குழல் - 10
“இந்த வாரம் முழுக்க உன் கூடவேதான் இருக்கப் போறேன். அலைச்சல் இருந்தாலும் பரவால்ல. உன் கூடவே சேர்ந்து ஆபீஸ்க்கு கிளம்பிக்கிறேன்…”
ஜம்பமாய் கூறியதோடு அன்று இரவு திலோவுடன் சேர்ந்து அவள் வீட்டிற்கே வந்து தங்கிக் கொண்டாள் ரஞ்சனி.
இருவரும் வெவ்வேறு அலுவலகத்தில் வேலை செய்பவர்கள் என்றாலும் project enhancing program என்ற நிகழ்விற்காக ஒரே இடத்திற்கு செல்ல வேண்டி இருந்ததால் ஒன்றாகவே இணைந்து நிகழ்வில் கலந்து கொண்டு ஒன்றாகவே திரும்பி வரும் வழியில்தான் இளங்கோவை சந்தித்திருந்தனர்.
இளங்கோவும் அவர்களிடம் முறுக்கிக் கொண்டு சென்றபின் ஒரு வாரமே ஆனாலும் அங்கு தங்கி திலோவின் அடுத்த கட்ட நகர்வு எந்த அளவு சாத்தியம் என்பதை கண்காணித்தே ஆக வேண்டும் என்ற முடிவுடன் அவளுடனே தங்க முடிவெடுத்துக் கொண்டாள் ரஞ்சனி.
சின்ன பிள்ளை வெள்ளாமை வீடு வந்து சேராது என்பதுபோல் அவளது வாழ்க்கை ஆகிவிடக்கூடாதே. ஒரு நல்ல தோழியாக அப்படித்தான் யோசித்தாள் ரஞ்சனி.
இரவு உணவை முடித்து தோழியையும் அழைத்துக் கொண்டு பால்கனிக்கு வந்து அமர்ந்தாள் திலோத்தமா. முன்புபோல் மின் விளக்கை அணைத்து இருக்கைக்கு பின்னே ஒளிந்து அமர்ந்து எதிரில் நோட்டமிடும் அவசியமில்லை. குட்டுதான் உடைபட்டுப் போனதே… உரியவனுக்கும் உடைத்தாயிற்றே… இன்னும் என்ன பயம்..? தைரியமாக மின்விளக்கு ஒளிர தோழியோடு இணைந்து பால்கனி கம்பிக்கு அருகில் இருக்கையை இழுத்து போட்டு அமர்ந்து கொண்டாள்.
“வருவாங்கன்னு நினைக்கிறியா..?”
வறுத்த நிலக்கடலையை கொறித்தபடியே கேட்டாள் ரஞ்சனி.
“அதெல்லாம் ரெண்டும் வரும்… அடிச்சாலும் புடிச்சாலும் இதுக்கு அதுதான்… அதுக்கு இதுதான்… வேணா பாரேன்…”
திலோ சொல்லி முழுதாக ஒரு நிமிடம் முடியவில்லை… தோழர்கள் இருவரும் வழக்கம் போன்று மேலே வந்து அதே இடத்தில் அமர்ந்து கொண்டனர்.
பார்த்தாயா என்பதுபோல் ரஞ்சனியை திரும்பிப் பார்த்தாள் திலோத்தமா.
“ரெண்டும் மானங்கெட்ட மங்கூஸ் போல…”
“அதுதான்டி நட்பு… அப்படி யோசி…”
சொன்னவள் தன்னவனையே விழிகளை அகற்றி வைத்து பார்க்கத் தொடங்கினாள்.
எதிரில் ஜம்பமாய் அமர்ந்திருக்கும் இருவரையும் கண்டு கொண்டான் இளங்கோ. வேண்டுமென்றே தன் இருக்கையை அமரனின் இருக்கையோடு ஒட்டிப் போட்டு அவன் தோளிலும் அழுத்தமாக கை போட்டுக் கொண்டான்.
“நண்பேன்டா…”
இங்கிருந்து கவுண்ட்டர் கொடுத்தாள் திலோத்தமா.
அவன் விழிகள் ரஞ்சனியைத்தான் முறைத்தபடி இருந்தன.
‘ஓஹோ… நீதான் சீன் போடுவியா… இப்ப பாரு…’
தலையையும் கண்களையும் ஆட்டி அபிநயம் பிடித்தவள் தானும் தனது நாற்காலியை திலோத்தமாவின் நாற்காலியோடு ஒட்டி உரசிக் கொண்டு போட்டு அவள் தோளில் அவனைப் போன்றே கைபோட்டு எப்ப்பூடி என்று தலையை ஆட்டினாள்.
இளங்கோவின் விழிகளில் முறைப்பு இன்னும் அதிகரித்தது. அதற்கு குறையாததுபோல் தானும் தன் கண்களை சுருக்கி குறுகுறுவென அவனை முறைத்தாள் ரஞ்சனி.
நண்பர்கள் இருவரும் மாலையே ஒருவருக்கொருவர் மன்னிப்பு கேட்டு கட்டி அணைத்து நட்பின் பலத்தை இன்னும் அதிகப்படுத்தி இருந்தனர்.
“என்ன இருந்தாலும் அப்படி ஒரு வார்த்தையை உன்னை பார்த்து கேட்டிருக்கக் கூடாதுடா… உனக்கு எப்படியோ..? எனக்கு இன்னும் ரொம்ப வலிக்குது…”
இளங்கோவின் கையை அழுத்திப் பிடித்துக் கொண்டு கூறினான் அமரன்.
“என்னதான் நீ ஆத்திரத்துல அப்படி கேட்டிருந்தாலும் உன்னை நான் அடிச்சிருக்க கூடாதுடா… என் மனசும் ரொம்ப குறுகுறுன்னு வலிக்குது…”
கோர்த்திருந்த விரல்களுக்கு இன்னும் அழுத்தம் கொடுத்துக் கொண்டான் இளங்கோ.
இதோ வழக்கம்போல் மாடிக்கு வந்து இயற்கை காற்றை வாங்கியபடி பால்கனியில் அமர்ந்தாயிற்று.
“இன்னைக்கு என்ன..? தொடுப்பும் வாலாட்டிக்கிட்டே கூடவே வந்தாச்சு போல…”
மெல்லிய குரலில்தான் தனக்குத்தானே கூறிக் கொண்டான் இளங்கோ. நண்பனின் தலையோடு தலை உரச அமர்ந்ததாலோ என்னவோ அமரனுக்கு அவன் பேசியது தெளிவாகவே கேட்டது.
“யாரைடா சொல்ற..?”
“உன் ஆளுகூட இன்னொரு தொடுப்பும் வந்து உட்கார்ந்திருக்கு… அதை சொன்னேன்…”
மாலை இருவரும் சமாதானம் அடைந்தபின் திலோத்தமாவை பற்றி நிறைய அமரனிடம் பேசி இருந்தான் இளங்கோ. அன்றாடம் காலையும் இரவும் தவம் செய்வதுபோல் தன் வீட்டு பால்கனியில் அமர்ந்து அவனையே விழிகளால் விழுங்கிக் கொண்டிருக்கும் விபரம்வரை அனைத்தையும் கூறியிருந்தான்.
“அந்த பொண்ணு என்ன லூசாடா..? அவதான் பைத்தியம் மாதிரி ஏதோ பண்றான்னா நீ புத்திமதி சொல்ல மாட்டியா.? திரும்பவும் அவளுக்குதான் கொடி புடிச்சிட்டு வந்து நிக்கிற. அவ உள்ள நுழைஞ்ச உடனே உனக்கும் எனக்கும் எவ்வளவு பெரிய பிரச்சனை வந்துச்சு பாத்தியா..? இதெல்லாம் சாத்தியமே படாதுடா… புரியவை அந்த மெண்டலுக்கு…”
“ஏன்டா எடுத்த எடுப்புல அப்படி நினைக்கிற..? உன்மேல இப்படி ஒரு ஆசையோட ஒரு பொண்ணு வந்து நிக்கிறா. கன்சிடர் பண்ணலாமே… முதல்ல அவகூட பேசு பழகு… உன்னை மீறி எதுவும் நடக்கப் போறது இல்லையே. உன்னை நெருங்கி வர்றதுக்கு அவளுக்கும் ஒரு வழியை ஏற்படுத்திக் கொடுத்தாதானே அவளைப்பத்தி நீயும் புரிஞ்சுக்க முடியும். ஆத்திரமும் அவசரமும் முன்கோபமும் வேண்டாம் அமர்…”
தன்மையாகவே அவனிடம் கூறினான் இளங்கோ.
ஒரு பக்கமாய் இதழ் வளைத்துக் கொண்டவன் “சரி… வரட்டும்… பேசட்டும்… ஆனா என்கிட்ட அவளால தாக்குப் பிடிக்கவே முடியாது... தன்னைப்போல ஓடுவா பாரு…” ஒரு கையால் மீசையை முறுக்கிச் சொன்னவனை எரிச்சலாக பார்த்தான் இளங்கோ.
“ஏன்டா இப்படி வில்லன் ரேஞ்சுக்கு பேசுற..? இவ மூலம் உனக்கு ஒரு அழகான எதிர்காலம் காத்திருந்தா..?
“அதை நீ நம்பறியா..?”
“ஆமாடா… இந்த பொண்ண பார்த்தா அந்த நம்பிக்கை எனக்கு வருது…”
உதடு குவித்து மூச்சுவிட்டு அவ்விடத்தில் இருந்து எழுந்து சென்றிருந்தான் அமரன். அதன்பின் இருவரும் திலோத்தமாவை பற்றி பேசிக் கொள்ளவில்லை. அவனுக்கான நேரத்தை அவன் எடுத்துக் கொள்ளட்டும் என்பதுபோல் அமைதியாகிவிட்டான் இளங்கோவும்.
ஆனால் எடுத்த எடுப்பில் டபடபவென பட்டாஸாய் பொரிந்து தள்ளிய ரஞ்சனியை பார்க்கும்போதுதான் கோபம் ஜிவ்வென கிளர்ந்தது. அதிலும் இப்போது அவன் என்ன செய்கிறானோ அதனையே செய்து அவனை வெறுப்பேற்றிக் கொண்டே இருந்தாளே.
தன் காலை தூக்கி எதிரே இருந்த டீபாயில் வைத்துக் கொண்டான் இளங்கோ. ரஞ்சனியோ எதிரில் டீப்பாய் இல்லாததால் பால்கனி கம்பி மீதே காலை தூக்கி வைத்திருந்தாள். கால்கள் இரண்டும் அவள் தலைக்கு மேலே தூக்கியபடி இருந்தன.
“எவ்வளவு திமிர்… காலை தூக்கி தலை மேல வச்சிருக்கா... ரப்பு புடிச்சவ…”
இதழ்களுக்குள் முணுமுணுத்தான் இளங்கோ. எதிரில் மங்கலான வெளிச்சம் மட்டுமே அமரனுக்கு தெரிந்தது. அங்குதான் திலோத்தமா அமர்ந்திருக்கிறாள் என்பதை இளங்கோ மூலமும் தெரிந்து கொண்டான். அவள் அவனையே பார்த்துக் கொண்டிருப்பதையும் இளங்கோ கூற முதன்முறையாக அவனுக்குள் ஒருவித குறுகுறுப்பு.
நம்மை யாரோ ஒருவர் குறுகுறுவென பார்த்துக் கொண்டிருந்தால் நம்மையும் அறியாமல் ஒருவித அசௌகரியம் தோன்றும் அல்லவா. அப்படி ஒரு நிலையில்தான் அவன் இருந்தான்.
“அவ என்னையேதான் பாத்துட்டு உட்கார்ந்து இருக்காளாடா..?” எரிச்சலாகத்தான் கேட்டான் அமரன்.
இளங்கோ வந்த நேரமாக ரஞ்சனியைத்தானே முறைத்துக் கொண்டிருந்தான்.
“ஆமாடா… இங்கேயேதான் பாக்குறா.. அதுலயும் எத்தனை திமிரு பண்றா தெரியுமா..?”
பல்லை கடித்து உறும “பாத்தியா… ஒரே நாள்ல உனக்கே தெரியுதா…” என்று அவன் ஆரம்பிக்க அப்பொழுதுதான் அவன் என்ன கேட்டான் என்பதை உணர்ந்து கொண்டவன் “டேய் நான் அவளை சொல்லல… அந்த புள்ள சமத்தா உட்கார்ந்து உன்ன மட்டும் பார்க்கிற வேலையை மட்டும் கரெக்டா பார்த்துட்டு இருக்கு… நான் சொன்னது கூட வந்த தொடுப்பு… என்னை சீண்டி விட்டு வேலை பார்க்கிறா அவ…”
சொன்னவன் எரிச்சலோடு தலைகோத ரஞ்சனியும் அவனைப் போன்று தலை கோதினாள்.
“அடிங்க…” நாக்கை துருத்தி அடிப்பது போல் ஐந்து விரல்களையும் ஒன்றாக்கி காட்டினான்.
அவளோ ரவுடித்தனமாக நாக்கை மடக்கி மூக்கை பேத்துடுவேன் என்பதுபோல் சைகையால் முஷ்டியை மடக்கிக் காட்டினாள்.
“ரவுடி ரவுடி… சிக்காமலா போவ… வச்சுக்குறேன்டி உன்ன…” சத்தமாகவே கூறியிருந்தான் இளங்கோ.
“வச்சுக்கப் போறியா..?” என்ற அமரன் சத்தமிட்டு சிரிக்க “நீ வேற ஏன்டா எரிச்சலை கிளப்பிக்கிட்டு…” என்றவன் சுட்டுவிரலை ஆட்டி கொன்னுடுவேன் என்று எதிரில் கை காட்டினான்.
நான் உன் கழுத்தை திருகிவிடுவேன் என்று இரு கைகளையும் பிழிவதுபோல் காட்டி பல்லை கடித்தாள் ரஞ்சனி.
இந்த காற்று மொழி சண்டை சைகையை எல்லாம் கவனிக்கும் நிலையில் திலோ இல்லை. அவள் விழிகள் அவளவனை ஆழ்ந்து ரசித்து இதயத்துக்குள் நிரப்பிக் கொண்டிருந்தன. அமரனும் தன்னை ஒருத்தி விடாமல் பார்த்துக் கொண்டே அமர்ந்திருக்கிறாள் என்ற செய்தியில் தர்மசங்கடமான ஒரு சூழலில்தான் அமர்ந்திருந்தான்.
“இளங்கோ… போலாம்டா… ஒரு மாதிரி இருக்கு..” லேசாக நெளிந்தபடி கூறினான் அமரன்.
“நாம ஏன் போகணும்..? நாம எந்திரிச்சு போனா அவளுக்கு பயந்துட்டு போனதா நினைப்பா… நாம உட்காருவோம்… பார்க்கலாம்… எவ்வளவு நேரம் அந்த காலை தூக்கி தலை மேல வச்சிட்டு அவளும் உக்காந்து இருக்கான்னு நானும் பாக்கறேன்…”
“நீ யாரைடா சொல்ற..?”
“கண்டிப்பா உன் ஆளை இல்ல… அது சமத்துப் புள்ள… நான்தான் சொன்னேனே… கூட ஒக்காந்து இருக்குது ஒரு தொடுப்புன்னு… அது பண்ணுது அத்தனை அட்டகாசமும்… தின்னி பிசாசு… வாயில என்னத்தையோ போட்டு அரைச்சுக்கிட்டு வேற இருக்கு…”என்றான் கடுப்பாய்.
“அப்போ நீ அவளையேதான் நோட் பண்ணிக்கிட்டு இருக்க…” என்ற அமரன் ஒரு மார்க்கமாக சிரிக்க திரும்பி அவனை முறைத்தவன் அதே முறைப்புடன் எதிரில் இருப்பவளையும் பார்த்தான்.
“நான் என்ன செஞ்சாலும் அதையே திருப்பி செஞ்சு காண்டு ஏத்துறாடா…”
“அப்போ அவ என்ன பண்றாளோ அதை திருப்பி பண்ணி நீ அவளை கண்டேத்து…” தன் பங்குக்கு ஏற்றிவிட்டான் அமரன்.
“அதுதான் சரி…”
சொன்னவன் அவளையே அழுத்தமாய் ஆராய்ந்து கொண்டிருக்க பால்கனியின் கம்பியின் மேல் உயரமாய் வைத்திருந்த கால் வலி எடுத்ததால் அவற்றை விலக்கி தோரணைக்கால் போட்டு அமர்ந்து கொண்டாள் ரஞ்சனி.
அதனையே தானும் திருப்பிச் செய்தான் இளங்கோ. உறக்கம் வந்ததால் வாயின் முன் சொடுக்கு போட்டபடி நாசூக்காக கொட்டாவி விட்டாள் ரஞ்சனி. அதனையும் அப்படியே திருப்பிச் செய்தான் இளங்கோ.
“ஓஓஓ… கதை அப்படி போகுதா..? என்னை வெறுப்பேத்திறியா..? மவனே…”
கீழ் இதழை கடித்து தலையை ஆட்டிக் கொண்டவள் பட்டென எழுந்து திலோத்தமாவின் மடியில் அமர்ந்து அவளை கழுத்தோடு கட்டிக் கொண்டாள்.
“ஏய் என்னடி பண்ற..?”
அவளது எடை தாங்காமல் திலோ திணற “கொஞ்ச நேரம் அமைதியா இருடி… அந்த அமரனின் பரமன் என்ன செய்யிறான்னு நானும் பார்க்கிறேன்…” என்றவள் அவனைப் பார்த்து இடுப்பை ஆட்ட எதிரில் இருந்தவனுக்கோ முறைப்பை கடந்து இதழ்களில் அவனையும் மீறிய புன்னகை முளைத்தது.
‘செய்… செஞ்சுதான் பாரு…’
உடல்மொழியால் அவனிடம் நர்த்தனமும் ஆடிக் காட்ட உதட்டுக்குள் மறைத்திருந்த புன்னகை அவனையும் மீறி வெளிப்பட்டுவிட முகத்தை துடைப்பது போல் பக்கவாட்டாக முகத்தை திருப்பிக் கொண்டான். அவளது செயலில் சிரிப்பு பீறிட்டு வந்தது.
இத்தனை நேரம் அவளை முறைத்துக் கொண்டிருந்தவனின் கண்கள் இந்த நொடி மலர்ச்சியோடு அவளிடம் திரும்பின.
“அறுந்த வாலு…அராத்து…திலோவுக்கு பொருத்தமான தொடுப்புதான்…”
கண்களும் இதழ்களும் சிரிக்க தனக்குள் முணுமுணுத்துக் கொண்டான் இளங்கோ.
எதிரில் அவள் இடுப்பை ஆட்டியபடி திலோவின் மடியிலேயே அமர்ந்திருக்க வலி பொறுக்க முடியாதவள் “அடச்சீ… தள்ளுடி…” என்று முதுகோடு பிடித்துத் தள்ள தடுமாறி கீழே விழுந்திருந்தாள் ரஞ்சனி.
ஹாஹாஹா…
கைகளை தட்டிக் கொண்டு வெடித்து சிரித்துக் கொண்டிருந்தான் இளங்கோ.
இந்த அவமானத்தை எதிர்பார்க்காதவள் வேகமாய் எழுந்து திலோவின் தலையில் நங் நங்கென இரண்டு கொட்டுக்கள் வைத்து வெடுக் வெடுக்கென வீட்டிற்குள் நுழைந்து கொண்டாள். இளங்கோவின் அதிர்ந்த சிரிப்புச் சத்தம் இன்னும்கூட அவளது காதுகளில் கேட்டுக் கொண்டிருந்தது.
“டேய் எரும… எதுக்கு இப்படி வீடே இடிஞ்சு விழற மாதிரி சிரிக்கிற..?” என்றபடி எழுந்தான் அமரன்.
“அ..அவ அவ போய்ட்டாளா..?”
தலையை கோதியபடியே ஒரு மெல்லிய தடுமாற்றத்துடன் சன்னமான குரலில் கேட்டான் அமரன்.
“உன் ஆளைத்தானே கேட்கிற..? நீ போய் கதவை சாத்துற சத்தம் கேட்டதுக்கு அப்புறம்தான் அம்மணி எந்திரிச்சு உள்ள போவா. நீ விடிய விடிய உட்கார்ந்து இருந்தாலும் அவளும் உட்கார்ந்திருப்பா…”
நண்பனின் வார்த்தைகளில் அவனது விழிகள் மெல்ல எதிரில் தென்பட்ட வெளிச்சத்தில் படிந்தன. எதுவுமே தெரியவில்லை… வழக்கம் போன்றே மங்கலான ஒளி… அதில் மங்கலாக ஒரு உருவம்… அந்த உருவத்தை பார்த்துவிட உள்ளுக்குள் ஓர் துடிப்பு… இதற்குமுன் எழவே எழாத ஒரு துடிப்பு.
தனக்குள் தோன்றிய இந்த எண்ணத்தில் ஆச்சரியம் கொண்டவன் தலையை உலுக்கிக் கொண்டு இளங்கோவின் கையையும் பிடித்து இழுத்துக் கொண்டு வேகமாக கீழே இறங்கி இருந்தான்.
வறண்ட பாலைவனத்தில் திக்கு தெரியாமல் நடந்து கொண்டிருந்தவனின் கைப்பிடித்து வழித்துணையாய் சோலைவனத்திற்குள் அழைத்துச் செல்ல தேவதையாய் ஒருத்தி.
நண்பனுக்கு துணையாய் கைப்பிடித்து நடப்பவனின் வாழ்க்கைக்கும் அர்த்தம் கொடுக்க அடையாளம் கொடுக்க அவன் வாழ்விற்குள்ளும் வசந்தத்தை காட்ட வந்துவிட்டாளே இன்னொருத்தி.
இனி நண்பர்களின் பாடு..???
(தொடரும்)