9
தன் அதரங்களை அழுத்தமாக சிறை செய்தவனை நம்ப முடியாமல் நிதன்யா பார்க்க…
எவ்வளவு விரைவாக அழுதாதமாக அவளது இதழ்களை இழுத்து சிறை செய்தானோ, அவ்வளவு விரைவாக விடுவித்தவன், “ச்ச உன்னை பார்க்கவே எனக்கு பிடிக்கல.. போடி” என்று அவளை தள்ளி விட்டான் நரேந்திரா.
“போயும் போயும் இவளுக்கு போய் கிஸ் கொடுத்திட்டோமே… ச்சை.. என் ஃபர்ஸ்ட் கிஸ் இவக்கிட்டேயா கொடுக்கணும். அவனவனுக்கு எவ்வளவு எதிர்ப்பார்ப்பு இருக்கும் இந்த ஃபர்ஸ்ட் கிஸ்ல, அதுவும் அதை கொடுக்கும் பொண்ணுக்கும்.. ஆனா எனக்கு… உலகத்திலேயே எனக்கு பிடிக்காதவளுக்கு போய் கிஸ் பண்ணி இருக்கேன்.. லூசு டா நீ” என்று நொந்துக் கொண்டே சென்றான்.
அவன் பேசியது அத்தனையும் தெள்ள தெளிவாய் அவளுக்கு காதில் விழுந்தது. ஆனால் அவள் உடலின் ஒவ்வொரு அணுவும் அவன் கொடுத்த அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை..! வெளிவரவில்லை!
“இல்ல புரியல… இவன் என்ன சொல்லிட்டு போனான்? ஃபர்ஸ்ட் கிஸ் பிடிக்காத பொண்ணுக்கு கொடுத்தானாமாம்? என்னமோ நான் கேட்ட மாதிரி? உவ்வக்கு.. எனக்கும் இவன பிடிக்கல.. பிடிக்கல…! அது விட.. ஹௌ டேர் யூ இடியட்.. எனக்கு எப்படி இவன் கிஸ் பண்ணலாம்? இருக்கு டா மவனே இதுக்கு உனக்கு” என்று வேகவேகமாக அவளது உதடுகளை அழுத்தி அழுத்தி துடைத்தாள்.
“அறிவுகெட்டவன்… நார பைய.. எப்படி லிப்ஸ கடிச்சி வைச்சிருக்கான் பாரு.. முன்ன பின்ன கிஸ் கொடுத்து பழகாதவன் மாதிரி.. காஞ்ச மாடு கம்பங்காட்டுல பூந்த மாதிரி.. எரும மாடு” என்று அவனுக்கு வசவுகளைக் கொடுத்தவள், குளியலறையின் கண்ணாடி முன்னாடி தான் நின்றிருந்தாள்.
அவன் உதட்டு எச்சிலின் ஈரம் இன்னும் இருப்பதாய் அவளுக்கு தோன்ற.. தண்ணீரை வாரி இறைத்து இறைத்து முகத்தையும் உதட்டையும் அத்தனை கழுவினாள்.
ஏதோ மன தைரியத்தில் நரேந்திராவை திட்டினாலும்.. அவளது மனதோ அத்தனை காயமாக இரூந்தது. ரணமாக வலித்தது..!
“ஒரு பொண்ணுக்கு வலிக்க வைக்கணும்னா இப்படித்தான் அவளை ஹார்ஸ் பண்ணுவானாமா? இவன்லாம் ஒரு ஆம்பள? உன்னை நேரில் பார்க்கும்போது நான் கேட்கிற கேள்வில நீ நாக்கை பிடுங்கி கொள்ளணும்டா”
ஒருபக்கம் கண்ணீர் வழிய.. மறுபக்கம் வேக வேகமாக முகத்தை கழிவினாள். நிமிர்ந்து கண்ணாடியை பார்க்க.. அவன் அதரங்கள் உறவாடிய நேரம் கண் முன் வர.. மீண்டும் அழுகை பொங்க.. மீண்டும் மீண்டும் முகத்தை முக்கியமாக அவன் முத்தம் கொடுத்த உதட்டை கழுவினாள்.
வெளியில் கோபமாக சென்ற பெண் வீட்டுக்குள் வேகமாக வந்து அறை கதவினை அடைத்துக் கொள்ள பயந்து போன நளினி நிதன்யா அறைக் கதவினை வேக வேகமாக தட்டினார்.
“ஏய்.. நிதா.. கதவ தொறடி.. கதவ தொறனு சொல்றேன்ல… என்னடி பண்ற உள்ள.. சொல்றேன்ல கதவ தொறடி..” என்று அவர் எவ்வளவு திட்டியும் அவள் கதவினை திறக்கவில்லை.!
அவரோ பயந்து “என்னங்க இங்க வாங்க சீக்கிரம்.. இவ கதவ தொறக்க மாட்டேங்குறா.. என்னன்னு வந்து பாருங்க.. ஏங்க.. ஏங்க” என்று நளினி போட்ட சத்தத்தில் கிருஷ்ணா மட்டுமல்ல தங்கள் அறையில் மனைவியிடம் பேசாமல் அமைதியாக அமர்ந்திருந்த நிர்மல் குமாரும், தனக்குள் யோசனையாக அமர்ந்திருந்த சைதன்யாவும் அடித்து பிடித்து ஓடி வந்தனர்.
சற்று முன்தான் சைதன்யாவை அவ்வளவு அவன் திட்டி இருந்தான்.
“உன் அண்ணன என் தங்கச்சிக்கு பிடிக்கலைன்னா உடனே நீ நம்ம குழந்தையை அவகிட்ட இருந்து எடுக்கிட்டு வருவியா?” என்று கேட்டதும் அவளோ சற்று முறைப்போடு கணவனை பார்க்க..
“அப்போ என் தங்கச்சி நினைக்கிறது சரிதான் இல்லையா? இப்பவே நீ உன் அண்ணனுக்கு ஒண்ணுன்னா அதை எங்க ஃபேமிலி உள்ள ஆளுங்க கிட்ட காமிக்கிற.. அப்ப நாளைக்கு என் தங்கச்சி உன் அண்ணனை கல்யாணம் பண்ணிக்கிட்டா அப்ப அவங்களுக்குள்ள எதுனாலும் அதை இப்படித்தான் நீ காட்டுவ இல்லையா?” என்றதும் சைதன்யாவுக்கோ தான் செய்தது தவறோ மனம் தடுமாற ஆரம்பித்தது.
“நாம ரெண்டு பேரும் ஒருத்தர் ஒருத்தர் புரிஞ்சு நல்லா தெரிஞ்சு லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிட்டோம் தன்யா.. ஆனா நமக்கே ஏதாவது ஒரு பிரச்சனை வரும்போது நீ உன்னோட இன்னொரு முகத்தை காட்டுற. ஆனா அவங்க ரெண்டு பேருக்கும் சின்ன வயசுல இருந்தே ஆகாது. நாலு பின்ன எப்படி சண்டை போடாமல் ஒன்னும் மண்ணா குடும்பம் முடியும்? அவங்களோட சின்ன சின்ன சண்டையும் நம்ம குடும்பத்திலும் பிரதிபலிக்க ஆரம்பிச்சா.. நம்மளோட லைஃப் சேர்ந்து தான் பாதிக்கப்படும். அதனால என் தங்கச்சி எடுத்த முடிவு சரிதான். நான் அவளுக்கு சப்போர்ட் பண்ணுவேன்… இப்ப மட்டும் இல்ல எப்பவுமே நான் என் தங்கச்சிக்கு சப்போர்ட் தான்..” என்றவன் அவளை காய்ச்சி எடுத்திருந்தான்.
“அது எப்படி பிள்ளையை நீ வெடுக்கென்று என் தங்கச்சி மடியில் இருந்து தூக்கி வரலாம்? இதையே நான் உன் அண்ணன் வைத்திருக்கும் போது தூக்கி வந்து இருந்தால் உன் மனம் எப்படி இருக்கும்?” என்று அத்தனை பேசியிருக்க..
அதை எல்லாம் கேட்டு தனக்குத்தானே ‘நாம் செய்தது தவறோ? இவர்கள் பிரச்சினைய நான் என் ஃபேமிலிகுள்ள காட்டுறேனோ?’ என்று நினைத்துக் கொண்டிருந்தால் சைதன்யா
அவளே யோசிக்கட்டும் யோசித்து தெரிந்து வரட்டும் என்று நிர்மல் குமாரும் அவளை தொந்தரவு செய்யாமல் சற்று தள்ளி அமர்ந்து இருக்க அவர்களின் மகள் உறங்கி இருந்தாள்.
அந்நேரம் பார்த்து நளினி அறையின் உள்ள போன பெண் கதவை தாழிட்டு கொண்டு திறக்க மாட்டேங்கிறாள் என்ற சத்தம் போட்டு கணவனை அழைக்க… அறையில் இருந்த நிர்மல் குமாருக்கும் சைதன்யாவிற்கும் இது தெளிவாக காதில் விழ இரண்டு பேருமே பதறி அடித்துக் கொண்டு ஓடி வந்தனர்.
அதில் அத்தனை கண்டனம் ‘பாரு உன்னால தான்.!’ என்று நிர்மல் குமாரின் கண்கள் கோபத்தில் மனைவியை குற்றம் சாட்டியது.
இப்பொழுது தெள்ளத்தெளிவாய் ஒரு விஷயம் நன்கு புரிந்தது சைதன்யாவிற்கு.
“என் அண்ணன் இவளுக்கு வேண்டாம் என்று சொன்னது பெரிய சந்தோஷம். நாள பின்ன இவர்களுக்குள் இதுபோல் ஒவ்வொரு சண்டையும் வந்து இருவரும் முட்டிக்கொண்டு நின்றால்..அது எங்களின் காதல் வாழ்க்கையை தான் பாதிக்கும். தெய்வங்களாக உங்க ரெண்டு பேரையும் நாங்க சேர்க்கல.. சேர்த்தால் சேர்ந்திருந்த எங்களை நீங்க பிரிச்சிடுவீங்க போல..’ என்று மனதோடு புலம்பி கொண்டு ஓடி வந்தவள் அவள் பங்குக்கு நிதன்யாவின் அறைக் கதவை தட்டினாள்.
“சாரி நிதா.. கதவைத் திற நிதா.. நான் அது பாப்பாவ உன் கிட்ட இருந்து அப்படி தூக்கி வந்திருக்கக் கூடாது. எல்லாம் என் தப்பு தான்.. சாரி நிதா.. கதவை திற..” என்று அவளும் கலங்கிய குரலோடு கதவை தட்டினாள்.
நளினிக்கு மருமகள் மீது சிறு வருத்தம் தான். இப்படி வெடுக்கு என்று பிள்ளையை மகளிடம் இருந்து பிடுங்கி கொண்டு சென்று விட்டாளே என்று..! இப்பொழுது மருமகளே அதை புரிந்து வந்து மன்னிப்பு கேட்டதும் அந்த மன தாங்கலும் ஓடி விட.. ‘இப்பொழுது பெண் என்ன செய்கிறாளோ.. ஏதேனும் தப்பாக செய்து விடுவாளோ?’ என்று பெரும்பயம் தொற்றிக் கொண்டது அவருக்கு..
கிருஷ்ணகுமாருக்கும் ஒன்றும் புரியாத நிலை கல்யாண பேச்சு இப்படி விபரத்தில் கொண்டு போய் முடியும் என்று யோசித்தார்களா என்ன?
“என்னங்க பாத்துட்டு நிக்கிறீங்க கதவை உடைங்க..!” என்று சைதன்யா கத்த..
“இது என்ன சினிமாவாடி இல்ல சீரியலா? நான் ரெண்டு தட்டு தட்டி கதை உடைக்கிறதுக்கு? எங்க அப்பா அந்த காலத்திலேயே நல்ல பர்மா தேக்கா போட்டு கதவை பலமா செஞ்சு வச்சுருக்காரு.. எத்தனை தடவ உதைச்சாலும் அது உடையாது..” என்றவன் வேத வேகமாக கதவை அவனும் தட்ட..
“ச்ச.. நிம்மதியா ஃபீல் பண்ண கூட விட மாட்டங்குது இந்த ஃபேமிலி? இப்ப என்னவாம் உங்களுக்கு? என்று வெளியே அவர்கள் பதறுவதெல்லாம் தெரியாமல் இவளோ ‘இந்த முட்டாப் பயல் எப்படி எனக்கு முத்தம் கொடுக்கலாம்?’ என்ற ரீதியில் ஃபீல் செய்து கொண்டிருக்க.. அவர்களின் கதவு தட்டலில் அத்தனையும் தடைப்பட்டது.
கோபத்தோடு வந்து கதவை திறந்தவள் முகமோ அழுது அழுது இமைகள் தடித்து இருக்க.. அதற்கு மேல் முகத்தில் வாரி இறைத்த தண்ணீரும், அவள் அழுத்தி அழுத்தித் துடைத்து உதடும் அத்தனை அவள் முகத்தை சிவக்க வைத்திருந்தது.
“என்னடி ஆச்சு ஏன் இப்படி இருக்கு உன் முகம்?” என்று பதறி நளினி வந்து அவளை பார்த்து பதட்டமானார் என்றால். மொத்த குடும்பமும் அவளை சுற்றி நின்று கொண்டு என்னானது ஏதானது என்று விசாரிக்க…
“எனக்கு ஒன்னும் இல்ல ஆள விடுங்க..!” என்றாள் எரிச்சலாக..!
“உன்னை இனிமேல் தனியாக விட எண்ணமே கிடையாது. நீ பாட்டுக்கு உள்ள போய் கதவை சாத்திட்டு என்ன பண்ணாலும் எங்களுக்கு ஒன்னும் தெரிய மாட்டேங்குது வெளியில இருக்கிறவங்களுக்கு தான் பயத்துல அல்லு விடுது நீ வந்து ஹாலிலேயே உட்காரு தெய்வமே..!” என்று அவளை தரத்தரவென்று இழுத்து வந்து ஹால் சோபாவில் அமர வைத்தான் நிர்மல் குமார்.
ஒரு பக்கம் நளினி உட்கார்ந்து “இப்படி எல்லாம் போய் கதவை சாத்திக்காதடி ஒரு நிமிஷம் நான் பயந்துட்டேன்.. ஆளு தான் அளவுக்கு அதிகமாக வளர்ந்து இருக்க.. அறிவு கொஞ்சமாவது இருக்கா? நாங்க எல்லாம் எப்படி பயந்துட்டோம் தெரியுமா?” என்று ஒரு பக்கமும் அறிவுரையாய் கொட்டித் தள்ள..
“சாரி நிதா.. ஏதோ ஒரு கோவத்துல பாப்பாவ தூக்கிட்டு உள்ள போயிட்டேன். இனி அப்படி பண்ண மாட்டேன்” என்று சைதன்யா மறுபுறம் மன்னிப்பு கேட்க..
“உனக்கு பிடிக்கலைன்னா விடுடா நாம வேற மாப்பிள பாத்துக்கலாம் அதுக்குன்னு இப்படி எல்லாம் எங்களை பயமுறுத்தாத நீ” என்று குரல் கமற கிருஷ்ணகுமாரும் சோர்ந்து குரலில் கூற…
“இப்பவே உனக்கு கல்யாணம் நாங்க பண்ணி வைக்க போறோம்னு யார் சொன்னா? இன்னும் ஒரு வருஷம் போவட்டும். நீனும் உன்னோட வேலையில நல்ல ஒரு ஸ்டெடியாகு. அதுக்கப்புறம் மேரேஜ் பத்தி யோசிக்கலாம்” என்று நிர்மல் குமார் பேச.. இவளுக்கு தான் சற்று நேரத்தில் நம் குடும்பத்திற்கு என்ன ஆனது என்று தலை கிறுகிறுவென்று சுற்றியது.
அதற்குள் சைதன்யா சென்று சூடான தேநீரில் அதிக சக்கரை போட்டு கொண்டு வந்து கொடுத்து “இதை குடி எல்லாம் சரியாகும்” கொடுத்தாள்.
சூட்டோடு அதனை வாயில் வைத்தவளுக்கு உதட்டில் அந்த சூடு பட்டதுமே எரிந்தது.
அது நரேந்திராவின் உபயம் அல்ல எல்லாம் இவளாக செய்து கொண்டது தான்..!
“என்னாச்சு உன் லிப்ஸ்க்கு இப்படி தடிச்சு போய் இருக்கு” என்று சைதன்யா கேட்க.. அப்பொழுதுதான் தேய்த்து தேய்த்து இப்படி வீங்க வைத்திருக்கிறோம் என்று புரிய மானசீகமாக தலையில் அடித்துக் கொண்டாள் நிதன்யா.
மெல்ல தன் உதட்டை அவள் தடவி பார்க்க.. அவளின் முகத்தில் சிகரெட் ஸ்மெல் வர.. அந்த நாரேந்திரா அவளின் கண்ணுக்குள் வந்து நின்றான்.
“ச்சீ கருமம்” என்றபடி எழுந்தவள், வேகவேகமாக கிச்சன் ஓரத்தில் இருக்கும் வாஷ்பேஷனில் சென்று
மீண்டும் முகத்தைக் கழுவி சோப்பு போட… அவளின் கீழ் உதட்டில் ஒரே எரிச்சல். தண்ணீரில் அலசி விட்டு நிமிர்ந்து கண்ணாடியைப் பார்த்தாள்..
கண்ணாடியிலும் அவன் முகம் தான் தெரிந்தது.
நொத்தே விட்டாள்..! அதைவிட அத்தனை கோபம் வந்தது.
ஈர கையை கண்ணாடியில் உதறி. “ச்சீ.. நாயே.. அறிவு கெட்டவனே ஏன்டா இப்படி பண்ணி வச்ச?” என்றவள் அந்த கண்ணாடியை பார்த்து திட்டிக் கொண்டிருக்க..
“ஏன் டி? உனக்கு பேயா புடிச்சிருக்கு. லூசு மாதிரி தனியா பொலம்பிட்டு இருக்க” என்று அவள் பின்னாலிருந்து நளினியின் குரல் கலக்கத்தோடு கேட்க.. இவள் மெதுவாக திரும்பிப் பார்க்க மொத்த குடும்பமும் அவளைத்தான் விசித்திரமாக பார்த்துக் கொண்டிருந்தது.
‘அவ்வ்வ்.. இப்படி நம்பள தனியா புலம்ப வச்சு குடும்பத்துக்கிட்ட சிக்க வச்சிட்டானே அந்த நெட்ட கொக்கு?’ என்று மீண்டும் அவனை தான் மனம் என்னும் வானெலியில் வறுத்துக் கொண்டு இருந்தாள் நிதன்யா.
ஆனால் அவள் திட்டிக் கொண்டிருந்த அந்த நெட்ட கொக்கு அடுத்த ரெண்டு மாதத்தில் அவளுக்கே மேல் அதிகாரியாய் வந்து நிற்க..
அந்தோ பாவம் நிதன்யாவா? நரேந்திராவா?
தொடரும்..