பன்னிரெண்டாம் அத்தியாயம்
காதல் எங்கள் சொந்தம்
அத்தியாயம்.. 12
மனசுக்கும் மனசுக்கும் பிடிச்சுப் போச்சு.... அப்புறம் என்ன.! காதல் சண்டை.. ஊடல் எல்லாம் ரயில் பெட்டி போல் வரும். எல்லாம் வெளிப்படுத்த சொற்கள் சில சமயம் உதவாது. தயக்கமான விஷயத்தை நேரில் சொல்ல முடியாத போது, அங்கே கடிதம் தேவைப்படுது. இமெயில் அல்ல.... அது வெறும் அச்சு. பேனாவை கை பிடித்து எழுதியவரின் கடிதத்தில்.... இதயம் பேசும்.
அதிகாலை நேரத்தில் எழுந்த காவ்யா.... நிரஞ்சன் கடைசியாக எழுதி, அவள் பார்வைக்கு வைத்துவிட்டுப் போன கடிதத்தை எடுத்தாள். வார்த்தைகளை எண்ணி எண்ணி.. யோசித்து யோசித்து.. மன பாரத்துடன் அவன் எழுதிய கடிதம் அது.
அன்பு காவ்யா..... உன்னிடம் கொடுத்த என் இதயத்தை நான் திரும்ப எடுத்துக்கறேன். அதை வேறு யாரிடமும் கொடுக்க அல்ல. என்னிடமே இருக்கும். ஏன்னா அதில் உன் வாசமும் கலந்திருக்கே.! அதுவே எனக்குப் போதும். ஒரு முக்கியமான பணி காரணமா செல்கிறேன். திரும்பி வருவேன்னு உறுதி இல்லை. வரலை எனில்.... பூவும் பொட்டுமாக ஒருவனை கைபிடிக்கணும். குழந்தை செல்வம் பெற்று, நீ நீடூழி வாழணும் அம்மா.. என் முத்தங்கள் காதலுடன்.... நிரஞ்சன்.
எத்தனை முறை எடுத்துப் படித்திருப்பாள்.! காகிதம் மடங்கி.. மடங்கிய இடத்தில் சற்றே கிழிந்தும் இருந்தது. கோவலன் மாதவியைத் தேடி ஓடினான். அது புரிந்து கொள்ள முடிந்த ஒன்று. ஆனால் நிரஞ்சன்.. எதைத் தேடி ஓடிவிட்டான்.? யாரைக் காப்பாற்ற ஓடிவிட்டான்.? மறந்துவிடு என்று சொல்ல அவனுக்கு ஏது உரிமை.? புரியவில்லை. ஒரு மாதம் அவள் சிறகொடிந்த பறவை போல் இருந்தாள். வேதவல்லி அம்மாவுக்கு மகள் நிலைமை புரிந்தது. அவளும் நிரஞ்சனும் காதலித்தது அம்மாளுக்குத் தெரியும்..
“காவ்யா.... அவன் வருவான் மா. இந்தச் சின்ன பிரிவை கூட உன்னால் தாங்க முடியாதா.? நீ குளித்தே நாலு நாள் ஆகுது. இப்படியே இடிஞ்சு போய் உக்காந்தா எப்படி.?”
“அம்மா.... இது சின்னப் பிரிவு இல்லமா. வருவாரோ இல்லையோ என்கிற சந்தேகமான பிரிவு. மண்டை உடையுது மா.” அவன் கடிதத்தின் சாராம்சத்தை சொன்னாள். இரண்டு வருடம் ஓடிவிட்டது. வருவான் என்ற நம்பிக்கை மட்டும் ஓடவில்லை.
அவள் செல் கூப்பிட்டது. சந்திரன்.! வானத்து சந்திரன் ஒளி இழந்து நிழலாக விடைபெற்றுக் கொண்டிருந்தான். ஆனால் இந்தச் சந்திரன் சூரியன் போல் உதயத்தில் வருகிறான்..
“ஹலோ.. சொல்லுங்க சந்திரன்....” ஆசையுடன் பேசினாள்.
“காவ்யா.... யாரந்த பிரசாத்.? அவனால் உனக்கு ஆபத்துன்னு புரியுது. என்னாச்சு சொல்லு.?”
இவனுக்கு எப்படித் தெரிஞ்சுது.? ஹேமா சொல்லப் போவதில்லைன்னு சொன்னாளே..
“லைனில் இருக்கியா.?”
“இருக்கேன் சந்திரன். அது ஒண்ணுமில்ல.” சுருக்கமாக விளக்கினாள். “நாங்க போலீஸ் கம்பிலேண்ட் கொடுத்திருக்கோம்”
“அசட்டையா இருக்காதீங்க. நா ரெண்டு நாளில் அங்க வரேன். நேரில் பேசறேன்.... பத்திரம்.”
“உங்களுக்கு எப்படி தெரிஞ்சுது.?”
“அம்மா சொன்னாங்க. உடனே என்னை வந்திட்டுப் போகச் சொன்னாங்க. என்னிடம் எதையும் மறைக்காதே காவ்யா. உனக்கு ஒண்ணுன்னா நா வந்து நிப்பேன்.... ஒரு நல்ல நண்பனா.”
“தேங்க்ஸ் சந்திரன்... உங்க அன்பு கிடைக்க நா நா....”
“இட்ஸ் மை பிளசர். கவலையா இருக்கு காவ்யா. டேக் கேர்.” கண்கள் நீரில் மிதக்க.. பதில் சொல்ல முடியாமல் அவள் தொன்டடை அடைத்துக் கொண்டது. இருளும் போது தூரத்தே ஒரு சுடர் தெரிஞ்சா எப்படி இருக்கும்.! மனம் பூராவாக தைரியம் அடையும். காவ்யாவுக்கு அந்த தைரியம் வந்தது. நமக்குன்னு ஒரு அன்பு இருக்கு.. நாம தனி இல்லை.!
பிற்பகல் மூன்று மணி இருக்கும் அமுதன் காவ்யாவை தேடி வந்தார். “அம்மா.. உங்க கூட பேசணும்மா. டயம் இருக்கா மா.?
“சொல்லுங்க அமுதன்.... டீ எஸ்டேட் பக்கம் போறேன்..”
“அம்மா.... கொஞ்ச நாள் நீங்க எங்கும் போக வேண்டாம். பிரசாத் பைய சுத்திக்கிட்டு இருக்கான். நம்ம தண்டபாணி பார்த்தானாம்.”
“பார்த்தானா.? எதை.?”
“பிரசாத்..பையின் மரக் காடுகளில் ஒளிந்து கொண்டு.. உங்களை தாக்க ரெண்டு ரௌடிளை அனுப்பியதை பார்த்தானாம். உதவிக்கு விரைந்து வந்திருக்கான்... அதுக்குள்ள அதுங்க ரெண்டும் விழுந்து வைக்க, நீங்க தப்பி ஓடியதையும் பார்த்தான்னு சொல்றான். வெளியெ போக வேண்டாம் மா.... சுப்ரமணி சார் பாரத்துக்குவார்.”
“அதுவும் சரிதான். சசி எப்படி இருக்கா.?”
“சசி.. சசி.... “
“என்னாச்சு சசிக்கு.?”
“சசிக்கு ஒண்ணுமில்லா மா. பார்த்தா பாவமா இருக்கு. அம்மா இறந்த துயரம் தான் அதை வாட்டுது...”
வள்ளி ரெண்டாம் தார சித்தியாக சசியை கொடுமைப்படுத்துவதை சொல்லி காவ்யா மனசை மேலும் சங்கடத்துக்குள்ளாக்க விரும்பாமல், அமுதன் அது பற்றி சொல்லாமல் விட்டான்.
“எல்லாம் சரியாயிடும்....காலம் தான் மருந்து. பாவம் குழந்தை.”
“அப்ப நா வரேன் மா. இதை சொல்லிட்டுப் போகத் தான் வந்தேன்.”
காவ்யா அவர் போனதும் ஹேமாவை பார்க்க கீழே போனாள்.
“ஹாய் ஹேமா.. எங்க கிளம்பிட்டே.? இந்த அதிகாலை குளிரில்.?”
“வாக்கிங் தான்.... நீயும் வாயேன் காவ்யா. ஸ்வெட்டர் இருக்கவே இருக்கு குளிருக்கு இதமாக.”
“இல்லே ஹேமா.. கொஞ்சம் ஆடிட்டிங் வொர்க் இருக்கு.. ஆடிட்டர் கோபி வருகிறார்....”
“ஓ.... அப்படியா.?”
நிர்மலை பார்க்கத் தான் போகிறாள். காவ்யாவுக்கு தெரிய வேண்டாம் என்று நினைத்தாள். அவள் சந்திரனிடம் சொல்லக் கூடும். வெளியே செல்லாதேன்னு தடை போடுவான்.
இன்பா வழக்கம் போல் அவளுக்கு செல்ல வரவேற்பு கொடுத்தது. அதனிடம் பேசிக் கொண்டே அவள் வர..
“குட் மார்னிங் காவ்யா..” என்றான் அடுப்படியில் நின்றபடி.
“என்ன செய்யறீங்க.?”
“காப்பி போடப் போறேன்..” லேசாக இருமினான்.
“தள்ளுங்க நா சுக்குமல்லி காப்பி போடறேன். இருமல் ஓடிப் போயிடும்..... அது தான் எனக்கு நல்லாத் தெரியும். அப்பாவுக்கு அடிக்கடி போட்டுக் கொடுப்பேன்....”
“தேங்க்ஸ். யூ லுக் பியூட்டிபுல் ஹேமா. உன் சுருள்முடி உன் முகத்துக்கு நேர்த்தியா இருக்கு.. ஸாரி.. தப்பான அர்த்தத்தில்..”
“கம் ஆன்.... ஈசி. அகில் கூட அப்படித்தான் சொல்வான்.” சொல்லிவிட்டு நாக்கை கடித்துக் கொண்டாள். அகில் யாரென்று கேட்பானே.. என்ன சொல்வது.?
“யாரந்த அகில்.? காதலன்.? நண்பன்.? அண்ணன்.?”
“வந்து....” அவள் கண்களில் குளமாக கண்ணீர். அவன் பதறிவிட்டான்.
அவள் மூடை கெடுத்துவிட்டதுக்கு “ஸாரி.... சட்டுன்னு கேட்டுட்டேன். நா கேட்டேன்னு மறந்திடுங்க....” அவன் குரலில் இருந்த அக்கரையும் கண்ணியமும் அவளுக்குப் பிடித்தது.
“அகில் என்னோட எக்ஸ் காதலன். அவனுக்கு கல்யாணம் நிச்சயமாகிவிட்டது... காதல் எனக்கு சொந்தமில்லாமல் போய்விட்டது. தட்ஸ் ஆல். டைம் டு வர்கெட். டைம் டு ஹீல்.” வந்த தோல்வி உணர்வை விரட்டி அடித்து கண்களை துடைத்தாள்.
“இந்தாங்க சுக்குமல்லி காப்பி..” வெல்லம் ஏலக்காய் வாசனையுடன் காப்பி ஜோராக இருந்தது. அவன் ஆர்வமுடன் குடித்தான்.
“எப்படி இருக்கு.?” வீராங்கனை போல் கேட்டு சிரித்தாள். இப்படி சிரித்து தான் எவ்வளவு நாட்கள் ஆகிவிட்டது.!
“செம.... எங்கம்மா தயாரித்ததை தான் புகழ்வேன். அண்ணி சுகுணா சமைத்ததை கூட நொட்டை சொல்வேன். பாவம் அண்ணி.”
“நீங்க ரொம்ப மோசம்....”
“அதிருக்கட்டும். இன்னிக்கு மங்களம் மாமி வர மாட்டாங்க. மகளுக்கு வளைகாப்பாம்..”
“வாவ்.. லக்கி மகள். அவங்க வளைகாப்புக்கு உங்களை கூப்பிடலையா.?”
“கூப்பிட்டாங்க.. நான் தான் எங்கும் போறதில்லையே....”
“போயிட்டு வாங்க. ஆசீர்வாதம் பண்ணி.... ஏதேனும் கிப்ட் கொடுத்திட்டு வாங்க..”
“நீங்க என் கூட வந்தா நான் போறேன்.”
“நானா.? ஏதேனும் பிரச்சனை வரும். அழையாத விருந்தளியா எப்படி போறது.?”
“மங்களம் மாமிக்குத் தான் உங்களைத் தெரியுமே. சந்தோஷமா வரவேற்பாங்க. ப்ளீஸ் வாங்க..”
கலகலன்னு பேசும் சுற்றம். தாய்மை அழகோடு ஒரு பெண். கை நிறைய வளையல்கள்.. பூரிப்பு. அதை பார்க்க கோடி கண் வேண்டும்.... என்ஜாய் ஹேமா என்றது மனசு.
“எனக்கு உற்சாகம் கொடுத்தீங்க. மூலையில் உக்காந்து வீட்டை பூதம் போல் காத்துக்கிட்டு இருக்கேன்னு கேலி பேசினீங்க. இப்ப நீங்க சொதப்ப போறீங்களா.? கிளம்புங்க.”
“நா பங்ஷனுக்கு வேண்டிய உடையுடன் இல்லையே..”
“நோ பிராப்ளம்.. வாங்க.”
அவன் அறைக்குப் போய் வார்டிரோபை திறந்தான். ஹாங்கரில் விதம் விதமாக புடைவைகள்.
“அம்மா புடவைகளா.? வாவ் வாட் ஏ கலெக்ஷன்.! எல்லாமே சூப்பர். எதை சூஸ் பண்ண.?”
“நா சூஸ் பண்ணட்டுமா.?” ஒரு அழகிய நீல வண்ணப் பட்டு. வெள்ளி நட்சத்திரங்கள் தூவிய புடவை.
“நீங்க நீல ஜாக்கெட் போட்டிருக்கீங்க. பொருத்தமா இருக்கும்....”
“ஐய்... நல்ல அனுபவம் போலிருக்கு.” கண் சிமிட்டினாள்.
“இது தான் முதல் அனுபவம்...”
“பரவாயில்ல.. தேறிட்டீங்க. உங்க வருங்கால மனைவி லக்கி.”
“குவிக்.. புடவை மாத்திட்டு வாங்க..”
அவள் கதவை சாத்திக்கொண்டு புடவையை உடுத்திக் கொண்டாள். முழுநீள கண்ணாடியில் பார்த்தாள். அடியே சக்கரக்கட்டி.... உன் மேல் கண் படும் டீ.... அவளே சொல்லிக் கொண்டாள். திடீரென அவமானமாக இருந்தது. ஹேமா என்ன செஞ்சிட்டு இருக்கே.? அவள் உள்மனம் கேட்டது. இரண்டு நாளே அறிமுகமான ஒருத்தனோடு ஜாலியா கிளம்பிட்டே? அண்ணாவுக்கு தெரிஞ்சுது நீ காலி.... ஹேமா தயங்கினாள். வேண்டாம் நீங்க மட்டும் போங்க என்கலாமா.? எதுக்கு.? நா என்ன சின்னக் குழந்தையா அனுமதி வேண்டி நிற்க.? போதும் நீ சுதந்திரமா முடிவு எடு ஹேமா. ஆனாலும் தயங்கியது மனசு.
“வாவ் பண்டாஸ்டிக். சும்மா சொல்லக் கூடாது.. ஒரு மேக்கப்பும் இல்லே.. ஜொலிக்கறீங்க. அந்த அகில் ஒரு முட்டாள்.”
உன் அழகை புகழ்கிறவன் உனக்குத் தூண்டில் போடறான் விலகி விடு..... புரிந்து கொண்டவனாய்....
“ஹேமா.. இங்க வாங்க.” அவளை பால்கனிக்கு கூட்டிச் சென்றான். கீழே பார்த்தால்.... ரோஜாக் கூட்டம்.
“பாருங்க தோட்டத்தில் ரோஜா மலர்கள் எத்தனை அழகு.! ரசிக்காமல் இருக்க முடியுமா.? ஏ திங் ஆப் பியூட்டி இஸ் ஏ ஜாய் பார் எவர்.. ஆங்கில கவிஞர் கீட்ஸ் சொல்கிறார். சிம்பிள்.. நா ரசிகன் மட்டும் தான். காதலன் இல்ல.”
அப்ப சரி என்று அவள் உள்ளம் இயல்பானது.
மங்களம் மாமி சொன்ன மண்டபத்தில் கார் நின்றது. அவளும் நிர்மலும் இறங்க.... இன்னொரு காரிலிருந்து காவ்யா சந்திரன் இறங்கினார்கள். சந்திரன் அவளைப் பார்த்துவிட்டான்.... பயந்து வேர்த்து நின்றாள் ஹேமா.
சொந்தம் தொடரும்.