காதல் எங்கள் சொந்தம் - 6

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நிதனிபிரபு

Administrator
Staff member
Nov 11, 2018
2,210
16,607
113
Germany
அத்தியாயம்.. 6

காதல் எங்கள் சொந்தம்..

பூ மலர்வதற்கு முன் இருப்பது மொட்டு நிலை. அந்த நிலையிலேயே அது சருகாகி விட்டால்.?

குழந்தை சசிக்கு தான் அந்த நிலைமை. அம்மா ராதா குணமாகி வந்ததும் துள்ளிக் குதித்து, தன் வாழ்வு மலரும் என்றிருந்த போது, ராதா மீண்டும் ஒரு அட்டாக் வந்து.... எதிர்பாரா மரணம்.

“ஆஸ்பத்திரி கொண்டு போகக் கூட நேரமில்லை அண்ணா. சடன் டெத். பாவம் சசி.... மனசிலே முள் குத்தின மாதிரி இருக்கு.... அந்த பிஞ்சு முகத்தைப் பார்க்க பார்க்க வலியா இருக்கு..”

கண்ணீர் மல்க தங்கை ஹேமா சொல்லி அழுத போது, சந்திரனுமே அதே முள் தைத்த உணர்வுடன் நின்றான்.

“அவளின் அப்பாவுக்கு ஃபோன் பண்ணலையா.? அவர் சிங்கப்பூரில் இருக்கார்ன்னு சொன்னாளே....”

காவ்யா ரோசி இருவரும் பிரமை பிடித்து நின்றிருந்தனர். வாட்ச் மேன் கந்தசாமி தான் சுதாரித்து, போனை வாங்கி பதில் சொன்னான்.

“ஃபோன் பண்ணினோம் அய்யா.... ஆனா அவர் வர மறுதிட்டார்.”

காவ்யா போனில் சொன்னாள்.

“சந்திரன்.... சடன் டெத் என்பதால் போலீஸ் வந்திருக்கு. கேள்வி மேல் கேள்வி கேக்கறாங்க. இது இயற்கை மரணம் தானான்னு தீவீரமா விசாரிக்கிறாங்க. நீங்க உடனே வர முடியுமா.?”

அவள் குரல் உடைந்து விசும்பலுடன் வந்ததும், அவன் அடித்து பிடித்து காரை வேகமாக ஒட்டிக் கொண்டு இங்கு வந்திருந்தான். அவனைப் பார்த்ததும் காவ்யா முகம் மலர்ந்தது.

“என்ன இப்படி ஆகிப்போச்சு.? சசி எங்கே இருக்கா.?” அழுதுகொண்டு இருந்த சசியை அணைத்துக் கொண்டான். தாயை பறிகொடுக்கும் வயதா இது.? அவளைப் பார்க்கப் பார்க்க கண்ணில் நீர் தளும்பியது.

“வள்ளி அக்கா கூட்டிட்டுப் போயிருக்காங்க.... குழந்தையிடமும் விசாரித்து நோக்கடிச்சிட்டாங்க.... ரொம்ப கஷ்டமா இருக்கு சார்.” என்றாள் ரோசி. குழப்பமான இந்த நிலமையில் இன்னொரு சோகம்.

“ஏன் சசியின் தந்தை வர மறுக்கிறார்.?” என்று கேட்டான் சந்திரன்.

“சசியின் தந்தை.... எங்களுக்குள் எந்த தொடர்பும் இல்ல. நாங்க டிவோர்ஸ் பண்ணி ஒரு வருடம் ஆறது..... இது என் பிரச்சனை இல்லை. எனக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லைன்னு சொல்லிட்டார்.” என்று காவ்யா பதில் கூறினாள்.

“குடுங்க நா கூப்பிட்டு கேக்கறேன்.?”

ஃபோன் போட்டான். “ஹலோ.. “

“நீங்க தான் சசியின் தந்தையா.?”

“சார் நான் தான் எல்லாம் சொல்லிட்டேனே. எதுக்கு தொந்தரவு பண்ணிட்டு இருக்கீங்க.? எனக்கும் ராதவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லே. மீண்டும் மீண்டும் ஃபோன் பண்ணி தொல்லை பண்ணாதீங்க..”

“உங்களுக்கும் ராதா அம்மாவுக்கும் சம்பந்தம் இல்லே சரி. ஆனா சசிக்கும் உங்களுக்கும் சம்பந்தம் இருக்கு தானே.?”

“ஸாரி.... ஒண்ண புரிஞ்சுக்கோங்க. சசி ராதாவின் குழந்தை. ஷீ இஸ் நாட் மைன். நா அவ ஸ்டெப் பாதர் தான். விளக்கம் போதுமா.? நோ மோர் ஃபோன் கால்ஸ். அன்டர்ஸ்டான்ட்....” துண்டிக்கப்பட்டது ஃபோன் மட்டுமல்ல, உறவும் கூட என்று சந்திரனுக்குப் புரிந்தது.

சந்திரன் ஒரு கணம் திக்பிரமித்து நின்றான். அந்தக் பத்து வயது குழந்தை என்ன பாவம் செய்தது.?

“ராதா சிஸ்டர்க்கு வேறு உறவினர் யாராவது இருக்காங்களா.?”

“சசி சொன்ன உறவுகள் ரெண்டோர் பேருக்கு ஃபோன் செய்து பார்த்தோம். சரியான ரெஸ்பான்ஸ் இல்லே.... இப்ப முதல் பாயிண்ட். இது இயற்கை சாவு தான்னு போலீஸாருக்கு புரிய வைத்து பாடியை கிரீமேட் பண்ணணும் சார்..” என்றான் வாட்ச்மேன் கந்தசாமி.

“நீங்க யாரும் அப்செட் ஆகாதீங்க. நா பார்த்துக்கறேன்....”

காவ்யாவும் ஹேமாவும் நிம்மதி பெருமூச்சு விட்டார்கள். சந்திரன் ராதாவுக்கு முதலில் சிகிச்சை அளித்த டாக்டர் குமாரிடம் சென்று சொல்ல.... அவர் உதவ, போலீஸ் ராதாவின் மரணம் இயற்கை தான்னு புரிந்து பாடியை ஒப்படைத்தார்கள்.

எல்லாம் முடிந்தது. சசி இனி எங்கு இருக்கப் போகிறாள்.? ஏதாவது ஆஸ்ரமத்தில் தான் கொண்டு விடணும்.. என்றனர்.

“வேண்டாம். நான் பார்த்துக்கிறேன். நான் என் குழந்தையை பறிகொடுத்தேன். சசி அம்மாவை பறிகொடுத்திட்டா. அவளைத் தேடி யாராவது வந்தால்.. சசி போகத் தயாராக இருந்தால், அவ போகட்டும். அதுவரை அவ என்னுடன் இருக்கலாம்.. நீங்க எல்லாம் என்ன முடிவு சொல்றீங்களோ.... நான் கேட்டுக்கிறேன்.”

“ரொம்ப தேங்க்ஸ் வள்ளி. அமுதன் நீங்க என்ன சொல்றீங்க.?”

“சந்திரன் சார்.... வள்ளியின் மனநிலை தான் எனக்கு முக்கியம். அவ குழந்தை போனதிலிருந்து பைத்தியம் பிடிச்சா மாதிரி இருக்கா. சசி பாப்பா இனி எங்க குடும்பத்தில் ஒருத்தி... வள்ளி மனம் நொந்து போய் இருக்கு. சசி அவளுக்கு ஆறுதலா இருப்பா.... சசி கண்ணு உனக்கு சம்மதமா கண்ணு?.... “ என்று கேட்டார் அமுதன்.

துயரமான கண்கள் கண்ணீரில் மிதக்க, அம்மாவை பறிகொடுத்த அதிர்ச்சியில் பேசிச்சிழந்து நின்ற சசி. தலையை மட்டும் ஆட்டினாள் அவளுக்கு ஏது சாய்ஸ்.? அவளுக்கு ஒன்று மட்டும் புரிந்தது. இனி அவள் வாழ்க்கை மற்றவர் கையில். ராதாவின் செல்லக் குழந்தையாக இருந்த காலம் முடிந்துவிட்டது. அழகான பூச்செடியாக இருந்த அவளுக்கு சூரிய வெளிச்சமும், பூந்தூறலாய் அன்பு நீரும் தாய் கொடுத்தாள். இனி அது கிடைக்காது. வள்ளி என்ற மாற்றுத் தாய்.... வாழ வைப்பாளா.? எதுவானாலும் அவள் வாழ்ந்தாகணும். சசி உள்ளம் எதிர்கால சவால்களுக்கு தயாரானது. அவள் பத்து வருடம் மனதால் மூப்பு அடைந்தவள் போல் உணர்ந்தாள்.

சந்திரன் கிளம்பும் நேரம் வந்தது. “சரி அப்ப கிளம்பறேன். நீயும் வா ஹேமா. இங்கிருந்து என்ன செய்யப் போற.?”

“அண்ணா.... வீடு பார்க்கச் சொன்னியே...”

“வேணாம் ஹேமா. உன்னைத் தனியா விட்டிட்டு போக எனக்கு விருப்பமில்ல.... துயரமான சம்பவங்கள் எல்லாம் நடந்து போச்சு. உனக்கு ஒரு மாதிரியா இருக்கும்... நீ கிளம்பு.” என்றான்

“சந்திரன்.... தைரியமா விட்டிட்டுப் போங்க. நா ஹேமாவுக்கு வீடு பார்க்க ஹெல்ப் பண்ணறேன். நீங்க அங்கே செட்டில் பண்ண வேண்டியதை எல்லாம் செட்டில் பண்ணிட்டு வாங்க. அதுக்குள்ள வீடு ரெடியா இருக்கும்..” என்றாள் காவ்யா.

குளிர்ந்த காற்று நெஞ்சுக்குள் வீசியது போல் இருந்தது சந்திரனுக்கு. இதோடு அவளை பார்ப்பதும் பேசுவதும் நின்று போகுமே என்ற கவலை அவனை வாட்டியது. அவளே தொடர்பு இருக்கவேண்டும் என்று எண்ணுபவள் போல் இப்படி சொல்ல, அவன் மனம் சிலிர்த்தது. இருந்தாலும் ஹேமா எப்படி உணர்கிறாள்..?

“ஹேமா நீ சொல்லு. காவ்யாவின் பிளான் உனக்கு ஓ. கே யா.?”

“ஓ. கே அண்ணா. வீடு அமைவது லேசான காரியம் இல்லே. மேலும் அங்க அப்படி அப்படியே விட்டிட்டு வர முடியுமா.? உனக்கு டைம் வேணும். அப்பாவை சம்மதிக்க வைப்பது பெரும் பாடு. அவர் மனசை தயார் பண்ணி கூட்டி வரணும். இத்தனை வருஷம் வாழ்ந்த இடத்தை விட்டு வர கஷ்டமா தான் இருக்கும். என்ன செய்ய.? கோப் அப் பண்ணி தானே ஆகணும்.? நீ போ. நா அந்த நிர்மலை பார்த்து வீடு விஷயமா பேசறேன். காவ்யா உள்ளூர்காரி.... ஈஸியா ஹெல்ப் பண்ண முடியும்.”

“ரைட்.... வள்ளி சிஸ்சை பார்த்து பேசிட்டு நா கிளம்பறேன்.”

அவன் விடைபெற்றுக் கொண்டு வள்ளி வீடு நோக்கிச் சென்றான். அவன் உள்ளே நுழையும் முன் அவர்கள் பேசிக் கொண்டது கேட்டது. “ஏங்க.... சசி நம்ம கூட இருக்கறதிலே உங்களுக்கு வருத்தம் ஒண்ணுமில்லயே?. உங்களை கேக்காம முடிவு எடுத்திட்டேன்..” என்றாள் வள்ளி.

“என்ன புள்ள இப்படி சொல்லிபுட்டே.? நம்ம அமலா இறந்தபோது என்னை விட நீ தான் பித்து பிடிச்ச மாதிரி ஆயிட்டே. அத பார்த்து என் மனசே உடஞ்சு போச்சு. சசி அந்த இடத்தை இட்டு நிரப்ப வந்திருக்கும் தெய் மலர். உனக்கு சந்தோஷம்ன்னா எனக்கும் சந்தோஷம் தான்..... நீ நல்லா இருந்தா தான் நாங்க நல்லா இருக்க முடியும் வள்ளி.... பசங்க முத்து ராஜுவை பார்த்துக்கணுமே.”

சில கொஞ்சல் மொழிகள் கேட்டு அவன் சிரித்தபடி திரும்பிவிட்டான். சசியை நன்றாக பார்த்துக் கொள்வார்களா என்ற ஐயம் அவனுக்கு இருந்தது. இப்ப அது இல்லை. அவர்கள் உரையாடல் அவனுக்கு நம்பிக்கையை கொடுக்க அவன் நிம்மதியுடன் மதுரை நோக்கிச் செல்கிறான்.

வள்ளி.. அமுதன் காதல் அழகு. காதல் அவர்களுக்குச் சொந்தம். ஆனால் அவனுக்கு.? ஒரு தலை ராகம்.

நிரஞ்சன் இருக்க, உனக்கு துளி கூட சான்ஸ்சே இல்ல என்றது அறிவு.. கடைசி நிமிடத்தில் கூட எதுவும் மாறலாம் என்று ஏத்திவிட்டது மனசு. மனசுக்கு என்ன.? அது ஒரு குரங்கு, மனம் பொல்லாதது.. என்ன சொன்னாலும் கேளாதது. உண்மை தான். நோ திஸ் இஸ் ராங் ப்ரோ.... எங்கோ மனசாட்சி லேசாக ஒலிக்கிறது. அவன் கடந்து போகிறான். அது தான் காதல் மனசு.

ஒரு பழைய பாடல் ஒன்று ஞயாபகத்துக்கு வருது. காவல் மீறி நின்று, ஆவல் கொண்டு ஏங்குதே இன்று.. அது என்ன பாடல்.? ஆ.. காளை வயசு கட்டான சைசு.. அந்தப் பாடல் கேட்கவேண்டும் போல் இருக்க தட்டிவிட்டான்.. ரசித்தபடி மதுரை வந்து சேர்ந்தான்.

சித்தப்பா கோபமாக வரவேற்றார். அவனை உற்றுப் பார்த்தார்.
“என்னடா.... நீ அவசரமா போயிட்டே. நா என்னவோ ஏதோன்னு குழம்பிட்டு இருக்கேன். ஹேமா நல்லா இருக்காளா.?”

“சித்தப்பு....நோ வொர்ரீஸ். அவ கல்லுகுண்டாட்டம் நல்லா இருக்கா.”

“அப்ப.... ஏன்டா கூட்டிட்டு வரலை.?” கோபமாக கேட்டார்.

“அவ அங்க இருந்தா தான் எனக்கு லாபம்.... தொடர்பு விட்டுப் போகாதில்லே.” என்றான்.

“என்னடா உளறிட்டு இருக்கே.? என்ன லாபம்.? என்ன தொடர்பு.?”

தன் தவறை உணர்ந்த சந்திரன், சமாளிக்க ஆரம்பித்தான்.

“அது ஒண்ணுமில்லே சித்தப்பு. தங்கச்சி வீடு பார்த்து வைப்பா. அது லாபம். உதகை அருமையான மலைவாத்சல்யம். அந்த தொடர்பு விட்டுப் போகாதுன்னு சொல்ல வந்தேன்....”

“எனக்கு அந்த கிளைமேட் ஒத்துக்காதே டா.....”

“மலர்கள் நிறைந்த ஊர். இயற்கை கொஞ்சும் மலைத் தொடர். காதல் பூக்கும் குளு குளு தேசம்.... உதகையை காதலிக்க வாங்க சித்தப்பு.”

“ம்ம்.. ஒரு மார்க்கமா தான் இருக்கே. டேய்.. உனக்கு ஒரு லெட்டர் வந்திருக்கு டா...”. பிரித்துப் பார்த்தான். அவன் சிரிப்பு மறைந்தது. சட்டென்று ஏன் எல்லாம் இப்படி மாறுது.?

சொந்தம் தொடரும்.
 
Last edited by a moderator:

Author: நிதனிபிரபு
Article Title: காதல் எங்கள் சொந்தம் - 6
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
  • Like
Reactions: thanga then mozhi

Gowri Karthikeyan

Well-known member
May 5, 2026
1,290
384
83
Chennai
வள்ளி கிட்ட சசி போகும்னு நினைச்சேன்...அதே போலவே நடத்துட்டு.....
சசியும் வள்ளி கூட நல்லா போன நல்லா இருக்கும்.....
எப்படினாலும் வள்ளி விட்டுட மாட்டாங்க.....
அச்சோ இப்ப என்னாச்சி