல்லைத்தானே. இப்புடி என் ஃப்ரெண்ட் சொன்னது தான் எல்லாமே நடந்துச்சு.
இப்போ, என்னை இந்த வீட்டை விட்டு பாட்டிக்கூட அனுப்பிடுவீங்கன்னு சொன்னாங்க, அதே மாதிரி என்னை அனுப்ப பாக்குறீங்க இல்லை.” என கண்ணீர் வழிய பேசியவளை கண்டு ஒருவருக்கும் பேச்சு வரவில்லை.
தாங்கள் இயல்பாய் செய்த சின்னசின்ன விசயங்கள் இந்தளவு பிரணியின் மனதை பாதித்திருக்கும் என நிச்சயம் எதிர்பார்த்திருக்கவில்லை.
பூர்வாவிற்கு மிகுந்த குற்றவுணர்வாகிப் போனது. ‘இப்புடி மகள் மனதளவில் பாதிக்கப்பட்டிருப்பதை அறிந்து கொள்ளாமல் மேலும் அவளை அழுத்தத்திற்கு ஆளாக்கி விட்டேனே’ என்ற எண்ணம் அவரை கூறுப் போட ஆரம்பிக்க,
“இல்லைடா பிரணி தங்கம், நீ நினைக்கிற மாதிரி எதுவும் இல்லைடா.”
“ஓஹ் இல்லை எதுவும் இல்லையா?”
“சத்தியமா இல்லைடா, அம்மா உன்னை கவனிக்காம விட்டது தப்புதான்.”
“தப்புதானே, என்னை வேண்டாம்னு ஒதுக்கி வச்சது தப்புதானே.” என சம்பந்தமில்லாது அவள் உளற,
“இல்லை பிரணி!”
“தப்பு செஞ்சா பனிஷ்மென்ட் கொடுக்கனும் தானே, என்னை வீட்டை விட்டு அனுப்பு பாத்தீங்கள, அதுக்கு இந்த பேபிஸ்தானே காரணம்.
அப்போ…..அப்போ இந்த பேபிஸ் வேண்டாம். இந்த குட்டி பசங்க வந்ததாலதானே என்ன வேண்டாம் ஒதுக்கி வச்சீங்க. அப்போ இவங்க வேண்டாம், வேண்டவே வேண்டாம்.
எனக்கு இவுங்களை பிடிக்கலை, இவுங்க நம்ம யாருக்கும் வேண்டாம் அம்மா, இவுங்க இல்லைன்னா என்னைதானே எல்லாருக்கும் பிடிக்கும்.” என பேசிக் கொண்டே சென்றவள், பூர்வா சுதாரிக்கும் முன், பலம் கொண்டு அவள் வயிற்றில் அடிக்க ஆரம்பித்திருந்தாள்.
பூர்வா சுத்தமாக இதனை எதிர்பார்க்கவில்லை, அவள் சுதாரித்திடும் முன் பிரணி வேகம் கொண்டு அடித்திட,
“பிரணி! பிரணி! என்ன பண்ற விடு.” பூர்வா வயிற்றை மறைத்தவாறு அவளை தடுக்க முயற்சிக்க,
“பிரணிதா!” என அதட்டிய மற்றவர்கள் அவளை இழுத்திட, அதில் கோபமடைந்தவள் மேலும் வேகத்தை கூட்டிட,
அவளது அடியில், வயிற்றில் இருக்கும் பிள்ளைகளுக்கு ஏதாவது ஆகிவிட போகிறது, என பயந்த பூர்வாவிற்கு, ஒரு கட்டத்தில் அவள் அடித்த அடியில் வயிறு சுளிரென்று வலி எடுத்திட, முற்றிலும் பயந்தே போனவள்,
“பிரணிதா!” என்ற சத்தத்துடன் ஓங்கி அவளை அறைந்திருந்தாள். அவள் அறைந்த வேகத்தில் தள்ளி கீழே விழுந்திருந்தாள் பிரணிதா.
“ஆ…அம்மா!” வயிறு மேலும் வலித்ததில் பூர்வா கத்திவிட,
“பூர்வா என்னாச்சு.” அனைவரும் அவளிடம் வர,
“வயிறு வலிக்குதும்மா, பயமா இருக்கு. சீக்கிரம் ஹாஸ்பிட்டல் போய்டலாம்ம்மா..ஆ…” என அவள் வலியில் துடித்திட, அடுத்த நிமிடம் அவளை அழைத்துக் கொண்டு பெண்கள் அனைவரும் கிளம்பியவர்கள், இருந்த பயத்தில் பிரணிதாவை பார்க்கவில்லை ஒருவரும்.
ராகவனும் அவர்கள் பின்னே சென்றவன், பின் பிரணி தனியே இருப்பாளே என்ற மீண்டும் வீட்டினுள் சென்றிருந்தேன்.
இங்கே, நாத்திகள் இருவரரும் தத்தம் கணவன்மார்களுக்கு விசயத்தை தெரிவித்து, மருத்துவமனைக்கு வர சொல்லியிருந்தனர்.
ராகவன் வேகமாய் பிரணியிடம் செல்ல நெற்றியில் ரத்தம் வடிய அமர்ந்திருந்தவளை கண்டு அதிர்ந்தவன்,
“யுகா!” என்றபடி அவளருகே ஓடியிருந்தான்.
கீழே விழுந்த வேகத்தில், பிரணியின் நெற்றி அங்கிருந்து சுவற்றின் ஓரத்தில் வேகமாய் இடித்திருக்க, கூர்மையான இடத்தில் மோதியதில் நெற்றியில் காயம் ஏற்பட்டு, ரத்தம் வந்திருந்தது.
“என்ன யுகா இது இரத்தம், வா நம்மளும் ஹாஸ்பிட்டல் போகலாம் ”என அவன் பதறி அழைத்திட,
“அடிச்சிட்டாங்கள, என்னை அடிச்சிட்டாங்க, அப்போ அவுங்களேக்கு நான் முக்கியமில்லை தானே? எனக்கு இரத்தம் வருது, அதை கூடவே கவனிக்காம என்னை விட்டுட்டு அவுங்க பேபிஸ்தான் முக்கியம்னு போய்ட்டாங்கதானே, என் அம்மா போய்ட்டாங்க, என்னை அடிச்சிட்டு போய்ட்டாங்க. மணிப்பா இருந்திருந்தா என்னை அடிச்சிருப்பாங்களா?” என்றவள் தேம்பி தேம்பி அழுக, ஒன்றும் செய்ய முடியாமல் தவித்துப் போனான் ராகவன்.
அந்த நேரம், துரை வந்தவர் பிரணி இருந்த கோலத்தில் அதிர்ந்து போய்விட, அவரை கண்டவள்,
“மாமா!” என தாவி அவரை அணைத்தவள்,
“அம்மா, என்னை அடிச்சிட்டாங்க. என்னை வேண்டாம்னு கீழே தள்ளிட்டாங்க. எனக்கு இங்க யாரையுமே பிடிக்கலை மாமா. நான் இங்க இருக்க மாட்டேன், யாரும் வேண்டாம் எனக்கு, என்னை இங்கிருந்து கூட்டிட்டு போய்டுங்க.
எனக்கு பூ அப்பா வேணும். அப்பா வேணும் மாமா. என்னை கூட்டிட்டு போங்க.” என மீண்டும் அவள் வெறிபிடித்தவள் போல் கதறி துடித்திட,
அதில் பயந்து போனவர்,நடந்தது என்ன என்று தெரியாத போதும், பிரணியின் மனநிலையை உணர்ந்து, மேலும் அவளை தவிக்க விடாமல், அவளின் ஒற்றை வார்த்தைக்காக அங்கிருந்து அவளை அழைத்துக் கொண்டு சென்றிருந்தார்.
ராகவன் எவ்வளவு தடுத்தும், அவனை திரும்பியும் பாராது ஒருவித வீம்புடன் அங்கிருந்து சென்றிருந்தாள் அவள்.
துரை தான் ராகவனை சமாதானப்படுத்தி கிளம்பியிருந்தார்.
ராகவனிற்கு பிரணிதா சென்றதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. அவனும் அவளுடன் செல்ல முயல,
அவளின் கோபம் எல்லாம் அவனிடம் திரும்பியதில் பயந்து போன துரை, ராகவனை அங்கேயே இருக்குமாறு செய்துவிட்டு, மாணிக்கத்திற்கு அழைத்து விட்டிருந்தார்.
ஏற்கனவே, கவிதா மாணிக்கத்திற்கு அழைத்து அனைத்தையும் கூறியிருந்ததில் கலங்கி போயிருந்தவர், இப்போது துரை கூறியதை கேட்டு முற்றிலும் உடைந்துப் போய்விட்டிருந்தார்.
பிரணிதாவை பார்ப்பதா? இல்லை மனைவியை பார்ப்பதா? என தவித்தவரை, துரை தான் ஆறதல்படுத்தி பிரணிதாவை தான் பார்த்து கொள்வதாக கூற, சரியென்றவர் பூர்வாவை காண சென்றுவிட்டார்.
அங்கே, மருத்துவமனையில் பூர்வா நடந்த அத்தனையும் கூறிவிட்டிருந்தார்.
“கவனமா இருங்க மாட்டீங்களா? பொண்ணு அடிக்கிற வரை தடுக்காமா இருந்தீங்களா?” குடும்பத்தினரிடம் கடுமையாய் பேசிவிட்டே, ஸ்கேனிங்கிற்கு அழைத்து சென்றார்.
பூர்வா வரும் வரையில், அங்கே ஒருவருக்கும் உயிர் இல்லை, மாணிக்கமும் வந்துவிட்டிருந்தார்.
“குழந்தைங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை, அடிச்சுதுல வயிறு மேல சிவந்திருக்கு, அதுக்கு ஆயில்மெண்ட் தரேன். இனி கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க.” என மருத்துவர் கூறிய பிறகுதான் அனைவரது முகங்களும் தெளிந்தது.
பின்பு தான் அனைவருக்கும் பிரணியின் நினைவு வந்ததது,
“என்னங்க பிரணி!” என பூர்வா தான் அடித்துவிட்டதை உணர்ந்து பதறி கேட்டிட, மாணிக்கமும் மறையாமல் அனைத்தையும் சொல்லிவிட, அதிர்ந்து போனவர்,
“எனக்கு மதுரைக்கு போகணும்!” என,
“பூர்வா, இன்னைக்கு வேண்டாம். பிரணி கொஞ்சம் சரியாகட்டும். உடனே, போனா இன்னும் தான் கோப்படுவா, இரண்டு நாள் இதை ஆறப்போடுவோம்.” என்ற பவுனம்மாள் பேச்சை கேட்டவர்கள், இரண்டு நாட்கள் கழித்து அவளை அழைக்க செல்ல,
இவர்கள் முகத்தை கூட பார்க்க விரும்பாது அறைக்குள் அடைத்துக் கொள்ள, இவர்கள் எவ்வளவு கெஞ்சியும் மனம் இரங்கவில்லை அவள்.
மாணிக்கத்தின் விடாத அழைப்பு பிரணியை இளக்கினாலும், அன்று நடந்ததை எண்ணி இறுகிபோனாள்.
குடும்பத்தினர் அனைவரும் அவளை சமாதானம் செய்து அனுப்ப முயல,
“நான் அங்க போகமாட்டேன், போகமாட்டேன் மாமா. மீறி என்னை அனுப்புனிங்கன்னா, நானும் பூ அப்பா மாதிரியே செத்துப் போய்டுவேன்.” என மிரட்டியதில் அரண்டு போனவர்கள், அவளது விருப்பத்திற்கே வளைத்துக் கொடுத்திருந்தனர்.
மாணிக்கத்திற்கு பிரணியின் வார்த்தைகள் பயத்தை கொடுத்திட, அவளது விருப்பம் போல் அங்கேயே இருக்கட்டும் என கூறியிருக்க, அன்று முதல் அவள் விருப்பம் மட்டுமே அங்கே முதன்மையாக்கப்பட்டது.
சிறுபிள்ளை தானே சிறிது நாட்களில் வந்து விடுவாள், என நினைத்த அனைவருக்கும், அப்படி இல்லை என நிருபித்திருந்தாள்.
அவள் செய்த தவறு அப்போது இருந்த மனநிலையில் அவளிற்கு உரைக்கவில்லை, பதிலுக்கு குடும்பத்தினர் செய்தது தான் ஆழமாய் அவளுள் புதைந்துப் போயிருந்தது. அதன் வெளிப்பாடே அவளது இத்தனை வருட கோபமும், பிடிவாதமும்.
அன்று வீட்டை விட்டு சென்றவள், மீண்டும் வேலைக்காக தான் வந்தது.
**********************
கடந்தகால நினைவுகள் அனைத்தையும் ஒருவித வலியுடன் கடந்து வந்திருந்தனர்.
பிரணிதாவை அழைத்துக் கொண்டு நேரே ட்ராவல்ஸிற்கு தான் வந்திருந்தார் மாணிக்கம். உறக்கத்தில் இருந்து எழுந்தவள் எதுவும் பேசாது, நேரே பூவரசனின் அறைக்கு சென்றுவிட்டாள்.
மேஜையின் மீது படுத்து கொண்டிருந்தவளின் அருகே சென்றமர்ந்துக் கொண்ட மாணிக்கம், அவளை சிறிது நேரம் தொந்தரவு செய்யவில்லை.
பூவரசனின் நினைவுகளை தனக்குள் மொத்தமாய் அவள் நிறைத்து கொண்டிருந்த வேளை,
“பூக்குட்டி!” என்ற சத்தத்தில் விலுக்கென நிமிர்ந்து பார்க்க, கனிவாய் அவளை பார்த்தவாறு, இருந்த மாணிக்கத்தின் முகத்தில் ஒரு நொடி பூவரசனின் முகம் மின்னி மறைய, உறைந்துப் போனவள், விழயெடுக்காது அவரையே பார்க்க,
அவள் பார்வையை உணர்ந்து மாணிக்கம் மெல்ல அவள் தலைமுடியை வருடிவிட, அதன் ஸ்பரிசத்தில், உடைந்துப் போனவள்,
“மணிப்பா!” என்றவாறு அவரை அணைத்துக் கொண்டு கதறியிருந்தாள்.
“நீங்க ஏன்ப்பா என்னை பார்க்க வரலை? நான் வீட்டை விட்டு வந்த அன்னைக்கு. மணிப்பா இருந்திருந்தா என்னை அடிக்க விட்டிருப்பாரான்னு ராகவன் கிட்ட கேட்டேன் தெரியுமா? உங்களை நான் ரொம்ப தேடுனேன். மதுரைக்கு போனப்ப கூட என்னை தேடி வருவீங்கன்னு ரொம்ப எதிர்பார்த்தேன், ஆனா நீங்க வரவே இல்லை, இரண்டு நாள் கழிச்சு வரீங்க.
அப்போ உங்களுக்கு நான் அவ்வளவுதானா? உங்களுக்கும் நான் முக்கியமில்லையான்னு எவ்ளோ அழுதேன் தெரியுமா? அப்பறம் வந்தப்பறமும், நான் கோபத்துல பேசுனதும் திரும்ப என்னை விட்டு போய்டீங்க,
இதே உங்க பிள்ளையா இருந்திருந்தாலும், இப்புடிதான் விட்டு போயிருப்பீங்களான்னு உள்ளுக்குள்ளே புழுங்கினது யாருக்கும் தெரியவே இல்லை. அப்போ நான் சொன்னா விட்டுடுவீங்களா, என்னை அடிச்சாவது உங்க கூட கூட்டிட்டு போயிருக்கனும் தானே, நான் உங்க பொண்ணு தானே?
அப்பிடியில்லையா? எல்லார் மாதிரி நீங்களும், நான் உங்க ரத்தம் இல்லைன்னு தான் விட்டுட்டு போய்டீங்களா?
ஏன்ப்பா? ஏன்? நான் சொன்னேன் அங்கேயே இருக்க விட்டீங்க. ஏன் திரும்ப என்னை வந்து கூட்டிட்டு போகலை? உங்களுக்கு நான் வேண்டாம்னு தானே அர்த்தம்.” என அவள் மனதின் எதிர்பார்ப்பை கூற, கூற, அதிர்ந்துப் போனவருக்கு,
“அவ இஷ்டத்துக்கு, விருப்பத்துக்கு நீங்க விட்டிருக்க கூடாது மாமா!” என்ற ராகவனின் வார்த்தைகளே எதிரொலித்தன.
பிரணி விடாது மீண்டும் மீண்டும் அதையே புலம்பிட,
“தப்புத்தான்டா, அப்பா உன்னை விட்டிருக்க கூடாது, நீ மறுத்தாலும் அப்பா உன்னை கூட்டிட்டு போய்ருக்கனும். ரொம்ப பெரிய தப்பு பண்ணிட்டேன் டா, என் பொண்ணு விருப்பத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கிறேன்னு, உன் மனசு புரியாமப் போச்சு எனக்கு.
இந்த மணிப்பாவ மன்னிச்சிடுடா பூக்குட்டி. இனியும் என் பொண்ணை விடமாட்டேன் இது சத்தியம்டா. நீ கோவப்பட்டாலும் சரி, இனி உன்னை தனியா எப்பவும் விட மாட்டேன்டா, என் செல்லப் பொண்ணுல அழக்கூடாது.” என தேற்றியவரின் விழிகளில் நீர்ப்படலம்.
மெல்ல மெல்ல அவளது அழுகை குறைந்து விசும்பலாகிய நேரம், ராகவன் அழைத்து விட்டான்.
இங்கே மதுரையில் இருப்பதாக மாணிக்கம் தகவல் கூற,
“அவ அழுது முடிச்சதும், இங்கே கூட்டிட்டு வந்திடுங்க மாமா. கையோடு துரை சித்தப்பா வீட்டையும் கூட்டிட்டு வந்திடுங்க.
எனக்கும் பிரணிக்கும் கல்யாண தேதி குறிக்கனும்.” என்றவனின் வார்த்தையில் ஒரு நொடி திகைத்து குழம்பி பின் தெளிந்தவர்,
“நேரா கல்யாணம் தானா?” என சிரிப்புடன் வினவ,
“ஆமா மாமா, இனியும் அவளை தனியா விட முடியாது, உங்க மக ஒரு சரியாகாத பைத்தியம், எப்பனாலும் திரும்ப மதுரைக்கு பெட்டிய கட்டுவா, அதுக்குள்ள கல்யாணத்தை முடிச்சிடனும்.
அப்பறம் என் பொண்டாட்டியாகிட்டா, நான் சமாளிச்சுக்குவேன்.” என்றிட, மாணிக்கத்தின் தோள் வளைவில் இருந்தவளுக்கு அவன் பேசியது தெளிவாய் கேட்டிட, கடுப்புற்றவள்,
“யாருடா பைத்தியம்? நீ தான் பைத்தியம். நான் எப்போ உன்னை கல்யாணம் பண்ண ஒத்துக்கிட்டேன்? உன்னையெல்லாம் என்னால கல்யாணம் பண்ணிக்க முடியாது. மணிப்பா இந்த ராகவன நான் கல்யாணம் பண்ண மாட்டேன்.
வேற, நல்ல மாப்பிள்ளையா பாருங்க.” என இவள் கூற,
“ஆமாமா, இவளை கட்டிக்க ஆளுங்க வரிசைல நிக்கிறாங்க. எங்க? உங்கப்பா என்னை தவிர வேற மாப்பிள்ளை பாத்திடுவாரா?”
“பாப்பாரு, நீ எனக்கு வேண்டாம்.”
“நீ வேண்டாம்னு சொன்னதும் விட்டுருவேன் பாரு. ஒழுங்கா வாயை மூடிட்டு கெளம்பி வாடி. என்ன பேசுறதா இருந்தாலும், இங்க வந்து என்கிட்ட பேசு பாக்கலாம்.”
“பேசுவேனே! பேசுனா என்ன பண்ணுவீங்க?”
“நேர்ல வா, என்ன பண்ணுவேன்னு டெமோ காட்டுறேன். வெட்டியா பேசிட்டு இருக்காம வைடி போனை.” என அவன் அழைப்பை துண்டித்து விட்டிருக்க, போனை முறைத்துப் பார்ப்பதை தவிர வேறு வழியில்லாமல் போனது அவளிற்கு.