இருபத்தி ஒன்றாம் அத்தியாயம்.
காதல் எங்கள் சொந்தம்.. 21
எண்ணத்திலும் செய்கையிலும் நேர்மை இருக்கும் பட்சத்தில்.... நிறைய பேரின் நட்பு கிடைக்காம போலாம். ஆனா அது தான் ஒரு நல்ல நட்பை கொண்டு வந்து சேர்த்துவிடும். நிர்மலுக்கும் ஹேமாவுக்கும் அது தான் நடந்தது. ஹேமாவின் நேர்மை நிர்மலுக்கு பிடித்தது. அவனுக்கு அவளிடம் ஒரு ஈர்ப்பை ஏற்படுத்தியது. நல்ல உறவின் ஆரம்பம் அது தானே.!
ஹேமா சசியை அழைத்துக் கொண்டு நிர்மல் வீட்டுக்கு வந்தாள். சசிக்கு இன்பாவை கண்டதும் ஏக குஷி. நாயோடு விளையாட ஆரம்பித்தாள். “இன்பாவுக்கு குழந்தைகள்ன்னா ரொம்ப பிடிக்கும்.” என்றான் நிர்மல். தோட்டத்தில் ரோஜாப் பூக்களை பார்த்துக் கொண்டு நிர்மலும் ஹேமாவும் நடந்தார்கள்.
“தினமும் சூரியனின் முதல் கதிர் உதயமாகும் போது, நா தோட்டத்தில் இருப்பேன். காலை சூரியன் மெதுவாக எழும்பி ரோஜாப் பூக்கள் மேல் படரும். அதை பார்க்க கண் கோடி வேணும்....” என்றான் நிர்மல் லயிப்புடன்.
“நீங்க ரொம்ப லக்கி.... பூக்களோடு வாழ்வது.. கடவுளோடு வாழ்வது மாதிரி. மனசு மகிழும். கண்களுக்கு விருந்து. இனிய நறுமணம் உடலை புத்துணர்வு கொள்ள வைக்கும்.... எத்தனை வண்ணங்கள்.! ஓ.. ஐ லவ் இட்....” என்றாள் ஹேமா.
“இந்த ரோஜாச் செடிகளை பயிரிட்டு வளர்த்தது அம்மா தான். அரை மணி நேரமாவது தோட்டத்தில் உலாவுவேன். அம்மா கூட இருப்பது போல இருக்கும்.... ஐ மிஸ் அம்மா ஸோ மச்.”
நிர்மலுக்கு தன் தாய் மேல் உள்ள அன்பின் ஆழத்தை அவள் புரிந்து கொண்டாள். முகம் கூட தெரியாத அம்மாவை அவள் நெஞ்சு தேடும் போது.... வாலிப வயதுவரை இருந்து, வளர்த்த அம்மாவை அவன் நெஞ்சு தேடாதா.?
“அம்மாவை நேசிப்பவன் தன் மனைவியையும் நேசிப்பான். உங்களுக்கு மனைவியா வரப் போறவங்க கொடுத்து வைச்சவங்க.” என்று ஹேமா சொல்ல..
“அந்த கொடுத்து வைச்சவள்.... நீங்களா கூட இருக்கலாம்.... நீங்க மனசு வச்சா...”
திடுக்கிட்டு அவனைப் பார்த்தாள் ஹேமா. ஒரு கருப்பு ரோஜாவை பறித்தாள். “சொல்லுங்க.... ரோஜாக்கள் எல்லாமே அழகு தான். என்ன வண்ணமாக இருந்தாலும்... ஆனா நீங்க இந்த கருப்பு ரோஜாவை உங்க கோட் பாக்கெட்டில் வச்சுக்குவீங்களா.? மாட்டேங்க தானே.? வெள்ளை, சிவப்பு, மஞ்சள் ரோஜாவை தானே செலக்ட் பண்ணுவீங்க.?” ரோஜாவில் தேங்கி நின்ற பனித் துளி போல் ஹேமா கண்களில் நீர். அதை மெல்ல தன் ஒற்றை விரலால் ஒற்றி துடைத்தான். அவள் கலங்கியபடி சொன்னாள்....
“நான் இந்த கருப்பு ரோஜா மாதிரி. வாசனையாக இருக்கும் இந்த மலரை ரசிப்போம். ஆனா சூடிக் கொள்ள மாட்டோம்.” அவளுக்கு இருக்கும் குறையை மனதில் கொண்டு இப்படி சொன்னாள் ஹேமா. அந்த ரோஜாவை வாங்கி அவள் கூந்தலில் சூட்டி விட்டான் நிர்மல்.
“கடையில் கிடைக்கும் டை பண்ண கருப்பு ரோஜா இது இல்ல. அம்மா இதை வளர்க்க ஆசைபட்டது இதன் அபூர்வ தனித் தன்மைக்காக. இத பாருங்க.. இதன் கலர் வெல்வெட் பர்பிள் கலந்த டார்க் ரெட். முற்றிலும் கருப்பு அல்ல. தனித்தன்மை வாய்ந்த இந்த பிளாக் ரோஸ்.. ஒரு புது ஆரம்பத்தை குறிக்கும் சின்னமாக இருக்குன்னு உங்களுக்குத் தெரியுமா.? டீப் லவ் உள்ளவர்கள் இதைத் தான் கிப்ட்டாக கொடுப்பார்கள்.... ஆழ்ந்த காதலை இமோஷன்ஸ்சை இது குறிக்கும். நீங்க கருப்பு ரோஜான்னா நீங்க தனித்தன்மை உடையவங்கன்னு அர்த்தம்..” என்றான்.
“அப்படியா.? இது மிஸ்ட்ரி பிளவர். டெத்யை குறிக்கும்ன்னு கேள்விப்பட்டேன்..” என்றாள் குழப்பத்துடன்.
“அது விக்டோரியன் இரா காலத்து நம்பிக்கை. அதன் பின் அதன் அர்த்தம் மாறிவிட்டது. கருப்பு ரோஜா ஆண்டவனால் ஆசீர்வதிக்கப்பட்ட மலர்.... அம்மாவுக்கு இந்த கருப்பு ரோஜா ரொம்ப பிடிக்கும். ரொம்பவே மெனக்கட்டு வெற்றிகரமா வளர்த்தாங்க.”
“என்னென்னவோ புதுசா சொல்றீங்க. அன்னைக்கு கையை முத்தமிட்டு அதிர்ச்சி கொடுத்தீங்க. இன்னைக்கு கருப்பு ரோஜாவை தலையில் சூட்டி அதிர்ச்சி விளக்கம் கொடுக்கறீங்க. எப்படியோ ஒண்ணு தெரிஞ்சுக்கோங்க.. இந்த மலர் விற்பனைக்கு அல்ல..”
“நா விலை பேச மாட்டேன். நெஞ்சில் வைத்து சீராட்டுவேன்.” அவள் அண்ணாந்து சிரித்தாள். “உங்க கற்பனை நல்லாயிருக்கு. நிஜம் வலிக்கும். இன்னொரு காதல் தோல்வியை தாங்க இந்த கருப்பு ரோஜாவுக்கு தெம்பு இல்ல.... உண்மை தெரிந்தால் உங்க லவ் காணாமல் போகும்....”
“என்ன உண்மை.?”
நெஞ்சில் முட்டி மோதிக் கொண்டிருந்த உணர்வுகளை இவனிடம் கொட்ட வேண்டும் போல் தோன்ற, ஹேமா தன் காதல் கதையை சொன்னாள். அதோடு தன் குறையையும் அதனால் அவன் விட்டுச் சென்றதையும் சொன்னாள்.
“அகில் நிச்சயதார்த்தம் தான் என்னுடைய காதல் பரிசு.”
“ஹேமா.... உங்க குறை ஒரு குறையா.? அதுக்காகவா அவன் விட்டுவிட்டுச் சென்றான்.? அவனுக்காகவா நீங்க இன்னும் காத்திட்டு இருக்கீங்க.? ஓ மை காட். காதல் உங்க சொந்தம் இல்ல. அவனுடையது பொய் காதல்.”
“ஆனால் என் காதல் நிஜமாச்சே. மறக்க மனசு கூடுதில்லையே..”
“அப்ப அது உங்க இஷ்டம்.... சரி வீட்டுக்குள் போலாமா.?
இருவரும் வீட்டுக்குள் நுழைந்தார்கள். சசி இன்பாவோடு ஓடி வந்தாள். அவள் கண்களில் அப்படி ஒரு மகிழ்ச்சி.!
“சொல்லுங்க நிர்மல்.... எப்படி உங்க அக்காவை ஏத்துக்கிட்டார் பிரபு.? முக்கியமான விஷயத்தை இன்னும் சொல்லலையே.”
அவன் கண்களில் ஈரம் படர்ந்தது. அவளை நிமிர்ந்து பார்த்தான். அவள் உருவம் அவனுக்குத் தெரியவில்லை. கண்ணீர் மறைத்துவிட்டது. அவள் அவன் கண்ணீர்த் துளியை துடைத்து விட்டாள். அந்த ஒற்றை விரலை பிடித்துக் கொண்டான்.
“இந்த சின்ன விரல் எனக்கு யானை பலம் தருது. ஹேமா.... உங்க மனசு இளநீர் மாதிரி.... அவ்வளவு மென்மை. வெள்ளையும் கூட.... என்னோட நட்பா இருக்க சம்மதம் தானே.?” கனிந்து நின்ற அவன் முகத்தை அவள் கண்களால் வரைந்தாள். அவள் மனசு எச்சரித்தது. வேண்டாம்.. உனக்கு இன்னொரு காதல் வேண்டாம். உன் குறை தெரிந்தால் அவன் ஓடிவிடுவான். இன்னொரு அகிலாக மாறிவிடுவான். கேர்புல் ஹேமா.... “என்ன யோசிக்கிறீங்க ஹேமா.?”
“சசியை பார்த்தீங்களா.? எவ்வளவு உற்சாகமாக விளையாடிட்டு இருக்கா.....சசியை நா மனசால தத்து எடுத்துக்கிட்டேன் தெரியுமா.?” பேச்சை மாற்றினாள். சசி பற்றிய விவரம் சொன்னாள்.
“ரியலி.... சூப்பர். அதான் சொன்னேன்ல உங்க மனசு தங்கம். இந்த சசி மாதிரி தான் எங்க அக்கா அனாதையா நின்னா....”
“என்ன சொல்றீங்க.?”
“சொல்றேன்...... உள்ளே வாங்க. எங்க அம்மா டைரியை படியுங்க. எல்லாம் புரியும். எனக்கு ஒரு அக்கா இருப்பதே எனக்குத் தெரியாது. ரகசிய அக்காவா இருந்தாங்க. ஏன்.? அம்மா சாகும்போது தான் சொன்னாங்க.. அக்காவை பார்த்துக்க. உன் அண்ணா பிரபுவை அவளை ஏத்துக்கச் சொல்லு.... என்றார் கடைசி மூச்சு நிக்கும் போது.”
அவன் அவளை தன் அம்மாவின் அறைக்கு அழைத்துச் சென்றான். டைரியை எடுத்துக் கொடுத்தான். “படிச்சுப் பாருங்க. இது எனக்கு ஒரு பொக்கிஷம். இதை நா உங்க கூட ஷேர் பண்ணிக்கறேன். என் ஆதார சுருதி நீங்க. அதான் ஷேர் பண்ணறேன்.?” என்றான். அவள் கையில் வாங்கவே தயங்கினாள். நா ஆதார சுருதியா.? எப்படி.? எனக்கு இந்த அங்கீகாரம் இவன் ஏன் கொடுக்கணும்.? ஆனாலும் அவன் அப்படி கொடுத்தது அவளுக்குப் பிடித்தது. பெருமையாக உணர்ந்தாள். சந்தோஷமாக இருந்தது. நிலாவை கையில் பிடித்தது போல் ஒரு பெருமிதம். என்னையும் அவன் ஒரு பார்வையால் கௌரவித்து விட்டான்.. என்று கத்த வேண்டும் போல் இருந்தது. நடுங்கும் கரத்துடன் வாங்கிக் கொண்டாள். “தேங்க்ஸ்.. என்னை நட்பாக பார்த்ததுக்கு. நா அதுக்கு தகுதி உடையவள் தானா.?”
“உங்களை விட தகுதி ஆனவர்கள் வேறு யார் இருக்க முடியும்.? ஒரு பெரிய ஜன்னலை திறந்து விட்டிருக்கீங்க. காற்றும்.. வெளிச்சமும் எங்க குடும்பத்துக்கு கிடைச்சிருக்கு. நீங்க மட்டும் அந்த திருடர்கள் பற்றி சொல்லாம இருந்திருந்தா இன்னமும் சிக்கலில் தான் எங்க உறவுகள் தத்தளிச்சிட்டு இருக்கும்..”
அவளுக்கே தெரியவில்லை அவள் செய்திருக்கும் நன்மை.
“உங்கக்கா மேலே உங்களுக்கு இருக்கும் பாசம் புரியுது.”
“கர்ணன் தாய் யாருன்னு தெரியாம வளர்ந்ததா பாரதம் சொல்லும். அக்கா, அப்பா யாருன்னு தெரியாம வளர்ந்தா.... உங்கப்பா பணம் அனுபிச்சிருக்கார்.. டிரெஸ் வாங்கி அனுப்பிச்சிருக்கார், உனக்கு பழங்கள் வாங்கி அனுப்பிச்சிருக்கார்.... முகம் தெரியாத அப்பாவின் அன்பு, வெறும் பொருட்களாக அக்காவின் ஹாஸ்டலுக்கு வந்தது அமேசான் மூலமாக. அமேசான் அப்பா என்பாளாம் அக்கா. அம்மா சொன்னாள். ஆம் எல்லா பொருட்களும் அமேசான் பர்ச்சேஸ் மூலம் வந்தது தான். அம்மா அப்பா என்னைப் பார்க்க வரவே மாட்டாங்களா.? என்று அக்கா கேட்டிருக்கிறாள். அம்மா எப்படி சொல்வாள், உன்னை அவர் அங்கீகரிக்கவே இல்லைன்னு....”
இதைக் கேட்டு ஹேமா கண்களிலும் கண்ணீர் சுரந்தது.
“படிச்சுப் பாருங்க. மனுஷ உணர்வுகளும்.... அது தன் இஷ்டத்துக்கு வகுத்த பயன்பாடும் விசித்திரமா இருக்கும். பண்பாடு மறந்த சுயநல மனசுகள் சிந்திக்கும் விதத்தால் எவ்வளவு பேர் பாதிக்கப்படறாங்க.! அது அவர்களுக்குப் புரியாது.”
“சரி நிர்மல் நா வரேன். படிச்சுப் பார்த்து உடனே உங்களை தொடர்பு கொள்கிறேன்.... சசி போலாமா.?”
சசி இன்பா கழுத்தை கட்டிக் கொண்டாள்.
“அம்மா.. இந்த இன்பாவை நம் கூட கூட்டிட்டுப் போலாமா.?”
“அய்யோடா சசி.... அங்கிள் என்னை மேலுலகத்துக்கே, கிக் பண்ணி அனுப்பிடுவார். இன்பா தவிற வேற எது வேணா கேள்.” என்றாள் ஹேமா. சிறுமியின் கன்னத்தை செல்லமாக கிள்ளிய நிர்மல்....
“இன்பா வேணும்னா நீ இங்க ரெண்டு நாள் இருக்கணும்....”
“ஓ எஸ் நான் இருக்கேன். எனக்கு ரெண்டு நாள் ஸ்கூல் லீவ் தான்.”
“அதெல்லாம் வேண்டாம். கிளம்பு கிளம்பு. காவ்யா மா உன்னைத் தேடுவாங்க....” சிறுமியின் முகம் வாடியது.
“என்னை நம்பி சிறுமியை விட்டிட்டுப் போலாம்.” மண்டியிட்டு சிறுமியின் தலையை சிலுப்பி கொஞ்சினான் நிர்மல். சிறுமி முகம் மலர்ந்தது. “ஹேமா.... சசிக்கு ஒரு சேஞ் வேண்டாமா.? உங்க மூஞ்சியவே பார்த்திட்டு எவ்வளவு நாள் இருப்பா.? போர் அடிக்காதா.?”
“ஓ.... உங்களுக்கு ரொம்பத்தான் கொழுப்பு.” சிணுங்கினாள் அவள்.
“சமர்த்தா இருக்கணும்....” என்று சொல்லி சசியை நிர்மலுடன் விட்டுவிட்டுப் போனாள் ஹேமா. விடுதிக்கு வந்தவள்.. அவசர அவசரமாக இரவு சாப்பாட்டை முடித்துக் கொண்டு படுக்கச் சென்றாள். டைரியை படிக்கும் ஆர்வம் அவளை உந்தித் தள்ளியது. காவ்யாவும் தனக்கு ஒரு முக்கியமான ஃபோன் பேசவேண்டும் என்று சொல்லி தன் அறைக்குச் சென்றாள்.
அந்த டைரியின் வாசகங்கள் அவள் நெஞ்சை உலுக்கியது.
சொந்தம் தொடரும்.