• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

கண்ணாமூச்சி 17

STN - 35

Member
கண்ணாமூச்சி 17:

புதுமண தம்பதிகளுக்கு நேரம் இறக்கை கட்டிக் கொண்டு பறந்தது. கோவில், பூஜை, விருந்து என சுற்றுப்பயணத்திலே இருந்தனர்.

மதுரைக்கு சென்றவர்கள், ஒருவாரம் இருந்துவிட்டு அங்கிருந்தே மூணாறு சென்றிருந்தனர். ராகவனின் மோகத்திலும், அன்பிலும், காதலிலும் பிரணிதா முக்குளித்து எழுந்தாள்.

பனிமூடிய அந்த அதிகாலை வேளை, சில்லென்ற முகத்தில் வந்து மோதிய குளிர் காற்றில், சிலிர்ப்புடன் நின்றிருந்தான் ராகவன். அவர்கள்‌ தங்கியிருந்த காட்டேஜ்ஜின் பால்கனியில் நின்றிருந்தவனின் இதழ்கள் அழகிய புன்னகையை தாங்கியிருந்தது.

எல்லாம் அவனது மனையாளை நினைத்து தான். உள்ளே உறக்கத்தில் இருக்கிறாள், இவன்தானே காரணம்!

ஆழ்கடலில் முத்து எடுப்பது போல், அனுதினமும் அவளுள் மூழ்கி முத்தெடுத்துப்பதுதான் அவன் வேலையே! இதோ, இப்போதும் முத்து எடுத்து களைப்படைய செய்து அவளை உறங்கி போக வைத்தவன்,

அவளருகே இருந்தால், மீண்டும் மோகம் முக்குளிப்பதை அறிந்து, சற்றே ஓய்வு கொடுத்துவிட்டு இங்கு வந்து நிற்கிறான்.இங்கு வந்தும் மனையாளின் எண்ணம் தான் முழுவதும்.

காதலை சொல்லிக்கொள்ளாமலே ஒரு திருமணம், காதலை மிஞ்சிவிடும் அளவு தித்திப்பான‌ ஒரு வாழ்க்கை.

பிரணிதா வீட்டை விட்டு சென்றபோது, பதறி, பயந்தவனிற்கு வளர்ந்த பின் இம்மியளவு கூட பயம் என்பது இல்லை.
என்றைக்கு இருந்தாலும், அவள் அவனுடையவள், என்ற திண்ணக்கம் அவனிடம் அதிகமே இருந்தது.

அவனின்‌ உரிமை, கடமை‌ அவள்! அதை‌ விட்டுக்கொடுப்பானா என்ன? எப்போதும் அவளிடம் அவனிற்கு எல்லை என்பதே இல்லை. அந்த எல்லையை அவளும் வகுத்திடவில்லை.

எப்போதும், அவனது மனைவி அவள் என்ற வகையில் தான் அவனது செயல் எல்லாம் இருக்கும் வளர்ந்தபின். கணவன் - மனைவிக்கான உரிமை தான் அவள்மேல் அவனிற்கு.

மற்றவர்களை போல், அவளது விருப்பத்திற்கு என்றும் தலையாட்டுபவன் கிடையாது இவன். அவளை‌ அதட்டி அவன் வழிக்கு தான் வர வைப்பானே தவிர, அவளது பிடிவாதத்திற்கு என்றும் துணை போக மாட்டான்.

கொலுசின் ஒலி சிங்காரமாய் கேட்டிட, அவள் புரண்டு படுப்பது, திரும்பி பாராமலே தெரிந்தது அவனிற்கு.

கொலுசின் ஒலி அதிகமாக, அவள்‌ உறக்கம் கலைவது புரிந்தது, அடுத்து வரும்‌ வார்த்தைக்காக அவன் காத்திருக்க,

உறக்கம் கலைந்தவள், அருகே அவன் இல்லை என்றதும்,
“ராகவா!” என்றழைக்க,

அந்த அழைப்பிற்காகவே காத்திருந்தவனின் இதழ்கள் சிரிப்பில் துடித்தன. அவள் வாயால் அந்த ராகவனை கேட்பதில் அத்தனை பிடித்தம் அவனிற்கு. அதை‌‌ நேரிடையாக அவளிடம் சொல்லாமல், அவளை அழைக்க வைத்து‌ திருப்தி பட்டுக் கொள்வான்.

இன்னும் சொல்லப்போனால், அந்த “ராகவா!” வில் ஒருவித மயக்கம் இவனிற்கு. அந்த அழைப்பே அத்தனை‌ போதையேற்றும் அவனை.

அவர்களது நெருக்கமான நேரத்தில், அவளை அடிக்கடி அவன் பேரை சொல்ல வைத்து, இன்னும் இன்னும் போதையேறி அவளுள் மூழ்கிப் போவான். அவன் கள்ளத்தனத்தை இன்னும் கண்டுக்கொள்ளவில்லை அவள்.

அவளருகே அவன் இல்லாத சமயங்களில் அவளிடம் இருந்து வரும் முதல் வார்த்தை “ராகவா!” இதுவாக தான் இருக்கும்.

இதோ இப்போதும், அவன் பெயரை சொல்லி அழைத்துக் கொண்டு தான் வருகிறாள்.

“ராகவா!” என்றபடி அவனருகே வந்தவளை, கண்டவனின் விழிகள் கூச்சமே இல்லாத அவளை‌ முழுவதும் வருடியது.

அவன் விழிகளின் தாக்குதலில் இவளிற்கு கூச்சம் உண்டாக,

“ராகவா!” என‌ சிணுங்கியபடி அவனை‌ ஒட்டி நிற்க, அவள் இடையை வளைத்து, தனக்கு நெருங்கமாக்கியவனின் மறு கை, அவள் கழுத்தோடு கைவிட்டு இழுத்து, தனது முகத்தின் மீது அவள் முகத்தை மோதவிட்டவனின் இதழ்கள் ஒருவித வேகத்துடன் அவள் முகமெங்கும் பதிந்தது.

“ம்ம் ராகவா!” என்றவளின் சிணுங்கல் மேலும் அவனிற்கு மயக்கத்தை கொடுக்க, அவள் இதழ்களை மோகத்துடன் சிறை செய்திருந்தான்.

அவள் கழுத்தை பிடித்திருந்தவனின் அழுத்தமான பிடி அவளிற்கு வலியை‌ கொடுக்க, மெல்ல அவன் கையின் மீது வருடிவிட, அவன் பிடி லேசாய் இளகியது.

முகத்தோடு முகம் புதைத்து, வேகத்துடன் முத்தமிட்டவனின் இதழ்கள் மெல்ல வேகத்தை குறைத்து, அவள் இதழ்களில் இருந்து விலகி, கழுத்தின் சரணடைந்தது.

அவனின் அழுத்தமான பிடியில் சிவந்துப் போயிருந்த இடத்தில், அழுந்த முத்தமிட்டவனின் மீசை முடிகள் குத்தி, இன்னும் சிவந்துப்‌ போனது அந்த இடம்.

தேகத்தில் எல்லை மீறி சென்ற அவன் விரல்களுக்கு தடை விதித்தவாரே அவனில் ஒன்றி‌, மயங்கி அவள் நின்றிருக்க, தடைவிதித்த அவள் கைகளை பின்னோடு வளைத்து பிடித்தது அவன் கரம்.

இனி தடையில்லை என்ற மகிழ்ச்சியில் அவனின் மறு கரங்கள், அழுத்தமாய் அவன் தேகம் எங்கும் ஊர்வலம் சென்று, சில அழகான, அபாயகரமான வளைவுகளில் தொட்டு மீண்டதில், வெட்கத்தில் துடிதுடித்துப் போனவளின் இதழ்கள் விடாது, “ராகவா!” என முணுமுணுத்திட, அதில் கள்ளப்புன்னகை‌ புரிந்தவன், ஜமிக்கியோடு சேர்த்து அவள் செவிகளில் அழுந்த முத்தமிட்டு விலகியவன்,

அவன் செயல்களில் சிவந்து போய் துவண்டு நின்றவளை கண்டு, கண்சிமிட்டி குறும்பு புன்னகை செய்து,

“உனக்கு ஒரு சர்ப்ரைஸ், வெளியே போகலாம். சீக்கிரம் ரெடியாகனும் வா.” என்றபடி, அவளை இழுத்துக் கொண்டு குளியலறைக்குள் நுழைந்திருந்தான்.

காலை உணவை முடித்துக் கொண்டு, வெளியே சென்றனர். வளைவுகளில் ஏறி இறங்கியவன், அவன் வர வேண்டிய இடம் வந்ததும் காரை நிறுத்தி இறங்கி, அவளையும் இறங்க வைத்தவன், அவள் விழிகளில் மெல்லிய துணியை கட்டிட, சிரிப்புடன் நின்றிருந்தாள்.

மெல்ல அவளை அழைத்துக் கொண்டு சென்றவன், ஒரு இடத்தில் நிப்பாட்டி, விசம புன்னகையுடன் அவள் துணியை கழட்டிட, ஆர்வமாய் விழிகளை திறந்தவள், அடுத்த நிமிடம் அலறலுடன் ஓட்டமெடுக்க,

நொடியில் அவளை வளைத்து பிடித்தவன், குண்டுக்கட்டாய்‌ தூக்கி கொள்ள,

“ராகவா! நோ! நோ! ப்ளீஸ்.‌நான் வரமாட்டேன் விடு விடு.‌” என‌ அவனிடமிருந்து திமிறி விலகிட,

“அதெல்லாம் முடியாது, நீ வரணும். என்னோட ரொம்ப நாள் ஆசை இது தெரியுமா.” என்றபடி அவன் சென்று அவளை நிறுத்திய இடம்,
“ஜிப்ஃலைன்.” (Zipline).

பிரணிதாவிற்கு இந்த உயரங்கள் தான் அதிக பயத்தை தரக் கூடியது. இதுவரை ஒரு ராட்டினத்தில் கூட ஏறியிராதவளை இங்கே அழைத்து வந்திருப்பவனை என்ன சொல்ல?

“ராகவா! போ, என்னால முடியாது. எனக்கு ஹைட் பயம்னு உனக்கு தெரியாதா?” என கெஞ்சியவளை, கண்டு சிரிப்பு வர,

“என்னோட ரொம்ப நாள் ஆசை இது, உன்னோட வரனும்னு.”

“அதுக்கு, என்னை சாக சொல்றியா?”

“ஹேய், லூசே, இதுக்கெல்லாம் சாக மாட்டாடி, ரெண்டு பேரும் சேர்ந்து தான் போறோம். உனக்கு பின்னாடி உன்னை பிடிச்சிட்டு நான் இருப்பேன்.”

“எனக்கு பயமாயிருக்கு. பாரு இப்பவே கை நடுங்குது.” நடுங்கும் விரல்களை அவனிற்கு காட்டிட, அதில் அழுந்த முத்தமிட்டவன்,

“நான் இருக்கும்போது என்ன பயம் யுகா உனக்கு? அவ்ளோ கேர்லஸ்ஸா விட்டுருவேனா உன்னை? பயப்படாமா என்னை இறுக்கி புடிச்சிக்கோ.” என பேசி பேசியே அவளை சம்மதிக்க வைத்திருந்தான்.

இருவருக்குமான சேஃப்டி உபகரணங்கள் அனைத்தும் மாட்டப்பட்டது, கஃப்புல்ஸ் ஜிப்லைனை தான் அவர்கள் தேர்ந்தெடுத்திருந்தனர்.

ஒரே கயிற்றில், இருவருது கொக்கிகளும் மாட்டப்பட்டது, பிரணி முன்னிருக்க, பின்னே அவளை இறுக்கி அணைத்தவாறு ராகவன். மெல்ல கயிறு நகரத் தொடங்கியதுமே பிரணிதா கண்களை இறுக மூடிக் கொண்டாள்.

அடிவயிற்றில் பெரிதாக எதுவோ ஒன்று உருண்டதில், அவள் மேனி நடுங்கிட, அதனை உணர்ந்து அவளை இன்னும் இறுக்கி கொண்டவன்,

“யுகா!” என அவள் செவிகளில் முத்தமிட்டு அழைக்க,

“ம்ம்ம்!”

“கண்ணைத் தொறடி.”

“ம்ஹீம்!”

“யுகா ப்ளீஸ்!” என்றபடி மேலும் அவன் முத்த, மெல்ல அவள் விழிகளை திறந்த நேரம், தாழ்வான பகுதியை நோக்கி கயிறு வேகமாய் இறங்கிட,
“ஆ..ஆஆஆ” வென அலறி மீண்டும் அவள் கண்களை மூடிக் கொள்ள,

“ப்ச் யுகா!” என மெல்ல அவன் அதட்டிட,

“முடியாது, நான் திறக்க மாட்டேன். எனக்கு பயமாயிருக்கு.”

“என்னை பாருடி! உன்னை யாரு கீழே பாக்க சொன்னது?” என்றபடி அவள் கன்னத்தினை பற்றி திருப்பி அவன் கேட்டிட,

அப்போதும் அவள் மறுத்திட,

“பாரு யுகா” என வம்பு செய்து அவளை பார்க்க வைத்தான். இருவரது விழிகளும் உரசிக் கொண்டு நொடி,

“ராகவா!, சொல்லுடி!” என முகத்தோடு அவன் புதைய,

“என்ன?” புரியாமல் அவள் விழித்திட,

“என் பேரை சொல்லுடி! யுகா, ப்ளீஸ்” என்றவனின் குரலில் இருந்த மயக்கம் அவளையும் தொற்றிக் கொள்ள, சிறு சிரிப்புடன்,

“ராகவா!” என்றிட, அடுத்த நொடி அவள் இதழ்களுக்குள் அழுந்த பதிந்திருந்தான்.

ஒருவித அதிர்வில், அவள் விழிகள் விரிந்து, பின் மெல்ல மூடிட, அதனை அழகாய் தனது போனில் விதவிதமாய் படம் பிடித்துக் கொண்டான்.

கீழே இறங்கும் இடம் வரவும், அவள் இதழ்களை விடுவித்தவனின் முகம் பிராகாசித்துக் கிடக்க, அவள் முகம், சிவந்துப் போயிருந்தது. அடுத்தடுத்து மேலும் இரண்டு அட்வென்ஜர் விளையாட்டை ஏற வைத்தே, அவளை விட்டான்.

திகட்ட திகட்ட தேனிலாவை முடித்து கொண்டு அவர்கள் வீடு திரும்பி இரு வாரங்கள் மேலனாது. திருமணத்திற்கென அதிக விடுப்பு எடுத்திருந்தவள், அதிகளவு ஒர்க் ஃப்ரமையும் வாங்கியிருந்ததில், இனி அலுவலகம் வந்தே தீர வேண்டும் என அவளிற்கு மெயில் வந்துவிட, அலுவலகம் சென்று வர ஆரம்பித்திருந்தாள்.

வீட்டில் அவள் இருக்கும் நேரத்தில், ராகவனும் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுவாள். காலை வேலைக்கு சென்று, மாலை திரும்புவளின் அடுத்த நேரம் நிரஞ்சனுடனும், யாழியுடனுமே கழியும்.

இரவு உணவை தனது பொறுப்பாக்கி கொண்டாள். கவிதா அவளிற்கு தேவையான மேல் வேலைகளை மட்டும் செய்துவிட்டு ஒதுங்கி கொள்ளுவார்.

மாமியார் மருமகள் உறவு, ஒருவித ரயில் வேகத்துடன் தான் சென்றுக் கொண்டிருக்கிறது. கவிதாவின் மேல் தான் கொண்ட கோபம் அர்த்தமற்றது என்பதை அவள் உணர்ந்தாலும், உடனடியாக அவரிடம் ஒட்டி உறவாட அவளிற்கு வரவில்லை. அதற்காக விலகியும் இல்லை, ராகவனை மனதில் கொண்டு, அவள் நடந்தவற்றை மறந்துவிட்டு மெல்ல இயல்பாக பேச ஆரம்பித்திருந்தாள்.

கவிதாவும் மன்னிப்பு கேட்கிறேன் என எதையும் செய்து, பழையதை கிளற விருப்பமில்லை.

அவளை வற்புறத்தவும் இல்லை, அவளின் போக்கிற்கே சென்று, இயல்பான உறவு நிலையை ஏற்படுத்திக் கொண்டார்.

வாரம் தவறாமல் மதுரை சென்றுவிடுவாள், அவள் செல்ல முடியாத வேளை, துரை குடும்பத்துடன் வந்துவிடுவார்.

காலை, கணவனின் சில்மிசத்துடன் தொடங்கும் அவளது நாள், மாணிக்கத்துடன் தோட்டத்தில் நடை பயின்று, அலுவலகம் சென்று, மாலை பிள்ளைகளுடன் செலவழித்து, இரவு மீண்டும் கணவனின் கைகளுக்குள் சுருண்டு கொள்ள, என அவளின் நாட்கள் அழகாய் சென்றது.

கணவன் - மனைவிக்கு இடையே சண்டைகள் நிறையவே வந்தது. மாணிக்கம் இருக்கும் தைரியத்தில் வீம்பு பிடித்து, சண்டை இடுபவளின் பிடிவாதம், இரவு கணவனின் முன்னே தவிடு பொடியாகி விடும்.

காலையில் அதிக வாய் சண்டை போடுபவனே, இரவில் அதிக முத்த சண்டையையும் துவங்கியிருப்பான்.

இடையில் சுசி கேஸ் பற்றியும் ராகவன் விசாரித்துக் கொள்வான், பிரணிதாவும் இரண்டு முறை விசாரணைக்கு அழைக்கப்பட்டு சென்று வந்தாள்.

கிட்டதட்ட குற்றவாளியை நெருங்கி விட்டதாக தமிழ்செல்வனிடம் இருந்து, தகவல் வந்தது. இனி அவன் பார்த்துக் கொள்வான் என்று நம்பிக்கையில் இவர்கள் பயமின்றி இருந்தனர்.
 
Top Bottom