பதினாறாம் அத்தியாயம்
காதல் எங்கள் சொந்தம்.. 16
காதல் மனசுக்கு பிரிவு பிடிக்காது. காவ்யாவை பிரியப் போகும் தருணம். நெஞ்சில் குமிழியிடும் ஏக்கத்துடன் நின்றான் சந்திரன்.
அவன் இங்கு வந்து ஒரு வாரம் ஆகிவிட்டது. பிரசாத் பிரச்சனையை அவன் தீர்த்து வைத்துவிட்டான்.
“காவ்யா.... இனிமே நீ பயப்பட வேணாம். பிரசாத் ஜாமீன் கான்சல் ஆகி அவன் சிறை போயாச்சு. அவனால் இனி தொந்தரவு வந்தால் உடனே கால் பண்ணு. சரியா.?”
காவ்யா அவனை அன்புடன் பார்த்தாள்.
“நமக்குள் ஏதோ பூர்வஜென்ம தொடர்பு இருக்குன்னு நினைக்கிறேன். அம்மா கூட சொன்னாங்க.... சந்திரன் நமக்கு கிடச்ச பொக்கிஷம் காவ்யான்னு. நன்றி சின்ன வார்த்தை. அதுக்கும் மேலே நா உங்களுக்கு கடமை பட்டிருக்கேன்...”
“அடடா..... எதுக்கு நன்றி எல்லாம்.? பிரசாத் வாட்ச்மேன் கழுத்தில் கத்திய வச்சதும் நா பாய்ந்து தட்டி விட்டேன். நான் செய்த உருப்படியான காரியம் அது ஒண்ணு தான். மலர்விழி விடுதி பெயரை நாசம் பண்ணவே வந்தான்... கடவுள் நம் பக்கம் காவ்யா..”
“கடவுள் நேரில் வர மாட்டார். உங்க ரூபத்தில் வந்து தக்க சமயத்தில் காப்பாத்திட்டார்..... நீங்க கிரேட்.”
அடக்கமாக சிரித்தான் சந்திரன்.
“சரி நா கிளம்பறேன். நீயே ஒரு நல்ல வீடு பாரு. ஹேமாவை பார்த்துக்க. அவ என் கூட வர மாட்டேன்னு சொல்லிட்டா.... “ அவன் கவலையுடன் நெற்றியை தேய்த்தான்.
“நா அவளை பார்த்துக்கறேன்.... அது எனக்கு சந்தோஷமே.”
“காவ்யா... உன் விடுதிக்கு பில் கட்டணும்... ஜிபே பண்ணிடறேன்.”
சந்திரன் இப்படி சொன்னதும் காவ்யா ஏய்.. என்ன கொழுப்பா.? என்று கோபப்பட்டாள்.
“நட்புக்காக ஓசியில் தங்க முடியுமா.? நட்பு வேறு பிசினஸ் வேறு. இப்படி சலுகை கொடுத்தா போண்டி ஆயிடுவீங்க..”
“ஜோக்கா?. விளையாடாதீங்க சந்திரன். வாட் ஏ இன்சல்ட்.! அப்ப எங்களை அந்நியமா தான் பார்க்கறீங்க இல்லே.? நாம ஒரே குடும்பம் சந்திரன்.. நீங்க எங்களோட பெஸ்ட் பிரெண்ட்.... உங்களுக்கு உரிமை இருக்கு.!”
அவள் பணம் வாங்க மறுத்துவிட்டாள்.
“நா ஒரு வழிப்போக்கன். மூட்டையை கட்டிக்கிட்டு ஓடத் தயாராக இருக்கும் ஒரு பிரயாணி... எனக்கு ஏது உரிமை.?”
“அவ்வளவு தானா நட்புக்கு மரியாதை.? இந்த மலர்விழி விடுதிக்கு விழி கொடுத்திருக்கீங்க. என் மனசில் உயர்ந்த இடத்தை பிடிச்சிருக்கீங்க. அம்மாவுக்கு உங்கள ரொம்ப பிடிச்சிருக்கு.... எனக்கும் தான்.. உங்களுக்கு இல்லாத உரிமையா.?”
காவ்யா சொல்லிவிட்டுச் சிரித்தாள். அந்த சிரிப்பின் அழகு.. கொடைகானலின் ரோஜாக்களை விட அழகாக இருந்தது. ரகசியமாக ரசித்தான் அவன். நட்புக்கே இவ்வளவு அழகான சிரிப்பு பரிசா கிடக்குது. அப்ப காதலா இருந்தா.. அது பல கோடி நட்சத்திர அழகோடு இருக்கும் இல்லே!.... அந்த நாள் எப்ப வரும்.? நிரஞ்சன் வராமலே இருந்தா.... சான்ஸ் இருக்கு.... இப்படி நினைப்பது நாகரீகம் இல்ல தான்.. உணர்ந்தான். காதல் படுத்தும் பாடு அது.
ஹேமா குளித்துவிட்டு புதுப் பூ போல் வந்தாள்.
“என்ன அண்ணா கிளம்பியாச்சா.?..”
“ஹேமா.... உன் மேல் என் கோபம் குறையல. காவ்யா சொன்னதாலே விடறேன். அந்த நிர்மல் கூட இனி பேசவோ, தனியா போகவோ கூடாது. புரியுதா.?”
“அண்ணா.. நா கிண்டர்கார்டன் பேபி இல்ல....”
“சரி.. சரி ஆரம்பிச்சுடாதீங்க...” என்றாள் காவ்யா.
“கம்பனி எம்.டியை பார்த்து பேசியிருக்கேன். டிரான்ஸ்பர் ஆர்டர் சீக்கிரம் வந்திடும். நானும் சித்தப்பாவும் வந்திடுவோம். காவ்யா ஹேமாவ பார்த்துக்க.. வரேன்.”
அவன் கண்கள் காதலுடன் காவ்யாவை பார்த்ததை ஹேமா கவனித்தாள். அவளுக்கு கவலையாக இருந்தது. நமக்குத் தான் காதல் தோல்வி.. அண்ணாவுக்கும் அப்படி ஆகிவிடக் கூடாது.. கடவுளே அந்த நிரஞ்சன் திரும்ப வந்திடக் கூடாது என்று அவளும் வேண்டுகிறாள். அவன் கார் மறையும் வரை காவ்யா பார்த்துக் கொண்டிருந்தாள்.... “காவ்யா.... அண்ணா வந்திடுவார். கண் கலங்காத.... “ காவ்யா கண்ணைத் துடைத்துக் கொண்டாள்.
“ஹேமா.. நா என்ன செஞ்சுட்டேன்.? உங்கண்ணன் என் மேல் இவ்வளவு பிரியம் வச்சிருக்கார்.? அதான் கண் கலங்கிடுச்சு..”
“அது வெறும் பிரியம் இல்லே காவ்யா. அது காதல். ஹீ லவ்ஸ் யூ.”
“சே சே அது உன் கற்பனை...” என்று சொல்லி தப்பித்துக் கொண்டாள். நிஜமாக இருக்குமோ என்ற சந்தேகம் லேசாக வந்தது. என்னவோ தெரியவில்லை சந்திரன் வந்த பிறகு அவளுக்கு நிரஞ்சனால் ஏற்பட்ட காயம் ஆறியது போல் இருந்தது.
அவனிடமிருந்து எந்த தகவலும் இல்லை. நாளுக்கு நாள் தகவல் வரும் என்ற நம்பிக்கை தளர்ந்து கொண்டு வந்தது. சித்தி அமுதவல்லியும், சூர்யா அக்காவும் அவளைக் கல்யாணம் பண்ணிக்கச் சொல்லி ஃபோன் மேல் ஃபோன் போட்டு பேசிப் பேசி கரைக்கப் பார்க்கிறார்கள். இது அம்மாவின் வேலையாத் தான் இருக்கும். தங்கையிடம் போட்டுக் கொடுத்து காரியத்தை சாதிக்க நினைக்றாங்க அம்மா. பாவம் அம்மா.. மகள் கல்யானத்தை பார்க்கவேணும்ன்னு ஆசை இருக்காதா அந்த தாயிக்கு.?
காவ்யாவின் சோகத்தைப் பார்த்த ஹேமா அவளிடம்..
“காவ்யா.... ஒரு அழகான இடத்துக்குப் போறோம். இங்கேயே அடஞ்சு கிடக்கணுமா.? தென்காசி என்னோட சாய்ஸ். ஒரு முறை போயிருக்கேன்..”
“அங்கேயா.?”
“ம்ம்.. எனக்கு குற்றால அருவியில் குளிக்கணும். இப்ப சீசன் தானே.? உன் கூட மனசு விட்டு பழகணும். பேசணும்..”
“எனக்கும் தான்.. அம்மா கிட்டே சொல்லிட்டு கிளம்பலாம்.”
ரோசியிடம் பார்த்துக் கொள்ள சொல்லிவிட்டு அவர்கள் இருவரும் காரில் கிளம்பினார்கள். தென்காசி, மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்திருக்கும் சொர்க்கம். பசுமையான வயல்கள்.... பழமையான கோவில்கள்.. ஹேமா இங்கு வர் ஆசைப்பட்டதுக்கு ஒரு காரணம் இருந்தது.
குற்றால அருவியில் ஆசை தீர குளித்துவிட்டு, கடனா நதிக்கரையில் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ள சிவசைலநாதர் கோவிலுக்குச் சென்றார்கள்.
ஸ்தல வரலாறு சொன்னார் அர்ச்சகர். இது சுயம்புலிங்கத் தலம். அத்திரி மகரிஷியால் பூஜிக்கப்பட்டதாம். சுவாமி மேற்கு நோக்கி ஜடாமுடியுடன் காட்சியளிக்கிறார். பரமகல்யாணி அம்பாள் உடனுறை கொண்டு அருள் பாலிப்பது சிறப்பு.
“இது பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்ட கோவில். அழகிய சிற்ப வேலைகள்.. கல்வெட்டுக்கள்.. பார்க்க பெருமையா இருக்கு இல்ல.?” என்றாள் ஹேமா. “உனக்கு கோவில் பற்றி நிறைய தெரிஞ்சிருக்கு. முன்னமே வந்திருக்கியா.?” என்று கேட்டாள் காவ்யா. தரிசனம் பண்ணிவிட்டு அவர்கள் கடனா நதியை பார்த்தபடி உட்கார்ந்தார்கள்.
“காவ்யா.... இந்த இடத்தில் தான் நான் அகிலை சந்தித்தேன்....”
“ஓ.. அதான் இங்க வந்தியா.?”
“நானும் அப்பாவும் குற்றாலம் வந்தோம். ஒரு வாரம் இருந்து சுகமா அருவி குளியல் போட்டு.. பின் ஆழ்வார்க்குருச்சியில் அப்பாவின் சினேகிதர் வீட்டுக்குப் போனோம்..”
“ஐய்யே.. இது தான் காதல் கதையா.?”
“அவசரப்பட்டா எப்படி.? அப்பாவுக்கு ஒரு வாரம் அருவியில் குளிச்சதால் ஜுரம் ஜலதோஷம்.. அது தான் டிவிஸ்ட். நான் மட்டும் கோவிலுக்கு வந்தேன். அகில் அங்கு வந்தான்..”
“கண்கள் சந்தித்தன.. காதல் பற்றிக் கொண்டதா.?”
“அவரோட பெற்றோர் அங்கே தான் இருக்காங்க. விவசாய குடும்பம். அம்மாவின் ஜென்ம நட்சத்திரம். அவர் பேருக்கு அர்ச்சனை செய்ய வந்தார். அர்ச்சனை தட்டை தூண் ஓரம் வச்சிட்டு, பூ பழம் வாங்கச் சென்றார். குரங்கு எடுத்து செல்ல, நான் அதை விரட்டி, அவரிடம் அர்ச்சனை தட்டை ஒப்படச்சேன்.. இப்ப காதல் கதை இண்டரெஸ்ட்டிங்யா இருக்கா.?”
“வொன்டர்புல் ஆரம்பம்.. மேலே சொல்லு.”
“பார்த்தவுடனேயே அவரை எனக்கு பிடிச்சிடுச்சி. கம்பீரமான அழகு. குரங்கை விரட்டிய வீராங்கனைன்னார். அசடு வழிய சிரிச்சேன். குரங்குக்கு தேங்க்ஸ்ன்னார். குரங்குக்கு தேங்க்ஸ்யா.? குரங்கால் தானே உங்களுடன் பேச முடிஞ்சுது.. குற்றால அருவியில் ஒரு பெரியவரோடு.. அப்பா தானே.? வந்த போதே பார்த்திட்டேன். உங்களை பாலோ பண்ணி வரேன்னார்..”
ஹேமா முகம் சிவந்தது. அந்த தருணத்தை அவள் பசுமையாக நினைவில் வச்சிருப்பதை புரிந்து கொண்டாள் காவ்யா.
“காதல் ஸ்டார்ட் ஆகிடுச்சு..” என்றாள் காவ்யா.
“காதல் என்றொரு ஒரு கதை இருந்தால் கனவு என்றொரு முடிவிருக்கும்.. பாடினார் கவிஞர். அது உண்மை ஆச்சு.”
“ஏன்? எங்க இருக்கார்ன்னு சொல்லு, இழுத்திட்டு வரேன்.”
“அவருக்கு நிச்சயம் ஆகிவிட்டது. பெண் பெயர் ரோகிணி..”
“என் கதை போல தானா உன் கதையும்.? எனக்கு காணாமல் போன காதலன்... உனக்கு எஸ்கேப் ஆன காதலன்.. ஏன் ஹேமா.?”
“ஒரு வாரம் தினமும் கோவிலில் சந்திச்சோம். பேசினோம். அழகான நாட்கள்.. அவர் ஐ லவ் யூ சொன்னார். அந்த கடைசி நாளில் அவரிடம் என் குறை பற்றி சொல்லிவிட்டேன்..”
“ஹேமா.... உனக்கு என்ன குறை.?”
“எனக்கு.. ஒரு அபூர்வ பிரச்சனை.. பெத்தவ கண் மூடிட்டா. அகப்பட்டது நாந்தானே.? குறையுடன் பிறந்தேன். ஆண்டவனுக்கு என் மேல் என்ன கோபமோ தெரியலை. பிறவியிலேயே கர்பப் பை இல்லாம படச்சிட்டார். என்னால் நார்மலா குழந்தை பெத்துக்க முடியாது.... ஸோ யோசிச்சுக்கோங்கன்னு எழுந்து போயிட்டேன்....”
மண்டையில் யாரோ ஓங்கி அடித்தது போல் உணர்ந்தாள் காவ்யா.
“ஒரு வாரம் அவர் போனுக்காக காத்திட்டு இருந்தேன். வந்துச்சு.. ஸ்டில் ஐ லவ் யூ... குழந்தையை தத்து எடுத்துக்கலாம்ன்னார். நிஜமாவா சொல்றீங்க.? பின்னால் மனசு மாறிட்டேன்னு சொல்லக் கூடாது. பிரிஞ்சா இப்பவே பிரிஞ்சிடலாம்.. ஒரு வாரக் காதல் தானேன்னு சொன்னேன். இல்ல இது லைப்லாங்க காதல்ன்னு சத்தியம் பண்ணினார்... அப்பா அண்ணாவிடம் சொன்னேன். அவங்களுக்கும் பிடிச்சுப் போச்சு.. ரெண்டு வருஷக் காதல்.... கடைசியில் அம்மா அப்பா சம்மதிக்லைன்னு திடுதிப்புன்னு பத்திரிகையோடு வந்து சொன்னார். அது தான் என்னால் தாங்க முடியலை. அண்ணா சண்டை போட கிளம்பினார். வேண்டாம்ன்னு தடுத்திட்டேன்.. எங்கேயோ பிள்ளை குட்டியோடு நல்லா இருக்கட்டும்ன்னு சொல்லிட்டேன். மனசை திசை திருப்பத் தான் அண்ணா என்னை இங்க கூட்டி வந்தார்.. உன் காதல் கதை என்ன காவ்யா.? சொல்லு. உன் ஆள் ஏன் காணாமல் போகணும்.?”
“உனக்காவது காரணம் தெரியும். எனக்கு அது கூட தெரியாது. மனசிலிருந்து அவரை தூக்கிப் போட முடியாமல் தவிக்கிறேன்.”
இரு பெண்களும் தங்களுக்குத் தான் காதல் சொந்தம் என்று நினைத்தார்கள். இருவராக இசைப்பது தான் காதல் பண். ஒரு பக்கக் காதல் காதலோடு சேர்த்தி இல்லை என்று விதி சொல்லிவிட்டதோ.? அவர்கள் காதல் முள்ளில் விழுந்த சேலை.... காத்திருக்கிறார்கள் எதிர்காலத்தில் வசந்தம் வரும் என்று.
சொந்தம் தொடரும்.