• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

கண்ணாமூச்சி 8

STN - 35

New member
கண்ணாமூச்சி 8:

தெரிந்துக் கொண்ட உண்மைகள் அனைத்தும் அவனை உறைய செய்திருந்தன. ஒரு கட்டத்திற்கு மேல் முழுதாய் அவனால் அதை படிக்க கூட முடியவில்லை. வேறுவழியின்றி மனதை கல்லாக்கி கொண்டு படித்திருந்தான்.

ஒரு பெண்ணே இன்னொரு பெண்ணை இந்தளவு துன்புறுத்துவாளா? அவனால் சிறிதும் நம்பமுடியவில்லை. ஆனால் நம்பாமல் இருக்கவும் முடியவில்லையே! சுசி கைப்பட எழுதியவை ஆயிற்றே இவை.

எத்தனை பெரிய மர்மம் மறைந்திருக்கிறது, சுசியின் மரணத்தின் பின்னால்!

“ராகவா! ராகவா! கதவை திற ப்ளீஸ். உன்னை கெஞ்சி‌ கேட்கிறேன். ப்ளீஸ் அதை என்னட்டயே கொடுத்திடு மாமா ப்ளீஸ்!” கதவை பலம் கொண்டு தட்டியவாறே பிரணிதா உள்ளிருந்து கதறி அழ, அவளது குரலில் சுயம் பெற்று, பாத்ரூம் கதவை திறக்க சென்றவன், பின் அந்த லெட்டரை மடித்து அவனது போனின் பின்புறம் வைத்துவிட்டான்.

நிச்சயம் பிரணிதா இந்த லெட்டரை போலீஸிடம் குடுக்க விடமாட்டாள் என தற்போது அவளது நடவடிக்கையில் நன்கு அறிந்துக் கொண்டவன், பிரணிதா இதனை கிழித்தெறியவும்‌ வாய்ப்பிருக்கிறது என நினைத்து அதனை பாதுகாப்பு படுத்தியிருந்தான்.

கதவை திறந்த நொடி, வேகமாய் வெளிவந்தவள்,
“எங்க? எங்க அந்த லெட்டர்? எங்க” வெறி பிடித்தவள் போல் அதனை தேட ஆரம்பித்தவளிற்கு அது கிடைக்காமல் போகவே,

“எங்கடா அந்த லெட்டர்? சொல்லு உன்கிட்ட தானே இருக்கு.‌ என்னட்ட குடுத்திடு ராகவா? குடுடா! குடுடா.” அவன் சட்டை காலரை பிடித்து உலுக்க,
அவளின் செயல்கள் அனைத்திற்கும் அமைதியாய்‌ இருந்தவன், அவள்‌ கத்தி ஓயும்‌வரை, சிறிது கூட பார்வையை விலக்கவில்லை.

“அதுல இருக்கிறது எல்லாம் உண்மையா?” அவனின்‌ ஒற்றைக் கேள்வி, அவளது ஆவேசத்தை மொத்தமாக அடக்கியிருந்தது.

‘படித்து விட்டானா இவன்?’ என்ற பயம்‌ அப்பட்டமாய் அவள் விழிகளில் தெரிந்திட, அமைதியாய் இருந்தவளின் முகவாயை இறுக பற்றி தன்னை நோக்கி திருப்பியவன்,

“உன்கிட்டதான் கேட்குறேன் சொல்லுடி?” என்றவனின் கடுமையில் கண்ணீர் கட்டி விட்டது அவளிற்கு. பயத்தில் சுத்தமாய் பேச்சு வரவில்லை அவளிற்கு.

“ஆக, நீ அமைதியா இருக்கிறதப்‌ பார்த்தா, அது உண்மைதான் போல இல்லை.” என இழுக்க, இப்போதும்‌ மெளனத்தை ஆயுதமாய் எடுத்துக் கொண்டவளை, பேச வைக்கும் பொருட்டு,

“எப்போ தெரியும் உனக்கு இது? என்ன சத்தியம் பண்ண அந்த *****சுசிக்கு.” ‌மோசமான வார்த்தை ஒன்றை, வேண்டுமென்றே அவன்‌ உபயோகிக்க, அதில் ஆத்திரம்‌ வர பெற்றவள்,

“என்ன? என்ன‌ சொன்னீங்க? சுசி பத்தி எப்புடி இவ்வளோ மோசமா‌‌ பேச முடியுதா உங்களால? அவ அப்படிப்பட்ட பொண்ணு இல்லை.‌ அவ பாவம், சின்னப் பொண்ணு.”

“ஹ்ஹா, இவ சின்னபொண்ணு பாவமா? உனக்கே இது சிரிப்பு வரலை? ட்ரக்ஸ்ஸூக்கும், ***** அடிக்ட் ஆகியிருக்கவா உனக்கு நல்லவளா?”

“ஆமா ஆமா அவ நல்லவதான், ரொம்ப ரொம்ப நல்லவ, அவளா விரும்பி அதுக்குள்ள‌ போகலை.”

“கேட்க நல்லாத்தான் இருக்கு நீ சொல்ற‌ கதை, அவ விருப்பமில்லாமா எப்புடி ஒரு பொண்ணால கட்டாயப்படுத்தியிருக்க முடியும்?”

“அய்யோ, அதுதான் நிஜம்ங்க. சுசியை‌ கொஞ்ச கொஞ்சமா அவளுக்கே தெரியாம ட்ரிங்ஸ் பண்ண வச்சும், ட்ரக்ஸ் எடுக்க பழக்கியும் அவ சுயநினைவு இல்லாம இருந்தப்போ, அந்த ஐஸ்வர்யா நாயி அவ இச்சைக்கு சுசியை யூஸ் பண்ணிருக்கா, ஆரம்பத்துல சுமிக்கு இது தெரியலை.

ஆனா தெரிஞ்சப்பறம், அவளால ஒண்ணும் செய்ய முடியலை.‌ ஏன்னா, அந்த ஐஸ்வர்யா சுசியோட மோசமான போட்டோஸ் எல்லாம் வச்சி ப்ளாக்மெயில் பண்ண ஆரம்பிச்சு, அதுக்கப்பறம் நேரடியாவே இவளை கட்டாயப்படுத்தி செய்ய ஆரம்பிச்சிருந்திருக்கா, இதை‌ சுசியால வெளியவும் சொல்ல முடியாம, பயந்து தினம் தினம் அவகிட்ட நரகத்தை அனுபவிச்சிருக்கா. பாவம்ங்க அவ, ஆரம்பத்துல அவளை ஃபோர்ஸ் பண்ணி பழக்கிவிட்டு, ஒருகட்டத்துல மொத்தமா சுசியை இதுக்கு அடிமையாக்கி வச்சிட்டு, அவ கிளம்பி போய்ட்டா,

ஆனா அதுக்கப்பறம் சுசி பட்ட வலி அதிகம், அந்த அசிங்கத்தை வெளிய சொல்லவும் முடியாமா, அதுல இருந்து வெளிய வரவும் முடியாமா ஒவ்வொரு நாளும் துடிச்சிப் போயிருக்கா.”

“ஓஹ், இது எல்லாம் உண்மை? சுசியே‌ சொன்னது, எப்போ சொன்னா?” மெல்ல அவளறியாமல், அனைத்தையும் அவள் வாயாலே சொல்ல வைத்துக் கொண்டிருந்தான்.

“அன்னைக்கு ஒருநாள் அவளுக்கு உடம்பு‌ சரியில்லை, அப்போ நைட்டு என்கிட்ட அவ…”‌அவளையும் அறியாது உளறிக் கொண்டிருந்தவள், சட்டென நிறுத்திவிட்டு அவனை பயத்துடன் பார்த்தவளிற்கு அப்போதுதான் அவள் செயல் உரைத்தது.

“உன்கிட்ட? உன்கிட்ட என்ன பண்ணா அவ? சொல்லு யுகா? என்ன செஞ்சா அவ‌? உனக்கும் ட்ரக்ஸ் கொடுத்து யூஸ்…” என்றவனின் வாயை அடைத்தவள்,

“இல்லை, இல்லை அவ அப்படி பண்ணல, அதுக்கு‌ முன்னாடியே‌ நான் சுதாரிச்சு‌‌ அடிச்சி தள்ளி விட்டுடேன். அப்போ…அப்போ நான் உங்களை‌ தான் ரொம்ப தேடுனே தெரியுமா உங்களுக்கு?” கண்ணீர் வழிய‌ பேசியவளை கண்டு அவன்‌ மனம் இளக, முயன்று இறுக்கம் ஆக்கி கொண்டான்.

“உங்களுக்கு போன் பண்ண போனப்ப தான், சுசி என் காலை பிடிச்சு கெஞ்சி எல்லா உண்மையும் சொல்லி, என்னை அதை யாருக்கிட்டயும் வெளிய சொல்லக் கூடாதுன்னு சத்தியம் வாங்கிக்கிட்டா, அவ நிஜமா பாவம்ங்க. அவ ரொம்ப நல்ல‌ பொண்ணு, அந்த ஐஸ்வர்யா தான் எல்லாத்துக்கும் காரணம்.” என, அதுவரை அவன் வாய் மூடியிருந்த அவள் கையை விலக்கியவன்,

“இதை‌ அப்புடியே‌ ஒண்ணு மாறாம, அந்த இன்ஸ்பெக்டர்கிட்ட சொல்லுற! சொல்லனும்! புரியுதா? நட” என்றவனை கண்டு அதிர்ந்துப் போனவள்,

“நான் சொல்ல மாட்டேன், சத்தியமா நான் சொல்ல மாட்டேன், எங்கேயும் வர மாட்டேன்.”

“அப்போ சரி, அந்த லெட்டரை நான் உரியவங்கிட்ட சேத்துடுறேன்.”

“பைத்தியமா உங்களுக்கு? நான்தான் சொல்றேன்ல அது யாருக்கும் தெரியக் கூடாதுன்னு.‌ அது போலீஸ் கைக்கு‌ போகவே கூடாது.”

“உனக்குதான்டி கிறுக்கு பிடிச்சி போய் திரியுற, அன்னைக்கே‌ இதை ஸ்டேஷன்ல சொல்லிருந்தா, இன்னேரம்‌ அந்த ஐஸ்வர்யா கம்பி எண்ணிட்டு இருப்பா.”

“சொல்லிருந்தா என்ன நடந்திருக்கும்? நீயுஸ்ல ஃபுல்லா சுசிய கேவலப்படுத்திருப்பாங்க, அவளை அசிங்கமா நினைப்பாங்க, அவ அம்மா தங்கச்சி எல்லாம் நிம்மதியா இருந்திட முடியுமா?”

“அதுக்காக தப்பை மறைப்பியா நீ? இது எவ்ளோ‌ பெரிய அபென்ஸ் தெரியுமா? அந்த இன்ஸ்பெக்டர் இந்நேரம் ஏதும்‌ தெரிஞ்சுக்காமா இருந்திருப்பாரா என்ன? விசயம் முழுசா தெரிஞ்சா உன்னை‌ அக்யூஸ்ட் ஆக்கவும் வாய்ப்பிருக்கு. மரியாதையா‌ என்கூட வா.”

“ஒருதடவை சொன்னா உங்களுக்கு‌ புரியாது? நான் எங்கேயும் வர மாட்டேன். நீங்களும் போக கூடாது.”

“அப்போ‌‌ சுசி மாதிரி இன்னும்‌ எத்தனை பொண்ணுங்க, அந்த ஐஸ்வர்யாகிட்ட
கஷ்டப்பட்டாலும் பரவாயில்லையா உனக்கு?”

“அதைப் பத்தி எல்லாம் எனக்கு கவலையில்லை, எனக்கு சுசி ரொம்ப முக்கியம், அவளுக்கு நான் பண்ண ப்ராமிஸ் ரொம்ப ரொம்ப முக்கியம்.‌‌ எங்கயும் அவ பேரு‌ அசிங்கப்பட்டு போக நான் விட மாட்டேன்.”

“ஆனா, என்னால அப்படி இருக்க முடியாது கண்டிப்பா நான் போலீஸ் ஸ்டேஷன் போயே தீருவேன். இவ்ளோ பெரிய உண்மையை மறைச்சு மேலும் மேலும் அந்த ஐஸ்வர்யாவை தப்பு பண்ண நான் விடமாட்டேன். நீ வர வேண்டாம், இப்படியே பைத்தியக்காரி மாதிரி பேசிட்டு இரு. நான் கண்டிப்பா இந்த லெட்டர் அதை இன்ஸ்பெக்டர் கிட்ட கொடுத்து தீருவேன்.” என்று விட்டு வேகமாய் அவன் சென்று கதவை திறக்க,

“நீங்க போக கூடாது, போனீங்கன்னா கண்டிப்பா என்னை நானே ஏதாவது செஞ்சுப்பேன்.” என்றவளின் கத்தலை பொருட்படுத்தாமல் அவன் கதவை திறந்து விட, “சுளீர்” என்ற சத்தத்துடன் அங்கிருந்த பூ ஜாடியை கீழே தள்ளி உடைந்திருந்தாள் பிரணிதா.

வெகுநேரமாகியும் இருவரும் கீழே வராததை நினைத்து பயத்தில் இருந்த பெண்கள் மூவரும்.‌ இந்த சத்தத்தை கேட்டு, வேகமாய் மேலேறி வந்து பார்க்க, கையில் கண்ணாடி துண்டை வைத்துக் கொண்டு, கையை அறுப்பதற்கு தயாராக இருந்தவளை கண்டு அதிர்ந்து தான் போயினர்‌ அனைவரும்.

“இன்னும் ஒரு அடி எடுத்து வச்சீங்க, கண்டிப்பா சுசி மாரி‌ நானும் கைய கட் பண்ணிப்பேன்.” என்றவளின் மிரட்டலில், பெண்கள் அசையாது நின்றுவிட,

“என்ன மிரட்டுறியாடி?” குத்திகிழிக்கும் விழிகளுடன், ராகவன் கேட்டிட.

“இல்லை, கண்டிப்பா செய்வேன். என்னோட ப்ராமிஸை காப்பாத்த நான் எந்த எல்லைக்கும் போவேன்.”

“அப்போ‌ போ, உன்னோட இந்த பூச்சாண்டி வேலைக்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன். என் முடிவுல எந்த மாற்றமும் இல்லை.” என சொல்லியபடி லேசாய் அவன் திரும்பிட,

அடுத்த நொடி யோசியாது தனது கைகளை அறுத்திட போக.

“அய்யோ பிரணி?” என‌ அலறியபடி, பூர்வா‌ அருகே செல்ல, அதுவரை அவள் அடக்கி வைத்திருந்த கோபம், ராகவன்‌ உண்மையை சொல்லிவிட கூடாதென்ற‌ பயம், சுசி குடுத்து சென்றிருந்த அழுத்தம், என அனைத்தும்‌ அவளை போட்டு படுத்தியதில், இயல்பு மாறிப்போய் நின்றிருந்தவள்,

“கிட்ட வந்தீங்க? அவ்ளோதான்? நான் இங்க வந்திருக்கவே கூடாது. தப்பு பண்ணிட்டேன், ரொம்ப பெரிய தப்பு பண்ணிட்டேன். இந்த ஊருக்கே‌ நான் வந்திருக்க கூடாது, வந்தனாலதானே சுசிய பத்தி எனக்கு தெரிய வந்தது.‌ நான் வராமலே இருந்திருக்கனும்.

இந்த ஊரு, இங்கிருக்கவங்க யாருமே எனக்கு பிடிக்கலை, எல்லாத்துக்கும் காரணம் நீங்க? நீங்க மட்டும்தான். நான் இப்புடி இருக்கவும் நீங்க மட்டும்தான் காரணம்?” என அவள் கண்ணாடி துண்டினை கையில் வைத்து அழுத்தியவாறே கூற,

அவளது பேச்சினை பொருட்படுத்தாது, அவளை நெருங்கியவர்,
“அதை கீழேப் போடு பிரணி.” அதை தட்டி விட முயல,

“ஒருதரம் சொன்னா யாருக்குமே இங்கே புரியாதா? வராதன்னு சொன்னேன்ல.” என ஆக்ரோஷமாய் அவரை பிடித்து அவள் தள்ளிவிட்டதில், அவரது கையை லேசாய் பதம் பாத்திருந்தது கண்ணாடி துண்டு.

“ஸ்ஸ்ஆ ஆ பிரணி!” வலியில் கத்தியவாறு அவர் கீழே விழுந்ததில் கட்டிலின் விளிம்பில் மோதியிருக்க,
அடுத்த நொடி “பளார்!” என ஓங்கி அறைந்திருந்தான் ராகவன்.

“அய்யோ பூர்வா” என்றபடி கவிதா அவரிடம் ஓட, விமலா கீழே‌ செல்ல, ராகவனும் பூர்வாவிடம் சென்றிருந்தான்.

அவன் கொடுத்த அடியில் அவள் கையிலிருந்த கண்ணாடித் துண்டு தூரம் போய் விழுந்திருக்க, அவன் தன்னை அடித்ததை நம்ப முடியாது, அதிர்ச்சியில் உறைந்துப் போயிருந்தாள்.

“அம்மா, நம்ம வீட்டுல மெடிக்கல் கிட் இருக்கும் எடுத்துட்டு வாங்க.” அன்னைக்கு கட்டளையிட்டவன், லேசாய் ரத்தம் வந்த இடத்தை அழுத்திப் பிடித்திருந்தான்.

கவிதா வரவும், வேகமாய் அதனை வாங்கி காயத்தை சுத்தம்‌ செய்து, பேண்டேஜ் போட்டவன்,
“ஹாஸ்பிட்டல் போய்ட்டு வந்திடலாம்த்தை வாங்க.” என அவரை கைப்பிடித்து தூக்கி நிறுத்த,

“எனக்கு ஒண்ணும் இல்லை, சின்ன கீறல்தான் ராகவ். பிரணி, பிரணி எங்கே?” என்றவரின் கேள்வியில் திடுக்கிட்டவன் அவள் நின்ற இடத்தை திரும்பி பார்க்க, வெற்றிடமாய் இருந்தது.

“எங்கே? எங்கப் போனாம்மா அவ?”

“நான் கவனிக்கலையே ராகவ், பூர்வாவுக்கு இப்புடி ஆனதுல பதட்டத்துல நான் அவளை கவனிக்கலை.”

“விமலா சித்தி எங்கேம்மா?”

“அவ அப்பவே அண்ணனுக்கு போன் பண்ணப் போயிட்டா.”‌‌என,

“சிட்!” என‌ தலையலடித்துக் கொண்டவன்,
“அம்மா நீங்க அத்தைய பாருங்க, நான் அவளை பாக்கிறேன்.” என வேகமாய் இறங்கி ஓடியவன், பிரணிதா வெளிகேட்டை எட்டும் முன் பிடித்திருந்தான்.

“தொடாதே! தொடதடா என்ன!” சீறியவளை‌ கண்டு திகைத்து நின்று விட்டான்.

“என்னை அடிச்சிட்டல, அவுங்களுக்காக என்னை அறைச்சிட்டதானே.‌ அன்னைக்கு அவுங்க அடிச்ச மாதிரியே நீயும் என்னை அடிச்சிட்டல, அப்போ உனக்கும் நான் முக்கியம் இல்லைதானே.” அழுகையுடன் கதறியவளை‌ கண்டு வேதனையுற்றவன்,

“இல்லை யுகா, சத்தியமா இல்லடி. அத்தை கையில‌‌ ரத்தம் யுகா, நீ பண்ணது தப்புதானேடா.” மென்மையாய் பேசியபடி அவளிடம் நெருங்க,

“எனக்கும் தானே ரத்தம் வருது.” என‌‌ அவள்‌ உள்ளங்கையை‌ காட்ட, பூர்வாவை தள்ளிவிடும் வேகத்தில்‌ கண்ணாடி அவளது கையையும் கிழித்திருந்தது.

“என்னடி இவ்ளோ ரத்தம்” அவள் கையை பற்றி கேட்டிட,

“அப்போ நீ என்னை கவனிக்கலை தானே, அன்னைக்கு அவுங்களும் இதுமாதிரி தான் எனக்கு அடிப்பட்டதை கவனிக்கலை, அப்போ நான் யாருக்குமே முக்கியம் இல்லையா?”

“ஒளறாதடி, அன்னைக்கு அத்தை‌ ப்ரெக்னட்டா இருந்தப்போ நீ அவுங்க வயித்துல அடிச்சது தப்பில்லையா யுகா? இன்னைக்கும் அவுங்களை தள்ளி விட்டுருங்க நீ?”

“ஆமா, ஆமா நான் தான் எப்பவும் தப்பு.‌‌ அப்போ என்னட்ட வராதீங்க யாரும்.‌போ, போ எனக்கு யாரும் வேண்டாம்.‌ என் அப்பா இருந்திருந்தா, இப்புடி என்னை‌ அடிச்சிருப்பீங்களா? எனக்கு பூ அப்பா‌ வேணும், நீ வேண்டாம்‌ போ.

விடு,விடு என்‌ கையை விடு.‌‌ எனக்கு நீயும் வேண்டாம், என் பூ அப்பாதான் வேணும்.” கதறியபடி அவனிடம் இருந்து திமிறியவளை, சுத்தமாய் கட்டுப்படுத்த முடியவில்லை ராகவனால்.

“கொஞ்சம் பொறுமையா இரு யுகா. நான் சொல்றது கேளுடா, எனக்கு நீதான் முக்கியம், நீ மட்டும்தான்டி முக்கியம் உனக்கு தெரியாதா அது?” அவள் கன்னம் பற்றி, விழி பார்த்து கூறியவனை‌ கண்டு மேலும் அழுகை பெருகிற்று அவளிற்கு.

“இல்லை, எனக்கு யாரும்‌ வோண்டாம்.” என‌ அவள் மறுத்துக் கொண்டிருக்கும்‌ போதே, மாணிக்கம் வந்துவிட்டிருக்க.

“மணிப்பா!” என‌ ஒரே திமிறலில் அவனிடமிருந்து விலகியவள், மாணிக்கத்திடம் அடைக்கலமாகி இருந்தாள்.

“என்னை‌‌ அடிச்சிட்டாங்க மணிப்பா, அன்னைக்கு மாரியே இன்னைக்கும் நீங்க இல்லாதப்போ என்னை அடிச்சிட்டாங்க.” என அவள் தேம்ப,

“யாரக் கேட்டு ராகவா‌, என் பொண்ணு மேல கைய வச்ச?” மாணிக்கம் அன்று‌ கேட்க முடியாததை இன்று‌ கேட்க, மெளனமாய்‌ தலைகுனிந்தான்‌ ராகவன்.

“எனக்கு இங்க வேண்டாம் மணிப்பா, எனக்கு யாரும் வேண்டாம்.‌ பூ‌‌ அப்பாதான்‌ வேணும்.‌ இனி நான்‌ இங்க இருக்க மாட்டேன்.‌எனக்கு யாரையும் பிடிக்கலை.”

“நீ இங்க இருக்க வேண்டாம்டா பிரணி, உனக்கு கஷ்டம் தர்றதை இந்த மணிப்பா‌ எப்பவும் செய்ய மாட்டேன்.‌ வா போகலாம்.” என‌‌ கைப்பிடிக்க, அதில் இருந்த ரத்தத்தை கண்டு அதிர்ந்தவர்,

“என்னடா‌ பண்ணி வச்சிருக்கீங்க என் பொண்ணை?” சீறிக் கொண்டு ராகவனிடம் பாய,

“மாமா, முழுசா என்ன‌ நடந்ததுன்னு தெரியாம பேசாதீங்க, அவ அத்தைய‌ தள்ளி விட்டுட்டா அந்த கோபத்துல அடிச்சிட்டேன், அவ தள்ளி விடும்போது‌ காயமாகியிருக்கு, நான் கவனிக்கலை.‌ நாங்க எதுவும் பண்ணலை, அவதான் பைத்தியக்காரியாட்டம் நடந்திட்டு இருக்கா.”

“என் முன்னாடியே இப்புடி பேச‌ எவ்வளவு தைரியம்டா‌ உனக்கு?” அவனிடம்‌ இரைந்தவர்,

“நீ வாடாம்மா‌ நம்ம இங்கே‌ இருக்க வேண்டாம்.” என அவளை‌ அழைத்துச் சென்றிட, இவன் பக்கம்‌ திரும்பாது சென்றவளை‌‌ கண்டு மனம்‌‌ துணுக்குற்றது.

‘அப்பாவும், பொண்ணும்‌ எல்லாத்துலயும் அவசரக்குடுங்கைங்க‌ தான்.” என‌ முணங்கியவன், பூர்வாவை‌ காண சென்றான்.

“அத்தை எங்கம்மா?”

“ரூம்ல படுக்க வச்சிருக்கேன் ராகவ், அண்ணா வரலையா?”

“வந்தாரு, வந்து அவர் பொண்ணை‌ கூப்பிட்டு கிளம்பிட்டாரு.‌ அத்தைக்கு பரவாயில்லையா அம்மா, ஹாஸ்பிடல் ஏதும் போகணுமா.”

“இல்ல வேண்டாம்‌, லேசா நெத்தியில வீக்கமாகிருக்கு.‌ மருந்து‌‌ போட்டிருக்கு, வீக்கம் வத்தலைன்னா ஹாஸ்பிட்டல் போகலாம்.”

“சரிம்மா?”

“என்னாச்சு‌ பிரணிக்கு, ஏன் இப்புடி‌ நடந்துக்கிட்டா? என்ன சண்டை போட்டீங்க ரெண்டு பேரும், அவ இவ்வளவு கோபம் ஆகுற அளவுக்கு.”

“அது‌‌ ஒண்ணுமில்ல தீடிர்னு கொஞ்சம் எமோஸ்னல் ஆகிட்டா‌போல, நான் பாத்துக்கிறேன்ம்மா. நீங்க போய் அத்தைக்கிட்ட‌ இருங்க.” என‌ அவரை வழியனுப்பி வைத்தவன், சோபாவிலயே கண்களை‌ மூடி‌ சாய்ந்து விட்டான்.

இங்கே, பிரணியின் காயத்திற்கு கட்டுப் போடபட்டிருக்க, மருந்தின் வீரியத்தில் உறக்கத்தில் இருந்தவளை கண்ட மாணிக்கத்தின் நினைவுகள், அவர்கள் வாழ்வில் தான் நுழைந்த நினைவை நோக்கி பயணம் செய்ய, அதே சமயம் பூர்வாவும் நினைவுகளை மீட்டுக் கொண்டிருக்க, பிரணியின் ஆழ்மனம் அவளது கடந்த காலங்களை காட்சிப்படுத்த ஆரம்பித்திருந்தது.
 
Last edited:
Top Bottom