கள்வன் 2
“ஹாய் நிதா.. யூ லுக்கிங் கார்ஜியஸ் இன் திஸ் அவுட்புட்” தன்னதிரே ஜொள்ளு விட்டப்படி நிற்கும்
அவளது புதிய டீம் லீடர் பிரவீனை சற்று சங்கடமாக பார்த்து சிரித்து வைத்தாள் நிதன்யா.
அருகில் நின்ற மகிமாவோ “ஆனாலும் இந்த பூனை கண்ணனுக்கு வஞ்சகம் பாரேன்.. பக்கத்துல தான் நானும் நிக்கிறேன். என்னை விட்டுட்டு உன்னை மட்டும் ஜொள்ளுறான்.. பக்கி பய.. கோழி பய..” என்று பற்களை கடித்த படி சிரித்தாள் அவனை பார்த்து.
“உனக்கு பொறாமை.. பொறாமை..! ஆனாலும் அவன் என் டீம் லீட் டி.. திட்டாதடி பாவம்” என்று இவளும் பிரவீனை பார்த்து சிரித்துக் கொண்டு அருகில் இருக்கும் மகிமாவுக்கு மட்டும் கேட்கும் குரலில் சிரித்த முகமாகவே கூறினாள்.
“அந்த பயலுக்கு தமிழ் தெரியாது என்கிற தைரியத்துல தானே தமிழ்ல திட்டிக்கிட்டு இருக்கேன்.. மூஞ்ச பாரு சப்பி போட்ட மேங்கோ மாதிரி.. என்னமோ பாலிவுட்டுக்கே அடுத்த ஹீரோ இவன் தான்ங்குற மாதிரி என்ன அலட்டலு? என்ன அலட்டலு? சரியான செல்ஃப் டப்பா டி இவன்” என்று முடிந்தவரை தமிழிலேயே அவனை திட்டி தன் ஆற்றாமையை தீர்த்துக் கொண்டிருந்தாள் மகிமா.
இவர்கள் என்ன தன்னைப் பற்றி குசு குசு என்று பேசுகிறார்கள்? எப்படியும் தன் சார்மை தான் புகழ்கிறார்கள் என்று வெகு நிச்சயம் பிரவீனுக்கு.
ஹீரோக்கள் போல சிகையை ஸ்டைலாக கோதிக்கொண்டு “தென்.. நிதா ஹௌவ் இஸ் மை நியூ ஹேர் ஸ்டைல்?” என்று கேட்டான் நிதன்யாவிடம்.
“இந்த செல்ஃப் டப்பாவுக்கு கொழுப்பை பாரு. ரெண்டு பொண்ணுங்க நிக்கிறோம் உன்னிடம் மட்டும் அபிப்பிராயம் கேட்கிறான் இவனை.. இவனுக்கு நான் சாபம் கொடுக்கிறேன் டி.. கடைசி வரை எந்த பொண்ணையும் கரெக்ட் பண்ணாம.. சிங்கிளாவே சுத்தட்டும்” என்று பல்லை கடித்த மகிமாவை கண்டு நிதன்யாவுக்கு சிரிப்பு வர,
“அமைதி.. அமைதி.. அமைதியோ அமைதி டியர்” என்று அமைதிப்படுத்தினாள்..
“இதுக்கு மேல இவன் அட்ராசிட்டி என்னால தாங்க முடியாது நான் கிளம்புறேன்.. நீ பொறுமையாக இவன் கூட கடலை போட்டுட்டு வா” என்று போகும்போது பிரவீனை மேலும் கீழும் ஒரு லுக்கு விட்டவள்,
“விளக்கமாத்துக்கு பேரு பட்டு குஞ்சமாம்” என்று பிரவீனை பார்த்து தமிழில் சத்தமாக சொல்லி சென்றாள்.
மகிமா சொன்ன விதமே பக் என்று சிரிப்பு மூண்டது நிதன்யாவுக்கு. ஆனால் எதிரில் இருப்பவன் டீம் லீட் அல்லவா? அதனால் கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டாள். மகிமா வேற ஒரு ப்ராஜெக்ட்டில் இருப்பதால் அவளுக்கு வேறொருத்தன் டீம் லீடர்.
“ஹேய் வாட் வாட்? வாட் தட் கேர்ள் சேயிங்?” என்று கேட்டவனை கண்டவளுக்கு என்ன சொல்லி விளக்கம் அளிப்பது என்று தெரியவில்லை.
எதிரில் இருப்பவனோ டீம் லீடர் அவனை பகைத்துக் கொள்ளவும் முடியாது. அவனை வாரி விட்டுச் சென்றவளோ அவளது தோழி அவளையும் விட்டுக் கொடுக்க முடியாது.
“ஷி செட் யூ ஆர் லுக்கிங் சூப்பர் இன் திஸ் அவுட்புட்.!” என்று அவள் சமாளிப்பாக கூற..
அதன் பின்னே “ஓஹ்.. தட் ஐ க்நோ” என்றான் கர்வமாக..!
வழக்கம்போல இரவில் நான்கு தோழிகளும் ஒன்றாக அமர்ந்து உண்ணும்போது மகிமா பிரவீனை வைத்து செய்து விட்டாள்.
“இப்படி.. இப்படி நிக்கிறான் டி ஸ்டைல்னு நினைச்சு…” என்று அவனைப் போலவே நின்று காட்டினாள். மற்ற மூவரும் வெடித்து சிரித்தனர் அவளின் செயலில்..
“அவனும் அந்த மைதா மாவு மூஞ்சியும்.. ஆனாலும் அப்படி பர்ஃபார்மென்ஸ் பண்றான்டி.. இந்த இவளும்.. இளிச்சிக்கிட்டு நிக்கிறா” என்று நிதன்யாவையும் விடாமல் வாரினாள்.
ரத்னாவும் நிதன்யாவோட ப்ராஜெக்ட்டில் இருப்பவள் “எங்களுக்கு முன்னாடி எங்க டீம் லீடை இப்படி வாரின.. பிச்சு பிச்சு பார்த்துக்கோ” என்றாள் பொய் கோபமாக அவள்.
“ஆமா ஆமா.. உங்க டீம் லீட் சரியான வழிசல் பேர்வழி. அதனால நீங்க கேட்கும் போதெல்லாம் லீவு கொடுத்து பர்மிஷனும் கொடுத்துடுறான்ல.. அந்த தெனாவட்டு டி உங்களுக்கு. எங்க டீம் லீட் டான் ரஞ்சித் மாதிரி உங்களுக்கு எவனாவது கிடைச்சிருக்கணும்” என்று கடுப்பாக மொழிந்தாள் வீணா.
“அதுக்கு நாங்க என்ன செய்றது? அது நீங்க செஞ்ச பாவமடி பாவம்..!” என்று கூறிய நிதன்யாவிடம் ஹைஃபை கொடுத்துக் கொண்டாள் ரத்னா.
நால்வரும் இவ்வாறு ஒருவருக்கொருவர் அடித்து பிடித்து சிரித்து களித்து என்று அந்த ஹாலிலேயே படுக்கையை விரித்து தூங்கிவிட்டனர்.
வாழ்க்கை இப்படியாக நிம்மதியாக சந்தோஷமாக எந்தவித பிரச்சனையும் இன்றி சென்றால்.. அப்புறம் விதி தான் ஏது? அதை ஆளும் காலத்தேவன் தான் ஏது?
“நாணா... இன்னைக்கு நாங்க ஊருக்கு கிளம்புறோம் மறக்காம ட்ரெயினுக்கு டிக்கெட் புக் பண்ணிடு” என்றபடியே மகனுக்கு மதிய உணவை கட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தார் பல்லவி.
“ட்ரெயின் எல்லாம் வசதிப்படுமா? நான் உங்களுக்கு பஸ்ல புக் பண்றேன்” என்றதும்,
“ஆமாம் டா உங்க அம்மாவுக்கு இப்ப இளமை திரும்புது பாரு? எவ்ளோ நேரம் முட்டியை மடக்கி வச்சுக்கிட்டே உட்கார்ந்துட்டு போக முடியும்? எனக்கு அதெல்லாம் வேணாம்” என்றவரை ஒரு மாதிரியாக பார்த்தவன்,
“அட அப்டேட் ஆகாத அம்மாவே..!” என்று அவரது கன்னத்தை பிடித்து கிள்ளி “ஸ்லீப்பர் பஸ்ல தான் போட போறேன். நல்லா ஏசி காத்துல குளுகுளுன்னு உங்க புருஷன் கூட சொகுசா தூங்கிக்கிட்டு ஊர் போய் சேருங்க..” என்றான் கண்ணடித்து.
“படுவா பய.. கேலிடா உனக்கு” என்று மகனின் புஜத்தில் செல்லமாக அடித்தார் பல்லவி.
“ஈவினிங் சீக்கிரம் வா.. இன்னைக்கும் லேட்டாக வராத..!” என்று சொல்லியே அனுப்பி வைத்தார் மகனை ரவிச்சந்திரா.
“ஓகே பை கைய்ஸ்” என்று பெற்றோரிடம் விடைபெற்று அவன் வேலைக்கு சென்று விட.. இருவரும் அமர்ந்து உணவு உண்டுக் கொண்டிருந்தனர்.
“ஏன்ட்டி பாவா.. நிஜமாவே இவனுக்கு நம்ம நிதாவை பிடிக்கலையா? அவளுக்கு என்ன குறைச்சல்னு இவன் வேண்டாம்னு சொல்றான்?” என்று நொடித்துக் கொண்டார்.
“அதுவா வேற ஒன்னும் இல்ல. உன் பையனுக்கு நிதாவை கண்டா பயம்” என்றதும் இப்பொழுது மகனுக்கு சப்போர்ட் செய்யும் அம்மாவாய் கணவனை முறைத்தார் பல்லவி.
“ஹேய் பல்லவி.. நீ முறைச்சாலும் நான் சொன்னது தான் நிஜம். என்ன தான் உன் பையன் இப்போ டெரர்ரா இருந்தாலும்.. நாளைக்கு கல்யாணம் பண்ணா பொண்டாட்டிக்கு அடங்கி தான் இருக்கணும். அதுவும் சின்ன வயசுல அவளை என்ன பாடு படுத்தி இருக்கான்? எப்படி எல்லாம் கேலி பேசி இருக்கான்? நாளைக்கு அவளே பொண்டாட்டியா வந்தா அவ வச்சு திரும்ப செஞ்சிட மாட்டா? அந்த பயம்தான் உன் பையனுக்கு.!” என்றதும் இப்பொழுது கலகலத்துச் சிரித்தார் பல்லவி.
“அப்ப அவளையே கட்டி வச்சிருவோம் பாவா.. ரெண்டு பேரும் இப்படி கலகலன்னு சண்டையும் சச்சரவுமா குடும்பம் நடத்தினா நல்லா இருக்கும் இல்ல..” என்று கேட்ட மனைவியை ‘நீ எல்லாம் அம்மாவாடி?’ என்று பார்த்தார் ரவிச்சந்திரா.
“பாவா.. இந்த சண்டை சச்சரவு தான் பின்னாடி ஒருத்தரை ஒருத்தர் நல்லா புரிஞ்சுக்க உதவும். உனக்காக நான் விட்டுக் கொடுக்கிறேன்.. எனக்காக நீ விட்டுக்கொடுன்னு இருந்தா ஒரு கட்டத்தில் சலித்து போய்விடும்.. உன்னால என் ஆசை எல்லாம் இழந்துட்டேன்னு அவளும்.. உன்னால நான் பழகிய பழக்கத்தை எல்லாம் விட்டுட்டேன்னு அவனும் பின்னால சண்டை போட மாட்டாங்க இல்லையா? இப்பவே சண்டை போட்டு புரிஞ்சுட்டா பின்னால சந்தோஷமா இருப்பாங்கல்ல.!” என்ற மனைவியின் புது விளக்கத்தில் ஆவென்று வாயை திறந்து பார்த்தார் ரவிச்சந்திரா.
“நல்லா பேசுற பல்லவி நீ..” என்று அவர் புகழ..
“டீச்சராச்சே.. இது கூட இல்லன்னா எப்படி?” என்று சிரித்தார் பல்லவி.
“நாம ஊருக்கு போனதுக்கப்புறம் நிதாவோட ஜாதகத்தை நளினி கிட்ட வாங்கி நரேனுக்கு பொருத்தம் பார்ப்போமா?” என்ற மனைவியின் பேச்சை அங்கீகரித்துக் கொண்டதாய் தலையசைத்தார் கணவன்.
அதேபோல மாலை வேலை முடித்து சீக்கிரமாகவே வந்து சேர்ந்தான் நரேந்திரா.
அதற்குள் அவனுக்கு சில பொடி வகைகளையும் தொக்கு வகைகளையும் செய்து முடித்து ஃப்ரிட்ஜில் அடுக்கி இருந்தார் பல்லவி.
“அம்மான்னா அம்மா தான்..” என்று அவரின் கன்னம் கிள்ளி முத்தம் கொடுத்த அவனைக் கண்டு
“ஐஸ் வைக்காதடா படவா.. அடுத்த மாசம் ரிதிக்கு மொட்டை போடணுமாம் நிர்மல் குலதெய்வ கோவில வைச்சு.. ஏதோ வேண்டுதலாம். மாமங்காரனா உன் மடியில தான் உட்கார வைக்கணுமாம். நீ ஊர் வந்து சேரு.. எப்படியும் நிர்மல் உனக்கு போன் பண்ணுவார்” என்ற தாயின் பேச்சை கேட்டபடி அவர் பின்னால் கட்டிப்பிடித்து தாடையில் முகம் வைத்து நின்ற மகனை கண்டவருக்கு அவனது சிறு வயது தான் ஞாபகம் வந்தது.
“இன்னும் சின்ன புள்ள மாதிரி அம்மாவை கொஞ்சிக்கிட்டிருக்கிறதை பாரு.. பொண்டாட்டிய கொஞ்சுற வயசுல” என்ற அப்பாவின் கேலி பேச்சில்
“பொறாமை பொறாமை உங்களுக்கு..” என்று சிரித்தான் நரேந்திரா.
“மா சீக்கிரம் இங்கே வந்து செட்டில் ஆக பாருங்கம்மா” என்றான் எப்பொழுதும் போல மகன்.
“உங்க அப்பா ரிட்டையர் ஆயிட்டாரு தான். ஆனா நான் இன்னும் ரிட்டையர் ஆகல.. என்னோட பணி என் மாணவர்களுக்கு தேவை. அதனால ரிட்டையர் ஆனா கூட நான் அந்த ஊர்ல தான் இருப்பேன். அதுவும் இல்லாம உனக்கும் உன் பொண்டாட்டிக்கும் இடையில எல்லாம் நாங்க வரலப்பா. நீயாச்சு உன் பொண்டாட்டியாச்சு உன் புள்ள குட்டிகளாச்சு” என்று கழண்டுக் கொள்ளும் அன்னையைப் பார்த்து முறைத்தான் நரேந்திரா.
“அப்பா பாருங்கப்பா..” என்று அவன் தந்தையிடம் முறையிட,
அவரோ “பொண்டாட்டி சொல்லே வேதம்.!” என்றார்.
“எப்படியோ போங்க” என்று முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு நின்ற மகனைக் கண்டு உள்ளம் உருகினார் வழக்கம் போல அன்னையாய் பல்லவி.
அவனின் கன்னம் தட்டி “உனக்கு குழந்தை பிறந்தவுடன் அம்மாப்பா இங்கே தான்.. அதுவரைக்கும் உங்க பிரைவசில நாங்க தலையிட விரும்பல” என்று சிரித்தார் பல்லவி.
“ஆல்வேஸ் மை மம்மி ஸ்வீட் ..!” என்று அன்னையை அணைத்துக் கொண்டவன் அப்பாவின் கையையும் அழுத்தமாக பற்றி இருவருக்கும் விடை கொடுத்தான்.
அப்போது வீட்டுக்கு வெளியில் கேப் வந்து விட்டதாய் அவர்களுக்கு மெசேஜ் வர “நீ வர வேணாம் அவ்வளவு தூரம் வந்துட்டு திரும்ப வேற வரணும். நீ ரெஸ்ட் எடு நாங்க போயிட்டு உனக்கு மெசேஜ் பண்றோம்” என்று மகனின் பத்திரத்துக்காய் கூறிய தந்தையை கண்டு புன்னகைத்தான் நரேந்திரா..!
இதே புன்னகை முகம் அவனுக்கு இனி வாழ்க்கையில் தொடர்ந்து இருக்குமா?
பல்லவி ஊருக்கு சென்றவுடன் மகனுக்கு மறக்காமல் மெசேஜ் அனுப்பி வைத்தவர், அன்று ஓய்வு எடுத்து மறுநாள் தங்கள் மகளை பார்க்க சென்றார் கணவனுடன்.
அவரது சம்பந்தி வீடு வேற யாரும் இல்லை நிதன்யாவின் வீடுதான். நிதன்யாவின் அண்ணன் நிர்மல்குமாரை தான் நரேந்திராவின் தங்கை சைதன்யா காதலித்து திருமணம் செய்துக் கொண்டாள்.
இவர்களின் காதலுக்கு இருவர் வீடுமே பச்சைக்கொடி காட்டி விட, எந்தவித பிரச்சனை இன்றி.. சில பல சொந்தக்காரர்களின் முணகல் பேச்சு குத்தல் பேச்சோடு திவ்யமாய் அழகாய் முடிந்தது அவர்களது திருமணம்.
திருமணம் முடிந்த அடுத்த ஒரு ஆண்டில் பெண்மகவு அவர்களுக்கு..
ரிதி அவர்களது பெண்ணரசியின் பெயர். அடுத்த மாதம் மூன்றாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறாள் ரிதி..!
அவளுக்கு குலதெய்வ கோயிலில் மொட்டை அடித்து காது குத்த வேண்டும் என்பதாய் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதைத்தான் மகனிடம் முன்பே ஞாபகப்படுத்தி விட்டுச் சென்றார் பல்லவி.
நளினியும் பல்லவியும் பல வருட பழக்கமாய் பேர் சொல்லி தான் ஒருவரை ஒருவர் அழைத்துக் கொள்வது. சம்பந்தி என்றாலும் அதை தாண்டிய நல்ல நண்பர்கள் இரு குடும்பமும். நிதன்யாவையும் நரேந்திராவையும் தவிர்த்து..!
“என்ன சொல்ற பல்லவி நீ?” என்று நெஞ்சை பிடித்து அமர்ந்திருந்தார் நளினி.
நிர்மல்குமார் இன்னும் அலுவலகம் விட்டு வீடு வரவில்லை. அவனும் அவன் தந்தையைப் போல கவர்மெண்ட் எக்ஸாம் எழுதி அதிலேயே தேர்வாகி வில்லேஜ் ஆபிஸராக இருக்கிறான் பக்கத்து ஊரில்..!
மனைவியைப் போல தான் அதிர்ச்சியோடு அமர்ந்திருந்தார் கிருஷ்ணகுமார். ரவிச்சந்திரா தான் “என்ன கிருஷ்ணா தங்கச்சி தான் ஷாக்கில இருக்கிறாங்கனா.. நீயோ தங்கச்சி விட பெரிய ஷாக்ல இருக்க” என்று அவரைப் பற்றி உலுக்கினார்.
“நான் நிஜமா தான் சொல்றேன் நளினி. நீ நிதா ஜாதகத்தை கொடு.. பொருத்தம் பார்ப்போம் ரெண்டு பேருக்கும்.. பொருத்தம் இருந்தா அதுக்கப்புறம் பேசுவோம்” என்றார்.
“நீ சொல்றது எனக்கு புரியுது பல்லவி. இந்த கல்யாணம் நடந்தா நல்லாத்தான் இருக்கும். பிள்ளைங்க ஒருத்தருக்கு ஒருத்தர் துணையாகவும் இருந்துப்பாங்க.. ஆனா இவங்க ரெண்டு பேரும் ஒத்துக்கொள்ளணுமே?” என்று பல்லவியை கவலையாக பார்த்தார் நளினி.
“அதெல்லாம் ஒத்துப்பாங்க ஒத்துப்பாங்க..” என்று மகளுக்கு இரவு உணவுக்கு ஊட்டி முடித்து அவளை தூக்கிக்கொண்டு வந்த சைதன்யா கூற,
“நல்லா சொல்லு உன் மாமியாருக்கு” என்றார் பல்லவி.
“அத்தை மொதல்ல பொருத்தம் பார்ப்போம்” என்றாள் சைதன்யா..
“அதில்ல தன்யா.. என்னதான் ஜாதக பொருத்தம் இருந்தாலும் மன பொருத்தம்னு ஒன்னு இருக்குல்ல.. இப்போ உனக்கும் நிர்மலுக்கும் நாம் என்ன ஜாதகமா பார்த்தோம்? நீங்க ரெண்டு பேரும் நல்லபடியா குடும்பம் நடத்தல.. ஆனா இதுங்க ரெண்டுத்தையும் நினைச்சாலே லைட்டா எனக்கு நெஞ்சு வலி வருது” என்று நெஞ்சை நீவிக்கொண்டார் நளினி.
ஒரு வழியாக பல்லவியும் சைதன்யாவும் தான் பேசி பேசி அவரை கரைத்தனர்.
அதன்படி நாளைக்கு சென்று ஜாதகப்பொருத்தம் பார்க்கலாம் என்று அவர்கள் முடிவெடுத்திருந்த நிலையில்,
“யாருக்கும் யாருக்கும் பொருத்தம் பார்க்குறீங்க?” என்று அதிர்ச்சியோடு கேட்டான் நிர்மல்குமார், இவர்கள் சம்பாஷனையை பாதியில் காதில் வாங்கியவாறு.!
அட அடுத்தது நீயா? என்பதுபோல பார்த்தனர் நரேந்திரா குடும்பம் நிர்மல்குமாரை..!
தொடரும்..