கண்ணாமூச்சி 9:
“பூ டிராவல்ஸ்” சிறிதாக ஐந்து கார்களுடன் இயங்கி கொண்டிருந்தது அந்த டிராவல்ஸ் நிறுவனம்.
மதுரையில் சிறிது சிறிதாக பிரபலம் அடைந்து வருகின்ற டிராவல்ஸின் உரிமையாளர் பூவரசன்.
பூவரசன் பெயருக்கேற்றாற் போல், மென்மையான பூஞ்சை உள்ளம் கொண்டவர், பெற்றோர்கள் இன்றி ஆசிரமத்தில் வளர்ந்தவர்க்கு, தனது தேவைகளை கூட வாய் திறந்து கேட்டிட முடியாத நிலை. அவரது பள்ளி தோழனாக ஆரம்பித்து, இதோ இன்று மச்சான் எனும் பிரிக்கமுடியாத உறவாக மாறியிருப்பவர் துரைமுருகன்.
நல்ல உழைக்கும் திறனை கொண்டவர் பூவரசன், ஆனால் அவரது குணத்தில் அவரை ஏமாற்றுபவரே அதிகம். தோழனை விட்டுக்கொடுக்க முடியாது, வீட்டில் பேசி, பூர்வாவின் மனமொத்த சம்மதத்துடன் பூவரசனுடன் திருமணத்தை நடத்தி வைத்திருந்தார் துரை.
“செல்வா, அந்த ஏர்போர்ட் டிரிப்புக்கு வண்டி கிளம்பிடுச்சா?”
“ஆச்சு அண்ணே.”
“அந்த புது பையன் எங்க ஆளக் காணோம்?”
“தெரியலண்ணே, வந்து ஒருவாரம் ஆகலை, அடிக்கடி இப்புடித்தான் லேட்டா வர்றான், இல்லைன்னா லீவு போடுறான், சரியில்லைண்ணே அவன், கொஞ்சம் கண்டிச்சு வைங்க.”
“பாவம்டா, சின்ன பையன் வரட்டும் நான் பேசுறேன்.” என்றவரின் போன் ஒலித்தது.
“வான் மிதக்கும்… கண்களுக்கு….
மயில் இறகால் மையிடவா…
மார்புதைக்கும்… கால்களுக்கு…
மணி கொலுசு நான் இடவா…
வா வா என் தேவதையே
பொன் வாய் பேசும் தாரகையே
பொய் வாழ்வின் பூரணமே
பெண் பூவே வா…."
“பூக்குட்டி!” முகம் கொள்ளா பூரிப்புடன் அழைத்தவரின் குரலில் கிளுக்கி சிரித்தாள் பிரணிதா.
“பூ அப்பா!” இன்னும் வரலையா நீங்க? பூக்குட்டி, பூ அம்மா இரண்டு பேரும் கிளம்பிட்டோம்.” என மகள் அங்கே முகத்தை சுருக்கிட, மனம் தாங்குமா தகப்பனிற்கு.
“இதோ கிளம்பிட்டேன்டா தங்கம், அப்பா சீக்கிரம் வந்திடுறேன்.” என வைத்தவர், அங்கே நிறுத்திவைக்கப்பட்டிருந்த டிராவல்ஸ் கார் ஒன்றை எடுத்து கொண்டு புறப்பட்டவர்,
“செல்வா, டிரிப் எல்லாம் சரியா போகுதான்னு பாத்துக்கோ, அட்வான்ஸ் வாங்காமா யாருக்கும் புக் பண்ணாத, நான் நைட் வந்திடுவேன்.” என்றுவிட்டு சென்றார்.
“பூக்குட்டி!” என்ற குரலுக்கு பட்டை கொலுசிட்ட கால்களுடன் வேகமாய் உள்ளிருந்து ஓடிவந்தாள் சிறுமியான பிரணிதா.
“பூ அப்பா!” என ஓடிவந்து தன் மீது தவ்விய மகளை அள்ளி அணைத்துக் கொண்டார் பூவரசன். அத்தனை பிடித்தம் மகள் மீதும், மனைவி மீதும். யாருமற்ற அனாதையாக இருந்தவரை மடிதாங்கி கொள்ள அவர் வாழ்வில் வந்த இரு பெண்களும் தேவதைகள் அவருக்கு.
“ பூக்குட்டி எங்க கிளம்பிட்டீங்க?” வெளியே செல்ல தயாராகி நின்றவளை கண்ட அவர் வேண்டுமென கேள்வியெழுப்ப,
“மாமா வீட்டுக்குப்பா, அச்சோ மறந்துட்டீங்களா?” மகளின் தலையிலடித்துக் கொண்டு கூறும் அழகில் மயங்கிதான் போனார் அவர்.
“பூவம்மா எங்கடா?”
“உள்ளே இருக்காங்க, சரி சரி என்னை கீழே இறங்கிவிடுங்கப்பா.” என மகள் இறங்கி ஓடி விட்டிருக்க, மனைவியை தேடி சென்றார் அவர்.
நெருக்க தொடுத்த மல்லிகையை தலையில் வைத்துக் கொண்டிருந்த பூர்வா, கணவனைக் கண்டதும்,
“என்ன ஓனரே, உங்க பொண்ணை கொஞ்சி முடிஞ்சிட்டீங்களா?” புத்தம் புது மலரை போல் பூரித்து போயிருந்த மனைவியை கண்டு ரசித்தவர், மென்மையாய் மனைவியை பின்னோடு அணைத்து, மல்லிகையில் வாசம் பிடித்தவர்,
“அம்மா வீட்டுக்குன்னா, என் ஓனரம்மாவுக்கு தனி சந்தோசம் வந்திடும் போலயே.” அவரிடம் நெருக்கத்தை அதிகரித்தவாறு அவர் கேட்க,
“கொஞ்சம் இறுக்க கட்டிக்கிட்டா, ஒடஞ்சிட மாட்டேனுங்க நானு. இன்னும் கல்யாணமான புதுசுல கட்டிக்கிட்டு போல, பூ போல கட்டிக்கிறீங்க.” என மனைவி சடைக்க,
“இறுக்குனா, என் பூவம்மாவுக்கு வலிக்குமே.” பட்டாம்பூச்சியாய் அவர் கன்னத்தில் முத்த,
“வலிக்காமத்தான் உங்க பூக்குட்டிய பெத்தேனாக்கும்.”
“அதான், திரும்ப உங்களுக்கு அந்த வலிய நான் கொடுக்க விரும்பலை.” என்றவரை முறைத்து தான் பார்த்தார் பூர்வா. பிரசவ அறையில், பூர்வாவின் கதறலை கண்டவருக்கு, கண்ணீரை அடக்க முடியவில்லை. ஏற்கனவே, பூ மனம் படைத்தவருக்கு அதனை தாங்கி கொள்ள முடியவில்லை, ஆக சத்தமில்லாமல் பேமிலி ப்ளானிங் செய்து கொண்டிருந்தார். விசயம் தெரிந்து, பூர்வா அத்தனை சண்டையிட,
“இன்னொருக்க, தெரிஞ்சே எப்புடிங்க உங்களை வலிக்க வைப்பேன்.” ஒற்றை வாக்கியத்தில், வாயடைக்க வைத்திருந்தார்.
இன்றும் அதனை நினைவுப்படுத்திட, முறைத்துக் கொண்டு விலகியவர்,
“போதும், போதும் கிளம்புங்க நேரமில்லை.” என்றவாறு அவருக்கு தேவையான உடைகளை எடுத்துக் கொடுத்தார். நாளை மறுநாள் துரைக்கு பூ வைக்க செல்கின்றனர், அதனால் இன்றே மனைவியையும், மகளையும் கொண்டுப்போய் விட்டுவிட்டு இவர் மீண்டும் வருவதாக ஏற்பாடு. அதோடு நாளை பிரணிதாவின் பிறந்தநாள் வேறு. இரவு அங்கயே கேக் வெட்டவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மனைவி, மகளை அழைத்துக் கொண்டு மாமானார் வீட்டிற்கு சென்றவர், சிறிது நேரம் இருந்து மதிய உணவினை முடித்துவிட்டு கிளம்பி விட்டார்.
“பூ அப்பா!” சிணுங்கிய மகளை சமாதானம் செய்துவிட்டு கிளம்பியிருந்தார். நேராக டிராவல்ஸ் தான் சென்றார்.
“அண்ணே ஒரு புக்கிங், வந்திருக்கு கோயம்புத்தூர் வரைக்கும்.” செல்வம் கூறியதை கேட்டு, விபரங்களை அறிந்துக் கொண்டவர்,
“செல்வம் நீ போக முடியுமா?”
“இல்லைண்ணே, எனக்கு திருச்சிக்கு போகணும்.”
“சரி அந்த புது பையன் ரவி வந்தானா?”
“வந்துட்டாண்ணே, டேய் ரவி இங்க வா அண்ணே கூப்பிடுறாரு.” என்றதும் ஒடிசலான தேகத்தோடு வந்து நின்றான் அவன்.
“ஏன் லேட்டு?”
“அது, அம்மாக்கு முடியலைண்ணே அதான், இனி அப்புடி நடக்காதுண்ணே.”
“சரி, நாளைக்கு கோயம்புத்தூர் ட்ரிப் இருக்கு போய்ட்டு வந்திடு.”
“சரிண்ணே” என்றவன் சென்றுவிட, அதன்பின் வேலைகளை முடித்துவிட்டு மீண்டும் மாமானாரின் வீட்டிற்கு சென்றார். வழியிலேயே மகளுக்கென ஆர்டர் கொடுத்திருந்த கேக்கை வாங்கி கொண்டு செல்ல, இவருக்காகவே தூங்காது விழித்திருந்தாள் பிரணிதா.
“பூக்குட்டி இன்னும் தூங்கலையா நீங்க?”
என்றவாறே அவர் வர,
“நான் தூங்கிட்டா யாரு கேக் வெட்டுறது பூ ப்பா, அதான் முழிச்சிட்டு இருக்கேன்.” கேக்கை கண்ட உற்சாகத்தில் பிரணிதா துள்ளி குதிக்க,
“அச்சோ! என் செல்ல பூக்குட்டி, நம்ம பண்ணெட்டு மணிக்கு கேக் வெட்டலாம் சரியா.” என அவளை தூக்கியவாறு உள்ளே சென்றார்.
மணி பனிரெண்டை நெருங்க, தான் வாங்கி வந்திருந்த புது ஆடையை மகளுக்கு அணிவித்து, கேக்கை வெட்டி பிறந்தநாள் கொண்டாத்தினை ஆரம்பித்து வைத்தனர்.
“மாமா உங்களோட கேக் காணோம்?”
பிரணிதா கேட்க,
“அது நாளைக்கு ஈவ்னிங் எல்லாரையும் கூப்பிட்டு வெட்டலாம்டா பிரணிக்குட்டி.” என சரியென்று விட்டாள்.
அத்தனை பூரிப்பு பிரணியின் முகத்தில், பூவரசனை விட்டு நகராது உரசிக் கொண்டே சுற்றியவளை, பூர்வா தான் அதட்டி தூங்க வைத்திருந்தார்.
“நாளைக்கு வரைக்கும் உங்க பூக்குட்டிய கையில பிடிக்க முடியாது.” என மகளை நேராய் படுக்க வைத்துவிட்டு, கணவன் அருகே வந்து படுத்தவாறு பூர்வா கூற,
“என் பூக்குட்டிங்க, பிள்ளை இப்புடி சிரிச்சிட்டே இருக்கனும்ங்க எப்பவும்” லேசாய் மனைவியை அணைத்தப்படி அவர் கூற,
“ப்ச் இறுக்கிதான் பிடிங்களேன் ஓனரே.” என அவர் முணுமுணுக்க, மனைவியின் ஆசையை தட்டாது, அவளை நன்றாக இறுக்கி அணைத்தவர், “இந்த இறுக்கம் போதுங்களா ஓனரம்மா?” என கிசுகிசுப்பாய் அவர் கூற, அதில் கூசி சிலிர்த்தவர், கணவனின் நெஞ்சில் முகத்தை அழுந்த பதித்துக் கொள்ள, அங்கே அவர்களுக்கான நேரம் உண்டானது.
அடுத்த நாள் விடிந்ததும், மீண்டும் ஒரு புத்தாடை அணிந்துக் கொண்டு குடும்பமாய் மதுரை மீனாட்சி அம்மனை தரிசிக்க சென்றனர். பிரணிதாவின் பேரில் பூஜை ஏற்பாடு செய்யப்பட்டிருக்க, அதை முடித்துக் கொண்டு, மதிய உணவினையும் வெளியே முடித்துவிட்டு அவர்கள் கிளம்பிய நேரம், அவரது போன் ஒலித்தது.
“அண்ணே, அந்த ரவிப்பைய வேலையக் காட்டிடாண்ணே” செல்வம் அழைத்து கூற,
“என்னாச்சு செல்வம்?”
“நாயி, தண்ணியடிச்சிட்டு போயிருக்காண்ணே, காரை ஓட்ட முடியாம மட்டை ஆகிட்டானாம், அந்த கோயம்புத்தூர் பார்ட்டி போனை போட்டு கத்துறாருண்ணே.”
“ஷ்ஷ், இப்போ வண்டி எங்கடா நிக்குது.?”
“சிம்மக்கல்லண்ணே.”
“சரி, விடு நான் மீனாட்சி அம்மன் கோவில்லதான் இருக்கேன். நான் பாத்துக்கிறேன். நீ அங்க கவனமா ஓட்டு.” என வைத்தவர், குடும்பத்தாரிடம் விவரத்தை கூறிவிட்டு, அவர் செல்ல முயல, பிரணிதா அடம்பிடிக்க தானும் வருவதாக, வேறுவழியின்றி அனைவரும் சிம்மக்கல் சென்றனர்.
அங்கே, ரவி டிரைவர் சீட்டிலே மட்டையாகி கிடக்க, பூவரசன் தான் மன்னிப்பு கேட்டார் அங்கிருந்த மாணிக்கத்திடம்.
“மன்னிச்சிடுங்க சார், புதுப்பையன் இப்புடி பண்ணிட்டான்.” என,
“என்னங்க, ஆள் பார்த்து வேலைக்கு சேர்க்க மாட்டீங்களா, எனக்கு இப்போ கோயம்புத்தூர் போயே ஆகணும்ங்க, வேற எதுவும் கேப் புக் ஆக மாட்டீங்குது இந்த டைம்ல. நல்ல ட்ராவல்ஸ்ன்னு நம்பித்தானுங்க புக் பண்ணேன்.” வேலை விசயமாக மதுரை வரை வந்திருந்தார் மாணிக்கம், இப்போது அங்கே மில்லில் ஏதோ பிரச்சினை என அவரின் தங்கையின் கணவன் தகவல் கூறியிருக்க, அவருக்கு போயே ஆக வேண்டிய நிலை.
பூவரசுவிற்கு என்ன செய்வது என்று ஒரு நொடி புரியவில்லை. இப்போதுதான் அவரது ட்ராவல்ஸ் கொஞ்சமாக முன்னேறி வருகிறது, இப்போது போய் இப்படி ஒரு கெட்டப்பெயரை வாங்க அவருக்கு விருப்பமில்லை, ஆக அவரே வண்டியை ஓட்டி செல்வதாக முடிவெடுத்து அதை குடும்பத்தாரிடம் தெரிவிக்க, பிரிணிதா ஒரே ரகளை,
“பூ அப்பா இன்னைக்கு என்கூடதானே இருக்கணும் நீங்க, எங்க போறீங்க போக கூடாது.” என அழுகையில் கரைய,
“அழாதடா பூக்குட்டி, அப்பா சாயங்காலம் நீ கேக் வெட்டுவறதுக்கு முன்ன வந்திடுவேன். என் செல்லம்ல அழாதடா அப்பாக்கும் அழுகை வருது.” பிறந்தநாள் அதுவுமாக மகள் ஏங்கி ஏங்கி அழகு, தாங்கவில்லை அவருக்கு.
பிராணியின் கண்ணீரை கண்ட, மாணிக்கத்திற்கு என்னவோ மனம் பிசைந்தது.
“அங்கிள், இன்னைக்கு என் பர்த்டே. அப்பா என்கூட தானே இருக்கணும். நீங்க கூட்டிட்டு போகாதிங்க ப்ளீஸ்.” என கெஞ்சிட, அவளது கண்ணீர் மனதை உறுத்திட, வேகமாய் அருகே இருந்த கடையில் ஒரு பொம்மையை வாங்கியவர்,
“இன்னைக்கு உங்களுக்கு பர்த்டேதானே, இந்தாங்க இந்த அங்கிளோட குட்டி கிப்ட்.” அவர் நீட்டியதை வாங்காது அவள் தகப்பனை பார்த்திட,
“வாங்கிக்க சொல்லுங்க சார், பர்த்டே அதுவுமா பிள்ளைய அழுகவச்சிட்டேன்.” மாணிக்கம் கூற,
“வாங்கிக்கோடா பூக்குட்டி.” என்றதும் மறுக்காது வாங்கிக் கொண்டவள்,
“தாங்க்ஸ் அங்கிள், அப்பாவா கூட்டிட்டி போறீங்களா?” என்க,
“ஒரு நிமசம்டா” என போனில் எதையோ செக் செய்தவர்,
“என்னை ஏர்போர்ட்ல மட்டும் விட முடியுமா? பர்த்டே அதுவுமா பாப்பாவ அழ வைக்க வேண்டாம் சார்.”
“அய்யோ இல்லீங்க ஒண்ணும் பிரச்சனை இல்லை, நான் கோயம்புத்தூருக்கே வரேன்.”
“இல்ல வேண்டாம்ங்க, ஏர்போர்ட்ல மட்டும் விடுங்க போதும். பாப்பா பேரேன்ன?”
“யுகபிரணிதா!”
“பிரணிக்குட்டி, உங்க அப்பாவ நான் கூட்டிட்டு போகலை கோயம்புத்தூருக்கு. ஆனா ஏர்போர்ட் வரை மட்டும் அங்கிளை ட்ராப் பண்ணிட்டு வரட்டுமா? சீக்கிரம் வந்திடுவாரு.” என,
சிறிது நேரம் யோசித்தவள்,
“சீக்கிரம் வந்திடுவாறா? ப்ராமிஸா!”
“ப்ராமிஸ்டா பாப்பா, அங்கிள் சீக்கிரம் அனுப்பி வச்சிடுறேன்.”
“ம்ம் ஓகே அங்கிள். பூ அப்பா சீக்கிரம் வந்திடனும் சரியா.” என்க,
அவளை அள்ளி அணைத்து தூக்கி முத்தமிட்டவர், “வந்திடுறேன்டா பூக்குட்டி.” என,
துரையும் பூவரசும் சேர்ந்து அந்த ரவியை தூக்கி ஆட்டோவில் ஏற்றி விட்டிருந்தனர். பின் துரையின் காரில் அனைவரும் ஏறிக் கொள்ள, பூவரசும், மாணிக்கமும் ஏறிக் கொண்டனர்.
“பாய் அங்கிள், பூ அப்பா ப்பாஸ்ட்டா வந்திடனும்.” மீண்டும் ஒருமுறை கூறிவிட்டு சிரித்த முகத்துடன் அவர்களை வழியனுப்ப, பெண்ணின் மகிழ்ச்சி முகத்தை கண்டவருக்கு நெஞ்சம் நிறைந்தும் போனது.
பூர்வாவை நோக்கி சிரிப்புடன் தலையசைக்க, அவரும் சிரித்தவாறு அனுப்பி வைத்தார். அவர்களின் அழகிய குடும்பத்தை கண்ட மாணிக்கத்திற்கு மனது சந்தோசமாய் உணர்ந்தது.
பிரணியின் சிரித்த முகம் அவர் நெஞ்சில் ஆழப் புதைந்து விட, தானும் சின்ன சிரிப்புடன் தலையசைத்து கிளம்பி விட்டிருந்தார்.
சிறிது நேரத்திலயே அவர்கள் அனைவரது சிரிப்பும் காணாமல் போவதை அறிந்திருக்கவில்லை ஒருவரும்.
“சார், நான் வேணும்னா கோயும்புத்தூர் வர வரவா?” பூவரசன் மனம் கேளாமல் கேட்க,
“நோ, நோ வேண்டாம்ங்க நான் பாப்பாக்கு ப்ராமிஸ் பண்ணிருக்கேன். உங்களை சீக்கிரம் அனுப்பி வைக்கிறதா, ஏர்போர்ட்ல மட்டும் ட்ராப் பண்ணுங்க.”
“சரிங்க சார்.”
“உங்க பாப்பா ரொம்ப அழகுங்க, நீங்கன்னா ரொம்ப இஷ்டம் போல”
“ஆமா சார், பூக்குட்டி அவுங்க அம்மா போல. எனக்கும் பூக்குட்டி தான் சார் எல்லாமே.” என, அடுத்த மாணிக்கமும் பூவரசனும் அதிகம் பேசிக் கொண்டனர் அவையனைத்தும் பிரணிதாவை பற்றியவையாக தான் இருந்தது.
இடையில், மாணிக்கத்திற்கு போன் வர,
“அய்யோ! எப்போ விமலா? சரி, சரி நான் ப்ளைட்ல தான் வரேன். பயப்படாதீங்க, சீக்கிரம் வந்திடுறேன்.”
“என்னாச்சு சார் ஏதும் பிரச்சனையா?”
“கோயம்புத்தூர்ல எனக்கு ஒரு மில்லு இருக்குங்க, அதுல பிரச்சினைன்னு தான் நான் அங்க போய்ட்டு இருக்கேன். இப்போ அங்கே லேபர்ஸ்குள்ள பிரச்சனைல அடிதடி ஆயிடுச்சாம், அதை தடுக்க போன என் பெரிய மச்சானுக்கு அடிபட்டிடுச்சாம்ங்க.” என,
“அச்சோ, ஒண்ணும் ஆகாது சார் சீக்கிரம் ஏர்போர்ட் போய்டலாம்.” என வண்டியின் வேகத்தை சிறிது அதிகப்படுத்தி ஓட்ட, வலப்புறமாக அவருக்கு பின் ஓட்டி வந்து கொண்டிருந்த சிறுவன் ஒருவன் திடீரென அவரை ஓவர் டேக் செய்ய முயன்று, வண்டியின் வேகத்தை அதிகப்படுத்தி அவரை முந்தி செல்ல முயன்று, காரின் கதவிற்கருகே உரசியவாறு வேகமாய் வர, அதனை எதிர்பாராத பூவரசன், சிறுவன் மீது மோதிவிடாமால் இருப்பதற்காக இடப்பக்கம் சட்டென ஸ்டியரிங்கை வளைத்து திருப்பிட,
அந்தோ! பரிதாபம்! எதிர்புறம் வந்துக் கொண்டிருந்த லாரியை கவனியாது விட்டு விட, கண்ணிமைக்கும் நொடியில் அனைத்தும் நடந்து முடிந்திருந்தது.
லாரி, காரினை இடித்த வேகத்தில் மாணிக்கம் தூக்கியெறிய பட்டிருக்க, வண்டியின் முன்பக்கம் பூவரசனோட நசுக்கப்பட்டிருந்தது. இடித்த வேகத்தில், அவர் தலை பின்பக்கம் பலமாய் மோதப்பட்டு, கண்ணாடி துகள்கள் முழுவதும் முகத்தை பதம் பார்த்திருக்க, ஸ்டியரிங்கின் மீதே விழுந்திருந்தார்.
சில நொடிகள்…!
அங்கே உயிரில்லா அமைதி மட்டுமே.
மெல்ல தூறல் ஆரம்பமாகி கண்ணாடி மீது விழுந்துக் கொண்டிருந்தது.
ஸ்டியரிங்கில் சாய்ந்திருந்த பூவரசனின் காதில் இருந்து ரத்தம் வழிய,
அவரின் போன் ஒலித்தது. மெல்ல கண்களை திறக்க முடியாமல் திறக்க,
திரையில்
“பூவம்மா!” என் பெயரோடு பூர்வா பிரணிதாவை தூக்கியபடி நிற்க, அதனை கண்டவரின் இதழ்கள் மெல்ல புன்னகையை சிந்திட,
‘பூவம்மா, பூக்குட்டி! பூ அப்பா போறேன்டா உங்களை விட்டு!’ அவர் உள்ளம் கதறிட, வாய்திறந்து கத்த முடியாமல் அவருக்கு இருட்டிக் கொண்டு வர, மெல்ல மெல்ல அவரின் உயிர் கூட்டை விட்டு பிரிந்திருந்தது.
பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு அனைத்தும் தயாராகி இருக்க, மீண்டும் ஒரு புது உடையை அணிந்துக் கொண்டு தந்தையின் வருகையை ஆவலாய் எதிர்பார்த்து வாசலில் அமர்ந்திருந்தபடியே,
“என்ன இன்னும் பூ அப்பா இன்னும் வரலை?”என்று ஒவ்வொரு நிமிடமும் வாசலை எட்டி பார்த்துக் கொண்டிருந்தாள்,
பூவரசனின் பூக்குட்டி!