அத்தியாயம்.. 5
காதல் எங்கள் சொந்தம்
மனிதனின் மனதில் சில சமயம் ரெண்டு விதமான உணர்வு வரும். ஒரே விஷயம் ரெண்டு வித முரணான உணர்வை ஏற்படுத்தும்.
சந்திரன் அப்படிப்பட்ட உணர்வில் தான் சிக்கி இருந்தான். தங்கை ஹேமாவை விட்டுவிட்டு வந்தது அவனுக்கு கவலையாக இருந்தது. அதே சமயம் காவ்யாவை திரும்ப பார்க்கும் சான்ஸ் அதனால் கிடைக்கிறது என்று சந்தோஷமாகவும் இருந்தது.
காரை அவன் செலுத்திக் கொண்டே போனான். அவன் மனமும் நடந்து முடிந்த நிகழ்ச்சிகளை செலுத்திக் கொண்டே போனது. அவ கண்ணில் நட்பு தெரிஞ்சுது, என் கண்ணிலோ காதல் ஊர்ந்தது. அவள் கனிந்த நட்பே போதும்ன்னு என் மனசு சமாதானம் அடைவது ஏன்.? கிட்டாதாயின் வெட்டென மற என்று ஏன் அது புரிந்து கொள்ளாமல், நப்பாசையில் பூரிக்கிறது?... ஷேம் என்று மனசை சாடினான். நிரஞ்சன் இருக்கும் மனதில் எனக்கெங்கே இடம்.?
கல்லூரியில் படிக்கும்போது அவன் நண்பன் கவுதம் சொன்ன ஒரு சம்பவம் ஞயாபகம் வந்தது.
“மச்சி.... சுதாகரன் மட்டும் டென்னிஸ் போட்டியில் கலந்து கொள்ளாம இருந்தா நா தான்டா ஜெயிப்பேன்....” அந்த சுதாகரன் போட்டியில் கலந்து கொள்ளாமல் போக, ஏதேனும் ஒரு காரணம்.. அவனுக்கு காச்சால், இல்லே ஏதாவது ஒரு தடங்கல் வரட்டுமடா சாமி.. நப்பாசையில் நகரும் நண்பனின் எண்ணத்தை சாடியிருக்கிறான். இப்போ அவனே காதல் ரேஸில்.. யார் அது நிரஞ்சன்.... அவனை பின்னுக்கு தள்ளும்படி சூழ்நிலை அமையாதா.? என்று வேண்டுகிறான். அப்படி நினைப்பதற்கு நா காரணம் இல்லே.... அவ புன்னகை தான் காரணம். அவ முறுவல் புதியதோர் முறுவல்.... ஆம் சீதையின் புன்முறுவலை அப்படித்தான் வர்ணிக்கிறார் கம்பர். அதே முறுவல் காவ்யா இதழில். அது அவனுள் இறங்கி மனசை மலர்த்தியது. வைல்ட் கூஸ் சேஸ் என்று அவனுக்குப் புரிந்து தான் இருந்தது. காதல் கட்டில் அமையும் தன்மையுடையது இல்லையே.! நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்....
ஃபோன் இன்னிசை எழுப்பியது.... யார்.? அட காவ்யா.! காரில் பொருத்தியிருந்த ப்ளு டூத் மூலமாக பேசினான்..
“ஹலோ.... காவ்யா வாட்ஸ் அப்.?”
“ஒண்ணுமில்லே.. பார்த்து பத்திரமா ஓட்டுங்க. மலப்பாதை.... லேசாக தூரிக்கிட்டு இருக்கு....”
அவனுள் இதமான இன்பம் பரவியது. அவள் அக்கரை இனித்தது.
“நா புதுசா கார் ஓட்டலை. பயப்பட வேணாம்.”
“ஹேர்பின் பெண்ட் வரும்போது முந்தாதீங்க....”
“ஆர்டர் மை லார்ட்.... ஹேமா எப்படி இருக்கா.?”
“பாசமலர் சாவித்திரி தான். மலர்ந்தும் மலராத பாடாத குறை...... ப்பா இப்படி அண்ணன் தங்கையை பார்த்தது இல்லே. பொறாமையா இருக்கு. எனக்கொரு அண்ணா இல்லையே....”
“அதை விட சிறந்த நட்பா நா இருக்கேனே....”
“தேங்க்ஸ் சந்திரன். சீக்கிரம் வந்திடுங்க.... உங்க தங்கச்சி தேடிட்டு இருக்காங்க. ரொம்ப டல்....”
“அப்ப நீங்க தேடலை.? சனியன் ஒழிந்தான்னு ஜாலி. அதான் பாசத்துக்கும் நட்புக்கும் உள்ள வித்தியாசம்.”
“எனக்கு கால் ஓடியலையே...... ஆனா மனசு ஓடிஞ்சிடுச்சி.”
“அதுக்கு என்னை காரணம் சொல்லாதீங்க. நிரஞ்சன் இருக்கும் போது நா என்ன கொசுறு....”
“இல்லே உங்களை முதல்ல விரட்டிவிட்டேனே. அதான் மனசு ஒடுஞ்சு போச்சு. என்ன இருந்தாலும் என்னை ஒரு அரக்கி ரேஞ்சுக்கு நினச்சு பல்லைக் கடிச்சீங்க தானே.?”
“மலையை விட்டு இறங்கிட்டேன். அரக்கி நினைப்பை விட்டும் இறங்கிட்டேன். போதுமா.?”
சமதளத்தில் கார் ஓடிக் கொண்டிந்தது. அவன் சித்தப்பாவிடமிருந்து ஃபோன். ஹேமாவிடமிருந்தும் ஃபோன்.... காவ்யாவுடன் பேசுவதை நிப்பாட்ட மனசில்லை. ஆனால் வேறு வழியில்லை.
“காவ்யா.. நா அப்புறம் பேசறேன். சித்தப்பா கூப்பிடறார்.”
“சரி.... சித்தப்பாவை கேட்டதா சொல்லுங்க....”
சித்தப்பாவுடன் பேசிவிட்டு, அவன் ஹேமாவிடமும் பேசினான். காலை டிபன் சாப்பிடுவதுக்கு அவன் ஒரு ரெஸ்டொரன்டில் காரை நிறுத்தினான். அவனுக்கு செம பசி. அவன் உள்ளே நுழைந்து இடம் பிடித்து உட்கார, அதே டேபிளில் உள்ள எதிர் இருக்கையில் வந்தமர்ந்தவன் “மச்சி.. நீ எங்கடா இப்படி.?” என்று அவன் முதுகில் தட்டினான். பலமான அடி.
“அட கௌதம் நீயா.? என்ன இனிமையான சந்திப்பு.! என்னடா டென்னிஸ் வீரன்... இப்படி தொந்தியும் தொப்பையுமா இருக்கே.?”
இருவருக்கும் காப்பி ஆர்டர் பண்ணிய கௌதம்....
“கல்யாணம் ஆக்கிடுச்சு டா....”
“கல்யாணம் ஆன பெண்களுக்கு தாலி அடையாளம்ன்னா கல்யாணம் ஆன ஆண்களுக்கு தொப்பை அடையாளமா.? என்னடா பதில் இது?. ஜிம்முக்கு போறதில்லையா.?”
“அந்த திசைக்கே ஒரு கும்பிடு போட்டாச்சு.”
காப்பி வந்தது. “வேறு என்ன சாப்பிடறீங்க சார்.?” சர்வர் வினவ..
“சூடா இட்லி கொடுங்க. மினி இட்லி ஓ.கே. உனக்கு டா.?”
“சந்திரா.... சப்பாத்தி டா..” சர்வர் போனதும்..
“நார்த் இன்டியன் பொண்ணை கல்யாணம் பண்ணிக்கிட்டேன். சப்பாத்தி என் இஷ்ட டிஷ்சாக மாறிடுச்சு....”
ஆச்சர்யம் தான். கௌதம் முன்பு சப்பாத்தி என்றாலே காத தூரம் ஓடுவான். அவர்கள் நிறைய பேசினார்கள். பரஸ்பரம் எல்லாம் பரிமாறிக் கொண்டார்கள்.
“ஹேமாவை பார்த்து ரொம்ப நாள் ஆச்சு. நா ஒரு வேலையா அங்க வருவேன். அப்ப பார்க்க வரேன்....” என்றான் கௌதம்.
“வா.. வா.... அவளுக்கு உன்னை நினைவு இருக்கோ என்னவோ.?”
“சந்திரா.... நீ இப்ப என்ன பண்ணிட்டு இருக்கே.?”
தன் வேலை பற்றி சொன்னான். கொடைகானலில் பிரமோஷனில் போக வேண்டியதை சொன்னான்.
“கொடைக்கானலில் வீடு கிடைக்கணும். அது தான் இப்ப பிரச்சனை.”
“அப்படியா.? என் கசின் ஒருத்தன் அங்கே வீடு விக்கப் போறான். பழைய வீடு. ரிபேர் நிறைய பண்ண வேண்டும். ஆனா.... பண்ணிட்டா பக்காவா இருக்கும். நீ சரின்னு சொன்னா நான் அவன் ஃபோன் நம்பர் தரேன்...” அவர்கள் ஆர்டர் பண்ணியது வந்துவிட.. இருவரும் சாப்பிட்டு முடித்தனர். கைகழுவி விட்டு வந்தனர். சந்திரனுக்கு ஃபோன் நம்பர் கொடுத்தான்.
“அவன் பேர் நிர்மல்..... பெரிசா மற்ற விவரம் தெரியாது. ரொம்ப நாள் டச்சில் இல்லே. இப்ப வீடு விக்கும் விஷயமா, நல்ல பார்ட்டி இருந்தா சொல்லுன்னு ஃபோன் பண்ணியிருந்தான்.... டிஸ்டண்ட் ரிலேடிவ் தான். வீடு பிடிச்சிருந்தா பாரு.. அப்ப வரட்டுமா.?”
“ஓ. கே உன்னை சந்திச்சதில் ரொம்ப சந்தோஷம் டா..”
மீண்டும் காரில் ஏறி சந்திரன் கிளம்பினான். வீடு அவ்வளவு சுலபமாக அமையுமா.? தெரியலை.. பார்ப்போம். வீட்டுக்கு வந்ததும் சித்தப்பா பிடித்துக் கொண்டார். அவர் முகத்தில் கோபத்தை விட பதற்றம் அதிகம் இருந்தது.
“சித்தப்பா ரிலாக்ஸ். நா விவரமா சொல்றேன்.... இதோ வந்திட்டேன்.”
செல்லம் வந்து காப்பி கொடுத்தாள். “டிபன் ரெடி.” என்றாள்.
“நா சாப்பிட்டுட்டேன். உடை மாத்திட்டு வரேன்..” அவன் ப்ரெஷ் ஆகி வந்தவுடன் சித்தப்பா புலம்பினார்.
“ரெண்டு பேரும் இல்ல. போனும் பண்ணலை. என்னடா இதெல்லாம்.? பொறுப்பு வேண்டாமா.? எங்க இருக்கீங்க.? என்ன பண்ணறீங்க.? ஒண்ணும் தெரியாம....”
எதுவும் ஒளிக்கமா சொல்லிவிட்டான் அவன்.
“என்ன ஹேமாவுக்கு காலில் அடியா.? நா உடனே போனும்.”
“வேண்டாம் சித்தப்பா.” காவ்யா பற்றி சொல்லி அவங்க எல்லாம் நல்லா பாரத்துக்குவாங்க என்றான். அவருக்கு மனசே ஆகலை. ஹேமாவுக்கு ஃபோன் செய்தார்.
“அம்மாடி.... நா வரவா.?”
“வேண்டாம்ப்பா. பார்த்துக்க ஆள் இருக்கு.” அவள் வெகு நேரம் பேசி சமாதானப்படுத்தினாள் அரைகுறையாக சம்மதித்தார். அவர் முகமே சரியில்லை. “சித்தப்பா கவலை வேண்டாம். கூடிய சீக்கிரம் வீடு பார்த்து போயிடலாம்.” என்றான் சந்திரன்.
ஹேமாவை ஆஸ்பத்திரியில் சேர்த்து டெஸ்ட் எடுக்க வைத்தாள் காவ்யா. எக்ஸ்ரே... ஸ்கேன் ரிசல்ட் வந்தது.
“சின்ன சர்ஜரி தேவைப்படுது.... அரை மணியில் முடிந்துவிடும்.” என்றார் டாக்டர் குமார். பணத்தை ஹேமா கார்டில் கட்டிவிட சர்ஜரி உடனே பண்ணிவிட்டார்கள்.
“ரெண்டு வாரம் ரெஸ்ட் எடுக்கணும். காலுக்கு ரொம்ப வேலை கொடுக்கக் கூடாது. மருந்து எழுதி தருகிறேன். தவறாம போட்டுக்கணும். சரியாகிவிடும்..” டாக்டர் சொல்ல ஹேமாவும் காவ்யாவும் நிம்மதி அடைந்தனர்.
“உங்க தங்கச்சி பத்தி கவலைப்படாதீங்க. ஷீ இஸ் பைன்.” என்றாள் காவ்யா. ஒரு வாரம் முந்தி அவள் யாரோ இவர்கள் யாரோ என்று இருந்த நிலயையும், இப்ப உள்ள நிலையையும் பார்க்கும்போது சந்திரனுக்கு ஒன்று புரிந்தது. பூர்வ ஜன்ம பந்தம் என்பது உண்மை தான். சிலர் அப்படி அன்பாக பேசுவார்கள்.... உதவி தேவைப்படும் போது ஜகா வாங்கிவிடுவார்கள். ஆனால் காவ்யா அப்படி இல்லை. அவள் பொறுப்பு ஏற்றதால், அவன் நிம்மதியாக இங்கு முக்கிய வேலைகளை பார்க்க முடிந்தது. ஊர் மாற்றி போவதென்றால் சும்மாவா.? மலையை புறட்டுவது மாதிரி.!
ஹேமாவை பார்த்துக் கொண்டது, அதுவும் ஆஸ்பத்திரியில் சேர்த்து சர்ஜரி பண்ணி.... நடக்க முடியாத அவளை சமாளித்து.. ஓ எவ்வளவு பெரிய விஷயம்.!
“தேங்கயூ காவ்யா.... கிரேட்.” என்றான் சந்திரன்.
“நீங்க என்னை நிஜமாவே மன்னிச்சிட்டீங்களா.? எப்படி சண்டை போட்டேன். வெட்கமா இருக்கு.”
“சண்டையே போடலைன்னு கூறும் உறவை விட, எவ்வளவு சண்டை போட்டாலும் அதை மறந்து பேசும் உறவு தானே நம் உறவு.?” என்றான்.
“நிஜம் தான். நாம பிரிக்கமுடியாத பிரெண்ட்ஸ். நிரஞ்சன் வந்ததும் உங்க பத்தி சொல்வேன். நீங்க என் ஆப்த நண்பர்ன்னு பெருமையா சொல்வேன்....”
நட்புக்கும் காதலுக்கும் ஒரு சின்ன மயிரிழை கோடு தான்....
ஒரு பெண் ஒருவனைத் தான் காதலிப்பாள். எதுக்கு காகித மலர் மணக்கும்ன்னு நம்பிட்டு இருக்கே ராஜா....
நிரஞ்சன்.. எங்கே இருக்கான் என் போட்டியாளன்.? அவன் எங்கே போயிருக்கான்.? கண்டிப்பா திரும்பிடுவானா.? பார்க்கலாம்.
ஹேமா ஃபோன் செய்தாள்.
“அய்யோ.... நடப்பது எவ்வளவு சுகம்ன்னு இப்ப நல்ல புரியுது அண்ணா. அடுத்தவங்களை டிப்பென்ட் பண்ணி வாழ்வது நரக வாழ்க்கை.” உணர்ந்து சொன்னாள் ஹேமா.
“உண்மை தான் ஹேமா.... வீடு பார்க்கணும். நா ஒரு ஃபோன் நம்பர் தரேன். அவர் பேர் நிர்மல். வீடு விற்க போறார்ன்னு கௌதம் சொன்னான். பேசிப் பார்.” என்றான்
“சரி அண்ணா.. ஷிப்ட் பண்ணப் போறதாலே உங்களுக்கு நிறைய வேலை இருக்கும். நா வீடு பாக்கறேன். வாடகைக்கும் பார்க்கலாம்.”
ஒரு நிம்மதி பரவி வெகு நேரம் ஆகவில்லை. அதற்குள் மனசை பிழியும் செய்தி ஒன்றை அன்றிரவு ஹேமா சொன்னாள்.
“அண்ணா.... ஒரு துயரமான செய்தி..” என்றாள். அவள் சொன்னதை கேட்டு சந்திரன் திடுக்கிட்டுப் போனான். “நிஜமாவா.?” என்றான்.
சொந்தம் தொடரும்.