வணக்கம் மக்களே!
நலம், நலமறிய ஆவல்!
மெய்யாகவே உங்க எல்லாரையும் மிஸ் பண்ணினேன். எப்படா திரும்பவும் கதையை ஆரம்பிப்பேன் என்று இருந்தது.
அதே நேரத்தில் இலங்கைப் பயணம் மிக மிக அழகாகவும் நிறைவாகவும் இருந்தது.
வீட்டில் காலடி எடுத்து வைத்த நிமிடம் அப்பா இல்லை என்கிற அந்த உண்மை மிகப் பலமாக முகத்தில் அறைந்தது. அம்மாவின் வயோதிகம் நேரில் பார்க்கையில் கண்ணீரைச் சுரக்க வைத்தது.
இதையெல்லாம் விழுங்கியபடி மூன்று வாரங்களை மிக மிக அழகாகக் கடந்தோம்.
முதல் பயணம் திருகோணமலை. போனமுறை போதும் போதும் என்கிற அளவில் காண்கிற பீச்சில் எல்லாம் குளித்ததில் இந்தமுறை குளிக்கப் போகவில்லை. ஆனால், போட்டில் சென்று டொல்பின்களையும் திமிங்கிலங்களையும் பார்த்தது மிக மிக அழகான அனுபவம். கூடவே திருக்கோணேஸ்வரர், இராவணன் வெட்டு, அழகான அந்த நீலக்கடல் எல்லாவற்றையும் ஒரு சுற்றுச் சுற்றினோம்.
புறா மலை செல்லவில்லை. ஆனால், உப்புவெளி பீச்சில் snorkeling போனோம்.
எனக்கு நீச்சல் தெரியாது. ஆனாலும் கடலுக்குக் கீழிருக்கும் அந்த உலகத்தைப் பார்த்தேயாக வேண்டும் என்று போனேன். பாத்த கணம் இதயம் வந்து வாய்க்குள் துடிக்கவில்லை. நான் பார்த்த கடலுக்குள்ளேயே விழுந்துவிட்டது போலிருந்தது.
அவ்வளவு பயம். வெளியுலகம் என்ன அழகு? மொத்த அழகும் கடலுக்குள் கொட்டிக்கிடந்தது. பார்க்க பார்க்கத் தெவிட்டவில்லை.
அடுத்ததாக ஒரு பெரிய வட்டம் போனோம். மட்டக்களப்பு, அப்படியே பதுளை, அதைத் தொடர்ந்து எல்ல, பேராதனை, கண்டி முடித்துக்கொண்டு வவுனியா வந்து சேர்ந்தோம்.
எல்ல குட்டி ஸ்பெயின் போன்று மிக மிக அழகாய் இருந்தது. நாங்கள் இரண்டு நாட்கள்தான் நின்றோம். யாராவது எல்லைக்கு போக பிளான் பண்ணினால் குறைந்தது 3 நாட்கள் அதற்கு மட்டுமே ஒதுக்குங்கள்.
இந்தப் பயணத்தில்தான் ஒன்பது வளைவுப் பாலம் பார்த்தோம். எனக்கு அந்த ட்ரெயினிலும் போக வேண்டும், அதே நேரம் அந்த ட்ரெயின் வரும்போதும் பார்க்க வேண்டும் என்று விருப்பமாக இருந்ததில் பிளான் பண்ணி பார்த்தோம். மறக்க முடியாத மிக மிக அழகான பயணம் அது.
நீர் வீழ்ச்சி, மலையேற்றம், ஊஞ்சல் ஆடுதல் என்று flying ravana வில் இருந்த அனைத்திலும் பிள்ளைகள் ஏறி இறங்கினார்கள்.
பேராதனைப் பூங்கா, பேராதனை பல்கலைக்கழகம், அங்கே நிரலும் சிசிரவும் உலாவிய இடங்கள், அஃபர் பாலம், அப்படியே பின்னவல யானைகள் சரணாலயம் என்று அது பெரிய வட்டமாக இருந்தது.
பிறகு ஒரு நாள் வெளிச்சக்கீற்று கதையில் வந்த கிம்புலாகல மலையேறினோம். ஈழத்துப் பழனி கோயில். இந்தப் பக்கம் ரீச்சா, மடுமாதா கோயில், வல்லிபுரம் ஆழ்வார் கோயில், அனந்தனின் ஏழாலை, பாவக்குளம் இதெல்லாம் எனக்கு நினைவிருப்பவை.
மிக மிக மகிழ்ச்சியாகப் போனது நாள்கள். அதுவும் பிள்ளைகள் நன்றாகவே அனுபவித்தார்கள்.
இலங்கை போகிறவர்கள் இளநீரை விட்டுவிடாதீர்கள். அங்கிருக்கும் சூட்டைத் தணிக்கும் ஒரே மருந்து அதுதான். எங்கள் வீட்டில் யாருக்கும் இப்ப வரை சளியோ காய்ச்சலோ வரவில்லை. அதற்கு இளநி மட்டுமே காரணம் என்பேன் நான்.
ஒரு வழியாக அம்மாவுக்கு விடைகொடுத்து, வீடு திரும்பி, இப்போது நாட்கள் வழமைக்குத் திரும்பியாயிற்று.
நானும் கதையை ஆரம்பிக்கலாம் என்று வந்துவிட்டேன்.
இனி நாம் நம் அழகிய அந்த உலகத்திற்கு வரலாம்.
உங்களோடு இரண்டு விடயங்கள் பேச ஆசைப்படுகிறேன்.
முகப்புத்தகத்தில் ஒரு சிலர் கொஞ்சம் கோபமாக, அல்லது நயமில்லாது சொல்லியிருந்தீர்கள். அளவுக்கதிகமான விளம்பரம் வருவதாகவும், அதனால் கதைகள் படிக்கும் ஆசையே போய்விடுகிறது என்று.
நானும் பல சைட்டுகளில் கதை படிப்பவள்தான். கூடவே, நம் சைட்டில் நடந்த போட்டியில் வந்த 52 கதைகளையும் ஒன்று விடாது படித்தவள்தான்.
மற்றைய சைட்களை விடவும் நம் சைட்டில் வித்தியாசமாக, அல்லது கூடுதலாக இருப்பது 15 செக்கண்டுகளுக்கு வரும் விளம்பர வீடியோ மட்டும்தான். அதைத் தாண்டி அதிகமான விளம்பரங்கள் எதையும் செட் பண்ணவில்லை. அந்த விளம்பரமும் ஒவ்வொரு மூன்று அத்தியாயங்களுக்கு ஒருமுறைதான் வருகிறது.
இரண்டாவது: தினமும் கதையின் அத்தியாயங்கள் தருவேன் என்று எப்போதுமே நான் சொன்னதில்லை. ஆனால், அதற்கு நிச்சயம் முயல்வேன்.
எனக்கும் வேக வேகமாக அத்தியாயங்களை எழுதிப் போட்டு, அதற்கு உங்களிடமிருந்து கிடைக்கிற கருத்துகளை, கிண்டல் கேலிகளை, விளையாட்டுகளை ரசிக்க மிகவுமே பிடிக்கும்.
ஆனால், அது தினமும் முடிவதில்லை. கிட்டத்தட்டப் பத்து மணி நேரங்களுக்கு மேலாக வேலை செய்கிறேன். கூடவே வீடு, குடும்பம், பிள்ளைகள் என்று வழமையான வேலைகள் உண்டு. அவற்றை எல்லாம் சமாளித்துத்தான் கதைகளை எழுதுவது நடக்கும்.
சில நாள்களில் என்னால் அத்தியாயம் தரமுடியாதபோது, நீங்கள் எதிர்பார்த்து ஏமாந்துவிடக்கூடாது என்பதற்காக, ஃபேஸ்புக் குரூப்பில் அறிவிப்புப் போடுவதும் நீங்கள் அறிந்ததுதான். அத்தனை பேரும் ஏற்றுக்கொள்வீர்கள்.
இதை நான் எதிர்பார்த்தேன், எரிச்சல் வருது, இதுக்குத்தான் தொடராக வருவதை வாசிக்க விரும்புவதில்லை போன்று சில வார்த்தைகள் ஒரு சிலரிடமிருந்து வரும்போது கொஞ்சம் ஒரு மாதிரி இருக்கும்.
அதைக் கொஞ்சம் தவிர்த்துக்கொள்ளுங்கள். இது அன்பான வேண்டுகோள் மட்டுமே.
எழுதுவது என்பது நான் மிக மிக நேசிக்கும் மனிதர்களுக்கு ஒப்பானது. அவ்வளவு பிடிக்கும். ஒரு நாள் கூட எழுதச் சோம்பியதில்லை. முக்கியமாக நான் படங்கள், சீரியல்கள், ஷோக்கள் என்று எதுவுமே பார்ப்பதில்லை. பார்க்கக் கூடாது என்று பார்க்காமல் விடவில்லை. என்னால் பார்க்க முடிவதில்லை. ஏனோ அதில் எனக்கு ரசனையே இல்லை. இங்கே ஏதாவது படங்கள் திரையிட்டால் தியேட்டர் போவோம். என்னளவில் அது என் குடும்பத்தோடு ஒன்றாகச் செலவழிக்கக் கிடைக்கும் நேரமாக இருக்கும்.
யூடியூபில் வீடியோக்கள் கேட்பேன். அது கூட வீடியோவாக ஒரு இடத்தில் இருந்து பார்ப்பதேயில்லை. காதில் ஒலியூட்டியைக் கொழுவிக்கொண்டு என் வீட்டு வேலைகளைப் பார்த்தபடியே கேட்பேன்.
எனக்கு இருக்கும் பொழுதுபோக்கு, எனக்குப் பிடித்தமானது எல்லாமே எழுதுவது மட்டுமே. என் எழுத்தின் மீது எனக்குச் சலிப்பு உண்டாகிறபோது, அல்லது கற்பனை வறட்சி வருகிறபோது யாரினதாவது கதைகள் வாசிப்பேன். அவ்வளவுதான்.
அப்படியிருக்க நேரமும் அமைந்து, என் கற்பனையும் நல்ல நிலையில் இருக்கையில் எழுதாமல் விடுவேனா?
தாராளமாக அடுத்த அத்தியாயத்தைக் கேளுங்கள். கூடவே உங்களின் ஏமாற்றத்தையும் என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. நீங்கள் ஆவலாக எதிர்பார்த்துக் காத்திருக்கும் வகையில் கதையை நகர்த்திக் கொண்டுபோய்விட்டு, அடுத்த அத்தியாயம் இதோ வந்துவிடும் என்று நீங்கள் காத்திருக்கும் நேரத்தில், வராது என்று அறிகையில் மெல்லிய ஏமாற்றமும் அது உண்டாக்குகிற அதிருப்தியும் உங்களை அப்படிப் பேச வைக்கிறது என்று புரியாமல் இல்லை.
ஆனால், நான் என்பது நான் மட்டுமே இல்லை இல்லையா? என் வேலைகள், என் கடமைகள், என் மனநிலைகள் அத்தனையும் ஒரு அத்தியாயம் எழுதுவதில் பாதிப்புச் செலுத்தும்.
நான் சொல்ல வருவது ஒன்றே ஒன்றுதான். அர்த்தமற்று அத்தியாயங்கள் எழுதாமல் நான் இருப்பதேயில்லை என்பதை மட்டும்தான்.
அடுத்த முக்கியமானது. எனக்கு இதைச் சொல்லவே சங்கடமாக இருக்கிறது. ஆனாலும் வேறு வழியில்லை.
மன்னிப்பாயா காதலே கதை வாசித்திருப்பீர்கள். எனக்குப் பொங்கல் வைத்த கதையை மறப்பீர்களா என்ன? அதிலே மிக அழுத்தமான இடம் ஒரு சிலது உண்டு இல்லையா?
அவன் வீட்டுக்கு அவள் முதல் முதல் வருகையில் நடக்கும் காட்சி.
சமீபத்தில் ஒரு கதை பற்றிய போஸ்ட் பார்த்தேன். ஒரு சில விடயங்கள் கிளிக் ஆனது. ஓடிப்போய் அந்தக் கதையின் ஒரு சில அத்தியாயங்களை வாசித்தேன். உன் அன்புக்கு நன்றியையும் மன்னிப்பாயா காதலையும் கலந்து கட்டியதுபோல் இருந்தது. மிகுதியை வாசிக்காமல் ஓடி வந்துவிட்டேன்.
எனக்கு அதை வாசித்து, என் சந்தேகம் உண்மைதானா என்று உறுதி செய்யவே பயமாக இருக்கிறது. அப்படி இல்லை என்று அறிந்தால் மிகவும் மகிழ்வேன். என்ன நிலைக்கு நான் வந்துவிட்டேன் பாருங்கள். இல்லாமல் அப்படித்தான் என்று உறுதியானால் என்னால் சும்மா போக முடியாது. அதனால் உறுதியாகாமலேயே இருக்கட்டும் என்று விட்டுவிட்டேன்.
சும்மா தொட்டதற்கும் இது என் கதை என்று சிறுபிள்ளைபோல் நிற்கிறவள் இல்லை நான். ஒரு கதையைத் தனித்துக் காட்ட என்று சில காட்சிகள் தானாகவே அமையும். அவை அப்படியே வேறு எங்கும் வருகிறபோது வேதனையாக இருக்கும். பலமுறை சொல்லியாயிற்று. உங்கள் மனம் குறுகுறுக்காதபடிக்கு எழுதுங்கள் போதும்.
அடுத்த முக்கியமான விடயம். அமேசான் அக்கவுண்ட் திருப்பித் தந்திருக்கிறான். மறுபடியும் எப்போது போகுமோ தெரியாது. அப்படிப் போகிற வரை வாசித்துக்கொள்ளுங்கள்.
பலர் என் பெயர் போட்டுத் தேடினால் வரவில்லை என்று சொல்லியிருந்தீர்கள். காரணம் எனக்கும் தெரியவில்லை. என் பெயர் போட்டுக் கிடைக்கவில்லை என்றால், என் கதைகளின் ஏதாவது ஒன்றின் பெயரைப் போட்டுத் தேடுங்கள் கிடைக்கும்.
அழகென்ற சொல்லுக்கு அவளே நாவலினை இரண்டு நாட்களுக்கு முதல்தான் அமேசானில் போட்டிருக்கிறேன்.
வேறு என்ன சொல்லட்டும்? விரைவில் கலிங்கனோடு சந்திப்போம் சரியா? அச்சோ முக்கியமான விசயம். இந்தக் கதை முழுக்க முழுக்கக் கற்பனைதான். காரணம் எனக்கு ஒரு அனுபவம் இருக்கும். அதனால் முன்னறிவிப்பாகச் சொல்லிவிடுகிறேன்.
இந்தக் கதையில் வரும் சம்பவங்கள், பாத்திரங்கள் அனைத்தும் கற்பனையே கற்பனையே கற்பனையே!
விரைவில் சந்திக்கலாம்.
நட்புடன் நிதனிபிரபு

- சைட்டில் வரும் விளம்பரம்
- நான் அத்தியாயங்கள் போடும் விதம்

Last edited:
Author: நிதனிபிரபு
Article Title: கலிங்கனின் காவியம் ஆரம்பிக்க முதல் :
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.