குழல் - 14
விடிவதும் இரவு விழுவதுமாக நாட்கள் ஜெட் வேகத்தில் நகர்ந்து கொண்டுதான் இருந்தன. அமரனின் வீட்டில் சுதந்திரமாக உலவ ஆரம்பித்திருந்தாள் திலோத்தமா. இளா அண்ணா என்று அழைத்தே இளங்கோவின் செல்லத் தங்கையாகவே மாறி இருந்தாள். வழக்கம்போன்றே கடப்பாறையை விழுங்கியவன் போன்று கடின முகத்துடன்தான் சுற்றிக் கொண்டிருந்தான் அமரன். அவளோடு அதிகம் பேசுவதில்லை… அவள் பேசும் ஆசையோடு நெருங்கி வந்தாலும் பேச்சை கத்தரிப்பதிலேயே குறியாக இருப்பான்.
ஆனால் அவளது வாசம்..?? அவன் கட்டுப்பாட்டையும் மீறி மூக்கும் மூளையும் அவள் வசமாகிப்போன அவலத்தை அவன்தான் யாரிடம் சொல்வான்..?
கண்கள் ஏக்கம் கொண்டு கிடப்பது வேறு விஷயம்… ஆனால் வாய் அவன் கட்டுப்பாட்டில்… ஆதலால் அவளோடு பேசுவதை தவிர்க்க முடிகிறது.
“இளங்கோ… ரெண்டு பேரும் ரொம்ப ஓவரா போறீங்க… அவ என்ன எந்நேரமும் இங்கேயே சுத்திட்டு இருக்கா… பார்க்கிறவங்க என்ன நினைப்பாங்க..?”
தனது இயலாமையை தன் நண்பனிடம் திருப்பி கத்துவான்.
“பாக்குறவங்களுக்காக வாழ முடியாதுடா மச்சான்… நீதான் அவகூட பேசுறதே இல்லையே… உன்னை ஏதாவது அவ டிஸ்டர்ப் பண்றாளா..? வருவா… என்கூட பேசுவா… விருப்பப்பட்டு செய்யறதை கொடுக்கிறா… எல்லாத்துலயும் அவளோட அன்புதான் இருக்கு. எல்லாமே உனக்காகத்தான் பண்றா. ஆனாலும் நீ ஒதுங்கி நிக்கும்போது உன்னையும் தொந்தரவு பண்றது இல்ல. என்னை கண்ட்ரோல் பண்ணாத என்ன..?”
விறைப்பாக பதில் கூறி நகர்ந்து விடுவான் இளங்கோ.
“அவ உன்னை வச்சு என்கிட்ட காய் நகரத்தப் பாக்குறா…”
“இல்லைன்னு நான் ஏன்டா பொய் சொல்லணும்..? அவ தெளிவா சொல்லிட்டுதானே உள்ளே நுழைஞ்சிருக்கா… ஆனா என்மேல அவளும் அவமேல நானும் வச்சிருக்கிற அன்பு நிஜமானது… ஒரு அண்ணன் தங்கைக்கு இடையில இருக்கிற பாசம்… அதை கொச்சைப்படுத்திடாதே…”
கோபத்தோடு எரிந்து விழுவான் இளங்கோ.
“நான் தப்பான அர்த்தத்துல சொல்லலடா. அவகூட சேர்ந்து நீயும் ஜால்ரா போட்டு என்னை அவளோட கோர்த்துவிடப் பார்க்கிறே இல்லையா… அதைத்தான் சொல்றேன்…”
“உன்னை கோர்த்துவிட பாக்கலடா… உன் வாழ்க்கையை சீரமைக்கணும்னு நினைக்கிறேன்… உனக்கு திலோ எல்லாமுமா இருப்பாடா…”
நம்பிக்கையோடு கூறுவான் இளங்கோ.
நண்பர்களுக்கு இடையே தினமும் ஏதேனும் வாக்குவாதம் திலோவை முன்னிறுத்தி சென்று கொண்டேதான் இருக்கிறது. அவனும் முடிந்தளவு அவனை கரைக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறான். நான் கரைய மாட்டேன் என்று திடமாக நிற்கிறான் அமரன்.
இடையிடையே ரஞ்சனியைப் பற்றிய நினைவுகள் எழுந்து இளங்கோவை அலைக்கழித்துக் கொண்டிருக்கின்றன. அன்று கிளம்பிச் சென்றவள்தான். அதன்பின் வரவில்லை.
அவள் வருவாளா என்று ஏக்கமாக தனக்குள் பாடிக் கொண்டு திலோ வீட்டின் பால்கனியை ஏக்கமாக பார்ப்பான் இளங்கோ. இவன் மனம் அவளை நோக்கி சாய்வதை உணர்ந்து கொண்டான். இதனை திலோவிடம் கூட தெரிவிக்கவும் பயம் தயக்கம். தன்னைப் பற்றி தவறாக எண்ணிக் கொள்வாளோ என்ற இயல்பான அச்சம்.
தன்னைப்பற்றி தன் வாழ்க்கையைப் பற்றி இளங்கோவிடம் நிறைய பகிர்ந்து இருக்கிறாள் கிலோ. அவள் பேசும் போதெல்லாம் அமரனும் அங்கு தான் இருப்பான். அவர்களுக்கு சற்றுத் தள்ளி அமர்ந்து எதையும் கவனிக்காததுபோல் திரும்பிக் கொண்டு அவள் பேசும் அனைத்தையும் தெளிவாக உள்வாங்கிக் கொண்டுதான் இருப்பான்.
தாய் தகப்பன் அற்று மாமா வீட்டில் ஒண்டிக் கொண்டு வாழ்ந்த வாழ்வில் தொடங்கி ஒவ்வொன்றையும் தெளிவாகவே விளக்கியிருந்தாள் திலோத்தமா. ரஞ்சனியை பற்றியும் கூறியிருந்தாள். அவளும்கூட ஒன்றுவிட்ட சித்தப்பா ஒருவரின் வீட்டில் ஓரம் கட்டப்பட்ட ஒருத்தியாக வாழ்ந்து படிப்பினை கையில் எடுத்து அதிலும் ஜெயித்து தனக்கான அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டவள்தான் என்று கூறி இருந்தாள். ரஞ்சனியின் கதையை கேட்டபின் இளங்கோவிற்கு அவள்மீது இன்னும் ஈடுபாடு அதிகரித்தது.
ஆக மொத்தத்தில் சதுரம் போல் நான்கு முனைகளிலும் நிற்கும் இந்த நால்வருமே அடையாளத்தை தொலைத்து வாழ்ந்து விடாமல் போராடி தங்களுக்கான அங்கீகாரத்தை ஏற்படுத்திக் கொண்டவர்கள். தோழர்கள் இருவரும் எப்படியோ அப்படித்தானே தோழிகள் இருவரும். என்ன ஒன்று… இவர்கள் அனாதை ஆசிராமத்தில் வாழ்ந்தவர்கள் அவர்கள் உறவினர்கள் வீட்டிலும் ஓர் அனாதையாக ஓரம் கட்டப்பட்டவர்கள்… அதுதான் வித்தியாசம்.
விதியின் விளையாட்டை நினைத்து சிரிக்கத்தான் முடிந்தது இளங்கோவால்.
நாங்கள் நால்வரும் ஒரு கூட்டணியானால்..?
ஒருவருக்கொருவர் உறவாகிப் போனால்..?
இழந்த மகிழ்ச்சிகள் அனைத்தையும் மீட்டு எடுக்க முடியுமே… நினைக்கும்போதே நெஞ்சம் தித்தித்தது. நான்குமுனைப் புள்ளிகளும் இணையும்போது ஓர் அழகிய வடிவம் உருவாகுமே.
ரஞ்சனி தவறி விழுந்த அன்று இரவே அவளது கைப்பேசி எண்ணை திலோத்தம்மாவிடம் வாங்கி இருந்தான் இளங்கோ. அதன்பின் இருவரும் பேசி ஒரு சமரசமான சூழலுக்கு வந்தும்கூட இதுவரை அவளுக்கு அழைக்கவில்லை. சில சமயங்களில் அழைத்துப் பேசலாம் என்று தோன்றும். ஆனால் ஏதோ ஒரு தயக்கம் வந்து தடை போட்டுவிடும்.
முதலில் தன் நண்பனை எப்படியேனும் சரிசெய்து திலோத்தமாவின் காதலை புரியவைத்து அவளை அவனோடு இணைத்து வைத்தபின் தன் எண்ணத்தைப் பற்றி திலோ மற்றும் ரஞ்சனியிடம் பேசினால் போகிறது என்று நினைத்துக் கொண்டிருக்கிறான். எங்கே போய்விடப் போகிறாள் என்னை தாண்டி என்ற பெரிய நம்பிக்கை ஏதோ ஒரு வகையில் அவன் மனதில் முளைத்துக் கொண்டது.
அன்று விடுமுறை நாள். சூடாக அடைதோசையும் அவியலும் செய்து ஆவி பறக்க ஹாட் பாக்சில் போட்டுக் கொண்டு வேகமாக அமரனின் வீட்டிற்கு ஓடி இருந்தாள் திலோ. அவள் அங்கு சென்றபோது இளங்கோ அங்கு இல்லை. அவனது இரு சக்கர வாகனமும் இல்லை. வீடு பூட்டி இருந்தது.
இளங்கோவின் கைப்பேசிக்கு அழைத்தாள்.
“ஒரு முக்கியமான வேலையா வெளியே வந்துட்டேன்டா… நான் வீட்டுக்கு வர்றதுக்கு மதியம் ஆயிடும்... அமரன் அங்கேதான் இருக்கான்…”
“வீடு பூட்டி இருக்கே…”
“சும்மாதான் சாத்தி வச்சிருப்பான்…”
“உங்க ரெண்டு பேருக்கும் பிரேக்ஃபாஸ்ட் எடுத்துட்டு வந்தேண்ணா…”
“அவனுக்கு கொடு. நான் மதியம் வந்து சாப்பிட்டுக்கிறேன்…”
சொன்னவன் இணைப்பைத் துடித்திருந்தான்.
இத்தனை நாட்களில் ஒரு சிறு சினேகத்தை கூட அவளிடம் அமரன் காட்டியதில்லை. முதல்நாள் காட்டிய அதே ஒதுக்கத்தை இன்றுவரை கடைப்பிடிக்கிறான். அவள் மனதை இளங்கோவின் மூலம் நிறைய வழிகளில் தெரிவித்தாயிற்று. நேரில் அவளே சென்று பேச சரியான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் கொண்டுதான் இருக்கிறாள்.
வெறுமனே சாத்தி இருந்த முன்பக்க கதவை திறந்து கொண்டு வீட்டிற்குள் நுழைந்து டைனிங் டேபிளில் ஹாட் பாக்ஸை வைத்து கண்களால் அமரனை தேடினாள் திலோ.
சற்று உள்வாங்கி இருந்த அறைக்குள் இருந்து மெலிதான குழலோசை கேட்டது. அவள் இதழ்களில் மெல்லிய புன்னகை. தனிமையில் இசையை துணையாக்கிக் கொண்டு அமர்ந்திருக்கிறான் என்பது புரிந்தது.
இசை வந்த திசை நோக்கி நடந்தாள். கூடத்தை கடந்து ஒரு சிறு காரிடார் போன்ற பகுதி. அதில் நேரே சென்று திரும்பினால் வரிசையாக மூன்று அறைகள். அதில் கடைசி அறையில் இருந்து மெலிதான சத்தம் கேட்டது.
அவர்கள் வீட்டிற்குள்ளேயே ஒரு ரெக்கார்டிங் அறல தயார் செய்து வைத்திருப்பதாக இதற்கு முன்பு இளங்கோ அவளிடம் கூறியிருக்கிறான். அங்கு அமர்ந்துதான் தன் கண்ணன் குழலிசைத்துக் கொண்டிருக்கிறான் என்பது அவளுக்கு புரிந்தது. இறுக்கமான கருப்புக் கண்ணாடி கதவுகளுடன் காட்சியளித்தது அந்த அறை. உள்ளே ரெக்கார்டிங் செட்டப் பொருத்தப்பட்ட ஏசி அறை என்பதால்தான் அத்தனை மெல்லியதான இசை கேட்கிறது என்பது புரிந்தது.
உள்ளே செல்லலாமா வேண்டாமா என்று யோசித்தாள். ஒருவேளை தனது இசையை ரெக்கார்டிங் செய்து கொண்டிருக்கிறானோ என்றும் தோன்றாமல் இல்லை. ஆனால் இளங்கோ இல்லாமல் தனியே அவன் ரெக்கார்டிங் செய்வதில்லை என்பதும் அவளுக்குத் தெரியும்.
சில நொடிகள் நகம் கடித்து யோசித்தவள் கண்ணாடி கதவில் மெல்ல கை வைத்து திறந்தாள். கதவு திறந்து கொண்டது. குளுமையோடு அவளை உள்ளே இழுத்துக் கொண்டது அந்த அறை. கதவு தானாகவே பூட்டிக் கொள்ள அங்கேயே நின்றவள் அறையின் மத்தியில் ஒரு சுழல் நாற்காலியில் அமர்ந்து கண்கள் மூடி தன்னிலை மறந்து குழல் இசைக்கும் தன்னவனை பார்த்து விழிகள் விரிந்து கொண்டன.
தன்னை மறந்து புல்லாங்குழல் இசைத்துக் கொண்டிருந்தவன் பட்டென இசையை நிறுத்தி மூடி இருந்த விழிகளை திறந்தான். அவனது இயல்பான மங்கலான பூனை விழிகள். புருவத்தோடு விழிகளை ஒரு நொடி சுருக்கி விரித்தான்.
“யாரது..?”
அவள் நின்ற திசையை அழுத்தமாய் பார்த்து கேட்டான்.
அவனது கடினமான அந்த குரலில் திக்கென்ற ஒரு பயம் அவள் இதயத்தில் எழுந்தது.
வந்திருப்பது இளங்கோ அல்ல என்பது அவனுக்கு தெரியும். அத்தோடு அடுத்த சில நொடிகளில் திலோவின் தனித்துவமான வாசம் அவன் நாசியில் ஏறியிருக்க அவள் பதில் கூறும் முன் “ஏய் நீயா..?” என்றான் வேகமாக.
ஏற்கனவே மிரண்டு நின்றவள் அவனது அடுத்த பாய்ச்சலில் மொத்தமாய் அதிர்ந்து போனாள்.
வெடுக்கென தனது இருக்கையில் இருந்து எழுந்தவன் அவளை நோக்கி வேகமாக வந்தான்.
“யாரைக் கேட்டு இங்கே வந்த..?”
சிவப்பான அவனது முகம் கோபத்தில் இன்னும் கூடுதலான சிவப்பை தேக்கியிருக்க ஒரு நொடி நடுநடுங்கிப் போனாள் திலோத்தமா.
“அ..அமர்… அ..அது… நா..நான்…”
திணறலோடு அவள் பதிலளிக்க “முதல்ல வெளியே போ…” கழுத்து நரம்பு புடைக்க ஓங்கி குரல் கொடுத்திருந்தான்.
மங்கலான அவளது உருவம் அசையாமல் நிற்க தோராயமாக அவள் மேல் கை வைத்து “போ வெளியே..?” என்றபடி கோபத்தோடு பிடித்து தள்ளி இருந்தான்.
இதனை எதிர்பாராதவள் அவன் தள்ளியதால் தடுமாறி கதவின் மீதே விழுந்திருந்தாள்.
கீழே விழாமல் கதவை பிடித்துக் கொண்டவளுக்கு தொண்டையை அடைத்துக் கொண்டது. கண்ணீர் முட்டி நிற்க அவனை வேதனையோடு திரும்பிப் பார்த்தாள்.
“உ..உங்கள சாப்பிட கூப்பிடலாம்னுதான் வ..வந்தேன்…” அழுகையோடுதான் கூறினாள்.
“நான் உன்கிட்ட கேட்டேனா..? உனக்கு யார் இந்த உரிமை எல்லாம் கொடுத்தது..? எல்லாம் அவனை சொல்லணும்.. உன் எல்லையை அவனோட நிறுத்திக்கோ… அந்த ஹாலோட நிறுத்திக்கோ… உன் இஷ்டத்துக்கு எங்கே வேணாலும் வருவியா..?” பார்வை குறைந்த அந்த விழிப்படலங்கள் கோபத்தின் வீரியத்தில் இங்கும் அங்கும் சுழன்றன.
“அமர்… என் மனசு உங்களுக்கு புரியலையா..?”
இன்று அவனோடு பேசிவிடும் முடிவோடுதான் அவளும் இருந்தாள். அழுகை வந்தாலும் பரவாயில்லை… அவன் அடித்தாலும் பரவாயில்லை… தன் மனதை முழுமையாக அவனிடம் வெளிப்படுத்திவிட இதைத் தாண்டிய சந்தர்ப்பம் இல்லை என்று அடித்துக் கூறியது அவள் மனம்.
“என்ன புரியணும்..? ஹான்… என்ன புரியணும்..? எனக்கு புரியாது… புரியவும் வேணாம்… முதல்ல இங்கிருந்து வெளியே போ…” கையை கதவை நோக்கி நீட்டி சத்தமிட்டு கூறியிருந்தான் அமரன்.
“உங்ககூட மனசுவிட்டுப் பேச எனக்கு ஒரே ஒரு சந்தர்ப்பம் கொடுங்க… எந்த வகையிலயும் உங்க கிட்டயே நெருங்க விடாம இப்படி விலகி இருந்தா என்னை நான் உங்களுக்கு எப்படி புரிய வைக்க முடியும்..? உங்களுக்காகத்தான் எதிர் வீட்டுக்கு அவ்வளவு கஷ்டப்பட்டு சம்மதம் வாங்கி குடி வந்தேன். உங்களை பார்க்கத்தான் அந்த பால்கனியிலேயே தினமும் குடி இருக்கேன். உங்க ப்ரோக்ராம் எங்கே நடந்தாலும் எத்தனை தூரமா இருந்தாலும் ஓடி வர்றது உங்களை பார்க்க மட்டும்தான் அமர். உங்ககிட்ட எந்த குறையும் எனக்கு தெரியல… எந்த காலத்துக்கும் தெரியாது… உங்களுக்கு நீங்களே வேலி போட்டு என்னையும் தள்ளி வைக்காதீங்க… என் மனசை புரிஞ்சுக்கோங்க அமர்… ப்ளீஸ்…”
உடைய தயாரான குரலை சமன்படுத்தி திடமாகவே அவனிடம் பேசினாள் கிலோ. அவன் இதழிகளிலோ ஏளனப் புன்னகை.
“ரொம்ப வித்தியாசமானவதான் நீ… சரியான கன்னிங் லேடி… சில பேர் இப்படித்தான் வித்தியாசமா ஏதாவது பண்ணி சொசைட்டியோட அட்டென்ஷன் சீக் பண்றதுக்கு இந்த மாதிரி வேலை எல்லாம் பண்ணுவாங்க. கண்ணு தெரியாதவனுக்கு வாழ்வை கொடுத்து அவன் வாழ்க்கையையே ஒளியேற்றி வச்சான்னு இந்த உலகம் உன்னை கொண்டாடணும்… பெரிய தியாகச் செம்மல்னு மத்தவங்ககிட்ட பேர் வாங்கணும்… அதுக்கு காதல்னு பேர் வச்சுட்டு இங்க வந்து நிக்கிற. அதோட வாழ்க்கையில ஈசியா செட்டில் ஆயிடலாம் இல்லையா… செம பிளான்… இந்த காலத்து பொண்ணுங்க ரொம்ப தெளிவுதான். அதுலயும் நீ ரொம்ப ரொம்ப தெளிவு…
கோணல் சிரிப்புடன் வார்த்தை சாட்டை கொண்டு அவளை அவன் விடாமல் சொடுக்கிக் கொண்டே இருக்க துடித்துப் போனவள் உறைந்து நின்றாள்.
(தொடரும்)