கண்ணாமூச்சி 4

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

STN - 35

Member
Nov 21, 2019
34
91
18
Dindigul
கண்ணாமூச்சி 4:

அலாரம் அடிக்க, அதனை நிறுத்திவிட்டு எழுந்த பிரணிதாவின் அன்றைய நாள்‌ தொடங்கியது. அலாரத்துடன் சேர்த்து வந்தது ராகவனின் மெசேஜ். வழக்கம்போல் குட்மார்னிங் தான், பார்த்தவள் பதில் அளிக்கவில்லை.
அடுத்தடுத்து விடாது மெசேஜ் வர, பதில் அனுப்பாமல் விட மாட்டான் என்பது புரிய,
“ம்ம்” என்றுவிட்டு ஆப்லைன் சென்றுவிட்டாள். அவள் செய்வது சரியல்ல என தெரிகிறது,

வேண்டாம், வேண்டாம்‌ என மூளை அறிவுறுத்தி அவர்களை விலக்கி நிறுத்தினாலும், அவனை‌ நேரில் கண்டுவிட்டால், அவளது கோபமும், வீம்பும் உடைந்துப் போவது உண்மை.

அதை ஏற்றுக்கொள்ள அறிவு மறுத்தாலும், மனம் அந்த மாற்றத்தை, அவனை விரும்புவது உண்மை.

தூர இருந்தப் போது, இழுத்துப் பிடித்து வைத்த இத்தனை வருட கோபமும், பிடிவாதமும், இங்கு வந்த நொடியில் இருந்து மெல்ல மெல்ல உடைவதை அவள்‌ உணர்ந்தே தான் இருக்கிறாள்.
அதனை‌ உடையாமல் முன்பு போல் அவளால் இறுக்கிப் பிடித்திட‌ முடியுமா? என்ற‌ பயம் எழ ஆரம்பித்து விட்டது உண்மை. இந்த மூன்று வார‌ காலமாக
ராகவன் இன்றி அவளது நாள் முற்றுப்பெற்றதில்லை.

அன்றைய நாள் மட்டும் வந்த மாணிக்கம், அதன்பின் வரவில்லை.‌ஆனால் வார இறுதியில் குடும்பமே வந்தது. இவள் பேசவில்லை என்றாலும், அவர்கள் இவளை விடவில்லை.

சிலசமயம் சுருக்கென்று இவள் வார்த்தைகளை விட்டாலும், அதனை கண்டுக்‌ கொள்ளவில்லை அவர்கள்.
வந்தவர்களை பார்க்காமல் அவமானப்படுத்தி அனுப்பவும் அவள் மனம் இடம் கொடுங்கவில்லை. அவர்களை கஷ்டப்படுத்த நினைக்கும் போதெல்லாம் உள்ளே ஒரு வலி தோன்றவதை தவிர்க்க முடியவில்லை அவளால்.

அவர்களது நினைவுகள் அலையாய் அவளை ஆக்ரமிக்க, தலையை உதறி அதிலிருந்து விடுபட்டடவள், அருகில் இருக்கும் கட்டிலை பார்க்க, ஒரு உருவம் தலை முதல் கால் வரை போர்த்தி படுத்திருந்தது.

அது வேறு யாருமல்ல பிரணிதாவின் ரூம்மேட் சுசிலா தான்.

சுசிலா இப்போதைக்கு எழுந்துக் கொள்ள மாட்டாள் என்பதை உணர்ந்தவள், எழுந்து தனது வேலைகளை துவங்கினாள்.
விளையாட்டு போல் இருக்கிறது, அவள் இங்கு வந்து வாரங்கள் ஓடியிருந்தது.

தனது காலை கடன்களை எல்லாம் முடித்து, குளித்து அவள் வெளிவந்த பின்னும் சுசிலா எழவில்லை.

“சுசி, எந்திரிடா டைம் ஆகிடுச்சு.”

“ம்ம்ம் க்கா” என்றபடி புரண்டு‌ படுத்தவளின் குரல் குளறியபடி வந்தது. தூக்க கலக்கமாய் இருக்கும் என நினைத்தாள் பிரணிதா.

இப்போதைக்கு அவள் வரமாட்டாள், என்பதை அறிந்த பிரணி கீழே உணவு கூடத்திற்கு சென்றாள்.

அங்கிருந்த சில நட்புக்கள் புன்னகைக்க, தானும் புன்னகைத்துவிட்டு தனக்கான டீயை‌ எடுத்துக் கொண்டாள். இந்த ஒரு பத்து நிமிடங்கள் தான் அவளிற்கான நேரம்.

இப்போது அவளது சிந்தனை‌ முழுவதையும் ஆக்ரமித்தது சுசிலா.‌ ஆரம்பத்தில் இருந்தே, சுசியின் நடவடிக்கை சற்று வித்தியாசமாக தான் தோன்றியது அவளிற்கு. இதுவரை அவள் காலை சாப்பாட்டை உண்டு அவள் கண்டதில்லை, வேலை விட்டு வந்தாலும், அறைக்குள்ளேயே தான் அடங்கிருக்கிறாள்.

விடுமுறை நாளில் கூட அறையை விட்டு அவள் வந்திருக்கவில்லை‌. இதை பற்றி சரசம்மாவிடம் அவள் விசாரித்ததில், அவள் ஆரம்பத்தில் இருந்தே அப்படிதான் என முடித்து விட்டார்.

இதற்கு முன் அந்த அறையில், குஜராத்தி பெண் தங்கியிருந்ததாகவும், அவளுடன் சுசிலா நல்ல நெருக்கம் என்றும் தெரிய வந்திருந்தது.

அதனையும் விட, கடந்த ஒரு வாரமாக சுசிலா இரவில் தூங்காமல், அவளை பார்ப்பதும், சுவற்றை பார்ப்பதுமாக இருப்பதை கண்டு‌ திகைத்து தான் போனாள்.

ஆரம்பத்தில், தூக்கம் வராமல் இருக்கும் என நினைத்து அலட்சியம் செய்தவளுக்கு, தொடர்ந்து அவள் தூங்காமல் இருப்பதை கண்டு உள்ளுற சிறு பயம் அவளை கவ்விப் பிடித்தது உண்மை.

“என்னாச்சு சுசி? தூக்கம் வரலையா?” ஒரு நாள் இரவில், பிரணிதா கேட்டுவிட,

பிடிபட்ட பாவனையில் விதிர்த்தவள்,
“ஆ..ஆமாக்கா!” என‌ திணறியவள், அடுத்த ஒரு இரண்டு நாட்களுக்கு பார்க்கவில்லை பிரணிதாவை. ஆனால் மூன்றாம் நாளிலிருந்து மீண்டும் அவளது பார்வைகள் உறுத்த ஆரம்பித்தன பிரணியை. இருந்தும் சிறு பெண் வீட்டினருக்கு ஏங்குவாள் போல் என நினைத்து அதனை கடந்து விட்டாள்.

“பிரணிதா, உனக்கு விசிட்டர்ஸ் வந்திருக்காங்க.” என்ற‌ குரலில் பல்லை கடித்தவள்,
‘என்ன இப்பவே வந்துட்டாங்க!’ என நினைக்கும் போதே, அவள் மொபைலில் குறுஞ்செய்தி வந்து விழ,
ராகவன் தான்.

“மல்லி , மல்லி குண்டுமல்லி” அவள் பி.ஜி வரவேற்பறையில் நிற்பது போல் போட்டோ வர, சட்டென‌ எழுந்துக் வெளியே சென்றிருந்தாள்.

‘இதே வேலையாப் போச்சு’ முணுமுணுப்புடன் அவனை தேடி செல்ல,
தலையின் மீது கூலருடன், காரின் மீது சாய்ந்து நின்றவாறு போகின்ற, வருகின்ற பெண்களின் மீது பார்வையை செலுத்தியவாறு நின்றவனின், பார்வை கண்டு கடுப்படைந்த பிரணி, வேகமாய் அவன் முன்னே‌ சென்று நிற்க,

“ப்ச், அட தள்ளு குண்டு மல்லி” வேகமாய் அவளை நகர சொன்னவனின் பார்வை பின்னால் அலைப்பாய, அவளும் திரும்பி பார்க்க அந்த பி.ஜியில் தங்கிருந்த இருவர் உள்ளே‌ சென்றுக் கொண்டிருந்தனர்.

“ஆமா, அவுங்க பேர் என்ன?” என்றவனின் பேச்சிலும், பார்வையிலும் அவளிற்கு சுறுசுறுவென ஏறியது.

“தெரியாது!” வெடுக்கென வந்தது பதில்.

“அட, ஒரே இடத்துலே இருக்கிற பேர் தெரிஞ்சு வச்சிக்க மாட்டீயாடி!” என்றவனை பஸ்பமாக்கினாள்.

“ப்ச், என்ன வேணும் இப்போ?”

“ஒண்ணும் வேண்டாம், வேலை விசயமா திருச்சி வரை போறேன். இரண்டு நாளைக்கு உன்னை பாக்க முடியாது, அதான் சொல்லிட்டுப் போகலாம்னு வந்தேன்.”

“ம்ம்ம்” என்றவளின் விழிகள், மாணிக்கம் எங்கேனும் தென்படுகிறாரா? என சுற்றிலும் தேட,

“நான் மட்டும் தான் போறேன்.” அவளை உணர்ந்து பதிலளித்தவன்,
“சரி பாத்துக்கோ, ஏதாச்சும்னா உடனே கூப்பிடு.” என்றபடி காரில் ஏறப்போக, அவனுடன் இவளும்‌ வெளியே வந்தாள்.

“பிரணி, அந்த பொண்ணு உன் ரூம்மெட் தான? ஏன் இப்புடி உட்காந்திருக்கு.” ராகவன் சுட்டிய காட்டிய திசையில் இவளும் மேலே பார்க்க, அவர்கள் அறை ஜன்னலில் கண்கள் சிவக்க, தலைவிரிக் கோலமாய் இவளை வெறித்தவாறு அமர்ந்திருந்த சுசி, இவர்களின் பார்வை கண்டதும், அங்கிருந்து நகர்ந்திருந்தாள்.

“ஆமா, சுசி தான். டெய்லியும் இப்புடிதான் இருக்கா, நைட்ல தூங்காம இருக்கா.” பிரணிதாவின் பேச்சில் ராகவன் புருவம் சுருங்கிட,

“ஏன்?”

“தெரியலை, கேட்டாலும் சரியான பதில் இல்லை, ஒரளவுக்கு மேல நானும் கேட்டுக்கலை, விட்டுடேன்.”

“சரி விடு, நமக்கெதுக்கு இந்த வம்பு? நீ பாத்துக்கோ கவனம் சரியா.‌நான் கிளம்புறேன்.” அவனை வழியனுப்பி விட்டு உள்ளே வந்தவள், டிபன் வந்துவிடவும் உண்டவள், சுசிலாவிற்கும் எடுத்துக் கொண்டு சென்றிருந்தாள்.

“சுசி, இன்னைக்காச்சும் ஒழுங்கா சாப்பிடு‌‌ சரியா? ஏன்‌‌ உன் கண்ணு இவ்வளோ சிவந்திருக்கு?”

“நைட்‌ சரியா தூக்கம் இல்லைக்கா.”

“ஏன் சுசி? அடிக்கடி இப்புடித்தான் பண்ற.‌ஹாஸ்பிடல் போலாமா? உடம்புக்கு ஒண்ணுமில்லையே?”

“இ…இல்லை..‌இல்லை நான் நல்லாதான் இருக்கேன், ஒருவாரமும்‌ சரியான‌ வேலைக்கா, நைட்ல தூங்க முடியாம கால் வலிக்குது அதான்.”

“சரி பாத்துக்கோ, மறக்காம சாப்பிட்டுடு.
நான் கிளம்புறேன்.”

“ம்ம்ம்” என‌ முணிங்கியவள், செல்லும் அவளை பார்த்தவளின் விழிகளில் இருந்தது என்ன?

ஓரளவு வேலைகள் பழகி விட்டது பிரணிதாவிற்கு. அவள் இப்போது எடுத்திருந்த ப்ராஜெக்ட் சற்று சவலானது தான். வேலையிடத்தில் இரண்டு, மூன்று நட்புக்களும் கூட அவளிற்கு கிடைத்திருந்தன.

“பிரணி, லன்ச் ப்ரேக்!” என்றபடி வந்த காவ்யாவை கண்டவள்,

“முடிச்சுட்டேன் காவ்யா போகலாம்.” இருவரும் அவர்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த அறை நோக்கி சென்றனர்.

“என்ன? நேத்தாச்சும் சுசிலா தூங்கினாளா?” சுசிலாவின் விசித்திரமான நடவடிக்கையை ஆரம்பத்திலே காவ்யாவிடம் பகிர்ந்திருந்தாள்.

“இல்லை‌ காவி!”

“ஹாஸ்பிட்டலாவது போலாம்தானே”

“இன்னைக்கு கேட்டுப் பார்த்தேன், வேலை அதிகம், நைட்ல கால் வலி தூங்க முடியலைன்னு‌ சொன்னா.”

“சரி, விடு இனி நீ கண்டுக்காத?”

“பாவம்டி சின்னப் பொண்ணு, வீட்டு கஷ்டத்துக்கு இங்க வந்து வேலைப் பாத்துட்டு இருக்கா.‌”

“சரி, அவுங்க அம்மா‌ நம்பர் இருந்தா பேசேன். அவுங்க சொன்னா இவ கேட்டுப்பாளே.”

“அவுங்க குடும்பத்தை பத்தி எதுவும் சொல்ல மாட்டுறா. ஏதோ கிராமத்துல இருக்காங்கன்னு மட்டும் தான் தெரியும். கார்டியனா இங்க ஏதோ தூரத்து சொந்தம் இருக்குன்னு சொன்னாங்க சரசு ஆன்ட்டி, ஆனாலும் இவளை வந்து பார்த்தில்லையாம். இவ வீட்டுக்கு போன் பேசிக் கூட நான் பார்த்ததில்லை.”

“இதுக்கு மேல நம்ம என்ன செய்ய முடியும்? அவ ஏதாச்சும் சொன்னா உதவி பண்ணலாம். நீ சாப்பிடு லேட்டாச்சு.”

“ம்ம்ம்” என்றவள் சாப்பாட்டில் கவனமானாள்.

அன்று வேலையை முடித்து வரும்போது, மெடிக்கலில் சுசிலாவின்‌ கால் வலிக்கு ஆயின்மென்ட்டை வாங்கி வந்திருந்தாள்.

“சுசி, இந்தா கால் வலிக்கு இதை‌ போட்டுக்கோ.” என‌ அவள் கொடுக்க,‌

“தாங்க்ஸ் அக்கா” என வாங்கி கொண்டாள்.

**********

அடுத்து இரண்டு நாட்களும் ஒருவித சோம்பலிலே சென்றது. ராகவனின் வருகைக்கு வெகுவாய் பழகியிருந்தவள், இப்போது தவித்து தான் போனாள். இருந்தும் அவனது குறுஞ்செய்திகளும்‌ போன் காலும் அவனின்‌ இடத்தினை நிரப்பிக் கொண்டிருந்தன.

பிரணிதாவின் நாட்கள் அலுவலகம் ஹாஸ்டல் என எந்தவித பிரச்சனையும் இன்றி சென்று கொண்டிருந்தது.‌ எடுத்த ப்ராஜெக்ட்டையும் வெற்றிக்கரமாக முடித்திருந்தனர் அவளது குழுவினர்.
அவ்வப்போது மாணிக்கத்தின் வருகை இருந்தது.

ராகவனின் வேலை இன்னும்‌ நீடிக்க‌ மேலும்‌ இரண்டு நாட்களாகும்‌ வருவதற்கு என அனுப்பியிருக்க, அதனை‌‌ கண்டவளின்‌ முகம் சுருங்கிற்று.

“இன்னும் ரெண்டு நாளைக்கு பாக்க முடியலைன்னு பீல் பண்ணாத சரியா?” அவளை கணித்தார் போல் அவனிடம் இருந்து குறுஞ்செய்தி வர,

‘ம்க்கும் நினைப்புதான்’ என அவள்‌ முகத்தை நொடிக்க, அவனிடமிருந்து அழைப்பு வந்துவிட்டது.‌ போனில் பேசமளவு அவர்களது உறவு வளர்ந்திருந்தாலும், ராகவன் தான் அவளை வலுக்கட்டாயமாக இழுப்பது அதனுள், இவள் வெறும் “ம்ம்ம்” “சரி” இதை சொல்வது தான் இவளது வேலை.

“கிளம்பிட்டியா?”

“ம்ம்ம்”

“சாப்பிட்டியா?”

“ம்ம்ம்”

“என்ன? சாப்பிட்டியா??” அவன்‌ அதிர்ந்து போய் கேட்க,

“ஆமா, ஏன்? என்னாச்சு” அவனது குரலில் இவளிடமும் சிறு படபடப்பு வந்து‌ ஒட்டிக் கொண்டது.

“இல்லை, மாமான‌ பாக்காத வருத்தத்தில,‌ சாப்பிடாமா, ஏங்கி போய் இருப்பன்னு‌ நினைச்சேன். ம்ஹீம்‌ எங்க? அதுக்கெல்லாம் நான் ஆசைப்படலாமா? தப்புதான் தப்புதான்.‌ நான் அப்புடி நினைச்சது தப்புதான்.‌ இரண்டு நாள்‌‌ மேல‌ ஆச்சே பாத்துன்னு‌ கொஞ்சமாச்சும் லவ் இருக்கா, இந்த ஜென்மத்துல என்னை பாக்காம ஏங்கிப் போய்‌ சாப்பிடமா கிடக்கிற லவ்வர் எனக்கு கிடைக்க வாய்ப்பில்லை.” என்றவனின் பேச்சில் சிரிப்பு வர,

“நான் ஏன் இருக்கனும்? உங்க லவ்வர் வேணும்னா அப்புடி இருக்கலாம், நான் ஏன்?” அவள் சீண்டிட,

“ஆமாமாம, நீதான் என் பொண்டாட்டியாச்சே அப்புடி எப்புடி சாப்பிடாம இருப்ப.” என்றவன் பேசும்போதே,

“சார் என்ன‌ சாப்பிடுறீங்க?” வேறு‌ ஒருவரின் பேச்சுக் குரல் கேட்டது, ஹோட்டலில் இருப்பான் ‌போலும்.

“இடியாப்பாம் ஆட்டுக்கால்பாயா” இவளிற்கு‌ கேட்க வேண்டும் என்றே‌ சத்தமாக அவன்‌‌ கூற, உர்ரென்றானது‌ இவளது முகம்.

“ம்ம்ம் அப்பறம்?” இவளிடம் வர,

“என்னை‌‌ சொன்னீங்க, நீங்க மட்டும் சாப்பிடாமயா‌ பட்டினி‌ கிடக்குறீங்க.” அவளை பேசவிட்டு வேடிக்கை பார்த்தவன்,

“நான் ஏன் இருக்கனும்? நான்‌‌ என்ன‌ உன் லவ்வரா? இல்லை புருசனா?” அவளது வார்த்தைகளை கொண்டு அவளை லாக் செய்திட, பதில் சொல்ல திணறியவள்,

“எனக்கு லேட்டாச்சு நான்‌‌ வைக்கிறேன்.” என வைத்தவளிற்கு‌‌ கன்னம்‌ சிவப்பதை தடுக்க முடியவில்லை.

அதுவரை அவளை‌ பார்த்துக் கொண்டிருந்த சுசிலாவிற்கு, பிரணியின் சிவந்த கன்னங்கள்‌ என்னவோ செய்தன.

“சுசி, இன்னைக்கு கட்டாயம் ஹாஸ்பிடல் போய்ட்டு வந்திடு சரியா? இதுக்கு மேல இதை அசால்ட்டா விடக்‌கூடாது.” என்றவளை‌ பார்த்த வண்ணம் இருந்தாள்‌‌ சுசிலா.

“இன்னைக்கு வேலைக்கு போகலையா?”

“இல்லை போகலைக்கா?” நேற்றிலிருந்து விடுப்பு‌ எடுத்துக் கொண்டு அறையில் இருக்கிறாள். நேற்று கேட்டதற்கு உடம்பு சரியில்லை என்றிருந்தாள். நேற்று இரவு முழுவதும்‌ உறங்கவில்லை அவள்.

இன்றும் வேலைக்கு செல்லாமல் இருக்க, பிரணிதா கண்டித்திருந்தாள்.

“சாப்பாடு கொண்டு வந்துட்டேன்.‌சாப்பிட்டுட்டு ஹாஸ்பிட்டல் போய்ட்டு வந்துடு” என்றுவிட்டு அவள்‌ கிளம்பிவிட,

ஒரு முடிவுடன் எழுந்தவள், குளித்து முடித்து காலை உணவினை உண்டு விட்டு, வெளியே கிளம்பி சென்றிருந்தாள்.

சென்றவள்‌‌ மதியத்திற்கு மேல்தான் ஹாஸ்டலிற்கு திரும்பியிருந்தாள். வந்ததும் அறைக்குள் சென்று‌ படுத்தவள்‌‌ தான்‌ மாலை பிரணிதா, வரும்‌‌ வரையிலும் எழவில்லை.

வேலையை முடித்து வந்தவள், தூங்குபவளை‌ கண்டு‌ தொந்தரவு செய்யாது வெளியேறிவிட்டாள்.

“சரசு‌ ஆன்ட்டி, சுசி இன்னைக்கு வெளிய‌ போனாளா?”

“ஆமா, பிரணி கண்ணு.‌ காலையில சீக்கிரம் போச்சு அப்பறம் மதியம் சாப்பாட்டு நேரம் தாண்டித்தான் வந்தா, அப்பறம் ரூம் போனவ தான்‌ வரவேயில்லை.”

“தூங்கிட்டுருக்கா ஆன்ட்டி”

“காலையில தூங்காம இருந்தா தான் அதிசயம் அந்த பொண்ணு.” அவர் வேலையை பார்க்க சென்றுவிட,
‘ஹாஸ்பிட்டல் போயிருப்பா போல’ என‌‌ நினைத்துக் கொண்டவள், திலகவதிக்கு‌ அழைத்து பேசலானாள்.

குடும்பத்தினரிடம் பேசியதில் நேரம்‌ கடந்திருந்தது. ‘இந்த வாரம்‌ சனி, ஞாயிறு‌, இங்க கிளம்பி வா’ என ஆகாஷ் அடம்பிடித்திற்க, அவனை‌ சமாளித்து, அடுத்த வாரம் ஒருநாள் சேர்ந்து வெள்ளிக்கிழமையே‌ வந்துவிடுவதாக கூறி சமாளித்திருந்தாள்.

இந்த வாரமே போகலாம் தான், ஆனால் ராகவன் எப்படியும் இரண்டு தினங்களில் வந்துவிடுவேன் என கூறியிருக்க, அவளிற்கு அவனை‌‌ காணமல் ஊருக்கு செல்வதில் விருப்பமில்லை. இன்னொன்று வார இறுதியில் வருபவர்களையும் ஏமாற்ற அவள் மனம் இடம் கொடுக்கவில்லை.

கீழே சிறிது நேரம் இருந்து, உணவினை முடித்துவிட்டு சுசிலாவிற்கும் எடுத்து வந்திருந்தாள்.

“சுசி, எழுந்து சாப்பிட்டு படு.” என அவளை எழுப்பி உண்ண வைத்திருந்தவள், மீண்டும் சுசி உறங்கவும்‌ இவளும் உறங்கியிருந்தாள்.

நள்ளிரவில், உறக்கம் கலைய‌ புரண்டு படுத்தவளின் விழிகளில் சுசிலா‌ உறங்காமல் விழித்திருப்பது பட,

“என்ன சுசி? இன்னைக்கும்‌ தூங்காம இருக்க, ஹாஸ்பிடல் போனத்தானே.” உறங்குவதற்கு ஏற்றவாறு கையில்லா டீ சர்ட் பேண்டில் இருந்தவாறு பிரணிதா கேட்க,

“தண்ணி….தண்ணி குடிங்க எழுந்தேன்க்கா.”

“இந்தா, குடி” என்ற‌ வாட்டர்பாட்டிலை நீட்டிட, வாங்கி குடித்தவள் மீண்டும்‌‌ படுத்துவிட்டாள். இவளும் பாத்ரூம் சென்றுவிட்டு, தண்ணீரை‌ குடித்துவிட்டு படுத்து விட்டாள்.

சிறிது நேரத்திலேயே பிரணிதாவிற்கு மனதில் ஒரு உறுத்தல் ஏற்பட, மெல்ல விழிகளை திறந்து சுசியை பார்க்க அவள் கண்களை மூடியிருந்தாள்.

“ப்ச் ஏதோ பிரம்மை” தனக்குத்தானே முனங்கியவள் மறுபுறம் திரும்பி படுத்திட, மீண்டும் சிறிது நேரத்திலேயே யாரும் அவளை உற்றுப் பார்ப்பது போல் உள்ளுணர்வு உணர்த்திட, மீண்டும் தலையை மீண்டும் மெல்ல திரும்பி சுசிலாவை பார்க்க, இவளை பார்த்தப்படி அமர்ந்திருந்தவளை‌ கண்டு,

“இன்னும் என்ன‌ சுசி?”‌ என இவள் முடிப்பதற்குள்‌ அடுத்து சுசி செய்த செயலில் அதிர்ந்து சில நொடிகளில் நின்று விட்டவள், அடுத்த நொடி
“சுசிலா!!!” என அவளை ஓங்கி அறைந்து‌ கீழே தள்ளி விட்டிருந்தாள்.

‘என்ன காரியம் செய்யவிருந்தாள்’ அவளின்‌‌ மேனி நடுங்கிற்று. சில நொடிகள் அவள் தாமதிருந்தாலும்,
“அய்யோ!” நினைக்கவே உள்ளம் பதறியது. அந்த நொடியே ராகவனை உள்ளம் தேடிட,
வேகமாய் அலைப்பேசியை எடுத்து அவனுக்கு அழைக்க முற்பட,

இவள் அடித்ததில் உதடு கிழிந்திருந்த சுசி, அவள் போனை‌ எடுத்ததும்,

“அக்கா வேணாம்க்கா, வேணாம்க்கா.‌” என பாய்ந்து அவள் காலை கட்டிக் கொண்டு கதறிட,

“விடு விடு என்னை” அவள் தொடுகையில் இருந்து விடுபட முயல,

“ப்ளீஸ்க்கா, ப்ளீஸ்க்கா இனி இப்புடி பண்ண மாட்டேன். யாருக்கிட்டயும் சொல்லிடாதீங்கக்கா.” என விடாது அவள் கெஞ்சிட,

“தொடத, தொடத என்னை! என்னை விடு” என்ற‌ பிரணிதா வேகமாய் கதவை திறக்க செல்ல, அவளிற்கு முன் கதவை அடைத்தப்படி நின்றவள்,

“ப்ளீஸ்க்கா, ப்ளீஸ் உங்க கால்ல விழுகுறேன்.‌ இந்த விசயம் யாருக்கும் தெரியக் கூடாது, தெரிஞ்சா..‌.‌தெரிஞ்சா நான் செத்துடுவேன். நீங்க சொல்லக் கூடாது, கூடாது…சொல்லுவீங்களா? சொல்லுங்க?” அழகை, கோபம் என மாறி மாறி பேசியவளை கண்டு, பயந்து தான் போனாள் பிரணிதா.

சுசிலா பைத்தியம் பிடித்தது போல் நடந்தவள், மீண்டும் பிரணியின் காலை பிடிக்க வர, தனது பயத்தினை தள்ளி வைத்தவள்,

“சுசி, சுசி இங்க பாரு. நான் வெளியே போகலை. நீ வா, வந்து உட்காரு. கொஞ்சம் தண்ணி‌‌ குடி.” என பொறுமையாய் அவளை கையாள, அவளின் மென்மையான பேச்சில், சுசியும் சற்றே‌‌ நிதானம் எடுத்தவள், முகத்தை அடித்து கழுவிக் கொண்டு வந்தமர்ந்தாள்.

இப்போது அவள் முகம் சிறிது தெளிந்திருந்தது.

“எப்..எப்போ இருந்து இந்த பழக்கம் உனக்கு? சின்ன வயசுல இருந்தா?” அடைத்த தொண்டையை சரிசெய்து அவள் கேட்டிட,

“இல்லை இல்லைக்கா, இங்க இங்க வந்ததுல இருந்து அதுவும் ஐஸ்வர்யா அக்கா இந்த ரூமுக்கு வந்ததில் இருந்து தான்….நான் நான் எதுவும் பண்ணலைக்கா, அவுங்க அவுங்க தான்….” என்றவள்‌ தேம்பிட,

“ஐஸ்வர்யா?”

“உங்களுக்கு முன்ன எங்கூட இருந்தவங்க”

“அந்த குஜராத்தி பொண்ணா?”

“ம்ம் ஆமா?”

“அந்த பொண்ணு.. அது எப்படி இந்த மாதிரி பழக்கம்..?”

“நான் இங்க வந்து புதுசுலக்கா, எதுவும் இல்லை, அப்பறம் அப்பறம் கொஞ்ச நாள்ல…..” என சுசிலா தேம்பியபடியே கூறிய அனைத்தையும் கேட்டவளிற்கு நெஞ்சே வெடிக்கும்‌‌ போலானது.

‘சிறு பெண்ணை என்னவெல்லாம் செய்திருக்கிறாள்.’ சுசியின் அன்றைய நிலையை நினைத்துப் பார்த்தவளுக்கு உடல் நடுங்கி, கண்ணீர் பெருகிற்று.

“அவுங்க போன அப்பறம் நான் சரியாயிட்டேன் க்கா. இப்போ திரும்ப கொஞ்ச நாளா அவுங்க இந்த ஊருக்கே திரும்ப வந்துட்டாங்க, வந்த ரெண்டு நாள்லயே என்னை வந்து பாத்துட்டு…பாத்துட்டு…” என அவள் சொல்ல முடியாது விம்மி, இழுத்து அணைத்துக் கொண்டாள் பிரணிதா.

“வேணாம்க்கா, வேணாம்க்கா என்னை அப்புடி பிடிக்காதீங்க, நான் வேண்டாம்….” என திமிறியவளை சமாளிப்பதற்குள் பெரும் பாடாகிப்போனது பிரணிதாவிற்கு.

சிறிது நேரம் அவள் அணைப்பில் அடங்கியிருந்தவளின் உடல் மெல்ல மெல்ல இறுக்கத்தை தளர்த்தது.

“தூங்கு சுசி, காலையில பேசிக்கலாம்.”

“இல்லை, இல்லை நான் தூங்கினதும் நீங்க வெளிய போய் எல்லாத்தையும் சொல்லிடுவீங்க, நான் தூங்க மாட்டேன்.” என‌ மீண்டும் அவள் ஆரம்பிக்க,

“இல்லைடா, இல்லை நீ என் தங்கச்சி மாதிரி, நான் யாருக்கிட்டயும் இதைப் பத்தி சொல்ல மாட்டேன்.”

“சத்தியமா?”

“ப்ராமிஸா, சொல்ல மாட்டேன்” அவள் நீட்டிய கைகளில் தனது கையை வைத்திருந்தாள்.

“நீ தூங்கு, நானும் உன் கூடவே படுக்கிறேன்.” அவளருகிலே இவளும் உறங்கியவளுக்கு, தூக்கம் அண்டவில்லை. இடைஇடையே சுசி விழித்து இவளை பார்க்க, அவளிற்காக விழிகளை இறுக மூடி படுத்திருந்தாள் பிரணிதா.


********************

அந்த நள்ளிரவு நேரத்தில் மாணிக்கத்தின் அலைபேசி விடாது அழைத்திட, உறங்க கலக்கத்தில் எடுத்தவர், அடுத்
தப் பக்கம் கூறிய செய்தியில் அதிர்ந்து போனவர் அடுத்த நிமிடம் கிளம்பியிருந்தார்.

செல்லும் வழியிலே, ராகவனிற்கு‌ அழைத்து விவரத்தை கூறியிருக்க, அவனும் நேராய்‌ அங்கே வந்து விடுவதாக கூற, முயன்று அளவு வேகத்தை கூட்டி, காவல் நிலையத்தை‌‌ அடைந்திருந்தார் மாணிக்கம்.

























 

Author: STN - 35
Article Title: கண்ணாமூச்சி 4
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

thanga then mozhi

Active member
May 6, 2026
159
130
43
Cheyyar
ஆண்பிள்ளைகளை விட இந்த பெண்பிள்ளைகள் ஒழுக்கமின்மையில் முதலிடம் பிடிக்கின்றது வேதனை🥺🥺🥺
 
  • Sad
Reactions: STN - 35

STN - 35

Member
Nov 21, 2019
34
91
18
Dindigul
ஆண்பிள்ளைகளை விட இந்த பெண்பிள்ளைகள் ஒழுக்கமின்மையில் முதலிடம் பிடிக்கின்றது வேதனை🥺🥺🥺

ஆமாம் சிஸ்டர் 😔😔😔
 

Gowri Karthikeyan

Well-known member
May 5, 2026
1,289
383
83
Chennai
என்ன பண்ணினா அவ????நா நினைக்கறதா?????
ஏன் இப்படி ?????
அச்சோ......
யாருக்கு என்ன ஆச்சி