இருபத்தி ஏழாம் அத்தியாயம்
காதல் எங்கள் சொந்தம்.. 27
ஒரு காரியத்தில் வெற்றி பெற வேண்டும் என்ற வைராக்கியம் இருந்தால், முனைப்பு வரும். முயற்சி திருவினை ஆக்கும் என்று வள்ளுவ பெருமான் சொல்லவில்லையா.? தன் மெய் வருத்த கூலி தரும் தானே.!
நிரஞ்சன் மனசில் வள்ளுவரை கும்பிட்டபடி முதலில் அருணை மீண்டும் பார்க்கச் சென்றான். கேரம்டவுன்ஸ் சபரி சரவண பவன் ரெஸ்டொரெண்டில் இருவரும் சந்தித்தார்கள். ரோஸ் மில்க் ஆர்டர் பண்ணினான் நிரஞ்சன்.
“நிரஞ்சன்.. என்ன பேசப் போறீங்க.? எல்லாம் முடிஞ்சு போச்சே.”
“ஒரே ஒரு கேள்விக்கு சின்ஸியரா பதில் சொல்லு.”
“கேளுங்க. நா எதுக்கு பொய் சொல்லப் போறேன்.?”
“நீ கலாவை நிஜமாவே நேசிக்கிறயா.?”
“சந்தேகம் என்ன.? ஐ லவ் ஹேர் ஸோ மச். அவ தான் என் உயிர்.”
“அப்ப ஏன் நீ போராடல.?”
அவன் சோகமாக சிரித்தான்.
“குழந்தை மாதிரி பேசறீங்க நிரஞ்சன். நா செய்த தவறுக்கு எனக்கு ஏது வாய்.? ஜேனெட் கூட அவ சொந்தக்காரன் சார்ல்ஸ் போவதா இருந்துச்சு. அன்று ஜேனெட்டின் பிறந்த நாள். கடைசி நிமிடத்தில் அவன் வர முடியாம போக.. என் தலையெழுத்து.. என்னைக் கூப்பிட்டா. காம்பிங் போக பணம் கட்டியாச்சு.... ப்ளீஸ் கம் அருண்னு கெஞ்சினா. அருண் நீ கலாவை காதலிக்கிறேன்னு தெரியும். நா இனிமே உன்ண தொந்தரவு பண்ண மாட்டேன். இந்த ஒரே முறை என்னோட டைம் ஸ்பென்ட் பண்ணு போதும். கைண்டா பேசு போதும். நோ டச்சிங். ஜஸ்ட் லவ்லி வொர்ட்ஸ். அந்த நினைவுகளிலேயே நா வாழ்ந்திடுவேன்னு சொன்னா. நம்பிட்டேன். பாவம் பார்த்து, காம்பிங் ஸ்கை அவளுடன் சென்றேன். அங்கு மூணு ராத்திரி ஸ்டே. போயிருக்கக் கூடாது. விதி யாரை விட்டது.? பிறந்தநாள் கேக் வெட்டினோம். சிரித்தோம். டிரெக்கிங் போனோம். இயற்கையை ரசித்தோம். அன்பா பேசினேன். ஹாப்பியா? இது தான் கடைசி. உனக்காக வந்தேன். இனிமே என்னை விட்டிடணும்னு சொன்னேன். நிச்சயமான்னா. எல்லாம் பொய். அப்ப தெரியலை. அவ ஒரு வைல்ட் பெர்சன். குடிக்க வச்சா. என் மூளை போச்சு. அவ நினைச்சதை சாதிச்சுக்கிட்டா. எனக்கும் பலவீனம் இருக்குன்னு புரிஞ்சுது. அவமானமா தான் இருக்கு. ஆனா அது அவள் பிரக்நென்சியில் முடியும்னு எதிர்பார்க்கலை. வலையில் நானே போய் சிக்கிட்டேன். வாழ்க்கை போச்சு நிரஞ்சன்....”
“நடந்தது நடந்து போச்சு. அவளே வேண்டாம்னு உன்னை விட்டா.. உனக்கு ஓ. கே வா.? சொல்லு. உண்மையா பேசணும்.”
“அவ என்னை பள்ளி நாளிலிருந்தே சுத்தி சுத்தி வரா. அவளா என்னை விட்டு விலகப் போறா.? எனக்கு ஒண்ணுமே பிடிக்கலை.”
ரோஸ்மில்கை அவன் தொடவில்லை.
“அருண். இது போதும். உன்னையும் கலாவையும் நா சேர்த்து வைக்கிறேன். இப்ப நீ ரோஸ்மில்கை குடி. இனி டிரிங்ஸ் கூடாது.”
“நிஜாமாவா நிரஞ்சன்.? கலாவை என்னுடன் என்னுடன்....” தினறினான். எஸ்.... நீ கவலைப்படாம போ.....
நிரஞ்சனுக்கு ஒன்று தெளிவாகப் புரிந்தது. அருண் அவன் நினைத்தது போல் ப்ளேபாய் இல்ல. குடிக்காரனும் இல்ல. ஏதோ சந்தர்ப்ப வசத்தால் தவறு செய்துவிட்டான். மாபெரும் தவறு தான்.
“அந்த சார்ல்ஸ் பத்தி என்ன நினைக்கிறே.?”
“அதை ஏன் கேக்கறீங்க நிரஞ்சன். அவன் ஜேனெட்டை மனசார காதலிக்கிறான். அவ ரிஜெக்ட் பண்ணிட்டா.... அவன் மனசு ஓடிஞ்சு போயிட்டான். கடைசியில் என் தலையில் விடிஞ்சிடுச்சு....”
அவனை சமாதானப்படுத்தி விட்டு, நிரஞ்சன் சார்ல்ஸ் நம்பர் வாங்கி அவனுடன் பேசினான்.
“எனக்கு ஜேனெட் கிடச்சா போதும். அவ முட்டாள்தனமா அருண் பின்னாடி சுத்தறா. அருண் மேல் பல பெண்களுக்கு மோகம். அவன் யாருக்கும் சிக்க மாட்டான்னு தோழிகள் பேசினாங்க. நா அவனை அடஞ்சு காட்டறேன்னு சவால் விட்டா.... உண்மையில் அவளுக்கு அவன் மேல் லவ்ன்னு எனக்குத் தோணல.... பார்த்தியா நா அவனை அடஞ்சிட்டேன்னு தோழிகளுக்கு பார்ட்டி வச்சா. அவ இப்படி இருக்கிறதுக்கு அவ அம்மா அப்பா தான் காரணம். அவ என்ன செஞ்சலும் பாராட்டுவாங்க. முரட்டுத்தனமா, நல்லது கெட்டது தெரியாம வளர்ந்திட்டா.. பாவம் ஜேனெட்.. ஸ்டில் ஐ லவ் ஹேர்..”
இது போதும் ஜேனெட்டிடம் பேசிப் பார்க்கலாம்.... நிரஞ்சன் ஜேனெட்டுக்கு ஃபோன் செய்தான்.
“ஹாய் ஜேனெட்.. நா நிரஞ்சன் பேசறேன்....”
“ஓ.. தட் இடியட்.! என் கிட்டே என்ன பேசப் போறே.? கலா தூது விட்டாளா.? நான் அருணை விடுவதா இல்ல....”
“ஜேனட்.. ப்ளீஸ் எனக்கு முப்பது நிமிடம் ஒதுக்க முடியுமா.?”
அவர்கள் ஸீபோர்ட் பீச்சில் சந்தித்தார்கள். கடற்கரை ஓரம் நடந்தார்கள். கரை நோக்கி வந்த அலைகளில் அதிக வேகம் இல்லை. மென்மையாக பட்டு கம்பளம் விரிப்பது போல் மணலில் படர்ந்தது. அதிகாலை நேரம். ஆட்கள் நடமாட்டம் இல்லை. அலையோசை மட்டுமே சங்கீதம் பாடியது.
“சன்ரைஸ் ரொம்ப அழகா இருக்கு இல்ல.?”
அவள் பதில் சொல்லவில்லை. அவள் உடை அலங்காரம் சிறப்பாக இருந்தது. கிளாசிக் டிரஞ் கோட் அணிந்திருந்தாள். பூக்கள் போட்ட பிங்க் ஸ்கார்ப். பர்ள் ஈயரிங்ஸ். மெரினோ வுல் ஜம்பர். முகத்தில் புன்னகை. “என் வாழ்விலும் சன்ரைஸ்..” என்றாள் சற்று பொறுத்து.
“ஒருவேளை சன்செட்டாக இருந்தால்.?”
“யூ பிளடி....” என்று முறைத்தாள்.
“ஜேனெட்.... அருண் உன்னை லவ் பண்ணலை. இமாஜின் ஏ லைவ் வித்அவுட் லவ். புரியுதா.?”
அதிகாலை சூரியன் இளம் சிவப்பு ரேகைகள் படற, முழு ஆரஞ்சு பந்து போல் அழகாக கிழக்கை அலங்கரிக்க.. ஜேனெட் சற்றும் எதிர்பாராமல் நிரஞ்சனை கன்னத்தில் அறைந்தாள்.
“ஸ்டாப். எனக்கு நீ பாடம் எடுக்க வேண்டாம்.” சில கெட்ட வார்த்தைகளை உமிழ்ந்தாள்.
“இந்த அடி என்னை ஒண்ணும் பண்ணாது ஜேனெட். ஆனா உனக்கு.? உன்னை நீயே அடிச்சுக்கிட்ட மாதிரி தான் இது. ஒண்ணு சொல்றேன் கேளு. அருணை விட்டுவிட உனக்கு வலிக்கும் தான். ஆனா நீ அவனுடன் ஹோல்ட் ஆன் பண்ணுவது அதை விட வலிக்கும்.” அவள் டக்கென்று நின்றாள். அவள் வார்த்தையால் அடித்தாலோ இல்லை, கையால் அடித்தாலோ, அடுத்த நிமிடம் சீ போ என்று ஓடிவிடுவார்கள். ஆனால் இவன் அமைதியா பேசறான்.!
“நா அடிச்சேனே.. உனக்கு அவமானமா இல்லையா.?”
“உன் வாழ்க்கை பாழாகிடக் கூடாது. அதான் இந்த அவமானத்தை பொறுத்துக்கிட்டேன். அருண் உன்னை லவ் பண்ணலை. கலா மனம் உடஞ்சு ஊருக்குப் போகப் போறா. அதுக்கு நீ தான் காரணம். எதுக்கு இந்த வன்மம் ஜேனெட்.? உன் அம்மா உனக்கு புத்திமதி சொல்லாமல்.. உன் பேச்சைக் கேட்டு கலாவுக்கு வொர்க் விசா எக்ஸ்டெண்ட் பண்ணாம பார்த்துக்கிட்டாங்க... இட்ஸ் குருவல்.”
“நீ எல்லை மீறி என் வாழ்வில் மூக்கை நுழைக்கிற. கலா இந்த நாட்டிலேயே இருக்கக் கூடாது. அருண் அவளை மறக்கணும்.”
“ஜேனெட் அது பகல் கனவு. அருண் மறக்கமாட்டான். உன் வன்முறையால் உன்னை நேசிக்க வைக்க முடியாது. இதோ இந்த அலைகளைப் பார். அமைதியா கரையை காதலோடு முத்தமிடுகிறது. அதனால் எல்லாமே ரம்மியமா இருக்கு. சுனாமி போல் பொங்கினா?. எல்லாமே நாசம். நீ இப்ப சுனாமி போல ஆக்ரோஷமா இருக்கே.... நாலு பேர் வாழ்க்கை இதனாலே நாசமாகுது. சிந்திச்சுப் பாரு....”
குட்டி குட்டி சிப்பிகளை குனிந்து குனிந்து பொறுக்கிக் கொண்டிருந்த ஜேனெட் நிமிர்ந்தாள்....
“உங்க கவுன்சலிங்குக்கு ரொம்ப தேங்க்ஸ். எவ்வளவு பீஸ் வேணும்.? இல்ல இலவசமா.? இங்கிருந்து ஓடிவிடு. ஒடுவதுக்கு முன்னாலே சொல்லு.. யாரு நாலு பேர்.? நா கலா.. அருண் மூணு பேர் தானே.? நாலாவது முடிச்சு யாரு மேன்.?” என்று அட்டகாசமாக சிரித்தாள். சிப்பிகளை கடலிலேயே வீசிவிட்டு..
“லீவ் மீ அலோன். இல்ல இந்த சிப்பிகள் மாதிரி உன்னைக் கடலில் வீசிடுவேன்.... அருண் என் சவாலுக்கான பரிசு.”
“சிப்பியை தூர வீசின மாதிரி நீ சார்ல்ஸ்சை தூர வீச முடியுமா.? அவன் தான் அந்த நாலாவது நாட்.... நீயும் உன் வயத்திலே வளரும் குழந்தைக்கும் அடைக்கலம் கொடுக்கப் போகும் சார்ல்ஸ்....”
நிரஞ்சன் சொல்லி வாய் மூடவில்லை.. அவள் அவனை இழுத்து அலைகள் நடுவே தள்ளி விட்டாள். “அப்படியே போயிடு....” தள்ளிவிட்டதில் அவன் அலை அரித்த மணல் தாண்டி, முட்டி அளவு நீரில் வீழ்ந்தான். அவள் ஹா ஹா வென்று கைகொட்டி சிரித்தாள். “அடுத்தவர் வாழ்வில் மூக்கை நுழைத்தால் இது தான் கதி. கெட் லாஸ்ட்.”
அவன் கரை நோக்கி, நீரில் சளக் சளக் சப்தத்துடன் வெளி வந்தான். முகத்தில் வழிந்த நீரை துடைத்துக் கொண்டான்.
“ஜேனெட்.... என் வாயில் உப்பு கரிக்குது. நீ என்னை புரிந்துகொள்ளா விட்டால்.. உன் வாழ்வும் உப்பு கரிக்கும். அவ்வளவு தான் சொல்வேன். எங்க பக்கம் ஒரு சித்தர் பாட்டு உண்டு. நந்தவனத்தில் ஒரு ஆண்டி. அவன் நாலாறு மாசமாய் குயவனை வேண்டி, கொண்டு வந்தான் ஒரு தோண்டி—மெத்தக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி....”
அதற்கு பொருள் சொன்னவன்..
“நீயும் அந்த ஆண்டி போல தான். தோண்டியை தவறாக பயன்படுத்தி, கண் மண் தெரியாமல் கூத்தாடி தோண்டியை போட்டு உடைக்க பார்க்கிறாய். கிடைத்த வரத்தை சரியா பயன்படுத்திக்க ஜேனெட். இப்பவும் ஒண்ணும் கெட்டுப் போகலை. உன்னை நீயே காப்பாத்திக்க. உன்னை நேசிப்பவனை நீ நேசி. உன் வாழ்க்கை நல்லாயிருக்கும். உன் ஈகோ விளையாட்டு உனக்கே வினை.”
அவள் உச்சக்கட்ட கோபத்துடன் அவன் கழுத்தை நெறிக்க முயன்றாள். அங்கே சார்ல்ஸ் ஓடி வந்தான்... அவன் இவர்கள் இருவரையும் பின்தொடர்ந்ததை இருவரும் கவனிக்கவில்லை..
“ஜேனட்.... பூவர் சேப். லெட் கோ ஆப் ஹிம்.” ஜேனெட் சற்று அடங்கினாள். “நீ எதுக்கு இங்க வந்தே.? ஐ வான்ட் டூ கில் ஹிம்.”
“ரிலாக்ஸ். நீ சிறை செல்ல விருப்பமா.? டோன்ட் பீ சில்லி.” அவளை அணைத்துக் கொண்டு அவன் சென்றான்.
ஜேனெட்டை அவன் உண்மையாக நேசிக்கிறான் என்பது நிரஞ்சனுக்குப் புரிந்தது.
வீட்டுக்கு வந்தான்.
“கலா.. என்னை மன்னிச்சிடு. என்னால் ஜெனெட் மனசை மாத்த முடியலை. நாம கிளம்பவேண்டியது தான்..”
“எதுக்கு மன்னிப்பு நிரஞ்சன்.? நா அந்த முடிவுக்கு எப்பவோ வந்திட்டேன். இந்த நாடும் வேண்டாம். இந்த வீடும் வேண்டாம். ஓசியில் வரும் எதுவுமே ஒரு அவமானம் தான். நா கத்துக்கிட்ட பாடம். இந்த பரந்த உலகில் எனக்கு வாழ ஒரு வழி கிடைக்காதா என்ன.? உங்க நட்பு தான் என் பாங்க் பாலன்ஸ்...”
கலா தெளிவாக திடமாக பேசியதில் நிரஞ்சன் மகிழ்ச்சி அடைந்தான். சந்திப்பு தோல்வியில் முடிந்ததுன்னு கவலைப்பட்டான். அதுவும் ஒரு வெற்றி தான் என்று கலா சொல்லாமல் சொல்லிவிட்டாள்.
வாழ நினைத்தால் வாழலாம். வழியா இல்லை பூமியில்.! கண்ணதாசன் பாடல் வரிகள் உயிர் கொடுக்கிறது.
சொந்தம் தொடரும்.