• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

கன்னமிட்ட கள்வனே - 1

நிதனிபிரபு

Administrator
Staff member
கள்வன் 1


“ஹேய் நிதா.. உன் டேர்ன் இப்போ… சொல்லு சொல்லு.. ட்ரூத் ஆர் டேர்” என்று தோழிகளின் பெரும் சந்தோஷ கூச்சலில், இவ்வளவு நேரம் மாட்டாமல் தப்பி தப்பி வந்த, நிதா என்னும் நிதன்யாஸ்ரீ மாட்டிக் கொண்டாள். தோழிகள் விளையாடும் ட்ரூத் ஆர் டேர் என்கிற சமீப காலத்தில் ட்ரெண்டான இந்த புதுமையான விளையாட்டில்..!

“மாட்டுனேனா? ஓஹ் நோ… வச்சி செய்வாளுங்களே?” என்று முகத்தை பாவம் போல வைத்துக் கொண்டாள் நம் நாயகி நிதன்யா.

“ஹேய்.. இவளுக்கு நான் தான் டாஸ்க் கொடுப்பேன்.. என்னை வச்சு செஞ்சாள்ல” என்று அருகில் இருந்த வீணா கைகளை பிசைந்துக் கொண்டு அவளை வில்லி போல பார்க்க…

அவளோ டி-ஷர்ட்டை முகத்துக்கு மூடிக்கொண்டு “ஓஹோ..நோ..! மீ பாவம் டி.. விட்டுடு வீணா” என்று பாவமாய் கெஞ்சினாள்.

“அது நீ எனக்கு டாஸ்க் கொடுக்கும் முன்ன யோசிச்சியா டி பக்கி?” என்று தன் முழு கை டீஷர்ட்டை முழங்கை வரை ஏற்றுவிட்டுக்கொண்டு இரு கைகளையும் பரபரவென தேய்த்துக் கொண்டு அவளுக்கு டாஸ்க் கொடுக்க தயாரானாள் வீணா.

“என்னடி இவ ஃபர்பாமான்ஸே பயங்கரமா இருக்கு.. ஏதோ ஹீரோயினை ரேப் பண்ண போற வில்லன் போல..” என்று அருகில் இருந்த மகிமா வயிற்றை பிடித்துக்கொண்டு சிரிக்க..

“ஆமா டி.. அப்ப இன்னைக்கு ஒரு‌ தரமான சம்பவம் இருக்கு..” என்று ஆர்வமாக தனது கண்ணாடியை மேலே கீழே இறக்கி பார்த்து சிரித்தாள் ரத்னா.

“பக்கி பக்கி எனக்கு ஏத்தாப்புல நீதானே உட்கார்ந்திருக்க.. அப்போ டாஸ்க் நீ தானே கொடுக்கணும். என்னடி அவளை கொடுக்க சொல்லிட்டு நீ வேடிக்கை பார்த்துட்டு உட்கார்ந்து இருக்க?” என்று ரத்னாவின் தலையில் கொட்டினாள் நிதன்யா.

“ஆமா இல்ல..! நான்தானே உனக்கு டாஸ் கொடுக்கணும். அவ எப்படி தரலாம்?” என்று இப்பொழுது கண்ணாடி பின்னே உள்ள தனது முட்டை முழியை விரித்துக் கொண்டு வீணாவை பார்த்தாள் ரத்னா.

“என் செல்லக்குட்டி புஜ்ஜி குட்டி பட்டு குட்டில.. நீ எனக்கு கிச்சான் சொல்லுடி.. உனக்கு பதில் நான் அவளுக்கு டாஸ்க் கொடுக்கிறேன். போன தடவை என்னை வைஞ்சு செஞ்சுட்டாடி..” என்று உதட்டைப் பிதுக்கிக் கொண்டு அழ ஆரம்பித்தாள் வீணா.

“போடி புளுகுனி உனக்கு டாஸ்க் மகிமா தானே சொன்னா” என்று நிதன்யா கூற..

“வாய்ஸ் தான் மகிமா ஆனா.. மைண்ட் நீ..! சோ உனக்கான டாஸ்கா நான் தான் கொடுப்பேன்” என்று ரெடியாக நின்று இருந்தாள் வீணா.

“ஆஹான்.. அப்படியான சந்தர்ப்பத்தை நான் உனக்கு கொடுக்கவே மாட்டேன்டி. நான் டேர் சூஸ் பண்ணா தானே நீ எனக்கு டாஸ்க் தருவ? நான் ட்ரூத் சூஸ் பண்றேன்‌ இப்ப என்ன செய்வ?” என்று அவளை பார்த்து வவ்வுளம் காட்டினாள்.

“என்னைக்காவது ஒரு நாள் நீ என்கிட்ட மாட்டாமல் போய்டுவ அப்ப இருக்குடி உனக்கு மகளே..” என்று சவால் போட்ட வீணா, அருகில் இருந்த ரத்னாவின் காதில் ஏதோ குசுகுசுக்க..

“ஓகே டி...” என்ற ரத்னா, “இந்த கேள்விக்கு உண்மையான பதில் மட்டும் தான் சொல்லணும்” என்றாள் நிதன்யாவை பார்த்து,

“உலகத்திலேயே உனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்காத ஒருத்தங்க யாரு? சொல்லு?” என்றாள்.

“எல்லாரும் புடிச்சவங்களா தானே டி கேட்பாங்க? நீ என்னடி பிடிக்காதவங்களை கேட்குற?” என்று மகிமா கேட்க..

“இருடி இருடி வெயிட் பண்ணு அவ சொல்லுவா..! கண்டிப்பா அப்படி யாராவது இருப்பாங்க.. அது தான் இன்ட்ரஸ்டிங்கா இருக்கும்” என்றதும்

‘என்னடா நம்ம நிலைமை இப்படி ஆயிடுச்சு! இப்ப சொல்லித்தான் ஆகணுமா?’ என்று யோசித்தவள் கண்களை மூடி வரிசைப்படுத்தி வந்தாள் அவளோடு பழகியவர்களை எல்லாம்…

கடைசியில் அந்த முகம்.. அந்த முகம் அது மட்டும் தான் சுத்தமா பிடிக்கவே பிடிக்காது என்று தலையில் ஆணி அடித்தது போல அவளுக்கு புரிய சற்றும் யோசிக்காமல்..

“இந்த உலகத்துல எனக்கு பிடிக்காத ஒரே ஒருத்தன் அவன் தான். அவன் மட்டும் தான்.. அந்த நெட்ட கொக்கு நரேந்திரா ராயுடு” என்றாள் பற்களை கடித்துக் கொண்டு நிதன்யா..!

“நரேந்திரா ராயுடு வா? அப்போ தெலுங்கு கரை பையனா டி..! வெரி வெரி இன்ட்ரஸ்டிங்..!” என்று கண்ணடித்த வீணாவை பார்த்து,

“ஆமா.. ஆமா..! தெலுங்கு தான்” முறைத்தாள் நிதன்யா.

“நரேந்திரா.. ம்ம்.. பேரு நல்லாருக்கு.‌ ஆள் எப்படி டி?” என்றாள் ரத்னா.

“அவன் பேரை சொல்லவே எனக்கு பிடிக்காது. இதுல அவனை வர்ணிக்க சொல்ற நீ? சும்மா சும்மா அவனை பத்தியே கேட்காதடி” என்று பற்களை கடித்தாள்.

“யாருடைய அவன்? இவ்ளோ வென்ஜன்ஸ் அவன் மேல இருக்கு உனக்கு? அந்த அப்பாவி யாருடி?” என்று கன்னத்தில் கை வைத்து மூவரும் ஒரே கோரசாய் கேட்டனர்.

“என்னங்கடி மூணு பேரும் கதை கேட்கிற எஃபெக்ட்ல உட்கார்ந்து இருக்கீங்க? ட்ரூத்க்கு ஒரு கேள்வி கேட்கணும். அதுக்கு உண்மைய மட்டும் சொல்லணும். நீங்க கேட்டீங்க நான் சொல்லிட்டேன்..! அவ்வளவுதான்.. இனிமே எக்ஸ்ட்ரா கொஸ்டின் எல்லாம் கேட்கக்கூடாது. நான் ஆன்சர் பண்ணவே மாட்டேன்” என்று முகத்தை சுருக்கி வைத்துக் கொண்டு அமர்ந்திருந்தாள் நிதன்யா.

“ஆஃபிஸ்ல எல்லோரையும் வம்பு பண்ணி கோபமாக்குற உன்னையே ஒருத்தன் கோபமாக்குற அளவுக்கு ஆட்டி படைத்து இருக்கான்னா.. அவன் எப்பேர்பட்ட கொம்பனா இருப்பான்? எனக்கு அவனை இப்பவே தெரிஞ்சுக்கணும்னு ஆசையா இருக்குடி..!” என்றாள் மகிமா.

“அடிங்க எரும..! என்னை ஒருத்தன் கோபப்படுத்தினான்னா அவனைப் பார்க்க உனக்கு ஆசையா இருக்குமோ? இருக்கும்டி இருக்கும். வெளுத்துடுவேன் பார்த்துக்க” என்று இவள் பற்களை கடிக்க ‘என்ன அப்படி விஷயம் இருக்கும்?’ மூவருக்கும் சுவாரசியம் தொற்றிக் கொண்டது.

காரணம் ஐடி துறையில் வேலை பார்க்கும் இந்த நால்வரும் வேலைக்கு இன்டர்வியூ வந்து இங்கே பெங்களூரில் போஸ்ட் ஆன நாள் முதல்.. இந்த ஒன்றரை ஆண்டுகளாக ஒன்றாகத்தான் குப்பைக் கொட்டிக் கொண்டு இருக்கிறார்கள்.

அதிலும் மகிமா கொஞ்சம் சாதுவான பெண்.. ரத்னா ஓகே என்ற ரகம். வீணா சட்டு என்று உணர்ச்சிவசக்கூடிய ரகம். இவர்கள் மூவரையும் ஆட்டிப்படைப்பவள் என்றால் அவள் நிதன்யா தான்.

அதற்காக கெட்டவள், அடுத்தவர்கள் மேல் பொறாமை கொண்டவள், எல்லாம் அர்த்தமில்லை..!

அவர் அவர்களுக்கு தக்கபடி பேசி அவர்களை சிலசமயம் கோபத்தின்‌ உச்சிக்கு இட்டுச் சென்று விடுவாள்.

சில சமயம் இணக்கமாக பேசி அவர்களே அவர்களது ரகசியத்தை அவளிடம் கூறும் அளவுக்கு வாய் வார்த்தைகளில் வித்தகி..!

அதே நேரம் ஒரு வார்த்தை அவளிடம் வேறு மாதிரியாக வந்தால் உண்டு இல்லை என்று ஆகிவிடுவாள். அது அவளது சீனியராக இருந்தாலும் சரி, டீம் லீடராக இருந்தாலும் சரி..!

எந்தவித கவலையும் இன்றி குறும்புகளோடு அதேசமயம் அனைவரிடமும் தோழமையுடனும் உதவி கேட்பவர்களுக்கு உதவி கொண்டு வாய் ஓயாமல் பேசிக்கொண்டு அந்த அலுவலகத்தில் வலம் வரும் நிதன்யாவை எல்லோருக்கும் பிடிக்கும் என்று சொல்ல முடியாது அதே சமயம் தவிர்க்கவும் முடியாது..!

ஏனென்றால் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் இவளிடம் வம்பு செய்தவர்களை வேறு ஒரு சந்தர்ப்பத்தில் வசமாக டீம் லீடரிடம் எதார்த்தம் போல பதார்த்தம் ஆக்கிவிடுவாள். அதற்கு பயந்தே அனைவரும் தள்ளி நிற்பது..!

இப்படி அனைவரையும் ஆட்டிப்படைக்கும் அவளையே ஒருவன் ஆட்டிப்படைத்திருக்கிறான் என்று அறிந்தால்.. கேட்பவர்களுக்கு ஆர்வமாக இருக்கும் தானே?

“சொல்லுடி.. சொல்லுடி..!” என்று மூவரும் ஆர்வமாக கேட்பதை பார்த்தவள்,

“ஏங்கடி நாளைக்கு சண்டே.. நைட் பொழுது போகாம ஏதாவது விளையாடலாம்னு கூப்பிட்டு, இப்ப என்னை வச்சு காமெடி பண்றீங்களா? இப்ப என் கதைய கேட்டு மூணு பேரும் என்ன பண்ண போறீங்க?” என்றதும்,

“அதெல்லாம் உனக்கு சொன்னா புரியாது நீ கதைய மட்டும் சொல்லு?” என்றாள் மகிமா.

மூவரும் இப்பொழுது நிதன்யாவுக்கு எதிரில் தலையணை போட்டு கவுந்து படுத்து கைகளை தாடைக்கு அடியில் கொடுத்து ஆர்வமாக அவளையே பார்த்திருந்தனர்.

“அவன் சின்ன வயசுல எங்க வீட்டுக்கு பக்கத்துல தான் இருந்தான். பக்கத்து பக்கத்து வீடு..! என் அண்ணனுக்கு ஜூனியர் அவன்”

“ஓஹ்.. அப்போ.. சைல்ட்ஹீட் ப்ரண்டா?” ரத்னா கேட்க..

“பிரண்டும் இல்ல ஒன்னும் இல்ல.. எப்ப பார்த்தாலும் ரெண்டு பேருக்கும் புடிச்சிக்கவே புடிச்சுக்காது..!” என்றாள் உதட்டை சுழித்து நிதன்யா.

“அப்போ சைல்டு கிரஷாடி?” என்றாள் மகிமா கண்ணடித்து.

“சைல்ட்ஹூட் ப்ரண்டும் இல்ல க்ரூப் இல்ல.. அவன் சைல்ட்ஹூட் எனிமி.. அந்த ராஸ்கல் நரேந்திரா..!” என்றவள் முகத்தில் அவன் மீதான பிடித்தமின்மை கோபம் நன்றாகவே தெரிந்தது மற்ற மூவருக்கும். அது இன்னும் அவர்களுக்கு சுவாரசியத்தை கொடுத்தது.

அதே நேரம்…

சென்னை நரேந்திரா வீட்டில்.. அவனது தந்தை ரவிச்சந்திரா ராயுடு, தாய் பல்லவி இருவரும் அவனுக்கு அருகே அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். தெலுங்கில் தான்.

“என்ன ரெண்டு பேரும் இப்படி என் பக்கம் வந்து பாசமா உட்கார்ந்திருக்கீங்க.. இது சரி இல்லையே? எதுக்கோ அடி போடுற மாதிரி இருக்கே?” என்றபடி தன் கையில் இருந்த லேப்டாப்பை மூடிவிட்டு அன்னை தந்தையை பார்த்தான்.

“வேற என்ன கேட்டிட போறாங்க உன்கிட்ட? பணமா நகையா இல்ல சொத்து பத்தா? எங்களுக்கு இருக்கிறது நீ ஒரே ஒரு பையன் டா.. அதான் சீக்கிரமா உனக்கு கல்யாணத்தை பண்ணி பார்த்திரலாம்னு அம்மா ஆசைப்படுறா..” என்றார் ரவிச்சந்திரா.

“ஏன்மா உனக்கு இந்த கொலவெறி? உன் புள்ள நல்லா இருக்குறது உனக்கு பிடிக்கலையா? எவளையாவது கட்டிக்கிட்டு வந்து உனக்கும் அவளுக்கும் டேர்ம்ஸ் சரியில்லாம போய்.. ஒரு பக்கம் பத்து மாசம் இந்த வயித்துல தான் உன்னை வச்சிருந்து கஷ்டப்பட்டு பெத்து வளர்த்தேனு நீ ஒரு காரணம் படிப்ப..

அந்த பக்கம் அவ உங்களையே நம்பி வந்த என்கிட்ட நீங்க எப்படி இப்படி நடக்கலாம்னு அவ ஒப்பாரி வைப்பா‌.. தேவையான இதெல்லாம் எனக்கு? ஐ அம் என்ஜாய் பேச்சுலர் லைஃப்..!" என்றான் தோளை குலுக்கி..!

“அடப்பாவி மகனே..!” என்று பல்லவி வாயை பிளந்து வைத்து அவனை பார்க்க ரவிச்சந்திராவோ கடகடவென்று சிரித்தார்.

“நல்லா சமாளிக்கிறாடா.. நீ உங்க அம்மாவை ஏமாத்தலாம் என்னை ஏமாத்த முடியாது. உன் வயசு தானே நிர்மலுக்கும்..! பாரு அவன் கல்யாணம் பண்ணி புள்ளையே பெத்துட்டான்” என்றதும் தந்தையை முறைத்தான் தனயன்.

“எதுல தான் கம்பேரிசன் பண்றதுனே இல்லையா உங்களுக்கு எல்லாம்? என்னால இப்போ கல்யாணம் பண்ணிக்க முடியாது” என்றதும் பல்லவியோ முகத்தை சோகமாக வைத்து அழும் குரலில்,

“அவ்வளவுதானா? எங்க மேல நீ வச்ச பாசம் அவ்வளோ தானா? உனக்கு கல்யாணம் பண்ணி சீக்கிரமே ஒரு பேர குழந்தையை பார்த்திட நினைச்ச என்னோட ஆசை கனவு எல்லாம் அவ்வளவுதானா?" என்று அவர் ராகம் படிக்க..

“ஆத்தா.. உங்களுக்கு யாரு பல்லவினு பெயர் வைச்சது?” கடுப்படித்தான் மகன்.

“ஏன் டா பல்லவின்ற பேரு நல்லாத்தானே இருக்கு?” என்று ரவிச்சந்திரா மனைவிக்காக பரிந்துக் கொண்டு வர..

“ஏன் சொல்ல மாட்டீங்க? அவங்கள பகைச்சிக்கிட்டா உங்களுக்கு பூவா கிடைக்காது. அதனால நீங்க உங்க பொண்டாட்டிக்கு சின்-சான் அடிப்பீங்க. ஆனா நான் அப்படி சொல்ல மாட்டேன் பா” என்று அன்னையின் கோபத்தை பெற்றுக்கொண்டு,

“பல்லவினு பேரு வைச்சாலும் வச்சாங்க உங்களுக்கு.. எப்ப பார்த்தாலும் ராகம் ராகமா பாடிக் கொண்டே இருக்கீங்க.. முடியல உங்க கூட..!” என்று சிரித்தான் மகன்.

“பாருங்க.. என்னை கிண்டல் பண்றான்” என்று மனைவியின் குழந்தை புகாரில் அவரின் தோளில் தட்டி கொடுத்து “நான் இருக்கிறேன்டா செல்லக்குட்டி நீ ஃபீல் பண்ணாத. அவன் கிடக்கிறான்.. அவனுக்கு தெரியுமா உன் அருமை” என்று கணவனாய் ரவிச்சந்திரன் சமாதானம் செய்ய..

“போதும் போதும் உங்க ரொமான்ஸ்..! போங்க அந்த பக்கம். நடுப்புற புள்ளைய வெச்சுட்டு அப்பாம்மா பார்க்கிற வேலையா இது?” என்று அவன் கொடுப்புக்குள் கூறி சிரிக்க..

“அதற்கு தான் டா மகனே சொல்றோம்.. நீயும் இந்த மாதிரி ஒரு பொண்ண கல்யாணம் பண்ணிக்கிட்டு ரொமான்ஸ் பண்ணு. உன்னை யாரு வேண்டான்னு சொன்னா?” என்று ரவிச்சந்திரன் திருப்பிக் கொடுக்க..

கையெடுத்து கும்பிட்டவன் “சரி என்ன கல்யாணம் பண்ணிக்கணும் தானே? பொண்ணு பாருங்க” என்று விட்டான்.

“நிஜமாவா?” என்று அத்தனை தரம் திரும்பத் திரும்ப கேட்டார் பல்லவி..

“மாதாஜி.. உங்களுக்கு என்ன பிரச்சனை? கல்யாணம் வேணாம்னு சொன்னாலும் பேசுறீங்க.. கல்யாணம் பண்ணிக்கிறேன் சொன்னாலும் நம்பாம பார்க்குறீங்க? என்னதான் நான் பண்ண?” என்றான் கோபமாக‌.

“சரிடா சரிடா.. கோச்சுக்காதடா” என்று மகனின் தாடையை பற்றி கொஞ்சினார் அன்னை.

“பொண்ணு எப்படி டா வேணும்?” என்று கேட்க..

“எனக்கு வேலைக்கு போற பொண்ணு தான் வேணும். அதுவும் என்னை மாதிரி ஐடி ஃபீல்ட்ல இருந்தா இன்னும் ரொம்ப சந்தோஷம்” என்றதும் பெற்றோர் இருவரும் ஒருவருரை ஒருவர் பார்த்து கண்ணடித்து சிரித்துக்கொள்ள..

“என்ன உங்க ரெண்டு பேரோட ஃபேஸ் எக்ஸ்ப்ரஷனே சரியில்ல? என்ன யோசிக்கிறீங்க?” என்று மகன் நெற்றி சுருங்க பெற்றோரை பார்த்து கேட்க..

“ஏன் டா உனக்கு நம்ம நிதன்யாவை பார்த்தா என்ன?” என்று தாய் கேட்டதும்..

“என்னது அவளா?” என்று அலறியவனோ,

“ஏம்மா‌. உனக்கு நான் என்ன பாவம் பண்ணினேன். அதான் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லிட்டேன் தானே.. அதுக்குன்னு என்னை நீ இப்படி பழி வாங்க கூடாது. உலகத்துல உனக்கு வேற பொண்ணே கிடைக்கலையா மா?” என்ற மகனைப் பார்த்து பெற்றோர் இருவரும்,

“ஏன்டா அவளுக்கு என்ன குறைச்சல்.. மூக்கு முழியுமா அழகா இருப்பா. நீ சொன்ன எல்லா தகுதியும் அவகிட்ட இருக்கு. வேலைக்கு போறா ஐடி தான். பிக்கல் பிடுங்கல் இல்லாத குடும்பம். இன்னும் வேற என்னடா வேணும் அதுவும் இல்லாம அவ என்ன அந்நியமா சொல்லு? சைந்தவியோட நாத்தனார் தானே?”

“ஆத்தாவுக்கு ஆசைய பாரு?” என்று அன்னையின் கன்னத்தில் லேசாக குத்தியவன்,

“உலகத்துல அவதான் கடைசி பொண்ணுனாலும் அவ எனக்கு வேணாம் வேணாம். வேற பொண்ண பாருங்க.. இல்லன்னா எனக்கு கல்யாணமே வேண்டாம்” என்றபடி தன் லேப்டாப்பை எடுத்துக்கொண்டு அறைக்குள் சென்று விட்டான்.

“என்னங்க இவன் இப்படி சொல்லிட்டு போறான்?” என்று கணவனிடம் முறையிட்டார் பல்லவி.

நாயகனை சைல்ட்ஹூட் எனிமி என்று பாவிக்கும் நாயகி ஒரு புறம்..

உலகின் கடைசி பெண்ணாக நாயகி இருந்தால் கூட.. அவளை திரும்பி கூட பார்க்க மாட்டேன் என்று வீராப்பாய் செல்லும் நாயகன் ஒருபுறம்…

பின் எப்படி இருவரும் சேர்வார்கள்?

தொடரும்..
 
Top Bottom