• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

கண்ணாமூச்சி 14

STN - 35

Member
கண்ணாமூச்சி 14:

ராகவன்‌- பிரணிதாவின் திருமண ஏற்பாடு கலைகட்டியது கிணத்துக்கடவில்.

ராகவன் சொன்னதுப்போல், துரையின் குடும்பத்தையும் அழைத்துக் கொண்டு வந்துவிட்டார் மாணிக்கம். அப்போதே‌ திருமண தேதியை‌ குறிக்க வேண்டும் என்றவனின் அலப்பறையில்,

“ராகவா, என்னதிது? ஜாதகம் பாக்கணும், பொண்ணு பாக்கனும், நிச்சயம் பண்ணனும், இன்னும் எவ்வளவோ சாங்கியங்கள் இருக்கு, அதையெல்லாம் பண்ண வேண்டாமா?” தங்கவேல் தனையனை அதட்டிட,

“அப்பா, இவளை தனியா வேற‌ இன்னொரு தடவை பார்க்கனுமா? இதோ இங்கன‌தானே இருக்கா, நான் நல்லா பாத்துட்டேன்.‌ எனக்கு பொண்ணு ஓகே, பொண்ணுக்கும் பையன் ஓகே. ஜாதகம் எல்லாம் எப்பவோ அம்மா பாத்திட்டாங்க.

இவுதான் எனக்குன்னு, எல்லாருக்கும் தெரியும்தானே, அப்பறம் தனியா வேற நிச்சயம் பண்ணனுமா?அதெல்லாம் முடியாது, நீங்க கல்யாண தேதிய குறிங்க மொதல்ல.” என வீட்டினரிடம் அவன் மல்லுக்கட்டி, கல்யாண தேதியை குறித்த பின் தான் ஓய்ந்தவன்,

வந்ததிலிருந்து, அவனிடம் சிக்காமல் ஆட்டம் காட்டிக் கொண்டிருந்த பிரணியை, அவளது அறையில் வைத்தே மடக்கி பிடித்திருந்தான்.

“போன்ல என்னுமோ சொன்னியே? இப்ப‌ சொல்லு பாப்போம்.” அவளை‌ சீண்டிட,

“ஏன்? எனக்கென்ன பயமா? எனக்கு இந்த பையன் வேண்டாம் வேற நல்ல பையனா பாக்கலாம்.” இதோ‌ சொல்லிவிட்டேனே என்ன செய்வாய்? என்ற பார்வையை அவனுக்கு கொடுக்க,

பதிலுக்கு சன்னமாய் சிரித்தவன், அவளருகே‌ நெருங்கி,
“என்ன செய்வேன்னு‌தானே கேட்கிற? கண்டிப்பா செய்வேன், அதை உன்னை மொத்தமா செய்யுறப்போ‌ தெரிஞ்சிப்ப.”அவள் பச்சைக்கல் பதித்த ஜிமிக்கியில் அழுத்தமாய் இதழ்களை‌ உரசவிட்டு, அவள் காதில் கிசுகிசுத்து விட்டு சென்றவனை கண்டு திகைத்து விழித்தாள்.

திருமணம் முடியும் வரை, பிரணிதாவை‌ மாணிக்கத்தின் வீட்டிலே இருக்க வைத்திருந்தனர். துரைகுடும்பம் மட்டும் அவ்வப்போது வந்து செல்ல, ஆகாஷீம் ஷர்மியும் இங்கேயே தங்கிவிட்டிருந்தனர்.


திருமண வேலைகளில் பூர்வா முன்னின்று அனைத்து வேலைகளையும் செய்திட, பிரணிதா எதுவும் தடுத்திடவில்லை.‌ இதைத்தான் அவள் மனம் எதிர்பார்த்ததோ?

நல்ல நாளில், அவர்களது கடையிலே‌ முகூர்த்தப்பட்டினை எடுத்திருந்தனர். ஆகாஷ் இருந்ததால் நன்றாகவே‌ பொழுது சென்றது பிரணிதாவிற்கு.

இன்னும் திருமணத்திற்கு ஒரு வாரமே இருந்தது, ராகவனிற்கும் நல்ல வேலை போல, அவள்‌ கண்ணிலே சிக்கவில்லை.

அன்றுதான் முகூர்த்தக்கால் ஊன்றி, பிரணதாவிற்கு கல்யாண வளையல் போட வந்திருந்தனர்.‌ முதலில் கடவுளை வணங்கிவிட்டு வளையல்காரார்‌ போட்டுவிட, அடுத்தடுத்து பெண்கள் அனைவரும் போட்டனர், பூர்வாவை தவிர.

அனைவரும் பூர்வாவை எதிர்நோக்க, பிரணியின் விழிகளும்‌ அவரை நோக்க,

அமைதியாக வந்தவர், அவளிற்கான வளையலை அணிவித்துவிட்டு நகர்ந்துக் கொள்ள, அவரது முகத்தையே வட்டமடித்தது பிரணியின் விழிகள்.

அவள் இங்க வீட்டிற்கு மீண்டும் வந்ததிலிருந்து, பூர்வா ஒருவார்த்தை கூட பிரணியிடம் பேசவில்லை. அவரது அமைதி பிரணியின் மனதை அரிக்க செய்தது.

அன்றைய பதின்ம வயதில் அவள் செய்த செயலின் வீரியம்‌ தெரியாமல் இருந்திருக்கலாம். ஆனால் வளர்ந்த பின்னும் அதனை உணராமல் இருந்திருப்பாளா? என்ன?.

ஆனாலும், ஒரு வீம்பு, பிடிவாதம்! என்னை‌ விட்டுவிட்டார்களே! என்ற‌ ஆதங்கம்! தான் முக்கியமில்லையா? என்ற‌ கோபம்! என‌ எல்லாம் அவள் மூளையை‌ ஆக்ரமித்தததில், தவறென உணர்ந்தும், வீம்புடனே இருந்துக் கொண்டாள்.

‘என்னை வேண்டாமென விட்டீர்கள் தானே! அப்போது நான் தவறை உணர்ந்தாலும் என்ன பயன்? என ஒருவித வீம்பு,

‘அவர்கள் பிள்ளையாய் இருந்தால், இப்படிதான் விட்டிருப்பார்களா?’ என ஒரு அழுத்தமான மனநிலை அவளிடம்.

‘என்னை வேண்டாமென இருப்பவர்கள், எனக்கும் வேண்டாம்.’ என்ற பிடிவாதத்தில் அப்படியே இருந்துக் கொண்டாள். அதிலும் அனைவரும்‌ அவளது‌ விருப்பத்திற்கே விட்டதில், அந்த பிடிவாதம் இன்னும் அதிகமாகியிருந்தது.

‘ஒருவேளை இவர்கள், என்னை வலுக்கட்டாயமாக அழைத்திருந்தாள், சென்றிருப்பேனோ? என்னவோ?’ என்ற கேள்வியை, அவளுக்கவளே கேட்டுக் கொள்ளாதா நாளில்லை.

இதோ, இப்போது கூட அவள் கண்முன்‌ சுற்றித்திரியும் இரட்டையர்களை‌ காணுகையில், அவள்‌‌ மனமே அவளை குத்துமே!

அவர்கள் ஆசையாய் அவளிடம் பேசி பழகிய நொடிகளில் எல்லாம்,
‘அய்யோ! இவர்களைதானே அன்று, அழிக்க இருந்தேன்.’ என அவள் மனம்‌ அலறியதை, அறிவார் யாரும் இல்லை.
ஆனாலும், அவளது‌ எண்ணத்தை வெளிக்காட்டாமல் இருந்துக் கொண்டவளுக்கு, இப்போதெல்லாம்‌ அப்படி இருக்க முடிவதில்லை.

இங்கு வந்த தினத்திலிருந்தே, அவள் மனம் மெல்ல மெல்ல கரைய‌ தொடங்கியது உண்மை.‌ அதை ஏற்கவும் முடியாமல், விலக்கவும் முடியாமல் அவள் இருந்த வேளையில்தான், பூர்வாவிடம்‌ கத்தி சண்டையிட்டு, அவள் மேலேறி வந்த தினம்தான் சுசியின்‌ கடிதமும்‌ சிக்கியிருந்தது.

எல்லாம் சேர்ந்து அவளை‌‌ ஒருவித அழுத்தத்தில் தள்ளியிருக்க, ராகவனின்‌ செயல் மேலும் அவளை அழுத்தமடைய செய்திருந்தது, அதன் வெளிப்பாடே அன்றைய அத்தனை ஆர்ப்பாட்டாங்களும்.

அவள் அழுத்தமடைகின்ற வேளையில், அவள் செய்யும் செயலின் வீரியத்தை, உணராமல் போய்விடுகிறாள்.

பூர்வாவை, அவள் நடத்திய விதம், அன்றும்‌ சரி, வருடங்களுக்கு‌ முன்பும் சரி‌‌ சரியில்லைதான், அதை தவறு‌ என்று உணருகிறாளும் கூட, இருந்தும் அதனை‌ ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்டிட, அவளுள்‌ எதுவோ ஒன்று‌ தடுத்துக் கொண்டிருந்தது.

மகளின் பார்வை தன்னை சுற்றுவது, பூர்வாவிற்கு தெரியாமல் இருக்குமா என்ன? ஆனால் அதை நினைத்து மகிழும் நிலையில்தான் அவர் இல்லை!

மாணிக்கித்தின் மூலம், அவளது மனதினை‌யும், அதிலுள்ள குமுறல்களையும் அறிந்தபின் எப்படி அவரால் மகிழ முடியும்?

அவள்‌ கூறியது போல், இரண்டு‌‌ அடி அடித்தாவது, அவளை இழுத்து வந்திருக்க வேண்டும் அல்லவா? அதைவிட்டு அவள் விருப்பத்திற்கு விட்டு, பெரிய‌‌ தவறை‌‌ அல்லவா செய்துவிட்டார்?

இதேது, நிரஞ்சனும், யாழினியும் இப்படி செய்திருந்தாள், விட்டுருப்பேனா? என‌ தினம்‌ தினம் அவரையே‌ குற்றவாளி ஆக்கிக் கொண்டிருக்கிறார்.

அவர் செல்ல மகளின் திருமணம், இனி வாழ்நாள் முழுவதும்‌ அவர் கண்முன்னே இருக்க போகிறாள், அந்த சந்தோசத்தை‌ அனுபவிக்க முடியாமல், குற்றவுணர்வு தடுக்கின்றது. ஆக, அந்த குற்றவுணர்வை தனது தண்டனையாக எடுத்துக்கொண்டு அமைதியாய் வலம் வருகிறார்.

அன்றைய இரவு உணவு முடிந்து, தோட்டத்தில் அமர்ந்திருந்தாள் பிரணிதா. சற்று முன் தான் ஆகாஷை வலுக்கட்டாயமாக உறங்குவதற்கு அனுப்பி வைத்திருந்தாள்.

ராகவனுடன் திருமணம் என்றதும் அவன் முகமே வாடி விட்டது.
“அப்போ, இனி நீ மதுரைக்கு வரமாட்டியா பிரணி? மூணு மாசத்துல வேலை முடிஞ்சு வந்திடுவேன்னுதானே சொன்ன.” என அவன் சோக கீதம் வாசித்திட, வீட்டினருக்கு ஒரே‌ சிரிப்பு.

அதில் ராகவன், ஆகாஷிடம் மல்லுக்கு நிற்க, ஆகாஷோ ராகவனை காணும் போதெல்லாம் முறைத்துக் கொண்டு சுற்றிக் கொண்டிருக்கிறான்.

ஆகாஷை பிரிவதை நினைக்கையில், உள்ளுக்குள்‌ பெரும் வலி எழாமல் இல்லை அவளிற்கு. ஆனால், இதையும் அவள் கடந்து தானே‌ ஆக வேண்டும்.

இரவின் குளுமையில், அவள் கையசைக்கும் போதெல்லாம், ஏற்படும் கண்ணாடி வளையலின் சத்தம் ஒருவித இன்ப‌ அவஸ்தையை அவளுள்‌ ஏற்படுத்தி கொண்டிருந்தது.

மெல்ல அதை வருடி‌விட்டவளின் முகம் எல்லாம் அத்தனை பூரிப்பு. கல்யாண பெண்ணிற்குரிய மினுமினுப்பு அவளது‌‌ முகத்தில். மனதிற்குரியவனை கரம் பிடிக்க போகின்ற மகிழ்வில், அகமும் புறமும் அத்தனை ஜொலிப்பு அவளிடத்தில்.

கல்யாணத்திற்கென போடப்பட்ட அந்த தேன்நிற‌ கண்ணாடி வளையலில் எப்போதும் அதீத பிடித்தம்‌ அவளிற்கு. முழங்கைக்கு சற்று கீழே வரை, போடப்பட்டிருந்த வளையல், உள்ளங்கையில் மருதாணி அச்சு, என அவளது‌ கைகளே அத்தனை‌ அழகாய் ஜொலித்தது.

தன்னையே மறந்து அவள் கைகளையே‌‌ பார்த்துக் கொண்டிருந்த‌‌ வேளை, அவள் தோளை‌ உரசியவாறு வந்தமர்ந்த ராகவன், அவள்‌ கழுத்தில் கையிட்டு‌ தன்னிடம் நெருக்கி‌ கொண்டான்.

ஆச்சர்யமாய் அவனை‌ திரும்பி பார்க்க,

“என்னவாம்‌ கல்யாண‌க் கனவா?” ஒற்றை‌ கண்ணை சிமிட்டி‌, அவன்‌ கேட்டிட, வெட்கப் பூக்கள் இவளிடம்.

எங்க, உன் வாலை காணோம்?” ஆகாஷை கேட்டிட, அதில் சிரித்தவள்,

“இப்போதான்‌ அனுப்பி விட்டேன்.”

“அதானே பாத்தேன், வில்லன காணமேன்னு.”

“சின்ன‌பையன் அவன்!”

“ஆமாமா, சின்னப் பையன்‌தான். அதான், மதுரையில‌ ஒரு மாப்பிளையை‌ பாக்க சொன்னான் பாரு.” என அவன்‌ நொடிக்க,

“அதான் பாக்கலையே, அப்பறம் என்ன?”

“உனக்கு ரொம்ப வருத்தம் போலயே!” முறைப்புடன் அவன் கேட்டிட,

“இல்லைன்னு சொல்ல மாட்டேன்.” என்றவள் அவன் முகம் போன போக்கில் சிரித்துவிட்டு,

“வேலை‌ எல்லாம்‌ முடிஞ்சா?”

“ம்ம், ஆல்மோஸ்ட் எல்லாம் முடிஞ்சது.”

“ஏன்? இவ்வளவு அவசரம்? கல்யாணத்துக்கு முன்னாடியே‌ முடிக்கனும்னு?”

“கல்யாணம் முடிஞ்சிட்டா,‌ மில்லை‌ சுத்தி வர‌ எல்லாம் நேரமிருக்காது.”

“ஏனாம்?”

“உன்னை‌ சுத்தி வரவே எனக்கு நேரம் பத்தாது, இதுல மில்லை‌‌ எங்குட்டு பாக்க?” அவனை‌ முறைக்கு முயன்று‌ தோற்றவள், வெட்கத்தில் முகம் திருப்பிக் கொண்டாள்.

“கைல என்ன? உந்து பாத்துட்டு இருந்தியே?”

“இன்னைக்கு தான் வளையல்‌‌ போட்டாங்க.” என‌ சிரிப்புடன்‌‌ இரண்டு‌ கைகளையும்‌ அவனை‌ நோக்கி‌ நீட்ட,

“பார்றா, இன்னைக்கே போட்டாங்களா.‌ ஆமா, இதென்ன மெஹந்தி போடாமா, மருதாணி‌ வச்சிருக்க. எனக்கு பிடிக்கும்னுதானே.”

“ம்ஹூம், இல்லையே.‌‌மெஹந்தினா‌ காய‌ லேட்டாகும்.‌ இது அப்பிடியில்ல, சீக்கிரம்‌ எடுத்திடலாம்.”அவள் உதட்டை‌ சுழிக்க,

“பொய்க்காரி!” என‌ திட்டியபடி,‌ தன் முன் இருந்த அவளது கைகளை‌ ஒன்றாய் பிடித்து, அதில் முகத்தை புதைத்து, மருதாணி வாசத்தை ஆழ்ந்து சுவாசிக்க,

அதில் கூசி சிலிர்த்தவள்,
“ராகவா!” என்றவளின் குரல் உள்ளிருந்து ஒலிக்க,

“ம்ம்” என்றவன் பதில் கொடுக்க,

“விடுங்க, கூசுது!”

வேண்டுமென்றே அவன் மீசைகள் உரச, உள்ளங்கையில் அழுந்த முத்தமிட, அவன் மீசையின் உராய்வில் அவஸ்தைக்குள்ளானவள்,

“ராகவா!” என அதட்டி, அவனிடமிருந்து‌ தனது கைகைளை உருவிட, சிரிப்புடன்‌ விட்டிருந்தான்.

அவளது கன்னத்தில், காதின் பின்புறம், கழுத்தில் இருந்த, பூனை‌முடிகள் எல்லாம் சிலிரித்துக் கொண்டு நின்றதில், தடுமாறிப்போனவன், கைநீட்டி அவற்றை வருடிவிட, தேகம் முழுதும் கூசி சிலிர்த்ததில்,

அவள் அவனின் கையை தட்டி விட முயல, வேகமாய் அவளை மீண்டும் கழுத்தோடு இழுத்து, தனக்கு நெருக்கமாக்கியவன், சிலிர்த்து நின்ற அவளது பூனை‌முடிகளுக்கு‌ தனது இதழ்‌ முத்தத்தால், மகுடம் சூட்ட ஆரம்பித்தான்.

இதனை‌ எதிர்பாராதவள்‌ கிறங்கி, “ராகவா!” என்றவளின் குரல் குழைந்து, தவித்து வர, அவளது குழைவில், கிறங்களில், மயங்கி சிறுசிறு‌ முத்தங்களை, அவள் முகமெங்கும்‌ ஒற்றி எடுத்தவனின்‌ விரல்கள், எல்லை மீற‌‌ துடித்திட,

அவன் இதழ்களோ, அவள்‌ இதழ்களுக்கு நெருக்கமான‌ வேளை, அதற்குமேல் அவனை அனுமதியாது, பலம்‌கொண்டு அவனை‌‌ தள்ளிவிட்டு வீட்டினுள் ஓடியிருந்தாள் பிரணிதா.

எட்டி அவளை பிடிக்க முயன்ற, கைகளை கட்டுப்படுத்தி‌ தலைகோதியவனுக்கு, சிறிது நேரம் எடுத்தது அதிலிருந்து வெளிவர,

அவன் தீண்டிய மென்மைகள், அவனுள் வெட்கத்தை‌ தருவிக்க, உல்லாச சிரிப்புடன் எழுந்து சென்றுவிட்டான்.

அன்றைய‌ இரவிற்கு பிறகு, பிரணிதா அவன்‌ கண்ணில் சிக்கவே இல்லை.‌ கல்யாண பரபரப்பு இருவீட்டினரையும் பற்றிக் கொள்ள, அனைவரும் உற்சாகத்துடன் சுற்றி வந்தனர். ஒருவாரம் சடுதியில் மறைந்து, நாளை‌ திருமணம் என்றதில் வந்து நின்றது.

திருமணத்திற்கு முதல்நாள், ஒப்புதாம்பூலம் மாற்றப்பட்டு, நிச்சயம் முடிந்திருந்தது. அன்றைய நாளின் இனிமையுடன், அனைவரும் உறங்கியிருக்க.

இங்கே, தமிழ்செல்வனிற்கு சுசியின்‌ கேஸில், ஐஸ்வர்யாவை பற்றிய துருப்பு சீட்டு கிடைத்திருந்தது.

அதன் விளைவு அடுத்த நாள்‌, பிரணிதா அவன் முன் குற்றவாளியாய் நின்றிருக்க, அவளது கணவனாகியிருந்த ராகவனும் சந்தேக வட்டத்திற்குள் விழுந்திருந்தான்.

தமிழ்ச்செல்வன் கேட்ட ஒவ்வொரு‌ கேள்
வியிலும், இறுகிப் போன ராகவனின் விழிகள், பிரணிதாவை குற்றம் சாட்டிட, தன்னால் கணவனுக்கு ஏற்பட்ட அவமானத்தில் தவித்து கலங்கி போனாள் யுகபிரணிதா.




















 
Top Bottom