இருபத்தொன்பது அத்தியாயம்
காதல் எங்கள் சொந்தம்...29
என்னதான் ஒரு பிரச்சனை சுமூகமாக முடிந்திருந்தாலும், அதில் ஒரு சின்ன வலி இருக்கும். அருணுக்கு அந்த வலி இருந்தது. குழந்தை கருவில் கலைந்தது ரொம்பவே வருத்தமாக இருந்தது.
“ஜேனெட் பிரச்சனை முடிந்தது. ஆனால் ஒரு குற்ற உணர்வு என்னை தாக்குது கலா. என்னோட மடத்தனத்தால் ஒரு உயிர் போயிடுச்சு. மனசை கசக்கி பிழியுது..” என்றான் அருண்.
“கோவலன் மாதவியை விட்டு திரும்ப வந்ததும், போற்றா ஒழுக்கம் புரிந்தீர்.. என்று சொல்லுவா. நெத்தியடி அட்டாக். அந்த காலத்திலேயே இப்படி சொன்னா. அதான் வீரக் கண்ணகி. நான் இப்ப என்ன சொல்றதுன்னு எனக்கேத் தெரியலை. முழு தவறு ஜேனட் மேல் இல்ல. குடியும் அதன் விளைவும் தெரிஞ்ச நீங்க, இப்படி போதையில் ஒரு காரியத்தைப் பண்ணது மன்னிக்க முடியாத குத்தம். எனக்கும் இந்த காயத்தின் வடு வாழ்நாள் முழுக்க போகாது. இனி ஒரு ஜேனெட் உங்க வாழ்க்கையில் வரக்கூடாதுன்னு நம்பி தான் உங்களை கல்யாணம் செய்துக்க சம்மதிக்கிறேன்....”
தலைகுணிந்தான் அருண். கண்ணீர் ததும்ப சொன்னான்..
“நா இனிமே ராமனா இருப்பேன்.... என்னை மன்னிச்சதுக்கு தேங்க்ஸ் கலா. மன்னிப்பு கேட்டு தப்பிச்சுக்க பார்க்கலை. சின்ஸியரா உணர்றேன்.” கலா ஓரளவு சமாதானம் ஆனாள்.
சார்ல்ஸ்—ஜேனெட் கல்யாணம் சிறப்பாக நடந்தது. ஜேனெட் புது மனுஷியாக மலர்ந்து காணப்பட்டாள். வாழ்த்தும் பரிசும் கொடுத்து, கல்யாணத்தை சிறப்பித்தனர் அருண்—கலா ஜோடி. கூடவே நிரஞ்சன்.
“கலா... உன் கல்யாணத்தையும் முடித்துக் கொண்டு நான் கிளம்பறேன். உன்னைப் பத்தி எனக்கு இனி கவலை இல்லை.”
“நா உன்னை ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன் நிரஞ்சன். நீயும் காவ்யாவும் கல்யாணம் பண்ணிக்கணும். கல்யாண பத்திரிகை அனுப்பனும். கண்டிப்பா நானும் அருணும் வருவோம்....”
அவர்கள் கல்யாணம் முடிந்த கையோடு நிரஞ்சன் புறப்பட்டான். ரெண்டு ஜோடியும் வழியனுப்பி வைத்தார்கள்.
விமானம் அவனை உயரே தூக்கிக் கொண்டு போனது. அவன் நிதானமாக இப்ப தான் தன்னைப் பற்றி சிந்திக்க ஆரம்பித்தான். காவ்யா எனக்காக காத்திருப்பாளா.? அவனுக்கு மனம் பக்பக் என்று அடித்துக் கொண்டது. ஆண்கள் எல்லோரும் சுயநலவாதிகள் தான் என்னையும் சேர்த்து, என்று அவனுக்கே புரிந்தது. காவ்யாவிடம் ஏன் போகிறேன்.. எதுக்கு போகிறேன் என்று தகவல் சொல்லாமல் ஓடி வந்திட்டேன். அப்புறம் அவள் எனக்காக காத்திருக்கணும் என்று நினைப்பதில் என்ன நியாயம் இருக்கு.?
என் சினேகிதி முக்கியம்.... அவளைத் தாண்டி தான் நீ என்று சொல்லாமல் சொல்லிவிட்டான். அவளுக்கு வேறு ஒரு மாப்பிள்ளை பிக்ஸ் ஆகியிருக்குமோ.? அதை நினைத்தாலே அவனுக்கு வலித்தது. ஒரு வாட்ஸ்அப் மெசேஜ் பண்ணியிருக்கலாம். பேசியிருக்கலாம்... அவள் தொடர்பு கொள்ள தன் நம்பர் கொடுத்திருக்கலாம்.... ஏர் கோஸ்டஸ் பணிவுடன் உணவு பாக்ஸ் கொண்டு வந்து நீட்டினாள். அவன் வேண்டாம் என்று சொல்ல.. அவள் கேள்விக்குறியுடன் அடுத்த நபருக்கு வழங்க போய்விட்டாள்.
காவ்யாவின் கம்பீரம். குழந்தைத்தனம். ப்ரெஷ் லுக்.... சிரிப்பு எல்லாம் அவன் மனசுக்குள் இப்ப வந்து அலைமோதியது. எல்லாம் நெஞ்சில் போட்டு அமுக்கி வைத்திருந்தான்.. கலா பிரச்சனை முடிய, அவன் மனம் திறந்து கொண்டது. கடவுளே என்னை என் காவ்யாவிடம் சேர்த்து விடு. ஓடிப்போன உனக்கு நா ஏன் காத்திருக்கணும்ன்னு சொல்லி.. அவள் வேறு யாரயாவது கல்யாணம் பண்ண சம்மதித்திருப்பாளோ.?
விமானம் மலேஷியா வந்ததும் நின்றது. அடுத்த பிளைட் அவனுக்கு அஞ்சு மணி நேரம் கழித்து தான். அந்த அஞ்சு மணி நேரமும் அவன் சிந்தனை காவ்யா பற்றியே இருந்தது.
சென்னை விமான நிலையம் வந்து, விமானம் தரை தொட்டது. கஸ்டம்ஸ் முடிந்து அவன் அவசர அவசரமாக கேப் பிடித்து கொடைக்கானல் நோக்கி செல்கிறான்....
ஹேமா ஒரு விடுதலை உணர்வுடன் கொடைக்கானல் வந்து சேர்ந்தாள். அண்ணா சந்திரன் ஃபோன் செய்தான்.
“ஹேமா.. ஒரு குட் நியூஸ். எனக்கு கொடைக்கானல் டிரான்ஸ்பர் பிரமோஷனுடன் உறுதி ஆகிவிட்டது. நானே ஒரு வீடு பார்த்துவிட்டேன். மலர்விழி விடுதி பக்கத்தில்..”
“ரொம்ப சந்தோஷம் அண்ணா. எப்ப வரீங்.? வீட்டு அட்ரெஸ் சொல்லுங்க. நான் போய் பார்த்து கிளீன் பண்ணி வைக்கிறேன். காவ்யாவுக்குத் தெரியுமா.?” என்றாள் உற்சாகமாக.
“தெரியும். நானும் சித்தப்பாவும் வரும் சனிக்கிழமை வருகிறோம். அட்ரெஸ் வாட்ஸ் அப்பில் அனுப்பறேன். நீ நல்லாயிருக்கியா ஹேமா.? சித்தப்பா உனக்கு அருமையான வரன் பார்த்திருக்கார். எல்லாம் கூடி வருது. வச்சிடவா.?”
திக்கென்று உணர்ந்தாள் ஹேமா. அப்பா பார்த்த வரன்.. வேண்டாம் என்று சொன்னால் விடுவாரா.? கலங்கினாள். அகிலிடம் பட்ட அவமானம் பச்சை ரணமாக இன்னமும் காயாமல் இருக்கு. எவன் எவனிடமோ பிச்சை எடுத்து ஒரு வாழ்க்கை வாழணுமா?
காவ்யாவிடம் சொல்லிக் கொண்டு அவள் நிர்மல் வீட்டுக்கு வந்தாள். அங்கு அவன் அக்காவும் இருந்தார்.
“வா வா ஹேமா. என்ன பெங்களூரு நாட்கள் எப்படி போச்சு.?” கற்பகம் கேட்டவுடன் சட்டென்று உடைந்து போய் அழுதாள். மடமடவென்று நடந்ததை சொன்னாள். நிர்மலும் கேட்டுக் கொண்டிருந்தான். அவன் உதடுகள் துடித்தது. “இவ்வளவு மட்டமானவனா அந்த அகில்.?”
“ஹேமா.. குப்பையை விட்டுத் தள்ளு. திட்டக் கூட தகுதி இல்லாதவன். என்னோட வளைகாப்பு அடுத்த வாரம். அன்று நிர்மலுக்கும் உனக்கும் என்கேஜ்மெண்ட். சொல்லிடப் போறேன். ஓ. கே தானே.?” என்றாள் கற்பகம்.
மங்களம் ரோஜா பூக்களை காம்போடு பறித்து, கட்டி கொண்டு வந்து ஹேமா கையில் கொடுத்தாள். கலர்கலரான மலர்கள். அதில் கருப்பு ரோஜாவும் இருந்தது. வண்ண வெளிர் நிற மலர்கள் நடுவே அந்த ஒற்றை கருப்பு ரோஜா மின்னியது.
“மலர்களைப் போல் உன் வாழ்வு பூத்து குலுங்கட்டும். அந்த கருப்பு ரோஜா தான் சிறப்பு. நீ தான் சிறப்பு.... நல்லா இருக்கணும்மா.” என்று வாழ்த்தி கொடுத்தாள். வாசனை அள்ளியது.
ஹேமா வாங்க மறுத்தாள்.
“கல்யாணத்துக்கும் எனக்கும் வெகு தூரம் மாமி. வாழ்த்தும் போது பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழணும்னு சொல்வாங்க. அந்த பாக்கியத்தை கொடுக்க முடியாத எனக்கு.... எனக்கு..”
“ஹேமா.... உன் மனசு எவ்வளவு காயப்பட்டிருக்குன்னு புரியுது. ஒரு தாயாவது பாக்கியம் தரும் விஷயம் தான். ஆனா அதை விட சிறப்பு என்ன தெரியுமா.? மனசாலே தாய் ஆவது தான். சசிக்கு நீ தாய். தந்தையாக நிர்மல் இருப்பான்..... இந்தக் கல்யாணம் நடந்தா நாங்க எல்லோரும் சந்தோஷம் அடைவோம்.”
ஹேமா நிர்மலைப் பார்த்தாள். அவன் சசி தனக்கு எழுதிய பாதர்ஸ் டே கார்டை காண்பித்தான்....
அன்பு தந்தைக்கு.... நா ராசியில்லாதவன்னு நினச்சேன். எனக்கு தாயாக ஹேமா மா இருக்காங்க. தந்தையா நீங்க இருப்பீங்களா.? என்றென்றும் அன்புடன் மகள் சசிகலா நிர்மல்.... வார்த்தைகள் ஒவ்வொன்றும் நெஞ்சில் இறங்கி ஹேமாவை சிலிர்க்க வைத்தது.
கற்பகம் எழுந்து போனாள். அவர்கள் பேசட்டும். தனிமை அவர்களுக்கு முக்கியம்.... நிர்மல் அவள் அருகில் அமர்ந்து..
“எனக்கு நீ வேண்டும் ஹேமா. பிள்ளை பெற்றுக் கொள்ளும் அம்மாக்கள் எல்லோரும் அம்மாவா இருக்காங்களா.? அதுக்கு ஒரு கனிந்த மனசு வேணும். எங்கம்மா அக்காவை பெத்தாங்க... ஆனா எத்தனை வலியை கொடுத்திட்டாங்க.! போராடவே இல்லை. என் மகள் என்னோடு தான் இருப்பான்னு சொல்ல முடியாத தாய்மையால் என்ன பிரயோஜனம்.? நீ சசியின் வலியை புரிஞ்சுக்கிட்டே. ஏத்துக்கிட்ட. அது பெரிய விஷயம் ஹேமா. என் அக்கா பட்ட கஷ்டம் எந்தக் குழந்தையும் படக் கூடாது.... உறவுகள் சேரணும். பிரிவில் ஏமாற்றம் தான் வரும்.. நா உன்னை மனசார நேசிக்கிறேன். சசிக்கு தந்தையா என்னை நீ ஏத்துக்கணும்....”
ஹேமாவுக்கு எதுவம் சொல்லத் தோன்றவில்லை. அவள் பார்வையே பேசியது. அவளை அவன் நெஞ்சில் சாத்திக் கொண்டான். காதல் இருவருக்குள்ளும் பூத்தது. எட்டிப் பார்த்தாள் கற்பகம்.... மனசு நிறைந்தது.
இங்கே காவ்யாவுக்கு என்ன நடக்கிறது.? அவள் முகம் சிவந்து, கோவைப் பழம் போல் இருந்தது. அம்மா அவளைப் பார்த்து சொன்னதை அவளால் தாங்க முடியவில்லை.
“அம்மா.. அவசரப்பட்டு எந்த முடிவுக்கும் வராதே. இது விளையாட்டில்ல. ஸ்விட்ச் போட்டா மாதிரி மனசை மாதிக்க முடியாதம்மா....”
“மாத்திக்க நான் சொல்லலை காவ்யா. இது கடவுள் கட்டளை.”
“ஓ.... கடவுள் சொன்னாரா.. காவ்யா நீ நிரஞ்சனை மறந்திடு. சந்திரணை கட்டிக்கன்னு.? யாருக்கும் உரிமை இல்ல என் விஷயத்தில் தலையிட..”
“எனக்கு வயசாவுது காவ்யா. நீ தனி ஆள் இல்ல. உன்னை நம்பி பல குடும்பங்கள் இருக்கு. இந்த விடுதி, டீ எஸ்டேட் எல்லாம் கட்டிக் காக்க உனக்கு ஒரு துணை வேண்டாமா.? நிரஞ்சன் வேறு துணை தேடிக்கிட்டான். நீ இன்னும் அவனை நம்பி இருந்தா எப்படி.?” வேதவல்லி அம்மாள் கவலையுடன் பேசினார்.
போன மாதமே காவ்யாவின் வாட்ஸ் அப்பில் ஒரு போட்டோவும் செய்தியும் வந்தது. நிரஞ்சன் ஒரு பெண்ணுடன் ரெஸ்டொரெண்டில் காப்பி அருந்தியபடி சேர்ந்து சிரிப்பது போல ஒரு புகைப்படம். இன்னொன்று.. ஒரு வெள்ளைக்கார பெண்மணியுடன் அவன் பீச்சில் கடல் நீரில் விழுந்து விளையாட.. அவள் பார்த்து ரசிக்க என்று ஒரு புகைப்படம். குறிப்பு வேறு....
“காவ்யா மேடம். நான் உங்களிடம் ஹோல்சேய்ல் டீல் வச்சிருக்கேன். ஆஸ்திரேலியாவில் உங்க டீ பிரபலம். விரும்பி வாங்குவாங்க. உங்க மேல் அக்கரை கொண்டதால் இந்தப் படங்களை அனுப்புகிறேன். நீங்க நேசிக்கும் நிரஞ்சன்.. ஒரு இந்தியப் பெண்ணுடன் சேர்ந்து வாழ்கிறார் ஒரே வீட்டில். அவரை ஒரு வெள்ளைக்கார பெண்ணுடன் பீச்சில் பார்த்தேன். தீர விசாரியுங்க. அவசரப்பட்டு கல்யாணம் பண்ணிக்க வேணாம். ஏதேனும் தவறாக சொல்லியிருந்தால் மன்னிக்கவும்.... வாசுதேவன்.
இதை வேதவல்லி அம்மாள் பார்த்துவிட்டார். இன்று தான் பார்க்கிறார். அவருள் கவலை மண்டியது.
“எப்ப வந்துச்சு இந்த செய்தி.?”
“போன மசமே வந்திடுச்சு மா..”
“நீ ஏன் என் கிட்டே சொல்லலை.?”
“அம்மா.. நிரஞ்சன் அப்படிப்பட்டவர் இல்லை. அவர் தப்பா பழகக் கூடியவர் இல்ல. என்ன பிரச்சனைக்காக அவர் அந்தப் பெண் வீட்டில் இருக்காரோ.? சும்மா ரெண்டு பெண்களோட அவர் போட்டோ வந்ததாலே அவர் மோசமானவர்னு சொல்ல முடியாதம்மா. உன் கிட்டே சொன்னா நீ புரிஞ்சுக்க மாட்டே. அதான் சொல்லலை. அம்மா.... சந்திரணை நா நட்பா தான் பார்க்கறேன். புரிஞ்சுக்க.” என்றாள் காவ்யா.
வேலை மெனக்கெட்டு இந்த வேலையை பார்த்த நபர் மேல் அவளுக்கு கோபம் கோபமாக வந்தது. அந்த வாசுதேவன். ரெகுலர் கஷ்டமர். உலகம் ரொம்ப சின்னது. எப்படி செய்திகள் பரவுகிறது.!
போன மாசமே காவ்யா இது பற்றி ஹேமாவிடம் பேசினாள். ஒரு லாங் டிரைவ் போக கூப்பிட்டாள். அவளிடம் மனம் திறந்து பேசினாள். ஹேமாவும் நிர்மல் தன்னைக் காதலிப்பது பற்றி, பின் அகிலின் அழைப்பு பற்றி மனம் விட்டுப் பேசினாள்.
தப்பான புகார் போய்.. தன் மண்டையை போட்டு வேதவல்லி உருட்டிக் கொண்டிருப்பது தெரியாமல் நிரஞ்சன் கொடைக்கானல் மண்ணில் வந்து இறங்கினான்.
சொந்தம் தொடரும்.